அடிக்கிறதைப் பத்தி மருத்துவர் ராமதாஸ் பேசலாமா? கூடாதா?

07-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சொந்தக் கட்சி வேட்​பாளரை விஜய​காந்த் அடித்தார்... இது நியாயமா என்று போகும் இடமெல்லாம் விவகாரத்தை விடாமல் கிளப்பிக்​கொண்டு இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

ராமதாஸ் மட்டும் யோக்கியமா என்று பிரசாரம் செய்து வருகிறது வன்னியர் கூட்டமைப்பு. அதன் நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தியைச் சந்தித்தோம்..


''விஜயகாந்த் வேட்பாளரை அடித்துவிட்டார்... இவர் எல்லாம் ஒரு கட்சித் தலைவரா? என்று தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் ஏதோ உத்தம புத்திரர்கள் மாதிரி ஊரெல்லாம் முழங்கி வருகிறார்கள். அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராமதாஸ் மட்டும் யோக்கிய சிகாமணியா? விஜயகாந்த்தாவது மக்கள் மத்தியில் வெளிப்படையாக நடந்துகொண்டார். ஆனால், ராமதாஸ்..?

வன்னியர்களின் குரு என்று பெரும்பான்மை மக்களால் மனமார நேசிக்கப்பட்டவர் ஏ.கே.நடராஜன். 'அவர் வன்னியர்கள் மத்தியில் தன்னையும் தாண்டி அபரிமிதமான செல்வாக்கு உடையவராகத் திகழ்கிறார்’ என்ற சினம் நீண்ட நாட்களாக ராமதாஸுக்கு இருந்தது.

ஆரம்பத்தில் இலைமறை காயாகக் கோபத்தைக் காட்டி வந்த ராமதாஸ், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் பொருமிவிட்டார்.
 
விளைவு சில அடிப்பொடிகள் பாய்ந்தார்கள்.  ஏ.கே.நடராஜன் நையப் புடைக்கப்​பட்டார். அவர் உயிர் பிழைத்ததே அதிசயம். 'இன்றும் ஒரு காலை தாங்கித் தாங்கி அவர் நடக்கிறாரே... அதற்குக் காரணம் யார்?’ என்று தி.மு.க-வினர் மக்கள் மத்தியில் முழங்குவார்களா?

பா.ம.க-வின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளராக இருந்த மு.பாலசண்முகம் பெரும் உழைப்பாளி. நாளடைவில் ராமதாஸின் போக்குப் பிடிக்காததால், கட்சி செயல்பாடுகளில் பங்கேற்காமல் கொஞ்சம் விலகி இருந்தார். அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை பா.ம.க. தலைமையால். பட்டப் பகலில் நடுரோட்டில் பாலசண்முகத்தைப் பின்னி எடுத்தது ஒரு கும்பல். 'பல் உடைந்து பரிதாப நிலையில் பாலசண்முகம் மருத்துவமனைக்குப் போனது யாரால்?’ என்று கலைஞர் டி.வி-யில் விளம்பரம் போட்டால் நன்றாக இருக்கும்!

உத்திரமேரூர் ஆர்.விஸ்வநாதன் விவகாரம் இதைவிடக் கொடுமை... காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த விஸ்வநாதனின் காரை மறித்துக் குப்புறத் தள்ளி, கண்ணாடிகளை உடைத்து தீவைத்துக் கொளுத்தியது ஒரு கும்பல்.

இவ்வளவு ஏன்... விஜயகாந்த்தைத் திட்டிப் பேசுகிறாரே வடிவேலு... அவரின் சொந்த ஊரான மதுரையில்தான்,  ராமதாஸுக்குக் கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்களுக்கு ஓட ஓட பூசை விழுந்தது. இது குறித்துப் பேசுவாரா வடிவேலு?

ஈரோடு காருண்யமூர்த்தி, திருத்தணி சேகர்வர்மா ஆகியோருக்கு நேர்ந்த இன்னலையும் இந்த நாட்டு மக்கள் அறிய வேண்டும். பா.ம.க-வுக்காக பல ஆண்டு காலம் உழைத்த இவர்களை வீடு புகுந்து தாக்க உத்தரவு போட்ட மாமனிதர்களைக் கொண்ட கட்சிதான் பா.ம.க!

அவர்களின் வீட்டை அடித்து நொறுக்கிய ரவுடிகள், அந்தக் குடும்பத்து நபர்களின் கழுத்தில் அருவாளை வைத்து, 'அய்யாவுக்கு எதிரா செயல்பட்டா, நாங்க பேச மாட்டோம். இனி அருவாதான் பேசும்!’ என்று மிரட்டினார்களே.... அந்த வில்லத்தனம் குறித்துப் பேசுவாரா மு.க.ஸ்டாலின்?

மிக சமீபத்தில் நடந்த சம்பவமும் சொல்கிறேன். ராமதாஸின் தம்பி சீனிவாச கவுண்டரையும், அவர் மகன் சந்திரசேகரனையும் பா.ம.க-வில் இருந்து காங்கிரஸுக்கு அழைத்து வந்தார், காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பலராமன். சும்மா இருப்பார்களா?

பலராமனின் உடலில் பல இடங்களில் விழுந்தது அருவாள் வெட்டு. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் அடித்து மிரட்டி, அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு அரியாசனத்தில் அமர்ந்து வந்த அந்தத் தலைமைக்கு, இந்தத் தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

'வன்னியர்கள் என் பின்னால்தான்’ என்று சொல்லி இனியும் ஏமாற்ற முடியாது. காங்கிரஸ், தி.மு.க. ஓட்டுகளில் சவாரி செய்து காலத்தை ஓட்ட நினைக்கிறார் டாக்டர் ராமதாஸ். வன்னியர்கள் மத்தியில் ராமதாஸுக்கு இருந்த செல்வாக்கு எப்போதோ காற்றில் பறந்துவிட்டது. உயிர்த் தியாகம் செய்த 25 வன்னியக் குடும்பங்களுக்குக்கூட ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத மனிதர் அவர்.

ராமதாஸ் போன்ற நபர்களோடு, சூடு சுரணையற்ற கூட்டணி வைத்துள்ள தி.மு.க-வினர், 'விஜயகாந்த் வேட்பாளரை அடித்துவிட்டார்’ என்று இனி எங்காவது பேசினால், பொதுமக்கள் ராமதாஸ் குறித்து அதே இடத்தில் எதிர்க் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்!'' என்று உணர்ச்சியோடு முடித்தார் சி.என்.ராமமூர்த்தி.

இதற்கு பா.ம.க. தரப்பின் பதில்..?

''சி.என்.ராமமூர்த்தியோட வன்னியர் கூட்டமைப்பு போணி ஆகலை. எங்க அய்யாவுக்கு எதிராப் பேசினா, விளம்பரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்த மாதிரி எல்லாம் பேசுகிறார். அவர் நிலையைப் பார்த்தா, ரொம்பப் பாவமா இருக்கு. மற்றபடி இந்தத் தாக்குதல்களுக்கும், எங்க அய்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது...'' என்று அழுத்தமாக மறுக்கிறார்கள்!

நன்றி - ஜூனியர்விகடன் - 04-04-2011

இதுக்குக் கருத்துச் சொல்ல பயமாயிருக்கு..!!!

34 comments:

தமிழ்வாசி - Prakash said...

வடை எனக்கே!


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

சாரு புழிஞ்சதா said...

வருங்கால ஜனாதிபதி உண்மைதமிழன் வாழ்க!

சாரு புழிஞ்சதா said...

அண்ணே, நீங்க சொன்னமாதிரியே கமெண்ட் போட்டுட்டேனே

சாரு புழிஞ்சதா said...

http://www.luckylookonline.com/2011/04/strictly-18.html

யுவகிருஷ்ணா தன்னுடைய தங்கை அல்லது மனைவியின் படத்தை இப்படி தனது வலைமனையில் பதிவேற்றுவாரா? யார் பெற்ற பிள்ளையோ அந்த பெண். இதையெல்லாம் நீங்கள் தட்டி கேட்க மாட்டீர்களா?

இக்பால் செல்வன் said...

மறைவாக அடித்தவன் முட்டாள் .. மக்கள் முன்னால் அடித்தவன் வடி கட்டின முட்டாள் இப்படியானவர்களை அரசியலில் விட்டு வைத்திருக்கும் நாம் .... முட்டாள்களுக்கு எல்லாம் முட்டாள்

ரிஷி said...

அன்னா ஹசாரே பற்றியும், அவர் சார்ந்த இயக்கம் பற்றியும், இப்போது அவர்கள் ஆரம்பித்திருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தைப் பற்றியும் ஒரு பதிவு போடலாமே??

கண்ட கண்ட கபோதிப்பயல்களின் பிரஸ்தாபங்களை எடுத்துக்கூறுவதால் நமக்கு என்ன ஆகப்போகிறது?

நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வரவேண்டிய ஒரு விஷயம் பெட்டிச் செய்திகளாய் முடங்கிக் கிடக்கிறது. பதிவுலகிலும் அன்னாரைப் பற்றிய எச்செய்தியையும் காணோம்.

சரத்பவாருக்கே செம சூடு வைத்திருக்கிறார். ஊழல் ஒழிப்பு மசோதாக்குழுவின் தலைமையேற்றிருந்த அவரையே ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஹசாரேக்கு கிடைத்த முதல் வெற்றி.

ரிஷி said...

ஒருவேளை அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகத்தில் மெரினா பீச்சில் நமீதா உண்ணாவிரதத்தில் அமர்ந்திருந்தால் நிச்சயம் இது தலைப்புச் செய்தியாயிருக்கும்! வெக்கங்கெட்ட நாளேடுகள்!! வெட்கம்..வெட்கம்..

உண்மைத்தமிழன் said...

[[தமிழ்வாசி - Prakash said...

வடை எனக்கே!]]]

திருந்தவே மாட்டீங்கய்யா..!

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...

வருங்கால ஜனாதிபதி உண்மைதமிழன் வாழ்க!]]]

பிரதமர்ன்னு போட்டாலும் ஒத்துக்கலாம். ரப்பர் ஸ்டாம்ப் பதவியெல்லாம் நமக்கெதுக்குண்ணே..?

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...
அண்ணே, நீங்க சொன்ன மாதிரியே கமெண்ட் போட்டுட்டேனே..]]]

நீங்க யாருண்ணே தெரியாது.. முன்ன பின்ன பார்த்ததே இல்லை.. இந்த லாகினை வைச்சுக்கிட்டு எனக்கு மட்டும்தான் பின்னூட்டம் போட்டுத் தாக்கிக்கிட்டிருக்கீங்க..? இந்த லட்சணத்துல நான் சொன்ன மாதிரின்னு அடிச்சு வேற விடுறீங்க..! ம்.. நல்லாயிருங்க..

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...

http://www.luckylookonline.com/2011/04/strictly-18.html

யுவகிருஷ்ணா தன்னுடைய தங்கை அல்லது மனைவியின் படத்தை இப்படி தனது வலைமனையில் பதிவேற்றுவாரா? யார் பெற்ற பிள்ளையோ அந்த பெண். இதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்க மாட்டீர்களா?]]]

இதில் தட்டிக் கேட்க என்ன இருக்கிறது சாரு..?

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...

மறைவாக அடித்தவன் முட்டாள். மக்கள் முன்னால் அடித்தவன் வடி கட்டின முட்டாள். இப்படியானவர்களை அரசியலில் விட்டு வைத்திருக்கும் நாம். முட்டாள்களுக்கு எல்லாம் முட்டாள்]]]

விடுங்க இக்பால். இதெல்லாம் ஒரு செகண்ட் கோபத்துல வர்றது.. அடி வாங்கியவரே பாசத்தில் அதனை ஒத்துக் கொண்டு போன பிறகு நாம் இதில் கருத்து சொல்லி என்ன ஆகப் போகிறது..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

அன்னா ஹசாரே பற்றியும், அவர் சார்ந்த இயக்கம் பற்றியும், இப்போது அவர்கள் ஆரம்பித்திருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தைப் பற்றியும் ஒரு பதிவு போடலாமே??

கண்ட கண்ட கபோதிப் பயல்களின் பிரஸ்தாபங்களை எடுத்துக் கூறுவதால் நமக்கு என்ன ஆகப் போகிறது?

நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வர வேண்டிய ஒரு விஷயம் பெட்டிச் செய்திகளாய் முடங்கிக் கிடக்கிறது. பதிவுலகிலும் அன்னாரைப் பற்றிய எச்செய்தியையும் காணோம்.

சரத்பவாருக்கே செம சூடு வைத்திருக்கிறார். ஊழல் ஒழிப்பு மசோதாக் குழுவின் தலைமையேற்றிருந்த அவரையே ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஹசாரேக்கு கிடைத்த முதல் வெற்றி.]]]

போட்டிருவோம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஒருவேளை அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகத்தில் மெரினா பீச்சில் நமீதா உண்ணாவிரதத்தில் அமர்ந்திருந்தால் நிச்சயம் இது தலைப்புச் செய்தியாயிருக்கும்! வெக்கங்கெட்ட நாளேடுகள்!! வெட்கம். வெட்கம்..]]]

விடுங்க.. விடுங்க.. பத்திரிகையுலகத்திலும், தொலைக்காட்சிகளிலும் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

Ash said...

குடிகாரர்கள் கூட போதையில் உளறினாலும் போதை தெளிந்ததும் சுய நினைவுக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால், இவர்கள் மூழ்கி இருக்கும் அதிகாரப் போதை எப்போதும் தெளியாது. ஒவ்வொரு தேர்தலுக்கும், குரங்கு மரம் விட்டு மரம் தாவுகிற மாதிரி இவர்கள் அணி விட்டு அணி தாவுவார்கள். கொள்கை, கோட்பாடுகள் எல்லாம் மற்றவர்களுக்கு தான்.ஒவ்வொரு முறை அணி மாறுகிறபோதும் இவர்கள் விடும் அறிக்கைகளை படித்துப் பார்த்தால், மக்களை எல்லாம் எந்த அளவுக்கு கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரியும். தானோ தன் வாரிசுகளோ பதவிக்கு வந்தால் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று, அன்று இவர்கள் சொன்னதை மக்கள் மறக்கா விட்டாலும் இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். இம்முறை இவர்களின் எல்லா போதையையும் மக்கள் தெளிய வைத்து விடுவார்கள்.

ஸ்ரீகாந்த் புதுச்சேரி said...

பாரத நாடு பழம்பெரும் நாடு ! இறை சக்தியின் இருப்பிடமே இதுதான் !
அதனால் தான் எத்தனையோ தீய சக்திகளின் ஆக்கிரமிர்ப்புக்கு பிறகும்
இன்னும் செல்வ செழிப்போடும் சீரும் சிறப்போடும் வளர்ந்து வருகிறது !
இதை நம் நாட்டு மக்களே இன்னும் அறியாத போடு வெளி நாட்டு சக்திகள்
அறிவதற்கு வழியேது !
http://kanthakadavul.blogspot.com/2011/04/blog-post_07.html

மதுரை ராஜா said...

அண்ணே தனி ஆளா நின்னு ( பதிவுலகத்துல ) மு.க. & கோ க்கு எதிரா அசராம போராடுற உங்களுக்கு நிச்சயம் சிலை வைக்கலாம்

Namy said...

Some years back . My friend collect Rs 20000 thousand for "vanniyar trust " during his graduation in E.V.R. college Trichy. Now a days he feel , Ramadas cheat his vanniyar community . Because he did nothing for his community.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அய்யோ அய்யோ.....

உண்மைத்தமிழன் said...

[[[Ash said...

குடிகாரர்கள்கூட போதையில் உளறினாலும் போதை தெளிந்ததும் சுய நினைவுக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால், இவர்கள் மூழ்கி இருக்கும் அதிகாரப் போதை எப்போதும் தெளியாது. ஒவ்வொரு தேர்தலுக்கும், குரங்கு மரம் விட்டு மரம் தாவுகிற மாதிரி இவர்கள் அணி விட்டு அணி தாவுவார்கள். கொள்கை, கோட்பாடுகள் எல்லாம் மற்றவர்களுக்குதான். ஒவ்வொரு முறை அணி மாறுகிறபோதும் இவர்கள் விடும் அறிக்கைகளை படித்துப் பார்த்தால், மக்களை எல்லாம் எந்த அளவுக்கு கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரியும். தானோ தன் வாரிசுகளோ பதவிக்கு வந்தால் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று, அன்று இவர்கள் சொன்னதை மக்கள் மறக்காவிட்டாலும் இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். இம்முறை இவர்களின் எல்லா போதையையும் மக்கள் தெளிய வைத்து விடுவார்கள்.]]]

உங்களுடைய நம்பிக்கை பலிக்கட்டும் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் புதுச்சேரி said...

பாரத நாடு பழம்பெரும் நாடு ! இறை சக்தியின் இருப்பிடமே இதுதான்! அதனால்தான் எத்தனையோ தீய சக்திகளின் ஆக்கிரமிர்ப்புக்கு பிறகும்
இன்னும் செல்வ செழிப்போடும் சீரும் சிறப்போடும் வளர்ந்து வருகிறது! இதை நம் நாட்டு மக்களே இன்னும் அறியாதபோது வெளி நாட்டு சக்திகள் அறிவதற்கு வழியேது !
http://kanthakadavul.blogspot.com/2011/04/blog-post_07.html]]]

இங்கே கடவுள் பக்தியும், தேச பக்தியும் விலைக்கு வாங்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.. இதுதான் காரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை ராஜா said...

அண்ணே தனி ஆளா நின்னு (பதிவுலகத்துல) மு.க. & கோ க்கு எதிரா அசராம போராடுற உங்களுக்கு நிச்சயம் சிலை வைக்கலாம்.]]]

எதுக்கு? கடைசியாக காக்காவுக்கு கக்கூஸாகவா..? வேணாம்ப்பா.. வேணும்ன்னா விட்ருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Namy said...

Some years back . My friend collect Rs 20000 thousand for "vanniyar trust " during his graduation in E.V.R. college Trichy. Now a days he feel, Ramadas cheat his vanniyar community . Because he did nothing for his community.]]]

இந்த உண்மையை அவர் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவர் இனத்தைச் சேர்ந்தவர்களும் உணர வேண்டும். ராமதாஸின் வளர்ச்சியினால் அதிகம் பலனடைந்தது அவர்தான் என்பதில் எனக்கு ஐயமில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

அய்யோ அய்யோ.....]]]

ஏன்.. ஏன்.. ஏன்.. இந்த கூப்பாடு. என்னதான் கரடியாகக் கத்தினாலும் ம்ஹூம்.. ஒண்ணும் நடக்கப் போறதில்லை..!

Ganpat said...

http://myneta.info/tamilnadu2011/

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுதிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவும்
நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

http://myneta.info/tamilnadu2011/

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள்(தொகுதிவாரியாக) இந்த தளத்தில் சீரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை முடிந்த அளவு பிரபலப்படுத்தவும்
நன்றி.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

ELANGOVAN said...

i have lot of difference with your blogs/opinions. but i appreciate you for the one reason that you allow the comments without approval and you also put your replies.
there are so many people runs blogs cant have any courage to even allow decent comments/questions. i dont know why they have blogs, if they are not ready for debates.
anyway good job 'Unmai tamilan' thanks.

ராம கிருஷ்ணன் said...

////// http://www.luckylookonline.com/2011/04/strictly-18.html

யுவகிருஷ்ணா தன்னுடைய தங்கை அல்லது மனைவியின் படத்தை இப்படி தனது வலைமனையில் பதிவேற்றுவாரா? யார் பெற்ற பிள்ளையோ அந்த பெண். இதையெல்லாம் நீங்கள் தட்டி கேட்க மாட்டீர்களா? ////////
யுவக்ருஷ்ணா கருணாநிதியின் ஜால்ரா என்பது வலைபதிவர்களுக்கு நன்கு தெரியும். நான்கைந்து ஆண்டுகள் இருக்கும்.ஒரு இந்தியா டுடேயின் செக்ஸ் சம்பந்தமான சிறப்பிதழ் அது.மேட்டர் என்னன்னா.. பல வெப் சைட் முகவரிகளையும் சில நான் ரெசிடண்ட் இந்தியர்களான(என் ஆர் ஐ) போர்ன் ஸ்டார் எனப்படும் பலான நடிகைகளைப்பற்றிய செய்திகளையும் தாங்கிய சிறப்பிதழ். அதில் அப்பட்டமாக கூறிய ஒரு செய்தி என்னவென்றால்.. நம் இந்தியர்கள் பார்க்கும் பெய்டு வெப்சைட்களுக்கு நம் மக்கள் கட்டணமாக கிரிடிட் கார்டு மூலம் செலுத்தும் தொகை ஆண்டுக்கு சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய்கள். இது ஐந்து வருடங்களுக்கு முந்தய கணக்கு. யோசித்து பாருங்கள். கிரிடிட் கார்டு மூலம் செலுத்தும் தொகை ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ க்கு) தெரியாமல் நடக்குமா? கருப்பு பணங்களை எந்தந்த தீவுகளிலோ நம் அரசியல் வாதிகளும் தொழில் அதிபர்களும் பதுக்கி உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. பலான தொழில் பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு நடைபெறுவதும் நாம் அறிந்த செய்திகளே. அந்நிய என் ஆர் ஐ நிறுவனமாக பதிவு செய்து இந்த மாதிரி கம்பெனிகளில் நம் நாட்டு புள்ளி ராஜாக்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?நாற்பதாயிரம் கோடிகள் பிசினஸ் என்பது சில வருடங்கள் முன்பு.இன்றைய தொழில் நுட்பமும் வசதி வாய்ப்புகளும் விஞ்ஞான ஊழலும் தலை விரித்தாடும் இக்காலத்தில் எவ்வளவு பிசினஸ் நடை பெறுகிறது என்பது நாம் அறிய முடியாத சிதம்பர ரகசியமே...! சட்ட விதிகளை பயன்படுத்தி புதிய பொருளாதார கொள்கைகளை பயன்படுத்தி பங்கு மார்க்கட்டில் கிராஷ் ஏற்படுத்தி கொள்ளை. சுரண்டல். பலான விழயங்களில் நம் மக்களின் வீக்னச்சை பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் அடிக்கும் கோடிகள் எவ்வளவோ....? இதை ஆராய்ந்தால் என்னென்ன பூதங்கள் சிக்குமோ....?

ராஜ நடராஜன் said...

மிகவும் தாமதமாகி வந்துட்டேன் போல இருக்குதே.

நடிகர்கள் என்றாலே அலர்ஜின்னு சொன்னவர் தொலைக்காட்சியில் இப்ப பிரபலங்கள் வடிவேலு,விஜயகாந்த் தான் வலம் வருகிறார்கள்;)

உண்மைத்தமிழன் said...

[[[ELANGOVAN said...

i have lot of difference with your blogs/opinions. but i appreciate you for the one reason that you allow the comments without approval and you also put your replies.
there are so many people runs blogs cant have any courage to even allow decent comments/questions. i dont know why they have blogs, if they are not ready for debates.
anyway good job 'Unmai tamilan' thanks.]]]

இளங்கோ ஸார்..

இங்கே கருத்து, சுதந்திரம்தான் முக்கியம்.. நாம் எவ்வளவு சுதந்திரமாக பதிவு எழுதுகிறோமோ, அதே அளவுக்கு பின்னூட்டங்களையும் திறந்த மனதுடன் எதிர் கொள்ள வேண்டும். ஆபாச அர்ச்சனைகளையும், அநாகரிகமான பின்னூட்டங்களையும் புறக்கணித்துவிட்டு நியாயமான முறையில் கருத்துப் பரிமாற்றம் என்றால் நான் எப்போதும் தயார்தான். இதனாலேயே எனது பதிவில் அனானிகளுக்குத் தடை போட்டுவிட்டேன்..!

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

ராமகிருஷ்ணன்..

இது அரசியல்வியாதிகள் கொள்ளையடிக்கின்ற நாட்டில் தொடர்ந்து நடப்பதுதான்..!

வளைகுடா முஸ்லீம் நாடுகள், மலேசியா, சிங்கப்பூரில் இது மாதிரி செய்ய முடியுமா..? நோண்டி நொங்கெடுத்துவிடுவார்கள்.. ஆனால் நம் நாட்டில்..

இந்த லட்சணத்தில்தான் அரசியல்வியாதிகள் ஆட்சி நடத்தி வருகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
மிகவும் தாமதமாகி வந்துட்டேன் போல இருக்குதே. நடிகர்கள் என்றாலே அலர்ஜின்னு சொன்னவர் தொலைக்காட்சியில் இப்ப பிரபலங்கள் வடிவேலு, விஜயகாந்த்தான் வலம் வருகிறார்கள்;)]]]

அரசியலுக்கு வந்துட்டா குட்டிக்கரணம் போட்டுத்தான் ஆகணும் ஸார்..!

பதவியும், பணமும் ச்சும்மா வந்திருமா என்ன..?

கொள்கையாவது, கோட்பாடாவது.. கொண்டுபோய் குப்பையில் போடுங்கள்..!

Arun Ambie said...

//[[[சாரு புழிஞ்சதா said...

வருங்கால ஜனாதிபதி உண்மைதமிழன் வாழ்க!]]]

பிரதமர்ன்னு போட்டாலும் ஒத்துக்கலாம். ரப்பர் ஸ்டாம்ப் பதவியெல்லாம் நமக்கெதுக்குண்ணே..?
//
என்னமோ பிரதமர் பதவிக்கு அதிகாரமெல்லாம் இருக்கறமாதிரி .... ஹே! ஹெஹ்ஹே!! ஹெஹ்ஹெஹ்ஹே!!!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

//[[[சாரு புழிஞ்சதா said...

வருங்கால ஜனாதிபதி உண்மைதமிழன் வாழ்க!]]]

பிரதமர்ன்னு போட்டாலும் ஒத்துக்கலாம். ரப்பர் ஸ்டாம்ப் பதவியெல்லாம் நமக்கெதுக்குண்ணே..?//

என்னமோ பிரதமர் பதவிக்கு அதிகாரமெல்லாம் இருக்கற மாதிரி. ஹே! ஹெஹ்ஹே!! ஹெஹ்ஹெஹ்ஹே!!!]]

அதை உக்காந்த பின்னாடி யோசிப்போம்ண்ணே..! எல்லாரும் மன்மோகன்சிங் மாதிரியே இருப்பாங்களா..?