அறிவாலயத்தில் கட்டிப் போட நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..?

05-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது ஒரு திரையுலக அரசியல்வியாதியின் அழுகை கட்டுரை..!

தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் தியாகு. ஆனால், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தியாகுவைக் காண முடியவில்லை. ஏன் என்ற கேள்வியோடு தியாகுவைச் சந்தித்தோம். பதிலுக்குக் கண்ணீரும், கம்பலையுமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.


“எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து விலகிய காலத்தில் இருந்தே மிகவும் தீவிரமாகக் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.  இப்போது கட்சியிலேயே இல்லாத வடிவேலுவுக்கு தி.மு.க.வில் உயர்ந்த அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். அவருக்கும் கழகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? நேற்று வந்த குஷ்பூவுக்கு ராஜ உபச்சாரம் நடக்கிறது. ஆனால் கட்சிக்காக ஓடாய்த் தேய்ந்த எனக்கு என்ன அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்..?

அறிவாலயத்தில் கட்டிப் போடுவதற்கு நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..? தலைவர் கலைஞரை மட்டும் நம்பி என் வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் பெட்ரோல் பாம் போட்டதாக என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் பகுதிக்கே சம்பந்தம் இல்லாத அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ரூரல் எஸ்.பி.யான பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் படை என்னை கைது செய்ய என் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கிறது.

என் மனைவி “அவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வாருங்கள்” என்று சொல்லிவிட்டார். போலீஸாரின் மிரட்டலைப் பார்த்து என் மகனுக்கு வலிப்பு வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சூழ்ந்துவிட்டார்கள். அந்த நள்ளிரவு நேரத்தில் இல.கணேசன் எனக்கு போன் செய்து பேசுகிறார். ஒரு போலீஸ் அதிகாரி எனக்கு போன் செய்து “பொன்.மாணிக்கவேலுக்கு வளசரவாக்கம் ஏரியா கிடையாதே..? அவர் ஏன் அங்கு வந்தார்?” என்று என்னிடம் கேட்டார்.

நான் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து வீட்டின் பின்பக்கமாகத் தப்பி ஊருக்குப் போய்விட்டேன். 22 நாட்களாக அவர்களின் கண்களில் நான் படவில்லை. பின்பு ஐயா மூப்பனார் ஜெயலலிதாவிடம் பேசி என்னை வழக்கில் இருந்து விடுவித்தார். ஆனால், தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது முதல் குரல் கொடுத்தவன் நான்தான்.

நான் நினைத்திருந்தால் என் நண்பர் விஜயகாந்த் பக்கம் போயிருக்கலாம். இன்றைக்கு எனக்கு தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயருக்கு உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டுதான் காரணம். அவருடைய பேச்சைக் கேட்டு என்னை ஓரம் கட்டுகிறார்கள். தலைவரோ, துணை முதல்வரோ என்னைக் கண்டு கொள்ளவில்லை. அண்ணன் அழகிரி மட்டும்தான் என்னை அழைத்து ஆதரவுடன் பரிவாகப் பேசினார்.

“அவரைப் பார்க்காதே.. இவரிடம் பேசாதே..” என்று பல பிரிவுகளைத் தாண்டித்தான் இன்று தி.மு.க.வில் வாழ வேண்டியிருக்கிறது. ஆகையால், நான் இன்று ஓரம் கட்டப்பட்டிருக்கிறேன். என்னை வாழ வைத்தவர் தலைவர் கலைஞர்.. என்றைக்கும் அவரைவிட்டு வெளியேற மாட்டேன்..” என்கிறார் தியாகு.

இவருக்கும், இவருடைய தம்பிக்கும் நடந்த சொத்துப் பிரச்சினையில் தியாகு ஏமாற்றப்பட்டார். தம்பிக்கு ஆதரவாக ஸ்டாலின் குடும்பத்தார் இருந்ததுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

16 comments:

K.MURALI said...

same will happen to vadivelu in feature.

ramalingam said...

நடிகர் வாகை சந்திரசேகர் என்ன பண்ணுகிறார்?

சீனு said...

"கழகத்தில் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?"னு பராசக்தி சிவாஜி ஸ்டைல்ல பேசவெச்சுட்டாரே...

Thirumurugan MPK said...

Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

http://indiaagainstcorruption.org/citycontacts.php
http://www.facebook.com/IndiACor

ரிஷி said...

//K.MURALI said...

same will happen to vadivelu in feature.
//

வடிவேலுக்கு இக்கதி நேராது. அவரே பிரச்சாரத்திற்கு செல்லுமுன் அழகிரி அருகில் இருக்கையிலேயே, தான் பிரச்சாரம் மட்டுமே பண்ணப்போவதாகவும், கட்சியில் எந்தப்பொறுப்பும் கிடையாதென்றும், உறுப்பினர் கூடக் கிடையாதென்றும் தெளிவாக சொல்லிவிட்டார்.

விஜயகாந்த்தை தாக்குவதற்கு வடிவேலுவிற்கு ஒரு பிடிமானம் தேவையிருந்தது. பிடித்துக்கொண்டு விட்டார். தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க.ன்னா என்னன்னு கேட்பார்!!

உண்மைத்தமிழன் said...

[[[K.MURALI said...

same will happen to vadivelu in feature.]]]

மறுக்க முடியாத உண்மைதான். வடிவேலுவுக்கு இப்போது இது புரியாது. கூடிய சீக்கிரமே தி.மு.க. அவரை கழட்டிவிடத்தான் போகிறது. அன்றைக்கு அவர் உணர்வார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ramalingam said...

நடிகர் வாகை சந்திரசேகர் என்ன பண்ணுகிறார்?]]]

அவர் மும்முரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...
"கழகத்தில் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?"னு பராசக்தி சிவாஜி ஸ்டைல்ல பேச வெச்சுட்டாரே.]]]

அனுபவம் பேசுது.. முன்னாடி சரத்குமார் பேசினாரே..? ஞாபகமிருக்கா..? அதேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thirumurugan MPK said...

Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

http://indiaagainstcorruption.org/citycontacts.php
http://www.facebook.com/IndiACor]]]

இங்கேயுமா..? நன்றி.. நன்றி.. நிச்சயம் எழுதலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//K.MURALI said...

same will happen to vadivelu in feature.//

வடிவேலுக்கு இக்கதி நேராது. அவரே பிரச்சாரத்திற்கு செல்லுமுன் அழகிரி அருகில் இருக்கையிலேயே, தான் பிரச்சாரம் மட்டுமே பண்ணப் போவதாகவும், கட்சியில் எந்தப் பொறுப்பும் கிடையாதென்றும், உறுப்பினர் கூடக் கிடையாதென்றும் தெளிவாக சொல்லிவிட்டார்.
விஜயகாந்த்தை தாக்குவதற்கு வடிவேலுவிற்கு ஒரு பிடிமானம் தேவையிருந்தது. பிடித்துக் கொண்டு விட்டார். தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க.ன்னா என்னன்னு கேட்பார்!!]]]

அப்படி கேட்டாருன்னு வடிவேலு மெட்ராஸ்லேயே இருக்க முடியாது..! தி.மு.க.வே விரைவில் வடிவேலுவை விரட்டியடிக்கும். பொறுத்திருந்து பாருங்கள்..!

VJR said...

கமெண்ட்ஸெல்லாம் படிக்க படிக்க சிப்பு சிப்பா வருது. ஏதோ ஒரு பேச்சாளர் கதையையே இப்படி பேசினா, எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசு,தாமரைக்கனி,கே.கே.எஸ்.எஸ்.ஆர் இப்படி கட்சிக்காக உழச்ச பழசுகளை சும்மா ஃபுட்பால் கணக்கா ஒதச்ச கதையக் கேட்டா என்னாமா பேசுவாங்ள?

குறும்பன் said...

ஐயம் - இத்தேர்தலில் ஆனந்த விகடன் அதிமுக சார்பு, குமுதம் திமுக சார்பு என்று நினைத்திருந்தேன். குமுதம் ரிப்போர்ட்டர் திமுகவை வாங்கு வாங்குன்னு வாங்குது. குமுதம் ரிப்போர்ட்டர் குமுதம் குழுவில் கிடையாதா?

உண்மைத்தமிழன் said...

[[[VJR said...
கமெண்ட்ஸெல்லாம் படிக்க படிக்க சிப்பு சிப்பா வருது. ஏதோ ஒரு பேச்சாளர் கதையையே இப்படி பேசினா, எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசு, தாமரைக்கனி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இப்படி கட்சிக்காக உழச்ச பழசுகளை சும்மா ஃபுட்பால் கணக்கா ஒதச்ச கதையக் கேட்டா என்னாமா பேசுவாங்ள?]]]

நீங்கள் சொன்ன நபர்களெல்லாம் தியாகுவைப் போல புலம்பாமல் அடுத்த வழியைப் பார்த்துச் சென்றுவிட்டார்கள்.. தியாகு இப்போதும் கலைஞரை தலைவர் என்கிறாரே..?

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

ஐயம் - இத்தேர்தலில் ஆனந்த விகடன் அதிமுக சார்பு, குமுதம் திமுக சார்பு என்று நினைத்திருந்தேன். குமுதம் ரிப்போர்ட்டர் திமுகவை வாங்கு வாங்குன்னு வாங்குது. குமுதம் ரிப்போர்ட்டர் குமுதம் குழுவில் கிடையாதா?]]]

குமுதம் குழும இதழ்கள் பங்கு பிரிக்கப்பட்டுள்ளன குறும்பன்..

குமுதம் இதழ் ஜவஹர் பழனியப்பனுக்கும், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வரதராஜனுக்கும் என்று பிரிக்கப்ப்டுவிட்டது..!

Ash said...

இதுவரை வடிவேலுவுக்கு என்று திரையுலகில் கட்சி பேதமில்லாத ஒரு ரசிகர் வட்டம் இருந்தது. இப்பொழுது அவர் கட்சி சாயம் பூசிக்கொண்டு விட்டார். அந்த ரசிகர் வட்டம் அப்படியே மாறிவிடும். அரசியல்வாதிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டம் உண்டு. அதில் தப்பிப் பிழைக்க வேண்டும். ஆனால், சினிமாக்காரர்களுக்கு அப்படியா? தனிப்பட்ட பகைமையின் காரணமாக தானாகப் போய் மாட்டிக்கொண்டு விட்டார். புண்ணை சொரியும்போது சுகமாகத் தான் இருக்கும். அதன் விளைவு அப்புறம் தான் தெரியும்.

உண்மைத்தமிழன் said...

[[[Ash said...

இதுவரை வடிவேலுவுக்கு என்று திரையுலகில் கட்சி பேதமில்லாத ஒரு ரசிகர் வட்டம் இருந்தது. இப்பொழுது அவர் கட்சி சாயம் பூசிக்கொண்டு விட்டார். அந்த ரசிகர் வட்டம் அப்படியே மாறிவிடும். அரசியல்வாதிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டம் உண்டு. அதில் தப்பிப் பிழைக்க வேண்டும். ஆனால், சினிமாக்காரர்களுக்கு அப்படியா? தனிப்பட்ட பகைமையின் காரணமாக தானாகப் போய் மாட்டிக்கொண்டு விட்டார். புண்ணை சொரியும்போது சுகமாகத்தான் இருக்கும். அதன் விளைவு அப்புறம்தான் தெரியும்.]]]

தி.மு.க.வினர் மிகச் சுலபமாக வடிவேலுவைக் கழட்டிவிடப் போகிறார்கள்..! அன்றைக்குத் தெரியும் அவருக்கு..!