டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

27-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு, சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... என்ற சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது.

கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத்துக்கு அணை போட்டார்கள்.

“கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிறபாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

'பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு பெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழியைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.

20-ம் தேதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி-க்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். 'பெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டி இருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.

மீடியா வெளிச்சம்படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந்தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.

20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.

மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.

சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி, அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒரு நாள்கூட இருக்க மாட்டான். ஆதிகிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’ என்றபடியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.

சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப் பையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான்.

'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும், ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதற வைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’


''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம் அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
 
அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக் கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.

அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப் போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி. டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.

23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, 'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!

நன்றி : ஆனந்தவிகடன்

50 comments:

தமிழ் உதயம் said...

நன்றி. ஆனந்தவிகடன் கட்டுரையை பகிர்ந்தமைக்கு. "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்" என்பதை இந்தியத் நீதித்துறை நிருபித்துள்ளது. சட்டத்தின் ஒட்டைகள் மூலம், தவறு செய்துவிட்டு எப்போதும் தப்பித்து விட முடியாது. எப்போதாவது வசமாக சிக்கி சின்னாபின்னமாகவும் நேரும் எனபது சுரேஷ் கல்மாடி மற்றும் கனிமொழி கற்று தரும் பாடம்.

அனாமிகா துவாரகன் said...

ஏன் அங்கிள், நீங்க தூங்கவே மாட்டீங்களா

Karikal@ன் - கரிகாலன் said...

வருத்தமாக தான் இருக்கிறது!
ஆனாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும்

Rasu said...

அனுதாபம் வர்ற மாதிரி எதுவும் எழுதாதீங்க....

Swami said...

இந்த அயோக்கியதனமான ஊடகங்களை நினைத்தாலே எரிச்சல் தான் வருகிறது. என்னவோ தேசத்துக்கு போராடி ஜெயிலுக்கு போனா மாதிரி அனாவசியமாக அனுதாப கட்டுரை எழுத வேண்டியது. அப்படி பார்த்தால் சந்தனக்கடத்தல் வீரப்பன், பாலியல் டாக்டர் பிரகாஷ் , நாவரசை கொலை செய்த ஜான் டேவிட், எல்லாருமே அனுதாபம் காட்டப்பட வேண்டியவர்கள் தான். அவங்களுக்கும் பிள்ளை ,.குடும்பம் ,பாசம் எல்லாம் தான் இருந்தது.

சசிகுமார் said...

அண்ணே அமைச்சர் விபத்தின் உண்மை நிலை என்ன என்பதை ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கண்ணே ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு செய்தி வருது எதை நம்புவதென்றே தெரியல.

guru said...

Yenna saravanan sir intha post konjam anuthaabam varamathiri irukku.

thamizhan said...

மிக அதிகமாக பலனை அனுபவித்தவர்கள் எல்லாம் வெளியே!மாட்டிகிட்டவர்கள் உள்ளே!என்னா(அ)நியாயம் இது?இந்திரா காந்தியையே ஜெயிலுக்குள்ள போட்டாங்க! ஆனால் கனிமொழியின் பங்குக்கு இது அதிகமோ என நினைக்கவைக்கிறது உங்கள் அனுதாப --விகடன்--கட்டுரை.

Ramesh said...

Pros media ku ithu next stage..sympathy wave a create pana try panrathu..

ரிஷி said...

சரவணன்,
ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கும் இந்தக் கட்டுரையில் விவரணை செய்திருக்கும் சம்பவங்களும் சம்பந்தமேயில்லை. இதையெல்லாம் தயவுசெய்து ஆவணப்படுத்தவேண்டாம். இது இதழ் விற்பனையை அதிகரிக்க விகடன் செய்யும் தரங்கெட்ட யுக்திகளுள் ஒன்று!

மணிப்பக்கம் said...

குடும்பம் குட்டி உள்ளவங்களை எல்லாம் தண்டிக்க கூடாதுன்னு சட்டத்தை மாத்தணும் முதல்ல .. எவ்வளவு கன்றாவி காட்சிகள்!

(அனுதாபம் வருவது போன்று உள்ளவற்றை எடிட் செய்து போடுங்கள் ஐயா!, முடியல!)

raja said...

உங்களுக்கு மட்டுமா.. கண்ணீர் கவலைகள், அன்பு, பாசம், இரக்கம், தவிப்பு எல்லாம். எங்களுக்கும் இருக்கிறது. நாங்களும் உங்களை போல இரத்தமும் சதையுமாக படைக்கப்பட்டவார்கள் தான். செஞ்சோலையில் எங்களை சிறுமிகள் பதுங்கிய பதுங்கு குழியில் உங்கள இந்திய களவாணிகளின் குண்டுகள் எங்கள் குழந்தைகளின் உடல்களை சிதறடித்ததே ஞாபகமாவது இருக்கிறதா... ? உங்களை போல எந்த வசதியையும் அனுபவிக்காத அந்த குழந்தைகள் என்ன பாவம் (ஊழல்) செய்தது..? எத்தனை அப்பாவிகள் கண் தலை கால் சிதற மாண்டனர் .. ? அப்பொழுது செய்த நிகழ்வுகள் .. 3 மணி நேர உண்ணநோன்பு நாடகம், சிரிப்பொலி தொலைகாட்சி தொடங்கியது.. படுபாவிகளா... முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகத்தை எந்த அளவுக்கு கொச்சை படுத்தினீர்கள்...? வெயிலில் எரிந்த அந்த உடல் எப்படி துடித்திருக்கும்... உனது பேரன்கள் சினிமா எடுத்து நடிகைகளுடன் சல்லாபித்த நேரம் அது... யோசித்து பாருங்கள் ... நண்பர்களே.. இவர்கள் ஒன்றும் தேச நன்மைக்காக ஒன்றும் போராடி திஹாருக்கு செல்லவில்லை.. பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு பணத்தை கொள்ளையடித்துவிட்டு உள்ளே சென்று மிகச்சிறிய வசதிகுறைவுகளை அனுபவிக்கிறார்கள் அவ்வளவே...?

krishna said...

சட்டம் தன் கடமையை செய்தது...சட்டம் அனைவருக்கும் சமம். ஒன்றும் தவறே செய்யாமல் இவர் சிறைக்கு போனால் தான் நாம் அனுதாபபடவேண்டும். இவர்கள் செய்த துரோகங்களுக்கு இன்னும் அனுபவிக்க எவ்வளவோ உள்ளது. தமிழர்கள் கொத்து கொத்தாக அங்கு படுகொலை செய்யப்பட்டு கொடன்னு இருந்தபோது அதிகாரதிற்க்காகவும், பணத்திற்காகவும் தன் நிலை மறந்து பதவி சுகம் வேண்டி ஓடியவர்கள் தானே இவர்கள். அந்த மக்கள் பட்ட, படும் பாட்டிற்கு முன்னாள் இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை... இவராவது தன் மகனை பிரிந்து தான் இருக்க முடியவில்லை... அங்கு எத்தனை தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்தனரோ...! பிறர்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்ன பிற்பகல் தாமே வரும்... வாழ்க ஜனநாயகம்..

Ganpat said...

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி நம்நாட்டில் வ.உ.சிதம்பரம்ன்னு ஒருத்தர் இருந்தார்.அவர் தூத்துக்குடியில் ஒரு பெரிய வணிகர்/வழக்கறிஞர் வாழ்ந்துவந்தார்.அவர் தன் சொத்து சுகம் எல்லாம் துறந்து தேசப்பக்தி காரணமாக ஒரு கப்பல் கம்பனி தொடங்கி,தேசத்துரோகம் குற்றம் சாட்டாப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் செக்கு இழுத்தார்.சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெற்ற இவர் வெளியே வந்தபோது சொத்தும் இல்லை பெற்ற வக்கீல் பட்டமும் பறிக்கப்பட்டு,மளிகை கடைகளில் கணக்கெழுதி தன இறுதி காலத்தை கழிக்க நேர்ந்தது.
================================
இதற்கும் கனிமொழி சிறை தண்டனைக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?
விகடன் கட்டுரையை படித்த பாவத்தை எப்படி போக்கிக்கொள்வது?
இப்படி நல்ல நேர்மையான தேச பக்தர்களைப்பற்றி படித்துதான்!!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயம் said...

நன்றி. ஆனந்தவிகடன் கட்டுரையை பகிர்ந்தமைக்கு. "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்" என்பதை இந்தியத் நீதித்துறை நிருபித்துள்ளது. சட்டத்தின் ஒட்டைகள் மூலம், தவறு செய்துவிட்டு எப்போதும் தப்பித்துவிட முடியாது. எப்போதாவது வசமாக சிக்கி சின்னாபின்னமாகவும் நேரும் எனபது சுரேஷ் கல்மாடி மற்றும் கனிமொழி கற்று தரும் பாடம்.]]]

உண்மைதான்.. எல்லோரையும் எல்லா சமயத்திலும் ஏமாற்றிக் கொண்டேயிருக்க முடியாது..! இது இப்போது நிரூபணமாயிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[அனாமிகா துவாரகன் said...

ஏன் அங்கிள், நீங்க தூங்கவே மாட்டீங்களா?]]]

அங்கிளா.. மை காட்.. நான் யூத்தும்மா.. சின்னப் பையன்.. இவ்ளோ பெரிய வார்த்தையையெல்லாம் சொல்லி தூங்க விடாம செஞ்சிராதம்மா தாயி..!

உண்மைத்தமிழன் said...

[[[Karikal@ன் - கரிகாலன் said...

வருத்தமாகதான் இருக்கிறது!
ஆனாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும்.]]]

வேற வழி.. இதுதான் அது..!

உண்மைத்தமிழன் said...

[[[Rasu said...

அனுதாபம் வர்ற மாதிரி எதுவும் எழுதாதீங்க....]]]

நான் எழுதலீங்க.. ஆனந்தவிகடன்ல எழுதியிருக்காங்க..!

உண்மைத்தமிழன் said...

Swami said...

இந்த அயோக்கியதனமான ஊடகங்களை நினைத்தாலே எரிச்சல்தான் வருகிறது. என்னவோ தேசத்துக்கு போராடி ஜெயிலுக்கு போனா மாதிரி அனாவசியமாக அனுதாப கட்டுரை எழுத வேண்டியது. அப்படி பார்த்தால் சந்தனக் கடத்தல் வீரப்பன், பாலியல் டாக்டர் பிரகாஷ், நாவரசை கொலை செய்த ஜான் டேவிட், எல்லாருமே அனுதாபம் காட்டப்பட வேண்டியவர்கள்தான். அவங்களுக்கும் பிள்ளை குடும்பம் , பாசம் எல்லாம்தான் இருந்தது.]]]

இதாவது பரவாயில்லை.. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அத்தனை குற்றவாளிகளும் உள்ளே போக வேண்டும் என்று அழுத்தி, அழுத்தி எழுதி வந்ததே விகடன்தான்.. இப்போது இப்படியும் எழுதுகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...

அண்ணே... அமைச்சர் விபத்தின் உண்மை நிலை என்ன என்பதை ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கண்ணே... ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு செய்தி வருது எதை நம்புவதென்றே தெரியல.]]]

சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடியட்டும்ண்ணே.. அந்த லாரியைப் பிடிச்சுட்டா எல்லாம் தெரிஞ்சிரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[guru said...

Yenna saravanan sir intha post konjam anuthaabam varamathiri irukku.]]]

அப்படித்தான் இருக்கு..! ஆனா நான் எழுதலை.. விகடன் பத்திரிகையினர் எழுதியது..!

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...

மிக அதிகமாக பலனை அனுபவித்தவர்கள் எல்லாம் வெளியே! மாட்டிகிட்டவர்கள் உள்ளே! என்னா(அ)நியாயம் இது? இந்திரா காந்தியையே ஜெயிலுக்குள்ள போட்டாங்க! ஆனால் கனிமொழியின் பங்குக்கு இது அதிகமோ என நினைக்க வைக்கிறது உங்கள் அனுதாப --விகடன்--கட்டுரை.]]]

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்ச்சிக்காக இதனை ஆவணப்படுத்தியுள்ளேன். அவ்வளவுதான் நண்பரே..!

Rasu said...

ஆனந்தவிகடன் பத்திரிக்கை செய்தியை படித்து காட்டாற்று வெள்ளமாய் எனக்கு கோபம் வருகிறது.....

ஒரு காலத்தில் பத்திரிக்கைகள் புரட்சிகளை ஏற்ப்படுத்தின...ஆனால் இன்று மிக அதிசய நிகழ்வான ஊழல் வழக்கில் அரசியல்வாதிகள் கைதையும் அவர்களின் சிறை வாழ்க்கையையும் மிக துக்ககரமாக வெளியிட்டு ...மக்களிடம் அனுதாபம் பெறமுயற்சிக்கிறார்கள்...ஜாமின் எப்படியும் வாங்கிவிடலாம் ....ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக இந்த கருணாநிதி கும்பல் பத்திரிக்கையை பயன்படுத்துகிறார்கள்....

( தலைப்பே சரியில்லை.... கருணாநிதி தழுதழுத்தார்...துடித்தார்...அம்மா -மகள் உருக்கமான சந்திப்பு உருகினார்....வேதனை...ஓலம்....கதறினார்.....கண்ணீர்விட்டார்.....பாசப்போராட்டம்... உணர்ச்சிப்பெருக்கு.....தன் குழந்தையிடம் சாரி கேட்ட கனிமொழி...)

இந்தமாதிரி தலைப்பெல்லாம் உங்களுக்கு எம்மீனவர்கள் செத்தப்ப மறந்துபோச்சா....ஒரு இனத்தையே அழிச்சாங்களே அப்ப ஏன் இந்த மாதிரி தலைப்பெல்லம் போடவில்லை.....கருணாநிதிக்கு மட்டும்தன் கண்ணில் தண்ணீர் வருகிறதா??????
பொதுஜனத்துக்கு வந்தால் தக்காளிச்சட்னி.....அதுவே கலைஞர் குடும்பத்துக்கு வந்தால் அது இரத்தம்......என்ன நியாயம் இது....

நியாயப்படி பார்த்தால் தலைப்பை இப்படி வைக்கணும் திருடர்கள் சந்திப்பு...கோர்ட்டில் ஒன்றுகூடிய மாஃபியா கும்பல்...சிறை சென்றோரும்,செல்லவிருப்போரும் கூடினர்....நியாயம் வென்றது ...... ஊழலுக்கு சவுக்கடி..... வெளியில் இருக்கும் நாட்களை எண்ணும் கருணாநிதி.....

இந்த ஆளு ஒருத்தனுக்குத்தான் குடும்பம் இருக்கா...ஜெயில்ல இந்த ஆளு மகளோட சேர்த்து 10,000 பேரு இருக்கானுங்க .....அவங்களுக்கு குடும்பம் இல்லையா....ஸ்கூல் போகும் வயதில் பிள்ளையில்லையா... ஏன் இப்படி கூப்பாடு போடுறீங்க???

ஈழத்துல செத்தவனுக்குத்தான் நீங்க டெல்லி போகல...உங்கபாஷயில அது வேறநாட்டுப்பிரச்சனை ...சரி ..தமிழக மீனவன் செத்ததுக்கு கூட நீங்க டெல்லி போகலையே ....அண்டை மாநிலங்கள் த்ண்ணீர் தரவில்லை.... உள்ளூர் விவசாயியை காக்க நீங்கள் டெல்லி போகவில்லை....நீங்க போகாட்டினாலும் உங்கள் குரல் கூட இங்கேயிருந்து போகலியே.....
பத்திரிக்கைகள் நித்யானந்தா - ரஞ்சிதா விஷயத்தில் காட்டிய அக்கரையில் ஒரு சதவீதம் கூட ஊழலுக்கு எதிரான விஷயங்களில் தொடர்ச்சியான கட்டுரைகள் எழுதுவதில்லை.....

பத்திரிகைகளே, இப்பதான் ஏதோ கொஞ்சம் ஒழுங்கா நடக்குறமாதிரி இருக்கு...சுப்ரீம் கோர்ட் மேலே நம்பிக்கை வர்ற மாதிரி இருக்கு....அதையும் இப்படி ஜால்ரா அடிச்சு அனுதாஅபம் தேடி கெடுத்துவிட்டுறாதீங்க ......இன்னும் நிறையபேர் திஹாரை சுத்திப்பார்க்கவேண்டியது இருக்கு...மதுரையில் ஒரு கூட்டமே இருக்கு... அதுக்கெல்லாம் தனி ரயிலே விடணும்.....

ஏற்க்கனவே, முன் அட்டை மட்டும் பிச்சுட்டா ஆனந்தவிகடனுக்கும், குமுதத்துக்கும் வித்தியாசம் கிடையாது என்றநிலைதான்...அந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டீர்கள் ஆனந்தவிகடன்...தமிழக தினசரிகள், வார ஏடுகள் படித்தால் அறிவு வளர்ந்தது போய் , இருக்குறதும் அழிஞ்சுபோகத்தான் செய்யுது.....இன்னும் சில எலும்புத்துண்டுகளுக்காக ஆசைப்பட்டு இந்த கொள்ளைக்கூட்டதத்திற்க்கு ஜால்ரா அடிக்காதீங்க...இதுதொடர்ந்தால் நீங்கள் மஞ்சள்துண்டை ஆதரிக்கும் மஞ்சள் பத்திரிக்கை என்றே அழைக்கப்படுவீர்கள்.....

உண்மைத்தமிழன் said...

[[[Ramesh said...

Pros mediaku ithu next stage. sympathy wave a create pana try panrathu..]]]

நடுநிலைமைக்காக எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சரவணன், ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கும் இந்தக் கட்டுரையில் விவரணை செய்திருக்கும் சம்பவங்களும் சம்பந்தமேயில்லை. இதையெல்லாம் தயவு செய்து ஆவணப்படுத்த வேண்டாம். இது இதழ் விற்பனையை அதிகரிக்க விகடன் செய்யும் தரங்கெட்ட யுக்திகளுள் ஒன்று!]]]

-)))))))))

உண்மைத்தமிழன் said...

[[[மணிப்பக்கம் said...

குடும்பம் குட்டி உள்ளவங்களை எல்லாம் தண்டிக்க கூடாதுன்னு சட்டத்தை மாத்தணும் முதல்ல.. எவ்வளவு கன்றாவி காட்சிகள்!

(அனுதாபம் வருவது போன்று உள்ளவற்றை எடிட் செய்து போடுங்கள் ஐயா!, முடியல!)]]]

அந்த உணர்வு பெரும்பாலனோருக்கு வரவே வராது..! எழுதிவிட்டுப் போகிறார்கள் விடுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

உங்களுக்கு மட்டுமா.. கண்ணீர் கவலைகள், அன்பு, பாசம், இரக்கம், தவிப்பு எல்லாம். எங்களுக்கும் இருக்கிறது. நாங்களும் உங்களை போல இரத்தமும் சதையுமாக படைக்கப்பட்டவார்கள்தான். செஞ்சோலையில் எங்களை சிறுமிகள் பதுங்கிய பதுங்கு குழியில் உங்கள இந்திய களவாணிகளின் குண்டுகள் எங்கள் குழந்தைகளின் உடல்களை சிதறடித்ததே ஞாபகமாவது இருக்கிறதா? உங்களை போல எந்த வசதியையும் அனுபவிக்காத அந்த குழந்தைகள் என்ன பாவம் (ஊழல்) செய்தது? எத்தனை அப்பாவிகள் கண் தலை கால் சிதற மாண்டனர்? அப்பொழுது செய்த நிகழ்வுகள். 3 மணி நேர உண்ண நோன்பு நாடகம், சிரிப்பொலி தொலைகாட்சி தொடங்கியது.. படுபாவிகளா. முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகத்தை எந்த அளவுக்கு கொச்சைபடுத்தினீர்கள்.? வெயிலில் எரிந்த அந்த உடல் எப்படி துடித்திருக்கும். உனது பேரன்கள் சினிமா எடுத்து நடிகைகளுடன் சல்லாபித்த நேரம் அது. யோசித்து பாருங்கள். நண்பர்களே. இவர்கள் ஒன்றும் தேச நன்மைக்காக ஒன்றும் போராடி திஹாருக்கு செல்லவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு பணத்தை கொள்ளையடித்துவிட்டு உள்ளே சென்று மிகச் சிறிய வசதிக் குறைவுகளை அனுபவிக்கிறார்கள் அவ்வளவே?]]]

அனுபவிக்கட்டும்..! வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

சட்டம் தன் கடமையை செய்தது. சட்டம் அனைவருக்கும் சமம். ஒன்றும் தவறே செய்யாமல் இவர் சிறைக்கு போனால்தான் நாம் அனுதாபபட வேண்டும். இவர்கள் செய்த துரோகங்களுக்கு இன்னும் அனுபவிக்க எவ்வளவோ உள்ளது. தமிழர்கள் கொத்து கொத்தாக அங்கு படுகொலை செய்யப்பட்டு கொடன்னு இருந்தபோது அதிகாரதிற்க்காகவும், பணத்திற்காகவும் தன் நிலை மறந்து பதவி சுகம் வேண்டி ஓடியவர்கள்தானே இவர்கள். அந்த மக்கள் பட்ட, படும் பாட்டிற்கு முன்னாள் இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. இவராவது தன் மகனை பிரிந்துதான் இருக்க முடியவில்லை. அங்கு எத்தனை தாய்மார்கள் தங்களது குழந்தைகளை இழந்தனரோ! பிறர்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்ன பிற்பகல் தாமே வரும். வாழ்க ஜனநாயகம்.]]]

வாழ்க ஜனநாயகம்.. ஆண்டவனின் பதிலடிக்கு எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி நம்நாட்டில் வ.உ.சிதம்பரம்ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் தூத்துக்குடியில் ஒரு பெரிய வணிகர் / வழக்கறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் தன் சொத்து சுகம் எல்லாம் துறந்து தேச பக்தி காரணமாக ஒரு கப்பல் கம்பனி தொடங்கி, தேசத் துரோகம் குற்றம் சாட்டாப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் செக்கு இழுத்தார். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெற்ற இவர் வெளியே வந்தபோது சொத்தும் இல்லை பெற்ற வக்கீல் பட்டமும் பறிக்கப்பட்டு, மளிகை கடைகளில் கணக்கெழுதி தன இறுதி காலத்தை கழிக்க நேர்ந்தது.
================================
இதற்கும் கனிமொழி சிறை தண்டனைக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? விகடன் கட்டுரையை படித்த பாவத்தை எப்படி போக்கிக் கொள்வது? இப்படி நல்ல நேர்மையான தேச பக்தர்களைப் பற்றி படித்துதான்!!]]]

அவர்களெல்லாம் உண்மையான தேச பக்தர்கள் ஸார்.. இவர்களெல்லாம் உண்மையான தேசத் துரோகிகள் ஸார்..!

அனாமிகா துவாரகன் said...

இவ்வளவு நாளா அங்கிள்னு தானே கூப்பிட்டு வருகிறேன். திடீரென யூத் கதை எல்லாம் விடுறீங்க. தாத்தா ஆகின பதிவை எல்லாம் படிச்சுட்டு தான் வந்திருக்கிறேன். தாத்தான்னு நான் கூப்பிடலன்னு சந்தோசப் படுங்க. சொல்லிட்டேன். =))

ஓக்கே தாத்ஸ். வரட்டா?

இந்த பதிவைப் பார்க்கும் போது சிம்பத்தி கிரியேட் பண்ணுவது மாதிரியே இருக்கு. நம்புங்க தாத்ஸ்.

உண்மைத்தமிழன் said...

ராசூ..

பொங்கித் தீர்த்திருக்கிறீர்கள்..!

அத்தனையும் உண்மையான வாசகங்கள்..!

வணங்குகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அனாமிகா துவாரகன் said...

இவ்வளவு நாளா அங்கிள்னுதானே கூப்பிட்டு வருகிறேன். திடீரென யூத் கதை எல்லாம் விடுறீங்க. தாத்தா ஆகின பதிவை எல்லாம் படிச்சுட்டுதான் வந்திருக்கிறேன். தாத்தான்னு நான் கூப்பிடலன்னு சந்தோசப்படுங்க. சொல்லிட்டேன். =))
ஓக்கே தாத்ஸ். வரட்டா?

இந்த பதிவைப் பார்க்கும் போது சிம்பத்தி கிரியேட் பண்ணுவது மாதிரியே இருக்கு. நம்புங்க தாத்ஸ்.]]]

அந்த சிம்பதியை நான் உருவாக்கலை.. விகடன் உருவாக்கியிருக்கு..!

அனாமிகா துவாரகன் said...

புரியுது அங்கிள். அவங்களை திட்டி நீங்க ஒரு பதிவு இன்னும் போடலயேன்னு கொஞ்சம் வருத்தம்.

அனாமிகா துவாரகன் said...

அவங்கள = விகடன்

ரிஷி said...

//அந்த சிம்பதியை நான் உருவாக்கலை.. விகடன் உருவாக்கியிருக்கு..!//

அண்ணே! கோவமா சொல்றேன்னு நினைக்காதீங்க. அவனுங்க உருவாக்குனா நாமளும் அதுக்கு ஒத்து ஊதணுமா?!! அதனால்தான் இதையெல்லாம் ஆவணப்படுத்தாதீங்கனு சொல்றேன்.

//Pros mediaku ithu next stage. sympathy wave a create pana try panrathu..]]]

நடுநிலைமைக்காக எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..!//

நீங்களும் அப்படிக் காட்டிக்கொள்வதற்காகத்தான் அதை காப்பி பேஸ்ட் செய்திருக்கீங்களா? வேண்டாம்ணே....

மாயாவி said...

உண்மை,
விகடனை வாங்கி நாங்களே படிச்சுக்கிறோம். இந்த மாதிரி பீலிங் கட்டுரையெல்லாம் உங்க ப்ளாக்ல போட்டு அந்த ஊழல் தாத்தா குடும்பத்திற்க்கு அனுதாபம் சேர்க்காதீங்க?

ஒரு இனத்தையே அழிக்கும்போது அப்பன், மகள் எல்லாம் சேர்ந்து என்னமா டிராமா போட்டாங்க.
ஜெயில்லியே கிடந்து சாகட்டும். துணைக்கு இன்னும் கொஞ்சபேர் வர இருக்கிறாங்க!!

குறும்பன் said...

விகடன் குழுமத்தின் பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்காங்க இல்லையா. அந்த வகையில் விகடனின் சிறு முதலாளிகள் கேடிகள். கேடிங்க கைக்கு 700 கோடி வந்தவிசயம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா வெளிவருது. அதனால அனுதாபத்தோட இப்பவே எழுதுனாதான் விகடன் கேடிகளுக்காக அனுதாபம் வர்ர மாதிரி எழுதறப்ப ஒரு கண்டினியுட்டி இருக்கும். தெகல்காவில் கேடிகளைப்பற்றி எழுதியுள்ளதை படிக்கவும்.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp

Jayadev Das said...

அண்ணே, எப்போயிருந்து தொழிலை மாத்தினீங்க!! ரொம்ப செண்டிமெண்டை டச் பண்ற மாதிரி சீன் எல்லாம் இந்த பதிவுல போட்டுருக்கீங்க! சும்மா உதாருக்கு பண்ணிய கைதுக்கு இத்தனை பில்ட் அப்பா? இந்தம்மாவுக்கு ஜெயிலில் கூட வசதியான அறை, ஆனால் நாட்டில எத்தனையோ பேருக்கு 10 அடிக்கு 15 அடி வீடில்லாம முக்கா வாசி ஜனம் இருக்காங்களே. என்னமோ இந்தம்மாவுக்கு மட்டுமா தான் மகன் இருக்கானா, பெரியவனா ஆகி அழகிரியாத் தானே மாறப் போறான்? யாராச்சும் பாம்பு குட்டிகளைப் பாத்து பரிதாபப் பாடுவாங்களா? எந்த்தனை லட்சம் மக்களை பலிகடாக்கள் ஆக்கி, அவர்களை வறுமையில் தள்ளிவிட்டுத் தானே மஞ்சள் துண்டு குடும்பம் ஓஹோ என்று வாழ்கிறார்கள். அந்த மக்கள் இதே துயர் தானே எந்நாளும் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு யார் கவலைப் பட இருக்கிறார்கள்? \\கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி\\ கருணாநிதி என்ன நினைக்கிறாரோ அதைத்தான் செய்து கொள்கிறார், ஆனால் இந்த பொதுக் குழு, புண்ணாக்கு குழு, உயர் மட்டக் குழு, மண்ணாங்கட்டி குழுவெல்லாம் எதுக்குத்தான் கூட்டுரங்கன்னே தெரியலை. \\பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால்\\ அருமையான வக்கீல், விராலிமலை பிரேமானந்தா, ரஞ்சிதானந்தா போன்ற ஒழுக்க சீலர்களுக்காக வாதாடியர்.. ஐயோ ....ஐயோ....

உண்மைத்தமிழன் said...

[[[அனாமிகா துவாரகன் said...

புரியுது அங்கிள். அவங்களை திட்டி நீங்க ஒரு பதிவு இன்னும் போடலயேன்னு கொஞ்சம் வருத்தம்.]]]

எவ்ளோதான் திட்டறதும்மா..? எனக்கே போரடிக்குது..! அதான் காப்பி பேஸ்ட்..!

உண்மைத்தமிழன் said...

[[[அனாமிகா துவாரகன் said...

அவங்கள = விகடன்]]]

வேண்டாம்.. விட்ரு.. எல்லாமே ஒரு நாடகம்தான்..!

உண்மைத்தமிழன் said...

ரிஷி said...

அண்ணே! கோவமா சொல்றேன்னு நினைக்காதீங்க. அவனுங்க உருவாக்குனா நாமளும் அதுக்கு ஒத்து ஊதணுமா?!! அதனால்தான் இதையெல்லாம் ஆவணப்படுத்தாதீங்கனு சொல்றேன்.]]]

இல்லை ரிஷி. இதில் உள்ள சில தகவல்களுக்காக நிச்சயம் இதை ஆவணப்படுத்தியே ஆக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயாவி said...

உண்மை, விகடனை வாங்கி நாங்களே படிச்சுக்கிறோம். இந்த மாதிரி பீலிங் கட்டுரையெல்லாம் உங்க ப்ளாக்ல போட்டு அந்த ஊழல் தாத்தா குடும்பத்திற்க்கு அனுதாபம் சேர்க்காதீங்க?

ஒரு இனத்தையே அழிக்கும்போது அப்பன், மகள் எல்லாம் சேர்ந்து என்னமா டிராமா போட்டாங்க.
ஜெயில்லியே கிடந்து சாகட்டும். துணைக்கு இன்னும் கொஞ்ச பேர் வர இருக்கிறாங்க!!]]]

ஐயோ ராசாக்களே.. விட்ருங்க.. இது ஆவணப்படுத்துதல்.. அவ்வளவுதான்..! எனது தளத்தின் ரெகுலர் வாசகர்களுக்கு நிச்சயம் இது அனுதாபத்தைத் தராது.. தூண்டாது..!

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

விகடன் குழுமத்தின் பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்காங்க இல்லையா. அந்த வகையில் விகடனின் சிறு முதலாளிகள் கேடிகள். கேடிங்க கைக்கு 700 கோடி வந்த விசயம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா வெளிவருது. அதனால அனுதாபத்தோட இப்பவே எழுதுனாதான் விகடன் கேடிகளுக்காக அனுதாபம் வர்ர மாதிரி எழுதறப்ப ஒரு கண்டினியுட்டி இருக்கும். தெகல்காவில் கேடிகளைப் பற்றி எழுதியுள்ளதை படிக்கவும்.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp]]]

படித்தேன். இதுபோன்ற ஒரு கட்டுரையை இதற்கு முன்பேயே நான் எனது தளத்தில் எழுதியிருக்கிறேன்.. நீங்களும் தேடிப் படியுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

அண்ணே, எப்போயிருந்து தொழிலை மாத்தினீங்க!! ரொம்ப செண்டிமெண்டை டச் பண்ற மாதிரி சீன் எல்லாம் இந்த பதிவுல போட்டுருக்கீங்க! சும்மா உதாருக்கு பண்ணிய கைதுக்கு இத்தனை பில்ட்ப்பா? இந்தம்மாவுக்கு ஜெயிலில்கூட வசதியான அறை, ஆனால் நாட்டில எத்தனையோ பேருக்கு 10 அடிக்கு 15 அடி வீடில்லாம முக்காவாசி ஜனம் இருக்காங்களே. என்னமோ இந்தம்மாவுக்கு மட்டுமாதான் மகன் இருக்கானா, பெரியவனா ஆகி அழகிரியாத்தானே மாறப் போறான்? யாராச்சும் பாம்பு குட்டிகளைப் பாத்து பரிதாபப்பாடுவாங்களா? எந்த்தனை லட்சம் மக்களை பலிகடாக்கள் ஆக்கி, அவர்களை வறுமையில் தள்ளிவிட்டுத் தானே மஞ்சள் துண்டு குடும்பம் ஓஹோ என்று வாழ்கிறார்கள். அந்த மக்கள் இதே துயர்தானே எந்நாளும் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு யார் கவலைப்பட இருக்கிறார்கள்?

\\கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி\\

கருணாநிதி என்ன நினைக்கிறாரோ அதைத்தான் செய்து கொள்கிறார், ஆனால் இந்த பொதுக் குழு, புண்ணாக்கு குழு, உயர் மட்டக் குழு, மண்ணாங்கட்டி குழுவெல்லாம் எதுக்குத்தான் கூட்டுரங்கன்னே தெரியலை.

\\பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால்\\

அருமையான வக்கீல், விராலிமலை பிரேமானந்தா, ரஞ்சிதானந்தா போன்ற ஒழுக்க சீலர்களுக்காக வாதாடியர்.. ஐயோ ஐயோ....]]]

முருகா.. புரிஞ்சுக்குங்கப்பா.. இது ஒன்லி பதிவு செய்து வைப்பது. அவ்வளவுதான்..!

குறும்பன் said...

உங்க இடுகை மூலமா தான் கேடிகள் விகடனின் பங்குகளை வாங்குனது தெரியும். கேடிங்க பத்தி நீங்க எழுதுனதையும் படித்துள்ளேன். சில சமயம் சவுக்கில் படிச்சனா இல்ல உ.த பதிவுல படிச்சனான்னு எனக்கு சந்தேகம் வந்துடும்.

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

உங்க இடுகை மூலமாதான் கேடிகள் விகடனின் பங்குகளை வாங்குனது தெரியும். கேடிங்க பத்தி நீங்க எழுதுனதையும் படித்துள்ளேன். சில சமயம் சவுக்கில் படிச்சனா இல்ல உ.த பதிவுல படிச்சனான்னு எனக்கு சந்தேகம் வந்துடும்.]]]

கேடி பிரதர்ஸ் விகடன் பங்குகளை வாங்கியிருப்பது இப்போதுவரையிலும் யூகம்தான்..! உண்மையாக, உறுதியாகத் தெரியவில்லை..!

abeer ahmed said...

See who owns sitelogr.com or any other website:
http://whois.domaintasks.com/sitelogr.com

abeer ahmed said...

See who owns hsbc.com.ph or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 1659573739 or any other website.