கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!

11-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் கருணாநிதியின் வீராணம் ஊழல்-1 : சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!
  என்ற இதன் முதல் பாகத்தைக் கொஞ்சம் சோம்பேறித்தனப்படாமல் படித்துவிடுங்கள். ஏற்கெனவே படித்துவிட்டவர்கள் நேரடியாகக் களத்தில் குதிக்கலாம்..!

வீராணம் ஊழலில் சத்தியநாராயணா நிறுவனத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியும், பொதுப்பணித் துறை அமைச்சரும் எப்படியெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்பதை கடந்த இதழில் பார்த்தோம். இவர்கள் இருவரும் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கக் காரணமென்ன..?

முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டுமென விருப்பம் இருந்தது. அதனால் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியநாராயணாவின் மருமகன் புருஷோத்தம் என்பவரோடு மாறன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.


முரசொலி மாறன், முதலமைச்சரி்ன் மருமகன் என்பதால், புருஷோத்தமும் அவருடன் நெருங்கிப் பழகுகிறார். 1970 ஜனவரி மாதம் பச்சையப்பன் டிரஸ்ட் அறங்காவலராக இருந்த எம்.ஏ.எம்.முத்தையா செட்டியார் இறக்கிறார். அந்தக் காலியிடம் தனக்கு வேண்டும் என்று புருஷோத்தமிடம் மாறன் தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து வேறு யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட முடியுமா என்ன..? மாறனின் பெயரை புருஷோத்தம் முன் மொழிய மாறன் ஆசைப்படி அவர் பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார். சில நாட்களிலேயே அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவியையும் மாறன் கைப்பற்றுகிறார்.

தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்த புருஷோத்தம் பதிலுக்கு வீராணம் குழாய்கள் அமைக்கும் பணியை தனக்கு பெற்றுத் தருமாறு கேட்கிறார். "நான் கான்ட்ராக்ட் வாங்கித் தருகிறேன். எனக்கு இரண்டரை சதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும்.." என்று மாறன் கேட்கிறார். உடனே கணக்குப் போட்டு வீராணம் திட்டத்தின் மொத்தத் திட்டச் செலவான 16 கோடியில் இரண்டரை சதவிகிதமான 40 லட்சம் ரூபாயை தனக்குக் கொடுத்து விடுமாறு கேட்கிறார். புருஷோத்தமும் அதற்கு ஒப்புக் கொள்கிறார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பூர்வாங்கமாக ஒப்பந்தம் வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள். மாறன் மட்டும் சளைத்தவரா என்ன..? "உங்களுக்கு அதுபோல உத்தரவு வழங்கப்படும். அதற்கு முன்னால் பேசிய தொகை 40 லட்சம் ரூபாய் வேண்டும்" என்கிறார்.

புருஷோத்தம் தன் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையை மொத்தமாகத் தர முடியாது. அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லிப் பேசு” என்கிறார்.

மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. "மொத்தமாகத் தர முடியாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று புருஷோத்தம் கேட்கிறார். மாறனோ, “நான் ஒன்றும் பெரிய தொகையைக் கேட்கவில்லை. 40 லட்சத்தைத்தான் கேட்டுள்ளேன். தராவிட்டால், வேறு யாருக்காவது ஒப்பந்தத்தைக் கொடுத்துவிடுவேன் என்று கூறுகிறார். (இந்தச் சமயத்தில்தான் சென்னை அண்ணா சாலையில், வீட்டோடு சேர்த்து 1240 சதுர அடி இடத்தை மாறன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார் என்பதில் இருந்து அப்போதைய பண மதிப்பைப் புரிந்து கொள்ளலாம்)

ஒரு வழியாக மீதித் தொகையை பின்னால் தருவது என்றும் முதல் தவணையாக ஒரு தொகை தரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்படுகிறது. ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, புருஷோத்தமும், அவர் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியும் மாறனோடு சேர்ந்து கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று 5 லட்சம் ரூபாயை அவரிடம் வழங்குகிறார்கள்.


இதையடுத்து, குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்து சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு 39 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பதிலுக்கு புருஷோத்தம் 32 லட்சம் ரூபாயை நேரடியாகவும், மாறன் மூலமாகவும் கருணாநிதியிடம் கொடுக்கிறார்.

சர்க்காரியா கமிஷன் இந்த வழக்கை விசாரித்தபோது, 32 லட்சம் ரூபாய் கறுப்புப் பணத்தில் இருந்து கருணாநிதிக்கு வழங்கப்பட்டது என்பதால், கருணாநிதியும் இக்குற்றத்திற்கு உடந்தையானவர் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால் புருஷோத்தம் தேதிவாரியாக எந்தெந்த நாட்களில் வங்கியிலிருந்து எவ்வளவு தொகை எடுக்கப்பட்டு கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை கமிஷன் முன் தாக்கல் செய்தார்.

ஒரு முறை கருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்று கொடுத்ததை கமிஷனிடம், “கரன்ஸி நோட்டுக்களாக 6 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன் கருணாநிதி வீட்டுக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். பணம் அடங்கிய தோல் பெட்டியை கருணாநிதி முன்னிலையில் மேசை மீது வைத்தேன். கருணாநிதி பெட்டியை எடுத்துக் கொண்டு காலி பெட்டியை திருப்பிக் கொடுத்தார்..” என்று புருஷோத்தம் விரிவாக சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது சிவராமன் என்ற பொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

குழாய்கள் அமைக்கும்போது அவற்றை சோதனை செய்து பார்க்க.. 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும், அந்தத் தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு தங்களுக்கு 96 லட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் கேட்டிருந்தனர். ஆனால் தாராப்பூர் நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும் செலவை தாங்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர் என்பதுதான் அந்தச் செய்தி..

இந்த எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் மீறித்தான் சத்தியநாராயணா நிறுவனத்துக்கு வேலை ஆணை வழங்கப்பட்டது. பணத்தைத் தண்ணீராக செலவு செய்வது என்பது இதுதானா..?

வீராணம் திட்டத்தில் எவ்வளவு பணம் வீணாக செலவழிக்கப்பட்டது என மாநில கணக்காயர் குழு ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி கூடுதல் நிதிச் சலுகைகள், தவிர்க்கத்தக்க செலவு, தரக்குறைவான குழாய்கள் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவான சிமெண்ட், மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்று மொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாநிதிக்கு மட்டும்தான் லாபமா.. இல்லையென்றால் மாறனுக்குமா என்ற கேள்வி வருகிறதே..? பதில் இதோ..! முரசொலி கட்டிடம் கட்டும் பணி சத்தியநாராயணா பிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. வேலையையும், கட்டுமானப் பொருட்களையும் இலவசமாகவே மாறன் பெற்றார்.

இது குறித்து கமிஷனிடம் பதிலளித்த மாறன், "மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், சத்தியநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற விவரம் தனக்குத் தெரியாது.." என்று பல்டியடித்தார். தன்னிடம் சிக்கியவர்களை தி.மு.க.வினர் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.


லஞ்சம் கொடுத்து வாங்கிய வேலையை சத்தியநாராயணா நிறுவனம் சரியாகச் செய்யவில்லை. அரைகுறையாகச் செய்யப்பட்ட பணிகளால் சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன. இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராக இருந்த ஆர்.நாகராஜன் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தில், “என்னைத் தனியாகச் சந்தித்த புருஷோத்தமிடம் வேலைகளை முடிக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு 29 லட்சம் என பெருந்தொகையை லஞ்சமாகக் கொடுத்ததால் எங்கள் தொழில் புழக்கத்துக்கான பணம் தீர்ந்துபோய்விட்டது” என்று அவர் சொன்னார்..” என்று சாட்சியமளித்துள்ளார்.

ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு..?

போட்ட திட்டம் நிறைவேறவில்லை. சத்தியநாராயணா நிறுவனம் ஏறக்குறைய நொடித்துப் போய்விட்டது. ஒரு நபர் இறந்துவிட்டால், பிரேதப் பரிசோதனை செய்து, இரங்கல் கூட்டம் போட வேண்டாமா..?

5.6.1974 அன்று சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் சத்தியநாராயணா நிறுவனம் குறித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

“சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்குத் தேவைப்படுகின்ற நிர்வாகம் மற்றும் வல்லுநர் அமைப்பு இல்லை. கால அட்டவணைப்படி தொழிற்சாலையை நடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை. இப்படிப்பட்ட மாபெரும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய திறமை சத்தியநாராயணா நிறுவனத்திடம் இல்லை. அவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து இந்தத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது..”

பிரேதப் பரிசோதனை அறிக்கை நன்றாக இருக்கிறதா..?

நிறைவேறாத திட்டத்துக்காக எப்படி ஒரு நிறுவனம் காலியானது. பார்த்தீர்களா..? இதுதான் விஞ்ஞானப்பூர்வமான மோசடி..!நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்-10-04-2011

24 comments:

bala said...

Anna don't worry i believe God definitely he will punish all this culprits very soon

உண்மைத்தமிழன் said...

[[[bala said...

Anna don't worry i believe God definitely he will punish all this culprits very soon.]]]

இந்தத் தேர்தலில் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்..!

குறும்பன் said...

தாத்தா சும்மாவா? எப்பேர் பட்ட கில்லாடி? எல்லாத்தையும் தாண்டி வந்துடரார் இல்ல. ஜன லோக்பால் இதுக்கெல்லாம் ஆப்பு வைக்குமா? இல்ல அதையும் தாத்தா சமாளிச்சு வந்துடுவாறா?

வழிப்போக்கன் - யோகேஷ் said...

என்னமா ப்ப்ப்ளான் பண்ணி.... ம்......

ரிஷி said...

இதைப் பற்றியெல்லாம் ஜெயா ஏன் மேடைகளில் பேசுவதில்லை? நியாயம் கேட்டுப் போராடுவதில்லை? பேசிப் பேசி அலுத்துப்போச்சோ??! அல்லது இதுபற்றியெல்லாம் தெரியாதா?

R.Gopi said...

தலைவா....

இந்த ஒலகத்துலயே பெரிய “சயிண்டிஸ்ட்” நம்ம “தல” தான்...

அது தான் “தல”யை விஞ்ஞான பூர்வ ஊழ்ல் செய்ய வைத்தது...

raja said...

I don't understand what u r trying to say from last couple of posts. I can understand if u r against corruption, u r only against karunanidhi corruption ... What about jayalalitha corruption .. Is that ok for you....u articles look very cheap.... Just because u feel selfish .. That's why u r worried ab t karunanidhi corruption. I m supporting karunanidhi but neither I do jayalaitha .... Is that if jayalaitha comes tomorrow all will prosper in tamilnadu.. Can you touch ur heart and say that please. Don't think ur always smart..there are some stupids who comment that god will punish ... As if jayalaitha is an angel... We need a true leader with vision not cheap vijayakanth and vijay... Growup for heavens sake...

Let god bless jayalaitha for what she did in mahamaham.... Ppl always forgive enemies but not ppl who betray ... Or backstab ... Thts exactly what jayalaitha did to vaikooo...

Let someone good come t power rather than these 2 ... So stop ur so called common man image..

ஜோ/Joe said...

//Is that if jayalaitha comes tomorrow all will prosper in tamilnadu.. Can you touch ur heart and say that please. //
:))))))))))))

ஒரு அம்மா தொண்டனிடம் போய் கேட்குற கேள்விய பாருங்க :))

ஜோ/Joe said...

//Don't think ur always smart..there are some stupids who comment that god will punish ... As if jayalaitha is an angel.//
அதே ..ஸ்ப்பா ..ரொம்ப தான் நல்ல பிள்ளை வேஷம் போடுறாங்கய்யா :)

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

தாத்தா சும்மாவா? எப்பேர்பட்ட கில்லாடி? எல்லாத்தையும் தாண்டி வந்துடரார் இல்ல. ஜன லோக்பால் இதுக்கெல்லாம் ஆப்பு வைக்குமா? இல்ல அதையும் தாத்தா சமாளிச்சு வந்துடுவாறா?]]]

மொதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.. அப்புறம் பார்க்கலாம்..!

அதாவது ஜன லோக்பால் சட்டமாகுமா என்று பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

என்னமா ப்ப்ப்ளான் பண்ணி.... ம்......]]]

இதுதான் தாத்தா..! தன்னுடைய வாழ்க்கையில் அவரோட புத்திக்கூர்மையை அதிகமாக இதில்தான் பயன்படுத்தியிருக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இதைப் பற்றியெல்லாம் ஜெயா ஏன் மேடைகளில் பேசுவதில்லை? நியாயம் கேட்டுப் போராடுவதில்லை? பேசிப் பேசி அலுத்துப் போச்சோ??! அல்லது இது பற்றியெல்லாம் தெரியாதா?]]]

அதான் அப்பப்போ அறிக்கையெல்லாம் விடுறாங்களே..!

மக்கள் பழங்கதையெல்லாம் கேக்குற நிலைமை இல்லீங்க.. அவங்களுக்கே ஆயிரம் வேலைகள் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

தலைவா. இந்த ஒலகத்துலயே பெரிய “சயிண்டிஸ்ட்” நம்ம “தல”தான்.
அதுதான் “தல”யை விஞ்ஞானபூர்வ ஊழ்ல் செய்ய வைத்தது.]]]

ம்.. வஞ்சப்புகழ்ச்சில இதுவும் ஒண்ணு கோபி..! சூப்பர்ப்..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

I don't understand what u r trying to say from last couple of posts. I can understand if u r against corruption, u r only against karunanidhi corruption. What about jayalalitha corruption. Is that ok for you. u articles look very cheap. Just because u feel selfish. That's why u r worried abt karunanidhi corruption. I m supporting karunanidhi but neither I do jayalaitha. Is that if jayalaitha comes tomorrow all will prosper in tamilnadu. Can you touch ur heart and say that please. Don't think ur always smart. there are some stupids who comment that god will punish. As if jayalaitha is an angel We need a true leader with vision not cheap vijayakanth and vijay. Growup for heavens sake... Let god bless jayalaitha for what she did in mahamaham. Ppl always forgive enemies but not ppl who betray. Or backstab. Thts exactly what jayalaitha did to vaikooo. Let someone good come t power rather than these 2. So stop ur so called common man image.]]]

ரொம்ப சந்தோஷம் ராஜா..

நான் ஜெயலலிதா ஆதரவாளனாகவே இருந்துவிட்டு போகிறேன். ஜெயலலிதாவுக்காக கருணாநிதிக்கு என்னால் வக்காலத்து வாங்க முடியாது..! பொறுத்துக் கொள்ளவும் முடியாது..!

நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...

//Is that if jayalaitha comes tomorrow all will prosper in tamilnadu.. Can you touch ur heart and say that please.//
:))))))))))))

ஒரு அம்மா தொண்டனிடம் போய் கேட்குற கேள்விய பாருங்க :))]]]

ஜோ.. ஐயாவுக்குத் தொண்டனாக இருப்பதைவிட அம்மாவுக்குத் தொண்டனாக இருப்பதே இப்போதைக்கு பரவாயில்லை. நல்ல விஷயம்.. பெரிய விஷயம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...

//Don't think ur always smart..there are some stupids who comment that god will punish ... As if jayalaitha is an angel.//

அதே. ஸ்ப்பா. ரொம்பதான் நல்ல பிள்ளை வேஷம் போடுறாங்கய்யா :)]]]

ஜோ.. யாரைத் திட்டுறீங்க? என்னையவா? ராஜாவையா..?

ரிஷி said...

சரவணன்,
தொடர்ச்சியான உங்களின் ஊழல் பதிவுகள் மக்களுக்கு சற்றே அயர்ச்சியைத் தந்திருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பின்னூட்டங்களின் எண்ணிக்கைக் குறைவு அதையே உணர்த்துகிறது.

அரசியல் ஒரு கார்ப்பரேட் லெவல் தொழிலாகிவிட்ட நிலையில்.. அதிமுக வந்தால் மக்களின் வாழ்க்கை ஒளிர்ந்து விடும், மாற்றம் வந்துவிடும் என்று எண்ணுவதும் ஒரு அறியாமையே!

இங்கு இப்போது யாரும் யாரையும் நம்பத் தயாரில்லை. சொந்த அண்ணன் தம்பிக்குள்ளேயே லட்ச ரூபாய் சொத்தை பங்கிடுவதில் அடித்துக்கொள்ளும்போது கோடிகள் புரளும் அரசியல் தொழிலில் ஈடுபடுவோர் மக்கள் நலனை நினைத்துப் பார்க்க அவர்கள் என்ன மடையர்களா??

raja said...

ரொம்ப சந்தோஷம் ராஜா..

நான் ஜெயலலிதா ஆதரவாளனாகவே இருந்துவிட்டு போகிறேன். ஜெயலலிதாவுக்காக கருணாநிதிக்கு என்னால் வக்காலத்து வாங்க முடியாது..! பொறுத்துக் கொள்ளவும் முடியாது..!

நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்..!

--- Ivaru niyastharamamaaa...
can you say that Jayalalitha's rule was corruption less ?? ok Karunaidhi's family is doing everyhting... till 1992 did u know who was sasikala? natraj ? mahadevan ? sahadevan ? dinakara? divakaran? chinna MGR.. periya MGR ?? are these ppl business man ?? sir sollunga sir... ivangalam yaarunga sir...??

pradeep said...

Mr.Raja,
Are u ready to sacrifice your life for the society, start a party, i will vote for u....
U cant do it...
so compare the two culprits, who is least dangerous vote for them and
we will wait for the leader for generations!
I dont expect a leader will come in my life time who can serve the society better.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சரவணன், தொடர்ச்சியான உங்களின் ஊழல் பதிவுகள் மக்களுக்கு சற்றே அயர்ச்சியைத் தந்திருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பின்னூட்டங்களின் எண்ணிக்கைக் குறைவு அதையே உணர்த்துகிறது.]]]

ரிஷி.. பின்னூட்டங்கள் வரவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால் நான் அதற்காக இந்தப் பதிவுகளை எழுதவில்லை. இணையத்தில் சில தகவல்களை வருங்காலத்தினருக்காக பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். அதனால்தான்..! நோ பிராப்ளம்.. ஆயிரம் பேர் இந்த ஒரு பதிவைப் படித்து இன்னும் ஒரு ஆயிரம் பேரிடம் தெரிவி்த்தால்கூட எனக்கு போதும்தான்..!

[[[அரசியல் ஒரு கார்ப்பரேட் லெவல் தொழிலாகிவிட்ட நிலையில் அதிமுக வந்தால் மக்களின் வாழ்க்கை ஒளிர்ந்து விடும், மாற்றம் வந்துவிடும் என்று எண்ணுவதும் ஒரு அறியாமையே!]]]

உண்மைதான். கொள்ளையர்கள் எல்லா கட்சியிலும்தான் உள்ளார்கள். ஆனால் இப்போது நமது கணக்கீடு, யார் அதிகமாகக் கொள்ளையடிக்கிறார்கள்..? யார் குறைவாகக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான்..!

[[[இங்கு இப்போது யாரும் யாரையும் நம்பத் தயாரில்லை. சொந்த அண்ணன் தம்பிக்குள்ளேயே லட்ச ரூபாய் சொத்தை பங்கிடுவதில் அடித்துக் கொள்ளும்போது கோடிகள் புரளும் அரசியல் தொழிலில் ஈடுபடுவோர் மக்கள் நலனை நினைத்துப் பார்க்க அவர்கள் என்ன மடையர்களா??]]]

அப்போது அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் மடையர்கள்தானே.. இந்த விழிப்புணர்வுக்கு இது போன்ற பதிவுகள் அவசியம் தேவைதான் ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

ரொம்ப சந்தோஷம் ராஜா. நான் ஜெயலலிதா ஆதரவாளனாகவே இருந்துவிட்டு போகிறேன். ஜெயலலிதாவுக்காக கருணாநிதிக்கு என்னால் வக்காலத்து வாங்க முடியாது..! பொறுத்துக் கொள்ளவும் முடியாது! நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்..!

--- Ivaru niyastharamamaaa...
can you say that Jayalalitha's rule was corruption less?? ok Karunaidhi's family is doing everyhting... till 1992 did u know who was sasikala? natraj ? mahadevan ? sahadevan ? dinakara? divakaran? chinna MGR. periya MGR? are these ppl business man? sir sollunga sir. ivangalam yaarunga sir.??]]]

இதுவும் ஒரு கொள்ளைக் கூட்டம்தான்! இவர்களுக்காக இன்னொரு கொள்ளைக் கூட்டத்தை நாம் சகித்துக் கொள்ள வேண்டுமா?

உண்மைத்தமிழன் said...

[[[pradeep said...

Mr.Raja,
Are u ready to sacrifice your life for the society, start a party, i will vote for u....
U cant do it...
so compare the two culprits, who is least dangerous vote for them and we will wait for the leader for generations!
I dont expect a leader will come in my life time who can serve the society better.]]]

நானும் இந்த அளவுகோல்படிதான் பார்க்கிறேன்..!

raja said...

Mr.Saravanan & MR. True Tamilian .. If this is the measurement criteria... I would say from 1991-1996 jayalaitha,s rule was worse then anyone else... And we elected karunanidhi in 1996 ... I don't see that was as bad as jayalalitha's ... So why did ppl select jayalaitha in 2001.

So what she did... In 2001 .. Was it a golden rule... No... So again we choose 2006 and karunanidhi 's worst in all 5 terms ... So again we choose jayalaitha so we can get frustrated for another 5yrs....

Ok now u say we choose jayalaitha is least harm in terms compared to karunanidhi ... So what assurance u have that sasikala fmly will not do 100times more than what karunanidhi did .... U ppl complain that they overtook e cinema industry ... Did not sasikala fmly take houses from ordinary ppl... By sending Auto... How many big houses were taken away from common ppl....

What abt the treatment to Muslims and Christians... The only leader who welcomes Modi ... To be Frank Modi is having a good governance... But does that not mean ... What he did were right during the Gujarat riots.... So if a leader supports Modi point of view....then given a chance jayalalitha will do the same in tamilnadu....


Hahaha Saravanan good joke.... Why do u want me to start a party.... And u don't even know me... Nd u are already ready to support me....so u will not use ur sixth sense at all... If anyone writes 2 lines in a forum u will support the person.. This is why the ppl who give sewing machine and books ... Wanted to be CM in tamilnadu...

FYI- I am not a good leader... I am good worker... Who have the good intention to do good for my motherland...

உண்மைத்தமிழன் said...

ராஜா ஸார்..

ஜெயலலிதாவுக்கு 2001-ல் தமிழகத்து மக்கள் வாழ்க்கை கொடுத்தார்கள். ஆனால் அதனை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை..!
அப்போது அரசு ஊழியர்களுக்கு எதிராக அவர் செயல்பட்டவிதமே அவரது ஆட்சியைக் கவிழ்த்தது..!

சசிகலா உறவினர்களின் சொத்துக் குவிப்பு, கருணாநிதியின் குடும்பச் சொத்துக்குக் கொஞ்சம் குறைவுதான். ஆனால் நோக்கம் ஒன்றுதான்..!

கருணாநிதி இன்றைக்கு அளவு கடந்து லஞ்சத்தை வளர்த்துவிட்டதால் உடனேயே அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிறேன்..

மாற்று யார் என்று கேட்டீர்களேயானால் அது என்னிடம் இல்லை.. நம் மக்கள் திரும்பத் திரும்ப தி.மு.க., அ.தி.மு.க. என்றே மாறி, மாறி போடுகிறார்கள். தவறு மக்கள் மீதுதான்..

வைகோ, விஜயகாந்த் என்ற இருவர் போட்டியிட்டபோது அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. செய்யாதது மக்களின் தப்பு..!