நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்..! - ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கத்தின் கொதிப்பு..!

30-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எல்லாம் நல்லபடியாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு இயக்குநர் களஞ்சியம் பேச வரும்வரைக்கும்..! 'வலியுடன் ஒரு காதல்'ன்ற படத்தோட இசை வெளியீட்டு விழா.. புதுமுக ஹீரோ. அவரோட அப்பாதான் தயாரிப்பாளர். கெளரி நாயர்ன்ற கேரள பொண்ணு புதுமுகம். சஞ்சீவின்ற புதுமுக இயக்குநர்.. கிராமத்து கதையா இருக்கு.. வழக்கமான காதலாத்தான் தெரியுது. ஆனா எடுத்திருந்த ஒரு பாடல் காட்சியின் காட்சிகள், இயக்குநர் யாருன்னு விசாரிக்கணும் போல இருந்துச்சு..!


வரிசையா வாழ்த்தி பேச வந்தவங்க சொல்லி வைச்ச மாதிரியே, இந்தப் படம் சக்கை போடு போடும்ன்னு வஞ்சகமில்லாமாத்தான் வாழ்த்தினாங்க. களஞ்சியம் ஐயா பேச வந்தாரு.. 


முதல்ல சாதாரணமா எல்லாத்தையும் பேசிட்டு கடைசீல அவரோட தற்போதைய பரபரப்பு மேட்டரை தொட்டாரு.. அவர் அஞ்சலியை வைச்சு எடுத்துக்கிட்டிருந்த படம் பாதில அப்படியே நிக்கிறதையும், அஞ்சலியோட புறக்கணிப்பால படத்தைத் தொடர முடியாம தான் கஷ்டப்படுறதையும் சொல்லி.. இதுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முனைந்து ஆக்சன் எடுத்து தன்னை மாதிரி தயாரிப்பாளர்களை கஷ்டத்துல இருந்து மீட்கணும்னாரு.. இவர் சொன்னவரைக்கும் சரிதான்..! அடுத்து நடக்க வேண்டியதெல்லாம் தயாரிப்பாளர் கவுன்சில்ல பேச வேண்டிய மேட்டரு..!

இதுக்கப்புறம் ஏற்கெனவே பேசிவிட்டு போயிருந்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் திரும்பியும் வந்து மைக்கை புடிச்சாரு. அவருக்கும் களஞ்சியத்துக்கும் இருக்குற பிரெண்ட்ஷிப்பையெல்லாம் சொல்லிட்டு, கடைசீல “அஞ்சலி மாதிரி தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை கொடுக்கறவங்களை செருப்பால அடிக்கணும்.. அப்பத்தான் இன்னொருத்தர் இது மாதிரி செய்ய மாட்டாங்க. அஞ்சலி இங்க வந்துதான் ஆகணும். அந்தப் பொண்ணு எப்படி வராம இருக்காங்கன்னு பார்த்திருவோம்.. அப்படி வரலைன்னா இதுவரைக்கும் இந்தப் படத்துக்கு ஆன செலவை முழுசா அவங்ககிட்டேயிருந்து வாங்கிரணும்.. அப்புறம் அது எந்த மூலைல இருந்தாலும் நாங்க அதைப் பத்திக் கவலைப்படப் போறதில்லை..! இப்போ வந்திருக்கிற புது தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் கேயார் தலைமையில் நல்லபடியா நடக்குது. சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்..” என்றார்..!

இதுக்கு பின்னாடி திரும்பவும் மைக்கை பிடிச்ச இன்னொரு தயாரிப்பாளரும், பி.ஆர்.ஓ.வுமான விஜயமுரளி, “ஜாக்குவாரின் வார்த்தைகள் ஒரு புளோல அப்படியே வந்திருச்சு”ன்னு சொல்லி பிரஸ்காரங்களை சமாதானப்படுத்தினார்.. இதெல்லாம் எங்க போய் முடியும்..?

இதே மாதிரி ஏதோவொரு நடிகைக்கும், ஏதோவொரு தயாரிப்பாளருக்கும் பிரச்சினையாகி போய், நடிகர்கள் சங்கத்தை சேர்ந்தவங்க இது மாதிரியான தயாரிப்பாளர்களை செருப்பால அடிக்கணும்னு சொன்னா.. தயாரிப்பாளர்கள் சங்கத்துல இருக்குறவங்க சும்மா விடுவாங்களா..? இத்தனைக்கும் ஜாக்குவார் தங்கமும் நடிகர்கள் சங்கத்துல மெம்பர்தான்..!  அவரே சக நடிகையரை இப்படிச் சொன்னா வெளில இருக்கிறவன் என்னத்த நினைப்பான்..?


இப்போ அஞ்சலி மீதான அவதூறு வழக்குல அவர் ஆஜராகாததினால் அஞ்சலிக்கு பிடிவராண்டு போட்டிருக்காங்க..! இப்படி வழக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலான நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப் போறாருன்னுதான் தெரியலை..!  ஏற்கெனவே களஞ்சியம் மேல இருக்குற பயத்துலதான் அஞ்சலி தமிழ்நாட்டுப் பக்கமே வர பயப்படுறாங்கன்னு அவங்க சார்பா சொல்றாங்க..! இந்தப் படத்துல மேற்கொண்டு நடிக்க விரும்பலைன்னா அவங்களே ஒரு பிரஸ் மீட் வைச்சு சொல்லிட்டு இல்லாட்டி நடிகர் சங்கம் மூலமா சொல்லிட்டு கவுரவமா விலகிக்கிறதுதான் நல்லது..! அப்படியும் இதுவரைக்கும் எடுத்த செலவுக்கு அஞ்சலிதான் நிச்சயமா பதில் சொல்லணும்..! வேற வழியில்லை..! அஞ்சலியின் அருகில் நல்ல ஆலோசகர்கள் இல்லை என்று நினைக்கிறேன். எப்பவோ பேசி முடிச்சிருக்க வேண்டிய மேட்டரை இவ்ளோ தூரம் தேவையில்லாமல் இழுத்து.. இது இப்படி செருப்படிவரைக்கும் கொண்டு போய்விட்டிருச்சு..! 

இந்த செருப்படி பேச்சு நாளைக்கு வேறு விதமாக பெப்சி சங்கங்களுக்கு இடையிலேயே பேசப்படும் என்று நினைக்கிறேன்..! ஏன்னா சினிமால ஒரு தப்புக்காக ஒருத்தரை செருப்பால அடிச்சா.. அப்படியே தொடர்ந்து மாத்தி, மாத்தி எல்லா சங்கத்துக்காரங்களையும் அடிச்சுக்கிட்டே இருக்கலாம்.. அத்தனை தப்புகள் உள்ளுக்குள்ளேயே இருக்கு..! இதை ஆரம்பிச்சு வைச்ச ஜாக்குவார் தங்கம் வாழ்கன்னுதான் சொல்லணும்..!

அடுத்த செருப்படி யாருக்குன்னு பார்ப்போம்..!!! 

14 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

பொதுவா மேடையில் ஏறி நின்றாலே வார்த்தைகள் பலருக்கும் அருவி மாதிரி கொட்டிடுமோ?

வவ்வால் said...

அண்ணாச்சி,

அஞ்சலி,களஞ்சியம் பிரச்சினைலாம் இப்போ வந்துச்சு,அந்தப்படம் அஞ்சலி பீக்ல வரும் முன்னரே தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டு பாதியில நின்னு போச்சு, அப்போலாம் அஞ்சலியால நிக்க வாய்ப்பே இல்லை, தயாரிக்க காசு இல்லாம இவரா நிப்பாட்டிட்டார், ஸ்டில்ஸ் பார்த்தாலே தெரியும் எந்த காலத்து தயாரிப்புனு.

அப்புறம் இப்போ தயாரிப்பு நின்னு போனதுக்கு அதான் காரணம் காசு கொடுனு சொல்றது எந்த ஊரு நியாயம். இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன் , ஒரு படத்துக்கு எத்தினி நாளு கால்ஷீட் கொடுக்கனுமாம்?

இவனுங்களா போய் வெளிமாநில நடிகை தான் வேண்டும்னு இழுத்து வருவாங்க, பிரச்சினை ஆனால் மட்டும் தமிழ் தயாரிப்பாளர்களை வஞ்சிக்கும் வெளிமாநில நடிகைகள் என்பார்கள்.

செக் மோசடில உள்ள போக வேண்டிய ஜாக்குவார்லாம் எதுக்கு இந்த சவுண்டு விடுறார்னே தெரியலை, கூடிய சீக்கிரம் "செக் மோசடி" கேசில சிக்கும் போது , இதே போல சவுண்டு விடுவாரானு பார்ப்போமே அவ்வ்!


செக் மோசடி,பைனான்சியருக்கு நாமம் போட்டவங்களை எல்லாம் இழுத்து வச்சு செருப்பால் அடிக்க சொல்லி சொன்னால் இவரு தயாரா?


MANO நாஞ்சில் மனோ said...

வரும்போதே ரெண்டு ஸ்மால் போட்டுகிட்டு வருவாயிங்களோ ?

Karthikeyan Vasudevan said...

உங்களில் தவறே செய்யாத ஒருவன் முதலில் கல் எரியட்டும்

Asokaraj Anandaraj said...

இப்போவெல்லாம் தமிழ் படங்கள்தான் காமெடி என்றால் தமிழ் திரையுலகமும் காமெடி தான் போலிருக்குது!!

s suresh said...

ஜாக்குவார் ஓவராத்தான் பேசியிருக்கார்! யாகாவராயினும் நாகாக்க வேண்டும்!

ravikumar said...

ur writeup last pragraph is good and apt one

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

பொதுவா மேடையில் ஏறி நின்றாலே வார்த்தைகள் பலருக்கும் அருவி மாதிரி கொட்டிடுமோ?]]]

அதேதான்.. கைதட்ட நாலு பேரு இருக்கும்போது இன்னும் கொஞ்சம் ஜிவ்வுன்னு ஏறிரும்.. அதான் நடந்துச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

அஞ்சலி, களஞ்சியம் பிரச்சினைலாம் இப்போ வந்துச்சு. அந்தப் படம் அஞ்சலி பீக்ல வரும் முன்னரே தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டு பாதியில நின்னு போச்சு. அப்போலாம் அஞ்சலியால நிக்க வாய்ப்பே இல்லை. தயாரிக்க காசு இல்லாம இவரா நிப்பாட்டிட்டார். ஸ்டில்ஸ் பார்த்தாலே தெரியும் எந்த காலத்து தயாரிப்புனு.
அப்புறம் இப்போ தயாரிப்பு நின்னு போனதுக்கு அதான் காரணம் காசு கொடுனு சொல்றது எந்த ஊரு நியாயம். இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன். ஒரு படத்துக்கு எத்தினி நாளு கால்ஷீட் கொடுக்கனுமாம்?
இவனுங்களா போய் வெளி மாநில நடிகைதான் வேண்டும்னு இழுத்து வருவாங்க. பிரச்சினை ஆனால் மட்டும் தமிழ் தயாரிப்பாளர்களை வஞ்சிக்கும் வெளிமாநில நடிகைகள் என்பார்கள்.]]]

நியாயமான கேள்விதான்..! அஞ்சலி வெளிவராமல் இருப்பதுதான் இப்போதைய பிரச்சினை. இதையெல்லாம் அவரே கேட்கலாம்..!

[[[செக் மோசடி, பைனான்சியருக்கு நாமம் போட்டவங்களை எல்லாம் இழுத்து வச்சு செருப்பால் அடிக்க சொல்லி சொன்னால் இவரு தயாரா?]]]

ஐயோ.. அப்புறம் எப்படி அவன் அடுத்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்வான்..? இளிச்சவாயன் நடிகர், நடிகையர்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

வரும்போதே ரெண்டு ஸ்மால் போட்டுகிட்டு வருவாயிங்களோ?]]]

இல்லை.. இல்லை.. ஸ்டெடியாத்தான் இருந்தாரு.. ஒரு பாசத்துல அப்படி வேகமா பேசிட்டாராம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Karthikeyan Vasudevan said...

உங்களில் தவறே செய்யாத ஒருவன் முதலில் கல் எரியட்டும்.]]]

ஓகே நியாயம்தான்.. இது எல்லா இடத்துலேயும் எடுபடாதே..?

உண்மைத்தமிழன் said...

[[[Asokaraj Anandaraj said...

இப்போவெல்லாம் தமிழ் படங்கள்தான் காமெடி என்றால், தமிழ் திரையுலகமும் காமெடிதான் போலிருக்குது!!]]]

ஹி.. ஹி.. அப்பப்போ இது மாதிரி காமெடிகள் நடக்கத்தான் செய்யும்..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

ஜாக்குவார் ஓவராத்தான் பேசியிருக்கார்! யாகாவராயினும் நாகாக்க வேண்டும்!]]]

சரி.. அவருக்கு அது தெரியணுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ravikumar said...

ur writeup last pragraph is good and apt one]]]

வருகைக்கு நன்றிகள் நண்பரே..! உண்மையைத்தானே சொன்னேன்..? இப்படி ஒரு பிரச்சினைக்காக செருப்பால அடிச்சுக்கிட்டே போனா.. எல்லாரும் மாறி மாறி அடிச்சுக்க வேண்டியதுதான்..!