5 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ள தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!

02-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன்னாடியே சொல்லிப்புடறேன்..! தயவு செய்து இதைப் படிச்சிட்டு யாரும் வயிற்றெரிச்சல்படாதீங்க.!  இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் தேர்வு செஞ்சுருக்கோமேன்னு கொஞ்சம் வெட்கப்படுங்க..!

தேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள்  வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்!’ என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்? ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம் பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்!

'ஏன், அடுத்த தேர்தல்வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார்.

'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது!

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்’ தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.


''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​ கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்லி  அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தீர்மானம் கொண்டு வரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.

1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ?’ என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.

'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்’ தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ?

தற்போது நடைபெறும் சட்டசபைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் மட்டும் தனியாகத் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் முதல்வர் கருணாநிதிதான் இருக்கிறார்(இதுல கூட முன்னணில இல்லைன்னா அவர் என்ன முதலமைச்சர்?). அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.


கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்பச் சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது.  ஐந்தாண்டுகளில் தாத்தா முதலமைச்சர் சம்பளத்துடன் கூடுதல் சலுகைகளையும் வாங்கிக் கொண்டு மேலும் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியே கி்ட்டத்தட்ட 18 கோடி ரூபாயை தேற்றியிருக்கிறார். ம்ஹூம்.. இது கொஞ்சம் கம்மிதான்.. அமுக்கினது எவ்வளவோ..? யாருக்குத் தெரியும்..?

2006-ம் ஆண்டு 1.50 கோடியாக இருந்த துணை முதல்வர் ஸ்டாலினின் சொத்து தற்போது 2.11 கோடியாக ஆகியிருக்கிறது.

அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலை இதில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்..!


அமைச்சர் நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து  6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 

20.78 லட்சமாக இருந்த அமைச்சர் சுரேஷ்ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய அமைச்சர் பரிதிஇளம்வழுதி, இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து  மதிப்பைக் காட்டி இருக்கிறார்.

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும், அமைச்சர் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியுள்ளது.

நானும்தான் இருக்கேன். 5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தனோ அதே மாதிரிதான். இப்பவும் பிச்சைதான்..! ஒருவேளை எனக்குத்தான் பொழைக்கத் தெரியலையோ..?

நன்றி : ஜூனியர்விகடன்-ஏப்ரல்-6, 2011

59 comments:

வானம்பாடிகள் said...

ஆற்காடு வீராசாமி கைக்காசெல்லாம் செலவு பண்ணி ஓட்டாண்டியாயிட்டாரேண்ணே. லிஸ்ட்ல காணோம்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

கோடி கோடியா இவங்கய கொள்ளை அடிப்பது தெரிந்நத விஷயம் தானே...

ராஜகோபால் said...

நல்ல வேல ராசா இல்ல இருந்துருந்தா தெரியும் யாரு நம்பர் ஒண்ணுன்னு

மரா said...

உமக்கு சீக்கிரம் ஆட்டோ உறுதிண்ணே *:)))*

Thirumalai Kandasami said...

கணக்கில் காட்டுகிற சொத்தே 200 % உயருகிறது..அப்படினா பினாமி சொத்து 2000 % உயர்ந்து இருக்கும்

ஹரிஹரன் said...

சொன்னதையும் செஞ்சோம், சொல்லாததையும் செஞ்சோம்னு சொல்றமாதிரி வெளியில சொன்னது இவ்வளவு சொல்லமுடியாத சொத்து எவ்வளவோ?

சொத்துசேர்க்காத எம்எல்ஏக்களும் இருக்காங்க.கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலபாரதியின் சொத்து 10 கிராம் நகையும், அஞ்சலகச் சேமிப்புமாக ரூ.1 லட்சம் மட்டுமே

பட்டாபட்டி.... said...

பாவம்ண்ணே.. மக்களுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சுட்டாங்க எங்கள் அமைச்சர்கள்..

இவ்வளவு பணம் வெச்சிருந்தும், 5 இட்லிக்கு மேல உள்ள போகமாட்டிங்குது..

மேலிடத்தில சொல்லி ஏதாவது பண்ணனுமுண்ணே.>>!!!

Feroz said...

//இவ்வளவு பணம் வெச்சிருந்தும், 5 இட்லிக்கு மேல உள்ள போகமாட்டிங்குது..//செம கலக்கல் பஞ்ச் நண்பா.

ரிஷி said...

////இவ்வளவு பணம் வெச்சிருந்தும், 5 இட்லிக்கு மேல உள்ள போகமாட்டிங்குது..//

செம கலக்கல் பஞ்ச் நண்பா.//

நானும் ரசித்தேன் :-)

ரிஷி said...

இதில் என்னை மிரள வைத்தவர்கள் :

1. கே.பி.பி.சாமி
2. பூங்கோதை
3. கே.என்.நேரு
4. பரிதி இளம்வழுதி
5. சுரேஷ்ராஜன்

மதிவாணன் பிழைக்கத்தெரியாதவர் போலிருக்கிறது!! :-)

ரிஷி said...

கருணாநிதி கலைஞர் டிவியே தன்னுடையது அல்ல என்று சொல்லிவிட்டார். அப்படின்னா அவரது பெயரில் வேறு தொழில் ஓடிக்கொண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். முதலமைச்சர் சம்பளம் எவ்வளவு என்று தெரியவில்லை. மாதம் இரண்டு லட்சம் என்று வைத்துக்கொண்டாலும் 1.20 கோடி வருகிறது. மீதமுள்ள அனைத்தும் பெண்சிங்கம், பொன்னர்-சங்கர், உளியின் ஓசை, கண்ணம்மா, இளைஞன், பாசக்கிளிகள் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய வகையில் கிடைத்திருக்கிறது போல..!!!

குறும்பன் said...

எங்கள் வழி தலைவர் வழி - அமைச்சர்கள்.

தா. மோ. அன்பரசன் கணக்கு தப்பா அல்ல ஏமாந்துட்டாரா?

2005 - 6,57,62,281
2011 - 5,27,93,439

அன்பழகனுக்கு சென்னையில் வீடு இல்லைன்னு நினைக்கிறேன் அதனால தான் அவரு சொத்து 37 லட்சம் மட்டும் ஏறி இருக்குது. அன்பு பார்த்து ஏமாத்துங்க. ஊர் முழுக்க சொத்து மதிப்பு ஏறிடுச்சு.

மதிப்பை விட 2006ஐ விட 5 ஆண்டுகளில் என்ன அதிகம் வாங்கியுள்ளார்கள் என்பது தான் உண்மையான நிலவரத்தை சொல்லும். ஏன்னா நிலத்தின் மதிப்பு கண்டபடி ஏறிவிட்டது.

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...

ஆற்காடு வீராசாமி கைக்காசெல்லாம் செலவு பண்ணி ஓட்டாண்டியாயிட்டாரேண்ணே. லிஸ்ட்ல காணோம்.]]]

உடம்பு சரியில்லை. அதனால் தேர்தலில் நிற்கவில்லை. இதனால் இந்த லிஸ்ட்டில் அவரது சொத்துக்கள் பட்டியல் வெளியாகவில்லை. தப்பித்துவிட்டார்..!

உண்மைத்தமிழன் said...

[[[# கவிதை வீதி # சௌந்தர் said...

கோடி கோடியா இவங்க கொள்ளை அடிப்பது தெரிந்த விஷயம்தானே.]]]

அடிச்சச் சொத்துக் கணக்கை நாம் நமது வாரிசுகளுக்குச் சொல்ல வேண்டுமே? அதற்காகத்தான் இது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜகோபால் said...

நல்ல வேல ராசா இல்ல இருந்துருந்தா தெரியும் யாரு நம்பர் ஒண்ணுன்னு..]]]

ஹா.. ஹா.. ஹா.. செம பஞ்ச் கமெண்ட்டு.. நன்றி ராஜகோபால்..!

உண்மைத்தமிழன் said...

[[[மரா said...

உமக்கு சீக்கிரம் ஆட்டோ உறுதிண்ணே *:)))*]]]

வராது.. நிச்சயமாக வராது..!

உண்மைத்தமிழன் said...

[[[Thirumalai Kandasami said...

கணக்கில் காட்டுகிற சொத்தே 200% உயருகிறது. அப்படினா பினாமி சொத்து 2000 % உயர்ந்து இருக்கும்.]]]

கண்டிப்பா.. இதெல்லாம் ச்சும்மாதான். உதாரணம் ஸ்டாலினின் சொத்து மதிப்பு வெறும் 2 கோடிதானாம்.. எவ்ளோ காமெடியா இருக்கு பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹரிஹரன் said...

சொன்னதையும் செஞ்சோம், சொல்லாததையும் செஞ்சோம்னு சொல்ற மாதிரி வெளியில சொன்னது இவ்வளவு சொல்ல முடியாத சொத்து எவ்வளவோ?

சொத்து சேர்க்காத எம்.எல்.ஏ.க்களும் இருக்காங்க. கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலபாரதியின் சொத்து 10 கிராம் நகையும், அஞ்சலகச் சேமிப்புமாக ரூ.1 லட்சம் மட்டுமே..]]]

இவுங்க எல்லாம் மக்களுக்கு ஏதாவது சேவை செய்யணும்னு நினைச்சு அரசியலுக்கு வந்தவங்க..

பட்டியல்ல இருக்கிறவங்க மாதிரி அள்ளிட்டுப் போறதுக்காக வந்தவங்க இல்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[பட்டாபட்டி.... said...

இவ்வளவு பணம் வெச்சிருந்தும், 5 இட்லிக்கு மேல உள்ள போக மாட்டிங்குது. மேலிடத்தில சொல்லி ஏதாவது பண்ணனுமுண்ணே.>>!!!]]]

அட்டகாசமான கமெண்ட் தம்பி.. எப்பவாச்சும் ஒரு தடவைதான் நம்ம வூட்டுக்குள்ள வர்ற.. வந்தாலும் இது மாதிரி ஒண்ணை நெத்தியடி மாதிரி சொல்லிட்டுப் போற.. நல்லாயிருப்பா கண்ணு..!

உண்மைத்தமிழன் said...

[[[Feroz said...

//இவ்வளவு பணம் வெச்சிருந்தும், 5 இட்லிக்கு மேல உள்ள போக மாட்டிங்குது..//

செம கலக்கல் பஞ்ச் நண்பா.]]]

கலக்கல்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//இவ்வளவு பணம் வெச்சிருந்தும், 5 இட்லிக்கு மேல உள்ள போகமாட்டிங்குது..//

செம கலக்கல் பஞ்ச் நண்பா.//

நானும் ரசித்தேன் :-)]]]

நன்றி ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இதில் என்னை மிரள வைத்தவர்கள் :

1. கே.பி.பி.சாமி
2. பூங்கோதை
3. கே.என்.நேரு
4. பரிதி இளம்வழுதி
5. சுரேஷ்ராஜன்

மதிவாணன் பிழைக்கத் தெரியாதவர் போலிருக்கிறது!! :-)]]]

ம்ஹும்.. நாம் இப்படி பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

கருணாநிதி கலைஞர் டிவியே தன்னுடையது அல்ல என்று சொல்லிவிட்டார். அப்படின்னா அவரது பெயரில் வேறு தொழில் ஓடிக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். முதலமைச்சர் சம்பளம் எவ்வளவு என்று தெரியவில்லை. மாதம் இரண்டு லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் 1.20 கோடி வருகிறது.

மீதமுள்ள அனைத்தும் பெண் சிங்கம், பொன்னர்-சங்கர், உளியின் ஓசை, கண்ணம்மா, இளைஞன், பாசக்கிளிகள் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய வகையில் கிடைத்திருக்கிறது போல..!!!]]]

எல்லாம் கப்ஸாதான்.. திருத்திக் கொடுக்க ஆடிட்டர்கள் இருக்கின்றவரையிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ரிஷி.. எவன் கேக்கப் போறான்..?

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

எங்கள் வழி தலைவர் வழி - அமைச்சர்கள்.

தா. மோ. அன்பரசன் கணக்கு தப்பா அல்ல ஏமாந்துட்டாரா?

2005 - 6,57,62,281
2011 - 5,27,93,439

அன்பழகனுக்கு சென்னையில் வீடு இல்லைன்னு நினைக்கிறேன். அதனாலதான் அவரு சொத்து 37 லட்சம் மட்டும் ஏறி இருக்குது. அன்பு பார்த்து ஏமாத்துங்க. ஊர் முழுக்க சொத்து மதிப்பு ஏறிடுச்சு.

மதிப்பை விட 2006-ஐ விட 5 ஆண்டுகளில் என்ன அதிகம் வாங்கியுள்ளார்கள் என்பதுதான் உண்மையான நிலவரத்தை சொல்லும். ஏன்னா நிலத்தின் மதிப்பு கண்டபடி ஏறிவிட்டது.]]]

இது ச்சும்மா கண் துடைப்புதானே..? எப்படி வந்துச்சுன்னு யாரும் கேக்கப் போறதில்லை. அதுனால முடிஞ்சவரைக்கும் கூட இருக்கிறதைக் காட்டிட்டா பின்னாடி நேர் செஞ்சுக்கலாம் பாருங்க. அதுக்கத்தான் இப்படி..!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
ஒருவேளை எனக்குத்தான் பொழைக்கத் தெரியலையோ..?
//
யேண்ணே.... உங்களுக்கு இப்பதான் தெரியுதா???

Ramesh said...

Anna, 2006 vs 2011 ku compare sencha ennoda wealth e increase agi iruku ..so would be everyone else wealth who are little responsible including u and other people reading here..enganna gaandu agareenga ?

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

இந்த அரசியல் வியாதிகள் இப்படித்தான் போல!! கவனிச்சுப் பாருங்களேன்...நம்ம தெருவில ஒருத்தன் தன்னோட ஸ்டேடஸ் அதிகமானால், அதன் காரணத்தை எப்படியாவது சொல்லிடறான்.. தாத்தா சொத்து வந்தது(இந்த தாத்தா இல்ல!!),ஊரில் நிலம் வித்தேன் என்று, எதோ ஒரு காரணம் (பெரும்பாலும் உண்மையாக). காரணம் "யாரும் தான் தவறான வழியில் சென்றதாக நினைத்து விடக்கூடாது என்று ஒரு கூச்சம்!" ஆனால் ஒரு கட்சியின் வட்டமோ,மாவட்டமோ திடீரென்று ஒரு துளி வெட்கமில்லாமல், கொடி கட்டிய, படி வைத்த காஸ்ட்லி கார்களில் வலம் (வளம்) வருவார்கள்..தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண வீடு திடீரென்று மாளிகை ஆகிவிடும்..இந்த திடீர் நிலைக்குக் காரணம் எல்லாருக்கும் தெரியும் என்றாலும் ஒரு இதற்கெல்லாம் ஒரு துளி வெட்கப்பட மாட்டார்கள!!
இவர்கள்தான் காமராஜரைப் பற்றியும் காந்தி பற்றியும் பேசுகிறார்கள்!! வெட்கக்கேடு!!

இதிலே பாருங்க இன்னும் என்னன்னு:
http://sagamanithan.blogspot.com/

R.Gopi said...

//2006-ம் ஆண்டு 1.50 கோடியாக இருந்த துணை முதல்வர் ஸ்டாலினின் சொத்து தற்போது 2.11 கோடியாக ஆகியிருக்கிறது.//

**********

தலைவா... இது என்ன காமெடி கிச்சு கிச்சு...

இவரோட பையன் கமலஹாசன வச்சு “மன்மதன் அம்பு”ன்னு ஒரு மொக்க படம் ரூ.50 கோடி செலவுல எடுத்தார்னு செய்தி வந்ததே... அப்படின்னா, அப்பன விட பையனுக்கு எப்படி 48 கோடிக்கு மேல காசு கெடச்சது அந்த படத்த தயாரிக்க!!?

இப்போ இவிய்ங்க காட்டி இருக்கற இந்த சொத்து கணக்கு எல்லாம் அவங்க கிட்ட இருக்கற காசுல 100ல் 1 சதவீதம் கூட இல்லை என்று நாளை பிறக்கப்போகும் குழந்தைக்கு கூட தெரியும்...

R.Gopi said...

”தல” கிட்ட சொந்தமா கார் கூட இல்லையாமாம்...

கார் கம்பெனியையே விலைக்கு வாங்கற அளவுக்கு காசு வச்சு இருக்கறவருக்கு இப்படி நா கூசாம பேச எப்படி மனசு வருது!!?

R.Gopi said...

”தல”யோட சொத்து கணக்கு விபரம் (தேர்தல் கமிஷனிடம் தந்தது தான், உண்மையான விபரம் அல்ல...)

உலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க... http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post_26.html

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//ஒருவேளை எனக்குத்தான் பொழைக்கத் தெரியலையோ..?//

யேண்ணே.... உங்களுக்கு இப்பதான் தெரியுதா???]]]

கண்ணு கெட்ட பின்னாடிதான் சூரிய நமஸ்காரம் செய்யணும்னு தோணுது..!

உண்மைத்தமிழன் said...

[[[Ramesh said...

Anna, 2006 vs 2011 ku compare sencha ennoda wealth e increase agi iruku. so would be everyone else wealth who are little responsible including u and other people reading here. enganna gaandu agareenga?]]]

இவங்க எல்லாரும் எம்.எல்.ஏ. ஆவுறதுக்கு முன்னாடி வரைக்கும் குச்சி ஐஸ் சப்பிக்கிட்டிருந்த ஆளுக தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

இந்த அரசியல் வியாதிகள் இப்படித்தான் போல!! கவனிச்சுப் பாருங்களேன். நம்ம தெருவில ஒருத்தன் தன்னோட ஸ்டேடஸ் அதிகமானால், அதன் காரணத்தை எப்படியாவது சொல்லிடறான். தாத்தா சொத்து வந்தது (இந்த தாத்தா இல்ல!!), ஊரில் நிலம் வித்தேன் என்று. எதோ ஒரு காரணம் (பெரும்பாலும் உண்மையாக). காரணம் "யாரும் தான் தவறான வழியில் சென்றதாக நினைத்து விடக்கூடாது என்று ஒரு கூச்சம்!" ஆனால் ஒரு கட்சியின் வட்டமோ, மாவட்டமோ திடீரென்று ஒரு துளி வெட்கமில்லாமல், கொடி கட்டிய, படி வைத்த காஸ்ட்லி கார்களில் வலம்(வளம்) வருவார்கள். தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண வீடு திடீரென்று மாளிகை ஆகிவிடும். இந்த திடீர் நிலைக்குக் காரணம் எல்லாருக்கும் தெரியும் என்றாலும் ஒரு இதற்கெல்லாம் ஒரு துளி வெட்கப்பட மாட்டார்கள!!
இவர்கள்தான் காமராஜரைப் பற்றியும் காந்தி பற்றியும் பேசுகிறார்கள்!! வெட்கக்கேடு!!

இதிலே பாருங்க இன்னும் என்னன்னு:
http://sagamanithan.blogspot.com/]]]

நீங்கள் சொல்வது நிஜம்தான்..! சூடு, சொரணையற்று கூச்ச நாச்சமில்லாமல் இருக்கிறார்கள் அரசியல்வியாதிகள்..

நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

தலைவா... இது என்ன காமெடி கிச்சு கிச்சு. இவரோட பையன் கமலஹாசன வச்சு “மன்மதன் அம்பு”ன்னு ஒரு மொக்க படம் ரூ.50 கோடி செலவுல எடுத்தார்னு செய்தி வந்ததே. அப்படின்னா, அப்பனவிட பையனுக்கு எப்படி 48 கோடிக்கு மேல காசு கெடச்சது அந்த படத்த தயாரிக்க!!? இப்போ இவிய்ங்க காட்டி இருக்கற இந்த சொத்து கணக்கு எல்லாம் அவங்ககிட்ட இருக்கற காசுல 100ல் 1 சதவீதம்கூட இல்லை என்று நாளை பிறக்கப் போகும் குழந்தைக்குகூட தெரியும்.]]]

உண்மைதான். கணக்கு கேட்கும் உரிமையுள்ள வருமான வரித் துறை அவர்கள் கையில் இருப்பதால் இதையெல்லாம் மிக எளிதாக நேர் செய்துவிடுகிறார்கள்..!

இளிச்சவாயனுக இன்கம்டாக்ஸ் கட்டுற அரசு அலுவலர்களும், சிறு தொழில் அதிபர்களும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

”தல”யோட சொத்து கணக்கு விபரம் (தேர்தல் கமிஷனிடம் தந்ததுதான், உண்மையான விபரம் அல்ல...)

உலகின் ஒரே ஏழை - அட்ராட்ர நாக்க முக்க http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post_26.html]]]

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். கணக்குக் காட்டுவதற்காக எழுதுவதே நமக்கு பகீரென்கிறதே..? எழுதாத கணக்கு எத்தனையோ..?

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

”தல”கிட்ட சொந்தமா கார்கூட இல்லையாமாம். கார் கம்பெனியையே விலைக்கு வாங்கற அளவுக்கு காசு வச்சு இருக்கறவருக்கு இப்படி நா கூசாம பேச எப்படி மனசு வருது!!?]]]

இதுதான் அரசியல்வியாதிகளின் பிறவிக் குணம்..! நா கூசாமல் பொய் பேசுவது..!

kama said...

நானும்தான் இருக்கேன். 5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தனோ அதே மாதிரிதான். இப்பவும் பிச்சைதான்..!

நானும் தான்..... ஆனா எனக்கு எந்த பொது மக்களோட சாபமும் இல்ல.... யாரோட இரத்ததையும் உறிஞ்சி தொப்பைய பெருக்கல...

இவர்கள் மிக கொடும் நோய்கள் கண்டு துடிச்சி இறக்கனும்னு சபிக்கிறேன் ( ஏழை மக்கள் பணத்தை கொள்ளை அடித்திருந்தால்..)
நம்மை யாரும் அப்படி சபிக்க வாய்ப்பில்லை...

உண்மைத்தமிழன் said...

[[[kama said...

நானும்தான் இருக்கேன். 5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தனோ அதே மாதிரிதான். இப்பவும் பிச்சைதான்..!

நானும்தான். ஆனா எனக்கு எந்த பொது மக்களோட சாபமும் இல்ல. யாரோட இரத்ததையும் உறிஞ்சி தொப்பைய பெருக்கல. இவர்கள் மிக கொடும் நோய்கள் கண்டு துடிச்சி இறக்கனும்னு சபிக்கிறேன் (ஏழை மக்கள் பணத்தை கொள்ளை அடித்திருந்தால்) நம்மை யாரும் அப்படி சபிக்க வாய்ப்பில்லை.]]]

இது ஒன்றை வைத்தே நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வதா..? இது எத்தனை நாளைக்கு? எத்தனை மாதங்களுக்கு? எத்தனை வருடங்களுக்கு நண்பரே..?

Rama Krishnan said...

////////இதில் என்னை மிரள வைத்தவர்கள் :

1. கே.பி.பி.சாமி
2. பூங்கோதை
3. கே.என்.நேரு
4. பரிதி இளம்வழுதி
5. சுரேஷ்ராஜன்

மதிவாணன் பிழைக்கத்தெரியாதவர் போலிருக்கிறது!! :-)/////

மற்றவர்களை கூட விட்டு விடுங்கள் ரிஷி......
நம்ம கே.என்.நேரு இருக்காரே.. நம்ம நெப்போலியன் சாரோட மாமா... அவரது தொழிலை கேட்டீங்கன்னா மிரண்டுடுவீங்க... சென்னையின் மிகப்பெரிய கட்டுமான தொழில் சாம்ராஜ்யமான டி.வி.ஹெச் ஹோம்ஸின் அதிபதியே அவர்தானென்று பேசப்படுகிறது.டிவிஹெச் ஹோம்ஸின் வீடுகளையும் ப்ராஜெக்ட் காஸ்டையும் கேட்டீங்கன்னா.... அப்புறம் பேச்சு மூச்சே வராது. அவங்க இணைய தளத்துக்கு செல்லும் ரூட் இதோ :
http://www.tvh.in/

உண்மைத்தமிழன் said...

[[[Rama Krishnan said...

மற்றவர்களை கூட விட்டு விடுங்கள் ரிஷி. நம்ம கே.என்.நேரு இருக்காரே. நம்ம நெப்போலியன் சாரோட மாமா. அவரது தொழிலை கேட்டீங்கன்னா மிரண்டுடுவீங்க. சென்னையின் மிகப் பெரிய கட்டுமான தொழில் சாம்ராஜ்யமான டி.வி.ஹெச் ஹோம்ஸின் அதிபதியே அவர்தானென்று பேசப்படுகிறது. டிவிஹெச் ஹோம்ஸின் வீடுகளையும் ப்ராஜெக்ட் காஸ்டையும் கேட்டீங்கன்னா. அப்புறம் பேச்சு மூச்சே வராது. அவங்க இணைய தளத்துக்கு செல்லும் ரூட் இதோ :

http://www.tvh.in/]]]

கொள்ளையடிப்பதில் இந்தியாவுக்கே வழி காட்டியவர்கள் இவர்கள்தானே.. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை ராமகிருஷ்ணன்..!

ELANGOVAN said...

5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.

பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.

நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.

சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.

இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர் களின் வோட்டாக மாறுமா? பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.

raj said...

Elangovan said "சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை."

இளங்கோவன் நீங்கள் பேப்பர் படிப்பதேஇல்லியா?
ஆந்திராவில் இன்ஜினியரிங் மாணவர்களக்கு பீஸ் அரசே கட்டுகிறுது.
மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 50 % சீட், ரொம்ப காலாமாக இருக்கிறது.

ரிஷி said...

/ELANGOVAN said...

// 5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.//

நல்ல விஷயம்தான்! இதில் திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி தவிர மற்ற மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் அண்ணா யுனிவர்சிட்டிகளுக்கு இன்னமும் தனி பில்டிங் கிடையாது. ஏற்கனவே அங்கிருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு ஒதுக்குப்புறமான ரூமில் வைத்து யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. அவர்கள் வெளிவரும்போது பிராக்டிகல் அறிவு இல்லாமல்தான் வருவார்கள். ஆனால் அரசு கல்லூரியில் சேர்பவர்கள் பெரும்பாலும் +2வில் நல்ல மதிப்பெண் பெறுபவர்களாக இருப்பதால் ஓரளவு படிப்பை சமாளித்துக்கொள்கின்றனர்.

கல்லூரி ஆரம்பிப்பது பெரிய விஷயம் கிடையாது. கல்வியை நல்ல விதமாக, முழுமையான ஒன்றாக கொடுக்க வேண்டும்!!!!


//பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர். //

நல்ல விஷயம். வாழ்க அரசு!

ரிஷி said...

//சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.//

பலகாலமாக இது நடைமுறையில் இருப்பதுதான்! ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தபின் தான் இது நடந்துள்ளது என்பது யாரோ உடைத்த தேங்காயை நாம் எடுத்து சட்னிக்கு பயன்படுத்திக்கொள்வது போலாகும்!!!

//பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.//

சலுகை அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். வாழ்க தமிழக அரசு! ஆனால் முழு கட்டணச் சலுகை எனக் கூறி மாயத்தோற்றத்தை உருவாக்க முனையாதீர்கள். அரசு கொடுப்பது மொத்த கட்டணத்தில் ரூ.20,000 மட்டுமே! மீதமுள்ளவற்றை மாணவர்கள்தான் கட்டுகிறார்கள். உண்மையை உரக்கக்கூறுங்கள். அதில் பொய் கலந்து கூறாதீர்கள்.

//கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.//

நல்ல விஷயம். வாழ்க அரசு!

//இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர்களின் வோட்டாக மாறுமா? பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.//

பார்ப்போம். வோட்டாக மாறக்கூடிய வாய்ப்புகள் நிறையவே உண்டு.

உண்மைத்தமிழன் said...

[[[ELANGOVAN said...

5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.

பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்று விடுகிறார்கள் என்பதால், 2007-ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006-ல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.
நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.
சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன் பெற்றிருக்கின்றனர்.
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்ப்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர்களின் வோட்டாக மாறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.]]]

சரிதான்..! இதே இளைஞர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. தலைமையும், ராசாவும் அடித்திருக்கும் கொள்ளை முக்கியமா..? அல்லது தங்களது சுயநலம் முக்கியமா என்பதையும் முடிவு அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[raj said...

இளங்கோவன் நீங்கள் பேப்பர் படிப்பதே இல்லியா? ஆந்திராவில் இன்ஜினியரிங் மாணவர்களக்கு பீஸ் அரசே கட்டுகிறுது. மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 50% சீட், ரொம்ப காலமாக இருக்கிறது.]]]

இப்படித் தமிழ்நாட்டில் செய்தால் இதில் அதிகம் பலனடையப் போவதும் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள்தான். அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு கல்லூரியை கையில் வைத்திருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

ரிஷி said...

நல்ல விஷயம்தான்! இதில் திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி தவிர மற்ற மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் அண்ணா யுனிவர்சிட்டிகளுக்கு இன்னமும் தனி பில்டிங் கிடையாது. ஏற்கனவே அங்கிருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு ஒதுக்குப்புறமான ரூமில் வைத்து யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. அவர்கள் வெளிவரும்போது பிராக்டிகல் அறிவு இல்லாமல்தான் வருவார்கள். ஆனால் அரசு கல்லூரியில் சேர்பவர்கள் பெரும்பாலும் +2வில் நல்ல மதிப்பெண் பெறுபவர்களாக இருப்பதால் ஓரளவு படிப்பை சமாளித்துக் கொள்கின்றனர்.
கல்லூரி ஆரம்பிப்பது பெரிய விஷயம் கிடையாது. கல்வியை நல்ல விதமாக, முழுமையான ஒன்றாக கொடுக்க வேண்டும்!!!!
நல்ல விஷயம். வாழ்க அரசு!]]]

சபாஷ் ரிஷி.. இதேபோல் ஊரில் பல கொலைகள் செய்தவனும், பல கற்பழிப்புகளைச் செய்தவனும், ஊரில் இருக்கும் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் 5000 ரூபாய் பணம் கொடுத்துவிட்டால் உடனே அவர்களை நல்லவர்களாக்கி விட்டுவிடுவீர்கள்..! அப்படித்தானே..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
சலுகை அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். வாழ்க தமிழக அரசு! ஆனால் முழு கட்டணச் சலுகை எனக் கூறி மாயத்தோற்றத்தை உருவாக்க முனையாதீர்கள். அரசு கொடுப்பது மொத்த கட்டணத்தில் ரூ.20,000 மட்டுமே! மீதமுள்ளவற்றை மாணவர்கள்தான் கட்டுகிறார்கள். உண்மையை உரக்கக் கூறுங்கள். அதில் பொய் கலந்து கூறாதீர்கள்.
பார்ப்போம். வோட்டாக மாறக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உண்டு.]]]

உங்களுக்குத் தேவையானதை கொடுத்துவிட்டால் பின்பு அவன் என்ன செய்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். அப்படித்தானே..?

ரிஷி said...

///சபாஷ் ரிஷி.. இதேபோல் ஊரில் பல கொலைகள் செய்தவனும், பல கற்பழிப்புகளைச் செய்தவனும், ஊரில் இருக்கும் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் 5000 ரூபாய் பணம் கொடுத்துவிட்டால் உடனே அவர்களை நல்லவர்களாக்கி விட்டுவிடுவீர்கள்..! அப்படித்தானே..?///

சரவணன்,
அரசு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதைத்தான் நல்ல விஷயமென்று பாராட்டினேன். அதே நேரத்தில் அவை குறைப்பிரசவக் கல்லூரிகள் என்பதனையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

தி.மு.க.வின் பணந்தின்னி முதலைகள் ஆரம்பித்த தனியார் கல்லூரிகளைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. அந்த நாதாரிகள் எத்தனை கல்வி நிறுவனங்கள் கொண்டு வந்தாலும் அவர்கள் நாதாரிகளே!! அதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை.

"நல்ல விஷயம். வாழ்க அரசு" என்று கூறியிருந்ததும், அவர்கள் நுழைவுத்தேர்வை இரத்து செய்த காரணத்திற்காக மட்டும்தான்!

ரிஷி said...

///உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
சலுகை அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். வாழ்க தமிழக அரசு! ஆனால் முழு கட்டணச் சலுகை எனக் கூறி மாயத்தோற்றத்தை உருவாக்க முனையாதீர்கள். அரசு கொடுப்பது மொத்த கட்டணத்தில் ரூ.20,000 மட்டுமே! மீதமுள்ளவற்றை மாணவர்கள்தான் கட்டுகிறார்கள். உண்மையை உரக்கக் கூறுங்கள். அதில் பொய் கலந்து கூறாதீர்கள்.
பார்ப்போம். வோட்டாக மாறக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உண்டு.]]]

உங்களுக்குத் தேவையானதை கொடுத்துவிட்டால் பின்பு அவன் என்ன செய்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். அப்படித்தானே..?///

கவலைப்படமாட்டோம் என்று சொல்லவில்லை. நானும் நீங்களும் மட்டும் கவலைப்படுவதால் என்ன ஆகப்போகிறது? அரசின் ஒட்டுமொத்த நலத்திட்டங்களையும், அவர்களின் குளறுபடிகளையும் சீர்தூக்கிப் பார்க்க உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. நல்ல பசியில் இருப்பவனுக்கு யாராவது அன்னமிட்டால் அன்னமிட்டவனின் வகைதொகை எதுவும் அவனுக்குத் தெரியாது. வாஞ்சையாய் வாழ்த்த மட்டுமே செய்வான். இதுவே அவனின் தராதரம் தெரிந்திருந்தால் அவனிடம் அன்னம் வாங்கியிருக்கவே மாட்டான். ஆனால் பசியில் இருக்கும்போது எதுவும் தெரிவதில்லை என்பதே நிதர்சனம்.

ரிஷி said...

//சரிதான்..! இதே இளைஞர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. தலைமையும், ராசாவும் அடித்திருக்கும் கொள்ளை முக்கியமா..? அல்லது தங்களது சுயநலம் முக்கியமா என்பதையும் முடிவு அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்..!//

ஒருவேளை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நாசமாய்ப் போய்விட்டால், ராசா உட்பட அத்தனை பொணந்தின்னி முதலைகளும் தப்பித்து விட்டால் அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?????

ELANGOVAN said...

i forgot to give the source, the article is from Kalki 3/4/2011.

In my experience, i have seen from 1989, DMK has done lot in education. they were the ones introduced computer education in corp schools/arts colleges in 89-90, even now they done lot for education.

In 1989, karuna brought one amendment in entrance exams. ie. if a student, who applies has no graduates in his family he gets +5 marks in the test. these things are very visionary. but unfortunately that was taken into court and banned.
still this time he did
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை .

to me:
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

///சபாஷ் ரிஷி.. இதேபோல் ஊரில் பல கொலைகள் செய்தவனும், பல கற்பழிப்புகளைச் செய்தவனும், ஊரில் இருக்கும் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் 5000 ரூபாய் பணம் கொடுத்துவிட்டால் உடனே அவர்களை நல்லவர்களாக்கி விட்டுவிடுவீர்கள்..! அப்படித்தானே..?///

சரவணன், அரசு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதைத்தான் நல்ல விஷயமென்று பாராட்டினேன். அதே நேரத்தில் அவை குறைப் பிரசவக் கல்லூரிகள் என்பதனையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
தி.மு.க.வின் பணந் தின்னி முதலைகள் ஆரம்பித்த தனியார் கல்லூரிகளைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. அந்த நாதாரிகள் எத்தனை கல்வி நிறுவனங்கள் கொண்டு வந்தாலும் அவர்கள் நாதாரிகளே!! அதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை. "நல்ல விஷயம். வாழ்க அரசு" என்று கூறியிருந்ததும், அவர்கள் நுழைவுத் தேர்வை இரத்து செய்த காரணத்திற்காக மட்டும்தான்!]]]

அந்த ஒரு விஷயத்திற்காக நானும்கூட அவர்களைப் பாராட்டுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

கவலைப்படமாட்டோம் என்று சொல்லவில்லை. நானும் நீங்களும் மட்டும் கவலைப்படுவதால் என்ன ஆகப் போகிறது? அரசின் ஒட்டு மொத்த நலத் திட்டங்களையும், அவர்களின் குளறுபடிகளையும் சீர்தூக்கிப் பார்க்க உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. நல்ல பசியில் இருப்பவனுக்கு யாராவது அன்னமிட்டால் அன்னமிட்டவனின் வகைதொகை எதுவும் அவனுக்குத் தெரியாது. வாஞ்சையாய் வாழ்த்த மட்டுமே செய்வான். இதுவே அவனின் தராதரம் தெரிந்திருந்தால் அவனிடம் அன்னம் வாங்கியிருக்கவே மாட்டான். ஆனால் பசியில் இருக்கும்போது எதுவும் தெரிவதில்லை என்பதே நிதர்சனம்.]]]

இன்னும் எத்தனை நாட்களுக்கு நமது மக்கள் இதே பசியானவனைப் போலவே இருப்பார்கள்..!? அவர்களும் முன் கூட்டியே உணரலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஒருவேளை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நாசமாய்ப் போய்விட்டால், ராசா உட்பட அத்தனை பொணந்தின்னி முதலைகளும் தப்பித்து விட்டால் அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்??]]]

ஒன்றும் செய்ய முடியாதுதான். மதுரை தினகரன் வழக்கு, தா.கிருட்டிணன் வழக்கைப் போல வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ELANGOVAN said...

i forgot to give the source, the article is from Kalki 3/4/2011.
In my experience, i have seen from 1989, DMK has done lot in education. they were the ones introduced computer education in corp schools/arts colleges in 89-90, even now they done lot for education. In 1989, karuna brought one amendment in entrance exams. ie. if a student, who applies has no graduates in his family he gets +5 marks in the test. these things are very visionary. but unfortunately that was taken into court and banned.
still this time he did
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை .
to me:
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்!]]]

முழுச் சலுகை இல்லவே இல்லை. பாதிச் சலுகைதான்.. முழுச் சலுகை என்று பொய் சொல்கிறார்கள்..!

அது கிடக்கட்டும்.. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கொடூரங்கள், அடித்த ஊழல்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்..?

இதற்காக அதனை மறக்கலாம் என்கிறீர்களா..?

Millionaire said...

IPL Cricket Online...... http://ipl-worldcup-cricketonline.blogspot.com/

Millionaire said...

Tamil FM's Online & Tamil Kavithiagal ....... http://tamillovesms.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

மில்லினியர் ஸார்..!

உங்களால் இந்தப் பதிவினை 100 பேர் கூடுதலாகப் படித்திருக்கிறார்கள். மிக்க நன்றி..!