ஆ.ராசா, கனிமொழி, தயாநிதியை தப்ப விடும் சி.பி.ஐ..!


05-09-2011

 
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் புயல் மீண்டும் டெல்லியில் மையம் கொண்டு, பெரும் அதிர்வுகளை உருவாக்கக் காத்திருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி என அதற்குத் தேதியும் குறிக்கப்​பட்டுள்ளது!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னோட்டங்கள் தேவை இல்லை. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பாக நடந்துவரும் இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில், இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும்வரை கைது செய்யப்​பட்ட யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது!என்று சி.பி.ஐ. தரப்பு இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்களை வைத்ததால், கைதான யாரும் இதுவரை வெளியில் வர முடியவில்லை.

'
இவர்களை வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளேயே வைத்திருக்கப் போகிறீர்கள்..?’ என்று நீதிபதி ஷைனியே சி.பி.ஐ. தரப்பு வக்கீல்களிடம் கோபமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து இதுவரை பதிவான இரண்டு குற்றப் பத்திரிகைகளை அடிப்படையாக​வைத்துக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதி ஷைனி முன்னால் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

கடந்த 25-ம் தேதி ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார், சில அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லி நீதிமன்றத்தின் கவனத்தை முழுமையாகத் தங்கள் பக்கம் திருப்பினார்.

''
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால், இதில் அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரும் தெரிவித்து இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் பதிவாகி உள்ளது. எனவே, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகிய மூவரையும் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து, சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்!'' என்று வழக்கறிஞர் சுஷில்குமார் சொன்ன தகவல், அங்கே இருந்த சி.பி.ஐ. தரப்பை மட்டும் அல்ல... செய்தி பரவியதும் பிரதமரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

''
ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற உடனேயே அதை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்த​தாகப் புகார் சொல்லப்​பட்டுள்ளது. ஆனால், உரிமங்கள் விற்கப்​படவில்லை. அதிகபட்ச உச்சவரம்பான 74 சதவிகிதத்துக்கு உட்பட்டு சில நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளன. அந்தப் பரிவர்த்தனைக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தந்துள்ளது!'' என்று சொன்ன சுஷில்குமாரின் வாதங்கள், ப.சிதம்பரத்துக்கும் சிக்கலைக் கொடுத்துள்ளன.

அடுத்து தயாநிதி மாறன் மற்றும் அருண்ஷோரி​யையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''2003-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விதிமுறைகளைத்தான் ராசா பின்பற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி மற்றும் தயாநிதி மாறனை இதுவரை ஏன் கேள்வி கேட்கவில்லை? 2007-ம் ஆண்டு தயாநிதி மாறன் பதவி விலகும் முன்பு ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதை ராசா பதவிக்கு வந்ததும் வெளியில் சுட்டிக் காட்டி இருக்கிறார்!'' என்று சுஷில்குமார் சொல்வது, தயாநிதி மாறனை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.''சி.பி.ஐ. தனது ஆவணங்களை இந்த கோர்ட்டில் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆதாரங்​களை உடனடியாகத் தாக்கல் செய்து... அதை எங்களுக்கும் தந்தால்தானே வழக்கை எதிர்கொள்ள முடியும்?'' என்றும் சுஷில்குமார் கேள்வி எழுப்பினார். இந்த ஆவணங்கள் அனைத்தையும் கேட்டு ராசா, ஒரு அவசர மனுவையும் தாக்கல் செய்தார். இது சி.பி.ஐ-க்கு ஒரு விதமான நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனை சி.பி.ஐ. அதிகாரிகள் மட்டத்தில் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி தங்களது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஷைனி முன் ஆஜரானார், சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணு​கோபால். ''இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துவிட்டது. தனது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யும்!'' என்று அறிவித்து, புயல் சின்னத்தைக் காட்டி உள்ளார். அதற்கு முன்னதாக வருவாய்த் துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் தங்களது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வார்கள் என்றும் வேணுகோபால் சொன்னார்.

''
இந்தக் குற்றப் பத்திரிகையில் கைது செய்யப்பட்ட அனை​வரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை முழுமையாகக் கொண்டுவருவோம். இந்த மொத்த சதியிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதையும் சொல்வோம். இதற்காகச் செய்யப்பட பணப் பரிவர்த்தனைகள், எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் கொண்டு​​வருவோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் குறித்த முழுமையான குற்றச்சாட்டுகள் வெளியில் வரலாம். மேலும், தயாநிதி மாறன் குறித்து ஏற்கெனவே தனது அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களைச் சொல்லி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொழில் அதிபர் சிவசங்கரன் இது தொடர்பாக விரிவான வாக்கு​மூலத்தை சி.பி.ஐ-யின் முன்பு பதிவு செய்துள்ளார். ''என்னுடைய ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் வற்புறுத்தலால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது!'' என்பது இவரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் புகாரை செப்டம்பர் 15-ம் தேதிய குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்போகிறார்களா அல்லது அது தனியாக வருமா என்பது தெரியவில்லை!

இப்படி மொத்தமும் தி.மு.க. பிரமுகர்களை மையம்கொண்டதாக அந்தக் குற்றப் பத்திரிகை இருக்கப்​ போகிறது. பொதுவாக தி.மு.க. செப்டம்பர் 15-ம் தேதியை முப்​பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடும். இந்த ஆண்டு சி.பி.ஐ-யும் சேர்ந்து 'கொண்டாடப்போகிறது?!

-
சரோஜ் கண்பத்

தப்பியது கலைஞர் டி.வி.?

2-
ஜி வழக்கின் விசாரணை குறித்து அவ்வப்போது சி.பி.ஐ. தரப்பிலும் அமலாக்கப் பிரிவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நிலவர அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்த அறிக்கையில், '2-ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதில் சுமார் 7,800 கோடி முதல் 9,000 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம்என்று அமலாக்கப் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சைப்ரஸ், சேனல் ஐலேண்ட் போன்ற தீவுகளில் இருந்து பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு 2000 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்திலும் பின்னர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதில், 'மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்தில் அரசின் கொள்கைக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சில கம்பெனிகளுக்கு அதிகப்படியாக ஒதுக்கப்பட்டது. அதனால் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்து ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், அவர் கால தாமதம் செய்து ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளாரே தவிர, ஏர்செல் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி தனக்கு சாதகமான ஆதாயம் பெற்றதற்கான சாட்சியம் எங்களுக்கு கிடைக்கவில்லைஎன்று தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் டி.வி. பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்ததாகக் கூறுவதை சி.பி.ஐ. தரப்பு ஏற்றுக் கொள்கிறது என்றும் அதனால் கலைஞர் டி.வி-க்கு உடனடியாக பிரச்னை ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஷாகித் பால்வாவின் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளும், சில வீடுகள், நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியவைகளோடு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு 2-ஜி வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கும் குற்றப் பத்திரிகை மேலும் சில புயல்களைக் கிளப்பும் என்றே தெரிகிறது.

''200
கோடி வந்தது கனிமொழிக்குச் சொல்லப்படவில்லை!''

கடந்த மே 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆவேசம், அவரது வழக்கறிஞர் மூலமாக வெடித்தது. ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார்தான் கனிமொழிக்கும் வழக்கறிஞர்.

'
கனிமொழி மீது வழக்குத் தொடர்ந்து நடைபெறுமானால், பிரதமரையும் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சுஷில்குமார்.

'
கனிமொழியை இந்த வழக்கில் சேர்த்த சி.பி.ஐ., முறைப்படி அனுமதி பெறவில்லை. அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவரை சி.பி.ஐ. ஒரு தனிப்பட்ட நபராகவே கருதிக் கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்தது குறித்து முறைப்படி மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதிகூட பெறவில்லை. கலைஞர் டி.வி-யில் 20 சதவிகிதப் பங்கு இருப்பது மட்டுமே அவர் செய்த குற்றம் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. ஆனால், அவர்தான் கலைஞர் டி.வி-க்கு மூளையாக இருந்தார் என்று சொல்லப்​படுவது தவறு. அந்த டி.வி. 10 சதவிகித வட்டிக்கு 200 கோடியைக் கடன் வாங்கிய விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விஷயம் அவருடைய கவனத்துக்கும் கொண்டு வரப்படவில்லை. இரண்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆனால், ஆவண சாட்சியங்கள் எதுவும் கனிமொழிக்கு எதிராக இல்லை!'' என்று சுஷில்குமார் வாதிட்டார்.

இந்த வாதங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருந்தார் கனிமொழி!

நன்றி : ஜூனியர்விகடன்


15 comments:

அன்பு said...

பண்றதே காபி பேஸ்டு அதில் வேற இவ்வளவு லேட்டா. இதெல்லாம் நேத்தே ஒருத்தர் காபி பேஸ்டு பண்ணிட்டாரு

சேட்டைக்காரன் said...

2G விவகாரமும் போபர்ஸ் போன பாதையில் போகத் தொடங்கியிருக்கிறதோ? சுத்தம்!

ஷீ-நிசி said...

இது இப்போதைக்கு முடியாது போல இருக்கு!

ஐத்ருஸ் said...

மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பதிவா, ஷ்ஷ்ஸ்ஸப்ப்பாபாபாபாபா...........

ராஜ நடராஜன் said...

உங்களை சி.பி முந்திக்கொண்டு விட்டார்.இருந்தாலும் பரவாயில்லை.பிற்காலத்தில் தேடலுக்கு உங்கள் தளமே சிறப்பு என்பதால் உங்கள் பதிவு தேவைதான்.

உண்மைத்தமிழன் said...

[[[அன்பு said...

பண்றதே காபி பேஸ்டு அதில் வேற இவ்வளவு லேட்டா. இதெல்லாம் நேத்தே ஒருத்தர் காபி பேஸ்டு பண்ணிட்டாரு.]]]

அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை அன்பு. என் தளத்துல நான் பதிவு செய்யணுமா? வேண்டாமா?

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

2-G விவகாரமும் போபர்ஸ் போன பாதையில் போகத் தொடங்கியிருக்கிறதோ? சுத்தம்!]]]

ஆமாம்.. அடுத்த பொதுத் தேர்தலுக்குள் இழுத்து மூடி விடுவார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷீ-நிசி said...

இது இப்போதைக்கு முடியாது போல இருக்கு!]]]

அதனால் என்ன? ராசாவும், கனியும் சீக்கிரம் வெளியில் வந்துவிடுவார்கள். தயாநிதி உள்ளே போகாமல் தப்பித்துக் கொள்வார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஐத்ருஸ் said...

மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பதிவா, ஷ்ஷ்ஸ்ஸப்ப்பாபாபாபாபா.]]]

ஏன் இப்படி..? எனக்கே அலுக்கலை.. உங்களுக்கேன்..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

உங்களை சி.பி முந்திக் கொண்டுவிட்டார். இருந்தாலும் பரவாயில்லை. பிற்காலத்தில் தேடலுக்கு உங்கள் தளமே சிறப்பு என்பதால் உங்கள் பதிவு தேவைதான்.]]]

என்னைப் புரிந்து வைத்திருப்பமைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

ரிஷி said...

சிரிப்பு போலிஸ் ஆஃப் இந்தியாவை இன்னுமா உலகம் நம்புது?!!!
இழப்பே இல்லைனு ட்ராய் கூட சொல்லிடுச்சே..!! அப்புறம் என்ன..?
எல்லாரும் கிளம்புங்க.. கிளம்புங்க.. காத்து வரட்டும்! :-)

BSNL டெலிபோன் லைன்ஸ் தவறா யூஸ் பண்ணாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருந்ததே? அது என்னாச்சு? ஒரு விசாரணை கூடப் பண்ணமாதிரி தெரியலியே..!!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சிரிப்பு போலிஸ் ஆஃப் இந்தியாவை இன்னுமா உலகம் நம்புது?!!! இழப்பே இல்லைனு ட்ராய்கூட சொல்லிடுச்சே..!! அப்புறம் என்ன..?
எல்லாரும் கிளம்புங்க.. கிளம்புங்க.. காத்து வரட்டும்! :-)

BSNL டெலிபோன் லைன்ஸ் தவறா யூஸ் பண்ணாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருந்ததே? அது என்னாச்சு? ஒரு விசாரணை கூடப் பண்ண மாதிரி தெரியலியே..!!]]]

அவ்ளோதான் ரிஷி.. அடுத்த போபர்ஸ் இதுதான்..! திருந்தாத ஜென்மங்கள் அரசியல்வியாதிகளாக இருக்கிறவரைக்கும் நாம என்ன செய்ய முடியும்..?

Prakash said...

2G loss? Government gained over Rs 3,000 crore: TRAI

2G லைசென்ஸ் வழகியத்தில் எந்த இழப்பும் இல்லை, மாறாக அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது

2G லைசென்ஸ் வழகுவதில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று டெலிகாம் துறையில் அடிப்படை புரிதல் இல்லாத ஆடிட்டர் தயாரித்த அறிக்கையை நம்பிய படித்த அறிவு ஜீவிகள் இப்போது, அந்த துறையில் நிபுணத்துவமும், அறிவும் பெற்ற வல்லுநர் குழுவை கொண்டு TRAI அளித்துள்ள அறிக்கையை குறித்து ஒரு பேச்சையும் காணோம்..

TRAI அறிக்கை படி, 2G லைசென்ஸ் வழகியத்தில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை, மாறாக உபயோகபடுத்தாமல் இருந்த 2G அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது...அவற்றை ஏல முறையில் விற்பனைசெய்யவும் எந்த பரிதுரையையும் செய்யவில்லை என்று TRAI தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பிடிக்காதவர்கள் குறித்து எந்த செய்திவந்தாலும் ஆதாரம் இல்லை என்றாலும், பொய் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும் அவாள் ஊடகங்கள்,அவற்றை உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பும் மக்கள் கூட்டமும் ,இந்த முக்கியமான செய்தியை குறித்து ஒரு மூச்சையும் விடகாணோம்...

எப்படி விடுவார்கள், ஊடகங்களும், சிலரும் சேர்த்து ஊதி ஊதி பெரிதாக்கிய 2G பலூன், வெகு சீகிரமாக ஒன்றுமில்லாமல் ஆகபோகிறது...ஆனால் இதற்கும் இந்த கும்பல் எதாவது ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள்.

இவர்கள் ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றசாட்டை கூறுவார்களாம். சிபிஐயும்,கோர்ட்டும்,இல்லாத ஆதாரத்தை கொண்டு தண்டனையை கொடுக்கவேண்டும் என்று கூச்சல் இடுவார்கள்...

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/telecom/2g-loss-government-gained-over-rs-3000-crore-trai/articleshow/9891650.cms

Prakash said...

இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல

- அப்போ ஏன்டா 2Gல 1.76 லட்சம் கோடி இழப்புன்னு வாய் கூசாம பொய் சொன்னிங்க...

"Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG

நேற்று வெளியான கிருஷ்ணா கோதாவரி பெட்ரோலிய ஒதுக்கீடு, ஏர் இண்டியாவிற்கு விமானம் வாங்கியது போன்றவற்றிற்கான CAG ஆடிட்டர் அறிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி, எந்தவிதமான இழப்பு தொகையையும் குறிபிடப்படவில்லை. ஏன் அவ்வாறு அரசாங்கத்திற்கான இழப்பு தொகையை கணக்கிட்டு குறிப்பிடபடவில்லை என்று CAGயை கேட்டதற்கு,இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல,அது தணிக்கைகாண வரைமுறைக்குள் வராது (ஆடிட் ஸ்கோப்) என்று CAG தலைமை ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கைகளை CAG வெளியிடும்போது எந்தவிதமான டிவி கேமேரக்களோ, நேரடி ஒளிபரப்பையோ CAG செய்யவில்லை.

ஆனால், 2G குறித்த CAG அறிக்கையில்,அதில் எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் இதே CAG 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எந்த அடிப்படையில் (ஆடிட் ஸ்கோப்) அறிவித்தது ?...மேலும் 2G குறித்த அறிக்கையை டிவி கேமேரகளுடன் நேரடி ஒளிபரப்பையும் செய்தது. இந்த ஆதாரம் அற்ற CAG அறிக்கையை அடிப்படையாக கொண்டுதான், ஏதோ திமுக 1.76 லட்சம் கோடி கொளையடிது விட்டதுபோல, குறிபிட்ட பிரிவினரின் மீடியாக்கள் தொடர் பொய் பிரச்சாரம் செய்தன,இதை நம் மக்கள் நம்பும் மாதிரி தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இவற்றை பார்க்கும்போது, இது ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாக சிஏஜி 2G விஷயத்தில் வரம்பை மீறி செயல்பட்டிருப்பது தெரிகிறது. அந்த சதித்திட்டம் 15 வருடங்களுக்கு மேலாக மத்தியில் திமுக ஒரு முக்கிய கட்சியாக இருப்பதை பொறுகாமலா அல்லது செல்போன் கட்டணங்களை குறைத்து, செல்போன் தொழிலில் ஒரு தரப்பின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தி அணைத்து தரப்பினரும் பயன்பெறும்வண்ணம் செய்ததை பொறுகாமலா என்று தெரியவில்லை. இன்னும்கூட சிலர் இதை புரிந்துகொளாமல் இருகின்றனர்.


CAG officials justified the absence of a specific figure on estimate of losses, especially in the KG Basin contract, saying they were beyond the audit norms. "Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG, said.

There were no TV cameras and live telecast as the CAG briefed media about three audit reports tabled in Parliament -- the audit of oil exploration contracts, especially of KG Basin given to Reliance Industries, the aircraft purchase for Air India/Indian Airlines and their integration

http://timesofindia.indiatimes.com/india/Has-CAG-given-up-its-tough-posture/articleshow/9928525.cms

உண்மைத்தமிழன் said...

பிரகாஷ் நானும் படித்தேன்..!

இருப்பதை எடுத்து விற்பனை செய்வதில்தான் கோல்மால் செய்திருப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகி அது சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு வந்து இப்போது குற்றவாளிகள் ஜெயிலில் இருக்கிறார்கள்..!

தற்போது கதை மாறுவதற்குக் காரணம், குற்றவாளிகள் எத்தனை நாளைக்கு நாங்களே அடி வாங்குறது.. பின்னாடி வரிசைல நின்னவங்களும் வாங்கட்டுமே என்று பிரதமரையும், ப.சி.யையும் இழுத்துவிட்டதால் இன்னொரு போபர்ஸ் வழக்கை போல் இதையும் இழுத்து மூட திரைக்கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான் உண்மை..

இந்த கேவலம்கெட்ட, வெட்கம்கெட்ட அரசியல்வியாதிகள் நாசமாய்ப் போகட்டும்..!