ஐஸ்வர்யாராயின் பிரசவமும், மீடியாக்களின் கவலையும்..!

10-11-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..!

தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே பிரேக்கிங் நியூஸாக போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..!


மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய். பிரசவிக்கும் தருணத்திற்காக வட இந்திய சேனல்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.. இதைவிட ஒரு இந்தியனுக்கு முக்கியமாகத் தெரிவிக்கப்பட வேண்டிய செய்தி வேறு எதுவுமில்லை என்ற அவர்களது கூர்மையான அவதானிப்பை ஒப்புக்காக இந்திய மீடியா உலகம் கண்டித்துள்ளது.

BROADCAST EDITOR’S ASSOCIATION  என்னும் தொலைக்காட்சி எடிட்டர்கள் அமைப்பு நாளைய தினம், அதாவது ஐஸ்வர்யாராய் பிரசவிக்கும் தினத்தன்று தொலைக்காட்சி மீடியாக்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் வழிகாட்டி முறைகளை வெளியிட்டிருப்பதுதான் மீடியா உலகத்தின் தற்போதைய கேவலமான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

1. ஐஸ்வர்யாராயின் பிரசவம் பற்றிய செய்தியை முன் கூட்டியே ஒரு செய்தியாக வெளியிடக் கூடாது.. 

2. குழந்தை பிறந்த செய்தியை பிரேக்கிங் நியூஸாக போடக் கூடாது.

3. டிக்கர் செய்தியாக எப்போதும் ஸ்கிரீனில் இருப்பது போன்றும் செய்யக் கூடாது.

4. குழந்தை பிறந்த தேதி, நேரம் இவற்றை வைத்து ஜோதிடர்களை வைத்து கதை செய்யக் கூடாது..

5. மருத்துமனையின் முன்பாகவும், பச்சன்களின் வீட்டின் முன்பாகவும் நேரடி ஒளிப்பரப்பு செய்ய உதவும் ஓபி வேன்களை கொண்டு வந்து நிறுத்தக் கூடாது..

6. மருத்துவமனையில் இருந்து நேரடி ஒளிரப்பு செய்யக் கூடாது..

7. குழந்தையின் புகைப்படம் கிடைத்தால்கூட அவருடைய குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரையில் அதனை வெளியிடக் கூடாது..

- இப்படி சில விதிமுறைகளை தங்களது சங்கத்தில் இணைந்துள்ள அனைத்து மீடியா தரப்பினருக்கும் நேற்று அனுப்பி வைத்துள்ளனர்..!

இந்த அமைப்பின் துணைத் தலைவர் அர்னாப் கோஸ்வாமி.. டைம்ஸ் நெள எடிட்டரான இவர் “இதுவொரு சாதாரண நிகழ்வுதான்.. நாட்டில் இதைவிட பெரிய விஷயமெல்லாம் இருக்கிறது..” என்று திருவாய் மலர்ந்துள்ளார். இதே டைம்ஸ் நெளதான் சில நாட்களுக்கு முன்பாக ஐஸ்வர்யா ஷாருக்கான் கொடுத்த பார்ட்டியில் கலந்து கொள்ள வந்தபோது, தனது சேனலில் பிரேக்கிங் நியூஸ் போட்டு அசத்தியவர்..!

டெல்லிவாலா மீடியாக்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு ஆட்களைப் பிடித்து வைத்துக் கொண்டு தங்களை வளர்த்துக் கொண்டே வருகின்றன. சினிமாக்களிலும் ஆளுக்கொரு கான்களை தங்களது கைப்பிடிக்குள் வைத்திருக்கின்றன. இவர்களின் முக்கிய நோக்கம் வெட்டி வேலை பார்க்கும் இந்தியர்களின் கவனத்தை முழுமையாக தங்களது பக்கம் ஈர்ப்பதுதான்..!

இந்த லட்சணத்தில் இந்த பிரசவ செய்தியை யார் முதலில் பிரேக்கிங் நியூஸாக போடப் போவது என்றுதான் பலத்த போட்டியிருக்கும். யார் முதலில் சொன்னாலும், பச்சன்கள் இதனால் கோபித்துக் கொள்ளப் போவதில்லை..! அவர்களுக்கும் இந்த மீடியாக்கள் அவசியம் தேவை.. கொஞ்சம் வருத்தப்படுவதாக்க் காட்டிக் கொண்டாலும் ஐஸ்வர்யாவுக்கு, மீடியாக்கள் கண் பார்வையில் படவில்லையெனில் தூக்கம் வராது. 

இருவருமே தங்களுக்குள் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் வருத்தப்படுவது போலவும் நடித்துக் காண்பிக்கிறார்கள். இந்த நடிப்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும் நாளை நமக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது..!

வேலை, வெட்டியில்லாத இந்தியர்களே.. பொறுமையாக இன்று நள்ளிரவு முதல் விழித்திருங்கள்.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவின் தங்கமகளோ அல்லது தங்கமகனோ பிறந்துவிடுவார்கள். அதன் பின் உங்கள் நிலைமை எங்கயோ போய்விடும்..!

பின் குறிப்பு : எந்தச் சேனலில் முதலில் பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் எனக்குத் தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்..! 

30 comments:

Ram said...

ரசிகர்கள் கவலை படவேண்டிய விஷயம் தான்...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

Enna ippadi

என். உலகநாதன் said...

//தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே பிரேக்கிங் நியூஸாக போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? //

அண்ணா, அப்புறம் ஏன் நீங்க இந்த செய்தியை எழுதறீங்க?

அப்பு said...

நல்ல கருத்து...
நாம தடுக்கி விழுந்தா கேக்குறதுக்கு நாதி இருக்காது!

அப்பு said...

நல்ல கருத்து...
நாம தடுக்கி விழுந்தா கேக்குறதுக்கு நாதி இருக்காது!

காவேரிகணேஷ் said...

உருப்படாத மு...

Kaliraj said...

பிரசவத்தை நேரா காமிக்கிறேன்னு இந்த மீடியாக்களெல்லாம் கேமராவைத்தூக்கிட்டு கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை

சேட்டைக்காரன் said...

//இந்த அமைப்பின் துணைத் தலைவர் அர்னாப் கோஸ்வாமி//

போதுமே! இந்த அரைக்கிறுக்கன் துணைத்தலைவர் என்பதிலிருந்தே இந்த அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது புரிஞ்சு போச்சு!

//எந்தச் சேனலில் முதலில் பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் எனக்குத் தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்..!//

ஓவர் ஆர்வமாயிருக்குதே! :-)))

Suresh Perumal said...

அண்ணே அவீங்கள விடுங்க.
இந்த பிசாசு பொம்பள 13500 பேர வேலைய
விட்டு நீக்கி இருக்கு. அத பத்தி எழுதுறத
விட்டுவிட்டு உங்களுக்கு ஏன் இந்த விளம்பரம்
நீங்களும் பத்திரிகைதான .
இப்போ நாட்டுக்கு இந்த கட்டுரை ரொம்ப முக்கியம்

goma said...

நாடு இருக்கிற நிலைமையில் இப்போ இதுதான் எல்லோருக்கும் பெரிய கவலை.

தாயும் சேயும் நலமாக பிறவி எடுக்க வாழ்த்துவோம்[தாய்க்கும் இது ஒரு பிறவிதானே]

SURESH said...

இந்தியாவின் தங்கமகளோ அல்லது தங்கமகனோ பிறந்துவிடுவார்கள். அதன் பின் உங்கள் நிலைமை எங்கயோ போய்விடும்..!

உங்களுக்கு ஏன் இந்த விளம்பரம்.இந்த கட்டுரை ரொம்ப முக்கியமா

Kannan.S said...
This comment has been removed by the author.
உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

ரசிகர்கள் கவலை படவேண்டிய விஷயம்தான்...]]]

அப்படீன்றீங்க..? அப்போ நீங்களும், நானும் அப்படித்தானா..?

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

Enna ippadi]]]

நிலைமை அவ்ளோ மோசமா இருக்குண்ணே.. அதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[என். உலகநாதன் said...

//தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே பிரேக்கிங் நியூஸாக போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..?//

அண்ணா, அப்புறம் ஏன் நீங்க இந்த செய்தியை எழுதறீங்க?]]]

இப்படியொரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என்கிற விஷயமாவது வெளில வரணும்ல்ல. அதுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[அப்பு said...

நல்ல கருத்து... நாம தடுக்கி விழுந்தா கேக்குறதுக்கு நாதி இருக்காது!]]]

பேசாம மும்பைக்கு போயி ஐஸ்வர்யா வீட்டுக்குப் பக்கத்துல குடியேறிரலாமா..?

உண்மைத்தமிழன் said...

[[[காவேரிகணேஷ் said...

உருப்படாத மு...]]]

ஹி.. ஹி.. ஹி..!

உண்மைத்தமிழன் said...

[[[Kaliraj said...

பிரசவத்தை நேரா காமிக்கிறேன்னு இந்த மீடியாக்களெல்லாம் கேமராவைத் தூக்கிட்டு கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.]]]

நாளைக்கு பாருங்க கூத்தை.. என்னவெல்லாம் நடக்கப் போகுதுன்னு..!?

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//இந்த அமைப்பின் துணைத் தலைவர் அர்னாப் கோஸ்வாமி//

போதுமே! இந்த அரைக்கிறுக்கன் துணைத் தலைவர் என்பதிலிருந்தே இந்த அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது புரிஞ்சு போச்சு!

//எந்தச் சேனலில் முதலில் பிரேக்கிங் நியூஸ் வந்தாலும் எனக்குத் தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்..!//

ஓவர் ஆர்வமாயிருக்குதே! :-)))]]]

ம்.. என்ன செய்யறது.. நானும் சராசரி இந்தியனாச்சே..?

உண்மைத்தமிழன் said...

[[[Suresh Perumal said...

அண்ணே அவீங்கள விடுங்க. இந்த பிசாசு பொம்பள 13500 பேர வேலைய விட்டு நீக்கி இருக்கு. அத பத்தி எழுதுறத விட்டுவிட்டு உங்களுக்கு ஏன் இந்த விளம்பரம் நீங்களும் பத்திரிகைதான. இப்போ நாட்டுக்கு இந்த கட்டுரை ரொம்ப முக்கியம்.]]]

அதான் நீங்களே சொல்லிட்டீங்களேண்ணே பிசாசு பொம்பளைன்னு.. நான் வேற தனியா சொல்லணுமா..? திட்டுறதுக்கு வார்த்தைகள் கிடைக்கணுமே.. எல்லாத்தையும் ஏற்கெனவே வாரி இறைச்சாச்சே..?

உண்மைத்தமிழன் said...

[[[goma said...

நாடு இருக்கிற நிலைமையில் இப்போ இதுதான் எல்லோருக்கும் பெரிய கவலை. தாயும் சேயும் நலமாக பிறவி எடுக்க வாழ்த்துவோம் [தாய்க்கும் இது ஒரு பிறவிதானே]]]]

ஓகே.. தெரிந்த பிரபலம் என்ற வகையில் நாமும் வாழ்த்துவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[SURESH said...

இந்தியாவின் தங்கமகளோ அல்லது தங்கமகனோ பிறந்துவிடுவார்கள். அதன் பின் உங்கள் நிலைமை எங்கயோ போய்விடும்..! உங்களுக்கு ஏன் இந்த விளம்பரம்.இந்த கட்டுரை ரொம்ப முக்கியமா?]]]

ச்சும்மாதான்.. கண்டிஷன் போடுற அளவுக்கு மீடியாக்களின் நிலைமை இருக்கே.. அதுனாலதான்..!

ராம்ஜி_யாஹூ said...

மிகப் பெரிய பெட்டிங் (கோடிக்கணக்கில்) மும்பையில் நடக்கிறதாம்

D. Chandramouli said...

Stupid press - for TRP ranking, they will go to any extent.

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

மிகப் பெரிய பெட்டிங் (கோடிக்கணக்கில்) மும்பையில் நடக்கிறதாம்.]]]

படித்த திருடர்களின் வேலை இது..! அலுங்காமல், குலுங்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து சம்பாதிக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[D. Chandramouli said...

Stupid press - for TRP ranking, they will go to any extent.]]]

இதுவும் பிஸினஸாம் ஸார்..! ஒருவகையான திருட்டுதான் இது..!

பார்வையாளன் said...

, பிட்டுபட விமர்சகர் யார்? ஆய்வு முடிவுகள்!!!

பறக்கும் குதிரை said...

///அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும்///

அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லையே.. அவர்கள் பிரபலம் என்பதால் நாம் அவர்களின் சொந்த விஷயங்களைக் கூட கிண்டலாகப் பார்க்கிறோம் அல்லவா?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

பிட்டு பட விமர்சகர் யார்? ஆய்வு முடிவுகள்!!!]]]

உன்னையெல்லாம் தம்பின்னு வேற சொல்ல வேண்டியிருக்கு.. என் தலையெழுத்து..!

சித்ரவேல் - சித்திரன் said...

நம்ம மக்கள் ரசனை அப்படினு சொல்லி... பத்திரிக்கைக்கார எழுதுறாங்க.மக்களோ பத்திரிக்கைக்காரங்களே இப்படித்தான் எதையாவது சொல்றாங்கணு அடுத்து சினேகாக்கு கல்யாணம் எப்போ நு பேச ஆரம்பிச்சிடுவாங்க...
இக்கரைக்கு அக்கரை பச்சைதான்..