தி.மு.க.வுக்கு கடைசி சான்ஸ்..!


13-03-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று தாங்கள் நடத்திய பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக டெசோ அமைப்பு கூறியிருக்கிறது..! லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை மற்றும் அரசு இயந்திரங்களின் உதவியால் அடக்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது.. அதையும் மீறி இப்போதும் பல இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்கள்.. இவைகளை எந்த வகைகளில் முடித்து வைக்கலாம் என்று யோசித்து வருகிறது ஆத்தாவின் தற்கொலைப் படையான போலீஸ்..! 

‘ஈழத்தாய்’ என்று வாய் கூசாமல் மேடையில் முழங்கியதைக் கேட்டு கடைவாய்ப்பல் தெரியும் அளவுக்கு தனது புன்னகையைச் சிந்திய அதே தாய்தான், இன்றைக்கு தனது ஏவல் படையினரை வைத்து இந்த உண்ணாவிரத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.. சட்டப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினார்.. இலங்கைக்கு எதிராகவே பேசினார்.. ராஜபக்சேவை கண்டித்தார்.. எதிர்ப்பாளர்களே அகமகிழ்ந்தார்கள்.. ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை மன்னிக்கும் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்தார்..! 

‘இலங்கை பிரச்சினை இந்த அளவுக்கு தீவிரமாக கருணாநிதியே காரணம்’ என்கிறார் ஜெயலலிதா..  ஆனால் கருணாநிதியால் பதிலுக்கு ஜெயலலிதாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று குற்றம்சாட்ட முடியவில்லை..! காரணம், கடைசியாக போர் நடந்த காலக்கட்டத்தில் மத்திய ஆளும் காங்கிரஸ் அரசுக்கு முட்டுக்கட்டை கொடுத்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் நிறுத்தியிருந்தது தி.மு.க.தான்.. தி.மு.க. நினைத்திருந்தால் போரின் துவக்கத்திலேயே எப்பாடுபட்டாவது போரை நிறுத்தியிருக்கலாம்.. இல்லாவிடில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவோம் என்று மிரட்டியாவது அந்தக் கடைசிக்கட்ட ஈழப் போரை நிறுத்தியிருக்க வேண்டும்..! 

காங்கிரஸ் அவ்வளவு சீக்கிரமாக ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்க முயலாது.. அதனால் ஒருவேளை இவர்களது மிரட்டலுக்கு அவர்கள் பயப்பட வேண்டிய கட்டாயம் வந்திருக்கும்..! ஆனால் கடைசிவரையில் சீரியல்களே தோற்றுவிடும் அளவுக்கு சீன்களை போட்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு தானே ஒரு காரணகர்த்தாகவாகவும் ஆகிவிட்டார் கருணாநிதி..! 

இப்போதும் அதே கொலைகார காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து அவர்களது ஆட்சியில் வெட்கமில்லாமல் பங்கெடுத்து வருகிறது தி.மு.க. அதே தி.மு.க.தான் இன்றைக்கு பந்த்தையும் நடத்துகிறது.. யாரை எதிர்த்து. எதற்காக நடத்துகிறோம் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல்.. கொஞ்சமும் கூச்ச நாச்சமும் இல்லாமல் இன்றைக்கு தி.மு.க. தலைவர்கள் ‘வெற்றி’, ‘வெற்றி’ என்று கூக்குரலிடுவதைக் கேட்கும்போது நமக்கு வாய்த்த தறுதலைகளை நினைத்து நாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..!

மத்தியில் ஆளும் அரசின் ஒரு அங்கமாக இருந்து கொண்டே அதே மத்திய அரசை வலியுறுத்தியும், கண்டித்தும் போராட்டம் நடத்துவது என்பது வேடிக்கையாக இல்லை...?! ஆனால் வருடக்கணக்காக இது போன்ற கண் துடைப்பு நாடகங்களை நடத்தியே பழகிப் போய்விட்டதால் தி.மு.க.வினருக்கு இதுவொரு வாடிக்கையாகிவிட்டது..!

மாணவர்கள் உண்மையாக அறிவாலயத்தை எதிர்த்து, தி.மு.க.வை எதிர்த்துதான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.. மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று தி.மு.க.வைக் கண்டித்துதான் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்.. லயோலா மாணவர்களின் போராட்டக் களத்தை திசை திருப்ப டெசோ அபிமானிகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பார்க்கும்போதும் ஒரு விஷயம் தெளிவாகிறது.. எந்தப் போராட்டமாக இருந்தாலும் “தாங்கள்தான் முன்னால் நிற்போம்.. நீங்களெல்லாம் எங்களுக்கு வால்தான் பிடிக்க வேண்டும்..” என்கிற அரசியல் தலைகளின் ஆணவம்தான் அது..! முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போதே திருமாவின் கட்சிக்காரர்கள்தான் மாணவர்களை அடித்து, விரட்டி கூட்டத்தை சிதைத்து ஊர்வலத்தை இழுத்துக் கொண்டு போனார்கள்..! அதை அவர்களால் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது..! 

உண்ணாவிரதம் என்பதே ஒருவகையில் பிளாக்மெயில்தான்..! இதனை உலகம் முழுவதுமே கடைபிடித்திருக்கிறார்கள்..! காந்தியார் எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்து அஹிம்சை வடிவத்திற்கு உயிர் கொடுத்தார் என்று தெரியவில்லை.. அதனால் இது அஹிம்சை வழியாகிவிட்டது.. அந்த வழியை இன்றைக்கும் புத்தகங்களில் மிகச் சிறப்பாக எழுதி, அதையே படிக்கச் சொல்லிவிட்டு, இன்று ஏதேனும் ஒரு கோரிக்கைக்காக அதனைக் கையில் எடுத்தால் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று சொல்லி கைது செய்து உள்ளே வைக்கிறார்கள்..! இந்தக் கேவலங்கெட்ட இந்திய அரசியல்வியாதிகளுக்கு பிரிட்டிஷ்காரனே பரவாயில்லை போலிருக்கே..!?

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களிடத்தில் போய் “இது வேலைக்கு ஆகாது.. நாம் மத்திய அரசைத்தான் எதிர்க்க வேண்டும்.. ஐ.நா.வைத்தான் மிரட்ட வேண்டும்..” என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார் திருமா. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவங்களோட கூட்டணில நாம ஏன் இருக்கணும்ன்னு தன்னோட மனசாட்சியிடம் கேட்கவே மாட்டாரா திருமா..? இப்பவும்.. இவ்வளவு தூரம் நடந்த பின்பும், “நாங்கள் மத்தியில் கூட்டணியில் இருப்பதா வேண்டாம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிவரும்..” என்று கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. வெட்கங்கெட்ட அரசியல்..!

இவர் வானளாவப் புகழும் பிரபாகரனின் உயிரைப் பறித்துக் கொண்ட அதே ராஜபக்சேவை நேரில் சென்று சந்தித்து அளவளாவிவிட்டு,  “கண்டனம் தெரிவிக்கவே நான் சென்று வந்தேன்..” என்று கூசாமல் சொன்னபோதே, திருமா இந்திய அரசியலில் பாஸ் மார்க் செய்துவிட்டார் என்பது புரிந்துவிட்டது..!  பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையர் இறந்தபோது மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலமாக விசா பெற்று அங்கே சென்றபோதே அவர் தமிழகத்து அரசியலில் தனியிடத்தைப் பிடித்த இதையும் ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்துகிறார் என்பதும் புரிந்துவிட்டது.. இது புரிந்துதான் வைகோ தலைமையினர் அவரிடமிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள் போலும்..!

இதில் கொஞ்சம் வித்தியாசமானவர் செந்தமிழன் சீமான்..! எங்கு பார்த்தாலும் கை முஷ்டியை காட்டி ஜெயிப்போம் என்று சொல்லிவரும் அண்ணன், இன்றுவரையிலும் எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை.. மாணவர்களை தூக்கிச் சென்று மருத்துவமனையில் வைத்ததை  கண்டித்துகூட அறிக்கை விடவில்லை என்றால் அண்ணனின் தைரியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..! ஆத்தாவிடம் அடுத்த கூட்டணிக்கு சீமான் தயாராகிறாரோ..? என்ன எழவோ..? 

ஆத்தாவை சொல்லவே வேண்டாம்.. முழு ஓய்வில் இருக்கிறார்.. புதிய அமைச்சர்கள் வேலைகளை சரியாகச் செய்கிறார்களா என்று தனது உளவுத் துறை போலீஸை அனுப்பி தினமும் ரிப்போர்ட் பெற்று தனது அரசு கடமையைச் செய்து வருகிறாராம்.. தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே அமைதியாகிவிடும் என்று அடிக்கடி சொல்லி வரும் ஆத்தா, அதற்கேற்றாற்போன்ற சூழ்நிலையை உருவாக்கவே தனது ஏவல் படையை பயன்படுத்துகிறார்.. இப்போதும் மாணவர்களை அடக்கி ஒடுக்கி வைத்து எப்படியாவது அமைதிப் பூங்கா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்..! 

அதே சமயம் பெங்களூர் கோர்ட் வழக்கில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று சகல வழிகளையும் யோசித்து அனைத்து வழிகளையும் திறந்தே வைக்கிறார் என்பதும் புரிகிறது..! ஒரு பக்கம் மத்திய அரசைத் திட்டுவது.. இன்னொரு பக்கம் அவர்களுக்கு மறைமுகமாக உதவிகள் செய்வது.. இன்னொரு பக்கம் அரசியல் களத்தில் காய்களை நகர்த்த ஈழத்து பிரச்சினையை பயன்படுத்துவது என்று அனைத்தையும் சப்தமில்லாமல் செய்து வருகிறார் இந்த ஈழத்து தாய்.. 

உண்மையாக இவர்தான் ஈழத்துத் தாய் என்றால் இவர்தானே இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னால் நின்றிருக்க வேண்டும்..! காவிரி பிரச்சினைக்காக இவர்பாட்டுக்கு மெரீனா பீச்சில் கேரவன் வேனை பக்கத்தில் நிறுத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தபோது அது தவறான வழிமுறையாக இவருக்குத் தோன்றவில்லையா..? இப்போது ஈழப் பிரச்சினைக்காக அதனை மற்றவர்கள் பின்பற்றக்கூடாதா..? என்ன எழவு அறிவுடா இவங்களுக்கு இருக்கு..? 

ஒரு இனமே பாதி அழிந்துவிட்டது.. மிச்சத்தில் பாதி உள்நாட்டிலும் பாதி வெளி நாட்டிலும் இருக்கிறது.. உள் நாட்டில் இருக்கும் இனத்தில் பாதிப் பேருக்கு கல்வி அறிவே கொடுக்கப்படவில்லை என்னும் உண்மையை நமது அரசியல்வாதிகள் எப்போதுதான் உணர்வார்கள்..? ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்பார்கள். இன்றைக்கு அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கும் சிங்கள அரசு கூடுதலாக நமது தொப்புள் கொடி சொந்தங்களின் மூன்றாம் தலைமுறைக்கு செய்திருக்கும் மிகப் பெரிய கொடுமையே அவர்களுக்கான கல்வியை மறுத்திருப்பதுதான்..! 

இத்தனையாண்டு கால ஈழத்து வரலாற்றில்  புலிகள் தந்த பள்ளிக்கூட வாய்ப்புகளை மட்டுமே பெற்றிருக்கும் அந்தத் தலைமுறையும், அதற்கடுத்த தலைமுறையும் நமது பிள்ளைகள் அனுபவிக்கும் கல்வியின் ஒரு பகுதியையாவது தொட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்..! இப்படியொரு இனத்தையே கற்காலத்தில் பின்னோக்கித் தள்ளியிருக்கும் சூழலில் எப்பாடுபட்டாவது மிக விரைவில் அவர்களை சுதந்திர தனி ஈழத்தில் அமர்த்த நினைக்காத இந்திய, தமிழக அரசுகளை நினைத்தால் இங்கேயும் ஒரு பிரபாகரன் வரக் கூடாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..!

எத்தனையோ ஈழத்துத் தமிழர்கள் பல வெளிநாடுகளில் என்னென்னமோ அடிமைத்தனமான வேலைகளைச் செய்து தங்களது வயிற்றை நிரப்பி.. சொல்ல முடியாத துயரங்களை சந்தித்துவிட்டு.. தாங்கள் இறப்பதற்குள் தங்களது தாய் மண்ணைத் தொட்டுவிட வேண்டும் என்ற நினைப்போடு ஒவ்வொரு நாளையும் கடந்து வரும்வேளையில்.. அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலையும், ஆதரவையும் தர வேண்டிய தமிழகம் தங்களது சுயலாபத்துக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது கேவலத்திலும் மகா கேவலம்..!

தனி ஈழம் தவிர வேறு எதுவும் இனிமேல் பலனளிக்காது.. தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே சகோதரர்களாக வாழ முடியாத சூழலை அங்கேயிருக்கும் அரசியல்வியாதிகள் உருவாக்கிவிட்டார்கள் என்பதை உலக சமுதாயத்திற்கு தகுந்த முறையில் எடுத்துக் கூற வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு. ஐ.நா. மூலமாகவே இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுத்து நிச்சயம் முடிந்தால்.. தனி ஈழத்தைச் சாதிக்கலாம்..! ஆனால் அதற்கு தமிழர்களை சொந்தங்களாக கருதும் மத்திய அரசு முதலில் தேவை.. இப்போது இருப்பவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு வர எம்.பி.க்கள் என்னும் துருப்புச் சீட்டுக்களை கையில் வைத்திருக்கும் தி.மு.க.தான் முன்வர வேண்டும்..! 

தனது குடும்பத்தினருக்கு இந்த அமைச்சுப் பதவிதான் வேண்டும்.. இல்லையெனில் பதவியே ஏற்க மாட்டார்கள் என்றெல்லாம் மிரட்டத் தெரிந்த தாத்தாவுக்கு.. தனி ஈழத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லையென்றால், தங்களுடைய ஆதரவும் இல்லை என்று சொல்ல மட்டும் தைரியம் ஏன் வரவில்லை..? மகாபாராத திருதராஷ்டினைவிட மோசமாக குடும்பப் பாசத்தில் சிக்குண்டவராக இருக்கும் இவரை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது.. இன்னொரு பக்கம் கோப வெறியும் வருகிறது..!

தனது பிள்ளைகளின் பணத்தாசை.. குடும்பத்தாரின் அதிகார வெறி.. கட்சியினரின் ஆட்சி வேட்கை.. இதையெல்லாம் தாண்டி இவரால் தற்சமயத்துக்கு வேறு எதையும் யோசிக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை..! தன் காலம் எப்படி போனாலும் போகட்டும் என்ற நினைப்போடு முடிந்தவரையில் பிள்ளைகளை அனுசரித்து போவதே தனக்கு நல்லது என்று நினைத்து காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்..! 

உலகம் முழுவதிலும் இருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் இப்போது இவர் ஒருவரே.. கருணாவைவிடவும், டக்ளஸை விடவும் மிகப் பெரிய துரோகியாகிவிட்டார்..! ஜெயலலிதாவை இந்த லிஸ்ட்டில்கூட சேர்க்காமல் இருக்க ஆரம்பத்திலேயே பழகிவிட்ட ஈழத்து மக்கள், கருணாநிதியை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதை அவர் ஏன் இன்னமும் உணரவில்லை என்பதும் தெரியவில்லை..!

இப்போதும் கெட்டுவிடவில்லை.. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகிவிட இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இதனைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை தனி ஈழத்துக்கு ஆதரவு என்கிற நிலையை எடுக்க வைத்தாலே ஈழத் தமிழர்கள் தி.மு.க.வையும் கருணாநிதியையும் ஏறெடுத்து பார்ப்பார்கள். நிச்சயம் கையெடுத்து வணங்குவார்கள்..! 


54 comments:

angusamy said...

ஏன்னா நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க
தி மு க வாது வெளிய வரதாவது ? பகல் கனவு காணாதீங்க அண்ணாச்சி
இல்லை இல்லை நீங்க கண்ணை முழிச்சிகிட்டே கனவு காணுறீங்க
நடக்கிறதை பத்தி ஏதாவது எழுதுங்க அண்ணாச்சி

துளசி கோபால் said...

கனவு காண்பதில் தவறில்லை!!!

bandhu said...

அடுத்த ஆட்சி பி ஜே பி தான் என்ற முடிவில் காய் நகர்த்தி வருகிறார் கிழவர். நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒரு நான்கு மாதம் கழித்து ஆட்சியிலிருந்து வெளியே வந்துவிடுவார்!

ராமுடு said...

Pathetic. Dont trust wrong people. JJ is far better than MK. If anyone of the student dies of hunger, the same people will question JJ. Can we allow our brothers / sister to go for fasting? Since it is somebody else, we should n't encourage them. We should fight against Central Govt, not by fasting.

MK uses TESO just to bargain seat sharing in MP election. I am totally against to each and every word of your last para. How can you believe DMK will gain back its popularity?

சூனிய விகடன் said...

உண்மைத்தமிழன் அவர்களே.. இலங்கைத் தமிழர் என்றாலே அறிவைத்தொலைத்து விட்டு உணர்ச்சிக் கடலுக்குள் முங்கும் தொன்னூற்றொன்பது சதவீத மக்களைப் போலவே நீங்களும் இருக்கிறீர்கள்..

ராஜபக்ஷே ஒரு அதிபராக தன் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளை மிகச் சரியாக செய்திருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். ஒரு மிகப் பயங்கரவாதக் கும்பலை அடியோடு ஒழிக்கவேண்டிய சூழ்நிலையில் அவர் பதவி ஏற்றார். அவருக்கு முன்னால் இருந்தவர்கள் பல சறுக்கல்களை சந்திருந்த சூழ்நிலையில், அந்த மாதிரி சறுக்கல்களில் எல்லாம் விடுதலைப் புலிகளை ஆஹா ஓஹோ என்று பரணிக் குரல் கொண்டு பாடி தமிழக மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்க இவர் பதவி ஏற்றார். பல நாடுகளின் துணை கொண்டு, இந்தியாவும் அதில் சேர்த்தி ...எந்த வித விமரிசனத்துக்கும் தலை வணங்காமல் எடுத்த நோக்கத்தை மிக கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். விடுதலைப்புலிகளை ஒழித்ததின் மூலம் இலங்கையையும், தமிழ்நாட்டையும் இந்தியாவையும் ஒரு சேர காப்பாற்றியுள்ளார்.
ஒரு மிகப் பெரிய பயங்கரவாதக் கும்பலை ஒழிக்கும் போரில் ....பச்சையாகவே சொல்கிறேன்....நியாயம் ..நேர்மைக்கு இடம் கிடையாது. இலக்கில் வெற்றியடைய வேண்டும் ..அதை மட்டும் தான் பார்க்க வேண்டும். இது இலங்கைக்கு மட்டும் அல்ல ...உலகின் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் .. ஒரு நூறு பேருள்ள கலவரக் கும்பலை கட்டுக்குள் கொண்டு வரும் போதே இந்த மாதிரி சம்பவங்கள் ஒன்றிரண்டு நடப்பதுண்டு..தாமிரபரணி ....பரமக்குடி எல்லாம் பார்த்ததுண்டு தானே.. அதிலும் விடுதலைப் புலி மாவீரர்கள் பெண்கள் குழந்தை குட்டிகளை எல்லாம் கூட மடியில் கட்டிக்கொண்டு திரியும் போது படைகளின் அணுகுமுறை வேறெப்படி எதிர்பார்க்க முடியும் ?

பேச்சுவார்த்தைக்கு ஆயிரம் வாய்ப்புகள் வந்தன...நார்வேக்காரன் அதே வேலையாக அலைந்தான் பாவம். ..அந்த வாய்ப்புகளை எல்லாம் உதாசீனப் படுத்திவிட்டு தலை கொள்ளாத அகங்காரத்துடன் என்னை ஒரு ஆயுட்கால சர்வாதிகாரியாக சிம்மாசனமிடும் தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் திரிந்த பிரபாகரனுக்கு தகுந்த முடிவு தான் கிடைத்துள்ளது . இந்தியா உதவியது என்கிறார்கள் ...இந்தியா உதவியது என்றால் இந்தியமக்கள் ...தமிழர்கள் உட்பட அதற்க்கு நன்றி தான் சொல்ல வேண்டும் ....தமிழ் ஈழம் அமைவது, அதிலும் விடுதலைப் புலிகளே சர்வாதிகாரிகளாக இருப்பது , தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மிகப் பெரிய கேடாகவே முடியும்

கருணாநிதி அல்ல அந்த சூழ்நிலையில் யாராலுமே...(அமெரிக்கா போன்ற நாடுகளைத் தவிர்த்து ) அந்த போரை நிறுத்தியிருக்க முடியாது தான் ....கலைஞர் வயசான ஆள் ..விட்டு விடுங்கள். ..பிழைப்புக்காக எதோ பிதற்றுகிறார்....

மாணவர்களின் போராட்டம் எல்லாம் பத்து நாளில் தானாக நீர்த்து போய் விடும்...அப்படிப் போகாமால் நீங்கள் சொல்வது மாதிரி எரிமலையாய் பொங்கினாலும் நாசமாய்ப் போவது தமிழ்நாடு தானே தவிர ராஜ பக்ஷே அல்ல.....நம்மால் முடிந்தது எல்லாம் ராஜபக்ஷே படத்தை செருப்பால் அடிப்பது தான்....அதை ரொம்ப திருப்தியாக செய்து கொள்ளலாம் ..


இலங்கை தவறே செய்யவில்லையா என்றால் கண்டிப்பாக இந்த தமிழர் பிரச்னை உருவாக, பெரிதாக மிகக் கொடுமையான ஒன்றாக பரிணமித்து நிற்கக் காரணமானது சிங்களப் பேரின வாதமும் அதற்க்கு உடன்பட்ட சிங்கள அரசுகளும் தான். அன்றிருந்த சிங்கள அரசுகளின் கையாலாகாத் தனமும் சர்வதேசச் சூழ்நிலையும் தமிழர் பக்கமிருந்த நியாயமான காரணங்களும் விடுதலை இயக்கங்களை வளர்த்தெடுத்தன. சிறுபான்மைத் தமிழர்களை ஒடுக்குவதைப் பார்க்கும் நமக்கு இயல்பாகவே கோபமும் ஆத்திரமும் வருகிறது ...சிறுபான்மை மக்களுக்கு கோயில் கட்டிக் கும்பிடாத குறையாக வழிபட்டுக்கொண்டிருக்கும் இந்திய மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கும் இது வருத்தம் தான் . ஆனால் அதே மரியாதையை உலகமெங்கும் எதிர்பார்ப்பதால் தான் இலங்கையில் மட்டுமல்ல ..மலேசியாவிலும் கூட பிரச்னை எழுகிறது

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இதெல்லாம் பாட வகுப்புகள் போலத்தான்...அவர்கள் நல்ல நாளிலேயே வகுப்புகளில் இருப்பதில்லை..அவர்களின் வருங்கால அரசியல் பாதைக்கு இப்போதே பயிற்சி எடுக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அவர்களையும் அரசுக்கல்லூரிகளையும் தவிர இதில் பங்கெடுக்கப் போவதில்லை....அதனால் இதற்க்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுப் பிரயோசனமில்லை

தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களில் முக்கால் வாசிப்பேர் டாஸ்மாக்கில் குப்புரக்கிடக்கிறார்கள் ....முதலில் அவர்கள் எழுந்து வரப் போராட்டம் நடத்திவிட்டுத்தான் இந்தப் போராட்டங்களை நடத்த முடியும்

கும்மாச்சி said...

தாத்தாவிற்கு இப்பொழுது மகள், மகன்கள், பேரப்பிள்ளைகள் பிரச்சினைகளே தலையை தின்று கொண்டிருக்கிறது, இதில் ஈழமாவது, மத்திய அரசை விட்டு வெளியே வருவதாவது, அதெல்லாம் நடக்காது சார், மொத்தத்தில் மக்களை கேனையர்கள் என்று நினைத்துக்கொண்டே ஐயாவும், அம்மாவும் நாடகமாடுகிரார்கள்.

நம்பள்கி said...
This comment has been removed by the author.
Prem s said...

ஏகபட்ட கோபம் தெரிகிறது உங்கள் வார்த்தைகளில் .நியாமான கோபம் தான்

தமிழ்மகன் said...

பயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html

தமிழ்மகன் said...

பயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html

தமிழ்மகன் said...

பயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html

நம்பள்கி said...

அண்ணா!
நீங்கள் சொல்ல வருவது... கருணாநிதி தான் எல்லா எழவிற்கும் காரணம். அதானே! அதுக்கு ஏன் இம்புட்டு வியாக்கானம்?

சட்டு புட்டுனு சொல்லவேண்டியது தானே அண்ணா...

கருணாநிதி என்ற ஒரு ஜென்மம் இல்லையென்றால், உங்கள் "தமில் தலிவர்கள்" எல்லாம் தமில் ஈலம் " வாங்கி கொடுத்து இருப்பார்கள் என்று...!

நாங்களும் நம்புவோம்...!

நீங்க என்ன விட வயது குறைந்தவர் ன்று எனக்கு தெரியும்; ஆனால், அரசியலில் நீங்க எனக்கு அண்ணன்...!ஞான பண்டிதன...!

Read more: http://truetamilans.blogspot.com/2013/03/blog-post_13.html#ixzz2NOFVmFPI

AAR said...

What to do? We don't have any other options other than KK or JJ.

சக்கர கட்டி said...

நடிகர்களை கொண்டு வந்த நடிக்க தான் செய்வான் சேவை செய்யும் அரசியல் வாதிகள் காமராஜர் பெரியாரோடு போயாச்சு இப்ப உள்ள எல்லாம் சுய நலவாதிகள் மட்டுமே

Marmayogie Marmayogie said...

பயங்கரவாத விடுதலைப்புலிகளைப் பற்றி தமிழ் நாட்டில் மக்கள் என்றுமே கவலை கொண்டதில்லை.
அவர்களிடம் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் வைகோ சீமான் நெடுமாறன் போன்ற தமிழ்பற்று பயங்கரவாத வியாபாரிகள்தான் தமிழ்நாட்டில் வேறு பிரச்சினையே இல்லை என்பதுபோல - தடை செய்யப்பட பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைகூலிகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறார்கள் அந்த லிஸ்டில் இந்த அரசியல் முட்டாள் கருணாநிதியும் இந்த தள்ளாத காலத்தில் சேர்ந்திருப்பது நகைப்புக்குரியது

vi jay said...

*தனது குடும்பத்தினருக்கு இந்த அமைச்சுப் பதவிதான் வேண்டும்.. இல்லையெனில் பதவியே ஏற்க மாட்டார்கள் என்றெல்லாம் மிரட்டத் தெரிந்த தாத்தாவுக்கு.. தனி ஈழத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லையென்றால், தங்களுடைய ஆதரவும் இல்லை என்று சொல்ல மட்டும் தைரியம் ஏன் வரவில்லை..? மகாபாராத திருதராஷ்டினைவிட மோசமாக குடும்பப் பாசத்தில் சிக்குண்டவராக இருக்கும் இவரை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது.. இன்னொரு பக்கம் கோப வெறியும் வருகிறது..* I have a one small question.why we are trust in politicians? Now each every politicians are selfish accept one or two persons.anyhow your social angry is right.

ராஜ நடராஜன் said...

சூனிய விகடன் என்பதற்கு பதிலாக சூனியம் வைப்பவன் என்றே பெயரை வைத்துக்கொள்ளலாமே:)

போர் என்றால் இராணுவ காட்டுமிராண்டித்தனங்கள் தலைவிரித்தாடும் என்கின்ற காரணத்தால்தான் போர் முறைகள் இருக்கின்றன.பெண்கள்,குழந்தைகள் இருக்கின்றார்கள் என்று தெரிந்தே குண்டு வீச்சுக்களும் அதற்கும் மேலாக இராணுவ வீரர்களின் அயோக்கியத்தனங்கள் வெளியே வந்தும் ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கும் ஞான சூன்யங்களுக்கு 21ம் நூற்றாண்டின் புதிய புத்தன் ராஜபக்சேவாகத்தான் தெரிவான்.விடுதலைப்புலிகளின் செயல்பாட்டில் விமர்சனங்கள் இருக்கின்றன.ஆனால் இராணுவத்தின் அயோக்கியத்தனங்கள் இல்லாத கட்டுக்கோப்பான அமைப்பு அது.போர் மரபுகளை மீறுவது ஒரு கிளர்ச்சிப் படைக்கு வேண்டுமானால் பொருந்தும்.ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்குப் பொருந்தாது.

உங்கள் பின்னூட்டதிலிருந்து தெரிவது ஒன்றே ஒன்றுதான்.சாவின் வன்கொடுமைகளின் வலி உங்களை சார்ந்தும் நிகழவில்லை.அதனை உணறும் மனமும் இல்லை என்பதே.

விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டுமென்றால் மக்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளை இலங்கை செய்திருக்க வேண்டும்.போரென்ற பெயரில் மனித குலத்துக்கு ஒவ்வாத செயல்களை செய்தது போர்க்குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலையும்.

இன்றைக்கு அமெரிக்கா தீர்மானம் சுயநலமில்லாமல் Genocide என்ற வார்த்தையை வரைவில் உள்ளடக்கியிருந்தால் உங்கள் ராஜபக்சே மத்தளங்களின் சுரம் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

நமக்காவது தமிழர்கள் என்ற உணர்வு இருக்கிறது.மனித உரிமைக்குழுக்களும்,அம்னெஸ்டியும்,மேற்கத்திய உலகில் பலரும் மனிதநேயம் என்ற அடிப்படையில் இலங்கைப் போரை அணுகுகிறார்கள்.

உங்களை பக்தவச்சலத்துக்கு ஆலோசகராகத்தான் வைத்திருக்க வேண்டும்.இப்படித்தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் நினைத்தார்கள்.ஆனால் தமிழ்நாடே பத்திகிச்சு.இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ்நாடு ஒன்றும் நாசமாகிப்போக வில்லை.ஒருவேளை உங்களை மாதிரி பின்னூட்டம் போடுற மனபாவம் பலருக்கும் இருந்திருந்திருந்தா ஒருவேளை நாசமாகிப் போயிருக்குமோ என்னமோ.

டாஸ்மாக் போனா போராட முடியாதுன்னு உங்களுக்கு எந்த புரபசர் பாடம் எடுத்தார்:)

என்னோட ரயில் பயணத்தில் ஒரு உடன்பிறப்பு அவருக்கு ஏறும் போதையின் வாசம் என் பக்கம் வந்து விடக்கூடாதென்ற மரியாதையோடுதான் ஈழம்,தி.மு.க என 2 மணிநேரமாக பேசிகிட்டு வந்தார்.

நிஷா said...

2 ஜி அலைகற்றை வழக்கு நீர்த்து போகும் வரையோ இல்லை ராசாவை பாராளுமன்ற தெரிவுக்குழு குற்றமற்றவராக காட்டி கொள்ளும் வரை தான் அண்ணே தாத்தாவின் காங்கிரசுக்கு எதிரான போராட்டமும், டெசோ மாநாடுகளும். அன்று பதவி, பணம், அதிகாரம், குடும்பம் போன்றவற்றுக்காக ஈழ மக்கள் கொத்து கொத்தாக விழும் போது கபட நாடகம் போட்டார். இன்றும் அதே பதவி, பணம், அதிகாரம், குடும்பம் போன்றவற்றுக்காக ஈழ மக்களின் மேல் கரிசனை உள்ளது போல் நாடகம் போடுகிறார். காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வராத வரை இவரின் ஈழம் தொடர்பான எந்த செயல்பாட்டையும் நம்புவதற்கு இல்லை.

dinesh N said...

அண்ணே! எங்கட மக்கள்
சிரிலங்காவில படர துன்பம்
சொல்வினம். புலம்பெயர்ந்து
ஒஸ்திரேலியா,கனடா,
லண்டனில்
சொகுசு வாழ்க்கை
வாழ்பவர்கள் இங்கன
அமைதி வருவதை
விரும்பமாட்டார்கள்,காரனம்
இங்கன அமைதி வந்தால்
அவர்களின்
சொகுசு வாழ்ககை பரிபோய்
அவர்களின் அகதிபாஸ்
ரத்தாகி அவர்களை
சொந்தநாட்டுக்கு
அனுப்பிவிடுவார்கள்.
அதனால் தான் புலம்பெயர்
சிரிலங்கா தமிழர்கள் ஈழம்
என்ற புண்ணை ஆரவிடாமல்
கிளரி விடுகின்றனர்.
கருணாநிதி ஆட்சியில்
இருக்கும் போது ஈழ
வியாபாரம் மறந்துபோகும்.
சீமான் வைகோ போன்றவர்கள்
ஈழத்தை பயன்படுத்தி
இரண்டு சீட்டாவது பிடித்து
விட நினைப்பவர்கள்.
ரிவி சேனல்கள்
ஈழத்தை வைத்து தங்கள்
ரேட்டிங்கை வளப்படுத்திக்
கொள்ளும். ஆனால் இந்த
நாட்டில் வாழும்
எங்களுக்கு ஈழமும்
வேண்டாம் ஒரு எலவும்
வேண்டாம். நிம்மதியான
பயமற்ற
வாழ்க்கை ஒன்றே போதும்.
-Yarl Dinesh

வவ்வால் said...

அண்ணாச்சி,

தாத்தாவோட நடிப்புக்குலாம் ஆஸ்காரே கொடுக்கலாம்.

திமுகவுக்கு கடைசி சான்ஸ் கொடுத்தாலும் தேறாது,அதன் நாட்கள் எண்ணப்படுகிறது.

மு.க போன பின்னர் அண்ணன் ,தம்பிகளே திமுகவை அழித்து விடுவார்கள்.

-------------

அரசியல் ராசதந்திரம் உமக்கு புரியவில்லை, மாணவர்கள் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்க தெரிந்த அரசு பின்னர் ஏன் கைது செய்ய வேண்டும்?

அப்படி செய்தால் டெசோ முழக்கம் பின் தள்ளப்பட்டு ,மாணவர் போராட்டம் பற்றியே அனைவரும் பேசுவர்.

இப்போ மணவர்கள் போராட்டம் அதிகம் ஆகி டெசோவின் பந்த் பள பளப்பு போய்விட்டது.

விரைவில் ஆத்தா மாணவர்களை அழைத்து பேசி ஒரு வாக்குறுதீ கொடுத்தால் மீண்டும் ஈழத்தாய் பட்டம் கிடைச்சுடும். இந்த அரசியல் டெசோ டெல்லி மாநாடு வரைக்கும் ஓடும்.

Venkatesh Uthayasankar said...
This comment has been removed by the author.
நிஷா said...

உ த அண்ணே... 'இங்கன' என்ற வார்த்தை யாழ்ப்பாண தமிழில் இல்லை. மேலும் கருணா, டக்லஸ், ரிஷாத் பதியுதீன் போன்றோருக்கு அடிபொடிகள் உண்டு. மீதியை எழுதியா புரியவைக்க வேண்டும்?!

உண்மைத்தமிழன் said...

[[[angusamy said...
ஏன்னா நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க? திமுகவாது வெளிய வரதாவது? பகல் கனவு காணாதீங்க அண்ணாச்சி.. இல்லை இல்லை நீங்க கண்ணை முழிச்சிகிட்டே கனவு காணுறீங்க.. நடக்கிறதை பத்தி ஏதாவது எழுதுங்க அண்ணாச்சி..]]]

ஒரு ஆதங்கம்தான் அங்கு.. ஆனாலும் ஒண்ணு உறுதி.. தாத்தா கூட்டணியைவிட்டு வெளில வர்றதுன்னு முடிவு பண்ணிட்டாரு.. அதை இப்பவே செஞ்சிரலாமேன்னு சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

கனவு காண்பதில் தவறில்லை!!!]]]

அடியாத்தீ..! டீச்சரம்மா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க..! நன்றிங்கோ டீச்சர்..!

இது கனவல்ல.. விருப்பம்..! தாத்தா எப்படியும் இதைத்தான் செய்யப் போறாரு.. குறிச்சு வைச்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

அடுத்த ஆட்சி பி ஜே பி தான் என்ற முடிவில் காய் நகர்த்தி வருகிறார் கிழவர். நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒரு நான்கு மாதம் கழித்து ஆட்சியிலிருந்து வெளியே வந்துவிடுவார்!]]]

நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். அதனை இப்போதே செய்துவிடலாமே..?

அஹோரி said...

//சூனிய விகடன் said... //
இவன் "மணிய சுப்புர சாமி" யா இருக்கணும். போலி அகவுன்டுல கமென்ட் போடுறான்.

உண்மைத்தமிழன் said...

[[[ராமுடு said...

Pathetic. Dont trust wrong people. JJ is far better than MK. If anyone of the student dies of hunger, the same people will question JJ. Can we allow our brothers / sister to go for fasting? Since it is somebody else, we should n't encourage them. We should fight against Central Govt, not by fasting.
MK uses TESO just to bargain seat sharing in MP election. I am totally against to each and every word of your last para. How can you believe DMK will gain back its popularity?]]]

தமிழகத்துக்கு மக்கள் ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து ஓட்டளிக்க மாட்டார்கள்..! ஆனால் தேர்தலில் இதுவும் ஒரு பிரச்சினையாக மட்டுமே இருக்கும்..!

உண்ணாவிரதம் இருப்பது கடைசிகட்ட ஆயுதமாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மாநிலம் முழுவதிலும் மாணவர்களை ஒருங்கிணைக்க இந்த உண்ணாவிரதம் பயன்பட்டது என்ற விதத்தில் லயோலா மாணவர்களின் இந்தப் பணி பாராட்டுக்குரியது..!

உண்மைத்தமிழன் said...

சூனியவிகடன்..

இத்தனை நாள் வராம இருந்தீங்க.. அப்படியே இருந்திருக்கலாம்..! நானும் உங்களை போல ஆரம்பத்தில் புலி எதிர்ப்பு கோஷம் போட்டவன்தான்.. உண்மைகளை படித்து, கேட்டு, பார்த்த பின்புதான் மனம் திருந்தினேன்..! உங்களுக்கு அதற்கான வாய்ப்பில்லை போலும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மாச்சி said...

தாத்தாவிற்கு இப்பொழுது மகள், மகன்கள், பேரப் பிள்ளைகள் பிரச்சினைகளே தலையை தின்று கொண்டிருக்கிறது, இதில் ஈழமாவது, மத்திய அரசைவிட்டு வெளியே வருவதாவது, அதெல்லாம் நடக்காது சார், மொத்தத்தில் மக்களை கேனையர்கள் என்று நினைத்து கொண்டே ஐயாவும், அம்மாவும் நாடகமாடுகிரார்கள்.]]]

மக்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்..! தங்களைக் கொள்ளையடித்த சுருட்டிய காசிலேயே இலவசங்களை கொடுக்க.. அதை வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கும் இந்த மக்களிடம் இதை எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது.. எப்படி புரிய வைப்பது..?

உண்மைத்தமிழன் said...

[[[Prem s said...

ஏகபட்ட கோபம் தெரிகிறது உங்கள் வார்த்தைகளில். நியாமான கோபம்தான்.]]]

அனுசரணையான கருத்திற்கு நன்றிகள் பிரேம்..!

உண்மைத்தமிழன் said...

தமிழ்மகன்..

ஒரு பதிவில் உங்களுடைய விளம்பரத்தை போட்டுவிட்டீர்கள்.. பின்பு எதற்கு தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறீர்கள்..? ஆளை விடுங்க சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

அண்ணா! நீங்கள் சொல்ல வருவது. கருணாநிதிதான் எல்லா எழவிற்கும் காரணம். அதானே! அதுக்கு ஏன் இம்புட்டு வியாக்கானம்? சட்டு புட்டுனு சொல்ல வேண்டியதுதானே அண்ணா. கருணாநிதி என்ற ஒரு ஜென்மம் இல்லையென்றால், உங்கள் "தமில் தலிவர்கள்" எல்லாம் தமில் ஈலம் " வாங்கி கொடுத்து இருப்பார்கள் என்று...! நாங்களும் நம்புவோம்...! நீங்க என்னவிட வயது குறைந்தவர்ன்று எனக்கு தெரியும்; ஆனால், அரசியலில் நீங்க எனக்கு அண்ணன்! ஞான பண்டிதன!]]]

உங்களுடைய வஞ்சப் புகழ்ச்சிக்கு மிக்க நன்றிகள் தம்பி..!

இருந்தாலும் நான் ஈழப் பிரச்சினையின் ஆதிகாலம் தொட்டே இங்கே பேசவில்லை..! முள்ளிவாய்க்கால் போர் சமயத்தில் இருந்துதான் பேசியிருக்கிறேன்.. அந்தப் போரின் கொடூரத்தில் இறந்து போனவர்களின் துயரத்தைத்தான் பேசியிருக்கிறேன்.. இதற்கு கருணா அண்ட் கோ காரணமில்லாமல், ஒபாமாவா காரணம்..?

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

What to do? We don't have any other options other than KK or JJ.]]]

வேறென்ன செய்வது..? தாத்தா இல்லாட்டி ஆத்தா.. இப்படி தேர்வு செய்வதே நம்ம மக்கள்தானே..?

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

நடிகர்களை கொண்டு வந்த நடிக்கதான் செய்வான் சேவை செய்யும் அரசியல்வாதிகள் காமராஜர் பெரியாரோடு போயாச்சு இப்ப உள்ள எல்லாம் சுயநலவாதிகள் மட்டுமே..]]]

உண்மைதான்.. ஆனாலும் இவர்களை வைத்துதான் நாமளும் வாழ வேண்டியிருக்கே..? அதுதான் கொடுமை..!

உண்மைத்தமிழன் said...

[[[Marmayogie Marmayogie said...

பயங்கரவாத விடுதலைப்புலிகளைப் பற்றி தமிழ் நாட்டில் மக்கள் என்றுமே கவலை கொண்டதில்லை.
அவர்களிடம் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் வைகோ சீமான் நெடுமாறன் போன்ற தமிழ் பற்று பயங்கரவாத வியாபாரிகள்தான் தமிழ்நாட்டில் வேறு பிரச்சினையே இல்லை என்பதுபோல - தடை செய்யப்பட பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைகூலிகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறார்கள். அந்த லிஸ்டில் இந்த அரசியல் முட்டாள் கருணாநிதியும் இந்த தள்ளாத காலத்தில் சேர்ந்திருப்பது நகைப்புக்குரியது.]]]

தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றிகள் மர்மயோகி..!

உண்மைத்தமிழன் said...

[[[vijay said...

I have a one small question. why we are trust in politicians? Now each every politicians are selfish accept one or two persons. anyhow your social angry is right.]]]

வேறு வழியில்லையே..? மிக அதிக நேர்மை குணம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இங்கே மக்கள் செல்வாக்கு இல்லை.. குறைந்தபட்ச நேர்மை கொண்டவர்கள்தான் இங்கே மக்கள் நேசனாக கொண்டாடப்படுகிறார்கள்.. இல்லாவிட்டால் இத்தனை கொடூரங்களையும் செய்த பின்பும் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகியிருக்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

ராஜ நடராஜன் அண்ணே..

சூனியம்.. தினமலர் பத்திரிகையை மட்டுமே படிச்சு வளர்ந்திருக்காரு போலிருக்கு. அதான் அப்படியே பேசுறாரு..

லூஸ்ல விடுங்க..! இவருக்கெல்லாம் போய் பதில் சொல்லிட்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[நிஷா said...

2 ஜி அலைகற்றை வழக்கு நீர்த்து போகும்வரையோ இல்லை ராசாவை பாராளுமன்ற தெரிவுக் குழு குற்றமற்றவராக காட்டி கொள்ளும்வரைதான் அண்ணே தாத்தாவின் காங்கிரசுக்கு எதிரான போராட்டமும், டெசோ மாநாடுகளும். அன்று பதவி, பணம், அதிகாரம், குடும்பம் போன்றவற்றுக்காக ஈழ மக்கள் கொத்து கொத்தாக விழும்போது கபட நாடகம் போட்டார். இன்றும் அதே பதவி, பணம், அதிகாரம், குடும்பம் போன்றவற்றுக்காக ஈழ மக்களின் மேல் கரிசனை உள்ளது போல் நாடகம் போடுகிறார். காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வராதவரை இவரின் ஈழம் தொடர்பான எந்த செயல்பாட்டையும் நம்புவதற்கு இல்லை.]]]

வெளியே வந்தாலும் நீங்கள் அவரை நம்பப் போவதி்லலை என்பது வேறு விஷயம்.. ஆனால் மத்திய அரசுக்கு இந்தச் சூழலில் அதுவொரு அழுத்தமாக இருக்கும் என்பதாலேயே அப்படிச் சொன்னேன்..!

உண்மைத்தமிழன் said...

யாழ் தினேஷ்..

எப்பாடுபட்டாவது சொந்த மண்ணில் சுகமாக வாழ வேண்டும் என்ற நினைப்போடு ஏக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத்து அகதிகளை நினைத்துதான் தமிழகத்தில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.. இதனை குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து சிதைக்க வேண்டாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, தாத்தாவோட நடிப்புக்குலாம் ஆஸ்காரே கொடுக்கலாம். திமுகவுக்கு கடைசி சான்ஸ் கொடுத்தாலும் தேறாது, அதன் நாட்கள் எண்ணப்படுகிறது.
மு.க போன பின்னர் அண்ணன், தம்பிகளே திமுகவை அழித்து விடுவார்கள்.]]]

இப்படியும் ஒரு நம்பிக்கையா..? அக்கட்சியின் கோடானு கோடி தொண்டர்கள் இருக்கும்வரையில் அது நடக்குமா..?

-------------

உண்மைத்தமிழன் said...

[[[அரசியல் ராசதந்திரம் உமக்கு புரியவில்லை, மாணவர்கள் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்க தெரிந்த அரசு பின்னர் ஏன் கைது செய்ய வேண்டும்? அப்படி செய்தால் டெசோ முழக்கம் பின் தள்ளப்பட்டு, மாணவர் போராட்டம் பற்றியே அனைவரும் பேசுவர்.
இப்போ மணவர்கள் போராட்டம் அதிகம் ஆகி டெசோவின் பந்த் பள பளப்பு போய்விட்டது. விரைவில் ஆத்தா மாணவர்களை அழைத்து பேசி ஒரு வாக்குறுதீ கொடுத்தால் மீண்டும் ஈழத்தாய் பட்டம் கிடைச்சுடும். இந்த அரசியல் டெசோ டெல்லி மாநாடுவரைக்கும் ஓடும்.]]]

சான்ஸே இல்லை.. ஆத்தாவுக்கு இதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை. பெங்களூர் கோர்ட் சாட்சி விசாரணையில் அம்மா மும்முரமா இருக்காங்களாம்.. ஈழமாவது, வெங்காயமாவது..!?

உண்மைத்தமிழன் said...

[[[நிஷா said...

உ த அண்ணே... 'இங்கன' என்ற வார்த்தை யாழ்ப்பாண தமிழில் இல்லை. மேலும் கருணா, டக்லஸ், ரிஷாத் பதியுதீன் போன்றோருக்கு அடிபொடிகள் உண்டு. மீதியை எழுதியா புரியவைக்க வேண்டும்?!]]]

சரி விடும்மா..! நூத்துல ஒருத்தர் இது மாதிரி இருக்கத்தான் செய்வாங்க..!

R.Puratchimani said...

மாணவர்களை உண்ணாவிரதத்தை கைவிட சொன்னது நல்ல முடிவு....அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால்? வேண்டாம் உண்மை தமிழா....
மற்றபடி உங்கள் பதிவில் பல நியாயமான கேள்விகள் உள்ளன...உணர்ச்சிகள் உள்ளன.....
தாத்தா விரைவில் வெளியில் வருவார் அனேகமாக இந்த மாதத்திற்குள்ளாக கூட இருக்கலாம் .....வெளியில் வந்தாதானே காங்கிரசை திட்டி 2014 இல் ஒட்டு கேட்க முடியும்.

நல்ல பதிவு....

உண்மைத்தமிழன் said...

[[[அஹோரி said...

//சூனிய விகடன் said... //

இவன் "மணியசுப்புரசாமி"யா இருக்கணும். போலி அகவுன்டுல கமென்ட் போடுறான்.]]]

பி்ன்ன.. ஒரிஜினல் அக்கவுண்ட்ல இப்படியெல்லாம் எழுத முடியுமா..?

வவ்வால் said...

அண்ணாச்சி,

சொன்னா கோவிப்பீக,ஆனாலும் சொல்லாமலும் இருக்க முடியலை,சினிமா விமர்சனம் எழுதி எழுதி அரசியல் அறிவு மங்கிப்போச்சு :-))

ஆத்தா ஈழம் வாங்கித்தருவாங்கன்னா சொன்னேன்,அப்படிக்கா ஒரு வாக்குறுதி தேன்.

அப்புறம் இப்போ நடந்த போராட்டமெல்லாம் திட்டமிட்ட செட்டப்புனு சொன்னா என்னை தமிழீனத்துரோகினு திட்டுனாலும் திட்டுவீர் ,எனவே நான் எதுவும் சொல்லலை :-))

விலாவாரியா டீடெயில் வச்சிருக்கேன், அப்பாலிக்கா பதிவு போடுறேன்.

யாழ் தினேஷ் said...

எங்கள் தேசத்தின் பாசை எப்படி இருக்கும் என நிஷா போன்றவர்கள் செவ்வியளிக்க தேவையில்லை. கற்பனை அல்லாத உண்மையை பேசுபவனை இந்த ஈழ அகதிபாஸ்காரர்கள் டக்ளஸ்,கருணா,மகிந்தவின் அடிவருடிகள் என அழைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஒருவேளைக் கஞ்சி இப்போதைக்கு கிடைத்தால் பசியாற போதுமென நாங்கள் இருக்கும் போது பிரியாணியும் பீடாவும் கொடு என அவர்களை வெறியேற்றி கஞ்சிக்கும் வேட்டு வைத்து அதைக்காட்டி தங்கள் அகதி பாஸை ரினிவல் செய்து கொள்ள குரல் கொடுப்பவர்களை விட சிங்களவன் தரும் ஒரு குவளை தண்ணீரே இப்போதைக்கு எம்மக்களுக்கு சிறந்தது. எங்கள் சொகுசு வாழ்க்கைக்கு போராடுவதாக சொல்லும் உண்மைத்தமிழன் அண்ணா, ஒன்னு யோசிங்கள். இப்போது நடக்கும் போராட்டங்கள் இங்கிருக்கும் மக்களுக்கு நன்மை தருமா தீமை தருமா என நீங்களே சொல்லுங்கள். ஏற்கனவே எரியும் தீயில் இவர்கள் சுய நல எண்ணையை ஊற்றுகிரார்கள். ஈழம் வேண்டும் என இங்கிருப்பவர்கள் யாரும் கேட்கவில்லை. தூதன் வருவன் மாரி பெய்யும் என்ற கற்பனையில் நாங்களினி வாழ இயலாது. எங்களுக்கினி தேவை மீள் வாழ்க்கையும் நிம்மதியுமே.

உண்மைத்தமிழன் said...

[[[R.Puratchimani said...

மாணவர்களை உண்ணாவிரதத்தை கைவிட சொன்னது நல்ல முடிவு. அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால்? வேண்டாம் உண்மை தமிழா. மற்றபடி உங்கள் பதிவில் பல நியாயமான கேள்விகள் உள்ளன. உணர்ச்சிகள் உள்ளன. தாத்தா விரைவில் வெளியில் வருவார். அனேகமாக இந்த மாதத்திற்குள்ளாக கூட இருக்கலாம். வெளியில் வந்தாதானே காங்கிரசை திட்டி 2014-ல் ஒட்டு கேட்க முடியும். நல்ல பதிவு.]]]

உண்ணாவிரதம் என்று இறுதிப் போர்தான்.. ஆனால் இந்தப் போராட்டத்தில் எது இறுதி என்பதையே நம்மால் இன்னமும் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு அரசியல்வியாதிகளின் கைங்கரியம் இதில் உள்ளது.. அதனால்தான் ஒரு எழுச்சியை உண்டு செய்ய இது போன்ற போராட்டங்களை அடையாளத்துக்காக வாவது நடத்த வேண்டியுள்ளது..

இப்போது பாருங்கள்.. மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் ஆரம்பித்துள்ளதே.. இந்தக் குணத்தை இப்போதே நமது வாரிசுகளிடம் துவக்கி வைப்பது நமக்கு நல்லதே..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, சொன்னா கோவிப்பீக, ஆனாலும் சொல்லாமலும் இருக்க முடியலை, சினிமா விமர்சனம் எழுதி எழுதி அரசியல் அறிவு மங்கிப் போச்சு:-)) ஆத்தா ஈழம் வாங்கித் தருவாங்கன்னா சொன்னேன்? அப்படிக்கா ஒரு வாக்குறுதிதேன்.
அப்புறம் இப்போ நடந்த போராட்டமெல்லாம் திட்டமிட்ட செட்டப்புனு சொன்னா என்னை தமிழீனத் துரோகினு திட்டுனாலும் திட்டுவீர் ,எனவே நான் எதுவும் சொல்லலை :-)) விலாவாரியா டீடெயில் வச்சிருக்கேன், அப்பாலிக்கா பதிவு போடுறேன்.]]]

சரி போடும்.. படிச்சுத் தெரிஞ்சுக்குறேன் உம்ம செட்டப்பை..!

உண்மைத்தமிழன் said...

யாழ் தினேஷ்..

பிரான்சு, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிஸ் என்று ஈழத் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் அங்கெல்லாம் போராட்டங்கள் வலுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. திரும்பி ஊருக்குப் போகப் போவதி்லலை என்றால் எதற்கு இத்தனை போராட்டங்கள்..! ஒரு சிலரின் நினைப்பை நாம் முன்னிலைப்படுத்தக் கூடாது.. புறந்தள்ள வேண்டும்..!

Dr.Purushothaman said...

An Excellent Blogpost Relevant to the Topic. It really generates a new thinking pattern in the viewers. Please pursue with your Blogging Activities.
Living In Wellbeing

வவ்வால் said...

அண்ணாச்சி,

கார்ல் மார்க்ஸ் "சஸ்பெக்ட் எவ்ரி திங்க்" அப்படினு சொன்னது அரசியலுக்கு தான் ஆனால் வீணாப்போனவய்ங்க பொண்டாட்டி ,புள்ளைகளை தான் சஸ்பெக்ட் செய்றாங்க :-))

நம்ம வியூகத்தை ,எல்லாமே அரசியல்"னு பதிவா போட்டாச்சு படிச்சு அரசியல் ஞானம் பெருக :-))

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: எல்லாமே அரசியல்!

உண்மைத்தமிழன் said...

[[[Dr.Purushothaman said...

An Excellent Blogpost Relevant to the Topic. It really generates a new thinking pattern in the viewers. Please pursue with your Blogging Activities.]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..! தி.மு.க. இப்போது வெளியே வந்தால் அதற்கு அரசியல் ரீதியாக நிறைய ஆதாயங்கள் கிடைக்கும்.. நஷ்டம் என்று பார்த்தால் 3ஜி வழக்கு கூர்மையாகலாம்.. ஆனால் அதையும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டால் சிக்கல் நீங்கிவிடும். நமக்குத்தான் பட்டை நாமம் கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, கார்ல்மார்க்ஸ் "சஸ்பெக்ட் எவ்ரி திங்க்" அப்படினு சொன்னது அரசியலுக்குதான் ஆனால் வீணாப் போனவய்ங்க பொண்டாட்டி, புள்ளைகளைதான் சஸ்பெக்ட் செய்றாங்க :-)) நம்ம வியூகத்தை, எல்லாமே அரசியல்"னு பதிவா போட்டாச்சு படிச்சு அரசியல் ஞானம் பெருக)]]]

நன்றி.. உம்மிடம் அரசியல் ஞானம் பயில வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என் நிலைமையைப் பார்த்து எனக்கே வெறுப்பாக இருக்கிறது..! என்ன கொடுமை சரவணா இது..?

வவ்வால் said...

அண்ணாச்சி,

//உம்மிடம் அரசியல் ஞானம் பயில வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என் நிலைமையைப் பார்த்து எனக்கே வெறுப்பாக இருக்கிறது..! என்ன கொடுமை சரவணா இது..?//

ஹி...ஹி காலத்தின் கட்டாயம்!!!

சிரிப்பான் போட்டிருக்கேன் ,சிரிக்கணும்,புலம்பக்கூடாது!

ஒரு காலத்தில் உங்களிடம் அரசியல் ஞானம் கொழுந்து விட்டு எரிந்தது,மொக்கை சினிமா விமர்சனம் எழுதியே அரசியல் ஞான ஒளி மங்கிப்போச்சு, மீண்டும் அரசியல் ஞான ஒளி பிரகாசிக்க, என்ன போன்ற அவதாரங்களின் படைப்புகளை வாசிக்கவும் :-))