நம்பி வந்துட்டீங்க..! ஏமாத்தக் கூடாதுல்ல..!!!

8-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனக்கும், சோதனைகளுக்கும்தான் நெருங்கிய தொடர்புண்டு என்பது உங்களுக்கும் தெரிந்ததுதானே..? நேற்றைக்கு வந்த சோதனை இது..!

பிரசாத் லேப்பில் 'தகராறு' படம் பார்த்த கொதிப்போடு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சாலிகிராமம் பஸ்ஸ்டாண்டு அருகில் வந்தபோது எனது டூவீலர் பஞ்சரானதுபோல தெரிந்தது..! தூக்கித் தூக்கியடித்தது.. இரவு 10 மணி.. மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.. வழியில் இருந்த ஒரு டூவீலர் கடையில் வண்டியை நிறுத்தி “பஞ்சர்.. சரி செய்ய முடியுமா?” என்றேன்.. சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கடைக்கார நபர், “இல்லீங்க.. வீட்டுக்குப் போகணும்.. லேட்டாயிருச்சு... விட்ருங்க..” என்றார்.. சற்று தூரத்தில் இருந்த இன்னொரு கடையில் இருந்த பையன், “ஓனர் ஏர் கம்பரஸரை ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டாரு. நான் போட்டா திட்டுவாரு ஸார்.. காலைல வாங்களேன்..” என்றான்.. 'என்னடா இது சோதனை'ன்னு வழக்கம்போல அந்த கம்னாட்டி முருகப் பயலை திட்டிக்கிட்டே வண்டியை தள்ளிக் கொண்டே நடந்தேன்..! 

வழியெங்கும் பூட்டப்பட்ட கடைகள்தான்.. சரி. ஆபத்துக்கு பாவமில்லை என்று வண்டியை ஓட்டலாம் என்று நினைத்தேன். சென்ற மாதம்தான் டியூப் மாற்றியது நினைவுக்கு வந்து தொலைக்க, வேறு வழியில்லாமல் தலைவிதியே என்று மீண்டும் தள்ளினேன்.. 'பேம் நேஷனல்' தியேட்டரின் பின்பக்க சாலை அருகே வந்தபோது இதுக்கு மேல முடியாது என்பது போல தோன்றியது.. ஏதாவது ஒரு கடையில் நிறுத்திவிட்டு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிட்டு காலைல வந்து எடுத்துக்கலாம் என்று நினைத்து அருகில் இருந்த கடைகளில் கேட்டேன்.. “வேணாம் ஸார்.. ஏதாவது காணாம போனா பிரச்சினையாயிரும்...” என்றார்கள்..!

சரி.. வேறென்ன செய்றது என்று யோசித்தபோது தனது டாடா நானோ காரில் பந்தாவாக சென்று கொண்டிருந்தார் நமது அழகு அறிவிப்பாளரும் சக பதிவருமான சுரேகா.. தொண்டை கிழிய கத்திப் பார்த்தேன். 'அண்ணே.. சுரேகா.. யோவ்..' என்றெல்லாம் சுதியிறங்கி பார்த்தேன். அவரோ நாலு பக்கக் கண்ணாடியையும் ஏற்றிவிட்டுக் கொண்டு  தனக்கு முன்னால் ஸ்கூட்டியில் போய்க் கொண்டிருந்த ஒரு அம்மணியை, வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே தனது காரில் பாலோ செய்து போய்க் கொண்டேயிருந்தார். போயே விட்டார்..! 

மேலும் மழை வலுக்க.. இன்னும் கொஞ்ச தூரம் தள்ளுவோம் என்று சொல்லித் தள்ளியபடியே வந்தால் வலது புறம் ஒரு சின்ன கடையில் ஒரு  டூவீலருக்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தார்கள்.. கடைக்காரர் அருகில் நின்று கொண்டிருந்தார். வேலையாள்தான் பஞ்சர் ஓட்டிக் கொண்டிருந்தார்.. 

நானும் என் வண்டியை நிறுத்தி, “ஸார் பஞ்சர்..” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக கடைக்காரர் புயலாய் சீறினார்.. “நேரமில்லீங்க.. முடியாதுங்க.. நாங்க வீட்டுக்குப் போகணும்..” என்றார்..  பொசுக்கென்றது எனக்கு..! “இல்லங்க.. வீடு ரொம்ப தூரம்.. மழை வேற பெய்யுது..” என்றேன். “அதுக்கு நாங்கென்ன செய்றது..?” என்றவர் தொடர்ந்து ஏதேதோ சொல்லியபடியே உள்ளே போனார்.. நான் மறுபடியும் உள்ளே சென்று “காசு வேண்ணாலும்கூட தர்றேன் ஸார்..” என்றேன்.. “இல்லங்க.. எனக்கு டைமாச்சு.. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். உங்க அவசரத்துக்கெல்லாம் நாங்க வேலை செய்ய முடியாது...” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்..

'சரி.. இதுக்கு மேல பேச முடியாது.. போகலாம்...' என்று நினைத்து வண்டியை எடுக்கப் போன சமயத்தில் “அண்ணே.. இருண்ணே..” என்றார் பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தவர்.. பட்டென்று தலையை நிமிர்ந்து பார்த்த கடைக்காரரிடம்.. “நம்மளை நம்பி வந்துட்டாரு.. 'போ'ன்னு சொன்னா எப்படி..? நாளைக்கு இவரும்தான நமக்கு கஸ்டமரா வருவாரு.. ஏதோ ஒரு நாளைக்கு ஆத்திர, அவசரத்துக்கு செய்றதுல என்னங்க..?” என்றார்.. அவ்வளவுதான் கடைக்காரருக்கு வந்ததே கோபம்..!

எழுந்து வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்..! அனைத்தையும் கேட்டபடியே பஞ்சர் ஒட்டி முடித்தவர்.. “நீங்க வேண்ணா இப்ப கிளம்புங்க.. நான் கடையைப் பூட்டிட்டு சாவியை கொண்டாந்து, வீட்ல கொடுத்துட்டு போறேன்..” என்றார்.. கடைக்காரர் என்னையும், அவரையும் முறைத்துவிட்டு, சாவியை கீழே விட்டெறிந்துவிட்டு தனது பைக்கை எடுத்துக் கிளம்பினார்..!

பஞ்சர் ஒட்டியவர் என்னிடம். “நீங்க உக்காருங்க.. 10 நிமிஷத்துல முடிச்சுத் தர்றேன்” என்று பதமாகச் சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினார். 2 நிமிடங்களில் மீண்டும் பைக்கில் வந்த கடைக்காரர் பஞ்சர் ஒட்டியவரிடம், “இங்க பாரு.. இன்னிக்கு லேட்டா வீட்டுக்குப் போறோம்னு நினைச்சுட்டு.. காலைல லேட்டா மட்டும் வந்தன்னு வையி.. நாளைக்கே வேற ஆளை போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன்.. பார்த்துக்க..” என்று மிரட்டிவிட்டு போக.. பஞ்சர் ஒட்டியவர் ஒரு ரியாக்ஷனைகூட காட்டாமல் தனது வேலையைத் தொடர்ந்தார்..!

“இந்தாளு இப்படித்தாங்க.. சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்.. வீட்டுக்குப் போகணும்னு பறப்பாரு.. நமக்குக் கஸ்டமர் முக்கியமில்லையா..? அதெல்லாம் தெரியாது.. முசுடு.. முணுக்குன்னா கோபம் வந்திரும்..” என்றார். கிடைத்த இடைவெளியில் அவரைப் பற்றி கேட்டபோது, “இங்க வேலைக்கு சேர்ந்து 2 வருஷமாச்சு.. வர்ற கஸ்டமர்கிட்ட வாங்குற காசுல மூணுல ஒரு பங்கு எனக்கு.. மிச்சம் அவருக்கு.. சில நாள் 500 ரூபாகிட்ட நமக்கு வரும். பல நாள் 100 கூட வரும்.. ஆனா அதையும் உடனே தர மாட்டாரு.. வீக்லி வீக்லி வாங்கிக்கன்னுவாரு.. சில தடவை மாசாமாசம் கணக்கு வைச்சு தர்றேம்பாரு.. அவர் சொல்றதுதான் கணக்கு.. எப்படியோ நம்ம வண்டியோடுது..” என்றார் பெருமூச்சுடன்..!

“நீங்களே இது மாதிரி தனியா கடை வைச்சிரலாமே...” என்றேன்.. “வைச்சிருந்தேன் ஸார்.. பாழாய்ப் போன குடி.. குடிச்சு குடிச்சே அத்தனையையும் அழிச்சிட்டேன்.. கடையும் போச்சு.. இனியும் நமக்குக் காசு கொடுக்க ஆளில்லை.. அதான் கிடைச்ச வேலைக்கு வரலாம்னு வந்துட்டேன்..” என்றார்..  

எல்லாரும் தண்ணில டியூப்பை அமுக்கி காத்து லீக் ஆகுதான்னு செக் செய்வாங்க.. இவர் கையை வைச்சு தடவித் தடவியே கண்டுபிடிச்சாரு.. லீக்கை அடைச்சப்புறம் காத்தடிச்சு அதை மட்டும் தண்ணில வைச்சு செக் செஞ்சாரு.. சொன்ன மாதிரியே 10 நிமிஷத்துல முடிச்சவுடனே 100 ரூபா கொடுத்தேன்.. “இல்ல ஸார் 50 ரூபாதான்...” என்றார்.. “பரவாயில்லங்க.. உங்க ஓனர் கத்தப் போறாரு. கொடுத்திருங்க...” என்றேன்.. தயக்கத்தோடு வாங்கிக் கொண்டார்..!

அவரும் கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்ப.. நானும் கிளம்பினேன்.. “ஓனர் வீடு எங்க இருக்குங்க..?” என்றேன் சாதாரணமாக.. “கோயம்பேடு ஸார்..” என்றார்.. “உங்க வீடு..?" என்றேன்.  வெஸ்ட் கே.கே. நகர் ஸார்..” என்றார்.. எனக்குத் துணுக்கென்றது..! “என்னங்க.. இந்த மழைல கோயம்பேடு போயிட்டு திரும்பவும் நீங்க வரணுமா..? எதுக்கு இந்த வேலை..? சொல்லியிருந்தா வண்டியைகூட விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு போயிருப்பனே...” என்றேன் அதிர்ச்சி தாங்காமல்..!

“அட விடுங்க ஸார்.. நம்மளை நம்பி வந்துட்டீங்க.. உங்களை ஏமாத்தக் கூடாதுன்னு நினைச்சேன். அவ்ளோதான்.. நீங்க கிளம்புங்க..” என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டு வேகமாக தனது சைக்கிளை மிதித்துக் கொண்டு மழையில் நனைந்தபடியே கிளம்பினார்..!

வீட்டிற்கு வரும் வழியெல்லாம் நினைத்தேன்.. நேற்று இரவு தூங்கும் முன்பும் நினைத்தேன்.. இன்று காலையும் நினைத்தேன். ஏன் இப்போதுகூட நினைக்கிறேன்.. “நம்பி வந்துட்டீங்க.. ஏமாத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன்..”னு நான் யாருக்காச்சும் ஏதாவது செஞ்சிருக்கனான்னு..???

யோசிச்சுக்கிட்டேயிருக்கேன்..!!! விடை கிடைச்சா பின்னூட்டத்துல சொல்றேன்..! 

47 comments:

ராம்ஜி_யாஹூ said...

உணர்வு மழை

ராம்ஜி_யாஹூ said...

நீங்க உங்க வண்டியில்
அவரை ஓனர் வீடு வரை சாவி கொடுக்க
அழைத்துச் சென்று திரும்பி மேற்கு கே கே
நகரில் வீட்டில் விட்டு விட்டு
சென்று இருக்கலாமே

செய்து இருப்பீர்கள்,
தன்னடக்கம் கருதி அதைப்
பகிர வில்லை என்று நினைக்கிறேன்

Avargal Unmaigal said...

///நம்மளை நம்பி வந்துட்டீங்க.. உங்களை ஏமாத்தக் கூடாதுன்னு நினைச்சேன். அவ்ளோதான்.. நீங்க கிளம்புங்க..” என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டு வேகமாக தனது சைக்கிளை மிதித்துக் கொண்டு மழையில் நனைந்தபடியே கிளம்பினார்..!///

இப்படி நம்ம நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களும் நினைத்து இருந்தால் நம்ம நாடு எப்பவோ வல்லரசு ஆகி இருக்கும்.

நீங்கள் சொன்ன மனிதரின் செயல்களை பார்க்கும் போது நம் மனமும் வெட்கி தலைகுனிய வைக்கின்றன என்பதும் உண்மையே

ராமுடு said...

As said by Ramji, you would have done that. Need to learn this kind of attitude and helping tendency from this person. Wish god bless him.

வவ்வால் said...

அண்ணாச்சி

எளிய மனிதர்கள் தான் பல சமயம் அரிய உண்மைகளை உண்ர வைப்பார்கள்!

பங்க்சர் ஒட்டுபவரும் அவ்வகையேபாராட்டுக்குரியவர்.

ஆனால் எனக்கு உங்க காமன் சென்ஸ நினைச்சாத்தான் கடுப்பாவுது , இப்படி பங்க்சர் ஆகி ,ஒட்ட முடியலைனா , வேற வழியே இல்லை எனில், ஒரு முறை ஃபுல்லா காத்தடிச்சிட்டு ஓட்டிக்கனும், சுமார் 20 கி.மி வரை அப்படி ஓடத்தாங்கும். எனக்கு இப்படி பஞ்சர் ஆகி ஒட்ட முடியாதப்போ ஒரு மெக்கானிக் தான் இந்த ஐடியா எனக்கு கொடுத்தார். பெருசா ஓட்டை இல்லைனா நல்லாத்தாங்கும்,அடுத்த முறை முயற்சிக்கவும் :-))

அந்த பங்க்சர் கடையில கூட காத்தடிச்சிட்டு போயிருக்கலாம்.

டியூப்லஸ் டயர் இருக்கமாதிரி வண்டி வாங்கிடுங்க,பஞ்சர் ஆனாலும் ஓட்டிக்கலாம்.

துளசி கோபால் said...

நம்பிக்கை வீண் போகலை!

Jazeela Banu said...

நீங்க யாருக்கு என்ன செய்துள்ளீர்களென்று எனக்குத் தெரியும். ;-) உங்கள நம்பி வந்து இந்தப் பதிவைப் படிகிறவங்க ஏமாற்றம் அடையாத படியான தரமானப் படைப்பை தந்திருக்கீங்களே அதுப்போதாதா? ;-)

தனிமரம் said...

சிந்திக்க வைக்கும் பகிர்வு சார்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

என்னமோ அந்த மழையிலும் குளிரிலும் நானே அவதிப்பட்ட மாதிரி ஒரு சங்கட உணர்வு என்னை உலுக்கியது. அதிலும் குடியின் கொடுமை பற்றீய உள்ளார்ந்த ஒரு நிகழ்வு வேறு. உங்களுக்கும் பங்க்ச்சர் ஒட்டியவருக்கும் நல்லது ஏதாவது சீக்கிரமே நிகழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

குரங்குபெடல் said...

உமது வண்டி அடிக்கடி இது போல் பஞ்சர் ஆகவும் இது போல் தொடர்ந்து பதிவு எழுதவும் வாழ்த்துககள் . .

Manimaran said...

\\என்னடா இது சோதனை'ன்னு வழக்கம்போல அந்த கம்னாட்டி முருகப் பயலை திட்டிக்கிட்டே வண்டியை தள்ளிக் கொண்டே நடந்தேன்..! \\

அந்தப் பையனிடம் இவ்வளவு விஷயம் பேசின நீங்க , கடைசி வரையில அவன் பேரை கேக்கல பாருங்க.. கேட்டிருந்தா , கந்தன், குமரன், செந்தில் , பழனி இப்படி ஏதாவது எம்பெருமான் முருகன் பெயரை சொல்லியிருப்பான்... ஏனெனில் அது மனித வடிவில் வந்த முருகன். நாளைக்கு சென்று அந்தக் கடையில் விசாரித்துப் பாருங்கள். அப்படி யாரும் இல்லையே என்று சொல்வார்கள்.. இதுவும் முருகனின் திருவிளையாடல்களில் ஓன்று...

தமிழ்வாசி பிரகாஷ் said...

@வௌவால் அண்ணே...
////ஆனால் எனக்கு உங்க காமன் சென்ஸ நினைச்சாத்தான் கடுப்பாவுது , இப்படி பங்க்சர் ஆகி ,ஒட்ட முடியலைனா , வேற வழியே இல்லை எனில், ஒரு முறை ஃபுல்லா காத்தடிச்சிட்டு ஓட்டிக்கனும், சுமார் 20 கி.மி வரை அப்படி ஓடத்தாங்கும். எனக்கு இப்படி பஞ்சர் ஆகி ஒட்ட முடியாதப்போ ஒரு மெக்கானிக் தான் இந்த ஐடியா எனக்கு கொடுத்தார். பெருசா ஓட்டை இல்லைனா நல்லாத்தாங்கும்,அடுத்த முறை முயற்சிக்கவும் :-))
////

இதே போல நைட் பன்னிரண்டு மணி, வண்டியை ஸ்டாண்டில் இருந்து எடுக்கும் போதே டயரில் காற்று இறங்கியிருந்தது... டயர் பஞ்சர் என யூகித்து அங்கேயே இருக்கும் பஞ்சர் கடையில் வண்டியை விட்டேன். கடைக்காரன் டயரை கழட்டாமல் காற்று அடித்து பார்த்தான்.. காற்று இறங்கவில்லை. காற்று தான் இறங்கியுள்ளது, வண்டியை எடுதுக்கங்கனு சொல்ல, நான் கிளம்பினேன்.

அங்கிருந்து சரியாய் ஒரு கிமி சென்றிருப்பேன். வண்டி பயங்கரமாய் ஆட ஆரம்பித்தது. டயரில் காற்று இல்லை. அந்த இடத்தில் பஞ்சர் கடை இல்லை. காற்று அடிக்கலாம் என நினைத்து ஒரு கிமி தள்ளி ஒரு பெட்ரோல் பங்க் வரை தள்ளிக் கொண்டே சென்றேன். அங்கும் கம்ப்ரசர் எனக்காக ஆன் செய்து காற்று நிரப்பினார்கள். அங்கிருந்து ஒரு நூறு மீட்டர் சென்றவுடன் வண்டி மறுபடியும் பயங்கரமாக ஆட துவங்கியது.
வேறு வழி இல்லாமல் லாரி பஞ்சர் டிங்கரிங் பார்க்கும் இடம் அங்கிருந்து ஒரு கிமி இருக்கும், அதுவரை தள்ளிக் கொண்டே சென்றேன். என் நேரம் எல்லா கடைகளும் மூடியே இருந்தது. ஒரே ஓர் கடை திறந்து இருந்தது. ஒருவர் நல்ல உறக்கத்தில் இருந்தார். அவரை மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பி விஷயத்தை சொன்னேன்.
உடனே பொருட்களை எடுத்து வைத்து பஞ்சர் பார்த்தார். பெரிய ஆணி குத்தியிருந்தது. அதை எடுத்தப் போட்டு பஞ்சர் ஒட்டினார்.
ஆணி இருந்ததால் மிக சிறிது தூரம் மட்டுமே காற்று தாங்கும்.
ஆனால் காற்று அடித்து வண்டியை ஓட்டி ஏதேனும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது அண்ணே...????
பஞ்சர் கடையை தேடுவது மிக நல்ல விஷயம் தான்.... .

இராஜராஜேஸ்வரி said...

“நம்பி வந்துட்டீங்க.. ஏமாத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன்..”

எளிய மனிதரின் உயர்ந்த உள்ளம் ..!

Nondavan said...

நம்பி வந்துட்டீங்க..! ஏமாத்தக் கூடாதுல்ல..!!! // எனக்கென்னவோ இந்த தலைப்பிற்கும், தகராறு படம் பார்த்ததுக்கும் ஏக தொடர்பு இருப்பது போல தெரியுது... :) :) :)

நம்பி பார்க்க போன நம்மளை மொக்க கத்தி அறுத்து தள்ளிட்டாங்க அண்ணாச்சி... படம் பார்த்து 3 நாளாகியும் இன்னும் புண்பட்ட மனசு ஆறலை.. கண்டிப்பா உங்களுக்கும் சேம் பிளட்’தான் இருக்கும்.. :) :)

Nondavan said...

நம்பி வந்துட்டீங்க..! ஏமாத்தக் கூடாதுல்ல..!!! // அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதருக்கு வாழ்த்துகள். இது போல நமக்கு கண்ணுக்கு தெரியாமல் நிறைய பேர் செய்யும் உதவி தான், மனதில் தங்குகிறது... வாழ்க வளர்க..

நீங்க நிச்சயம், அவரை சைக்கிளில் ஓனர் வீடு வரை மெதிக்க விட்டு இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்... தன்னடக்கம் கருதி நீங்க செய்த உதவியை எழுதாமல் விட்டுட்டீங்க...

வவ்வால் said...

தமிழ்வாசிண்ணே,

நாம என்னமோ அண்ணாச்சிய சதிசெய்து விபத்துல மாட்டிவிடப்பார்க்கிறாப்போல சொல்லிக்கிட்டு இருக்கீங்களே அவ்வ்.

//வழியெங்கும் பூட்டப்பட்ட கடைகள்தான்.. சரி. ஆபத்துக்கு பாவமில்லை என்று வண்டியை ஓட்டலாம் என்று நினைத்தேன். சென்ற மாதம்தான் டியூப் மாற்றியது நினைவுக்கு வந்து தொலைக்க//

அவரே பங்சரோடவாது ஒட்டிக்கிட்டு போயிடலாமானு நினைக்கும் அளவுக்கு சூழல் ஆகிடுச்சுனு சொல்லி இருக்கிறத பாருங்ணே!

அதுக்கு பங்சர் போட முடியாத சூழலில் கொஞ்சம் காத்து அடிச்சுட்டு ஓட்டிட்டு போயிடலாமே அப்புறம் நான் சொன்னாப்போல பலரும் செய்துகிட்டு தான் இருக்காங்க, நானும் ஓட்டைப்பெருசா இல்லைனா தான் சொல்லி இருக்கேன்.

ஒரு மாற்று வழி பலரும் செய்வது,நானும் செய்திருக்கேன்,விபத்தெல்லாம் ஆனதில்லை , பஞ்சர்னு தெரிஞ்ச வண்டிய யாராவது வேகமா ஓட்டுவாங்களா ,காத்து இறங்குதானு கவனம் வச்சுக்கிட்டு தான் ஓட்டுவாங்க.

இதுக்கே நான் சில முறை பஞ்சர் ஒட்ட வழியே இல்லாத இடங்களில் "வீல்" மட்டும் கழட்டி எடுத்துட்டு போய் ,ஒட்டிக்கிட்டு திரும்ப வந்திருக்கேன். அதுக்குலாம் ஆண்டவன் சோதிக்கிறான்னு பொலம்பவா முடியும்,ஆனால் அண்ணாச்சிக்கு எல்லாமே ஆண்டவனின் சோதனையாவே தெரியும் அவ்வ்!

எதா இருந்தாலும் எனக்கு மட்டும் தான் ஏன் இப்படி ஆவுதோ,ஏன் இந்த சோதனைனு பொலம்புறதே தப்புண்ணே, அது ஒரு மனவியாதி.

சென்னையில பல உள் ஏரியாக்களில் ஒரு மெக்கானிக் ஷாப் , பஞ்சர் கடைனு ஒன்னுமே இருக்காது. அங்கே இருந்து வெளியில மெயினுக்கு வரவே 5 கி.மி மேல ஆகும் நிலைலாம் இருக்கு. எவ்ளோ தூரம் தள்ளிக்கிட்டு அலையிறது? அதுக்கு பேசாம சைக்கிள் கடையிலாவது காத்து அடிச்சிட்டு கொஞ்சதூரம் கவனமா ஓட்டிக்கிட்டு வந்துடனும்!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

உணர்வு மழை...]]]

எனக்கும் இதே உணர்வுதான் அண்ணே.. அதான் பொங்கிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

நீங்க உங்க வண்டியில் அவரை ஓனர் வீடு வரை சாவி கொடுக்க
அழைத்துச் சென்று திரும்பி மேற்கு கே கே நகரில் வீட்டில் விட்டு விட்டு
சென்று இருக்கலாமே? செய்து இருப்பீர்கள், தன்னடக்கம் கருதி அதைப் பகிரவில்லை என்று நினைக்கிறேன்.]]]

இல்லைண்ணே.. நீங்க இப்ப சொன்னப்புறம்தான் இப்படி செஞ்சிருக்கலாமோன்னு தோணுது..!

உண்மைத்தமிழன் said...

[[[Avargal Unmaigal said...

///நம்மளை நம்பி வந்துட்டீங்க.. உங்களை ஏமாத்தக் கூடாதுன்னு நினைச்சேன். அவ்ளோதான்.. நீங்க கிளம்புங்க..” என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டு வேகமாக தனது சைக்கிளை மிதித்துக் கொண்டு மழையில் நனைந்தபடியே கிளம்பினார்..!///

இப்படி நம்ம நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களும் நினைத்து இருந்தால் நம்ம நாடு எப்பவோ வல்லரசு ஆகி இருக்கும்.]]]

ரொம்ப பேராசைங்க உங்களுக்கு..? மக்கள் வேற அரசியல்வியாதிகள் வேற.. அவங்களை திருத்தறதும், திருத்த நினைக்கிறதும்.. முடியவே முடியாத விஷயம்..!

[[[நீங்கள் சொன்ன மனிதரின் செயல்களை பார்க்கும் போது நம் மனமும் வெட்கி தலைகுனிய வைக்கின்றன என்பதும் உண்மையே]]]

இதில் வெட்கப்பட விஷயமில்லை. ஆனால் இதுபோல் நாம் யாருக்காவது உதவி செய்திருக்கோமா என்று யோசித்துப் பார்த்து, இனிமேல் அப்படி செய்தால் நல்லதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராமுடு said...

As said by Ramji, you would have done that. Need to learn this kind of attitude and helping tendency from this person. Wish god bless him.]]]

இல்ல ஸார்.. நான் அப்படிச் செய்யலை.. இப்போ நினைச்சா வருத்தமாத்தான் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி...

எளிய மனிதர்கள்தான் பல சமயம் அரிய உண்மைகளை உண்ர வைப்பார்கள்! பங்க்சர் ஒட்டுபவரும் அவ்வகையே பாராட்டுக்குரியவர்.
ஆனால் எனக்கு உங்க காமன்சென்ஸ நினைச்சாத்தான் கடுப்பாவுது, இப்படி பங்க்சர் ஆகி, ஒட்ட முடியலைனா, வேற வழியே இல்லை எனில், ஒரு முறை ஃபுல்லா காத்தடிச்சிட்டு ஓட்டிக்கனும், சுமார் 20 கி.மி வரை அப்படி ஓடத் தாங்கும். எனக்கு இப்படி பஞ்சர் ஆகி ஒட்ட முடியாதப்போ ஒரு மெக்கானிக்தான் இந்த ஐடியா எனக்கு கொடுத்தார். பெருசா ஓட்டை இல்லைனா நல்லாத் தாங்கும், அடுத்த முறை முயற்சிக்கவும் :-))]]]

இல்லீங்க பிரதர்.. அப்படி செஞ்சா டியூப் கிழிஞ்சிரும்..! அப்புறம் அதுக்கு வேற தண்டம் அழுகணும்.. தேவையா..?

[[[அந்த பங்க்சர் கடையிலகூட காத்தடிச்சிட்டு போயிருக்கலாம்.]]]

செஞ்சிருக்கலாம்தான். முடியாதுன்னு சொல்லியிருந்தா அதைத்தான் கேட்டிருப்பேன்..!

[[[டியூப்லஸ் டயர் இருக்கமாதிரி வண்டி வாங்கிடுங்க,பஞ்சர் ஆனாலும் ஓட்டிக்கலாம்.]]]

முயற்சி பண்றேன் ஸார்..! என்ன மாதிரி வண்டிகள்ன்னு சொல்லுங்களேன்.. எனக்குத் தெரியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

நம்பிக்கை வீண் போகலை!]]]

யெஸ் டீச்சர்.. நீங்க எப்படியும் தம்பியை பார்க்க வருவீங்கன்னு நினைச்சேன். வந்துட்டீங்க.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Jazeela Banu said...

நீங்க யாருக்கு என்ன செய்துள்ளீர்களென்று எனக்குத் தெரியும். ;-) உங்கள நம்பி வந்து இந்தப் பதிவைப் படிகிறவங்க ஏமாற்றம் அடையாதபடியான தரமான படைப்பை தந்திருக்கீங்களே அது போதாதா?)]]]

வாழ்த்துக்கு நன்றிகள் மேடம்.. சில சமயம் சின்ன விஷயம்ன்னு நாம நினைக்கிறதுதான் ஒரு பெரிய விஷயத்தை நமக்குக் கத்துக் கொடுக்குது.. அது மாதிரிதான் இதுவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[தனிமரம் said...

சிந்திக்க வைக்கும் பகிர்வு சார்.]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

என்னமோ அந்த மழையிலும் குளிரிலும் நானே அவதிப்பட்ட மாதிரி ஒரு சங்கட உணர்வு என்னை உலுக்கியது. அதிலும் குடியின் கொடுமை பற்றீய உள்ளார்ந்த ஒரு நிகழ்வு வேறு. உங்களுக்கும் பங்க்ச்சர் ஒட்டியவருக்கும் நல்லது ஏதாவது சீக்கிரமே நிகழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.]]]

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் ஸார்..!

[[[குரங்குபெடல் said...

உமது வண்டி அடிக்கடி இது போல் பஞ்சர் ஆகவும் இது போல் தொடர்ந்து பதிவு எழுதவும் வாழ்த்துககள்...]]]

அடப்பாவி மனுஷா.. ஏன் இந்த கொலை வெறி..? எழுதறதுக்கு வேற விஷயமே கிடைக்காதா என்ன..? அதுக்கு நான் 2 கிலோ மீட்டர் மழைல நனைஞ்சுக்கிட்டே நடக்கணுமா..? ரொம்ப நல்ல மனசுய்யா உமக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Manimaran said...

\\என்னடா இது சோதனை'ன்னு வழக்கம்போல அந்த கம்னாட்டி முருகப் பயலை திட்டிக்கிட்டே வண்டியை தள்ளிக் கொண்டே நடந்தேன்..! \\

அந்தப் பையனிடம் இவ்வளவு விஷயம் பேசின நீங்க, கடைசி வரையில அவன் பேரை கேக்கல பாருங்க.. கேட்டிருந்தா, கந்தன், குமரன், செந்தில், பழனி இப்படி ஏதாவது எம்பெருமான் முருகன் பெயரை சொல்லியிருப்பான். ஏனெனில் அது மனித வடிவில் வந்த முருகன். நாளைக்கு சென்று அந்தக் கடையில் விசாரித்துப் பாருங்கள். அப்படி யாரும் இல்லையே என்று சொல்வார்கள்.. இதுவும் முருகனின் திருவிளையாடல்களில் ஓன்று.]]]

ஐயோடா முருகா.. நான் கேட்க மறந்தது அவருடைய பெயரைத்தான்..! பார்க்கலாம்.. இன்னொரு தடவை கடைக்குப் போய் பார்த்துட்டா போச்சு..!

[[[தமிழ்வாசி பிரகாஷ் said...

@வௌவால் அண்ணே...

இதே போல நைட் பன்னிரண்டு மணி, வண்டியை ஸ்டாண்டில் இருந்து எடுக்கும் போதே டயரில் காற்று இறங்கியிருந்தது... டயர் பஞ்சர் என யூகித்து அங்கேயே இருக்கும் பஞ்சர் கடையில் வண்டியை விட்டேன். கடைக்காரன் டயரை கழட்டாமல் காற்று அடித்து பார்த்தான்.. காற்று இறங்கவில்லை. காற்று தான் இறங்கியுள்ளது, வண்டியை எடுதுக்கங்கனு சொல்ல, நான் கிளம்பினேன்.

அங்கிருந்து சரியாய் ஒரு கிமி சென்றிருப்பேன். வண்டி பயங்கரமாய் ஆட ஆரம்பித்தது. டயரில் காற்று இல்லை. அந்த இடத்தில் பஞ்சர் கடை இல்லை. காற்று அடிக்கலாம் என நினைத்து ஒரு கிமி தள்ளி ஒரு பெட்ரோல் பங்க் வரை தள்ளிக் கொண்டே சென்றேன். அங்கும் கம்ப்ரசர் எனக்காக ஆன் செய்து காற்று நிரப்பினார்கள். அங்கிருந்து ஒரு நூறு மீட்டர் சென்றவுடன் வண்டி மறுபடியும் பயங்கரமாக ஆட துவங்கியது. வேறு வழி இல்லாமல் லாரி பஞ்சர் டிங்கரிங் பார்க்கும் இடம் அங்கிருந்து ஒரு கிமி இருக்கும், அதுவரை தள்ளிக் கொண்டே சென்றேன். என் நேரம் எல்லா கடைகளும் மூடியே இருந்தது. ஒரே ஓர் கடை திறந்து இருந்தது. ஒருவர் நல்ல உறக்கத்தில் இருந்தார். அவரை மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பி விஷயத்தை சொன்னேன்.
உடனே பொருட்களை எடுத்து வைத்து பஞ்சர் பார்த்தார். பெரிய ஆணி குத்தியிருந்தது. அதை எடுத்தப் போட்டு பஞ்சர் ஒட்டினார்.
ஆணி இருந்ததால் மிக சிறிது தூரம் மட்டுமே காற்று தாங்கும்.
ஆனால் காற்று அடித்து வண்டியை ஓட்டி ஏதேனும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது அண்ணே?
பஞ்சர் கடையை தேடுவது மிக நல்ல விஷயம்தான்.]]]

இதுதான் சரி.. எனக்கும் இதுதான் சரியென்று பட்டது. அதனால்தான் உருட்டிக் கொண்டே நடந்து வந்தேன்..!

[[[இராஜராஜேஸ்வரி said...

“நம்பி வந்துட்டீங்க.. ஏமாத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன்..”
எளிய மனிதரின் உயர்ந்த உள்ளம் ..!]]]

அதுதான் மேடம் மனதைத் தொட்டது.. பகிரணும்னு நினைச்சேன். எழுதிட்டேன். வருகைக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நம்பி வந்துட்டீங்க..! ஏமாத்தக் கூடாதுல்ல..!!! //

எனக்கென்னவோ இந்த தலைப்பிற்கும், தகராறு படம் பார்த்ததுக்கும் ஏக தொடர்பு இருப்பது போல தெரியுது... :) :) :)
நம்பி பார்க்க போன நம்மளை மொக்க கத்தி அறுத்து தள்ளிட்டாங்க அண்ணாச்சி... படம் பார்த்து 3 நாளாகியும் இன்னும் புண்பட்ட மனசு ஆறலை.. கண்டிப்பா உங்களுக்கும் சேம் பிளட்’தான் இருக்கும்.. :) :)]]]

இன்னும் உங்களை அந்த தகராறு படம் விடலை போலிருக்கே..!? சோகத்தை எப்படியாச்சும் ஆத்திருண்ணே..!!!

அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதருக்கு வாழ்த்துகள். இதுபோல நமக்கு கண்ணுக்கு தெரியாமல் நிறைய பேர் செய்யும் உதவிதான், மனதில் தங்குகிறது. வாழ்க வளர்க..
நீங்க நிச்சயம், அவரை சைக்கிளில் ஓனர் வீடுவரை மெதிக்க விட்டு இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். தன்னடக்கம் கருதி நீங்க செய்த உதவியை எழுதாமல் விட்டுட்டீங்க.]]]

இல்லீங்க ஸார்.. அந்த உதவியை நான் அவருக்குச் செய்ய மறந்திட்டேன்..! மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..!

நாம என்னமோ அண்ணாச்சிய சதிசெய்து விபத்துல மாட்டிவிடப் பார்க்கிறாப்போல சொல்லிக்கிட்டு இருக்கீங்களே அவ்வ்.

அவரே பங்சரோடவாது ஒட்டிக்கிட்டு போயிடலாமானு நினைக்கும் அளவுக்கு சூழல் ஆகிடுச்சுனு சொல்லி இருக்கிறத பாருங்ணே!

அதுக்கு பங்சர் போட முடியாத சூழலில் கொஞ்சம் காத்து அடிச்சுட்டு ஓட்டிட்டு போயிடலாமே அப்புறம் நான் சொன்னாப்போல பலரும் செய்துகிட்டுதான் இருக்காங்க, நானும் ஓட்டைப் பெருசா இல்லைனாதான் சொல்லி இருக்கேன்.

ஒரு மாற்று வழி பலரும் செய்வது, நானும் செய்திருக்கேன், விபத்தெல்லாம் ஆனதில்லை , பஞ்சர்னு தெரிஞ்ச வண்டிய யாராவது வேகமா ஓட்டுவாங்களா, காத்து இறங்குதானு கவனம் வச்சுக்கிட்டுதான் ஓட்டுவாங்க.]]]

நான் இப்படி செய்ய யோசித்ததுக்குக் காரணம் டியூப் புதுசு.. கிழிஞ்சிருச்சுன்னா புதுசு வாங்கணும்.. இப்பவே நான் வேலையில்லாம சும்மாதான் இரு்ககேன்.. சம்பளம் வாங்கி 2 மாசமாச்சு.. எதுக்கு வீணா செலவு செய்யணும்னு யோசிச்சேன்.. அதான் நடந்துட்டேன்..!

[[[இதுக்கே நான் சில முறை பஞ்சர் ஒட்ட வழியே இல்லாத இடங்களில் "வீல்" மட்டும் கழட்டி எடுத்துட்டு போய், ஒட்டிக்கிட்டு திரும்ப வந்திருக்கேன். அதுக்குலாம் ஆண்டவன் சோதிக்கிறான்னு பொலம்பவா முடியும், ஆனால் அண்ணாச்சிக்கு எல்லாமே ஆண்டவனின் சோதனையாவே தெரியும் அவ்வ்!]]]

என்ன செய்யறது..? நான் என்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறனோ அன்னிக்குத்தான் இப்படி ஏதாவது பிரச்சினையாகும்..? அப்புறம் அது சோதனையில்லாம வேறென்னன்னு நினைச்சீங்க..?

[[[எதா இருந்தாலும் எனக்கு மட்டும்தான் ஏன் இப்படி ஆவுதோ, ஏன் இந்த சோதனைனு பொலம்புறதே தப்புண்ணே, அது ஒரு மனவியாதி.]]]

எனக்கும் அந்த மன வியாதி உண்டுதான்..!

[[[சென்னையில பல உள் ஏரியாக்களில் ஒரு மெக்கானிக் ஷாப், பஞ்சர் கடைனு ஒன்னுமே இருக்காது. அங்கே இருந்து வெளியில மெயினுக்கு வரவே 5 கி.மி மேல ஆகும் நிலைலாம் இருக்கு. எவ்ளோ தூரம் தள்ளிக்கிட்டு அலையிறது? அதுக்கு பேசாம சைக்கிள் கடையிலாவது காத்து அடிச்சிட்டு கொஞ்சதூரம் கவனமா ஓட்டிக்கிட்டு வந்துடனும்!]]]

இனிமே இதைக் கவனத்தில் கொள்கிறேன்.. நன்றி வவ்ஸ்..!

இன்னும் உங்களை அந்த தகராறு படம் விடலை போலிருக்கே..!? சோகத்தை எப்படியாச்சும் ஆத்திருண்ணே..!!! // hahahahaha.... நீங்க தெய்வம் அண்ணே.. படம் உங்களை கோபப்பட வைக்கலையா.. ???

(எம்புட்டு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, உங்க மைண்ட் வாய்ஸ்)

வவ்வால் said...

அண்ணாச்சி,

//சம்பளம் வாங்கி 2 மாசமாச்சு.. எதுக்கு வீணா செலவு செய்யணும்னு யோசிச்சேன்.. அதான் நடந்துட்டேன்..!//

சேனலின் முக்கியப்புள்ளி நீங்களே இப்படி சொன்னா எப்பூடி?

கம்பெனில கார் கொடுக்க சொல்லி மிரட்டாம ,இப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்களே!

டயர் ரிம் எல்லாம் கூட அடி வாங்கும் ஆனால் மாட்டிக்கிட்ட சூழலுக்கு தான் சொன்னேன்.

//என்ன செய்யறது..? நான் என்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறனோ அன்னிக்குத்தான் இப்படி ஏதாவது பிரச்சினையாகும்..? அப்புறம் அது சோதனையில்லாம வேறென்னன்னு நினைச்சீங்க..?
//

அது எல்லாருக்குமே அப்படித்தான் ஆகுது, நான் ஊருக்கு கிளம்பினா மட்டும் பஸ்சுல ஃபுட் போர்ட் அடிக்க கூட இடம் இருக்காது அவ்வ்!

சீக்கிரமா ஒரு இடத்துக்கு கிளம்பலாம்னு நினைச்சா அப்பவும் இப்படி ஆகிடும்.

இதை விட கடுப்பேத்துவாங்க நம்ம எம்டிசி ஆளுங்க, நாம ஆர்வமா எதிர்ப்பார்த்த வண்டி வந்துச்சேனு ஓடிப்போயி ஏறி டிக்கெட் கேட்டா, இது கட் சர்வீஸ் தாம்பரத்தோட சரினு ,ஆப்பு வச்சிடுவாங்க அவ்வ்.# அல்லாய் வீல் இருக்க எந்த வண்டியிலும் டியூப்லெஸ் டயர் போட்டுக்கலாம்.

அந்த வீல் சைஸுக்கு டயர் கிடைச்சா போதும் இப்போ வர எல்லா பைக்கிலும், ஆப்ஷனாக "டியூப்லெஸ்" போட சொல்லி வாங்கிக்கலாம் பல்சர் ஹோண்டா யுனிகார்ன் எல்லாம் டியூப்லெஸ்ஸில் இருக்குனு தெரியும்.

சமீபத்தில டீவிஎஸும் கம்பெனியில இருந்தே டியூப்லஸ் போட்டு விக்கிறதா கேள்வி.

அப்படி இல்லைனா டயர் கிடைச்சா வான்கி மாத்திக்கலாம்.

பங்க்சர் ஒட்ட டயர கழட்டக்கூட தேவையில்லை ,நாமளே கூட ஒட்டிக்கலாம்.

ஒரு பசை இருக்க ரப்பர் துண்டு, ஒன்ன ஸ்குரு வச்சு உள்ள அமுக்கிட்டா போதும்.

மேலும் ஒரு ஜெல் இருக்கு அதை டயர் ரிம்- டயர் உள்ள அடைச்சிட்டா, பஞ்சர் ஆனாலும் ,தானா "சீல்" செய்துடும். அதை போடலாம்னு நினைக்கிறேன்,ஆனால் ஒரு டயருக்கு சீலிங் ஜெல் அடைக்க 500 ரூ ஆகும்னு சொன்னாங்க, அதான் யோசிச்சிங்.

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

hahahahaha.... நீங்க தெய்வம் அண்ணே.. படம் உங்களை கோபப்பட வைக்கலையா?

(எம்புட்டு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, உங்க மைண்ட் வாய்ஸ்)]]]

இது மாதிரி நிறைய படங்களை பார்த்துப் பார்த்து சலிச்சுப் போச்சு..! அத்தோட நான் ரசிகனையும் தாண்டி இதே துறையில் இருக்கும் ஒரு ஊழியனாக என்னை பார்க்கிறேன். அதுனால சில நேரத்துல எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிப் போகத் தெரியுது.. அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//சம்பளம் வாங்கி 2 மாசமாச்சு.. எதுக்கு வீணா செலவு செய்யணும்னு யோசிச்சேன்.. அதான் நடந்துட்டேன்..!//

சேனலின் முக்கியப் புள்ளி நீங்களே இப்படி சொன்னா எப்பூடி? கம்பெனில கார் கொடுக்க சொல்லி மிரட்டாம, இப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்களே!]]]

நான் வேலை இல்லாமல் 2 மாசமா வீட்ல உக்காந்திருக்கிறது உங்களுக்குத் தெரியாதா வவ்ஸ்..!?

//என்ன செய்யறது..? நான் என்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறனோ அன்னிக்குத்தான் இப்படி ஏதாவது பிரச்சினையாகும்..? அப்புறம் அது சோதனையில்லாம வேறென்னன்னு நினைச்சீங்க..?//

அது எல்லாருக்குமே அப்படித்தான் ஆகுது, நான் ஊருக்கு கிளம்பினா மட்டும் பஸ்சுல ஃபுட் போர்ட் அடிக்ககூட இடம் இருக்காது அவ்வ்!
சீக்கிரமா ஒரு இடத்துக்கு கிளம்பலாம்னு நினைச்சா அப்பவும் இப்படி ஆகிடும். இதைவிட கடுப்பேத்துவாங்க நம்ம எம்டிசி ஆளுங்க, நாம ஆர்வமா எதிர்ப்பார்த்த வண்டி வந்துச்சேனு ஓடிப் போயி ஏறி டிக்கெட் கேட்டா, இது கட் சர்வீஸ் தாம்பரத்தோட சரினு, ஆப்பு வச்சிடுவாங்க அவ்வ்.]]]

நமக்கும் தோஸ்துக இருக்காங்கப்பா..!

[[[#அல்லாய் வீல் இருக்க எந்த வண்டியிலும் டியூப்லெஸ் டயர் போட்டுக்கலாம். அந்த வீல் சைஸுக்கு டயர் கிடைச்சா போதும் இப்போ வர எல்லா பைக்கிலும், ஆப்ஷனாக "டியூப்லெஸ்" போட சொல்லி வாங்கிக்கலாம் பல்சர் ஹோண்டா யுனிகார்ன் எல்லாம் டியூப்லெஸ்ஸில் இருக்குனு தெரியும். சமீபத்தில டீவிஎஸும் கம்பெனியில இருந்தே டியூப்லஸ் போட்டு விக்கிறதா கேள்வி.
அப்படி இல்லைனா டயர் கிடைச்சா வான்கி மாத்திக்கலாம்.]]]

நான் டிவிஎஸ் எக்ஸ் எல் 50-தான் ஓட்டுறேன்..! இதுக்கேத்தாப்புல கிடைக்குதா..?

[[[பங்க்சர் ஒட்ட டயர கழட்டக்கூட தேவையில்லை, நாமளே கூட ஒட்டிக்கலாம். ஒரு பசை இருக்க ரப்பர் துண்டு, ஒன்ன ஸ்குரு வச்சு உள்ள அமுக்கிட்டா போதும்.
மேலும் ஒரு ஜெல் இருக்கு. அதை டயர் ரிம்- டயர் உள்ள அடைச்சிட்டா, பஞ்சர் ஆனாலும், தானா "சீல்" செய்துடும். அதை போடலாம்னு நினைக்கிறேன், ஆனால் ஒரு டயருக்கு சீலிங் ஜெல் அடைக்க 500 ரூ ஆகும்னு சொன்னாங்க, அதான் யோசிச்சிங்.]]]

100 ரூபாய முடியுற மேட்டரை 500 ரூபாய்க்கு இழுக்குற சாமி..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

//நான் வேலை இல்லாமல் 2 மாசமா வீட்ல உக்காந்திருக்கிறது உங்களுக்குத் தெரியாதா வவ்ஸ்..!?//

மன்னிச்சு, எனக்கு நிஜமாவே தெரியாது, இப்போத்தான் சினிமா 100 விழா கவரேஜ்லாம் செய்தீங்க,அதுக்குள்ள இது போல சொல்லுறிங்களே?

ஒரு இடத்திலே செட்டில் ஆகி மேல வரணும்னு தோன மாட்டேங்குது உங்களுக்கு ,உங்க அனுபவத்துக்கு இன்னேரம் தலைமை பொறுப்புக்கே போயிருக்கலாம்.

ஆறுமாசம் வேலை செய்வதவங்கலாம் சப்-எடிட்டர் ஆகிற காலத்துல இப்படி இருக்கிங்களே?

கூடிய சீக்கிரம் இத விட பெரிய இடத்துல போய் கார் வாங்குவீங்க கவலைப்படாதிங்க.

# டைட்டா சட்டைய போட்டுக்கிட்டு ஜெமோலாம் போய் பார்க்கிறிங்க புக்கு கிக்கு போட்டு , எழுத்தாளரா ஆகனும்னு தோனலையே உங்களுக்கு!

கூடிய சீக்கிரம் எழுத்தாளராக ஆக பாருங்க ,இப்படியே சினிமா விமர்சனத்துலவே காலம் தள்ளினா , ஒருத்தரும் பெருசா கண்டுக்க மாட்டாங்க. அடுத்த கட்டத்துக்கு போக வேண்டாமா?

# டிவிஎஸ் -50 இன்னுமா மாத்தலை? வண்டிலாம் மாத்தி இருப்பீங்கனு நினைச்சேன், அந்த வண்டிக்குலாம் டுயுப்லஸ் வரும்னே தோனலை அவ்வ்!

//100 ரூபாய முடியுற மேட்டரை 500 ரூபாய்க்கு இழுக்குற சாமி..!//

நடுவழியில மாட்டிக்காம இருக்க ,செலவு செய்து தானே ஆகணும் .உண்மையில பஞ்சர் ஆகாம இருக்குமானு டவுட்டாவும் இருக்கு அதான் டிரை செய்யாம இருக்கேன் ,யாராவது நல்லா இருக்குனு சொன்ன முயற்சி செய்து பார்க்கலாம் :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

மன்னிச்சு, எனக்கு நிஜமாவே தெரியாது, இப்போத்தான் சினிமா 100 விழா கவரேஜ்லாம் செய்தீங்க, அதுக்குள்ள இது போல சொல்லுறிங்களே? ஒரு இடத்திலே செட்டில் ஆகி மேல வரணும்னு தோன மாட்டேங்குது உங்களுக்கு, உங்க அனுபவத்துக்கு இன்னேரம் தலைமை பொறுப்புக்கே போயிருக்கலாம். ஆறு மாசம் வேலை செய்வதவங்கலாம் சப்-எடிட்டர் ஆகிற காலத்துல இப்படி இருக்கிங்களே? கூடிய சீக்கிரம் இதவிட பெரிய இடத்துல போய் கார் வாங்குவீங்க கவலைப்படாதிங்க.]]]

உங்க ஆசீர்வாதத்துக்கு மிக்க நன்றிகள் பிரதர்..!

[[[# டைட்டா சட்டைய போட்டுக்கிட்டு ஜெமோலாம் போய் பார்க்கிறிங்க புக்கு கிக்கு போட்டு, எழுத்தாளரா ஆகனும்னு தோனலையே உங்களுக்கு!
கூடிய சீக்கிரம் எழுத்தாளராக ஆக பாருங்க, இப்படியே சினிமா விமர்சனத்துலவே காலம் தள்ளினா , ஒருத்தரும் பெருசா கண்டுக்க மாட்டாங்க. அடுத்த கட்டத்துக்கு போக வேண்டாமா?]]]

நான் ரெடிதான். ஆனா பப்ளிஷர்தான் கிடைக்கலை..!

[[[# டிவிஎஸ்-50 இன்னுமா மாத்தலை? வண்டிலாம் மாத்தி இருப்பீங்கனு நினைச்சேன், அந்த வண்டிக்குலாம் டுயுப்லஸ் வரும்னே தோனலை அவ்வ்!]]]

இந்த ஒரு வண்டியைத்தான் என்னால ஸ்டேண்ட் போட முடியுது.. அதுனாலதான் மாத்தாம வைச்சிருக்கேன்..!

//100 ரூபாய முடியுற மேட்டரை 500 ரூபாய்க்கு இழுக்குற சாமி..!//

நடுவழியில மாட்டிக்காம இருக்க, செலவு செய்துதானே ஆகணும். உண்மையில பஞ்சர் ஆகாம இருக்குமானு டவுட்டாவும் இருக்கு அதான் டிரை செய்யாம இருக்கேன் , யாராவது நல்லா இருக்குனு சொன்ன முயற்சி செய்து பார்க்கலாம் :-))]]]

முயற்சி செய்யுங்க. சக்ஸஸ் ஆனா சொல்லுங்க.. நானும் பாலோ பண்றேன்..!

Sundar Gangadaran said...

அப்ப்டியே அவரை ஒரு photo எடுத்து அப்டேட் பன்னிநா நல்லா இருந்திருக்கும்

Simulation said...

அன்பின் சரவணன்,

பதிவுக்குச் சம்பத்தமில்லாத ஒரு பின்னூட்டம். தவறாக எண்ண வேண்டாம்.

உங்கள் பதிவுகள் பல படித்திருக்கிறேன். திறமைகள் பல இருந்தும், "தாழ்வு மனப்பான்மை'யினால் தடுமாறுகிறீர்களென்று நினைக்கின்றேன். உங்களைவிட உடற்குறைபாடுகள் உள்ள பலரும் இன்றைய தினம் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வாராவாரம் வெளியாகின்ற எல்லாப் படங்களையும் பார்த்து அதற்கு விமர்சனமும் எழுதுகிறதை பார்க்கின்ற போது, "இவரால் எப்படி முடிகின்றது?" என்று தோணும். அதாவது இவரால் எப்படி மாதாமாதம் திரைப்படத்திற்கு செலவழிக்க முடிகின்றது என்று தோணும்.

நீங்கள் உங்கள கைக்காசை செலவழித்துதான் படம் பார்க்கிகின்றீர்களென்றால், ஒரு சிறிய அறிவுரை. அந்தக் காசில் "பாசிட்டிவ் திங்கிங்" சம்பத்தமான பயிற்சிகளில் கலந்து கொண்டால் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

நாம் என்ன மாதிரியான ப்ளெகார்டினை தாங்கிப் பிடித்திருக்கின்றொமொ 'அது'வே நடக்கும். எனக்கு முருகன் எப்போதும் ஆப்பு வைப்பான் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், அப்படியேதான் நடக்கும்.

ஒரு மாறுதலுக்காக, "2014ல் எனக்கு எல்லாமே நன்றாகவே நடக்கும்; என்னுடைய சோதனையான காலங்கள் முடிந்து விட்டன" என்று சொல்லிப் பாருங்கள். அவ்வாறே ஒரு பதிவும் போட்டுத்தான் போடுங்கள். உங்களைப் பின்னுட்டத்தில் எப்படி எல்லோரும் வாழ்த்துகின்றார்கள் என்று பாருங்கள்! அதன் பின் உங்களுக்கே தெரியும் பவர் ஆப் பாசிட்டிவ் திங்கிங் எப்பேர்ப்பட்டது என்று.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

- சிமுலேஷன்

வவ்வால் said...

சிமுலேஷன்,

// "இவரால் எப்படி முடிகின்றது?" என்று தோணும். அதாவது இவரால் எப்படி மாதாமாதம் திரைப்படத்திற்கு செலவழிக்க முடிகின்றது என்று தோணும். //

அண்ணாச்சி பதிவை முழுசாவே படிச்சதில்லையா? அதான் பிரிவியூல பார்க்கிறதா சொல்லிடுறாரே. காசு செலவு பண்ணிலாம் படம் பார்க்கிற அளவுக்கு அண்ணாச்சி விவரமில்லாதவர்னு நினைச்சிட்டிங்களா?

//ஒரு சிறிய அறிவுரை. அந்தக் காசில் "பாசிட்டிவ் திங்கிங்" சம்பத்தமான பயிற்சிகளில் கலந்து கொண்டால் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

நாம் என்ன மாதிரியான ப்ளெகார்டினை தாங்கிப் பிடித்திருக்கின்றொமொ 'அது'வே நடக்கும். எனக்கு முருகன் எப்போதும் ஆப்பு வைப்பான் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், அப்படியேதான் நடக்கும்.
//

அறிவுரைலாம் அண்ணாச்சிக்கு சொல்ல முடியாதுனு தான் "பொலம்பாதிங்க, எல்லாருக்குமே கஷ்டம் வரத்தான் செய்யும்னு "சொல்லிடுறது ஆனாலும் கேட்டப்பாடாயில்லை, இப்ப அறிவுரைனே சொல்லீட்டிங்க இனிமே கேட்டுப்பார்னு நினைக்கிறேன்!

இனிமேலும் "பாசிட்டிவ்" ஆகலைனா ,நாலு யூனிட் "பி பாசிட்டிவ்" பிளட் ஏத்திட வேண்டியது தான் அவ்வ்!