வரிச்சலுகை பெற லஞ்சமா..? - சீறும் சினிமா இயக்குநர்

22-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையக் கருவாக வைத்து 'அங்குசம்' என்ற பெயரில் படமெடுத்திருக்கிறார் இயக்குநர் மனுக்கண்ணன். இந்தப் படம் வெளியாகும் தயார் நிலையில் இருக்க.. சென்சார் சர்டிபிகேட் பெற்ற பின்பு, வரிச் சலுகைக்காக விண்ணப்பிக்கும்போது அதற்காக லஞ்சப் பணம் வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ரமணாவின் பி.ஏ. சரத்பாபு கேட்டதாக இயக்குநர் மனுக்கண்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரது பேட்டி சென்ற வார நக்கீரனில் வெளிவந்துள்ளது.. அந்தச் செய்தி இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது..!தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு இயந்திரங்களில் ஊற்றாகப் பெருக்கெடுத்திருக்கும் லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் விதமாக 'அங்குசம்' என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார், மனுக்கண்ணன். சமீபத்தில் தணிக்கை அதிகாரிகளால் U சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க தணிக்கைக் குழு உற்சாகமாகப் பரிந்துரைத்தபோதும் அந்தப் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்கவில்லை. என்ன நடந்தது ..? தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவங்களை உள்ளது உள்ளபடியே விவரிக்கின்றார் இயக்குநர் மனுக்கண்ணன். 


"என் சொந்த ஊர் வேலூர். நான் எம்.எட்., எம்.பி.ஏ. படித்த பட்டதாரி. மும்பைல, திரைப்பட இயக்கத்திற்கான படிப்பையும் முடிச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே போராட்ட குணம் அதிகம். கண்முன் நடக்குற தவறுகளை தட்டிக் கேட்பேன். பேனா முனையால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளவன் நான். இந்த நிலையில் துபாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளரா வேலை பார்த்தேன். அப்ப 'நக்கீரன்' இதழில் வந்த திருச்சி மாவட்டம் பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன், ஊழலுக்கு எதிரா கடுமையா போராடிவரும் தகவல்களைப் படிச்சேன். தகவல் அறியும் உரிமை சட்டத்தையே அவர் அங்குசமா வச்சிக்கிட்டு, அரசாங்க எந்திரம் என்கிற யானையை அவர் எதிர்த்து நிற்பது எனக்குப் பெரிய விஷயமாகப்பட்டது. 

உடனே தமிழகம் திரும்பிய நான் அந்த சீனிவாசனின் கேரக்டரை மையமா வச்சி ஒரு திரைக்கதையை உருவாக்கி, பாடல்கள், ஃபைட்டுன்னு சில சினிமா சமாச்சாரங்களையும் சேர்த்து 'அங்குசம்' என்ற பெயரிலேயே திரைப்படத்தை எடுத்தேன். அந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் சமூகநீதிக்கு எதிரா குரல் கொடுக்கும் உணர்ச்சி இளைஞர்களுக்கு ஏற்படும். லஞ்சம் வாங்கும் ஆட்களுக்கு கூச்ச உணர்ச்சியை உண்டாக்கி, அவர்களை இந்தப் படம் திருந்த வைக்கும். பாமர மக்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், நம்ம உரிமையைப் பெற நாம எதற்குக் காசு கொடுக்கணும் என்கிற வேகம் அவர்களுக்குள் தீயா பெருக ஆரம்பிக்கும். 

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், படத்தின் நிஜ ஹீரோவான சீனிவாசனைப் பேச வைத்தேன். அவர் திருச்சி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத் திரையைக் கிழித்துத் தொங்க விட்டார். அந்த விழாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பத்தின நூலை அத்தனை பேருக்கும் இலவசமா விநியோகிச்சோம். அந்த விழாவில் சீமான் போன்றோர் கலந்து கொண்டு சீனிவாசனையும் அங்குசம் படத்தையும் மனதாரப் பாராட்டினார்கள். அந்த விழாவில் சீனிவாசன் பேசியது  உலகம் முழுவதும் இணையத்தளத்தில் அன்றே பரவ, சம்பந்தப் பட்ட மாவட்ட கலெக்டரே சீனிவாசனை அழைத்து அவரது புகாரை நேர்மையான முறையில் விசாரிப்பதாக உறுதியளித்திருக்கிறார் என்பது தனிக்கதை. 

அடுத்து படம் முடிந்து தணிக்கைக்கு அனுப்பினோம். செப்டம்பர் 2-வது வாரம் அந்தப் படத்தை தணிக்கைக் குழு உறுப்பினர்களான நல்லி குப்புசாமி செட்டியார், சங்கரவள்ளி, நிருத்தியா, சதீஷ்குமார் மற்றும் சென்சார் போர்டு அதிகாரி பக்கிரிசாமி ஆகியோர் பார்த்தார்கள். படம் முடிந்ததும்… அதிகாரி பக்கிரிசாமி, "அபாரமா எடுத்திருக்கீங்க. இந்தப் படத்தை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாணவர்களுக்குப் போட்டுக் காட்டணும். இதுக்கு ரெண்டு “யு’ சர்டிபிகேட் கொடுக்க வாய்ப்பிருந்தால் கூட கொடுப்பேன். உடனே வரிவிலக்கு கேட்டு அரசுக்கு அப்ளை பண்ணுங்க"ன்னு பாராட்டினார். நல்லியோ "எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை படத்தில் கொண்டு வந்திருக்கீங்க" என மனதாரப் பாராட்டினார். இப்படி தணிக்கைக் குழுவில் இருந்த அத்தனைபேரும் பாராட்டினாங்க. 20-09-2013-ல் தணிக்கை சான்றிதழ் வாங்கினேன். 

சென்சார் போர்டு அதிகாரி சொன்ன மாதிரி அடுத்த நாளே வரிவிலக்குக்கான அப்ளிகேஷனை 10 ஆயிரம் ரூபாய் டி.டி.யோடு போட்டேன். இதைப் பரிசீலித்த வரிவிலக்கு அதிகாரிகள் படம் பார்க்கணும்னு சொல்ல அவங்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டினேன். நான்கு அதிகாரிகளுடன் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜேஸ்வரி, பி.வாசு ஆகியோரும் படத்தைப் பார்த்தாங்க. 

படம் முடிந்ததும் சங்கர் கணேஷ் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவி, "இப்படிப்பட்ட படம்தான் வரணும். நீங்க பெரிய இயக்குநரா, தயாரிப்பாளரா வளர என் ஆசிர்வாதம்"னு வாழ்த்தினார். எல்.ஆர்.ஈஸ்வரி, ராஜேஸ்வரின்னு எல்லோருமே வாழ்த்தினாங்க. அதிகாரிகளும் கை கொடுத்துப் பாராட்டு தெரிவிச்சிட்டு… "நீங்க பாடல் காட்சியில் காட்டிய தேசத் தலைவர்களில் அம்பேத்கரையும் சேர்த்திருக்கலாமே"ன்னு சொன்னாங்க. "கண்டிப்பா அதையும் சேர்த்துருவேன்"னு உறுதியா சொன்னேன். அடுத்து, அவங்க துறை அமைச்சரான ரமணாவைப் பார்க்கச் சொன்னாங்க. அப்பதான் எனக்கு அந்த அதிர்ச்சியான அனுபவம் கிடைக்க ஆரம்பிச்சது" என ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர், மேலும் தொடர்ந்தார். 

இதைத் தொடர்ந்து எனது நண்பரான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தாமோதரனோடு, அமைச்சர் ரமணாவின் கிரீன்வேஸ் சாலை அலுவலகத்துக்கு செப்டம்பர் கடைசி வாரம் போனேன். அமைச்சர் ரமணாவின் அப்பா இரண்டு நாட்களுக்கு முன்புதான் இறந்திருந்தார். துக்க விசாரிப்புக்குப்பின், எக்ஸ் மினிஸ்டர் தாமோதரன் அமைச்சரிடம் என்னை அறிமுகப்படுத்தி, என் படத்துக்கு வரிவிலக்கு தேவைன்னு சொன்னார். அமைச்சரோ, செகரட்டரியேட்ல தன் அஃபிஸியல் பி.ஏ. சரத்பாபுவைப் பார்க்கச் சொன்னார். 

மறுநாள் காலைல, நான் மட்டும் செகரட்டரியேட் போனேன். அமைச்சர் ரமணா உள் அறையில் இருக்க… முகப்பு அறையில் பி.ஏ. சரத்பாபு இருந்தார். நாலஞ்சு பேர் அங்கே இருந்தாங்க. என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு, அமைச்சர் பார்க்கச் சொன்னது பற்றி அவரிடம் சொன்னேன். "வரி விலக்கா? உங்க படத்துக்கு பட்ஜெட் என்ன...?" என்றார். நான் சுதாரித்துக்கொண்டு "மினி பட்ஜெட் படம் சார்.." என்றேன். சரத்பாபுவோ, "சரி சில ஃபார்மாலிட்டிஸை முடிக்கணும்.." என்றார். "என்ன சார் பார்மாலிட்டிஸ்?" என்றேன். "பெரிய பட்ஜெட் படம்னா 50 லட்சம், சின்ன பட்ஜெட் படம்னா 5 லட்சம் கொடுக்கணும்..." என்றார். நானோ, "சார், நான் லஞ்சம் தவறுங்கிற கான்செப்ட்ல படம் எடுத்திருக்கேன். அப்படியிருக்க நானே பணம் கொடுத்தா சரியா இருக்காது. அதோட தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் இது.." என்றேன். பி.ஏ.வோ, "அதெல்லாம் இருக்கட்டும்… இங்க ஃபார்மாலிட்டிஸை முடிச்சாதான் வரிவிலக்கு கிடைக்கும். நீங்க சி.எம்.கிட்டயே போனாலும் அவங்க என்னைத்தான் பார்க்கச் சொல்வாங்க. இங்க ஆட்சி வேற, அரசாங்கம் வேற. ஆட்சிக்கு அ.தி.மு.க., தி.மு.க.ன்னு மாறி மாறி யார் வேணும்னாலும் வரலாம். ஆனா அரசாங்கத்தை நடத்துற நாங்க அப்படியே இருப்போம். ஒண்ணு தெரியுமா? இந்தப் பணத்தில் ஒரு பகுதி சி.எம்.மு.க்குப் போகுது. பிறகு துறை மந்திரிக்கும் கொடுத்தாகணும். மந்திரி பரம்பரை பணக்காரர் இல்லை. அவர் ஒரு தடவை தொகுதிக்குப் போனா, ஒரு கோடி வரை அவர் செலவு பண்ணியாகணும். அந்தப் பணத்தை நாங்கதான் கலெக்ட் பண்ணிக் கொடுத்தாகணும். புரிஞ்சுதா..?" என்று பாடமே எடுத்தார். 

நானோ, "என் படத்தில் முதல்வர் கேரக்டரை உயர்த்திச் சொல்லியிருக்கேன். முதல்வரிடம் புகார் போனதும் அவர் நேர்மையா எம்.எல்.ஏ. மேல் நடவடிக்கை எடுக்கிற மாதிரி காட்சிகளை வச்சிருக்கேன். அந்தப் படம் முதல்வர் என்ற கேரக்டரின் இமேஜை பல மடங்கு உயர்த்தும். முதல்வரை உயர்த்தும் ஒரு படத்துக்கு நான் லஞ்சம் தரவேண்டிய அவசியமில்லை. லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு, லஞ்சம் கொடுத்தா அது எனக்கு அவமானம். வேண்டுமானால் சி.எம். நிதிக்கு 3 லட்சம் தர்றேன்..." என்றேன். சரத்பாபுவோ, "நோ காம்ப்ரமைஸ்..." என்றார். நான் கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்துவிட் டேன். 

அடுத்து ஒரு ஆளுங்கட்சி பிரமுகர், "இதை கார்டன் கவனத்துக் கொண்டு போகலாம்.." என்றபடி… கார்டனில் வேலை செய்யும் ரவிச்சந்திரனுடன் என்னைப் பேச வைத்தார். அந்த ரவிச்சந்திரனோ, "இதையெல்லாம் நாங்க எப்படி மேடத்தின் கவனத்துக்கு கொண்டு போக முடியும்? அதிகாரிகள் கேட்டதைக் கொடுத்துவிட்டுப் போங்க சார்.." என்றார். அந்த நிமிடமே வரி விலக்கே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். 

மக்களுக்கு விழிப்புணர்வைப் போதிக்கும் படத்தை எடுத்ததுக்கு தண்டனையா நான் வரியையும் கட்டிட்டு படத்தை ரிலீஸ் பண்ணப் போறேன். என் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்க லைங்கிற தகவல் பல திரைப்புள்ளிகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர்கள் என்னிடம் துக்கம் விசாரிக்கிறார்கள். இன்னும் என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், "லஞ்சத்தை எதிர்க்கவே லஞ்சம் கொடுத்தாகணும் என்பதுதான்..." என்றார் ஆவேசமும் ஆதங்கமுமாக. 

"முடிவாக என்னதான் செய்யப் போகிறீர்கள்...?" என்று மனுக்கண்ணனிடம் கேட்டதற்கு, " நான் வரி செலுத்தத் தயாராக இருக்கிறேன்… எந்த சமரசத்திற்கும் உட்பட மாட்டேன்…  லஞ்ச லாவண்யங்களைத் தட்டிக் கேட்பது போல் திரைக்கதை அமைத்து விட்டு நானே லஞ்சம் கொடுத்து வரிச்சலுகை பெற்றால், அந்த திரைப்படத்தின் நோக்கமும் அது சமுதாயத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கமும் அடிபட்டுப் போகும்.." என்றார் தீர்க்கமாக. 

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரைத் தொடர்பு கொண்டபோது, ”அங்குசம் திரைப்பட விஷயம் இன்னும் எனது கவனத்திற்கு வரவில்லை, அது குறித்து விசாரித்துச் சொல்கிறேன்..” என்றார். 

நன்றி : நக்கீரன் வார இதழ்

20 comments:

மு.சரவணக்குமார் said...

பழசை நிணைச்சுப் பார்க்கிறேன். இதே மாதிரி ஒரு சம்பவம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் இன்னேரத்துக்கு பக்கம் பக்கமாய் கொதித்து குதித்து மாய்ந்து மாய்ந்து தீய சக்தியையும், அவரது குடும்பத்தாரையும் வசைமாறி பொழிந்திருப்பீர்கள். இப்போதென்னடாவென்றால் பத்திரிக்கை செய்தியை மட்டும் பதவிசாக போட்டுவிட்டு ஜனநாயக கடமையை ஆத்தியிருக்கிறீர்கள்.

சூதனமா நடந்துக்கறீங்க போல.... :)))

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

பழசை நிணைச்சுப் பார்க்கிறேன். இதே மாதிரி ஒரு சம்பவம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் இன்னேரத்துக்கு பக்கம் பக்கமாய் கொதித்து குதித்து மாய்ந்து மாய்ந்து தீய சக்தியையும், அவரது குடும்பத்தாரையும் வசைமாறி பொழிந்திருப்பீர்கள். இப்போதென்னடாவென்றால் பத்திரிக்கை செய்தியை மட்டும் பதவிசாக போட்டுவிட்டு ஜனநாயக கடமையை ஆத்தியிருக்கிறீர்கள்.
சூதனமா நடந்துக்கறீங்க போல.... :)))]]]

இது பற்றி ஏற்கெனவே நான் இணையத்தில் பேஸ்புக், டிவிட்டர், வலைத்தளத்தில் எழுதியிருக்கிறேன் சரவணக்குமார்..! அப்போது அவர்கள் காரணம் வெளியில் தெரியும்படி வைத்து செய்தார்கள்.. இப்போது இவர்கள் மறைமுகமாகச் செய்கிறார்கள்..! அதனால்தான் குறிப்பாக குற்றம்சாட்ட முடியவில்லை..!

இப்போது இயக்குநர் சொல்லியிருப்பதுபோல சினிமாக்காரர்களே இந்த அநியாயத்திற்கு துணை போவது நடக்கக் கூடாத செயல்.. அதுதான் மிகக் கேவலமாகிவிட்டது..! ஆட்சி மாறினால் இவர்கள் என்ன ஆவார்கள் என்று யாருக்குத் தெரியும்..?

உண்மைத்தமிழன் said...

பை தி பை

அரசுத் தரப்பில் இருந்து அங்குசம் படத்திற்கு வரிவிலக்கிற்கான ஆணை கிடைத்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்திருக்கிறார்கள்..!

அரசுக்கும், இதில் தோழமையுடன் உதவிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி..!

Silverstone Venkat said...

Sir,oru news kelvipatten unmaiya?
Savukku shankar kolla pattara? unmai thakaval enna?

உண்மைத்தமிழன் said...

[[[Silverstone Venkat said...

Sir, oru news kelvipatten unmaiya?
Savukku shankar kolla pattara? unmai thakaval enna?]]]

ஐயா வெங்கட் அவர்களே..!

சவுக்கு சங்கர் நலமாகவே இருக்கிறார்.. வேறு மாநிலத்தில் தனது உறவினர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.. மிக விரைவில் வந்து மீண்டும் தனது பணியினைத் தொடர்வார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!

k.rahman said...

//பழசை நிணைச்சுப் பார்க்கிறேன். இதே மாதிரி ஒரு சம்பவம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் இன்னேரத்துக்கு பக்கம் பக்கமாய் கொதித்து குதித்து மாய்ந்து மாய்ந்து தீய சக்தியையும், அவரது குடும்பத்தாரையும் வசைமாறி பொழிந்திருப்பீர்கள். இப்போதென்னடாவென்றால் பத்திரிக்கை செய்தியை மட்டும் பதவிசாக போட்டுவிட்டு ஜனநாயக கடமையை ஆத்தியிருக்கிறீர்கள்.

சூதனமா நடந்துக்கறீங்க போல.... :)))//

very correct sir. i also thought the same.உண்மைத்தமிழன் said...

[[[//பழசை நிணைச்சுப் பார்க்கிறேன். இதே மாதிரி ஒரு சம்பவம் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் இன்னேரத்துக்கு பக்கம் பக்கமாய் கொதித்து குதித்து மாய்ந்து மாய்ந்து தீய சக்தியையும், அவரது குடும்பத்தாரையும் வசைமாறி பொழிந்திருப்பீர்கள். இப்போதென்னடாவென்றால் பத்திரிக்கை செய்தியை மட்டும் பதவிசாக போட்டுவிட்டு ஜனநாயக கடமையை ஆத்தியிருக்கிறீர்கள்.

சூதனமா நடந்துக்கறீங்க போல.... :)))//

very correct sir. i also thought the same.]]]

அடடா.. எத்தனை பேர் என்னை கூர்மையா கவனிச்சுக்கிட்டிருக்காங்க. சந்தோஷம் ரஹ்மான் ஸார்..! உங்ககிட்ட நல்ல பேர் எடுக்கிறதுக்காகவெல்லாம் என்னால எழுத முடியாது..! மேட்டருக்கேத்தாப்புலதான் பொங்கல்..!

k.rahman said...

cool down. tension ஆகாதீங்க.நான் ஒண்ணுமே பெருசா சொல்லல்லே இதுக்கே என் மேல பாய்ந்தீங்கனா எதுக்கு நீங்க பப்ளிகா ப்ளாக் எழுதறீங்க? நீங்க மத்தவங்கள விமரிசனம் பன்னல? உண்மையை தானே சரவண குமார் சொன்னார். இதுவே தீயசக்தியா இருந்தா இந்த மேட்டர ஒரு வாரத்துக்கு ஒட்டி இருப்பீங்க.

ஆனாலும் நீங்க பரவாஇல்லை. சவுக்கு சங்கர் அம்மாவ திட்டி வர பின்னூடம் வெளியிடிரதுக்கு கூட பயந்து போய் வேற மாநிலம் ஓடிட்டார். இதுல இவங்கலாம் என்னவோ சே குவேரா மாதிரி பேச்சு வேற.

k.rahman said...

//உங்ககிட்ட நல்ல பேர் எடுக்கிறதுக்காகவெல்லாம் என்னால எழுத முடியாது..! மேட்டருக்கேத்தாப்புலதான் பொங்கல்//

நீங்கள் இதுல ஒண்ணுமே எழுதல.பேசாம இப்படி copy paste பண்றதுக்கு நக்கீரன் லிங்க் குடுங்க. அங்கேயே படிசுகரோம்.

உண்மைத்தமிழன் said...

மிஸ்டர் ரஹ்மான் ஸார்..!

ஏதோ நீங்க படிக்கணும்ன்றதுக்காகவே நாங்க எழுதிக்கிட்டிருக்கிற மாதிரி பேசுறீங்க..?! என்னையும் சவுக்கு சங்கரையும்விடவா நீங்களும் சரவணக்குமாரும் ஆத்தாவையும், தாத்தாவையும் விமர்சித்து எழுதிட்டீங்க..!?

சவுக்கு சங்கருக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்.. வலது கையில். மேஜர் ஆபரேஷன் செஞ்சிருக்காங்க. அதுனால வெளியூர்ல அவங்க ரிலேட்டிவ்ஸ் வீட்ல தங்கியிருக்காரு. அவங்க குடும்பச் சூழலெல்லாம் உங்களுக்குத் தெரியுமா..? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பீலா விடக் கூடாது..!

போங்க ஸார்.. போய் உங்க புள்ளை குட்டிய படிக்க வைங்க.. நாங்க எங்க வேலையை பார்க்குறோம்..!

k.rahman said...

உண்மைத்தமிழன்,

//ஏதோ நீங்க படிக்கணும்ன்றதுக்காகவே நாங்க எழுதிக்கிட்டிருக்கிற மாதிரி பேசுறீங்க..

எங்க மாதிரி ஆளுங்க படிகரதனால தான் indi blogger, தமிழ் மனம் விருதுகல்ன்னு பெருமையா உங்களால போட்டுக்க முடியுது. யாரும் படிகலனா எங்க இருந்து அந்த விருது வரும். பேசாம password போட்டு உங்க ஆளுங்க மட்டும் படிக்க விடுங்க.


//சவுக்கு சங்கருக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்.//

அவர் தைரியதை பாத்து ஏற்கனவே இப்ப இனைய ஊர் சிரிக்குது. யார் பீலா விடறது?

//போங்க ஸார்.. போய் உங்க புள்ளை குட்டிய படிக்க வைங்க....//

உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. இனி மேலாவது ஞாயமா எழுத பாருங்க. இல்லன்னா நான் இந்த கட்சி ஆளு தான். என்கிட்ட நடுநிலைமை எதிர் பார்கதிங்கன்னு சொல்லிடுங்க.

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

உண்மைத்தமிழன்,

//ஏதோ நீங்க படிக்கணும்ன்றதுக்காகவே நாங்க எழுதிக்கிட்டிருக்கிற மாதிரி பேசுறீங்க..

எங்க மாதிரி ஆளுங்க படிகரதனால தான் indi blogger, தமிழ் மனம் விருதுகல்ன்னு பெருமையா உங்களால போட்டுக்க முடியுது. யாரும் படிகலனா எங்க இருந்து அந்த விருது வரும். பேசாம password போட்டு உங்க ஆளுங்க மட்டும் படிக்க விடுங்க.]]]

"நீங்க"ன்னு சொன்னது உங்களை மட்டும்தான் ஸார்..!

//சவுக்கு சங்கருக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்.//

அவர் தைரியதை பாத்து ஏற்கனவே இப்ப இனைய ஊர் சிரிக்குது. யார் பீலா விடறது?]]]

இதுக்கெல்லாம் போய் ஆதாரம் கேட்டீங்கன்னா நாங்க என்ன செய்யறது..? என்ன சொல்றது..? உங்களுடைய தனி மனித விரோதப் போக்கிற்கு நாங்களா கிடைச்சோம்..? சவுக்கு சங்கர் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அது உங்கள் பாடு.. அவர் பாடு..! எனக்குக் கிடைத்த தகவலை மட்டுமே சொன்னேன்..!

//போங்க ஸார்.. போய் உங்க புள்ளை குட்டிய படிக்க வைங்க....//

உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. இனிமேலாவது ஞாயமா எழுத பாருங்க. இல்லன்னா நான் இந்த கட்சி ஆளுதான். என்கிட்ட நடுநிலைமை எதிர் பார்கதிங்கன்னு சொல்லிடுங்க.]]]

என் எழுத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நான் யார் என்று தெரியும்..? அரைகுறையாக வாசித்துவிட்டு வருபவர்களுக்கு சத்தியமா புரியாதுதான்..! அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாதே..?

k.rahman said...

//ஏதோ நீங்க படிக்கணும்ன்றதுக்காகவே நாங்க எழுதிக்கிட்டிருக்கிற மாதிரி பேசுறீங்க..//

அது எப்படிங்க மத்தவங்கள விமரிசனம் பண்றதுக்கு உங்களுக்கு மட்டும் உரிமை இருக்கு. ஆனா மத்தவங்க உங்களை விமரிசனம் பண்ணா உங்களால தாங்கிக்க முடியல??

நீங்க ஒரு சில படங்களை பத்தி எவ்ளோ மோசமா விமரிசனம் செஞ்சு இருக்கீங்க? அந்த படத்தோட இயக்குனர் வந்து உங்ககிட்ட கேட்டாரா அவர் படத்தை பத்தி எழுத சொல்லி? இல்ல " உண்மை" தமிலன் பார்க்கணும்னு அந்த படத்தை எடுத்தேன்ன்னு உங்க கிட்ட சொன்னாரா? ஏதோ நீங்க பாக்கணும் தான் மத்த இயக்குனர்லாம் படம் எடுத்த மாதிரி நீங்க விமரிசனம் பண்றீங்களே? அது ரொம்ப ஞாயமா?

பொதுவில் வைத்து விட்டால் விமரிசனம் செய்ய படும் தான். அதை தாங்கிக்க முடியலானா ஏன் எழ்துறீங்க?

நீங்க ஈழ தாய் சம்பந்தபட்டதினால தான் இந்த mattera வெறும் copy பேஸ்ட் பண்ணி இருக்கீங்க. இதே தீயசக்தியா இருந்தா இந்நேரம் ஒரு வாரம் ஓடி இருக்கும் இதுவே. நீங்க இப்படி இருக்கறது பத்தி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா நீங்க neutral ன்னு சொல்லி படம் போடறீங்க பாருங்க. அது தான் பெரிய பொய்.


//என் எழுத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நான் யார் என்று தெரியும்..? அரைகுறையாக வாசித்துவிட்டு வருபவர்களுக்கு சத்தியமா புரியாதுதான்..! அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாதே..?//

உங்க பதிவுகளை 4 வருஷமா படிச்சுட்டு இருக்கேன். நீங்க எந்த அளவுக்கு one sided ன்னு நல்லா தெரியுது. நான் பார்த்த வரைக்கும் இதையே தான் கொஞ்ச நாள் முன்னாடி வருண் சொன்னார்,இந்த பதிவுல மு சரவண குமார் சொன்னார்.

உண்மைத்தமிழன் said...

மிஸ்டர் ரஹ்மான்..!

கூகிள் பிளஸ்ல ஜோதிஜி அண்ணனுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்..!

ஜோதியண்ணே..!

இங்க இருக்குற அட்டைக்கத்தி வீரர்கள்தான் நம்மளை தி.மு.க. ஆள்.. அ.தி.முக. ஆள் என்பார்கள். ஆனால் இவர்களது தைரியம்..? ம்ஹூம்.. ஒரு வரிகூட எதிர்த்து எழுதியிருக்க மாட்டார்கள்..! எழுதவும் மாட்டார்கள். ஆனால் நாம் எழுதினால்தான் உடனடியாக வந்து நீ ஏன் அவங்களை பத்தி எழுதலை.. இவங்களை பத்தி எழுதலைன்னு நொட்டை சொல்லுவானுக.. இனிமே இவனுகளை பத்தி நான் கவலைப்படப் போறதில்லை. எவனாவது என்னை தி.மு.க. ஆளுன்னு சொன்னா.. தி.மு.க.வுக்கு எதிரா என்ன எழுதி கிழிச்சிருக்கன்னு கேப்பேன்.. அதிமுகவுக்கு ஆளுன்னா.. அதே கேள்விதான்.. ஆத்தாவுக்கு எதிரா என்னத்த பிடுங்கனன்னுதான் கேப்பேன்..! ச்சும்மா நம்மள தூண்டிவிட்டுட்டு தள்ளி நின்னு பாதுகாப்பா வேடிக்கை பார்க்குறானுகளாம்.. இவனுக புத்திசாலியாம்.. நாம நடுநிலை தவறியவர்களாம்..! போங்கடா பொசக்கட்ட பயலுகளா..!!!!

இனிமேல் இப்படித்தான் பதில் வரும்..!

k.rahman said...

தமிழில் எழுத மிகவும் நேரம் பிடிக்கும் என்ற ஒரே காரணத்தினால் ஆங்கிலத்தில் எழுதிகிறேன்.

//இங்க இருக்குற அட்டைக்கத்தி வீரர்கள்தான் நம்மளை தி.மு.க. ஆள்.. அ.தி.முக. ஆள் என்பார்கள். ஆனால் இவர்களது தைரியம்..? ம்ஹூம்.. ஒரு வரிகூட எதிர்த்து எழுதியிருக்க மாட்டார்கள்..! எழுதவும் மாட்டார்கள். ஆனால் நாம் எழுதினால்தான் உடனடியாக வந்து நீ ஏன் அவங்களை பத்தி எழுதலை.. இவங்களை பத்தி எழுதலைன்னு நொட்டை சொல்லுவானுக.. இனிமே இவனுகளை பத்தி நான் கவலைப்படப் போறதில்லை. எவனாவது என்னை தி.மு.க. ஆளுன்னு சொன்னா.. தி.மு.க.வுக்கு எதிரா என்ன எழுதி கிழிச்சிருக்கன்னு கேப்பேன்.. அதிமுகவுக்கு ஆளுன்னா.. அதே கேள்விதான்.. ஆத்தாவுக்கு எதிரா என்னத்த பிடுங்கனன்னுதான் கேப்பேன்..! ச்சும்மா நம்மள
தூண்டிவிட்டுட்டு தள்ளி நின்னு பாதுகாப்பா வேடிக்கை பார்க்குறானுகளாம்.. இவனுக புத்திசாலியாம்.. நாம நடுநிலை தவறியவர்களாம்..! போங்கடா பொசக்கட்ட பயலுகளா..!!!! //

so if i have to criticize a maniratnam or steven spielberg movie should i first direct a movie like them then only i should criticize it? thats what you are doing?
you have made criticism of many movies in your blog. so how many movies you have directed in your life? what talent or intelligence you have to criticize a movie director like bharathi raja? have you directed any movie like him?

why should i write? i am not the one saying that i am neutral nor i am claiming publicity for my blog and saying that i have indiblogger award. you are the one claiming that.


//எவனாவது என்னை தி.மு.க. ஆளுன்னு சொன்னா.. தி.மு.க.வுக்கு எதிரா என்ன எழுதி கிழிச்சிருக்கன்னு கேப்பேன்.. அதிமுகவுக்கு ஆளுன்னா.. அதே கேள்விதான்.. ஆத்தாவுக்கு எதிரா என்னத்த பிடுங்கனன்னுதான் கேப்பேன்..!//

எல்லா படத்தையும் அக்கு வேறா ஆணிவேரா கிழிகிரீன்களே நீங்க எதனை படத்தை எடுத்து கிழிச்சு இருக்கீங்க? எதனை படத்தை எடுத்து பிடுங்கி இருக்கீங்க?

புதிய கோணங்கி ! said...

உண்மைத்தமிழன் அண்ணே,
ஆத்தா வழக்கு போட்டு இருக்காங்களாம் நக்கீரன் கோபால் மேலயும், அந்த இயக்குனர் மேலேயும். நீங்க பார்த்து கொஞ்சம் சூதானமா நடந்துக்குங்க :-)

ரஹ்மான் அண்ணே, ஏன் இந்த கொலைவெறி எங்க உத அண்ணன் மேல.
அவர் எழுதிய ஒரு பதிவை படிச்சு அதில ஏதாவ்து முரண்பாடான தகவல் இருந்தாலோ இல்ல உண்மைக்கு புறம்பாக இருந்தாலோ, அவர கிண்டி கெழங்கெடித்தீங்கன்னா அது நியாயம். ஆனா அத விட்டுப் புட்டு ஏன் அப்புடி எழுதல் இப்படி எழுதலன்னு கேக்குறது அநியாயம்.
அவருக்கென்ன நடு நெலமைக்கான அமெரிக்க அவார்டா கொடுத்திருக்காங்க நீங்க நக்கீரன் போல குற்றம் குறை தேட

புதிய கோணங்கி ! said...

@k.rahman
நீ எதுக்குடா இதை எல்லாம் கேக்குறன்னு கேக்கப்படாது. ஏன்னா உங்க மறு மொழியிலே நீங்க பாஸ்வேர்ட் வச்சி உங்க ஆளுங்கள மட்டும் படிக்க விடல :)

ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்க நடு நிலயா எழுதற பல பேரும் தாத்தாவை திட்டுற மாதிரி ஆத்தாவை திட்ட மாட்டாங்க. காரணம் அவங்க இல்லை நம்ம தாத்தாவே தான். தசவதாரம் எடுத்து எல்லா இடத்திலேயும் நல்லவனா காட்டுறேன்னு இப்ப கிழிஞ்சி தொங்கராரு. ஆனா ஆத்தா எப்பவும் ஒரே மாதிரி பொம்பள ஹிட்...
ஐயோ சாமி எனக்கு ஒண்ணும் தெரியாது. என்னால தமிழ் நாட்டுல உள்ள எல்லா கோர்ட்டுக்கும் அலைய முடியாது :))

உண்மைத்தமிழன் said...

மிஸ்டர் ரஹ்மான்..

எப்பவுமே அரசியல்ல இந்த நடுநிலைமைனனு ஒண்ணு இல்லவே இல்லை..! அது எங்கேயுமே இருக்க முடியாது.. ஒவ்வொரு விஷயத்துலேயும் ஒவ்வொருத்தருக்கும் ஒருவித அபிப்ராயம் இருக்கும். அதுக்கேத்தாப்புலதான் எழுதவும் செய்வாங்க.. பேசவும் செய்வாங்க.. நீங்க அரசியலுக்கு புதுசு போலிருக்கு..!

நான் நடுநிலையாளர்ன்னு நீங்க சொல்றதை பார்த்தா நீங்க ஏதோ ஒரு கட்சி சார்பாளர்ன்னு தெளிவா தெரியுது. உங்க கட்சிக் கண்ணோடத்தோட பார்த்தா இது ஒரு சார்பாதான் தெரியும்..! ஏன்னா நீங்களே ஒரு கட்சி சார்பாளர்..! ஸோ.. உங்க தரப்பு நியாதத்தை உங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு உங்க மனசை ஆத்திக்குங்க..! நான் வேணாம்ன்னு சொல்லலை..!

[[[எல்லா படத்தையும் அக்கு வேறா ஆணிவேரா கிழிகிரீன்களே நீங்க எதனை படத்தை எடுத்து கிழிச்சு இருக்கீங்க? எதனை படத்தை எடுத்து பிடுங்கி இருக்கீங்க?]]]

அதை அந்த இயக்கநர்கள் வந்து கேட்கட்டும். பதில் சொல்லிக்கிறேன். உங்களுக்கு இந்த பொங்கல் வேண்டாம்..! மறுபடியும் சொல்றேன்.. உங்களுக்கெல்லாம் வீட்ல புள்ளை குட்டிய படிக்க வைக்கிறதுதான் லாயக்கு..! இதையெல்லாம் எதுக்குப் படிச்சு புண்ணாக்கு நேரத்தை வீணாக்குறீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[புதிய கோணங்கி ! said...

உண்மைத்தமிழன் அண்ணே,
ஆத்தா வழக்கு போட்டு இருக்காங்களாம் நக்கீரன் கோபால் மேலயும், அந்த இயக்குனர் மேலேயும். நீங்க பார்த்து கொஞ்சம் சூதானமா நடந்துக்குங்க :-)]]]

தெரியும்.. அவ்ளோதான செய்ய முடியும்..! அவர் திரைத்துறையாச் சாராதவரா இருந்திருந்தா இந்நேரம் ஜெயிலுக்கு போயிருப்பாரு..! நமக்கெதுக்கு பயம்..? தகவலைத்தானே தெரிவித்தோம்.. நானா தேடிப் போய் சர்ச் செஞ்சு கொடுக்கலியே..?

[[[ரஹ்மான் அண்ணே, ஏன் இந்த கொலைவெறி எங்க உத அண்ணன் மேல. அவர் எழுதிய ஒரு பதிவை படிச்சு அதில ஏதாவ்து முரண்பாடான தகவல் இருந்தாலோ இல்ல உண்மைக்கு புறம்பாக இருந்தாலோ, அவர கிண்டி கெழங்கெடித்தீங்கன்னா அது நியாயம். ஆனா அத விட்டுப் புட்டு ஏன் அப்புடி எழுதல் இப்படி எழுதலன்னு கேக்குறது அநியாயம். அவருக்கென்ன நடு நெலமைக்கான அமெரிக்க அவார்டா குடுத்திருக்காங்க நீங்க நக்கீரன் போல குற்றம் குறை தேடய..]]]

பாவம் அவரென்ன செய்வாரு.. தாத்தாவோட பேரன் போல.. ஏற்கெனவே அடிபட்ட கோபம் வேற..! அதான் பொங்கியிருக்காரு..! பின்னூட்டம் போட மட்டும்தான் இவங்களுக்கெல்லாம் பொங்கல் வரும்.. தனியா எழுதச் சொல்லுங்க பார்ப்போம்..?!!!

உண்மைத்தமிழன் said...

[[[புதிய கோணங்கி ! said...

@k.rahman
நீ எதுக்குடா இதை எல்லாம் கேக்குறன்னு கேக்கப்படாது. ஏன்னா உங்க மறு மொழியிலே நீங்க பாஸ்வேர்ட் வச்சி உங்க ஆளுங்கள மட்டும் படிக்க விடல :)

ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்க நடுநிலயா எழுதற பல பேரும் தாத்தாவை திட்டுற மாதிரி ஆத்தாவை திட்ட மாட்டாங்க. காரணம் அவங்க இல்லை நம்ம தாத்தாவேதான். தசவதாரம் எடுத்து எல்லா இடத்திலேயும் நல்லவனா காட்டுறேன்னு இப்ப கிழிஞ்சி தொங்கராரு. ஆனா ஆத்தா எப்பவும் ஒரே மாதிரி பொம்பள ஹிட்...]]]

போச்சு.. இதுக்கு விளக்கம் கேட்டு மறுபடியும் வந்து நிக்கப் போறாரு..!! அதான் சொல்றேன் அவர் தமிழ்நாட்டு அரசியலுக்கு புதுசு போலிருக்கு..!