ஆ.ராசா அமைச்சராகக் காரணமே கனிமொழிதான்..!

30-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனையோ திருப்புமுனைகளைக் கடந்து வந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது  கனிமொழி அத்தி​யாயத்தில் நிற்கிறது. இனி, வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவு தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டியதுதான் பாக்கி.

  

சி.ஏ.ஜி. அறிக்கையையும் 2-ஜி ஊழலையும் ஆளும் கட்சியைத் தவிர்த்து சில எதிர்க்கட்சிகளும் இணைந்து மிகைப்படுத்திப் பேசினாலும், இந்த ஊழலை இதயமே இல்லாதவர்களின் செயல் என்றுதான் வர்ணிக்க வேண்டும்.

2008-ன் நடுவிலேயே பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும், போட்டித் தனியார் நிறுவனங்களும், '2-ஜி விவகாரத்தில் அரசுக்கு என்னென்ன நஷ்டம்? ஆ.ராசா என்னென்ன தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்..? அவரும் தி.மு.க. குடும்பமும் என்ன பலன் அடைந்தனர்...? அரசு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டாமா..?’ என்று கண்டனங்களும் கேள்விகளும் எழுப்பின.

இத்தனை எதிர்ப்புகள் இருந்த நேரத்தில்தான், அதாவது 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி. 200 கோடியைப் பெற்று உள்ளது. இதைத்தான் ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, கடந்த 25-ம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையில் வெளியிட்டது சி.பி.ஐ.!

இந்தக் குற்றப் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான் என்றாலும், சி.பி.ஐ. இப்போதுதான் ஆதாரப்பூர்வமான சாட்சியங்களோடு உறுதி செய்துள்ளது.

'கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்ட​மன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதனால், கனிமொழியைப் பற்றியும் கலைஞர் டி.வி-யைப் ​பற்றியும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றால், தேர்தல் பிரசாரத்தில் வீணான சர்ச்சைகள் கிளம்பும் என்று தி.மு.க-வினர் காங்கிரஸிடம் மன்றாடினர். அவர்​கள் கோரிக்கைக்கு, மத்தியில் உள்ளவர்களும் அப்போது செவிசாய்த்தார்கள். அதனால்தான், குற்றப் பத்திரிகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு சி.பி.ஐ. ஆளானது’ என்கிறார்கள். 

முதல் குற்றப் பத்திரிகையில், தனியார் கம்பெனி​களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், ஆ.ராசா மேற்கொண்ட தில்லுமுல்லுகளை சி.பி.ஐ. வெளியே கொண்டுவந்தது. ஆனால், இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் 2-ஜி ஊழலின் முக்கியக் கருவை எடுத்து ​வைத்திருக்கிறது.  இதில்தான் கனிமொழியை சி.பி.ஐ. இறக்கியுள்ளது.

இதில், ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா, ஷாகித் பால்வா​வின் சகோதரரும் குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநருமான ஆசிப் பால்வா, இதே நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் ராஜீவ் பி.அகர்வால், சினியுக் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, கலைஞர் டி.வி. இயக்குநர் சரத்குமார் ஆகியோரோடு கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், கனிமொழி, சரத்குமார், கரீம் முரானி ஆகியோர்தான் இன்னும் கைது செய்யப்படவில்லை. மற்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர்.

சம்மன் அனுப்பப்பட்ட மேற்கண்ட மூவரும் வரும் மே 6-ம் தேதி டெல்லியில் ஆஜராகும்போது, சிறைக்கு அனுப்பப்படலாம். இதில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவே இறுதியானது. மற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கனிமொழிக்கும் இதே நிலை வரலாம்.

2007-ல் சன் டி.வி. நிறுவனத்துக்கும், தி.மு.க-வுக்கும், பிரச்னை ஏற்படவே, கலைஞர் டி.வி. தொடங்கும் ஆயத்தப் பணிகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கனிமொழி தீவிரமாக இருந்ததாகச் சொல்லும் சி.பி.ஐ., 'இந்த விவகாரங்களில் ஆ.ராசாவை அவ்வப்போது தொடர்பு கொண்டு தொலைக்காட்சிக்கான அனுமதி பெற முயற்சி செய்தார்’ என்கிறது.

'மத்தியத் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் பதிவு பெற முயற்சித்தது, டாடா ஸ்கை பிளாட்ஃபாரத்தின் மூலம் கலைஞர் டி.வி-யை ஒளிபரப்ப அனுமதி கேட்டது  போன்ற விவகாரங்களில், எந்தவிதமான தாமதமும் ஏற்படாமல் இருக்க ஆ.ராசா உதவியுள்ளார். இதற்காக, கனிமொழி அடிக்கடி ஆ.ராசாவைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்’ என்கிற சி.பி.ஐ., ''கனிமொழி, கலைஞர் டி.வி. பங்குதாரர் மட்டும் அல்ல... அவர் ஓர் இயக்குநராகவும் இருந்தார். ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுப்பதில் தாமதம் ஆனது. அதனால், கலைஞர் டி.வி. தொடங்குவதில் கால தாமதம் ஆகக் கூடாது என்கிற காரணத்தால் கனிமொழி பதவியில் இருந்து விலகினார். ஆனால், அந்த டி.வி-யின் மூளையே கனிமொழிதான். அதன் செய்திகளில்கூட இவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!'' என்கிறது சி.பி.ஐ. 

''ஆ.ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆவதற்குக் காரணமாக இருந்ததே கனிமொழிதான். ஆ.ராசாவுக்காக தி.மு.க-வின் தலைமை​யகத்தில் இவரே பேசினார்'' என்றும் குற்றம் சாட்டி, 2-ஜி ஊழல் வழக்கில் 17-வது குற்றவாளியாக  கனிமொழியை சேர்த்துள்ளது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்​களாக இருப்பவை, இரண்டு சாட்சியங்கள். ஒன்று, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலம். இது குறித்து ஜூனியர் விகடன் 20.4.11 இதழில் விரிவாக வெளியிட்டு இருக்கிறோம். மற்றொருவர், நீரா ராடியா.


ஆ.ராசாவை சந்தித்து கலைஞர் டி.வி. தொடங்க முயற்சி செய்தது, நீரா ராடியாவுடன் நேரடியாகவும் தொலைபேசியிலும் பேசி லீக் ஆன விவகாரங்கள் எல்லாம் கனிமொழிக்கு எதிரான சாட்சியங்களாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. வைக்கும் முக்கியத் தகவலே, கலைஞர் டி.வி-க்கு 200 கோடி வந்த விவகாரம்தான். இது ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெற்ற நிறுவனங்கள் லஞ்சமாகக் கொடுத்த பணம் என்கிறார்கள்.

'ஒரிஜினலாக, ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம். மறைமுகமாக இந்த நிறுவனத்தின் மூலம் ஜி.எஸ்.எம். மொபைல் உரிமங்களைப் பெற ரிலையன்ஸ் முயற்சி செய்தது. பின்னர் இரட்டை உரிமத்தின் அடிப்படையில் ரிலையன்ஸுக்கு நேரடியாகவே முறைப்படி ஜி.எஸ்.எம் உரிமங்கள் கிடைத்தன. இப்படிக் கிடைத்தும், ஸ்வான் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ரிலையன்ஸ் வாபஸ் வாங்கவில்லை.

ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டிபி ரியாலிட்டி குரூப் நிறுவனத்தினர் ஷாகித் உஸ்மான் பால்வாவும் வினோத் கோயங்காவும் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'ஸ்வானுக்கும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தகுதி இல்லை. 2005-ம் ஆண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிம வழிகாட்டி விதிமுறைகளின்படி ஸ்வான் மற்றும் யுனிடெக் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

தகுதி இல்லாத சான்றிதழ்களை வைத்துக் ​கொண்டு உரிமங்களைப் பெற முயற்சித்த இவர்களிடம், ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத் துறை உரிமங்களைக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. சொல்கிறது.  இதன்படி, வந்த ஊழல் பணம் கறுப்புப் பணமாக இருக்க... இதை வெள்ளையாக மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் இரண்டாவது குற்றப் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

'இதன் முதல் சுற்று, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது. 2004-ல் சுற்றுச்சூழல் அமைச்சரானவுடன் ஆ.ராசா தொடங்கிய பினாமி நிறுவனம் இது.  சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பட்சாவின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் சாதிக் பாட்சாவின் மனைவி போன்ற வேறு சிலரை இயக்குநர்களாக ஆக்கினார். இந்த நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விலகினார்.

2-ஜி கறுப்புப் பணத்தை இந்த நிறுவனத்தின் மூலம் கொண்டுவரும் முயற்சியில் ஆரம்பத்தில் ஈடுபட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. கூறுகிறது. 'ஆனால், இந்த நிறுவனத்துக்கு சில கோடிகள் பணம் வந்துள்ளது. ரியல் எஸ்டேட்டுக்கு நிலங்களை வாங்க டிபி ரியாலிட்டி சில கோடிகளை க்ரீன் ஹவுஸுக்கு கொடுத்துள்ளது. பின்னர் இதே பணத்தை க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்தது...’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்குப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்படி எல்லாம் பணம் புழங்கியது..?’ என்பதற்கு சில ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சொல்கிறது.

'ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிய ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட டி.பி. ரியாலிட்டி, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மூலம் தமிழ்நாட்டில் பெரும் அளவில் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்டது. ஆனால், அது வெற்றிகரமாக நடக்கவில்லை. இதனால் கொடுக்கப்பட்ட பணத்தையும் க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், 'இதற்குக் காரணம் க்ரீன் ஹவுஸ் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியானதுதான்’ என்று, சி.பி.ஐ. கருதுகிறது.

ஆனால், 2-ஜி கறுப்புப் பணத்தை கலைஞர் டி.வி. மூலமாக வெள்ளையாக்கும் முயற்சிகள் பின்னர் நடந்துள்ளன. சுமார் 200 கோடி ஸ்வான் டெலிகாம் பணம், கலைஞர் டி.வி-க்கு வந்துள்ளது. அதிலும், இந்த ஊழல் விவகாரம் உச்சக்கட்டமாக வெடித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான், பணப் பரிவர்த்தனைகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடந்துள்ளது. இதில்தான் கருணாநிதி குடும்பத்தினரின் மனோதைரியம் குறித்து ஆச்சர்யத்தோடுதான் பேசிக்  கொள்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

லாபம் 1.36 கோடி... கடன் 214  கோடி... எப்படி?!

ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக கனிமொழி பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதும், முதல்வர் கருணாநிதி ஆலிவர் சாலையில் ஆலோசனை நடத்தினார்.

நீண்ட நேர ஆலோசனைக்குப் பின், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில்,  '2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில், கலைஞர் டி.வி. வாங்கிய கடன்  214 கோடி திருப்பித் தரப்பட்டுவிட்டது.  அதற்கான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்த பிறகும், குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயரை சேர்த்து உள்ளது சி.பி.ஐ. இதைப் பற்றி விவாதிக்க தி.மு.க-வின் உயர் நிலைக் குழு கூடுகிறது’  என்று ஓர் அறிக்கை வெளியானது. ஆனால், உண்மை நிலையோ வேடிக்கையானது! 

கலைஞர் டி.வி-யின் 20 சதவிகிதப் பங்குகள் கனிமொழிக்கும், 20 சதவிகிதப் பங்குகள் சரத் குமார் ரெட்டிக்கும், 60 சதவிகிதப் பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் உள்ளது.  'டிபி ரியாலிட்டி மூலம் ஊழல் பணம் 214.8 கோடி கை மாறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் இருந்து, தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்’ என்று 27.7.07-ல் கலைஞர் டி.வி. போர்டு மீட்டிங் நடந்ததுபோல மினிட்ஸ் ரெடியானது என்கிறது சி.பி.ஐ. தரப்பு.


'தயாளு அம்மாளுக்கு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாது, மேலும் வயதாகிவிட்டது. எனவே, அவருடைய பங்குக்கு உள்ள அதிகாரத்தைக் கவனிக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிக்குக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது’ என்று உள்ள அந்த மினிட்ஸ் நகலை, டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நடந்த விசாரணையின்போது, சரத்குமார் ரெட்டி கொடுத்தாராம். அந்த மினிட்ஸின் அடிப்படையில்தான் 60 சதவிகிதப் பங்குகள் இருந்தும், குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாளைச் சேர்க்கவில்லை என்கிறார்கள்.

கலைஞர் டி.வி. ஒப்படைத்த வரவு - செலவுக் கணக்கில், 'டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி, எந்த ஆவணமும் இல்லாமல் பெறப்பட்ட கடன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தகவல்படி, கலைஞர் டி.வி-யின் ஆண்டு வரவு  63.12 கோடி. செலவு  61.47 கோடி.

நிகர லாபம் வரி செலுத்தும் முன்பு 1.65 கோடி. வரி செலுத்திய பின் லாபம் 1.36 கோடி மட்டும்தான். ஆனால், இப்படி இருக்கும் நிறுவனத்துக்கு ஆவணம் இல்லாமல், 214.8 கோடியை எப்படிக் கடனாகக் கொடுக்க முன் வந்தது டி.பி. ரியாலிட்டி நிறுவனம்?

கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில்  214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்? 

மேலும், கலைஞர் டி.வி-யின் வரவு - செலவுக் கணக்கில், 'கண்ணுக்குப் புலப்படாத சொத்துக் கணக்கில் 2008-09-ல் 123.25 கோடி என்றும் அது 2009-10-ல் 159.16 கோடி’ என்றும் காட்டப்பட்டு உள்ளது. ''கண்ணுக்குத் தெரியாத சொத்தின் மதிப்பு மட்டும் எப்படி ஆண்டுக்கு ஆண்டு உயரும்? அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'' என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கலைஞர் டி.வி-யின் சரத்குமார் ரெட்டியிடம் கேட்டு வருகிறார்கள்.

என்ன பதில் சொல்லப் போகிறார் சார்..?

நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011

31 comments:

jaisankar jaganathan said...

அண்ணா உங்க சொந்த கருத்தையும் சேர்த்து எழுதுங்க

இதெல்லாம் டூப்பு. கலைஞர் தான் டாப்பு

thamizhan said...

ஜூனியர் விகடனில் வந்ததை அடிப்படையாக வைத்து எழுதாதீர்கள்.உங்கள் சொந்த முயற்சியில் கண்டுபிடித்து எழுதுங்கள். இல்ல உங்க தொழில பாருங்க.

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...

அண்ணா உங்க சொந்த கருத்தையும் சேர்த்து எழுதுங்க. இதெல்லாம் டூப்பு. கலைஞர்தான் டாப்பு.]]]

ஜெய்.. எவ்ளோதான் எழுதறது..? எழுதி, எழுதி எனக்கே வெறுப்பா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...

ஜூனியர் விகடனில் வந்ததை அடிப்படையாக வைத்து எழுதாதீர்கள். உங்கள் சொந்த முயற்சியில் கண்டுபிடித்து எழுதுங்கள். இல்ல உங்க தொழில பாருங்க.]]]

நான் ஒரு தொழில் முறை பத்திரிகையாளராக இருந்தால்தான் இதுபோல் துப்பறிந்து எழுத முடியும்..! புரிந்து கொள்ளுங்கள்..!

MANI said...

அண்ணே உங்க நோக்கம் புரியுது ஸ்பெக்ட்ரம் பற்றி தொகுத்து சீக்கிரம் ஒரு புக் பப்ளிஷ் பண்ணிங்கன்னா நாங்க பத்திரமா வாங்கி வச்சுக்குவோம்.

///கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில் 214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்?

/////கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில் 214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்?/////

ஏழுமாசம் தானே ஆகியிருக்கு கடன் வாங்கன பணத்தை செலவு பண்ணாம வச்சிருப்பாங்க பிரச்சனைன்னு வந்தகப்புறம் வட்டிமட்டும் போட்டு திருப்பி கொடுத்திருப்பாங்க இதுக்கு எதுக்கு திரும்ப கடன் வாங்கனும்.

ராஜ நடராஜன் said...

நான் பதிவு போட்டுட்டு யாராவது கேள்வி கேட்டு மிரட்டுனா நேரா உங்க கடைக்குப் போங்கன்னு துரத்தி விட்டுறண்ணே:)

உண்மைத்தமிழன் said...

[[[MANI said...

அண்ணே உங்க நோக்கம் புரியுது ஸ்பெக்ட்ரம் பற்றி தொகுத்து சீக்கிரம் ஒரு புக் பப்ளிஷ் பண்ணிங்கன்னா நாங்க பத்திரமா வாங்கி வச்சுக்குவோம்.]]]

ஏற்கெனவே இதுவரையில் வந்த கட்டுரைகளைத் தொகுத்து ஆ.விகடன் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாங்கிப் படியுங்கள் மணி ஸார்..!

//கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில் 214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்?/////

ஏழுமாசம் தானே ஆகியிருக்கு கடன் வாங்கன பணத்தை செலவு பண்ணாம வச்சிருப்பாங்க பிரச்சனைன்னு வந்தகப்புறம் வட்டிமட்டும் போட்டு திருப்பி கொடுத்திருப்பாங்க இதுக்கு எதுக்கு திரும்ப கடன் வாங்கனும்.]]]

214 கோடிக்கு வட்டி எவ்ளோ இருக்கும். யோசிச்சுப் பாருங்க. சில கோடிகள் இருக்குமே. அந்தக் கோடிகள் எந்தக் கேடியிடம் இருந்து வாங்கியது என்பதுதான் சிபிஐயின் கேள்வி..!

உண்மைத்தமிழன் said...

[[ராஜ நடராஜன் said...

நான் பதிவு போட்டுட்டு யாராவது கேள்வி கேட்டு மிரட்டுனா நேரா உங்க கடைக்குப் போங்கன்னு துரத்தி விட்டுறண்ணே:)]]]

தாராளமா..! உங்களுடைய பேருதவிக்கு எனது நன்றி ராஜநடராஜன் ஸார்..!

Ganpat said...

இன்னிக்கு ஒன்னாந்தேதி!ஆச்சு இன்னும் 13 நாளில்
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு"
வரப்போகுது.அதுவரைக்கும் கொஞ்சம் ஓய்வெடுங்களேன்!சொந்தவேலை எதாச்சும் பாக்கி இருந்தா அதையும் முடிங்க!
ஊழல எங்க ஓடியாப்போகப்போகுது??
15த்தேதி முதல ஜாம் ஜாம்னு தொடரப்போகுது!!அப்போ பாத்துக்கலாம்.
நல்ல வேளையா நம்ம தமிழ்ல ஆண்பால் பெண்பால் இரண்டிற்கும் உயர்விகுதி "அர்" தான்!!அந்த வேலையும் மிச்சம்!!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...
இன்னிக்கு ஒன்னாந் தேதி! ஆச்சு இன்னும் 13 நாளில் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" வரப் போகுது. அதுவரைக்கும் கொஞ்சம் ஓய்வெடுங்களேன்! சொந்த வேலை எதாச்சும் பாக்கி இருந்தா அதையும் முடிங்க! ஊழல எங்க ஓடியாப் போகப் போகுது?? 15-ந் தேதி முதல ஜாம் ஜாம்னு தொடரப் போகுது!! அப்போ பாத்துக்கலாம். நல்ல வேளையா நம்ம தமிழ்ல ஆண்பால் பெண்பால் இரண்டிற்கும் உயர்விகுதி "அர்"தான்!!அந்த வேலையும் மிச்சம்!!]]]

அப்படீன்னு விட முடியாதே.. இன்னும் சொல்ல வேண்டிய ஊழல் கதை நிறைய இருக்கு நண்பா..!

abeer ahmed said...

See who owns ponc0.com or any other website:
http://whois.domaintasks.com/ponc0.com

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...
This comment has been removed by the author.
abeer ahmed said...
This comment has been removed by the author.
abeer ahmed said...
This comment has been removed by the author.
abeer ahmed said...
This comment has been removed by the author.
abeer ahmed said...

See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com....sdghesgeogeh

abeer ahmed said...

See who owns blogspot.com #2524446# or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 2524446 or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...
This comment has been removed by the author.
abeer ahmed said...
This comment has been removed by the author.
abeer ahmed said...

See who owns alexa.com 3593475035 or any other website.

abeer ahmed said...

See who owns -alexa.com- 3593475035 or any other website.

abeer ahmed said...

See who owns Any Site 3593475035 or any other website.

abeer ahmed said...
This comment has been removed by the author.
abeer ahmed said...

See who owns any other website Click Here.

abeer ahmed said...

See who owns alexa.com or any other website.

abeer ahmed said...

See who owns google.com or any other website.

abeer ahmed said...
This comment has been removed by the author.