தகராறு - சினிமா விமர்சனம்

8-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"மெளன குரு' படத்திற்குப் பின்பு 50 கதைகள் கேட்டும் பிடிக்காமல் போய் கடைசியாக இந்தக் கதைதான் என்னை இம்ப்ரஸ் செய்தது. அதுதான் 2 வருடங்கள் காத்திருந்து அடுத்த படம் பண்ணியிருக்கேன்..." என்று இதன் ஹீரோ அருள்நிதி கூறியிருக்கிறார். கதை சொல்லும்போது இந்தப் படத்தின் மெயின் டிவிஸ்ட்டை மட்டும் பில்டப்பாக இயக்குநர் கூறியிருப்பார்ன்னு நினைக்குறேன்..! அதான் அருள்நிதி தம்பீ பீலாயிட்டாப்புல போலிருக்கு..! 


ஒரு ஊர்ல 4 திருடனுங்க.. அவங்க ஒரு நாள் ராத்திரி குடியிருந்த கோவிலான டாஸ்மாக்குல சரக்கடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது.. அதுல ஒருத்தனை யாரோ கொலை பண்ணிர்றாங்க.. அதே நாள்ல இன்னொரு இடத்துல ஒரு போலீஸ் கான்ஸ்டபிளையும் யாரோ போட்டுத் தள்ளிடறாங்க..! இந்த 2 கொலைகளையும் யார் செஞ்சதுன்னு போலீஸ் ஒரு பக்கம் தேட.. தங்களோட உயிர் நண்பனை எவன் கொன்னான்னு நண்பர்கள் கூட்டமும் ஒரு பக்கம் தேடுது.. கடைசீல யார் கொன்னதுன்றதுதான் கிளைமாக்ஸ்..!

காட்சிக்கு காட்சி டாஸ்மாக் சரக்குதான்.. அநேகமா இந்த வருஷம் வந்த படங்கள்லேயே இந்தப் படம்தான் அதிக சரக்குகளை காட்டியிருக்கும் படம்ன்னு நினைக்கிறேன்..! இப்படியே போனா.. நாளைய.. வருங்கால சமுதாயம்.. நம்ம தமிழர்கள் குடியே கதின்னு கெடந்தாங்கன்னு நம்ம தலைமுறையைப் பத்திப் பேசப் போறாங்க..! ஏன்னா ஒரு காலத்திய சூழலை அடுத்தத் தலைமுறைக்குக் காட்டுறது சினிமாதானே..? அதுவே இந்த லட்சணத்துல இருக்கே..? யாருக்கு இங்க அக்கறை இருக்கு..? யதார்த்தத்தைக் காட்டுறோம்ன்னு சொல்லிட்டு டாஸ்மாக்கையே காட்டிக்கிட்டிருந்தா எப்படி..? எடுக்குறதுக்கு கதையா இல்லை..?

இதுல இதுக்கு மதுரை மண்ணோட பேக்கிரவுண்ட் வேற..! ஏதோ மதுரைல இருக்கிறவனுங்க அத்தனை பேரும் கத்தி, அரிவாளோடதான் திரியறானுங்க நினைப்பு..? அதோட "மதுரைக்கார பொண்ணுகன்னா ச்சும்மா நினைச்சியா..? எங்களையும் ஏமாத்தினா சீவிருவோம்"ன்னு பொம்பளைங்களேயும் சேர்த்தே தெருவுக்கு இழுத்து வைச்சிருக்காங்க..! இப்போ மதுரை மண்ணுக்கு யார்தாங்க அத்தாரிட்டி..!? ஆக மொத்தம்.. சென்னைல மட்டும்தான் மக்கள்ஸ் ஒழுக்கமா வாழுறாங்கன்னு கோடம்பாக்கமே சொல்லுதுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..!

பீரோ புல்லிங் கொள்ளையர்கள்.. ஒரு வீட்ல கொள்ளையடிச்சிட்டு போயிட்டாங்க. பாடல் காட்சில அதே திருடர்கள் அதுக்கு முன்னாடியே வேற கொள்ளை கேஸ்ல பிடிபட்டு  ஜெயிலுக்கு போயிட்டு திரும்பி வந்திருக்கிறதா காட்டுறாங்க.. இப்போ கொள்ளையடிச்சா மட்டும் அவங்களை தேடவே தேடாதா..? அவங்களை கண்டு பிடிக்கவே முடியாதா..? மதுரைல போலீஸ்ன்னு ஒண்ணு என்ன செய்யுதுன்னே தெரியாம கெடக்கு இந்தப் படத்துல..? அவ்வளவு லாஜிக் ஓட்டை..!

அருள்நிதி, பவண்ஜி, சுலில்குமார், முருகதாஸ் இவங்க நாலு பேரும்தான் அந்த திருடனுங்க..! நடிப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு..! நட்புக்காக உயிரையே கொடுப்பேன்னு சொல்ற ஹீரோதான், முன்பாதில நட்பையே விட்டுட்டு ஹீரோயின் பின்னாடி சுத்துறாரு..  ஹீரோயின்கிட்ட பேசுறதுக்கே பயப்படுற ஹீரோதான்.. "எனக்கு நட்புதான் முக்கியம்.. நீ வேண்ணா வேற ஆளை பார்த்துக்க"ன்னு கடைசீல சொல்றாரு..! என்னமோ உதைக்குதேன்னு இயக்குநர் யோசிக்க வேணாம்..?

பூர்ணாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படமே..! திருடன், அயோக்கியன்னு தெரிஞ்சும் காதலிக்கிறதுதானே, இப்போ தமிழ்ச் சினிமால பேஷன். அதையேதான் இந்தப் பொண்ணும் செஞ்சிருக்கு..! ஏண்டா என்னை லவ் பண்ண வைச்சிட்டு இப்போ வேணாண்ற என்ற அந்த கோபத்தில் நியாயம் உண்டுதான்.. விரட்டி விரட்டி காதலிக்கும் ஹீரோ.. திடீர்ன்னு டிராக் மாறிட்டா.. அது மாதிரி ஹீரோயின்களால் உடனேயே டிராக் மாற முடியாது என்பதை இந்தப் படத்துல அழுத்தமா சொல்லியிருக்காரு இயக்குநர்..!

அந்தக் கொலைகளைச் செய்த்து யார்ன்னு கண்டுபிடிக்கத்தான் 3 டைப் திரைக்கதைகள் படத்துல வருது.. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு பக்கம் என்கவுண்ட்டர் செய்ய பிளானிங்கோட இருக்குறது.. பூர்ணாவோட அப்பா ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் லோக்கல் தாதாவை வீட்ல வைச்சு சாத்துனதால.. அவனோட எதிர்ப்பு.. இப்படி 3 பக்க விரோதத்தில் யார்தான் செஞ்சதுன்னு யோசிக்க வைச்சு கிளைமாக்ஸ்ல சரியான சமயத்துல சஸ்பென்ஸை உடைக்கிறாரு இயக்குநர்..! அந்தக் கடைசி 10 நிமிஷம் படம் ஓகே..! 

பூர்ணாவை தமிழ்த் திரையுலகம் இன்னமும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரிகிறது..! மெச்சூர்டான கேரக்டர்களையும் அவரால் செய்ய முடியும் என்பதை இனிமேலாச்சும் புரிஞ்சுக்கிட்டு இதைவிட நல்ல கேரக்டர்களை கொடுத்து வாழ வைக்கலாம்..!

அருள்நிதி 'மெளனகுரு' ஸ்டைலிலேயே இதிலும் நடித்திருக்கிறார். இதற்கடுத்த படங்களில் தனக்கென்று தனி பாணியை உருவாக்கிக் கொண்டால் நலமாக இருக்கும். அடுத்தடுத்து ஒரே பார்மெட் எனில் மக்களுக்கு சலிப்பாகிவிடும்..! யதார்த்தமான.. புரிந்து கொள்ள முடியாத ரவுடித்தனம் எனில் இயக்குநர்கள் இப்படித்தான் ஹீரோக்களை தேர்வு செய்கிறார்கள்..! அது அந்த இயக்குநருக்கு ஒரு படம்.. ஆனால் ஹீரோக்களுக்கு வரிசையா தொடர்ந்து வருதே..!? ரொம்பப் போரடிக்குது..! 

மதுரையை சல்லடை போட்டு சலித்து எடுத்திருக்கம் தில்ராஜின் ஒளிப்பதிவில் அருள்தாஸ் ஆட்களுடன் சண்டையிடும் காட்சி செம பரபரப்பு...!  மதுரையை லாங் ஸாட்டிலேயே காட்டி அவ்வப்போது கதைக்களம் அதுதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்..!  

டாஸ்மாக் பாரை தள்ளிக் கொண்டு போக முயலும் மயில்சாமி.. பக்கெட் நண்பரான பாவா லட்சுமணன்.. பூர்ணாவின் தாயான சிந்தியாவின் லொட.. லொட பேச்சு.. ஜெயபிரகாஷின் எடுறா அரிவாளை என்ற வீரப் பேச்சு.. அருள்தாஸின் கன்னியமான ரவுடி பேச்சு.. 2 கொலைகள் நடப்பதையும் டைட்டில் கார்டிலேயே வெறும் வசனத்தாலேயே நகர்த்தியிருக்கும்விதம்.. இப்படி சிலவைகள் ரசிப்பதுபோல இருந்தாலும்.. மதுரை போலீஸ் என்னதான் செய்யுது என்ற கேள்விக்கு விடையே இல்லாததால்  திரைக்கதை நொண்டியடிப்பதையும் சொல்லத்தான் வேண்டும்..!

எழுதி, இயக்கியிருக்கும் கணேஷ் விநாயக் புதுமுகம் என்பதால் வாழ்த்தி வரவேற்போம்.. அடுத்தடுத்த படங்களில் டாஸ்மாக்கே இல்லாமல் படம் எடுத்து தனது பாவத்தை அவர் நிவர்த்தி செய்வார் என்றும் நம்புகிறேன்..! 

29 comments:

Nondavan said...

இந்த படம் கெட்ட கேடுக்கு நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். முகநூலில் நான் பதிந்தது, இங்கு மீண்டும்...

’தகராறு’ ........

இதையும் குடும்பத்தோட தியேட்டர்ல பார்த்த என்ன நிக்க வெச்சு சுடனும்...!!! தப்பே இல்ல....

உங்ககிட்ட காசு இருந்தா, இப்படியாடா போட்டு தாளிக்குறது..... !!!

போச்சே போச்சே... ரூபா 4000 போச்சே....

மிடில மக்காஸ்....

Nondavan said...

அண்ணே, திரைக்கதை சவ சவ சவன்னு... ஒரு திகிலும், த்ரில்லிங்கும் இல்லாம் போகுது....

எல்லாமே யூகிக்க முடியும் காட்சிகள்...

படம் ஆரம்பிச்ச 10 நிமிசத்துல என் மனைவியே சொல்லிட்டா... முடியும்போது எல்லோரும் செத்துருவாங்க தானென்னு :) :) :)

நீங்க குறிப்பிட்ட டாஸ்மாக் மேட்டர் எனக்கும் எரிச்சலைத் தான் தந்தது... அவ்வளவு காட்சிகள் அங்க...

படம் முடியும்போது கொலவெறியில இருக்கேன்... இந்த லட்சனத்துல, படம் முடியும்போது, A film by Ganesh Vinaayac ன்னு....

Nondavan said...

அந்த மழை சண்டை காட்சி (நான் மகான் அல்ல தாதாவுடன்) முடிந்தவுடன், தேவையே இல்லாமல் ஹீரோயின் வந்து... புலம்பும் சீன்லயே தெரிஞ்சு போச்சு....

அப்பவே நான் கமெண்ட் அடிச்சேன்.. டைரக்டர் நம்மள நம்ம வைக்குறாமா...!!! இந்த ஹீரோயின் மேல நமக்கு டவுட் வரக்கூடாதுன்னு...

இவ தான், வில்லின்னு அப்பவே தெரிஞ்சு போச்....

மொத்த தியேட்டருக்கும், நான் ஒருவன் மட்டுமே குடும்பத்துடன்...

(மொத்தமே 10-15 பேர் தான், அது வேற)

Nondavan said...

இப்படி ஒரு லூசு இன்ஸ்பெக்டர் போலிஸை சமீபத்தில் பார்த்ததே இல்ல... :) :) :) freeயா இருக்கும் போது வந்து சவுண்டு விட்டு அடி வாங்கிட்டு போவார் போல... அப்புறம் ஆளே இருக்க மாட்டார்...

ஜெயப்பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.... அவரையும் இப்படி தண்டம் பண்ணிட்டாங்க, இந்த ரோலுக்கு இவர் எதுக்கு????

அந்த தாதாவும், சும்மா விடமாட்டேன்னு...சவுண்டு விட்டுட்டே இருக்கார்...

என்ன டேஷ்க்கு காந்தி ரேஞ்ஜுக்கு வசனம் பேசி சும்மா விடுறார் கடைசில... அதுவும் கொல்லவந்தவங்களை :) :) :) அடங்கொப்பா.... முடியுல

Nondavan said...

சாதா, மொக்க ஜோக்குக்கே சிரிக்கும் ஆள் நான்... இந்த படத்துல ஒரு இடத்துல கூட சிரிக்கவே இல்ல... எரிச்சல் தான் மிச்சம்...

என் பையனும் நானும், தியேட்டர் முழுக்க ஓடி விளையாண்டோம்... அவ்வளவு தான்.... :) :) :)

இப்படி மொக்கையா எடுத்தா, எவன் தியேட்டருக்கு போவான்... அப்புறம் குத்துதே, வலிக்குதேன்னா... எவன் தப்பு...!!!! ?????

Nondavan said...

ஆனாலும், இந்த படத்துக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணமாக பாசிடிவாக எழுதி இருக்கீங்க பாருங்க... சூப்பர்ப்...

இந்த தயாரிப்பாளர் கவுன்சில்ல உங்களுக்கு மாலை போட்டு பெரிய மரியாதை செய்யனும்...

பகடிக்காக சொல்லல, நிசமாவே சொல்றேன்...

Nondavan said...

நண்பர்களாக நடித்தவர்கள் அருமையான நடிப்பு.... குறிப்பா (நிறைய விஜய் படத்தில் சின்ன சின்ன வில்லனாக நடித்தவர்) பவன் என்று நினைக்கிறேன்... செம்ம நடிப்பு.... அவர் ஒருத்தர் தான் கவர்ந்தார்...

kanavuthirutan said...

மலிவான கற்பனையும், வீரியமில்லாத காட்சிகளுமாக எந்த அழுத்தமான பாதிப்பையும் கொடுக்காததால், யாரு கொன்னுருந்தா நமக்கென்ன...? என்ற மனநிலையில் தான் அமர்ந்திருந்தேன். படம்விட்டு வரும் போதுதான் தெரிந்தது எல்லாருமே அதே மனநிலையில் இருந்திருக்கிறார்கள் என்பது...

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இந்த படம் கெட்ட கேடுக்கு நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். முகநூலில் நான் பதிந்தது, இங்கு மீண்டும்...

’தகராறு’ ........

இதையும் குடும்பத்தோட தியேட்டர்ல பார்த்த என்ன நிக்க வெச்சு சுடனும்...!!! தப்பே இல்ல....

உங்ககிட்ட காசு இருந்தா, இப்படியாடா போட்டு தாளிக்குறது..... !!!

போச்சே போச்சே... ரூபா 4000 போச்சே....

மிடில மக்காஸ்....]]]

வருந்துகிறேன்.. வேறென்னத்த சொல்ல..! 4000 ரூபாங்குறது நிச்சயமா அதிகம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...
அண்ணே, திரைக்கதை சவ சவ சவன்னு... ஒரு திகிலும், த்ரில்லிங்கும் இல்லாம் போகுது....
எல்லாமே யூகிக்க முடியும் காட்சிகள்.
படம் ஆரம்பிச்ச 10 நிமிசத்துல என் மனைவியே சொல்லிட்டா... முடியும்போது எல்லோரும் செத்துருவாங்க தானென்னு:):):)

நீங்க குறிப்பிட்ட டாஸ்மாக் மேட்டர் எனக்கும் எரிச்சலைத்தான் தந்தது... அவ்வளவு காட்சிகள் அங்க...

படம் முடியும்போது கொலவெறியில இருக்கேன்... இந்த லட்சனத்துல, படம் முடியும்போது, A film by Ganesh Vinaayacன்னு.]]]

செத்தாண்டா சேகரு..! நொந்தவன் ஸாரின் வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்ட இயக்குநரை நினைச்சாத்தான்..??????????

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அந்த மழை சண்டை காட்சி (நான் மகான் அல்ல தாதாவுடன்) முடிந்தவுடன், தேவையே இல்லாமல் ஹீரோயின் வந்து. புலம்பும் சீன்லயே தெரிஞ்சு போச்சு. அப்பவே நான் கமெண்ட் அடிச்சேன். டைரக்டர் நம்மள நம்ம வைக்குறாமா.!!! இந்த ஹீரோயின் மேல நமக்கு டவுட் வரக் கூடாதுன்னு. இவதான், வில்லின்னு அப்பவே தெரிஞ்சு போச்.]]]

ச்சே.. நீங்க ரொம்ப அனுபவம் வாய்ந்த ரசிகரா இருப்பீங்க போலிருக்கு..!

[[[மொத்த தியேட்டருக்கும், நான் ஒருவன் மட்டுமே குடும்பத்துடன்... (மொத்தமே 10-15 பேர்தான், அது வேற)]]]

இவ்ளோதானா..? ம்ஹூம்.. தமிழ்ச் சினிமாக்கள் போற போக்கை பார்த்தா..???????????

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இப்படி ஒரு லூசு இன்ஸ்பெக்டர் போலிஸை சமீபத்தில் பார்த்ததே இல்ல...:) freeயா இருக்கும்போது வந்து சவுண்டு விட்டு அடி வாங்கிட்டு போவார் போல. அப்புறம் ஆளே இருக்க மாட்டார்.]]]

இதுதான் திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை..!

[[[ஜெயப்பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரையும் இப்படி தண்டம் பண்ணிட்டாங்க, இந்த ரோலுக்கு இவர் எதுக்கு????]]]

ச்சும்மாதான்.. இவங்கெல்லாம் நடிச்சிருக்காங்கன்னு சொல்லணும்ல்ல..!

[[[அந்த தாதாவும், சும்மா விடமாட்டேன்னு சவுண்டு விட்டுட்டே இருக்கார். என்ன டேஷ்க்கு காந்தி ரேஞ்ஜுக்கு வசனம் பேசி சும்மா விடுறார் கடைசில. அதுவும் கொல்ல வந்தவங்களை :) :) :) அடங்கொப்பா.... முடியுல..]]]

அப்படியும் ஒருத்தர் இருப்பாங்கன்னு காட்டத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

சாதா, மொக்க ஜோக்குக்கே சிரிக்கும் ஆள் நான்... இந்த படத்துல ஒரு இடத்துல கூட சிரிக்கவே இல்ல... எரிச்சல்தான் மிச்சம். என் பையனும் நானும், தியேட்டர் முழுக்க ஓடி விளையாண்டோம். அவ்வளவுதான்) :) :)]]]

இது காமெடி படம் இல்லண்ணே.. ஆக்சன் படம்..! நீங்க தப்பா நினைச்சிட்டீங்களோ..?

[[[இப்படி மொக்கையா எடுத்தா, எவன் தியேட்டருக்கு போவான். அப்புறம் குத்துதே, வலிக்குதேன்னா. எவன் தப்பு...!!!! ?????]]]

கண்டிப்பா இவங்க தப்புதான்.. மன்னிச்சு விட்ருங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

சாதா, மொக்க ஜோக்குக்கே சிரிக்கும் ஆள் நான்... இந்த படத்துல ஒரு இடத்துல கூட சிரிக்கவே இல்ல... எரிச்சல்தான் மிச்சம். என் பையனும் நானும், தியேட்டர் முழுக்க ஓடி விளையாண்டோம். அவ்வளவுதான்) :) :)]]]

இது காமெடி படம் இல்லண்ணே.. ஆக்சன் படம்..! நீங்க தப்பா நினைச்சிட்டீங்களோ..?

[[[இப்படி மொக்கையா எடுத்தா, எவன் தியேட்டருக்கு போவான். அப்புறம் குத்துதே, வலிக்குதேன்னா. எவன் தப்பு...!!!! ?????]]]

கண்டிப்பா இவங்க தப்புதான்.. மன்னிச்சு விட்ருங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

ஆனாலும், இந்த படத்துக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணமா பாசிடிவாக எழுதி இருக்கீங்க பாருங்க சூப்பர்ப். இந்த தயாரிப்பாளர் கவுன்சில்ல உங்களுக்கு மாலை போட்டு பெரிய மரியாதை செய்யனும். பகடிக்காக சொல்லல, நிசமாவே சொல்றேன்.]]]

ஆஹா.. இதுதாண்ணே உண்மையான பாராட்டு.. நன்றிண்ணே..! மாலையோட வரச் சொல்லுங்க.. கழுத்தோட காத்திருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நண்பர்களாக நடித்தவர்கள் அருமையான நடிப்பு. குறிப்பா (நிறைய விஜய் படத்தில் சின்ன சின்ன வில்லனாக நடித்தவர்) பவன் என்று நினைக்கிறேன். செம்ம நடிப்பு. அவர் ஒருத்தர்தான் கவர்ந்தார்.]]]

ஏதோ ஒருத்தராச்சும் நடிச்சாரேன்னு சந்தோஷப்படுண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

மலிவான கற்பனையும், வீரியமில்லாத காட்சிகளுமாக எந்த அழுத்தமான பாதிப்பையும் கொடுக்காததால், யாரு கொன்னுருந்தா நமக்கென்ன...? என்ற மனநிலையில்தான் அமர்ந்திருந்தேன். படம்விட்டு வரும்போதுதான் தெரிந்தது எல்லாருமே அதே மனநிலையில் இருந்திருக்கிறார்கள் என்பது.]]]

இதுதான் உண்மை..! கதையில் அழுத்தமில்லை.. நடிப்பில் இயல்பில்லை.. இயக்கத்தில் ஈர்ப்பில்லை.. முடிவு இப்படித்தான் இருக்கும்..!

Nondavan said...

//இது காமெடி படம் இல்லண்ணே.. ஆக்சன் படம்..! நீங்க தப்பா நினைச்சிட்டீங்களோ..? // hahahhaa.. அண்ணே, முதல் பாதில இங்கிலீஷ்ல பேசுறேன் பேர்வழின்னு காமெடி ட்ரை பண்ணதை சொன்னேன்....

கைல கிடச்சான், வெட்டிருவேன்.. அவ்வளவு கடுப்ஸ்ஸ்ஸ்

Nondavan said...

//[[[Nondavan said...

அந்த மழை சண்டை காட்சி (நான் மகான் அல்ல தாதாவுடன்) முடிந்தவுடன், தேவையே இல்லாமல் ஹீரோயின் வந்து. புலம்பும் சீன்லயே தெரிஞ்சு போச்சு. அப்பவே நான் கமெண்ட் அடிச்சேன். டைரக்டர் நம்மள நம்ம வைக்குறாமா.!!! இந்த ஹீரோயின் மேல நமக்கு டவுட் வரக் கூடாதுன்னு. இவதான், வில்லின்னு அப்பவே தெரிஞ்சு போச்.]]]

ச்சே.. நீங்க ரொம்ப அனுபவம் வாய்ந்த ரசிகரா இருப்பீங்க போலிருக்கு..! // அப்படி லூசுத்தன்மான ஒரு மேக்கிங்... ஒரு படத்தை விடாம பார்த்தா... இப்படி தான்...

Nondavan said...

//[[[மொத்த தியேட்டருக்கும், நான் ஒருவன் மட்டுமே குடும்பத்துடன்... (மொத்தமே 10-15 பேர்தான், அது வேற)]]]

இவ்ளோதானா..? ம்ஹூம்.. தமிழ்ச் சினிமாக்கள் போற போக்கை பார்த்தா..??????????? // இதுவே நெம்ப ஜாஸ்தி, யார் செய்த புண்ணியமோ, 10-15 பேர் வந்துட்டாங்க.... ????

Nondavan said...

இந்த படத்தால ஒரே பிரியோஜனம், நான் போட்டதிலேயே அதிக கமெண்ட் இங்க இப்பதான் போட்டிருக்கேன்.... அவ்ளோதான் :) :) :)

Nondavan said...

கடைசியா ஒரு விசயம், இந்த லிங்க படிச்சு பாருங்க..

http://tamil.oneindia.in/movies/review/thagararu-review-189111.html

எவ்ளோ காசு வாங்கிட்டு இப்படி மனசாட்சியே இல்லாம எழுதினானோ....!!!!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//இது காமெடி படம் இல்லண்ணே.. ஆக்சன் படம்..! நீங்க தப்பா நினைச்சிட்டீங்களோ..? //

hahahhaa.. அண்ணே, முதல் பாதில இங்கிலீஷ்ல பேசுறேன் பேர்வழின்னு காமெடி ட்ரை பண்ணதை சொன்னேன். கைல கிடச்சான், வெட்டிருவேன்.. அவ்வளவு கடுப்ஸ்ஸ்ஸ்...]]]

கூல்.. ஏதோ கொஞ்சம் டிரை செஞ்சிருக்காங்கன்னு நினைச்சுக்குங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//[[[Nondavan said...

அந்த மழை சண்டை காட்சி (நான் மகான் அல்ல தாதாவுடன்) முடிந்தவுடன், தேவையே இல்லாமல் ஹீரோயின் வந்து. புலம்பும் சீன்லயே தெரிஞ்சு போச்சு. அப்பவே நான் கமெண்ட் அடிச்சேன். டைரக்டர் நம்மள நம்ம வைக்குறாமா.!!! இந்த ஹீரோயின் மேல நமக்கு டவுட் வரக் கூடாதுன்னு. இவதான், வில்லின்னு அப்பவே தெரிஞ்சு போச்.]]]

ச்சே.. நீங்க ரொம்ப அனுபவம் வாய்ந்த ரசிகரா இருப்பீங்க போலிருக்கு..! //

அப்படி லூசுத்தன்மான ஒரு மேக்கிங் ஒரு படத்தை விடாம பார்த்தா இப்படிதான்...]]]

இதையே தொடர்ந்து செய்யுங்க.. மனம் நிச்சயமா ஒரு நாளைக்கு ஆறுதலாயிரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//[[[மொத்த தியேட்டருக்கும், நான் ஒருவன் மட்டுமே குடும்பத்துடன்... (மொத்தமே 10-15 பேர்தான், அது வேற)]]]

இவ்ளோதானா..? ம்ஹூம்.. தமிழ்ச் சினிமாக்கள் போற போக்கை பார்த்தா..???????????

//இதுவே நெம்ப ஜாஸ்தி, யார் செய்த புண்ணியமோ, 10-15 பேர் வந்துட்டாங்க.... ????]]]

இப்படியே விரட்டி விரட்டி ரசிகர்களைத் தாக்குறதுன்னு நம்ம இயக்குநர்கள் முடிவு செஞ்சுட்டாங்க போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இந்த படத்தால ஒரே பிரியோஜனம், நான் போட்டதிலேயே அதிக கமெண்ட் இங்க இப்பதான் போட்டிருக்கேன்.... அவ்ளோதான் :) :) :)]]]

அதுக்காக நான் எவ்வளவு வேண்ணாலும் உங்களைப் பாராட்டணும்.. நன்றி தெரிவிக்கணும்.. நன்னிங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

கடைசியா ஒரு விசயம், இந்த லிங்க படிச்சு பாருங்க..

http://tamil.oneindia.in/movies/review/thagararu-review-189111.html

எவ்ளோ காசு வாங்கிட்டு இப்படி மனசாட்சியே இல்லாம எழுதினானோ....!!!!]]]

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் பிரதர்..! லூஸ்ல விடுங்க..!

jeyam said...

அருமையான விமர்சனம்ம்...சரியானே கேடு கேட்ட படம் இது..படமாய்யா எடுக்கனன்கிய..எப்போ பாத்தாலும் குடி கடி குடி...மதுர பஸ் பாக்கவே பயம இருக்கு... யதார்த்தம் யதார்த்தம்னு சொல்லிக்கிட்டு விளங்காத படம் எடுத்துகிட்டு இருக்காங்க...தயவு செய்து யாரும் இந்த படத்த குடும்பத்ததோட பாகாதீங்க

உண்மைத்தமிழன் said...

[[[jeyam said...

அருமையான விமர்சனம். சரியானே கேடு கேட்ட படம் இது. படமாய்யா எடுக்கனன்கிய. எப்போ பாத்தாலும் குடி கடி குடி. மதுர பஸ் பாக்கவே பயம இருக்கு. யதார்த்தம் யதார்த்தம்னு சொல்லிக்கிட்டு விளங்காத படம் எடுத்துகிட்டு இருக்காங்க. தயவு செய்து யாரும் இந்த படத்த குடும்பத்ததோட பாகாதீங்க.]]]

ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போலிருக்கு ஸார்..! வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..!