அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம்

13-01-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வருட இறுதியில் 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்', 'புதுமுகங்கள் தேவை' என்று நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்து தமிழ்ச் சினிமா மீதான நம்பிக்கையை இந்தாண்டின் துவக்கத்திலேயே கொடுத்துள்ள நிலையில், இந்தப் படத்தின் மூலம் அதனை முற்றிலுமாக சிதைத்து, மீண்டும் குப்பைக் கூடத்திற்கே அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர் சுராஜ்..!

சைட் எபெக்ட் விளைவிக்கும் மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய மாநிலத்தின் முதலமைச்சர் அனுமதிக்க மறுக்கிறார்.. அந்த அனுமதியைப் பெற வேண்டி அவருடைய மகளான அனுஷ்காவை, ரவுடியான கார்த்தியின் மூலமாக கடத்துகிறார்கள் கொள்ளைக்காரர்கள். இறுதியில் உண்மை தெரிந்ததும் கார்த்தி என்ன செய்கிறார் என்பதை நீங்களே யூகித்திருப்பீர்கள்..!


இந்த கமர்ஷியல் கதையை கொஞ்சமும் சுணங்காமல் மாற்றான் வழியிலேயே கொண்டு போயிருக்கலாம்..! அதைவிட்டுவிட்டு தெலுங்கு மணவாடுகளுக்குப் பிடித்ததுபோல் திரைக்கதையை எழுதி, முற்பாதி முழுவதும் ஆபாசக் கூத்தடித்திருக்கிறார்கள். கார்த்தி இதில் எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இதுபோல் இன்னும் 2 படங்களில் நடித்தாலே போதும்.. இவரின் மார்க்கெட் தானாகவே கீழிறங்கிவிடும்..!

சொந்தத் தயாரிப்பு என்றால் கேள்வி கேட்காமல் நடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..? தெலுங்கில்தான் அதிகம் கூச்ச நாச்சமே இல்லாமல் பாலியல் வேட்கையை வெள்ளித்திரையில் திறந்து வைப்பார்கள்.. இப்போது போகிற போக்கில் நாம் அவர்களை தோற்கடித்துவிடுவோம் போலிருக்கிறது..!

சந்தானத்தின் மூன்று தங்கைகளுடன் கார்த்தி அடிக்கும் லூட்டியும், விளையாட்டும், செய்கைகளும், பேச்சையும் கேட்டுவிட்டும், பார்த்துவிட்டும் யு சர்டிபிகேட்டை பொறுப்பாக வழங்கிய சென்சார் போர்டுகாரர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

மூன்று பேருமே கார்த்தியை விரும்புவதாகவும், நினைத்தால் உடனேயே படுக்கவும் தயாராக இருப்பதாகவும் போல் காட்டியிருப்பது கேவலமானது.. குனிய வைத்து விளையாடுவது.. இதில் அம்மாவும் சேர்ந்து எண்ணெய் தேய்த்துவிடுவது.. தங்கையொருத்தி வாந்தி எடுக்கும்போது சந்தானம் பேசும் பேச்சு.. பல இடங்களில் கார்த்தியுடன் பேசும் டபுள் மீனிங் டயலாக்குகள்..!  அடிக்கடி கடைசி தங்கச்சி எப்படியிருக்கா என்று கார்த்தி விசாரிப்பது.. கேரம் போர்டு காட்சியில் சந்தானம் தனது கால்களை விரித்துக் காட்டுவது.. அவ்வப்போது 'அதே' இடத்தில் அவருக்கு அடிபடுவது..! இந்தக் காவியத்தையெல்லாம் பார்க்கணுன்னா 2 கண்ணு போதாது கண்ணுகளா..!!! குடும்பத்தோட எப்படிய்யா இந்தக் கண்றாவிகளை பார்க்குறது..? 

இதுதான் இப்படியென்றால் இடைவேளைக்கு பின்பு  அனுஷ்காவை தொடை தெரிய உட்கார வைத்து, மனோபாலாவின் பனியனுக்குள் இருக்கும் செல்போனை அனுஷ்காவின் கால்கள் மூலமாக வெளியே எடுக்கும் அற்புதமான கற்பனைத் திறன் கொண்ட காட்சிக்காக தமிழ் கூறும் நல்லுலகம் இயக்குநர் சுராஜுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது..! வாழ்க இயக்குநர்..!

போய்த் தொலையட்டும் என்று இதையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால் படத்தில் வேறு ஒன்றுமேயில்லை..! மூட்டை, மூட்டையாக லாஜிக் மீறல்கள்.. கமர்ஷியல் ஸ்பீட்ல இதையெல்லாம் மக்கள்ஸ் யாரும் பார்த்திர மாட்டாங்க என்று நினைத்துவிட்டார்கள்..! ஒரு உருப்படியான, மனதைத் தொடும் காட்சிகளும் இல்லை.. நடிப்பும் இல்லை.. நடிக்க வைக்கவும் இல்லை..

முதல் காட்சியில் ஓடும் ரயிலை முன்புறமாக மாடு வைத்து இழுத்துச் சென்றார்களோ என்று தெரியவில்லை..! அவ்வளவு வேகமாக ஓடுகிறது.. அனுஷ்காவும், பின்னே கார்த்தியும் ஓடி வரும் வேகத்திற்கு ரயிலும் உடன் நடித்திருப்பதை பார்த்தவுடனேயே வயிற்றில் கிலி பிடித்தது.. சனி துவங்கியதென்று..! அந்தச் சனியனை அப்படியே படத்தின் இறுதிவரையிலும் மெயின்டெயின் செய்திருக்கிறார் இயக்குநர்..!

அப்போது காணாமல் போகும் அனுஷ்கா, ஒரு மணி நேரம் கழித்துதான் திரும்பி வருகிறார். தெலுங்குலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தேவதையை தன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், ஏதோ டிவி சீரியல் நடிகையைப் போல படம் முழுக்க பயன்படுத்தி வீணடித்திருக்கிறார் இயக்குநர்..! ரயில் சண்டை காட்சிகளில் ஏதோ ஈனஸ்வரத்தில் ஐயோ என்று அனுஷ்கா அவ்வப்போது கொடுக்கிற சவுண்ட்டை கேட்கும்போது, அனுஷ்காவே இந்தப் படத்தை ஜென்மத்தில் மறக்க மாட்டார் என்று நினைக்கிறேன்..!

கார்த்தியின் அதே எகத்தாள பார்வை.. சிரிப்பு.. ஸ்டைலான நடை.. இதையே இன்னும் எத்தனை படங்களில் எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது..? சண்டை பயிற்சியாளர் கணேஷ்குமார் இந்தப் படத்தில்தான் அதிகமாக வேலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் ரோப் ஸ்டண்ட்டுகளை பயன்படுத்துவதே ஏதாவது ஒரு ஸ்டண்ட் சீனில்தான் இருக்கும்.. இப்படத்தில் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் கார்த்தி பறந்து பறந்து அடிக்கிறார்..! அதிலும் பல இடங்களில் ஸ்லோமோஷன் வேறு..! 

இடைவேளைக்கு பின்பு காட்டுக்குள் வரும் பபூன் மனோபாலா கேரக்டரே டோட்டல் வேஸ்ட்டு..! அவருடைய மைண்ட் வாய்ஸில் வரும் சில வசனங்களின் மூலம் அவரே கொஞ்சம் ஆறுதல் அளித்தார் என்றாலும், படம் எந்தப் பக்கம் போகுது என்பது கூட தெரியாமல் தத்தளிக்கிறது..! போரடிக்கும் இந்தத் தகவல் இயக்குநர் டீமுக்கு தெரிஞ்சிருச்சு போல..! தியேட்டர்களில் மனோபாலாவின் காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சியிலும் கத்திரி போடப்பட்டிருக்கிறதாம். அப்படியே முற்பாதியையும் சுருக்கி 1 மணி நேர படமாகக் கொடுத்தால்கூட சந்தோஷம்தான்..!

இசையமைப்பாளர் ஏதோ ஆடுவதற்கேற்றாற்போல் டியூனை போட்டுக் கொடுத்திருக்கிறார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் இஷ்டத்திற்கு ஆட வைத்திருக்கிறார். பேட்பாய் டான்ஸில் மூன்று பேருடன் ஆடும் கார்த்தியின் ஆசை  இத்தோடு முடிந்தால் அவருக்கும், நமக்கும் நல்லதுதான்.. நல்லவேளை அவங்க அம்மாவை ஆட வைக்காம போயிட்டாங்களே.. அதுவரைக்கும் சந்தோஷம்..!

சி.எம். பொண்ணை கடத்தியிருக்காங்கன்றதை சஸ்பென்ஸா வைச்சு உடைச்சதும், உடைச்ச இடமும் சரியானதுதான்.. ஆனா இந்த டிவிஸ்ட்டையே நகரத்துக்குள்ள இருக்கிற மாதிரியும், போலீஸ் சேஸிங் மாதிரியும் கொண்டு போயிருந்தாலாச்சும் நல்லாயிருந்திருக்கும்.. இப்படி காட்டுக்குள்ள கொண்டு போய் கும்மியடிச்சு நம்மையும் நோகடிச்சிருக்க வேணாம்..!

வருஷத்துக்கு ஆயிரம் கோடி கிடைக்குதேன்னு எவனாவது சி.எம்.மை கொல்ல துப்பாக்கியைத் தூக்குவானா..? அப்புறம் ஆயிரம் கோடியை அவன் எப்படி கண்ணால பார்ப்பான்..? கமிஷனர் கூட்டு.. செகரட்டரி கூட்டு.. சாமியார் கூட்டுன்னு இத்தனை கூட்டையும் தாண்டி சி.எம். கடைசி நேரத்துல புத்திசாலித்தனமா தன்னுடைய செக்யூரிட்டிகளை வைச்சு அவங்களைச் சுட்டுக் கொல்றதா ஒரே நிமிஷத்துல படத்தை முடிச்ச அந்த ஸ்பீடை முதல் காட்சியிலேயே வைச்சுத் தொலைஞ்சிருந்தா எல்லாருக்கும் பணமும், நேரமும் ரொம்பவே மிச்சமாயிருக்கும்..!

ஏதோ இந்தப் படத்தைப் பத்தி சந்தானம் ஏதோ கமெண்ட் அடித்து, அது கார்த்தி காதுக்கு போய் இனி தன் படத்தில் சந்தானம் வேண்டாம்ன்னு அன்னார் கோபித்துக் கொண்டதாக சினிமா செய்திகள் சொல்கின்றன.. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால், நிச்சயமாக இதுவொரு நல்ல விஷயம்தான் என்பதில் சந்தேகமில்லை..! சந்தானம், கார்த்தி இருவருக்குமே இந்தப் படம் நிச்சயமாக பேட் பாய்ஸ் என்ற கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!

கார்த்தியின் அடுத்த படமாவது அவரோட குடும்பமாவது ரசிச்சு பார்க்குற மாதிரி வரட்டும்..! காத்திருப்போம்..!

26 comments:

Suresh Kumar said...

கார்த்தி கூடவே இருக்குற செவ்வாழைங்க யாரும் சொல்லுறது இல்லை போல... சரி விடுங்கன்னே நீங்க ஏன் பீல் பண்ணுறீங்க... ஆனா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சக்சஸ் பிரஸ்மீட் வச்சிருக்காங்களே அதுக்கு என்ன சொல்லுறீங்க...

சாதாரணன் said...

இந்த விமர்சனம் முழுக்க இழையோடிய நகைச்சுவை நன்றாகவிருந்தது.

அன்புடன்
சாதாரணன்

Saravana Muthaly said...

முடியல பாஸ் முடியல.... ஹிஹி

நம்பள்கி said...

பாஸ் திருட்டு வீடியோ எப்ப வரும்? online-ல் பார்க்க மூடியுமா?

இக்பால் செல்வன் said...

திருட்டு வீடியோவில் கூட பார்க்க முடியாத படம் போலிருக்கே. எம்மைக் காப்பாற்றிய உண்மைத் தமிழன் அண்ணனுக்கு கோடி நன்றிகள். எஸ்கேப்..

நாகு said...

good review.....You have saved atleast few People's Money.

Nagu
www.tngovernmentjobs.in

வவ்வால் said...

அண்ணாச்சி,

யூத்ஃபுல்லா படம் எடுத்தா உங்களுக்கெல்லாம் புடிக்காதே :-))

கொடுக்கிற காசுக்கு வஞ்சனையில்லாம "விருந்து"படைக்கும் மசாலாப்படங்களால் தான் தமிழ்சினிமா உயிர்ப்புடன் இருக்கு.

தெலுங்குல்ல தேவதையாமே...அப்படியே ஆஸ்கார் அவார்டுக்கு தான் அனுஸுக்கா நடிக்குது, அங்கே காட்டுறதுல "காவாசி தான் காட்டுறாங்க, அதுக்கும் தடா போடுறிங்களே ...படம் நல்லா இருக்கோ,நாசமா இருக்கோ 120 ஓவாவுக்கு இதுவே எதேஷ்டம் ,1000 ஓவாக்குடுத்து பார்த்துட்டு... படத்துல என்ன சொன்னாங்கன்னு புரியாம அலையுனுமா?

பதிவுல நாலு பேரு குறியீடுகள் எங்கே இருக்குன்னு தேடி பச்சக்கலர் வேன், மஞ்சக்கலர் சட்டைனு காரணக்காரியம் சொல்ல மட்டுமே படம் எடுக்கணும்னு எடுத்தா தியேட்டர்க்காரனில் இருந்து, தயாரிப்பாளர் வரை துண்டக்காணோம் ,துணியக்காணோம்னு தான் ஓடனும்.

ஐ லைக் அலெக்ஸ்பாண்டியன்...ஒரு டிவிடி பார்சல் !!!

இந்தப்படத்த 3டில எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும் ...தியேட்டர்ல பார்த்திருப்பேன் :-))

பொங்கல்,திருவள்ளுவர் திருநாள் மற்றும் தை-1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

[[[Suresh Kumar said...

கார்த்தி கூடவே இருக்குற செவ்வாழைங்க யாரும் சொல்லுறது இல்லை போல. சரி விடுங்கன்னே நீங்க ஏன் பீல் பண்ணுறீங்க. ஆனா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சக்சஸ் பிரஸ்மீட் வச்சிருக்காங்களே அதுக்கு என்ன சொல்லுறீங்க.]]]

நல்ல படம் வரலீன்னா நாமதான வருத்தப்பட வேண்டியிருக்கு..?! பத்திரிகையாளர்களின் கொதி நிலை மனசு அறிஞ்சுதான் சக்சஸ் பிரஸ் மீட்டை கேன்ஸல் செஞ்சிருக்காங்களாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சாதாரணன் said...

இந்த விமர்சனம் முழுக்க இழையோடிய நகைச்சுவை நன்றாகவிருந்தது.

அன்புடன்
சாதாரணன்]]]

நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Saravana Muthaly said...

முடியல பாஸ் முடியல.... ஹிஹி]]]

என்னாலேயும் சத்தியமா முடியல பாஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

பாஸ் திருட்டு வீடியோ எப்ப வரும்? online-ல் பார்க்க மூடியுமா?]]]

தயவு செஞ்சு திருட்டு வீடியோலகூட இந்தப் படத்தைப் பார்த்திராதீங்க..! ப்ளீஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...

திருட்டு வீடியோவில் கூட பார்க்க முடியாத படம் போலிருக்கே. எம்மைக் காப்பாற்றிய உண்மைத் தமிழன் அண்ணனுக்கு கோடி நன்றிகள். எஸ்கேப்.]]]

இக்பால் அண்ணே.. நான் நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்கண்ணே.. ரொம்ப நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[நாகு said...

good review.....You have saved atleast few People's Money.]]]

பணத்துக்காககூட இல்லீங்கண்ணா.. யு சர்டிபிகேட் இருக்கிறதால குடும்பத்தோட போய் உக்கார்றவன் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, யூத்ஃபுல்லா படம் எடுத்தா உங்களுக்கெல்லாம் புடிக்காதே :-))]]]

பிடிக்காதுதான்.. ஏன்னா நான்தான் ஒரிஜினல் யூத்து..!

[[[கொடுக்கிற காசுக்கு வஞ்சனையில்லாம "விருந்து" படைக்கும் மசாலாப் படங்களால்தான் தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருக்கு.
தெலுங்குல்ல தேவதையாமே. அப்படியே ஆஸ்கார் அவார்டுக்குதான் அனுஸுக்கா நடிக்குது. அங்கே காட்டுறதுல "காவாசிதான் காட்டுறாங்க. அதுக்கும் தடா போடுறிங்களே. படம் நல்லா இருக்கோ, நாசமா இருக்கோ 120 ஓவாவுக்கு இதுவே எதேஷ்டம், 1000 ஓவாக் குடுத்து பார்த்துட்டு... படத்துல என்ன சொன்னாங்கன்னு புரியாம அலையுனுமா? பதிவுல நாலு பேரு குறியீடுகள் எங்கே இருக்குன்னு தேடி பச்சக்கலர் வேன், மஞ்சக்கலர் சட்டைனு காரணக் காரியம் சொல்ல மட்டுமே படம் எடுக்கணும்னு எடுத்தா தியேட்டர்க்காரனில் இருந்து, தயாரிப்பாளர் வரை துண்டக் காணோம், துணியக் காணோம்னுதான் ஓடனும்.
ஐ லைக் அலெக்ஸ் பாண்டியன். ஒரு டிவிடி பார்சல் !!!]]]

ச்சீ.. அவனா நீயி..!

[[[இந்தப் படத்த 3-டில எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும் தியேட்டர்ல பார்த்திருப்பேன் :-))]]]

உங்களைப் போன்ற அன்பர்கள் இருக்கின்றவரையில் தமிழ்ச் சினிமாவை யாராலேயும் காப்பாற்ற முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.]]]

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்டு ஸார்..!

Banureka said...

yepudi sivakumar appa family la irunthu vanthutu epudi oru padam nadikuraaru nu thaan theriyala.. does his father seen this film..?? I have seen few of karthik interview, he called his wife as `athu,ethu`.. apave enaku doubt aachu, so double meaning comedy karthiki periya vishiyam ilai... finaly he like andra audinace then tamil audience... so leave it... Happy Pongal anna...

வவ்வால் said...

அண்ணாசி,

//ஏன்னா நான்தான் ஒரிஜினல் யூத்து..!//

என்னையும் கொலைக்காரன் ஆக்கிடுவீங்க போல இருக்கே அவ்வ்வ் :-))

திண்டிவனத்துல வாங்கின கொய்யாக்கா ஸ்வீட்டா இடுப்பதால் என் மனசும் ஸ்வீட்டா இருக்கு, கொய்யாக்காவும் .கார்டினலும் இல்லைனா, இன்னேரம் ஒரு கொலை விழுந்திருக்கும் :-))

என்னா அவனா நீயி, அவனே தான் இவன் :-))

அல்லவை நீக்கி நல்லவை பருகும் அன்னப்பட்சி போல இருக்க வேணாமோ, பட்சிகளை பட்டுமே காணும் பக்‌ஷிராஜாவா இருக்கணும் :-))

ஒரு கணம் யோசித்து பாரும் 1000 ஓவாக்கொடுத்து பார்த்தப்படம் பல்ப்பு கொடுத்தா மனம் என்னப்பாடு படும், அடுத்த நாள் தியேட்டரில் அந்த படம் பப்படம் தான்னு தனியா சொல்லணுமா?

120 ஓவாகொடுத்தாலே ப்லக படம் போல இல்லியேன்னு ,யாரையும் பார்க்க வேணாம் சொல்லுறிங்க, 1000 ஓவாக்கொடுத்து பார்த்தப்படம் கடுப்பத்தினா, என்னா சொல்லுவீங்க :-))

நல்ல காலம் வலைப்பதிவு விமர்சனம் பத்தி பொது சனம் கண்டுப்பதேயில்லை, அலெக்ஸ் பாண்டியன் படம் அச்சிரப்பாக்கம் பாலாஜியில கூட ஹவுஸ்ஃபுல்லா ஓடுது :-))

தமிழ் சினிமா தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளும், எந்த கொம்பனும் தேவையில்லை, தமிழில் சினிமா எப்போதும் இருக்கும், ஆனால் தமிழ் சினிமாவே என்னால தான் வாழுதுன்னு சொன்னவங்க தான் இருக்க மாட்டாங்க :-))

! சிவகுமார் ! said...

//இதுபோல் இன்னும் 2 படங்களில் நடித்தாலே போதும்.. இவரின் மார்க்கெட் தானாகவே கீழிறங்கிவிடும்..!//

உ.த. அண்ணா...இன்னும் ரெண்டு லட்டு திங்க ஆசையா??

Mohamed Muzzammil said...

thank u so much.......u have save my prcious money...

உண்மைத்தமிழன் said...

[[[Banureka said...

yepudi sivakumar appa familyla irunthu vanthutu epudi oru padam nadikuraarunu thaan theriyala.. does his father seen this film..?? I have seen few of karthik interview, he called his wife as `athu, ethu`.. apave enaku doubt aachu, so double meaning comedy karthiki periya vishiyam ilai... finaly he like andra audinace then tamil audience... so leave it... Happy Pongal anna.]]]

அதுதான் பிரச்சினை.. தமிழ்ல படம் எடுத்திட்டு அதை தெலுங்குல ஓட வைக்கணும்ன்னு ஏன் விரும்புறாங்கன்னு தெரியலை..! இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

வவ்வால் said...

ஒரு கணம் யோசித்து பாரும் 1000 ஓவாக் கொடுத்து பார்த்த படம் பல்ப்பு கொடுத்தா மனம் என்ன பாடுபடும், அடுத்த நாள் தியேட்டரில் அந்த படம் பப்படம்தான்னு தனியா சொல்லணுமா? 120 ஓவா கொடுத்தாலே ப்லக படம் போல இல்லியேன்னு, யாரையும் பார்க்க வேணாம் சொல்லுறிங்க, 1000 ஓவாக் கொடுத்து பார்த்தப் படம் கடுப்பத்தினா, என்னா சொல்லுவீங்க :-))]]]

இதையேதான் சொல்லுவேன்..!

[[[நல்ல காலம் வலைப்பதிவு விமர்சனம் பத்தி பொது சனம் கண்டுப்பதேயில்லை, அலெக்ஸ் பாண்டியன் படம் அச்சிரப்பாக்கம் பாலாஜியில கூட ஹவுஸ்ஃபுல்லா ஓடுது :-)) தமிழ் சினிமா தன்னை தானே காப்பாற்றிக் கொள்ளும், எந்த கொம்பனும் தேவையில்லை, தமிழில் சினிமா எப்போதும் இருக்கும், ஆனால் தமிழ் சினிமாவே என்னாலதான் வாழுதுன்னு சொன்னவங்கதான் இருக்க மாட்டாங்க :-))]]]

அப்படி யாரும் சொல்றதா எனக்குத் தெரியலையே வவ்ஸ்..!?

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//இதுபோல் இன்னும் 2 படங்களில் நடித்தாலே போதும்.. இவரின் மார்க்கெட் தானாகவே கீழிறங்கிவிடும்..!//

உ.த. அண்ணா... இன்னும் ரெண்டு லட்டு திங்க ஆசையா??]]]

ஐயையோ.. இது ஒண்ணே போதும்பா..! ஆளை விடு..!

உண்மைத்தமிழன் said...

[[[Mohamed Muzzammil said...

thank u so much. u have save my prcious money.]]]

ஏதோ என்னால முடிஞ்சது இவ்ளோதான் நண்பரே..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

//thank u so much. u have save my prcious money.]]]

ஏதோ என்னால முடிஞ்சது இவ்ளோதான் நண்பரே..!
//

விமர்சனம் படிச்சிட்டு தான் படம் பார்க்க போறாங்களானு சமர் விமர்சனத்தில கேட்டிங்க, இங்கே இப்படி ம்ம்ம் நடத்துங்க.

அப்போ அலெக்ஸ் பாண்டியன் படம் ஹிட் ஆகும் தானே :-))

அலெக்ஸ் பாண்டியன் ஃபர்ஸ்ட் மெகா ஹிட் ஆஃப் தி இயர் 2013 :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//thank u so much. u have save my prcious money.]]]

ஏதோ என்னால முடிஞ்சது இவ்ளோதான் நண்பரே..!//

விமர்சனம் படிச்சிட்டுதான் படம் பார்க்க போறாங்களானு சமர் விமர்சனத்தில கேட்டிங்க, இங்கே இப்படி ம்ம்ம் நடத்துங்க.

அப்போ அலெக்ஸ் பாண்டியன் படம் ஹிட் ஆகும்தானே :-)) அலெக்ஸ் பாண்டியன் ஃபர்ஸ்ட் மெகா ஹிட் ஆஃப் தி இயர் 2013 :-))]]]

இது அவருக்கு மட்டுமான பதில் வவ்ஸ்..!!! புரிந்து கொண்டால் சரி..!