கூடங்குளம் மக்களின் சாபமாவது பலிக்கட்டும்..!

11-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மீண்டும் தனது அரசியல் சர்வாதிகாரத்தை லத்திகளின் துணையோடு செய்து காட்டியிருக்கிறார் தமிழகத்து புரட்சித் தலைவி..! இவருக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை இவரது முதல் ஆட்சிக் காலத்தில் இருந்தே நாம் பார்த்துதான் வருகிறோம். ஆனாலும் கேவலங்கெட்ட இந்திய அரசியல் முறையினால் மிக மோசமான அரசியல்வியாதிகளில் ஒருவராக இருக்கும் இந்த தாய்தான் மீண்டும், மீண்டும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்..!

மீன் பிடிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாத மீனவர்கள் தாங்கள் காலம், காலமாக வாழ்ந்து வரும் அதே இடத்தில்தான் தங்களது சந்ததிகளும் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..? நாளைய பொழுதுகளில் தங்களது பரம்பரையினருக்கு மீன் வலைகளையும், படகுகளை மட்டுமே சொத்தாக வைத்துவிட்டுப் போகவிருக்கும் இந்த குடும்பத் தலைவர்கள், தங்களுடைய நலனுக்கு குந்தகம் விளைவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்..? அந்த வகையில்தான் என்றோ ஒரு நாள் அவர்களுடைய உயிரைக் கொள்ளையாக அடித்துப் போகக் காத்திருக்கும் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..!


திருவள்ளுவருக்கு எந்த “ள்” போட வேண்டும் என்றுகூட தெரியாத கட்சி பிரமுகருக்காக பஸ் மீது கல்லெடுத்து அடிக்கும் கட்சிக்காரர்களை பார்த்திருக்கும் தமிழகத்து மக்கள் கடந்த சில ஆண்டுகளாக மெளனமாக, அற வழியில்.. உண்மையான சத்தியாக்கிரக முறையில் போராட்டம் நடத்தி வரும் இந்த கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட எதிர்ப்புகளை கவனித்தே வந்திருக்கிறார்கள்..!

ஊர்வலம் நடத்திக் காண்பித்தார்கள். ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் காட்டினார்கள்.. நீண்ட, நெடிய உண்ணாவிரத்த்தைக்கூட நடத்தினார்கள்.. ஆனாலும் கல்நெஞ்சக்காரர்களையே அரசியல்வியாதிகளாக நாம் பெற்றிருக்கும் காரணத்தினால் இன்றுவரையில் இந்த மக்களின் சக்தியை உடைக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்கள் இந்த ஈனப் பிறவிகள்..!

முறையாகத் தகவல் சொல்லிவிட்டு, ஊர்வலமாக வந்த மக்களிடத்தில் சமாதானம் பேசுவதற்கு ஒரு அமைச்சரைக்கூட அனுப்பத் தெரியாத முக்கா லூஸு முதலமைச்சரை வைத்துக் கொண்டு நாம் என்னதான் செய்வது..? மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு இதுதான் என்று முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், இந்த ஆலையின் துவக்கமே சர்வாதிகாரத்தில்தானே துவங்கியிருக்கிறது..! எங்கோ டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அதை செய். இதைச் செய்.. அதை இங்கே வை.. இதை அங்கே வை என்று ஆணையிடுபவர்கள் இந்த ஆலையை டெல்லியிலேயே அமைத்திருக்கலாமே..? ஜனாதிபதி மாளிகையை இடித்துக்கூட கட்டியிருக்கலாமே..? இந்திய ஜனநாயகத்திற்கு பலிகடா அப்பாவி மக்கள்தானா..? அரசியல்வியாதிகளுக்கு இல்லையாமா..? 


சுற்றுப்புற மக்களிடம் கருத்து கேட்காமல், அவர்களுடைய ஆதரவைப் பெறாமல் அவர்களுக்கு அறிவுறுத்தாமலேயே அவர்களுடைய உயிருடன் விளையாடும் ஆபத்துக்குரிய அந்த ஆலையை அங்கே கொண்டு வந்து அமைத்ததே ஜனநாயகமானதல்ல..!  அந்த மக்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லையெனில் அப்படியொரு ஆலைதான் அங்கே எதற்கு..? கல்பாக்கத்தின் அருகே குடியிருக்கும் மக்களில் 100-ல் ஒருவர் ஏதோ ஒரு இனம் புரியாத நோயால் இன்னமும் பாதிக்கப்படுகிறார்..! அங்கே அணு மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும்கூட சொன்னபடியாக செட்டில்மெண்ட்டும், வேலையும் தரப்படவில்லை. போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு இப்போதுவரையிலும் எத்தனையோ குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறந்து வருகின்றன.. இதையும் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த நாயும் கேட்டபாடில்லை.. இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியுதவியைக்கூட வாங்கித் தர வக்கில்லாத பரதேசிகள்தான் இப்போதும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..! இப்படிப்பட்ட அரசியல் சூழலில், இந்த மக்களின் இந்தக் கோரிக்கை மிக, மிக நியாயமானதுதான்.. 

நேற்று ஊர்வலத்தில் வந்தவர்கள் எங்களுக்கு ஒரு இறுதி முடிவு தெரியும்வரையில் இடத்தைக் காலி செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு இரவில் கடலோரத்தின் தாலாட்டலில் அங்கேயே உறங்கியிருக்கிறார்கள். அந்த மக்களின் ஒத்துழைப்பையும், பயத்தையும், போராட்ட உணர்வையும் புரிந்து கொள்ளாத இந்த ஜெயலலிதாவின் பாசிஸ அரசு.. விடிந்தபோது  தனது காவலாட் படைகளைக் கொண்டு நாயை விரட்டியடிப்பது போல சொந்த நாட்டு மக்களையே பந்தாடியிருப்பது கேவலமானது..!


இன்றைக்கு நடந்த இந்தக் கொடூரத்தின் மூலம் இந்த மக்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் பலிக்காது..! தங்களுடைய எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை அந்த மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.. எந்த சதிவேலையை செய்தும் அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நேற்றைய அவர்களது போராட்டமும் வெளிப்படுத்திவிட்டது. தமிழகத்தின் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத அளவுக்கான கூடங்குளம் மக்களின் போராட்ட வெறியும், நேர்மையான வழிமுறையைப் பின்பற்றிய அவர்களது குணமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. அவர்களுக்கு எனது சல்யூட்..!

அதே சமயம் அதிகார வர்க்கம் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஊடகங்களையும் வளைத்துவிட்டது என்பதும் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது..! எல்லோருக்கும் நான் நட்ட நடுநிலையாளன் என்று தன்னைத் தானே புகழ்ந்து சொல்லிக் கொண்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று காலையில் இருந்து தனது ஒளிபரப்பில் சொல்லிக் கொண்டிருந்த கூடங்குளம் பற்றிய செய்திகளும், முறைகளும் அதன் உரிமையாளரின் குடுமி டெல்லிக்கும், சென்னைக்குமாக மாட்டியிருப்பதால் அரசுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்துகிறது..! இந்தக் கேவலத்திற்கு இந்த்த் தொலைக்காட்சியைத் துவக்கிய காசில் மேலும் 2 கல்லூரிகளைத் துவங்கி அங்கேயாவது கொள்ளையடித்து மொத்தமாக பாவத்தில் மூழ்கியிருக்கலாம்..!

தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு தி.மு.க. தொண்டன் போலீஸால் மிரட்டப்பட்டான் என்றாலே ஆண்டி போண்டியிலும், சிந்து, பொந்துவிலும் பஞ்ச் வசனம் பேசியும், முழுப் பக்கத்துக்கு ஒப்பாரியும் வைக்கும் மஞ்சத்துண்டு மைனர்.. இந்தக் கொடூரத்தை டிவியில் பார்த்து பேதி கண்டு வீட்டில் அமைதியாகப் படுத்திருக்கிறார்.. இதில் ஏதாவது வாயைக் கொடுத்து டெல்லியை பகைத்துக் கொண்டால், தனது அருமை மகளும், மகனும், பேரன்களும் தப்பிக்க முடியாதே என்று பச்சையான தனது சுயநல நோக்கத்தை வெளிக்காட்டிவிட்டார்..! 


இவரது குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் தக்காளி சூஸ்தான் உடலில் இருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கும் இந்த முத்தமிழ் வித்தகர் தமிழர்களின் முதல் துரோகி பட்டியலில் இருந்து இறங்க மறுத்து அடம் பிடிப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஆட்சிக் கட்டில் இருந்தபோதுதான் அப்படியென்றால், இப்போதும்கூடவா..? 

இவர்களுடைய கலைஞர் தொலைக்காட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் சுப.உதயகுமார் தப்பி ஓட்டம் என்று பிளாஷ் நியூஸ் போட்டுத் தாளித்தார்கள். அட பக்கிகளா..? கிரானைட் ஊழல் வழக்கில் இவரது அருந்தவ புத்திரனின் மகன் தயாநிதி அழகிரி ஒரு மாதமாக தலைமறைவாகத்தானே இருக்கிறார்.. அதைப் பற்றி போட வக்கில்லாமல், உண்மையான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி அந்த மக்களின் உண்மையான உணர்வுகளை கேவலப்படுத்தும் இந்தப் பொழைப்பெல்லாம் தேவைதானா..?

ஆத்தாவுக்கு எப்போதுமே மக்கள் பிரச்சினைகள் என்றால் என்னவென்றே தெரியாது..? முன்பே தெரியாது.. இப்போது மட்டும் என்ன தெரிந்துவிடவா போகிறது..? எப்படியாவது பெங்களூர் வழக்கில் இருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற பயத்துடன் இருக்கும் அம்மையார், நேற்றைக்கு ஊருக்குள்கூட வராத ஒண்ணுமில்லாத மண்ணுமோகனசிங்கை விமான நிலையத்தில் பார்த்து வணக்கம் சொல்கிறார்.. தானும், தனது கட்சிக்காரர்களும் ஓட்டே போடாத ஜனாதிபதியை பார்த்து வணங்கியும் இருக்கிறார்.. கூடவே பாஜகவுடன் இணக்கமாகவும் இருக்கிறார். இத்தாலிய மம்மியை பற்றி கிண்டலடித்தவர் தற்போதெல்லாம் தி.மு.க.வை மட்டுமே தாக்கிவிட்டு மற்றவர்களை சைக்கிள்கேப்பில்கூட கண்டு கொள்வதில்லை..!

“நான் உன் ஊழலை கண்டு கொள்ள மாட்டேன்.. நீ என் ஊழலை கண்டு கொள்ளக் கூடாது..” என்ற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்படி இனி காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி ஓஹோவென வளரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இந்தப் போராட்டத்தை எந்த வகையிலாவது ஒடுக்கி சுத்தமாக இல்லாமல் செய்தால் ஒருவேளை ஆத்தா ஜெயில் கம்பி எண்ண வேண்டிய சூழலில் இருந்து 2 பெரிய கட்சிகளும் சேர்ந்து காப்பாற்றலாம்... இந்த காரணத்துக்காகவே ஆத்தா பொதுமக்களுடன் இப்படி மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்..! 

இவரே அடித்து கொலை செய்ய போலீஸை அனுப்புவாரம்.. யாராவது செத்து போனால் உடனேயே நம்முடைய பணத்தில் இருந்து 5 லட்சம் கொடுப்பாராம்.. இவரை யாராவது கொலை செய்துவிட்டு, இவருக்கே 5 லட்சம் கொடுத்தால் ஒருவேளை நரகத்தில் இருந்தபடியே ஏற்றுக் கொள்வாரோ..?

மண்ணை வாரி தூற்றி வீசியிருக்கும் அந்தச் சாபக் குரல்களுக்கு சக்தி இருக்கோ இல்லையோ.. அரசியல்வியாதிகள் கோவில், கோவிலாக சுத்தும் அந்த பக்திக்கு பலன் கிடைக்குமோ கிடைக்காதோ..? இந்தக் கேடு கெட்டவர்கள் விரைவில் மாண்டொழிந்தால்தான் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.. இல்லாவிடில் அதுவரையில் இது போன்ற பலிகளில் நாம் நமது குடும்பத்தினரை இழந்துதான் ஆக வேண்டும்..!

இது நமக்குக் கிடைத்திருக்கும் சாபக்கேடு..!

68 comments:

Kalee J said...

arumaiyana pathivu

வவ்வால் said...

அண்ணாச்சி,

உங்கள் கருத்து உண்மையானதே, ஆனால் நடைமுறையில் சரியாக அமையுமா?

இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை, ஜப்பான் அணு உலை விபத்துக்கு பின் தான் விழிப்புணர்வு வந்தது போராடுகிறோம் என்றால் ,அரசு எப்படி உடனே தலையாட்டும், அதற்கும் ஈகோ உள்ளதே, இவ்வளவு செலவு செய்தாச்சு, இனிமே முடியாது என்று தானே சொல்வார்கள்.

நீங்களே கல்பாக்கம் பற்றியும் சொல்கிறீர்கள், அப்படியானால் முன்னரே ஒரு அணு உலை இருப்பது ,கூடங்குளம் உதயகுமாருக்கு தெரியும் தானே அப்போவே கட்ட வேண்டாம் என சொல்லி எதிர்ப்பு காட்டியிருக்கலாம்.

மேலும் இதே மக்கள் தான் மஞ்ச்த்துண்டு காலத்தில் போராட்டத்திற்கு விடுமுறை விட்டு வாக்களிக்க போனார்கள், அப்போது ஒரு உறுதி மொழி கிடைக்கும் வரை வாக்களிக்க மாட்டோம் என சொல்லி இருந்தால் ஏதேனும் பலன் கிடைத்து இருக்கும், ஏன் செய்யவில்லை.

2011 இல் எழுதிய எனது கட்டுரையில் டெல்லியுடன் இணக்கமான சூழல் உருவாகிவிட்டால் அம்மையார் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் என சொன்னது இன்று நடந்து கொண்டுள்ளது.

அணு உலை வேண்டாம் என்பது எனது கருத்தும் ஆனால் வேண்டாம் என்பதை முன்னரே சொல்லாமல் காலம் கடந்து சொன்னால் ஆட்சியாளர்கள் கேட்கமாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.

மேலும் 20 ஆண்டுகளாக ,மஞ்சத்துண்டு, அம்மையார் என இருவர் ஆட்சியும் மாறீ ,மாறி வந்துள்ளது அப்போதும் அணு உலை வேலை நடந்தே வந்தது ,எனவே ஆட்சியாளர்கள் என்ற நிலையில் அணு உலைக்கு எதிராக இரு பெரும் கட்சியின் தலைமையும் பேசாது.

மத்திய,மாநில அரசு மற்றும் எந்த தனியார் திட்டமாக இருந்தாலும் உள்ளூராட்சி அமைப்பின் சபையில் ஒரு பொது தீர்மானம் இயற்றி அவர்கள் முடிவை கலெக்டருக்கு அனுப்பினால் தான் அங்கு திட்டமே வரும்.

20 ஆண்டுகளுக்கு முன் இதே இடிந்தகரை ஊராட்சி அமைப்பு யாருக்கும் தெரியாமலா வேண்டும் என தீர்மானம் இயற்றியது, மேலும் நில ஆர்ஜிதம் எல்லாம் அணு உலைக்கு என தெரிந்தே எடுக்கப்பட்டது, எல்லாம் தெரிந்தும் பார்த்துக்கொண்டு தான் மக்கள் இருந்துள்ளார்கள். எனவே யாருக்கும் தெரியாமல் ,மக்களுக்கு சொல்லாமல் அணு உலைக்கட்டிட்டாங்க என நீங்க சொல்வது எப்படி?

தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கும் கதையாக ஆகிடுச்சு இப்போ. மாடு அடங்குமா ?

peter fernandes said...

இன்னாபா நீ பச்சை கொளந்தக் கணக்காக் கீறியே....நைனா இந்த ஒத்யகுமாறு கீறாரே அவுற இன்னாமோ நீ மவுத்தான காந்தி ரேஞ்சுக்கு தூக்குரியேப்பா.. மீனவன்றது மெஜாரிட்டி ஏசப்பாவக் கும்பிடுற ஆளுங்க..இப்போ அவங்களுக்கு இன்னான்னா அவங்களுக்கு வேண்டாம்னு நெனைக்கறத உள்ளார உடக்கூடாதுன்னு அவிங்களுக்கு ஒரு எய்ம். சர்ச்சுல மணி அடிச்சாக் கூட்டம் கூடுதா...டாலர்ல அமௌண்டு வருதா...பாதரு சொன்னா எல்லாரும் பிள்ள குட்டிங்கள தூக்கிகினு வாராங்களா...நாம என்ன வேணா செஞ்சிரலாம்னு ஒரு கெலிப்பு அவிங்களுக்கு...அனு ஒலைன்ன்றதேல்லாம் சொம்மா ஒரு இதுதான். இதேக் கண்டி வேற சாமி கும்பிடறா ஆளுங்களா இருந்தா என்னிக்கோ கைமா பண்ணி இருப்பாங்கோ நீ சொல்ற ஆத்தாவும் தாத்தாவும். ஓட்டுக்கு பயந்துகினு இத்தினி நாளு ஒத்யகுமார வளத்து விட்டா ஆத்தா...இத்தினி நாயம் பேசுறியே....தடை உத்தரவு போட்டிருந்தும் பொம்பளைங்களையும் தூங்கற கொழந்தைகளையும் கூட்டிகிட்டு எவனாவது முற்றுகைப் போராட்டம்னு சண்டைக்குப் போவானா..நா ஆரம்பத்திலேர்ந்தே பாக்குறேன் ஒத்யகுமாருக்கு நாக்கிலே சனி...அல்லாப்பெரையும் இளுத்துவிட்டு என்மேல கை வைங்கடா பாக்கலாம்னே பேசுறான் இந்த ஆளு.

எல்லாம் சரி நைனா.. நீ பாட்டுக்கு மன்னாரு, முகமூடின்னு சோக்காலியா சுத்திட்டிருந்தே...திடீர்னு ஊடு மாறி வந்திட்டியே...பரவால்லே போ....இந்தா மாதிரி நெறையா எழுதுப்பா .ஆனா ஒன்னு கூட்டமா சேர்ந்தாலே அது நாயத்துக்குத்தான்னு நினைச்சிக்காதே....நாங்கதான் பருப்புன்னு நம்மள மெரடனும்னு கூட இருக்கலாம்...


s suresh said...

மக்களின் போராட்டம் நியாயமானதாக இருக்கலாம்! ஆனால் உதயகுமாரை பற்றி வரும் செய்திகள் சரியாக இல்லை! இந்த போராட்டம் ஆரம்ப காலத்திலேயே தொடங்கி இருக்க வேண்டும். இப்போது முழு பாதுகாப்புடன் யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு அணு உலை செயல்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் இந்த தமிழக அரசியல் வாதிகள் நடந்து கொள்ளும் போக்கு நீங்கள் சொல்வது மாதிரி சரியில்லைதான்! நன்றி!

senthil said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்!

ஆத்தாவும், மஞ்சத்துண்டு மைனரும் செத்தா தான் தமிழனுக்கும் தமிழுக்கும் நல்ல காலம் வரும்.

இவையிரண்டும் தமிழ் நாட்டைப் பிடித்த சனியன்கள்!

Thennavan said...

\\வவ்வால் said...

இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை, //


80களில் இத்திட்டம் தொடங்கியபோதே அப்பகுதியினர் போராட தொடங்கி விட்டனர் . திரு . அன்டன் கோமஸ் தொடங்கி திரு . அப்பவு ( Ex MLA ) (அப்போது (தமிழ் மாநில) காங்கரசில் இருந்தவர் தற்போது தி மு க வில் இருப்பவர்) என போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .புகுஷிமா விபத்திற்கு பிறகு இப்போது சுப . உதயகுமார் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.

Mattai Oorukai said...

அண்ணே..
இந்த பதிவு ஒருதலை பட்சமா தான் இருக்கு...
இப்போ தான் ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன்...நீங்க தான் நடுநிலையா எழுதிரிங்க நு...
சொல்லி ஒரு மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ளே இப்படியா அண்ணா...
மக்களோட அறியாமைய பயன்படுத்தி உதயகுமார் போன்ற ஆட்கள் செய்யற வேலை..
போராட்டம் ஆரம்பித்த வுடன் பைபர் போட் ல தப்பிச்சு போனது யாரு அண்ணா.
சித்திகளில் பார்க்கும்போதே தெளிவாக தெரிகிறது....அங்கு வந்த யாரும் அற வழியில் போராட வந்தவர்கள் என்று,,
இதுவும் கடந்து போகும்..சரித்திரம் என்ன சொல்லும் தெரியுமா உதயகுமாரி பற்றி?

Mattai Oorukai said...

திருமங்கலத்தில் காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட மக்களும் நம்ம தமிழகத்தை சேர்ந்தவங்க தான்...
நீங்க நல்லவரு...மனச பாதிச்ச விஷயத்தை பத்தி எழுதிரிங்க...
இந்த உலகத்துல...நல்லவங்க, கெட்டவங்க...அதிகாரம் மற்றும் பேச்சால் மயங்கி போறவங்க ரொம்ப பேர் அண்ணா...
தப்பா எடுத்துக்காதிங்க...
இது ஒரு நாடகம்....உதயகுமார் என்ற தனி மனிதன் பணம் சேர்பதற்காக,,,மக்களை தூண்டி விடும் நாடகம்.
என்ன தான் இருந்தாலும்...மஞ்ச துண்டுகாரர் பயபடுவார், ஆத்தாகிட்ட நடக்காது அண்ணா...

உண்மைத்தமிழன் said...

[[[Kalee J said...

arumaiyana pathivu.]]]

மிக்க நன்றிகள் நண்பரே.. இதையும் கொஞ்சம் பரப்புரை செய்தீர்களேயானால் இன்னமும் சந்தோஷப்படுவேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, உங்கள் கருத்து உண்மையானதே, ஆனால் நடைமுறையில் சரியாக அமையுமா?
இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை, ஜப்பான் அணு உலை விபத்துக்கு பின்தான் விழிப்புணர்வு வந்தது போராடுகிறோம் என்றால், அரசு எப்படி உடனே தலையாட்டும். அதற்கும் ஈகோ உள்ளதே? இவ்வளவு செலவு செய்தாச்சு.. இனிமே முடியாது என்றுதானே சொல்வார்கள்.]]]

அந்தப் பகுதி மக்களின் உயிரைவிடவும் செய்த செலவுகள் பெரிதானதா..? இப்போது ஒருவேளை விஷ வாயு கசிவு நடந்தால் அப்போதும் ஆலையை நடத்திவிடுவார்களா..? மூடத்தானே வேண்டும்.. பலிக்கு முன்பாகவே மூடி விடலாமே..?

[[[நீங்களே கல்பாக்கம் பற்றியும் சொல்கிறீர்கள், அப்படியானால் முன்னரே ஒரு அணு உலை இருப்பது, கூடங்குளம் உதயகுமாருக்கு தெரியும்தானே... அப்போவே கட்ட வேண்டாம் என சொல்லி எதிர்ப்பு காட்டியிருக்கலாம். மேலும் இதே மக்கள்தான் மஞ்ச்த் துண்டு காலத்தில் போராட்டத்திற்கு விடுமுறை விட்டு வாக்களிக்க போனார்கள், அப்போது ஒரு உறுதி மொழி கிடைக்கும்வரை வாக்களிக்க மாட்டோம் என சொல்லி இருந்தால் ஏதேனும் பலன் கிடைத்து இருக்கும், ஏன் செய்யவில்லை.]]]

அப்போது வாக்குறுதி அளித்தவர்கள் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்.. போராட்டத்தின் ஒவ்வொரு படியிலும் அந்த மக்கள் அரசுகளை நம்பினார்கள்.. மஞ்சத் துண்டு கடைசியாய் கை விரித்திருப்பது இப்போதுதான்..!

[[[2011-ல் எழுதிய எனது கட்டுரையில் டெல்லியுடன் இணக்கமான சூழல் உருவாகிவிட்டால் அம்மையார் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் என சொன்னது இன்று நடந்து கொண்டுள்ளது. அணு உலை வேண்டாம் என்பது எனது கருத்தும். ஆனால் வேண்டாம் என்பதை முன்னரே சொல்லாமல் காலம் கடந்து சொன்னால் ஆட்சியாளர்கள் கேட்கமாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. மேலும் 20 ஆண்டுகளாக, மஞ்சத்துண்டு, அம்மையார் என இருவர் ஆட்சியும் மாறீ, மாறி வந்துள்ளது அப்போதும் அணு உலை வேலை நடந்தே வந்தது. எனவே ஆட்சியாளர்கள் என்ற நிலையில் அணு உலைக்கு எதிராக இரு பெரும் கட்சியின் தலைமையும் பேசாது.
மத்திய, மாநில அரசு மற்றும் எந்த தனியார் திட்டமாக இருந்தாலும் உள்ளூராட்சி அமைப்பின் சபையில் ஒரு பொது தீர்மானம் இயற்றி அவர்கள் முடிவை கலெக்டருக்கு அனுப்பினால்தான் அங்கு திட்டமே வரும். 20 ஆண்டுகளுக்கு முன் இதே இடிந்தகரை ஊராட்சி அமைப்பு யாருக்கும் தெரியாமலா வேண்டும் என தீர்மானம் இயற்றியது, மேலும் நில ஆர்ஜிதம் எல்லாம் அணு உலைக்கு என தெரிந்தே எடுக்கப்பட்டது, எல்லாம் தெரிந்தும் பார்த்து கொண்டுதான் மக்கள் இருந்துள்ளார்கள். எனவே யாருக்கும் தெரியாமல், மக்களுக்கு சொல்லாமல் அணு உலைக் கட்டிட்டாங்க என நீங்க சொல்வது எப்படி?]]]

25 ஆண்டுகளுக்கு முன்பாக இது பற்றிய விழிப்புணர்வு யாருக்கு இருந்தது..? இவர்களைப் போன்ற அடித்தட்டு மக்களுக்கு அணு உலையின் பாதிப்புகளை யார் எடுத்துச் சொல்லியிருப்பார்கள்..? அத்தோடு அந்த ஊரில் அணு உலை வேண்டும் என்று இவர்களே கேட்டுத்தான் மத்திய அரசு கொண்டு வரவில்லை.. அவர்களாகவே இடத்தைத் தேர்வு செய்து அமைத்திருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[peter fernandes said...

இன்னாபா நீ பச்சை கொளந்தக் கணக்காக் கீறியே. நைனா இந்த ஒத்யகுமாறு கீறாரே அவுற இன்னாமோ நீ மவுத்தான காந்தி ரேஞ்சுக்கு தூக்குரியேப்பா. மீனவன்றது மெஜாரிட்டி ஏசப்பாவக் கும்பிடுற ஆளுங்க. இப்போ அவங்களுக்கு இன்னான்னா அவங்களுக்கு வேண்டாம்னு நெனைக்கறத உள்ளார உடக் கூடாதுன்னு அவிங்களுக்கு ஒரு எய்ம். சர்ச்சுல மணி அடிச்சாக் கூட்டம் கூடுதா. டாலர்ல அமௌண்டு வருதா. பாதரு சொன்னா எல்லாரும் பிள்ள குட்டிங்கள தூக்கிகினு வாராங்களா. நாம என்ன வேணா செஞ்சிரலாம்னு ஒரு கெலிப்பு அவிங்களுக்கு. அனு ஒலைன்ன்றதேல்லாம் சொம்மா ஒரு இதுதான். இதேக் கண்டி வேற சாமி கும்பிடறா ஆளுங்களா இருந்தா என்னிக்கோ கைமா பண்ணி இருப்பாங்கோ நீ சொல்ற ஆத்தாவும் தாத்தாவும். ஓட்டுக்கு பயந்துகினு இத்தினி நாளு ஒத்யகுமார வளத்து விட்டா ஆத்தா. இத்தினி நாயம் பேசுறியே. தடை உத்தரவு போட்டிருந்தும் பொம்பளைங்களையும் தூங்கற கொழந்தைகளையும் கூட்டிகிட்டு எவனாவது முற்றுகைப் போராட்டம்னு சண்டைக்குப் போவானா. நா ஆரம்பத்திலேர்ந்தே பாக்குறேன் ஒத்யகுமாருக்கு நாக்கிலே சனி. அல்லாப் பெரையும் இளுத்துவிட்டு என் மேல கை வைங்கடா பாக்கலாம்னே பேசுறான் இந்த ஆளு.]]]

உங்களுடைய புரிதலுக்கு எனது நன்றி நண்பரே..! தடையை மீறிய போராட்டம்தான் உண்மையான போராட்டம். அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்றால் என்னவென்று தெரிந்த பின்பு இனிமேல் எழுதுங்களேன்..!

[[[எல்லாம் சரி நைனா.. நீ பாட்டுக்கு மன்னாரு, முகமூடின்னு சோக்காலியா சுத்திட்டிருந்தே. திடீர்னு ஊடு மாறி வந்திட்டியே. பரவால்லே போ. இந்தா மாதிரி நெறையா எழுதுப்பா. ஆனா ஒன்னு கூட்டமா சேர்ந்தாலே அது நாயத்துக்குத்தான்னு நினைச்சிக்காதே. நாங்கதான் பருப்புன்னு நம்மள மெரடனும்னு கூட இருக்கலாம்.]]]

அவரவர்க்கு உயிர் பயம் இருக்கிறது.. நீங்க நல்லாயிருக்கணும்னு நினைக்கிற மாதிரிதான் அவங்களும் நினைக்குறாங்க. இதுல ஒண்ணும் தப்பில்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

மக்களின் போராட்டம் நியாயமானதாக இருக்கலாம்! ஆனால் உதயகுமாரை பற்றி வரும் செய்திகள் சரியாக இல்லை! இந்த போராட்டம் ஆரம்ப காலத்திலேயே தொடங்கி இருக்க வேண்டும். இப்போது முழு பாதுகாப்புடன் யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு அணு உலை செயல்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் இந்த தமிழக அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் போக்கு நீங்கள் சொல்வது மாதிரி சரியில்லைதான்! நன்றி!]]]

அணு உலையின் செயல்பாடு என்றைக்கோ ஆபத்தில்தான் முடியப் போகிறது. அதனால்தான் இப்போது முடித்து வைக்கப் போராடுகிறார்கள் மக்கள்..! உதயகுமார் பற்றிய பல பொய்யான செய்திகளை பரப்புவது மத்திய உளவுத்துறைதான்..! இதுதான் இந்திய அரசியல்..!

உண்மைத்தமிழன் said...

[[[senthil said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்!
ஆத்தாவும், மஞ்சத்துண்டு மைனரும் செத்தாதான் தமிழனுக்கும் தமிழுக்கும் நல்ல காலம் வரும். இவையிரண்டும் தமிழ் நாட்டைப் பிடித்த சனியன்கள்!]]]

:))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[Thennavan said...

\\வவ்வால் said...

இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை, //

80களில் இத்திட்டம் தொடங்கியபோதே அப்பகுதியினர் போராட தொடங்கி விட்டனர். திரு.அன்டன் கோமஸ் தொடங்கி திரு.அப்பவு (Ex MLA) (அப்போது (தமிழ் மாநில) காங்கரசில் இருந்தவர் தற்போது தி.மு.க.வில் இருப்பவர்) என போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புகுஷிமா விபத்திற்கு பிறகு இப்போது சுப . உதயகுமார் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.]]]

தகவலுக்கு நன்றி தென்னவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Mattai Oorukai said...

அண்ணே.. இந்த பதிவு ஒருதலைபட்சமாதான் இருக்கு. இப்போதான் ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன். நீங்கதான் நடுநிலையா எழுதிரிங்கன்னு. சொல்லி ஒரு மணி நேரம்கூட ஆகல அதுக்குள்ளே இப்படியா அண்ணா?]]]

ஹா.. ஹா.. எனக்கும் காமெடியாத்தான் இருக்கு.. ஒரு சில பிரச்சினைகளில் ஒரு சிலரின் கருத்துக்கள் முற்றாக நமக்குப் பிடிக்காமல் போகும்.. அதில் இதுவும் ஒண்ணுன்னு நினைச்சுக்குங்க..! பட்.. இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து எப்போதும் இதுதான்..!

[[[மக்களோட அறியாமையைப் பயன்படுத்தி உதயகுமார் போன்ற ஆட்கள் செய்யற வேலை. போராட்டம் ஆரம்பித்தவுடன் பைபர் போட்ல தப்பிச்சு போனது யாரு அண்ணா. சித்திகளில் பார்க்கும்போதே தெளிவாக தெரிகிறது. அங்கு வந்த யாரும் அற வழியில் போராட வந்தவர்கள் என்று,
இதுவும் கடந்து போகும். சரித்திரம் என்ன சொல்லும் தெரியுமா உதயகுமாரி பற்றி?]]]

தம்பீ.. இதுவும் கிளப்பிவிடப்பட்ட செய்திதான்.. உதயகுமார் அங்குதான் இருந்தார்.. இருக்கிறார்.. போராட்டத்தை நடத்த வேண்டியவர்கள் சிறைக்குள் போய்விட்டால் எப்படி அதனை தொடர்ந்து நடத்துவது..? அத்தோடு அவரது உயிருக்கும் ஆபத்தான சூழல் இப்போது நிலவுகிறது.. ஆகவே அவர் மீடியாக்களுக்கு மட்டும் தென்பட்டு பேட்டிகளை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.. பைபர் படகில் தப்பித்துப் போனார் என்று சொன்னதெல்லாம் புரூடா..!

உண்மைத்தமிழன் said...

[[[Mattai Oorukai said...
திருமங்கலத்தில் காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட மக்களும் நம்ம தமிழகத்தை சேர்ந்தவங்கதான். நீங்க நல்லவரு. மனச பாதிச்ச விஷயத்தை பத்தி எழுதிரிங்க. இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்க அதிகாரம் மற்றும் பேச்சால் மயங்கி போறவங்க ரொம்ப பேர் அண்ணா. தப்பா எடுத்துக்காதிங்க. இது ஒரு நாடகம். உதயகுமார் என்ற தனி மனிதன் பணம் சேர்பதற்காக மக்களை தூண்டி விடும் நாடகம். என்னதான் இருந்தாலும் மஞ்சதுண்டுகாரர் பயபடுவார், ஆத்தாகிட்ட நடக்காது அண்ணா.]]]

உங்களுடைய தவறான புரிதலுக்கு வருத்தப்படுறேன் தம்பீ.. விரைவில் உங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..!

பட்டிகாட்டான் Jey said...

அண்ணே ...
உதயகுமாரோட போராட்ட உள்நோக்கம் சந்தேகத்துக்கு உரியதுன்றது என் கருத்து.

நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்து அதனோட தீர்ப்பு வந்தும், போராடுனா அரசு என்ன நடவடிக்கை எடுக்கனும்னு நினக்கிறீங்க?.
(காவிரி தீர்ப்பு நிறைவேத்துனாங்களானு கேட்ராதீங்கண்ணே)

அரசியல்வாதிகள் சுயநலம்/ அதிகாரிகளோட அலட்சியம்னு ஒரு பக்கம் விபத்துகள் தொடர்ந்துகிட்டு இருக்கிரது கவலையளித்தாலும்.

இதைப் பற்றி அதிகம் தெரிந்த டெக்னிகல் மனிதர்கள், இந்த உலைனால ஆபத்து இல்லைனு சொல்ரதையும் கொஞ்சம் கேக்க வேண்டியதாதானே இருக்கு. அவங்க எல்லாம் அணுவுலைல தானே வேலை செய்யப்போறாங்க.

இந்த விசயத்தப் பத்தி பேசுனாலே ஏதோ மக்கள் விரோத சக்தி, மனுசங்களோட உசுரப்பத்தி கவலைப்படாதவங்க, நீ போய் அங்க குடியிருக்கியா? இந்த மாதிரியெல்லாம் கேட்டு எமோசனாலாகுராங்க.

அங்கிருக்கிர மக்கள் ஒன்னும் தெரியாதவங்கனு சொல்லலை ஆனா ஒரு கும்பலோட சுயனல போராட்டதுக்கு இவங்க ஊறுகாய் ஆகிருக்காங்க...

(இந்த கமெண்டுக்கே எததனை பேர் என்னை திட்டபோராங்களோ தெரியலை... :-( )

வாலிபள் said...

இதே அணுஉலையை கேரளாவிலும், கர்நாடகாவிலும், குஜராத்திலும் அமைக்க ராஜீவ் அரசு முனைந்த போது, ஆண்மையுள்ள அப்பகுதி அரசியல்வாதிகள் கூடவே கூடாது என கடிவாளம் போட்டார்கள். தமிழ்நாடுதான் இளிச்சவாயர்கள் இருக்கும் மாநிலமாயிற்றே. இங்கு அணு உலை அமைக்கப்பட்டது.

Alex said...

arumaiana pathivu..

வவ்வால் said...

அண்ணாச்சி,

//அத்தோடு அந்த ஊரில் அணு உலை வேண்டும் என்று இவர்களே கேட்டுத்தான் மத்திய அரசு கொண்டு வரவில்லை.. அவர்களாகவே இடத்தைத் தேர்வு செய்து அமைத்திருக்கிறார்கள்..!
//

மக்கள் கேட்டு வந்தது என்று சொல்லவில்லை, அரசு இடம் தேர்வு செய்த பின் உள்ளூராட்சி அமைப்பில் ஒப்புதல் தீர்மானம் கேட்பார்கள், மேலும் மக்களுக்கும் தெரிவிக்கப்படும், நீங்கள் அவர்களுக்கு சொல்லாமல் வந்து கட்டிவிட்டார்கள் என்ப்தால் சொன்னேன்.

கூடங்குளம் அணு உலைக்கு முன்னர் கல்பாக்கத்திலும் கட்டியுள்ளார்கள், அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, அப்படி இருக்கும் போது அப்போது கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை வருவதை எதிர்த்து இருக்கலாம், அப்போதே கேரளாவில் எதிர்த்து அங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது தானே இத்திட்டம்.

அந்த அளவுக்கா மக்கள் எதனையும் அறியாமல் இருந்தார்கள். உண்மையில் அப்போது கூடங்குளம் அணு உலை வருவதால் அப்பகுதி முன்னேறும் என்றே மக்கள் இருந்தார்கள்.


இப்போது கூடங்குளம் திட்டத்தால் அப்பகுதியில் நிலம் விலை ஏறியுள்ளது. வள்ளியூர் பகுதியில் எல்லாம் இதனை சொல்லியே நிலம் விலை ஏற்றியுள்ளார்கள்.

மேலும் அணு உலை வெடித்தால் மாவட்டம் முழுவதுமே அபாயம் தானே ஆனால் இடிந்த கரை மக்கள் மட்டுமே போராட்டம் என ஈடுபடுகிறார்கள், உண்மையில் மாவட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட வேண்டாமா?

நிறைய மக்கள் , பரவலாக போராட்டம் என நடந்தால் உதய குமாரின் முக்கியத்துவம் குறையும் என அவரே நினைக்கிறார் போல.

சாதரணமாக குடிநீர் வரவில்லை, பட்டா கொடுக்கவில்லை என்பதற்கு எல்லாம் தமிழ்நாட்டில் தேர்தல் புறக்கணிப்பு என போராடியுள்ளார்கள், ஆனால் இவர்களோ போராட்டத்திற்கு லீவ் விட்டு ஓட்டுப்போட போனார்கள்.

அரசியல்கட்சிகளுக்கு தேர்தலின் போது மிரட்டினால் பொறுப்பு வரும், முடிந்துவிட்டால் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது ஏனோ போராட்டக்காரர்களுக்கு புரியமால் போனது ஏன்(இது ஒரு வரலாற்றில் இடம் பிடிக்கும் போராட்டமாக இருக்க வேண்டும், நல்ல முடிவுப்பற்றி கவலையில்லை என நினைத்திருக்கலாம்)

--------

தென்னவன்,

//80களில் இத்திட்டம் தொடங்கியபோதே அப்பகுதியினர் போராட தொடங்கி விட்டனர் . திரு . அன்டன் கோமஸ் தொடங்கி திரு . அப்பவு ( Ex MLA ) (அப்போது (தமிழ் மாநில) காங்கரசில் இருந்தவர் தற்போது தி மு க வில் இருப்பவர்) என போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .புகுஷிமா விபத்திற்கு பிறகு இப்போது சுப . உதயகுமார் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.//

அப்போது நடந்தது ஒரு வழக்கமான அடையாள எதிர்ப்பாக தான் இருந்திருக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலை போடும் போது கூட ஆங்காங்கே மக்கள் சில கோரிக்கைகளை வைத்து எதிர்ப்பு காடுவது போல.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் அப்பொது இல்லை. ராஜிவ் காந்தி கொண்டு வந்த திட்டமிது ,அப்பாவு எப்படி எதிர்த்திருப்பார் என தெரியவில்லை.

பேருக்கு கருப்பு கொடி காட்டுவதான ஒரு போராட்டத்தினை நடந்தது என கணக்கு காட்ட மட்டுமே சொல்லிக்கொள்ளலாம்.

இப்போதும் ஒரு ஊர் மக்கள் என்ற அளவில் தான் இப்போராட்டம் கொண்டுப்போகப்படுகிரது குறைந்த பட்சம் மாவட்டமே ஒன்று திறண்டு எதிர்க்க வேண்டும்.மத்திய ,மாநில அரசுகள் என்ன உள்ளூர் பஞ்சாயத்தா?

உதயகுமார் தனது முக்கியத்துவம் குறைந்துவிடாமல் போராட்டம் நடத்த வேண்டும் என நினைப்பது நன்கு தெரிகிறது.

மேலும் பல இயற்கை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு வருவார்கள் என முன்னர் சொல்லப்பட்டு பின்னர் அவர்கள் எல்லாம் வரவில்லை, காரணம் உதயகுமாராகவே இருக்கலாம்.

அணு சக்தி எதிர்ப்பு என்பது உள்ளூர் பிரச்சினை அல்ல தேசிய,உலக பிரச்சினை அனைவராலும் ஒன்று கூடி எதிர்க்க வேண்டிய ஒன்று. ஆனால் மற்றவர்கள் கலந்துக்கொள்ளவிடாமல் அல்லது முன்னிறுத்தாமல் போராட நினைத்தால் எப்படி வெற்றிக்கிடைக்கும்?

Vedha said...

ஐயா,

தங்களின் வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து வருபவன் நான். பின்னூட்டம் இடுவது இதுவே முதல் முறை. அணு சக்தியின் அடிப்படை தெரிந்த எவரும் அணு உலைகளை ஆதரிப்பது எளிதல்ல. இதற்கு மேதையாக இருக்க வேண்டியதல்ல. அணு சக்தி தொடர்பான எந்த முயற்சியிலும்(அணுமின் உருவாக்கம் உட்பட) கதிரியக்கமும், அணு கழிவும் கட்டாயம் உண்டு. ஒரு உயர்நிலை பள்ளி மாணவன் கூட இதை அறிவான். கதிரியக்கத்தில் பாதுகப்பான அளவு என்பது எதுவும் அல்ல என்பது தான் அறிவியல் உண்மை. அணு மின் நிலையம் சுற்றிலும் எற்படும் கதிரியக்கம் பாதுகாப்பான அளவில் உள்ளது என மேதைகள் கூறினாலும் உணமை எதுவென்றால் மித அளவு கதிரியக்கமாக இருப்பினும் மனித உடல் அதை தொடர்ச்சியாக எதிர்க்கொண்டால் அது ஆபத்து தான். அணு கழிவுகலை இயற்கைக்கு ஊறு செய்யாது அழிக்கும் முறை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. அவை அழியும் வரை பாதுகப்பாக வைப்பதற்கும் சரியான முறைகள் எங்கும் இல்லை. இதுவே உண்மை. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் மட்டும் இயங்கும் அணு மின் நிலையதின் அணு கழிவுகலை அழிக்க ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகும். மற்ற மாநிலங்கள் புறக்கணித்த இத்திட்டம் நம் தமிழர்களின் அசட்டையாலும் மற்றும் மக்களை பற்றி கவலைபடாத பதவி பேராசை கொண்ட தமிழ் அரசியல்வாதிகளினாலும் எற்பட்ட சாபம்.

சீனு said...

y உயிர் தியாகமா? போராட்டத்துக்கு குழந்தையை கொண்டு வந்தது யார்? குழந்தை போராட வேண்டிய அவசியம் என்ன? குழந்தைக்கு தெரியுமா போராட்டம் பற்றி? இது பச்சை படுகொலை. பெற்றோர், போராட்டக்காரர்கள், போலீஸ் - மூவரும் செய்த கொலை. நாசமாப்போவீங்க...

இல்லை. காவல்துறையினர் தான் மிதித்து கொன்றனர் என்கிறீர்களா?

பச்சை பிள்ளையை வைத்துமா உங்கள் அரசியல்?

இதுல 'வீர வணக்கம்'னு உசுப்பேத்துறீங்க. உங்க குழந்தையை இது போன்ற போராட்டங்களுக்கு கொண்டு வருவீங்களா?

https://www.facebook.com/photo.php?fbid=349223655168952&set=a.133365293421457.29961.100002439616976&type=1

கும்மாச்சி said...

அண்ணே இந்த போராட்டத்தை அரசியவியாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இரு பக்கமும் கொம்பு சீவி விடுகிறார்கள். ஆத்தா உங்களில் ஒருத்தி என்று சொல்லிவிட்டு அப்பட்டமாக நிலை மாறியிருக்கிறார்கள். மஞ்சத்துண்டு பற்றி சொல்லவே வேண்டாம் அவருக்கு தன் குடும்பம்தான் முக்கியம்.

ஆனால் நடை முறையில் இந்த அணுஉலை தொடங்கப்படுவது தவிர்க்க முடியாததே. அதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் சேதமாகப் போகிறதோ தெரியவில்லை. அரசு சுமுக நிலை கொண்டும் வரை அங்கு தொடக்க வேலைகளை நிறுத்தி வைப்பதே நல்லது.


ரெவெரி said...

குலைக்கும் இந்த சோம்பேறிகள் காந்தி இன்று இந்த போராட்டம் நடத்தி இருந்தாலும் கால் மேல் கால் போட்டு குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்...

உங்கள் இந்த பதிவை என் வலையில் இணைப்பாய் கொடுக்கிறேன்...நன்றி...

பலசரக்கு said...

ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா? மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் "மா"க்களுக்கு?

உண்மைத்தமிழன் said...

பட்டிக்காட்டான் தம்பி..!

உதயகுமாரின் தலைமையில் ஒரு தரப்பு மக்கள் போராடுகிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள்.. தனிப்பட்ட உதயகுமாருக்கு இதனால் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[வாலிபள் said...

இதே அணு உலையை கேரளாவிலும், கர்நாடகாவிலும், குஜராத்திலும் அமைக்க ராஜீவ் அரசு முனைந்த போது, ஆண்மையுள்ள அப்பகுதி அரசியல்வாதிகள் கூடவே கூடாது என கடிவாளம் போட்டார்கள். தமிழ்நாடுதான் இளிச்சவாயர்கள் இருக்கும் மாநிலமாயிற்றே. இங்கு அணு உலை அமைக்கப்பட்டது.]]]

இது இங்கே படிப்பறிவுள்ள பலருடைய கண்களுக்கும் படாதது யாருடைய தவறு நண்பரே..? நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Alex said...

arumaiana pathivu..]]]

மிக்க நன்றி அலெக்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[அண்ணாச்சி,

//அத்தோடு அந்த ஊரில் அணு உலை வேண்டும் என்று இவர்களே கேட்டுத்தான் மத்திய அரசு கொண்டு வரவில்லை.. அவர்களாகவே இடத்தைத் தேர்வு செய்து அமைத்திருக்கிறார்கள்..!//

மக்கள் கேட்டு வந்தது என்று சொல்லவில்லை, அரசு இடம் தேர்வு செய்த பின் உள்ளூராட்சி அமைப்பில் ஒப்புதல் தீர்மானம் கேட்பார்கள், மேலும் மக்களுக்கும் தெரிவிக்கப்படும், நீங்கள் அவர்களுக்கு சொல்லாமல் வந்து கட்டிவிட்டார்கள் என்ப்தால் சொன்னேன். கூடங்குளம் அணு உலைக்கு முன்னர் கல்பாக்கத்திலும் கட்டியுள்ளார்கள், அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, அப்படி இருக்கும்போது அப்போது கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை வருவதை எதிர்த்து இருக்கலாம், அப்போதே கேரளாவில் எதிர்த்து அங்கிருந்து இங்கு கொண்டு வரப்பட்டதுதானே இத்திட்டம்.]]]

நீங்களே சொல்கிறீர்கள்.. கேரளாவில் இடம் மறுக்கப்பட்டு தமிழகத்திற்குள் நுழைந்தது என்று.. கேரளாவில் மறுக்கப்பட்டதன் காரணம் தெரியுமல்லவா..? அதே காரணம் நமது மக்களுக்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.. தவறுகளை எந்த இடத்தில் களையச் சொன்னாலும் தப்பில்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[Vedha said...

ஐயா, தங்களின் வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து வருபவன் நான். பின்னூட்டம் இடுவது இதுவே முதல் முறை. அணு சக்தியின் அடிப்படை தெரிந்த எவரும் அணு உலைகளை ஆதரிப்பது எளிதல்ல. இதற்கு மேதையாக இருக்க வேண்டியதல்ல. அணு சக்தி தொடர்பான எந்த முயற்சியிலும் (அணுமின் உருவாக்கம் உட்பட) கதிரியக்கமும், அணு கழிவும் கட்டாயம் உண்டு. ஒரு உயர்நிலை பள்ளி மாணவன்கூட இதை அறிவான். கதிரியக்கத்தில் பாதுகப்பான அளவு என்பது எதுவும் அல்ல என்பதுதான் அறிவியல் உண்மை. அணு மின் நிலையம் சுற்றிலும் எற்படும் கதிரியக்கம் பாதுகாப்பான அளவில் உள்ளது என மேதைகள் கூறினாலும் உணமை எதுவென்றால் மித அளவு கதிரியக்கமாக இருப்பினும் மனித உடல் அதை தொடர்ச்சியாக எதிர்க்கொண்டால் அது ஆபத்துதான். அணு கழிவுகலை இயற்கைக்கு ஊறு செய்யாது அழிக்கும் முறை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. அவை அழியும்வரை பாதுகப்பாக வைப்பதற்கும் சரியான முறைகள் எங்கும் இல்லை. இதுவே உண்மை. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் மட்டும் இயங்கும் அணு மின் நிலையதின் அணு கழிவுகலை அழிக்க ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகும். மற்ற மாநிலங்கள் புறக்கணித்த இத்திட்டம் நம் தமிழர்களின் அசட்டையாலும் மற்றும் மக்களை பற்றி கவலைபடாத பதவி பேராசை கொண்ட தமிழ் அரசியல்வாதிகளினாலும் எற்பட்ட சாபம்.]]]

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. மிக்க நன்றி..! உங்களைப் போன்ற புரிதல் உள்ள தோழர்கள் இதனை மென்மேலும் இணையத்தில் எடுத்துச் சொல்வது நலம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

உயிர் தியாகமா? போராட்டத்துக்கு குழந்தையை கொண்டு வந்தது யார்? குழந்தை போராட வேண்டிய அவசியம் என்ன? குழந்தைக்கு தெரியுமா போராட்டம் பற்றி? இது பச்சை படுகொலை. பெற்றோர், போராட்டக்காரர்கள், போலீஸ் - மூவரும் செய்த கொலை. நாசமாப் போவீங்க. இல்லை. காவல்துறையினர்தான் மிதித்து கொன்றனர் என்கிறீர்களா?
பச்சை பிள்ளையை வைத்துமா உங்கள் அரசியல்? இதுல 'வீர வணக்கம்'னு உசுப்பேத்துறீங்க. உங்க குழந்தையை இது போன்ற போராட்டங்களுக்கு கொண்டு வருவீங்களா?]]]

நிச்சயம் கொண்டு வருவேன்.. என் வீட்டிற்கே கேடு எனில் நான் குடும்பத்தோடு தெருவுக்கு வந்தே தீருவேன்.. நீங்கள் வருவீர்களா நண்பரே..?

உண்மைத்தமிழன் said...

[[[கும்மாச்சி said...

அண்ணே இந்த போராட்டத்தை அரசியவியாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இரு பக்கமும் கொம்பு சீவி விடுகிறார்கள். ஆத்தா உங்களில் ஒருத்தி என்று சொல்லிவிட்டு அப்பட்டமாக நிலை மாறியிருக்கிறார்கள். மஞ்சத் துண்டு பற்றி சொல்லவே வேண்டாம் அவருக்கு தன் குடும்பம்தான் முக்கியம். ஆனால் நடை முறையில் இந்த அணு உலை தொடங்கப்படுவது தவிர்க்க முடியாததே. அதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் சேதமாகப் போகிறதோ தெரியவில்லை. அரசு சுமுக நிலை கொண்டும்வரை அங்கு தொடக்க வேலைகளை நிறுத்தி வைப்பதே நல்லது.]]]

இல்லை.. முற்றிலுமாக ஆலையை மூடிவிடுவதே அப்பகுதி மக்களுக்கு நல்லது..!

உண்மைத்தமிழன் said...

[[[ரெவெரி said...

குலைக்கும் இந்த சோம்பேறிகள் காந்தி இன்று இந்த போராட்டம் நடத்தி இருந்தாலும் கால் மேல் கால் போட்டு குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். உங்கள் இந்த பதிவை என் வலையில் இணைப்பாய் கொடுக்கிறேன். நன்றி.]]]

மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[பலசரக்கு said...

ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா? மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் "மா"க்களுக்கு?]]]

நிச்சயமாகத் தெரியாது.. ஓட்டுப் போட்ட மக்களுக்கும் புரியாது.. எத்தனை அடி வாங்கினாலும் திருந்தாத ஜென்மங்களாக அல்லவா இருக்கிறார்கள்..?

devadass snr said...

தங்களது பதிவுகளை எனது தெயிலுக்கு அனுப்பித்தர இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.com

வருண் said...

***இவரே அடித்து கொலை செய்ய போலீஸை அனுப்புவாரம்.. யாராவது செத்து போனால் உடனேயே நம்முடைய பணத்தில் இருந்து 5 லட்சம் கொடுப்பாராம்.. இவரை யாராவது கொலை செய்துவிட்டு, இவருக்கே 5 லட்சம் கொடுத்தால் ஒருவேளை நரகத்தில் இருந்தபடியே ஏற்றுக் கொள்வாரோ..?**

அண்ணா! அவரு சொர்க்கத்துக்கு போறதா சொல்லிகிறா! பணத்தை சரியான அட்ரெஸ்க்கு அனுப்புங்கோ! :-)))

Jayaprakash Naryanan said...

அருமையான பதிவு. உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையுடன் என் முகநூலில் இதை லிங்க் கொடுக்கிறேன்.

nigdyn said...

Well written!!!This article is almost reflecting my view on this issue!!!!!

சூனிய விகடன் said...

எனது தாழ்மையான கருத்து ஒன்று ; போராடும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும் போது அவன் கழுத்தில் துண்டைப்போட்டு " நீ இந்த அணு உலைத்திட்டத்தை உடனே ரத்து பண்றியா...அதுக்காக பாராளுமன்றத்தில் பேசுவியா...உடனே எழுதிக்கைஎழுத்துப்போட்டுக் கொடு..." என்று கேட்டிருப்பார்களானால் இன்று அவர்கள் தொகுதி எம்.பி அவர்கள் சார்பில் அணு உலைக்கு எதிராகப் பேசுவார் என எதிர்ப்பார்க்கலாம் ...போயி மன்னுமொஹனிடம் சொல் என்று ஆர்ப்பாட்டம் செய்யலாம். பேசவில்லையானால் சாணியக் கரைச்சு ஊத்தலாம். ஆனால் அப்போது இவர்கள் ஓட்டு போடும் போது பா. ஜ.க ஒரு மதவாத பேயாடும் கொடிய கட்சி..அந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துத்வா தலயில விக் வச்சுகிட்டு ஆடும் என்று பிரார்த்தனைக்கூட்டங்களில் கூட்டாக எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்பட்டு உலகிலேயே சிறந்த மதச் சார்பற்ற கட்சியான காங்கிரசுக்கு ஓட்டு போட்டார்கள். உலகமக்களின் தாயான சோனியாவுக்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரசுக்கு ஓட்டு போடும் போது அணு உலை ஞாபகம் வரவில்லை.. அதை ஒரு இஷ்யூ ஆக்கணும் என்று தோன்றவில்லை. பா.ஜ.க காரன்தான் கண்ணுக்கு தெரிந்தான் .இப்போது அதே மதச் சார்பற்ற உலக அன்னையின் காங்கிரஸ்காரன் அடிக்கிறான்...வாங்கித்தான் ஆகணும். எங்கு இஷ்யூ ஆக்கனுமோ அங்கு இவர்களுக்கு மதம் மட்டும் தான் கண்ணுக்குதெரிகிறது. மதரீதியாக மட்டுமே யோசித்து ஓட்டு போட்டு விட்டு இப்போது சர்ச்சு பந்தலுக்கு கீழ் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பதற்கு பெயர் போராட்டமா... பா. ஜ. க வந்திருந்தால் அணு உலையை மூடி இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால் பாராளுமன்றம் போன்ற முக்கிய தேர்தலில்களில் இந்த மாதிரி முக்கிய இஷ்யூ அடிப்படையில் ஓட்டு போடாமல், மத ரீதியாகவோ..அல்லது வேறு அடிப்படையில் ஓட்டு போடுவது சரியா...? அதற்க்கு விளக்கம் கேட்டால் நண்பர் உதயகுமார் " அணு உலையை விட மதவாதம் ஆயிரம் மடங்கு ஆபத்தானது " என்று கூட சொல்லலாம். உங்களை மாதிரி அறிவுஜீவிகள் " உதயகுமார் சொல்வது குறைவு..லட்சம் மடங்கு ஆபத்தானது " என்று மேல் விளக்கம் அளிக்கலாம்.

nila said...

udayakumar is agent of church
america doesn't want to
nuclear powerplant desighned by russians. they want only their monopoly. hence pumping the money power and using the ignorent fishermans
for this agitation.central and state know the facts.

முருகன் said...

அண்ணே... உங்கள் அனுமதி இல்லாமல் முகநூலில் இணைத்திருக்கிறேன்.... மன்னிக்கவும்.

முருகன் said...


//============
வவ்வால் said...
அண்ணாச்சி,

உங்கள் கருத்து உண்மையானதே, ஆனால் நடைமுறையில் சரியாக அமையுமா?

இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை, ஜப்பான் அணு உலை விபத்துக்கு பின் தான் விழிப்புணர்வு வந்தது போராடுகிறோம் என்றால் ,அரசு எப்படி உடனே தலையாட்டும், அதற்கும் ஈகோ உள்ளதே, இவ்வளவு செலவு செய்தாச்சு, இனிமே முடியாது என்று தானே சொல்வார்கள்.
//===========

நண்பரே... நம் வீட்டு பெண்ணுக்கு மனம் பேசி முடிக்கிறோம். நல்லவன் என்று நினைத்துதான் முடிவெடுக்கிறோம். ஆனால் கலயாணத்திற்கு ஒரு நாள் முன்பு மணமகனுக்கு AIDS இருப்பது தெரியவந்தால், "நிறைய செலவு செய்துவிட்டோம்... கல்யாணம் நடக்கட்டும்" என்றா நினைப்போம்? மக்களாட்சிக்கு ஈகோ எதற்கு?

முருகன் said...

இதை விட அறப்போராட்டத்தை சிறப்பாக நடத்த முடியாது. பல லட்சம் கோடி ஊழல் செய்தவன் போலிஸ் பாதுகாப்போடு வெளியே உலவுகிறார்கள் நாடெங்கும்... அது தேசதுரோகமா அல்லது இதுவா? மின்சாரம் வேண்டும் எனக்கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் கூடங்குளத்திலிருந்துதான் வேண்டும் எனக்கேட்க எவருக்கும் உரிமையில்லை.

முருகன் said...

55 வருடம் 20 அணு உலைகள் மூலம் செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 2.7 சதவீதம் மட்டும் தானே ? இன்னும் எத்தனை வருடங்கள் கழிந்தால் எத்தனை அணு உலைகளை வைத்தால் நம் மின் உற்பத்தியில் பெரும்பான்மையை அணு உற்பத்திகள் செய்ய இயலும்?

இயக்க செலவை மட்டும் வைத்து கொண்டு அணு மின் உற்பத்தி மலிவானது என்று டமாரம் அடிப்பது என்ன நியாயம். நிர்மான செலவு எங்கே போனது? எங்கே 20 அணு உலைகளின் மொத்த நிர்மான செலவுகளையும் அரசு மக்களிடம் பட்டியலிட்டு காட்ட தயாரா?

பின்னர் எத்தனை வைத்து கொண்டு அணு மின் சக்தி இலாபம் தரும் என்ற பிம்பத்தை உருவாகுகிறார்கள் . என்ன இலாபத்தை தந்து இருக்கிறது . இந்திய கணக்குத் தணிக்கை முதன்மை அலுவலர் இதன் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்தார். அவர் தனது பரிசீலனையின் முடிவாக, “மார்ச் 1998 முடிய ரூ.5291.48 கோடிகளை செலவழித்து இந்தச் செயல் திட்டம் அளித்த கூடுதல் மின் உற்பத்தி பெரிய பூச்சியமே” என எழுதினார். 2009ம் ஆண்டு வரையிலும் கூட இந்த அணுமின்சக்தி இந்திய மொத்த மின் உற்பத்தியில் அதே 3% அளவுக்கே நீடிக்கிறது.

இவ்வளவு இலாபமே கொடுக்காத தொழிற்சாலையை வைத்து கொண்டு என்ன தான் செய்கிறீர்கள் ?? இவ்வளவு செலவு செய்ததற்கு பதிலாக மாற்று மின் சக்தி திட்ட ஆராய்ச்சியை எப்பவோ முடுக்கி விட்டு இருந்தால் எப்பவோ அதன் முடிவை அறிந்து அதை செயல் படுத்தியும் இருக்கலாமே . எவனோ வல்லரசு நாடுகள் துப்பி போட்ட தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு நாங்களும் வல்லரசு ஆக போகிறோம் என்று எத்தனை காலம் தம்பட்டம் அடிப்பீர்கள் ? தொழில்கள் செய்ய மின்சாரம் கண்டிப்பாக தேவை . வீட்டு மற்றும் தெரு உபயோகங்களுக்கு ஏன் புதுப்பிக்க தக்க மூலங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய வைத்து மின் தேவையை குறைக்கலாமே. மின் தேவைகளை குறைக்க , மின் இழப்புகளை குறைக்க இது வரை என்ன ஆராய்சிகள் செய்ய படுகிற??து. அது எந்த அளவிற்கு செய்யபடுகிறது? . இதை எல்லாம் செய்யாமல் அணு உலை வைத்தால் சரி ஆகி விடும் என்றால் நாளை மின் தேவை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு ஊரிலும் அணு உலைகளை அமைப்பீர்களா என்ன ? என்ன ஒரு அருமையான கட்டமைப்பு இங்கு . அரசுகளும் பன்னாட்டு நிறுவங்களின் மாய வலையில் மக்களை தெளிவாக விழ வைக்கின்றன . சூரிய ஒளி சக்தி ஒத்து வராது என்று மேற்கத்திய நாடுகள் சொன்னால் சரி . அவர்களின் தட்ப வெப்பம் அவ்வாறு உள்ளது. வருஷத்தில் 300 நாட்கள் வெப்பம் தாளாத அளவில் உள்ளோம் . அனால் இங்கு சாத்தியமில்லை என்று வாதிடுகிறோம் . சஹாரா பாலைவனத்தில் ஐரோப்பிய நாடுகள் செய்ய முடியும் .ஆனால் இது இங்கு சாத்தியமில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ??? இதை பற்றிய ஆராய்சிகளை மேற்கொண்டு இருந்தால் அதை வெற்றிகரமாக எப்பவோ இந்தியா முடித்து இருக்கும். வல்லரசு நாடுகள் நம்மிடம் பிச்சை கேட்டு நின்று கொண்டு இருந்து இருப்பார்கள். ஆனால் அவனிடம் பிச்சை வாங்கி கொண்டு எத்தனை வருடம் வல்லரசு வல்லரசு என்று கூவி கொண்டே இருப்பீர்கள் ?

மு.சரவணக்குமார் said...

1988ல் தான் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பும், ஒப்பந்தமும் வந்தது..எதன் அடிப்படையில் 1980ல் இருந்து போராட்டம் நடப்பதாக சொல்கிறீர்கள் என தெரியவில்லை.

1988ல் தூத்துக்குடி மாவட்டம் எத்தகைய பொருளாதார நிலையில் இருந்தது என உங்களுக்குத் தெரியுமா, ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் அடிப்படை கட்டமைப்புகள் வேண்டுமெனத் தெரியுமா உங்களுக்கு....வேலை வாய்ப்புத் துவங்கி உணவு உற்பத்தி வரை ஒவ்வொரு அங்குலத்திலும் மின்சாரத்தின் பங்கு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ.....தில்லியில் ஜனாதிபதி மாளிகையில் அணு உலை வைக்கச் சொல்லும் உங்கள் பொது அறிவு சிலிர்க்க வைக்கிறது.

பாதிப்போ அல்லது பக்க விளைவோ இல்லாத mass power generation முறை எதுவும் இருக்கிறதா என்ன...அசுர வளர்ச்சியும் வேணும், ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்பு செய்யும் போது குறுக்கே வந்து நிற்பீர்கள்...என்னய்யா உங்கள் நியாயம்.

அரசு என்பது எப்போதுமே மக்களுக்கு கெடுதல்தான் செய்யும் என்கிற அடிப்படை அறிவை எங்கிருந்து பெற்றீர்கள் எனத் தெரியவில்லை. அவநம்பிக்கை வாழ்க்கை இல்லை.

முருகன் said...

//அரசு என்பது எப்போதுமே மக்களுக்கு கெடுதல்தான் செய்யும் என்கிற அடிப்படை அறிவை எங்கிருந்து பெற்றீர்கள் எனத் தெரியவில்லை. அவநம்பிக்கை வாழ்க்கை இல்லை.//

நம்ம அரசையா நம்பச்சொல்றீங்க...? என்ன சார், ரொம்ப வெள்ளந்தியா இருப்பீங்க போல தெரியுதே....

இதே ஜெ, மக்களோடு இருப்பேன்னு அந்தப்பகுதியில போயி சொல்லிட்டு வந்தாங்க.. இப்ப எந்தப்பக்கம் நிக்கிறாங்க?

போபால்... ஒண்ணு போதாதா? லட்ச்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க, பத்திரமாக அதன் முதலாளியை விமானம் ஏற்றி அனுப்பி வைத்த அரசு ஐயா, நம்ம அரசு. இன்று வரை இழப்பீடு கொடுக்கவில்லை என்பது தெரியுமா?

இவர்களையா நம்பச்சொல்கிறீர்கள்?

//பாதிப்போ அல்லது பக்க விளைவோ இல்லாத mass power generation முறை எதுவும் இருக்கிறதா என்ன...அசுர வளர்ச்சியும் வேணும், ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்பு செய்யும் போது குறுக்கே வந்து நிற்பீர்கள்...என்னய்யா உங்கள் நியாயம்.//

எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத, ஏன் எந்த நாட்டிற்கும் கிடைக்காத நீண்ட கடற்கரையை உடையது நமது தமிழ்நாடு. கடற்கரை ஓரங்களில் எல்லாம் காற்றாலையை நிறுவி அதன் மூலம் மின்னுற்பத்தி செய்தால், எத்தனை எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு எந்த உயிர்பயமும் இல்லாமல், எவனது தயவும் இல்லாமல், நம்மால் வாழமுடியும்.. கரண்ட் இல்லை என்றால் வீட்டில் விளக்கு எரியாது, பேன் ஓடாது அவ்வளவுதானே. இதைக்காட்டிதானே மத்திய அரசு நம்மை சுரண்டிக்கொண்டு இருக்கிறது...

ஆனால் இதனை அரசு எதுவும் ஆதரிக்காது... பல்வேறு காரணங்கள் சொல்லி ஒதுக்கிவிடும். உண்மையான காரணங்கள்: ஒண்ணு: இதுல எல்லாம் பெரிய அளவில் கமிசன் அடிக்க முடியாது. ரெண்டு: கணக்கு வழக்கை நோண்டி எடுப்பாங்க. ஆனா, அணுசக்தியில அப்படி இல்ல. தேச பாதுகாப்புன்னு சொல்லி எல்லா விசயத்துக்கும் பூட்டு போட்டுக்கலாம்...

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

*இவரே அடித்து கொலை செய்ய போலீஸை அனுப்புவாரம்.. யாராவது செத்து போனால் உடனேயே நம்முடைய பணத்தில் இருந்து 5 லட்சம் கொடுப்பாராம்.. இவரை யாராவது கொலை செய்துவிட்டு, இவருக்கே 5 லட்சம் கொடுத்தால் ஒருவேளை நரகத்தில் இருந்தபடியே ஏற்றுக் கொள்வாரோ?*

அண்ணா! அவரு சொர்க்கத்துக்கு போறதா சொல்லிகிறா! பணத்தை சரியான அட்ரெஸ்க்கு அனுப்புங்கோ! :-)))]]]

சரியான அட்ரஸை கேட்டுச் சொல்லுங்கோ வருண்.. அனுப்பிருவோம்..!

மு.சரவணக்குமார் said...

காற்றாலை மின்சார உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது.நம்மிடையே நீர் மின்சாரம் தயாரிக்குமளவுக்கு நீராதாரம் இல்லை. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியின் வேகத்துக்கு அனல் மின் நிலையஙக்ளினாலும் தீனி போட இயலவில்லை. இப்போது ஆறேழு தனியார் அனல் மின் நிலையங்களுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பெருகி வரும் தேவைகளின் முன்னால் இப்போது கனிந்திருக்கும் வாய்ப்பு இந்த அணு மின் உலைதான்....

அங்கே நடந்தது, இங்கே நடந்தது என்பதற்காக எத்தனை தொழில்நுட்பங்களை நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள்.

வவ்வால் said...

முருகன்,

கல்யாணத்துக்கு 20 வருஷமாவா மாப்பிள்ளையை பேசி வச்சு உட்கார்ந்திருப்பிங்க.

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இல்லைன்னு சொல்றிங்க ,அப்புறம் எப்படி தேர்தல் அப்போ லீவு விட்டு போய் ஓட்டுப்போட்டிங்க?

போராடினால் அப்படியே தொடர்ந்து போராடணும். தேர்தலையும் புறக்கணிச்சு இருக்கணும் எல்லாம் தானா ஓடி வந்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பாங்க.

இப்போ கூட அப்போ அப்போ சதமே போடாமல் இருக்க வேண்டியது திடீர்னு முற்றுகை போராட்டம்னு ஆரம்பிக்க வேண்டியது, அப்பாவிகள் மட்டும் குண்டடி, தடியடி வாங்கி சாகணும் அப்புறம் கொஞ்ச நாள் சத்தமே இருக்காது? ஏன் அப்படி?

காரணம் வேறு எங்கோ இருந்து போராட்டத்துக்கு உத்தரவுகள் வருது ,அதற்கு ஏற்ப நடப்பதாக எனக்கு ஒரு எண்ணம்.

கேரளாவில் பிளாச்சி மடையில் கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி ,மாசும் படுத்துவதாக போராடினார்கள் ,விடாமல் பல மாதங்களுக்கு, அதுவும் டெல்லியில் போய்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் மாறி ,மாறி தொடர் உண்ணாவிரம் என இருந்து கடைசியில் மூட வைத்தார்கள்.

அவர்களால் டெல்லிக்கு சென்று பார்லிமெண்ட் முன் தொடர் உண்ணாவிரம் இருக்க முடியும் போது , கூடங்குளம் போராட்டக்குழும் டெல்லிக்கு சென்று பார்லிமெண்ட் முன் தொடர் உண்ணாவிரம் இருக்கலாமே.

இடிந்தகரையில் வன்முறைய தூண்ட வழி வகுப்பது போல செயல்படுவது ஏன்.

அணு உலை வேண்டம் தான் ,ஆனால் வேண்டாம் என சொல்வதில் ஒரு அணுகுமுறை இருக்கணும் ,மேலும் மறைமுக காரணங்களும் இருக்கக்கூடாது.

உண்மைத்தமிழன் said...

[[[Jayaprakash Naryanan said...

அருமையான பதிவு. உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையுடன் என் முக நூலில் இதை லிங்க் கொடுக்கிறேன்.]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[nigdyn said...

Well written!!! This article is almost reflecting my view on this issue!!!!!]]]

தங்களுடைய புரிதலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..! இது போன்று நமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால்தான் இதில் இருக்கும் உண்மை நிலையை பலரும் புரிந்து கொள்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

எனது தாழ்மையான கருத்து ஒன்று ; போராடும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும் போது அவன் கழுத்தில் துண்டைப் போட்டு " நீ இந்த அணு உலைத் திட்டத்தை உடனே ரத்து பண்றியா. அதுக்காக பாராளுமன்றத்தில் பேசுவியா. உடனே எழுதிக் கைஎழுத்துப் போட்டுக் கொடு..." என்று கேட்டிருப்பார்களானால் இன்று அவர்கள் தொகுதி எம்.பி அவர்கள் சார்பில் அணு உலைக்கு எதிராகப் பேசுவார் என எதிர் பார்க்கலாம். போயி மன்னுமொஹனிடம் சொல் என்று ஆர்ப்பாட்டம் செய்யலாம். பேசவில்லையானால் சாணியக் கரைச்சு ஊத்தலாம். ஆனால் அப்போது இவர்கள் ஓட்டு போடும் போது பா.ஜ.க ஒரு மதவாத பேயாடும் கொடிய கட்சி. அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துத்வா தலயில விக் வச்சுகிட்டு ஆடும் என்று பிரார்த்தனைக் கூட்டங்களில் கூட்டாக எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்பட்டு உலகிலேயே சிறந்த மதச் சார்பற்ற கட்சியான காங்கிரசுக்கு ஓட்டு போட்டார்கள். உலக மக்களின் தாயான சோனியாவுக்கு ஆதரவு தந்தார்கள். காங்கிரசுக்கு ஓட்டு போடும்போது அணு உலை ஞாபகம் வரவில்லை. அதை ஒரு இஷ்யூ ஆக்கணும் என்று தோன்றவில்லை. பா.ஜ.க.காரன்தான் கண்ணுக்கு தெரிந்தான். இப்போது அதே மதச் சார்பற்ற உலக அன்னையின் காங்கிரஸ்காரன் அடிக்கிறான். வாங்கித்தான் ஆகணும். எங்கு இஷ்யூ ஆக்கனுமோ அங்கு இவர்களுக்கு மதம் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறது. மத ரீதியாக மட்டுமே யோசித்து ஓட்டு போட்டு விட்டு இப்போது சர்ச்சு பந்தலுக்கு கீழ் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பதற்கு பெயர் போராட்டமா. பா. ஜ. க வந்திருந்தால் அணு உலையை மூடி இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால் பாராளுமன்றம் போன்ற முக்கிய தேர்தலில்களில் இந்த மாதிரி முக்கிய இஷ்யூ அடிப்படையில் ஓட்டு போடாமல், மத ரீதியாகவோ அல்லது வேறு அடிப்படையில் ஓட்டு போடுவது சரியா? அதற்க்கு விளக்கம் கேட்டால் நண்பர் உதயகுமார் "அணு உலையை விட மதவாதம் ஆயிரம் மடங்கு ஆபத்தானது" என்று கூட சொல்லலாம். உங்களை மாதிரி அறிவுஜீவிகள், "உதயகுமார் சொல்வது குறைவு. லட்சம் மடங்கு ஆபத்தானது" என்று மேல் விளக்கம் அளிக்கலாம்.]]]

இல்லை.. இந்த மக்கள் எந்தக் காரணத்திற்காக அந்தத் தேர்தலில் வாக்களித்தார்கள் எனில், நிச்சயம் காங்கிரஸ்தான் வரப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டதாலும், அப்போதைய சூழலில் தமிழக அரசியலில் பிரிந்திருந்த அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மையினாலும்தான் யாருக்காவது வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்..! இதில் பா.ஜ.க. அவுட்டானது எதிர்பார்க்கக் கூடியதே..! செல்வாக்கு இல்லையெனில் எப்படி ஜெயிக்க முடியும்..? இது மதவாதம் சார்ந்தது எனில், அனைத்து தொகுதிகளிலும் எந்தெந்த ஜாதிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த ஜாதிக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்துகின்றனவே அரசியல் கட்சிகள்.. அதுவும் இதுவும் ஒன்றுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[nila said...

udayakumar is agent of church
america doesn't want to
nuclear powerplant desighned by russians. they want only their monopoly. hence pumping the money power and using the ignorent fishermans for this agitation. central and state know the facts.]]]

நீங்கள் மட்டுமல்ல.. உங்களைச் சார்ந்த அனைவரின் குற்றச்சாட்டும் இதுதான். நான் இப்போதுவரையிலும் இதனை நம்பவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[முருகன் said...

அண்ணே உங்கள் அனுமதி இல்லாமல் முகநூலில் இணைத்திருக்கிறேன். மன்னிக்கவும்.]]]

இதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம்.. உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் முருகா..!

உண்மைத்தமிழன் said...

[[[முருகன் said...

//============
வவ்வால் said...
அண்ணாச்சி,

உங்கள் கருத்து உண்மையானதே, ஆனால் நடைமுறையில் சரியாக அமையுமா?

இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை, ஜப்பான் அணு உலை விபத்துக்கு பின்தான் விழிப்புணர்வு வந்தது போராடுகிறோம் என்றால், அரசு எப்படி உடனே தலையாட்டும், அதற்கும் ஈகோ உள்ளதே.. இவ்வளவு செலவு செய்தாச்சு, இனிமே முடியாது என்றுதானே சொல்வார்கள்.
//===========

நண்பரே... நம் வீட்டு பெண்ணுக்கு மனம் பேசி முடிக்கிறோம். நல்லவன் என்று நினைத்துதான் முடிவெடுக்கிறோம். ஆனால் கலயாணத்திற்கு ஒரு நாள் முன்பு மணமகனுக்கு AIDS இருப்பது தெரியவந்தால், "நிறைய செலவு செய்துவிட்டோம்... கல்யாணம் நடக்கட்டும்" என்றா நினைப்போம்? மக்களாட்சிக்கு ஈகோ எதற்கு? ]]]

இந்த வாதமும் ஏற்புடையதாகத்தான் இருக்கிறது.. நல்லது முருகா..!

உண்மைத்தமிழன் said...

[[[முருகன் said...

இதை விட அறப்போராட்டத்தை சிறப்பாக நடத்த முடியாது. பல லட்சம் கோடி ஊழல் செய்தவன் போலிஸ் பாதுகாப்போடு வெளியே உலவுகிறார்கள் நாடெங்கும். அது தேச துரோகமா அல்லது இதுவா? மின்சாரம் வேண்டும் எனக் கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் கூடங்குளத்திலிருந்துதான் வேண்டும் எனக் கேட்க எவருக்கும் உரிமையில்லை.]]]

இதுவும் நல்ல வாதம்தான்.. யோசித்துப் பார்த்தால் நமக்கு வலு சேர்க்கும் நிறைய விஷயங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன என்பது புரிகிறது..! நன்றி முருகா..!

Vedha said...

இந்தியாவில் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டங்கள் கூடங்குளத்தில் மட்டும் நடக்கவில்லை. மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்தாபூரைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், ஹரியானாவில் உள்ள கோரக்பூர் விவசாயிகள், உள்ளூர்வாசிகள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் அணுஉலை அமைப்பதற்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஹரிபூரில் ரஷ்ய அணுஉலைகள் வரவிருந்த நிலையில், அந்தப் பகுதி அணுஉலைகள் வரைபடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அந்த மாநில அரசு மேற்குவங்கத்தை அணுசக்தி இல்லாத மாநிலமாக அறிவித்துள்ளது.
புத்திசாலி மக்கள் எப்போதும் அடுத்தவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள். ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அணுசக்தியை குறைத்துக் கொண்டு, தூய்மையான, நீடிக்கும் மின் ஆதாரங்களை நாடிச் சென்று வருகின்றன. ஆனால் இந்திய மட்டும் அணுசக்தி பித்துப்பிடித்துப் போய், சாதாரண விவசாயிகள், மீனவர்களை பகடைக் காய்களாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆட்டத்தை ஆடி வருகிறது.
இந்த விவகாரத்தில் அணுசக்தித் துறையும், பிரதமர் மன்மோகன் சிங்கும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விஷயங்களை கவனப்படுத்துகின்றனர் - இந்தத் திட்டம் இல்லையென்றால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும், அணுசக்தி இல்லாமல் இந்தியா செயல்பட முடியாது, நமது அணுஉலைகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை, இந்த நிலையில் அணுஉலை திட்டத்தை கைவிடுவது என்பது மிகப் பெரிய ஆபத்து என்றெல்லாம் கூறப்படுகின்றன.
மிகப் பெரிய பேரழிவு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி பலரும் கவனப்படுத்தி வரும்போது, அப்துல் கலாம் உள்ளிட்ட இந்திய விஞ்ஞானிகள் பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு மாறாக, ஜோசியக்காரர்கள் போல பேசுகின்றனர். கூடங்குளம் இருக்கும் பகுதியை நிலநடுக்கம் தாக்காது என்பதை எப்படி ஒருவர் முன்கூட்டியே கணிக்க முடியும்?
அணுசக்தியின் பாதுகாப்பு தொடர்பான தவறான புரிதல்களை போக்கும் வகையிலும், தொடர்ச்சியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் இந்த சிறு கேள்வி-பதில் தொகுக்கப்பட்டுள்ளது.

1. இந்தியா ஒரு வளரும் நாடு. நாம் வளர்ச்சியடைய மின்சாரம் தேவை. அணுசக்தி வேண்டாம் என்றால், நமது வளர்ச்சி பாதிக்கப்படும்.

மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு அணுசக்தி மட்டும்தான் ஒரே வழியல்ல. பல மரபு சார்ந்த, மரபு சாராத ஆற்றல் ஆதாரங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். விடுதலை பெற்று 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்ற தொழில்மயமாக்கம், நவீனமயமாக்கத்துக்குப் பயன்பட்ட மொத்த மின்உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு வெறும் 3 சதவீதத்துக்கும் குறைவு. இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(காற்றாலை, சூரிய மின்சக்தி) ஆதாரங்களுக்கு ஏற்கெனவே 10 சதவீதம் பங்கு இருக்கின்றது. மேலும் மிகப் பெரிய அணை நீர்மின் திட்டங்கள் 22 சதவீதம் பங்கை அளித்து வருகின்றன. ஆனால், பெரிய நீர் அணைகள் சுற்றுச்சூழல் மற்றும் ஆதிவாசிகளின் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா உண்மையிலேயே ஒரு புதிய தலைமையாக உருவாக வேண்டுமென்றால், நமது இயற்கை மூலதனத்தை - நமது நிலம், நீர், காற்று, மக்களை - அழித்துவிடக் கூடாது. அணுஉலைகள் போன்ற ஆபத்தான, விபத்து நடக்க வாய்ப்புள்ள, செலவு அதிகம் கொண்ட தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக, மின்சார உற்பத்திக்கு தூய்மையான, நியாயமான, குறைந்த ஆபத்துள்ள மின்உற்பத்தி முறைகளுக்கு வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
மின்சார சேமிப்பு, தேவை அடிப்படையிலான மேலாண்மை வியூகங்கள் போன்றவற்றின் மூலமும் மின்சார அளவை அதிகரிக்க முடியும். இப்போது உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 100 மெகாவாட் மின்சாரத்திலும், 40 மெகாவாட் மின்சாரம் மோசமான விநியோகம், கடத்துதல் காரணமாக இழக்கப்படுகிறது. ஸ்வீடன் போன்ற முன்னேறிய நாடுகளில் விநியோகம், கடத்துதல் இழப்பு 7 சதவீதம் ஆகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தற்போது உற்பத்தி செய்யப்படும் 1,80,000 மெகாவாட் மின்சாரத்தில், 72,000 மெகாவாட் (40 சதவீதம்) இழக்கப்படுகிறது.
மின் விநியோகம், கடத்துதல் திறனை 90 சதவீதம் அதிகரிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அது 60,000 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட ஒரு மின் நிலையத்தை உருவாக்குதற்குச் சமம். வேறு வார்த்தைகளில் சொன்னால், தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் கூடங்குளத்தைப் போன்ற 60 மின்நிலையங்களை உருவாக்குதவற்குச் சமம் இது. ஆனால் இந்த அளவு செலவோ, ஆபத்தோ அதில் துளியும் கிடையாது.
இதற்கெல்லாம் மேலாக தேவையற்ற மின்செலவை குறைப்பதும் நிறைய பலன்களைத் தரும்.

Vedha said...

2. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் செலவு குறைந்தவையா*?* நமது மின்ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டவையா*?*

இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் மட்டும் போதாது. ஏனென்றால் ஆற்றலில் மின்சாரம் என்பது ஒரு வகை மட்டுமே. இந்தியாவின் ஆற்றல் தேவைகளில் மின்சாரம் 12 சதமே ஆகும். மக்கள் மின் விளக்குகள் குளிர்சாதனங்கள் இல்லாமல் இருக்க பழகிகொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் எரி பொருட்கள் தேவை. இன்று பல வீடுகளில் தாவர ஆற்றல் எரிசக்தியாக உபயோகப்படுத்தப் படுகின்றன.

இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு என்பது, ஆற்றல் தயாரிப்பிலும்,கட்டுப்படுத்துவதிலும் நாம் முன்வைக்கும் நல்ல முன்மாதிரியில்தான் அடங்கி இருக்கிறது. தற்போது நாம் முன்வைக்கும் முன்மாதிரி என்பது திறனற்ற மின்சார உற்பத்தி, தவறான கடத்துதல் முறைகள், ஏற்றத்தாழ்வான விநியோகம், முறையற்ற பயன்பாடு ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கிறது. இதில் கிராமப் பகுதிகள், சிறிய வணிக நிறுவனங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க மேல்தட்டு மக்களோ மின்சாரம், இதர ஆற்றல் ஆதாரங்களை எந்த இடையூறும் இன்றி தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்கள். அதிக விரயத்தை ஏற்படுத்தும், இந்த நியாயமற்ற உற்பத்தி - நுகர்வு இலக்கை எட்ட தற்போதுள்ள மரபு சார்ந்த அல்லது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஆதாரங்கள் போதுமானதாக இருக்காது. இந்தியாவின் ஆற்றல் தலைநகர் என்று அழைக்கப்பட்ட அனல்மின் நிலையங்களால் நிரம்பிய சிங்ராலி என்ற ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஏன் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, இன்றைக்கு மின்சாரமோ, தண்ணீரோ கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன? நிலக்கரி, அணுஉலைகளை கேள்விக்கு உட்படுத்தும் அதேநேரம், பழங்குடிகள், தலித்துகள், விவசாயிகள், மீனவர்கள் உளளிட்டோர் தொடர்ச்சியாக தியாகம் செய்ய வலியுறுத்தி, அதன் மூலம் மற்றவர்கள் அனைவரும் வளமானவர்களாக மாறும் வளர்ச்சி முறையையும் நாம் கேள்விக்கு உட்படுத்தியாக வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்கள் என்று வரும்போது, அதன் முழுமையான திறனையும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து வருகிறோம் என்பதுதான் உண்மை. இந்திய அரசு அளிக்கும் தகவலின்படி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன்: காற்றாலை – 48,500 மெகாவாட் (65,000 மெகாவாட் இந்திய காற்றாலை அமைப்பின் கூற்றுப்படி http://www.inwea.org/*); சிறிய நீர்மின் நிலையங்கள் - 15,000 மெகாவாட், தாவர ஆற்றல் - 21,000 மெகாவாட், சூரிய மின்சக்தி - குறைந்தபட்சம் 4,00,000 மெகாவாட். அணுஉலை தொழில்நுட்பத்துக்கு வாரியிறைக்கப்படும் பணத்தை,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சி, ஆற்றல் திறன் மேலாண்மைக்கு திட்டங்களுக்குத் திருப்பிவிடலாம். ஏற்கெனவே, சூரிய மின்சக்தி, காற்றாலைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக மின்உற்பத்திச் செலவு குறைந்து வருகிறது. இன்றைய காற்றாலைகளில் உள்ள பழைய குறைந்த சக்தியுள்ள டர்பைன்களை மாற்றுவதன் மூலம் காற்றாலைகளின் உற்பத்தியை ஆறு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்கள் மூலம் இந்தியா 17,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்துள்ளது. அதேநேரம் சீனாவோ, கடந்த ஒரே ஆண்டில் 17,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

ஆனால் நாமோ, நமது ஆர்வம் அனைத்தையும் "அணுசக்தி கூடை"க்குள்ளேயே எப்போது பார்த்தாலும் கொட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த உதாரணம் இது.

இரண்டாவதாக, நல்ல கட்டட வடிவமைப்பு மூலமும் மின் தேவையை குறைக்கலாம். சென்னை போன்ற ஊர்களில் மங்கிய கண்ணாடிகளை கட்டடங்களில் பொருத்துவதனால், நாள் முழுவதும் மின்விளக்குகளை எரியவிடவேண்டியுள்ளது.. வெளியே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும்போதும், அவர்கள் உள்ளே லைட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள மால்களும், தகவல்தொழில்நுட்ப வளாகத்திலுள்ள ஐ.டி. நிறுவனங்களும் இந்த முட்டாள்தனமான வடிவமைப்புக்கு நல்ல உதாரணம்.

ஜெர்மனியிலுள்ள பிளாக் ஃபாரஸ்ட் பகுதியைச் சேர்ந்த உர்சுலா ஸ்லாடெக் என்ற பெண், செர்னோபில் விபத்துக்குப் பிறகு, தங்கள் பகுதியில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடையே பிரசாரம் செய்தார்.

இன்றைக்கு மக்களால் நடத்தப்பட்டு வரும் அந்த நிறுவனம், சிறிய, பரவலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் மூலம் 1,00,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது.

Vedha said...

3. முனைவர் அப்துல் கலாம் கூறுவதைப் போல பொருளாதாரரீதியில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் எனற நமது கனவை, ஃபுகுஷிமாவில் நடந்த ஒரே ஒரு பேரழிவுக்காக கைவிட்டு விட வேண்டுமா*?*

மிகப் பரவலாக அறியப்பட்ட, சோவியத் யூனியனின் கிஷ்டீம் (1957) மற்றும்அமெரிக்காவில் நடைபெற்ற மூன்று மைல் தீவு (1979) மற்றும் செர்னோபில் (1986) அணுஉலை விபத்துகளைத் தாண்டி, 1947 - 2008 ஆண்டுகளுக்கு இடையே குறைந்தது 76 அணுஉலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் 56 விபத்துகள் செர்னோபில் விபத்துக்குப் பின்னால் நேர்ந்தவை. இதன்படி சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் தலா ஒரு மோசமான அணுஉலை விபத்து ஏற்பட்டு வருகிறது, இதனால் ஆண்டுக்கு ரூ. 165 கோடி நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. 2005 முதல் 2055ஆம் ஆண்டுக்குள் குறைந்தது நான்கு பயங்கரமான அணுஉலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் 2003ஆம் ஆண்டு நடத்திய "அணுசக்தியின் எதிர்காலம்" என்ற ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஐ.டி. நிறுவனத்தின் கணிப்புகளில் 2011ஆம் ஆண்டு நேர்ந்த ஃபுகுஷிமா அணுஉலை பேரழிவு முதலாவது.

மேலும் பேரழிவுகளைக் கண்டு மட்டும் நாங்கள் கவலைப்படவில்லை. மிகவும் கச்சிதமாக செயல்படும் அணுஉலைகள் மூலமாகவும்கூட புற்றுநோய், விளக்க முடியாத இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அமெரிக்காவில் 65 இடங்களில் 104 அணுஉலைகள் செயல்படும் பகுதிகளைச் சுற்றி வாழும் மக்களிடையே ரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கல்பாக்கத்தில் மருத்துவம் செய்து வரும் டாக்டர் புகழேந்தியின் ஆய்வில் அப்பகுதியில் வாழும் மக்களிடையே புற்றுநோய், தைராய்டு, மற்றும் சிலந்திவலை விரல் நோய், பிறவி குறைபாடுகள் போன்றவை அதிகரித்துள்ளது தெரியவருகிறது.

Vedha said...

4. அனல் மின்நிலையங்கள் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன, காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கார்பனை அவை பெருமளவி்ல் வெளியிடுவதால் அவை மோசமானவை. நிலக்கரி சுரங்கங்கள் காரணமாக மாசுபாடு, அப்பகுதிக்கு அருகே வாழும் மக்கள் சந்தித்து வரும் பயங்கரமான பாதிப்புகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாரே.

அனல் மின்நிலையங்கள் பற்றி அப்துல் கலாம் கூறியுள்ளது சரியானதுதான். அனல் மின்நிலையங்கள் மாசுபடுத்தக்கூடியவை, மோசமானவை. நிலக்கரி சுரங்கங்களை பூமியில் உள்ள நரகங்கள் என்று சொல்லலாம். ஆனால் இரண்டு பேய்களிடையே நல்ல பேயை தேர்ந்தெடுக்குமாறு எங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நீங்கள் அடித்தே கொல்லப்பட விரும்புகிறீர்களா அல்லது நேரடியாக கொல்லப்பட விரும்புகிறீர்களா என்று கேட்பதைப் போலிருக்கிறது.

அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியத்தைத் தரும் யுரேனிய சுரங்கங்கள் சுற்றுச்சூழலுக்கும், சுற்றி வாழும் மக்களின் உடல்நலத்துக்கும் ஏற்படுத்தும் பயங்கரமான பாதிப்புகள் பற்றி முனைவர் அப்துல் கலாம் பேசவில்லை. ஜார்கண்டில் உள்ள ஜாதுகோடாவில் இந்திய யுரேனியக் கழகம் யுரேனியம் தோண்டுகிறது. இதன் காரணமாக சுற்றுப்புற பழங்குடி மக்கள் மீதான கதிரியக்க பாதிப்புகள் பயங்கரமாக இருக்கின்றன. நோபல் பரிசு பெற்ற அணுஆயுத போர் தடுப்புக்கான சர்வதேச மருத்துவர்கள் அமைப்பின் இந்திய பிரிவான அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்கள் அமைப்பு, ஜாதுகோடாவில் நடத்திய மருத்துவ ஆய்வை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது:
•யுரேனியம் தோண்டும் பகுதிக்கு அருகே வாழும் மக்களிடையே அடிப்படை மலட்டுத்தன்மை மிக அதிகமாக இருக்கிறது.
•யுரேனியம் தோண்டும் பகுதிக்கு அருகே வாழும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகமாக பிறவி ஊனத்துடன் இருக்கின்றன.
•யுரேனிய சுரங்கங்கள் அருகே வாழும் பெண்களின் குழந்தைகள் பிறவி குறைபாடுகள் காரணமாக இறக்கும் விகிதம் அதிகமாக உள்ளது.
•யுரேனிய சுரங்கங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் புற்றுநோயால் இறப்போர் விகிதம் அதிகமாக இருக்கிறது.
•ஜார்கண்ட் மாநில மக்களின் சராசரி ஆயுள்காலத்தை எடுத்துக் கொண்டால், யுரேனிய சுரங்கங்களில் இருந்து தள்ளி இருக்கும் கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் சராசரி ஆயுள்காலம் ஆகியவற்றைக் காட்டிலும் யுரேனிய சுரங்கங்கள் அருகே வாழும் மக்களின் ஆயுள் காலம் குறைவாக இருக்கிறது.
•மற்ற கிராமங்களுடன் ஒப்பிடும்போது, பாதிக்கப்பட்ட கிராமங்களில் பொருளாதார, எழுத்தறிவு விகிதம் அதிகமாக இருந்தாலும்கூட, மோசமான உடல்நலம், எளிதில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதையே மேற்கண்ட அம்சங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சுற்றுச்சூழலை அழிக்கும் தொழில்நுட்பங்களான நிலக்கரி, அணுஉலை ஆகியவற்றை கைவிட்டால்தான், எதிர்காலத்தில் வளம்குன்றாத, சமூகநீதி கொண்ட புதிய பாதையை வகுக்க முடியும். மேலும் அணு மின்சாரம் பசுமை ஆற்றல் என்று கூறுவதும், அது காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் என்று கூறுவதும் அப்பட்டமான பொய். புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரம் மூலம் ஒரு மெகாவாட் மின்உற்பத்தி செய்வதில் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடைவிட, அணுஉலைகள் 4 - 5 மடங்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. (ஆதாரம்: டெக்னாலஜி ஃபிரம் ஹெல் - நீரஜ் ஜெயின்). ஒட்டுமொத்த அணு எரிபொருள் சுழற்சியையும் கணக்கிட்டோம் என்றால், அணுஉலை தொழி்லநுட்பமே மிகப் பெரிய மாசுபடுத்தி.
.

Vedha said...

5. போராட்டக்காரர்கள் ஏன் இவ்வளவு தாமதமாகப் போராடுகிறார்கள்*?* முதலில் அரசு முன்மொழிந்த போதே இந்தத் திட்டம் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கூறியிருக்கலாமே*?*
1988ஆம் ஆண்டு இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. ஒரு சில மாதங்களிலேயே அணுஉலைக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அப்போதைய ரஷ்ய அதிபர் மிகயீல் கோர்பசேவ் 1989இல் இந்தியாவுக்கு வந்தபோது அவரிடம் தருவதற்காக மக்களும், மாணவர்களும் இணைந்து அணுஉலைக்கு எதிராக 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றனர். கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள், இளைஞர்களைத் திரட்டுதல், சென்னை, இதர நகரங்களில் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆகியவை நடைபெற்றன.1991-2001 மத்தியில் அன்றைய சோவியத் யூனியன் பல தேசங்களாக நொறுங்கி உடைந்ததன் விளைவாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாள் முதலே கூடங்குளம் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
அன்றைய ராஜிவ் காந்தி அரசும், இன்றைய சோனியா காந்தி அரசும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ளவோ அல்லது உள்ளூர் மக்களின் விருப்பங்களை காது கொடுத்து கேட்கவோ தயாராக இல்லை.
இதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூற முடியாது, ஏனென்றால் இன்றைக்கும் அந்த நிலைமை மாறவில்லை. உள்ளூர் விவசாயிகள், மீனவர்களின் கடுமையான எதிர்ப்பை மீறி ஜெய்தாபூர் அணு உலையை திணிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடு்க்கும் மத்திய அரசைப் பார்த்தாலே இது தெளிவாகப் புரியும். ஹரியாணாவில் உள்ள கோரக்பூர், ஜெய்தாபூரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அரசால் புறக்கணிக்கப்பட்ட்தோடு வன்முறையை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட்து.

கூடங்குளம் அணுஉலையின் உடனடிச் செயல்பாடு, மேலும் இந்த அணுஉலை வளாகத்தை 6000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யக்கூடிய ஆபத்து போன்றவை உளளூர் மக்களின் அச்ச உணர்வை மீண்டும் அதிகரித்துள்ளன என்பது உண்மைதான். இயற்கையின் பேரழிவு எப்படி இருக்கும் என்பதை 2004 ஆழிப் பேரலை (tsunami) மீனவ மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளது. ஃபுகுஷிமாவில் நடைபெற்ற மூன்று முனை விபத்துக் காட்சிகளும், அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான ஜப்பானிய மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விடப்படாமல் தடுக்கப்பட்டது, அன்றாட வாழ்க்கை வாழ அனுமதிக்கப்படாத அவலம் ஆகியவற்றை தொலைகாட்சியில் பார்த்தது மக்கள் மனதில் அப்படியே தங்கியுள்ளது. எனவே, மக்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது.

Vedha said...

6. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அணு உலை கட்டி முடிக்கப்பட்ட பிறகு இப்போது இத்திட்டத்தை கைவிடுவது சரியானதாக இருக்குமா?

சரியான காரியத்தை செய்வதற்கு சரியான நேரம் என்று ஒன்று கிடையாது அணுவின் அபாயத்தை அறிந்த பிறகு அதில் தொடர்ந்து முதலீடு செய்வதை விட, ஏற்கனவே செய்யப்பட்ட முதலீட்டோடு அத்திட்டத்தை கைவிடுவது மேலானது.

ஒரு பேரழவின் விலையை எண்ணிப்பாருங்கள். முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த மாநிலமான பெலாரஸ் தான் 1986 செர்னோபில் பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட்து. சர்வதேச அணு திறன் ஆணையத்தின் அறிக்கைப்படி 1991 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை பெலாரஸ் மாநிலம் 13 பில்லியன் டாலர்களை பேரழிவு தொடர்பான பணிகளுக்கு செலவிட்டுள்ளது. 30 ஆண்டுகளில் 235 பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. செர்னோபில் தொழிற்சாலை இருந்த உக்ரேன் நாட்டின் மொத்த அரசாங்க செலவில் 6-7% இன்றும் பேரழிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக செலவிடப்படுகிறது. பேரழிவினால் வெளியான கதிர்வீச்சு, பெரும்பாலும் ரஷ்யாவிலும், அது தவிர பெலாரஸ் மற்றும் உக்ரேன் ஆகிய பகுதிகளிலும் 200,000 க்கும் அதிகமான சதுர கிலோமீட்டர்களை மாசுபடுத்தியுள்ளது. இந்த பரப்பளவு தமிழ்நாட்டின் பரப்பளவை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

ஃபுகூசிமாவில், டாய்-இச்சி அணு உலையை மூடி, பாதுகாப்பாக பிரித்தெடுத்து அப்புறப்படுத்த 30 வருடங்கள் ஆகும். இதற்கான செலவு 12 பில்லியன் டாலர்களிலிருந்து 19 பில்லியன் டாலர்கள் வரையிலும் இருக்கும். உடல்நல கண்காணிப்பு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, சமூக பாதுகாப்பு, மாசடைந்த சுற்றுப்புறத்தை சீர் செய்வது, விவசாயமும் மீன்பிடிப்பும் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பு, கதிர் வீச்சு அபாயத்தின் மீதான பயத்தால் இழக்கப்படவிருக்கும் அந்நிய வணிகம் ஆகிய செலவுகள் மேற்கூறிய தொகையில் சேர்க்கப்படவில்லை.

அதேநேரம் அணு உலையை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டால், கூடங்குளம் அணு மின் நிலையத்தை, ஆபத்து குறைந்த, மாசு குறைந்த வாயு அனல் மின் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படலாம். த்ரீ மைல் தீவு விபத்துக்குப் பிறகு, நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் இருக்கும் ஷோர்ஹம் அணு மின் நிலையம் இயற்கை வாயுவில் இயங்குவதாக மாற்றப்பட்ட்து. ஒஹயோவில் இருக்கும் வில்லியம் எச் சிம்மர் அணு மின் நிலையமும், மிஷிகனில் இருக்கும் மிட்லேண்ட் கோஜெனரேஷன் வசதியும் படிம எரிபொருள் (fossil fuel) கொண்டு இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டன.

Vedha said...

7. இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவை. இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள் எவ்வித அழிவும் ஏற்படுத்தாமல் பல பத்தாண்டுகளாக இயங்கி வருகின்றன. பிறகு என்ன பிரச்சனை?
இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவை என்பது உண்மைக்கு புறம்பான கூற்று. இந்தியாவின் அணு நிறுவனத்தில் ஏற்படும் பாதுகாப்பு மீறல்கள் வெளி உலகத்துக்கு தெரியாமல் ”இரகசிய காப்பு” என்ற போர்வைக்குள் மறைக்கப்படுகின்றன. ஆயினும் நமக்கு தெரிந்த தகவல்களே கவலையளிக்கும் விதமாக தான் இருக்கின்றன. கல்பாக்கத்தை எடுத்துக் கொண்டால், கீழே கூறப்பட்டுள்ள அத்துமீறல்கள் வெளியுலகத்துக்கு தெரிய வந்துள்ளன. இவற்றில் சில அத்துமீறல்கள் நிகழ்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒப்புக் கொள்ளப்பட்டன.
• 1987: எரிபொருள் ஏற்ற விபத்தில் அணு உலையின் மையத்தில் முறிவு ஏற்பட்டது.
• 1991: கதிரியக்கம் கொண்ட கன நீருக்கு தொழிலாளர்கள் வெளிப்படுத்தப்பட்டார்கள்.
• 1999: 42 தொழிலாளர்கள் கதிரியக்க பாதிப்புக்கு ஆளானார்கள்.
• 2002: கதிரியக்கம் கொண்ட 100 கிலோ சோடியம் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்பட்ட்து
• 2003: உயர்ந்த கதிரியக்கத்துக்கு 6 தொழிலாளர்கள் ஆளானார்கள்.
• இன்னும் ஆபத்தான சம்பவங்கள் நடந்துள்ளன. 1991 ஆம் ஆண்டு RAPS( ராப்ஸ்) அணு உலை வளாகத்தில் பணிபுரிந்த காண்ட்ராக்டர் ஒருவர் கதிர் வீச்சு நிறைந்த தண்ணீரை, பெயிண்ட் கலக்கவும், பெயிண்ட் பிரஷ்கள், முகம் மற்றும் கைகளை கழுவ்வும் பயன்படுத்தினார்.
• 2009 ஆம் ஆண்டு கர்நாடகாவின் ”கைகா” அணு உலையில் கதிர் வீச்சு நிறைந்த ட்ரைடியம் கொண்ட நீரை குடித்த்தால் 55 தொழிலாலர்கள் மிகையான கதிரியக்கத்திற்க்கு ஆளானர்கள்.

பாதுகாப்பு முறைகளை பலப்படுத்துவது என்பது காலம் கடந்த யோசனையாகவே இருந்து வந்திருக்கிறது. 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அணு சக்தி துறையின் அணு உலை பாதுகாப்பு ஆய்வு குழு வெளியிட்ட “ இந்தியாவின் கன நீர் அழுத்த அணு உலைகளின் பாதுகாப்பு” என்ற் தலைப்பிடப்பட்ட அறிக்கை “இந்தியாவில் சுனாமியோ நீர் மட்டம் மாறலோ (seiche) ஏற்படுவதில்லை. அதனால் சூறாவளி மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கல்பாக்கத்தில் அமைந்துள்ளது போன்றதான கன நீர் அழுத்த அணு உலைகளைப் பற்றியது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கல்பாக்கம் குடியிருப்பு , அணு உலை வளாகம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. 2004 ஆம் ஆண்டின் சுனாமியிலிருந்து கல்பாக்கம் அணு மின் நிலையம் தப்பியது அதன் திட்டமிட்ட வடிவமைப்பினால் அல்ல, சந்தர்பவசத்தால் தான்.

இன்றைக்கும் கல்பாக்கம் அணு உலை சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையோ, சுனாமியையோ தாக்குபிடிக்கும் நிலையில் இல்லை. சர்வதேச அணு சக்தி குழும்ம் ஒன்று கல்பாக்கத்திலிருந்து 60 கிமீட்டர் தொலைவில் இருக்கும் பாண்டிச்சேரி கடற்கரையிலிருந்து கொஞ்சம் தள்ளி நீருக்குள் எரிமலை ஒன்று செயல் திறனுடன் இருக்கிறது என்று அறிவித்தும் கல்பாக்கத்தில் பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

Vedha said...

8. கூடங்குளத்தில் அனைத்து பாதுகாப்பு முறைகளும் சரியாக இருக்கின்றன. அணு உலை நில அதிர்ச்சி புவி மையத்திலிருந்து (seismic centre point) 1300 கிமீட்டர் தொலைவில் இருப்பதால் சுனாமியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார். மேலும், அரசையும், அரசு விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் நம்புமாறு கூறியுள்ளார். இதை செய்வதை விட்டு மக்கள் இவர்களை கேள்வி கேட்கலாமா?
முதலில், எந்த ஒரு நல்ல விஞ்ஞானியோ, பொறியாளரோ 100% பாதுகாப்பு என்று ஒன்று இல்லை என்று கண்டிப்பாக கூறுவார்கள். இது போன்ற உறுதி மொழிகள் 100% பொய்யானவை. பேரழிவின் போது ஏற்படும் உண்மையான பாதிப்புகளுக்கும், விளைவுகளுக்கும் மக்களை தயார்படுத்தாமல் அவர்களை மன நிறைவடையச் செய்கிறார் டாக்டர் அப்துல் கலாம். பேரழிவுக்கு மக்களை தயார் செய்ய வேண்டிய தருணத்தில் அவர்களின் பயங்களை பொய்யாய் போக்க நினைப்பது மிகவும் தவறான போக்காகும். ஆபத்தான தொழில்நுட்பத்தைப் பற்றி உண்மைக்கு புறம்பான விஷயங்களை மக்களிடம் கூறுவது பொறுப்பற்றது.

இரண்டாவதாக, அணு சக்தி துறையின் உறுதி மொழியை பொய்யாக்கிய 2004 சுனாமிக்குப் பிறகும், டாக்டர் கலாம் அதே தவறை மீண்டும் செய்கிறார். சுனாமி வர வாய்ப்புகள் இல்லை என்று டாக்டர் கலாம் கூறுவது அறிவியல் இல்லை, ஆருடம்.

பாதுகாப்பு மற்றும் சரியான அவசர கால நடவடிக்கைகளை கையாள தொழில்நுட்பங்கள் மட்டுமே போதும் என்று டாக்டர் கலாம் நம்மை நம்ப வைக்க் முயற்சிக்கிறார். அது உண்மையல்ல. முழு பாதுகாப்பு மற்றும் சரியான அவசர கால நடவடிக்கைக்கு தேவை, சரியான இட்த் தேர்ச்சி, திட்டமிடல், தப்பித்தல் வழிகள் அமைத்து பராமரிப்பது, தகவல்களை நன்கு அறிந்து அவசர காலத்தில் சரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய மக்கள், வெளிப்படையான உண்மையைக் கூறக்கூடிய, தவறுகளை தெரிந்து திருத்திக் கொள்ளக்கூடிய நிர்வாகம், இயற்கையின் வலிமையை புரிந்து கொள்ளக் கூடிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் நேர்மையான கட்டட கலைஞர்கள் மற்றும் காண்ட்ராக்டர்கள்.
நேர்மையான அறிவியலுக்கு தேவை உண்மையை நிலைநாட்டும் எண்ணம், இந்த நாட்டில் அதற்கான இடம் கிடையாது. மக்களுடைய அன்றாட வாழ்க்கையை புரட்டி போடும் அளவுக்கு ஊழலும், பித்தலாட்டமும் மலிந்து கிடக்கும் இந்த நாட்டில் டாக்டர் அப்துல் கலாமின் வார்த்தைகளை மட்டும் எப்படி நம்ப முடியும்.
1994 ஆம் ஆண்டு மே மாதம், கர்நாடகாவின் கேய்காவில் கட்டப்பட்டு வந்து அணு உலையின் உட்புற கொள்கலம் இடிந்து 120 டன் கான்கிரீட்டுடன் கீழே விழுந்த்து. இந்த கொள்கலன், ஆபத்து காலத்தில் கதிரியக்கத்தை கட்டுபடுத்துவதற்காக கட்டப்பட்ட்து. அணு சக்தி முறைப்படுத்தல் வாரியத்தின் முன்னாள் தலைவர் அ. கோபால கிருஷ்ணன், “இந்திய அணுசக்தி கார்ப்பரேஷனின் (NPC) மூத்த கட்ட்ட பொறியாளர்களுக்கும், அணு சக்தி துறைக்கு கட்ட்ட பொறியியல் வடிவமைப்புகளை தரும் தனியார் நிறுவன்ங்களுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. இந்த தோழமையின் அடிப்படையில் இந்நிறுவன்ங்கள் அனுப்பும் கட்டட வடிவமைப்பு திட்டங்களை NPC பொறியாளர்கள் சரியான தர சோதனைக்கு உள்ளாக்குவதில்லை” என்று எழுதுகிறார். கர்நாடகாவில் இந்த விபத்தின் போது அணு உலை புழக்கத்தில் இருந்திருந்தால் இந்த விபத்தினால் 7 ஆம் நிலை உருகுதலுக்கு நாம் ஆளாகியிருப்போம்.

2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஃபூக்குஷிமாவில் பேரழிவு நடந்து கொண்டிருக்கும் போதே, ரஷ்யாவில் கட்டப்பட்டு வந்து லெனின்க்ராட்-2 அணு உலை மோசமான விபத்துக்கு ஆளானது. ஒரு அணு உலையின் வெளிப்புற பாதுகாப்பு கூடு அமைப்பதற்காக கான்கிரீட் ஊற்றப்பட்ட போது, அந்த முழு கட்டுமானமும் உருமாற ஆரம்பித்த்து. வலிமையூட்டும் கம்பிகள் வளைந்து நிலத்திலிருந்து 26 அடி உயரத்துக்கு தொங்க ஆரம்பித்தன. கட்டப்பட்டு வந்த அணு உலையின் பொறியியல் VVER 1200 என்ற வகையைச் சேர்ந்த்து ஆகும். இது கூடங்குளத்தில் இருக்கும் VVER 1000 என்ற வகையைவிட முன்னேறிய தொழில்நுட்பம் ஆகும். ரஷ்யாவில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு ஊழலும், தரக்குறைவான பொருட்களை பயன்படுத்தியதும் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் பித்தலாட்டங்களில் முதலிட்த்துக்கு போட்டி போட்டுக் கொண்டு வரும் ரஷ்ய மற்றும் இந்திய நாடுகளின் கூட்டு முயற்சியில் கூடங்குளம் அணு உலை அமைக்கப்படுகிறது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

Vedha said...

9. அணு உலைக்கு எதிரான போராட்டம் உணர்ச்சிவயப்பட்ட்தாகவும், அறிவியலுக்கு எதிரானதாகவும் இருக்கிறதே?
கூடங்குளத்துக்கு எதிரான வாதம் என்பது அறிவியலுக்கும், சோதனைகளுக்கும் எதிரான வாதம் இல்லை. ஜைதாபுரிலும், கூடங்குளத்திலும் 10,000 மெகா வாட்டில் நடப்பது சோதனையுமல்ல. ஆய்வுக்கூட்த்தில் நட்த்தப்படும் 100 கிலோ வாட் எதிர்விசைக்கான சோதனையில்லை இது. மின்சார உற்பத்தி தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகளை கொண்டு சோதனையாளர்களைத் தவிர இன்னும் பல்லாயிரக்கணக்கோரின் உயிரை பணயம் வைக்கும் முயற்சி இது. அறிவியலுக்காக, உடன்பாடில்லாத மக்கள் தங்கள் உயிரை பணயம் வைக்க முடியாது. அறிவியலின் பீடத்தில் எண்ணற்ற சோதனையாளர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு நம்முடைய மரியாதைகளை செலுத்துவோம். நச்சுத்தன்மைக் கொண்ட இரசாயனங்களை அப்பாவி யூதர்கள் மீது சோதித்து பார்த்த நாசிகளும், இப்போது ஏழை, பழங்குடி மக்கள் மீது தங்களின் மருந்துகளை சோதித்துப்பார்க்கும் மருந்து கம்பெனிகளும் அறிவியல் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் பயன்படுத்தும் முறை கிரிமினலானது. கூடங்குளம் திட்ட்த்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் “செய்ய முடியாதவர்கள்” இல்லை, “செய்ய மறுப்பவர்கள்”.
பணிவு, நேர்மை, தவறுகளை ஒப்புக் கொண்டு புதுப் படிப்பினைகளை ஏற்றுக் கொண்டு முன்னேறும் மனப்பான்மை ஆகியவையே நல்ல பொறியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்குமான அடையாளம். இந்தியாவின் அணு ஆட்சியில் இந்த பண்புகள் அறவே இல்லை.
அணுசக்தி விஷயத்தில் வற்புறுத்தப்பட வேண்டியது சம்பந்தப்பட்ட மக்களில்லை. அணு உலைகள் ஆபத்தற்றவை என்று காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது எனக் கூறும் டாக்டர் அப்துல் கலாம், அணு உலைகளுக்கான முழு காப்பீட்டை இந்த காப்பீட்டு நிறுவனங்களை தருமாறு ஒப்புக் கொள்ள வைக்க முடியுமா? அதே போல, அணு விபத்து ஏற்படும் பட்சத்தில், அந்த விபத்து தெரிந்தே நடந்திருந்தால் கூட, அணு உலைக்கான இயந்திரங்கள் சப்ளை செய்யப் போகும் நிறுவனங்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வைக்கும் ”அணு கடப்பாடு உடன்படிக்கையை” விடாப்படியாக நிறைவேற்ற வற்புறுத்தி வரும் நிறுவன்ங்களை அந்த கோரிக்கையை கைவிட செய்ய முடியுமா?
சுனாமியோ, பெரிய நில நடுக்கமோ வராது என்று கடவுள் மீது வைக்கும் நம்பிக்கைப் போல கண் மூடித்தனமான நம்பிக்கை வைத்திருப்பதுதான் அறிவியலுக்கு எதிரானதாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக நடந்து வரும் பேரழிவுகள், பேரழிவுகளால் ஏற்படும் சமூக- பொருளாதார மற்றும் சுற்றுப்புற பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அணு துறைக்கு எதிரான பயங்களை கொண்டுள்ள மக்களின் எதிர்ப்பு அறிவியல் அடிப்படையில் தான் இருக்கிறது. இந்த பயத்தை பலப்படுத்தும் வண்ணம், இந்தியா மற்றும் சர்வதேச அணு மையங்களின் கள்ள மௌனமும், இரகசியக் காப்பும் அமைந்திருக்கிறது.
விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தங்கள் அறிவையும், திறமையையும் அழிவற்ற ஆபத்து குறைந்த முறைகளின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறைகளுக்காக செலவிட வேண்டும் என்பது முக்கியம்.

Vedha said...

10. ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் ஆபத்துகள் இருக்கின்றன. கார்கள், தொடர் வண்டிகள், கப்பல்கள் என ஒவ்வொன்றும் விபத்தில் சிக்கித் தான் வருகின்றன. அதனால் கார்களையும், கப்பல்களையும் விட்டுத் தள்ளுகிறோமா? அப்படி இருக்கும் போது அணு சக்தியை மட்டும் ஏன் விட்டுத் தள்ள வேண்டும்?
கார் விபத்துகளோ அல்லது விமான விபத்துகளோ, 20 கிமீட்டர் அளவுக்கு, மனித நாகரித்தையே நிரந்தரமாக அழிக்கக்கூடிய தாக்கத்தை உண்டு பண்ணுவதில்லை. காரிலும், விமானத்திலும் பயணம் செய்யும் ஒருவர் ஒரு சில ஆபத்துகளுக்கு வலிந்து ஒப்புக் கொண்டு தான் அதைச் செய்கிறார். கார் விபத்தோ, விமான விபத்தோ இன்னும் பிறக்காத அடுத்த தலைமுறையினரை பாதிப்பதில்லை. நாம் எடுக்கும் ஆபத்தான முயற்களில் அடுத்த தலைமுறையினருக்கு உடன்பாடு இருக்கிறதா என்று கேட்க முடியுமா? ஏதும் அறியாத ஒரு தலைமுறையையே ஆபத்துக்கு உட்படுத்துவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத்து. கார் விபத்திற்காக எந்த காலத்திலும் 75 கிமீட்டர் சுற்றளவில் இருக்கும் மக்களை வெளியேற்ற வேண்டியிருந்ததில்லை. ஒரு தொழில்நுட்பத்தின் பாதிப்புகள் கையாளப்படக் கூடியவை என்று நிரூபிக்கப்படும் வரை, அந்த தொழில்நுட்பத்தை ஒதுக்கி வைத்தல் தான் சரி என்பதை அனுபவம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. தொடர்ந்த அணு பேரழிவுகள் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது என்பதையும் நமக்கு உணர்த்தியுள்ளது. அதனால், விவரம் அறியாத மக்களின் மேல் அணு சக்தியை கட்டவிழ்த்துவிட முடியாது.

Vedha said...

11. இயற்கையின் இருப்பு குறைந்து கொண்டே செல்லும் இந்த நேரத்தில் அணுமின்சாரம்தானே ஒரே வழி… ஏன் அதை போராட்டக்காரர்கள் புரிந்து கொள்வதில்லை?

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் ஆதிமூலம் நீர். அந்த வளம் தமிழ்நாட்டில் குறைந்திருக்கலாம். ஆனால் மற்ற அனைத்து மாநிலங்களிலும் உபரியாகத்தான் நீர் கிடைக்கிறது. மகாநதியிலும் கோதாவரியிலும் ஆண்டுக்கு எத்தனை ட்ரில்லியன் கன அடி நீர் வீணாகிறது தெரியுமா? ஏன் சொல்கிறேன் என்றால், நதி நீர் இணைப்புக்கு முதன்முதலில் தேர்வான நதிகள் இவைதான். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக அந்தத் திட்டத்தை கிடப்பில் வைத்திருக்கிறார்கள். இது ஒன்றை மட்டும் சரியாக நிறைவேற்றி, தென்னக நதிகளுடன் கலக்க வைத்தாலே கூடங்குளத்தில் உற்பத்தி செய்வதைப் போல 20 மடங்கு அதிக மின் உற்பத்தியும், பல லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதியும் பெறும்.
ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.
இது ஒரு சாம்பிள்தான். இதைப் போல பல மாற்று வழிகளில் அபரிமிதமான மின் உற்பத்திக்கு வாய்ப்பிருக்கிறது. மோடியைப் பிடிக்கிறதோ இல்லையோ… அவரது அரசு மின்சார உற்பத்தியில் செய்திருக்கும் சாதனை ஒவ்வொரு மாநில அரசுக்கும் பாடம்.
ஆனால் வெளிநாடுகளின் நிர்பந்தத்துக்கு பணிந்து கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதம் காட்டுகிறது மன்மோகன் சிங் அரசு. அதற்கேற்ப தாளம்போடுகிறது ஜெயலலிதாவின் அரசும்!

சூனிய விகடன் said...
This comment has been removed by the author.