நடிகை விந்தியான்னா யாருண்ணே..?

05-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது திரையுலக அரசியல்வியாதிகளின் இரண்டாவது மோதல் கட்டுரை..!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழப் போறார் வடிவேலு!

அனல் வெயிலில் அரசியல்வாதிகளுக்கு நிகராகப் பிரசாரத்தில் பின்னி எடுக்கிறார்​கள் கோலிவுட் பிரபலங்கள்!

கோவை தெற்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சேலஞ்சர் துரைக்காக மைக் பிடித்த நடிகை விந்தியா பேசுவதைக் கேளுங்களேன்...


''வடிவேலு சினிமாவில் காமெடியன். நிஜத்தில் அதைவிடப் பெரிய காமெடியன்! புதுசாப் பிரசாரம் பண்ண வந்த ஜோர்ல என்ன பேசுறோம், எதைப் பேசுறோம்னே தெரியாம டயலாக் அடிக்கிறார்.

குறிப்பா, கேப்டன் விஜயகாந்த்தை ரொம்ப வம்புக்கு இழுக்கிறார். மக்கள் மத்தியில் செம செல்வாக்கோட பிரசாரத்துல தூள் கிளப்புற கேப்டனைப் பத்தி வடிவேலு வாய்க்கு வந்தபடி பேசுறது சுத்தமா சரியில்லே.

கேப்டன் தன்னோட லெக்கை சுழற்றிச் சுழற்றி கிக் பண்ணினார்னா... அது எப்படி பவர்ஃபுல்லா இருக்கும்னு தெரியுமா? சினிமாவில் தர்ம அடி வாங்கிப் பழக்கப்பட்ட வடிவேலு, அரசியலில் நம்ம கேப்டன்கிட்டே செமத்தியா அடி வாங்கப் போறார்.

கேப்டன்கிட்டே அடி வாங்கிட்டு 'அவ்வ்வ்வ்வ்...’னு வடிவேலு அழப் போறதை நாம் பார்க்கத்தான் போ​றோம்.'' என்று வடிவேலுவை வகுந்து எடுத்தவர் பிறகு, ''உங்க சைடு ஆளுங்​களோட லட்சணத்தைப் பேசுறதுக்கு எங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒண்ணே போதும்... என்னமோ சொல்றீங்களே... 'கொடநாடுக்குப் போயி அம்மா ரெஸ்ட் எடுக்கிறாங்க, ரெஸ்ட் எடுக்கிறாங்க’ன்னு. கொடநாடு தமிழ்நாட்டில்தானே இருக்கு! அங்கே அம்மா போறது தப்பில்லே. ஆனா, உங்க ஸ்டாலின் எதுக்காக வெளிநாட்டுக்குப் பறக்குறார்? அதுக்குப் பதில் சொல்லுங்களேன்!'' என்று அடித்தார் அடுத்த சிக்ஸரை.


செமத்தியாக லந்தடிக்கும் விந்தியாவின் பேச்சு பற்றி பரபர பிரசாரத்தில் இருந்த வடிவேலுவிடம் கேட்டதும், ''நடிகை விந்தியான்னா யாருண்ணே? ஏதாச்சும் சீரியல்ல அம்மா ரோல், ஆயா ரோல் பண்ணுதா?'' என்று எடுத்த எடுப்பிலேயே நக்கல் அட்டாக் கொடுத்தார்.

''உலகத்திலேயே விஜயகாந்த்​துக்கு மட்டும்தான் லெக் கிக் பண்ணத் தெரியுமா? இடுப்பில் கம்பியக் கட்டிட்டு நம்ம கிங்காங்கூடத்தான் பறந்து, பறந்து லெக் கிக் பண்றாப்ல. அவர் போடுற டான்ஸ் ஸ்டெப்ஸை அந்த ஆளாள போட முடியுமாண்ணே?! விடுங்கண்ணே, இந்தப் பொம்பளை பேச்சுக்கெல்லாம் பதில் பேசிட்டிருந்தா, சரிப்பட்டு வராது. அது பாட்டுக்கு  கூவிட்டுப் போவட்டும். கலைஞர் அய்யாவை முதல்வர் நாற்காலியில் ஆறாவது வாட்டி உக்கார வைக்குறதுக்காக இன்னும் தடபுடலாப் பிரசாரம் பண்ண வேண்டி இருக்கு. வரட்டா!'' என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் வைகைப் புயல்!

நன்றி : ஜூனியர் விகடன் - 10-04-2011

8 comments:

கானா பிரபா said...

''நடிகை விந்தியான்னா யாருண்ணே? ஏதாச்சும் சீரியல்ல அம்மா ரோல், ஆயா ரோல் பண்ணுதா?''
//

டாய் புடிங்கடா இவனை நம்மளப்பத்தி தப்பா பேசிக்கிட்டு

சின்னத்திரை அம்மா ஆயா நடிகைகள் சங்கம்

எனது கவிதைகள்... said...

அரசியலுக்காக சக நடிகர்/நடிகைகளை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் தலைவா !

உண்மைவிரும்பி.
மும்பை.

Thirumurugan MPK said...

Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

http://indiaagainstcorruption.org/citycontacts.php
http://www.facebook.com/IndiACor

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...

'நடிகை விந்தியான்னா யாருண்ணே? ஏதாச்சும் சீரியல்ல அம்மா ரோல், ஆயா ரோல் பண்ணுதா?''//

டாய் புடிங்கடா இவனை நம்மளப் பத்தி தப்பா பேசிக்கிட்டு
சின்னத்திரை அம்மா ஆயா நடிகைகள் சங்கம்.]]]

தம்பி.. ஓகே.. ஓகே.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[எனது கவிதைகள்... said...

அரசியலுக்காக சக நடிகர் / நடிகைகளை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் தலைவா !

உண்மைவிரும்பி.
மும்பை.]]]

நீங்க சொல்றீங்க.. வடிவேலு கேக்கணுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[Thirumurugan MPK said...

Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

http://indiaagainstcorruption.org/citycontacts.php
http://www.facebook.com/IndiACor]]]

ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..!

Jayadev Das said...

\\''நடிகை விந்தியான்னா யாருண்ணே? "\\ This name somehow missed in your "list".

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\''நடிகை விந்தியான்னா யாருண்ணே? "\\

This name somehow missed in your "list".

புரியலைண்ணே..!