புத்தாண்டு வாழ்த்துகள்..!


01-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்னொரு நாளும் பிறந்துவிட்டது..! புது வருடம்.. எங்கெங்கும் சந்தோஷங்கள். கை குலுக்கல்கள். நாளைய வாழ்க்கை பற்றிய கனவுகளுடன் கண்கள் பரவசப்படுகின்றன..! இந்த நாளும் இன்னொரு நாளே என்று இந்த நாளை மட்டுமே சொல்ல முடியவில்லை.

ஒரு போரைத் துவக்க இன்றைக்கு விதை போட்டிருக்கலாம்..!

ஒரு வரலாற்றைப் புரட்டிப் போட இன்றைக்கே யோசிக்க துவங்கியிருக்கலாம்..

ஒரு புதிய வாழ்க்கையைப் பற்றிய புதுமையான எண்ணம், இன்று நமக்குள் எழுந்திருக்கலாம்..!

எல்லாம் நம்பிக்கைதான். நம்பிக்கைக்கு ஒளியூட்டுகிறது ஒரு நாள். இது இந்த நாள். 

சென்ற ஆண்டின் நம்பிக்கைகளையும், செயல்களையும் முடித்தோமா என்று நமக்குள் நாமே கேட்டுக் கொள்ளலாம்..! அதில் முடியாதது எதுவோ, அதற்கான காரணங்களை அசை போடலாம். வெளிப்படையாகப் பேசலாம். அந்தத் தவறுகள் இந்தாண்டும் தொடராமல் இருக்க முனைய வேண்டும்..!

நேற்று மாலையில் இருந்தே எண்ணற்ற வாழ்த்துகள். பண்டிகை நாளில் மட்டுமே வாழ்த்துகள் மூலமாகவே பேசும் அன்பிற்கினிய தூரத்து நண்பர்களும், இன்றைக்கு வருடத்தின் முதல் வாழ்த்தாய் தங்களது முகம் காட்டினார்கள். இ-மெயிலில் கணக்கற்ற வாழ்த்துகள். அனைத்தும் பரஸ்பரம் பகிர்தல்..! ஒருவருக்கொருவர் வாழ்த்தில் அவர்களிறியாமலேயே அனைவரையும் ஒரு குடும்பமாக்குகிறார்கள். அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம், மனிதர்களிடையே இருப்பதற்கு இன்றைய வாழ்த்துகளும் ஒரு உதாரணம்.

பல வாழ்த்துகளுக்கு பதில் வாழ்த்தை உடனே சொல்ல முடியவில்லை. ஏனெனில் பகல் கொள்ளைக்காரர்களாக இன்றைக்கு மட்டும் முகப்பூச்சு அணிந்திருக்கிறார்கள் செல்பேசி நிறுவனத்தினர்.. அவர்களுக்கு தான, தர்மம் செய்வதற்கு பிச்சைக்காரனுக்குக்கூட போடலாம்..! ஆனால் தாங்கள் சில்லறை பிச்சைக்காரர்கள் என்பதையே அந்த கோட்டு, சூட்டு மனிதர்கள் இப்போதுவரையிலும் உணரவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.. போய்த் தொலையட்டும். முதல் நாளில் சாபமோ, கெடுதியோ வேண்டாம்..!


எப்போதும்போல் தொடர்ந்த 10-வது ஆண்டாக எனது பெருமதிப்பிற்குரிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றேன். “இந்த வருஷமாவது பத்திரிகையை நீட்டு..” என்ற அவரது கண்டிப்பான குரலில் என் தந்தையை பார்த்தேன். வார்த்தைகள் வராத அந்தக் கணத்தில் கன்னத்தில் தட்டிக் கொடுத்து வாழ்த்தியனுப்பி வைத்தார்..!

இரண்டாவதாக பெரியவர், திரையுலகக் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தனையும் சந்தித்து ஆசிகள் பெற்றேன். அக்கறையாக இந்த வருடத்திய சினிமா பற்றிய புள்ளி விவரத் தொகுப்பை நீட்டினார். “நேத்தைக்குத்தான் வந்துச்சு.. நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் செய்ய முடியலை. பலரும் சரியா ஒத்துழைப்பு தர்றதில்லை..” என்கிற இந்தப் பெரியவரின் வருத்தத்தின் பின்னணியில் சினிமாவுலகத்தின் கருப்புப் பக்கம் இருக்கிறது. தொகுப்பின் கடைசியில், “இதுதான் எனது கடைசி வெளியீடாக இருக்க வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன்..” என்று எழுதியிருக்கிறார். கடுமையாக சண்டையிட்டேன். வீட்டாரும் சேர்ந்து கொண்டார்கள். சிரிக்கிறார். பின்பு விரக்தி கலந்து சொல்கிறார், “ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். என்கிட்டயே வந்து ஒரு பி.ஆர்.ஓ. டிரெயினர், ‘ஸார் நீங்க எந்த பத்திரிகை?’ன்னு கேக்குறான்..? இதுக்கு மேலேயும் நான் கோடம்பாக்கத்துல இருந்து என்ன செய்ய..?” என்றார் எங்கோ வெறித்த பார்வையுடன்.. 1000 பிறை கண்டதோடு, 4 தலைமுறை நடிகர்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கும் கலைஞனுக்கு பெரும் சோகத்தை அவர்களே கொடுக்கிறார்கள்..! 

“இந்த வருஷமும் நல்லா வருவீங்க.. சட்டு, சட்டுன்னு எதையும் முடிவெடுக்காதீங்க. ஆற, அமர யோசித்து பண்ணுங்க.. காலம் கெட்டுப் போய்க் கெடக்கு.. அடிக்கடி வாங்க..” என்று சொல்லி விடைகொடுத்தார்.. மாதத்திற்கு ஒரு முறை பார்த்து பேசினாலும், அதே அன்பு, அதே நேசம், அதே பாசம்.. இப்போதும் அபாரமான ஞாபக சக்தி.. சிந்திக்க வைக்கிறது இரு பெரும் தந்தைகளின் ஆளுமை..! 

வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் அதற்கு அயராத, நேர்மையான உழைப்பு என்பதை மட்டுமே வழியாகக் கொண்டு சென்றால் நிச்சயமாக கிடைக்கும் என்பதற்கு இந்த இருவருமே சிறந்த எடுத்துக்காட்டு. 

பெற்ற வாழ்த்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..! புரிந்து கொள்வோம். முயல்வோம். உயர்வோம்..!

வலையுலக அண்ணன்மார்களுக்கும், அக்காமார்களுக்கும், மற்றும் நம் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!


கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்..!

அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்..!

வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்..!

ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்..!

பொய்யாய்ப் பேசினால் பெயரை இழப்பாய்..!

சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பாய்..!

சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்..!


நன்றி

உங்கள் உண்மைத்தமிழன்

40 comments:

அத்திரி said...

HAPPY NEW YEAR ANNA

மனசாட்சி said...

உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்..!


அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்..!


வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்..!


ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்..!


பொய்யாய்ப் பேசினால் பெயரை இழப்பாய்..!


சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பாய்..!


சிரித்துப் பேசினால் அன்போடு இருப்பாய்..!//

கடைசி 7 வரிகள் -நிதர்சமான உண்மை

ராம்ஜி_யாஹூ said...

மனதிற்கு இதம், மகிழ்ச்சி அளித்த பதிவு
நன்றிகள்

RAVI said...

சிகரம் மகிழ்ச்சி.
ஆனந்தன் சார் நெகிழ்ச்சி.

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

Riyas said...

வாழ்த்துக்கள் சார்!

Thomas Ruban said...

வாழ்வினில் துன்பங்கள் எல்லாம் அகன்று நம்பிக்கை ஊட்டும் மிகச் சிறந்த ஆண்டாக 2012 இருக்க வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்.

! சிவகுமார் ! said...

கே.பி., பிலிம் நியூஸ் ஆனந்தன்..அசத்தறீங்க. ஆனந்தன் புதல்வர் டயமன்ட் பாபு அவர்களை அவ்வப்போது சிவாஜி பிலிம்ஸ் ஆபீசில் பார்த்துள்ளேன். புத்தாண்டு வாழ்த்துகள் .

MSATHIA said...

புத்தாண்டு வாழ்த்தகள். பிலிம் நியூஸ் ஆனந்தனோட போட்டோ எடுத்துக்கலையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

(புத்தாண்டு) நல்வாழ்த்துகள்

அகநாழிகை said...

புதுவருட வாழ்த்துகள் அண்ணே.

கோவை நேரம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மோகன் குமார் said...

Arumai Anna !

ssr sukumar said...

cinemaavileye niraiya saathippeerkal.

Philosophy Prabhakaran said...

Very small post :(

S.Menaga said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா..!

ரிஷி said...

அண்ணே
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்க போட்டோ பார்த்தபிறகு உங்களை பேர் சொல்லி அழைக்கக்கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன். :-)

Sankar Gurusamy said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

http://anubhudhi.blogspot.com/

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவின் முடிவில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் அருமை!
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடைசி 7 வரியில் உள்ளது போல் வாழ முயல விளைகிறேன்.
நல்லது நடக்கட்டும்.

Kalee J said...

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!

Rathnavel said...

அருமையான பதிவு.
எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மாயன்:அகமும் புறமும் said...

நீங்கள் உங்கள் லட்சியங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

என் வலையில்;
மாயன்:அகமும் புறமும்: சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு...! - டைரக்டர் மகேந்திரன்

Lakshmi said...

மனதிற்கு இதம், மகிழ்ச்சி அளித்த பதிவு
நன்றிகள்

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

வேலன். said...

வலையுலக அண்ணன்மார்களுக்கும், அக்காமார்களுக்கும், மற்றும் நம் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!ஃஃ

வலையுலக அண்ணன்மார் மற்றும் அக்காமார்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லியிருந்தீர்கள். சரி...நம்மளை மறந்துவிட்டார்என நினைத்தேன்.அடுத்த வரியில் நம்குடும்பத்தினருக்கும் என குறிப்பிட்டு குறையை நிவர்ததி செய்துவிட்டீர்கள. குடும்பத்தினரின் அன்பு கட்டளை ...இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளுங்கள். திருமணத்தில் உங்களை சந்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பிரசன்னா கண்ணன் said...

//என்கிட்டயே வந்து ஒரு பி.ஆர்.ஓ. டிரெயினர், ‘ஸார் நீங்க எந்த பத்திரிகை?’ன்னு கேக்குறான்..?

எனக்கே கடுப்பாகுது.. யோசிச்சு பாக்குறேன்.. தமிழ் சினிமாவின் Encyclopedia-வான அவருக்கு எப்படி இருந்துருக்கும்னு.. :-(

ராஜரத்தினம் said...

//வார்த்தைகள் வராத அந்தக் கணத்தில் //

ஏன் பாஸ் இப்படி? பொண்ணை புடிச்சமா கல்யாணாம் பண்ணமான்னு இல்லாம!

உண்மைத்தமிழன் said...

[[[அத்திரி said...

HAPPY NEW YEAR ANNA.]]]

அத்திரி தம்பி.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்குற.. ஏன்பா எழுத மாட்டேன்ற இப்பல்லாம். என்னைத் திட்டியாவது ஒரு பதிவு எழுதுப்பா..! புத்தாண்டு வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...

உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

கடைசி 7 வரிகள் -நிதர்சமான உண்மை.]]]

நன்றி மனசாட்சி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

மனதிற்கு இதம், மகிழ்ச்சி அளித்த பதிவு
நன்றிகள்.]]]

தங்களது வருகைக்கு மிக்க நன்றி ராம்ஜியண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

சிகரம் மகிழ்ச்சி. ஆனந்தன் சார் நெகிழ்ச்சி. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.]]]

நன்றி ரவி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

வாழ்வினில் துன்பங்கள் எல்லாம் அகன்று நம்பிக்கை ஊட்டும் மிகச் சிறந்த ஆண்டாக 2012 இருக்க வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்.]]]

புத்தாண்டு வாழ்த்துகள் ரூபன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

ரியாஸ் ஸார்..
டிவிஆர் ஐயா..
அகநாழிகையண்ணா..
கோவை நேரம் ஸார்..
மோகன் குமார் ஸார்..
சுகுமார் அண்ணே..
பிலாசபி பிரபாகரன் அண்ணே..
மேனகா
சங்கர் குருசாமி ஸார்..
திண்டுக்கல் தனபாலன் ஸார்..
கலீல் ஸார்..
ரத்னவேல் ஸார்..
மாயன் ஸார்..
லட்சுமி..

அனைவருக்கும் எனது நன்றி கலந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

அண்ணே.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்க போட்டோ பார்த்த பிறகு உங்களை பேர் சொல்லி அழைக்கக் கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன்.:-)]]]

பரவாயில்லை. வாடா, போடான்னு கூப்பிடுங்க.. தம்பியை எப்படி கூப்பிட்டா என்னண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[வேலன். said...

வலையுலக அண்ணன்மார் மற்றும் அக்காமார்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லியிருந்தீர்கள். சரி... நம்மளை மறந்து விட்டார் என நினைத்தேன். அடுத்த வரியில் நம் குடும்பத்தினருக்கும் என குறிப்பிட்டு குறையை நிவர்ததி செய்துவிட்டீர்கள. குடும்பத்தினரின் அன்பு கட்டளை. இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளுங்கள். திருமணத்தில் உங்களை சந்திக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.]]]

உங்க ஆசீர்வாதம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரசன்னா கண்ணன் said...

//என்கிட்டயே வந்து ஒரு பி.ஆர்.ஓ. டிரெயினர், ‘ஸார் நீங்க எந்த பத்திரிகை?’ன்னு கேக்குறான்..?

எனக்கே கடுப்பாகுது.. யோசிச்சு பாக்குறேன்.. தமிழ் சினிமாவின் Encyclopedia-வான அவருக்கு எப்படி இருந்துருக்கும்னு.. :-(]]]

அதான் அவ்வளவு வெறுப்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

//வார்த்தைகள் வராத அந்தக் கணத்தில்//

ஏன் பாஸ் இப்படி? பொண்ணை புடிச்சமா கல்யாணாம் பண்ணமான்னு இல்லாம!]]]

இந்தப் பொண்ணுகளை பிடிக்கிறதுதாங்க பெரும் பாடா இருக்கு..!

ரிஷி said...

//பரவாயில்லை. வாடா, போடான்னு கூப்பிடுங்க.. தம்பியை எப்படி கூப்பிட்டா என்னண்ணா..! //

lol :-))

//இந்தப் பொண்ணுகளை பிடிக்கிறதுதாங்க பெரும் பாடா இருக்கு..!//

அண்ணே! உங்களுக்குன்னு சொல்லல. பொதுப்படையா ஒரு தியரி சொல்றேன். நம்ம வாழ்க்கைல எப்பவாச்சும் ஏதாவது ஒரு காலகட்டத்துல கண்டிப்பா ஒருபொண்ணு கிராஸ் பண்ணுவா. நம்மளை அவங்களுக்கு ரொம்பவே புடிச்சிருக்கும். ஆனா நாம இன்னும் செட்டில் ஆகாததை காரணம் காட்டி தள்ளிப் போட்டோம்னா அந்த வாய்ப்பு போயிடும். அப்படி கிராஸ் பண்ணும்போது டபக்குன்னு புடிச்சு வச்சிக்க வேண்டியதுதான்! என் மலரும் நினைவுகள் :-(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//பரவாயில்லை. வாடா, போடான்னு கூப்பிடுங்க.. தம்பியை எப்படி கூப்பிட்டா என்னண்ணா..! //

lol :-))

//இந்தப் பொண்ணுகளை பிடிக்கிறதுதாங்க பெரும் பாடா இருக்கு..!//

அண்ணே! உங்களுக்குன்னு சொல்லல. பொதுப்படையா ஒரு தியரி சொல்றேன். நம்ம வாழ்க்கைல எப்பவாச்சும் ஏதாவது ஒரு காலகட்டத்துல கண்டிப்பா ஒரு பொண்ணு கிராஸ் பண்ணுவா. நம்மளை அவங்களுக்கு ரொம்பவே புடிச்சிருக்கும். ஆனா நாம இன்னும் செட்டில் ஆகாததை காரணம் காட்டி தள்ளிப் போட்டோம்னா அந்த வாய்ப்பு போயிடும். அப்படி கிராஸ் பண்ணும்போது டபக்குன்னு புடிச்சு வச்சிக்க வேண்டியதுதான்! என் மலரும் நினைவுகள் :-(]]]

கரெக்ட் ரிஷி.. அந்த கிராஸ் டயத்தைத்தான் நான் கிராஷ் பண்ணிட்டேன். இப்ப ரொம்ப வருத்தப்படறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே!]]]

உமக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ராமசாமி..!