கொள்ளையடித்தது 30,983 கோடிகள்தானா...? மீதம் எங்கே..?

13-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்             பத்திரி​​கையில் ஐந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. முதல் இரண்டு குற்றச்சாட்டுகள்  பற்றி, மார்ச் 13, 2011 ஜூ.வி-யில் விரிவாக எழுதி இருந்தோம். அடுத்த மூன்று குற்றச்சாட்டுகள் இங்கே...!

மாற்றுத் தொழில்  நுட்பத்துக்கு இரட்டை ஸ்பெக்ட்ரம் ஒதுக்​கீடு!
ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்கு மாற்றுத் தொழில்நுட்பத்தின்படி, இரட்டை முறையில் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்​தும் உரிமங்கள்   கொடுக்க   டிராய்   அமைப்பு,   ஆகஸ்ட்   2007-ல்             அனுமதி   கொடுத்தது.

இரண்டு டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனங்கள் இதற்கு விண்​ணப்​பித்தன. இவர்கள் ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தின்படி மொ​பைல் கனெக்ஷன் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்று இருந்தனர். ஆனால், டிராய் செய்த சிபாரிசு தொலைத் தொடர்புத் துறைக்கு வருவதற்கு முன்பே ரிலையன்ஸ் நிறுவனம் (18 சர்க்கிள்கள்), ஷியாம் டெலி லிங்க்ஸ், ஹெச்.எஃப்.சி.எல். இன்ஃபோடெல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்தது. டாடா நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. 'டாடா நிறுவனத்தைப் படாதபாடுபடுத்தினர்’ என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது.


'தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் அவரது கூட்டாளி சந்தோலியாவும்... ஸ்வான் டெலிகாமையும், யுனிடெக் டெலிகாமையும் முன்னுக்குக் கொண்டு  வரவே, டாடா டெலி சர்வீஸைப் பின்னுக்குத் தள்ளினார்கள்’ என்கிறது சி.பி.ஐ.

டாடா கொடுத்த விண்ணப்பப் படிவங்கள்​கூட தொலைத் தொடர்புத் துறையில் காணாமல் போய்​விட்டதாக சி.பி.ஐ. தெரிவித்து இருக்கிறது. 'டாடாவுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்டால், டெல்லி, மும்பையில் ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாமும், சஞ்சய் சந்திராவின் யுனிடெக் நிறுவனமும் பயன் அடைய முடியாமல் போகும் என்று ஆ.ராசா கருதினார். அதனால், டாடா​வின் விண்ணப்பங்கள் மூடி              மறைக்கப்​பட்டுவிட்டன.

அவர்கள் 10.1.2008 அன்று கட்டணம் செலுத்தி, அதற்கான ரசீது கொடுக்கப்பட்டு, சீனியாரிட்டி பட்டியலில் பெயர் இருந்தாலும், டாடா கொடுத்த விண்ணப்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமாக மறைந்துவிட்டது’ என்று சி.பி.ஐ. சொல்கிறது. ஆ.ராசா இந்த அளவுக்கு டாடாவை இழுத்தடித்த பிறகும், அவரை சீராட்டி, பாராட்டி கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுதியது ஏன் என்ற மர்மம் பற்றி சி.பி.ஐ. ஏனோ குறிப்பிடவில்லை.

ஸ்வான் நிறுவனத்துக்குச் சொந்த​மான டி.பி. ரியாலிட்டியின் சகோதர நிறுவனத்துக்கு ஆர்.கே. சந்தோலியா, அவரது வீட்டை வாடகைக்குக் கொடுத்து இருக்கிறார். அதன் மூலம், மாதம்தோறும் 63,000 ரூபாயை சந்தோலியாவுக்கு ரியாலிட்டி கொடுக்கிறது. 2008 டிசம்பரில் ஸ்வானின் பங்குகள் வாங்கப்பட்டது குறித்து நீளமான பட்டியலை குற்றப் பத்திரிகையில் வைத்துள்ளது சி.பி.ஐ.

ஐக்கிய அரேபிய நிறுவனமான எடிஸாலட் நிறுவனம், ஸ்வான் டெலிகாமின் பங்குகளை 3,200 கோடிக்கு வாங்கியது. சென்னையைச் சேர்ந்த ஜினெக்ஸ் எக்ஸ்ம் வென்சர் நிறுவனம் 380 கோடிக்கு ஸ்வானின் பங்குகளை வாங்கியது. இந்த பணம் வந்த வழியையும் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் வைத்து இருக்கிறது.

தகுதியில்லாத நிறுவனங்கள்!

ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, இதன் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற அரசியல் செல்வாக்கோடு ரிலையன்ஸ் இறங்கியது. இதற்கு ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்கள் பணம் முதலீடு செய்துள்ளன.

இந்த விவரங்களை முழுமையாக சி.பி.ஐ. பட்டியல் போட்டு, 45 பக்கங்களுக்குப் படம் போட்டு விளக்கி இருக்கிறது. இதில், ரிலையன்ஸின் நிர்வாகிகள் கௌதம் டோஸி, சுரேந்திர பைப்பாரா, ஹரி நாராயணன் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால், இவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அனில் அம்பானியை விசாரித்த சி.பி.ஐ., அவரிடம் பணி புரிபவர்களை மட்டுமே குற்றவாளிகளாகச் சிக்க வைத்துள்ளது.

இதேபோல், ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்த யுனிடெக் நிறு​வனத்தின் சில துணை நிறுவனங்கள், டெலிகாம் உரிமத்துக்கான தகுதியைப் பெறுவதற்காக, சில மோசடியான தகவல்​களைக் கொடுத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கண்டுபிடித்து உள்ளது.

அந்தத் தகவல்களை ஆராயாமல், தொலைத் தொடர்புத் துறை அனுமதி கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான விண்ணப்பம் செய்த​போது, ஸ்வானுக்கும் யுனிடெக் நிறுவனத்துக்கும் முறையான தகுதிகள் இல்லை. இவர்களது விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு உரிமங்கள் கொடுக்கவே கட்-ஆஃப் தேதி முதல் ஸ்பெக்ட்ரம் விலை மதிப்புவரை அனைத்திலும் தில்லுமுல்லுகள் நடந்து உள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடுகிறது.

நுழைவுக் கட்டணத்தில் தில்லுமுல்லு!

அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்து சி.பி.ஐ. ஒரு கணக்கைச் சொல்கிறது!

செல்லுலார் சேவை நிறுவனங்களிடம் இருந்து ஒரு மெகா ஹெட் வீதம் ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை 2002-03 முதல் 2007 வரை கணக்கிடும்போது, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. இதை  வைத்துக் கணக்கிடும்போது, 2008-ம் ஆண்டு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டதில், 22,535 கோடி நுழைவுக் கட்டணத்தில் நஷ்டம்.

இதே மாதிரி, இரட்டைத் தொழில் நுட்பத்துக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால், 8,448 கோடி அரசுக்கு இழப்பு. ஒட்டு  மொத்தமாக, அரசுக்கு 30,983 கோடி நஷ்டம் என்கிறது சி.பி.ஐ.

தொலைத் தொடர்புத் துறை, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை 1,650 கோடி என நிர்ணயித்தது. இது 2001-ல் நான்காவது செல்லுலார் மொபைல் டெலிபோன் சர்வீஸுக்கு(சி.எம்.டி.எஸ்.) விடப்பட்ட ஏலத் தொகை. இந்த ஏலத் தொகையை உயர்த்தாமல், 2008-ல் கொடுக்கப்பட்ட உரிமங்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயித்தது தவறு என்கிறது சி.பி.ஐ..

'தொலைத் தொடர்புத் துறை எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதனால், 2001-க்குப் பிறகு ஏற்பட்டுள்ள தொலைபேசிகளின் அடர்த்தி, வளர்ச்சி, ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, இந்த ஏலத் தொகையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.

2003-ல் பீகார், ஒரிஸ்ஸா, வட கிழக்கு மாநிலங்களில் யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால், 2001-ம் ஆண்டு முறையே பின்பற்றப்பட்டது. ஆனால், கடுமையான போட்டி உருவான பிறகும் அதையே எப்படிப் பின்பற்ற முடியும்?’ என்று சி.பி.ஐ. கேள்வி எழுப்புகிறது.

'நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம், அதற்கும் மேலாக பிரதமர் கூறிய ஆலோசனைகளையெல்லாம் ஆ.ராசா புறக்கணித்தார். எல்லோருடைய கருத்துகளையும் மீறி தன்னிச்சையாக ஆ.ராசா முடிவு எடுத்தார். தனக்கு வேண்டியவர்களான ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா, வினோத் கோயங்காவோடு, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திராவும் பயனடையவே, அரசுக்கு ஆ.ராசா நஷ்டம் ஏற்படுத்தினார்!’ என்கிறது  சி.பி.ஐ.

இந்த விவகாரத்தில் கட்டுக்கட்டான ஆவணங்களை மட்டுமின்றி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் தவிர, குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் சாட்சிகளாக நிறுத்துகிறது.

தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், டிராய் தலைவர்கள், சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, முன்னாள் தொலைத் தொடர்புச் செயலாளர் மாத்தூர், சட்டத் துறை செயலாளராக இருந்த டி.கே. விஸ்வநாதன், முன்னாள் நிதிச் செயலாளர் டி.சுப்பா ராவ் என்று பெரிய படையே சிறப்பு நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.

இதில் முக்கியமான ஏழு பேர் ஆ.ராசாவுக்கு எதிராக மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலங்களும் கொடுத்து இருக்கிறார்கள். இதில் சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா மற்றும் சுமார் ஒன்பது வருடங்களாக, கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரி அந்தஸ்தில் ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். (இதில் ஆசிர்வாதம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. அல்லது காங்கிரஸ் சார்பில் போட்டியிடவும் முயற்சி செய்தவர் என்பது தனி விவகாரம்)

இந்த இருவரது வாக்குமூலங்களை  வைத்து ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது. மோசடி, கூட்டுச் சதி, தில்லுமுல்லு, திட்டமிட்டு ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் கொடுத்தது, லஞ்ச ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்தில் இருந்து அதிகபட்சம் ஏழு வருடங்கள்வரை தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், சாட்சிகளில் எத்தனை பேர் பல்டி அடிப்பார்கள், யார் பிறழ் சாட்சிகளாக மாறுவார்கள் என்பதைப் பொறுத்தும்... இனி தாக்கல் செய்யப்பட இருக்கும் கூடுதல் குற்றப் பத்திரிகையைப் பொறுத்தும், 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதித் தீர்ப்பு அமையும். இதுவரை கலைஞர் டி.வி. பெற்ற 200 கோடியைத் தவிர, வேறு எந்த ஆதாயங்களையும் சி.பி.ஐ. இந்தக் குற்றப் பத்திரிகையில் முன் வைக்கவில்லை.

இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த விவேக் ப்ரியதர்சினியிடம் இது குறித்துக் கேட்டபோது, ''பொறுத்திருங்கள்... அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளில் ஒவ்வொன்றாக வெளிவரும்!'' என்கிறார்.

காத்திருப்போம்!

 சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ-யும், பணப் பரிமாற்றம் தொடர்பான மோசடிகளை அமலாக்கப் பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.

சி.பி.ஐ. கடந்த 2-ம் தேதி முதல் கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வெளிநாட்டு நிதி மேலாண்மை சட்டத்தின் கீழ் 4,300 கோடி முதலீடு பற்றிய மோசடிகள் பற்றி குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

'2ஜி முறைகேடு பற்றி சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அடுத்த நாள், அதாவது கடந்த 9-4-11 அன்று அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப் பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம், லூப் மொபைல், லூப் டெலிகாம் மற்றும் எஸ்.டெல் பற்றி கூறப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஆ.ராசா அண்ட் கோவுக்கு அமலாக்கத் துறையில் இருந்து சம்மன்கள் வழங்கப்பட்டனவாம். மேலும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள யுனிடெக், ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன.

இதில் ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் சிறையில் உள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்படும். மற்றவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை தொடங்குமாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-17-04-2011

18 comments:

ரிஷி said...

சரவணன்,
தேர்தல்தான் முடிஞ்சிடுச்சே! இன்னுமா! ஓட்டுப் போட்டாச்சா?

ஜோதிஜி said...

ஜெ வுக்கு நீதிமன்றத்தில் வந்து ஆஜராக அடுத்த ஆட்டம் தொடங்கப்பட்டுள்ளதே அது குறித்தும் எழுதுவீங்களா?

Prakash said...

The CBI charge sheet says Loss of 30 Thousand crores (18% of initial projected Loss of 1.7 L Cr), whereas all the Anti-DMK Medias and bloggers still say DMK & MK have looted 1.7 Lack Crores. And that 30K Crore loss is also as per the Telecom & TARI policies.

There might be procedural mistakes and favor done for few companies by Raja, in worst case if there is some bribe involved for showing favor, that might be much less , not into thousands of crores. As the Case is with CBI & Supreme Court and Law will take its course on this.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சரவணன், தேர்தல்தான் முடிஞ்சிடுச்சே! இன்னுமா! ஓட்டுப் போட்டாச்சா?]]]

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முடியும்வரையில் இங்கே அது தொடரும்..!

ஓட்டுப் போட்டாச்சுங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

ஜெ.வுக்கு நீதிமன்றத்தில் வந்து ஆஜராக அடுத்த ஆட்டம் தொடங்கப்பட்டுள்ளதே அது குறித்தும் எழுதுவீங்களா?]]]

கண்டிப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

The CBI charge sheet says Loss of 30 Thousand crores (18% of initial projected Loss of 1.7 L Cr), whereas all the Anti-DMK Medias and bloggers still say DMK & MK have looted 1.7 Lack Crores. And that 30K Crore loss is also as per the Telecom & TARI policies.

There might be procedural mistakes and favor done for few companies by Raja, in worst case if there is some bribe involved for showing favor, that might be much less , not into thousands of crores. As the Case is with CBI & Supreme Court and Law will take its course on this.]]]

ஆளும் கட்சியினருக்காக சிபிஐ-யும் கொஞ்சம் நெளிவு, சுழிவுடன்தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் ஊழல் தொகையைக் குறைத்துக் காட்டியிருப்பது..!

அமர பாரதி said...

//அதன் ஒரு பகுதிதான் ஊழல் தொகையைக் குறைத்துக் காட்டியிருப்பது// வாழ்க வளமுடன். இந்த அளவு தி.மு.க எதிர்ப்புக்கு என்ன காரணம் உண்மைத்தமிழரே? சி.பி.ஐ. க்கும் சுப்ரீம் கோர்டுக்கும் தெரியாதது உங்களுக்குத் தெரிந்திருக்கிறதா?

//கொள்ளையடித்தது 30,983 கோடிகள்தானா...// நடந்தது இழப்பு, அந்த இழப்பின் மதிப்பு அது. கொள்ளையடித்தது அல்ல. இவ்வளவு ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது தான் சாராம்சம்.

Prakash said...

Hope you know the difference between இழப்பு and ஊழல். Even that இழப்பு is due to Govt Telecomm policies.

புகழேந்தி said...

Mr.UnmaiTamizhan, The amount you have mentioned is loss to the government and not a looted one. Try to understand that before posting such posts. I think you are watching jaya tv a lot. Most of the media are owned by brahmins. The main aim of brahmins is to oppose karunanidhi in all sorts. Junior Vikatan is doing great job in that. It has lost its authenticity.

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

//அதன் ஒரு பகுதிதான் ஊழல் தொகையைக் குறைத்துக் காட்டியிருப்பது//

வாழ்க வளமுடன். இந்த அளவு தி.மு.க எதிர்ப்புக்கு என்ன காரணம் உண்மைத்தமிழரே? சி.பி.ஐ.-க்கும் சுப்ரீம் கோர்டுக்கும் தெரியாதது உங்களுக்குத் தெரிந்திருக்கிறதா?

//கொள்ளையடித்தது 30,983 கோடிகள்தானா...//

நடந்தது இழப்பு, அந்த இழப்பின் மதிப்பு அது. கொள்ளையடித்தது அல்ல. இவ்வளவு ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதுதான் சாராம்சம்.]]]

ஏதோ ஒரு ஆதாயத்துக்காக அரசுக்கு இழப்பீடு செய்யும்வகையில் அரசு நடவடிக்கைகளைச் செய்வது ஊழல் என்றே அறிவிக்கப்படும்..!

இந்த இழப்பீட்டுத் தொகை கமிஷனாக அதனை ஏற்பாடு செய்த நபர்களுக்குத் திருப்பி வருமெனில் அது நிச்சயம் கொள்ளையடித்த பணம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Hope you know the difference between இழப்பு and ஊழல். Even that இழப்பு is due to Govt Telecomm policies.]]]

அமரபாரதிக்கு பதில் சொல்லியிருக்கேன் பிரகாஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[புகழேந்தி said...

Mr.UnmaiTamizhan, The amount you have mentioned is loss to the government and not a looted one. Try to understand that before posting such posts. I think you are watching jaya tv a lot. Most of the media are owned by brahmins. The main aim of brahmins is to oppose karunanidhi in all sorts. Junior Vikatan is doing great job in that. It has lost its authenticity.]]]

மிஸ்டர் புகழேந்தி.. உங்களுடைய பிராமண எதிர்ப்பு நம்பிக்கையைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை..!

இதனைப் பயன்படுத்தித்தான் இதுவரையில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்து தனது குடும்பத்தினரை மட்டும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் சேர்த்தது..!

பாவம்.. நீங்க.. இன்னமும் அதையே நம்பிக்கிட்டு அவங்க வீட்டு வாசல்ல நிக்குற நாய் மாதிரி மக்களையும் நிக்கணும்னு நினைக்கிறீங்க..! இப்போ காலம் மாறிப் போச்சு ஸார்..! மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னமும் அவங்களை உங்களால ஏமாத்த முடியாது..!

vijayan said...

கருணாநிதியை விமர்சனம் செய்வதற்கு பிராமண ஊடகங்களும்,பிராமணர்களும் தான் காரணம் என்று சொல்லும் mr .புகழேந்தி ,கருணாநிதியே தனக்கு வசதியான பொழுதெல்லாம் ராஜாஜி,இந்திரா,பிஜேபி போன்ற பிராமணர்களுடன் உறவுவைத்து கொள்கிறாரே அது ஏன் அல்லது எப்படி?

புகழேந்தி said...

கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் அவர் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை பார்ப்பன வட்டாரத்தில் நில நடுக்கத்தை ஏற்படுத்தி விட்டன.

1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம்

2) தமிழ் செம்மொழி அங்கீ காரம்

3) சித்திரை முதல் நாள் அல்ல தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு - _ சமஸ் கிருத மொழியில் இருக்கும் 60 ஆண்டுகள் தமிழுக்கான ஆண்டுகள் அல்ல _ தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டது.

4) தீண்டாமை -_ ஜாதி ஒழிப்புத் திசையில் மிக முக்கியமான ஆக்க ரீதியான உருவாக்கமாகிய பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள்.

5) தீட்சதர்ப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த சிதம்பரம் நடராஜன் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. வடலூர் வள்ள லாரின் சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது.

_ இத்தகு சமூக மாற்றத்துக்கான சட்டங்கள் தந்தை பெரியார் அவர்கள் கொள்கை அடிப்படையில் சட்ட ரீதியாக நிலை பெறச் செய்யப்பட்டு விட்டன.

இது பார்ப்பனீயத்தை ஆணி வேரோடு வீழ்த்தித் தூக்கி எறியக் கூடியவை என்பதுதான் பார்பனிய கூட்டத்துக்கு அடக்கப்பட முடியாத ஆத்திரச் சுனாமி.

தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற ' ராஜராஜன் 1000' என்கிற கொண்டாட்டத்தின் போது கலைஞர் பட்டு வேட்டி சட்டை அணிந்து 1000 பிராமண பெண்களின் நடனத்தை கண்டுகளித்ததும் [ அக்கோயிலில் இதுபோன்று பிராமணர்கள் கலைஞர் சமுகத்தை சேர்ந்த பெண்கள் நடனமாடுவதை கண்டுகளிப்பது மரபான ஒன்றாக இருந்து வந்துள்ளது] அச்சமயம் அ.ராசா "பழி தீர்க்கும் நாள்" என்று விளித்ததும் இந்த பார்பனிய கூட்டத்தின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது.

ஷர்புதீன் said...

ஆட்சிக்கு ஆப்பு வைக்குற மாதிரி எழுதியாச்சு, ஆட்சியும் மாரிடும்ன்னு வையுங்க, அடுத்த ஆட்சியையும் நாம திட்டத்தான் போறோம், என்னதான் தீர்வு? ( i have only one choice., i like to settle like singapore or autralia) i know thats not easy for a midlle class people., but i have only this solutions to escape this kind of irksome matters!
:)

உண்மைத்தமிழன் said...

[[[vijayan said...

கருணாநிதியை விமர்சனம் செய்வதற்கு பிராமண ஊடகங்களும், பிராமணர்களும்தான் காரணம் என்று சொல்லும் mr.புகழேந்தி, கருணாநிதியே தனக்கு வசதியான பொழுதெல்லாம் ராஜாஜி, இந்திரா, பிஜேபி போன்ற பிராமணர்களுடன் உறவு வைத்து கொள்கிறாரே அது ஏன் அல்லது எப்படி?]]]

இதுக்குப் பேரு பச்சையான பச்சோந்தித்தனம்.. ஆனால் உடன்பிறப்புகள் இதைத்தான் தலைவரின் ராஜதந்திரம் என்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[புகழேந்தி said...

கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் அவர் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை பார்ப்பன வட்டாரத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தி விட்டன.

1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம்

2) தமிழ் செம்மொழி அங்கீகாரம்

3) சித்திரை முதல் நாள் அல்ல தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு - _ சமஸ் கிருத மொழியில் இருக்கும் 60 ஆண்டுகள் தமிழுக்கான ஆண்டுகள் அல்ல _ தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டது.

4) தீண்டாமை -_ ஜாதி ஒழிப்புத் திசையில் மிக முக்கியமான ஆக்க ரீதியான உருவாக்கமாகிய பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள்.

5) தீட்சதர்ப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த சிதம்பரம் நடராஜன் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. வடலூர் வள்ள லாரின் சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது.

_ இத்தகு சமூக மாற்றத்துக்கான சட்டங்கள் தந்தை பெரியார் அவர்கள் கொள்கை அடிப்படையில் சட்ட ரீதியாக நிலை பெறச் செய்யப்பட்டு விட்டன.

இது பார்ப்பனீயத்தை ஆணி வேரோடு வீழ்த்தித் தூக்கி எறியக் கூடியவை என்பதுதான் பார்பனிய கூட்டத்துக்கு அடக்கப்பட முடியாத ஆத்திரச் சுனாமி.

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற ' ராஜராஜன் 1000' என்கிற கொண்டாட்டத்தின் போது கலைஞர் பட்டு வேட்டி சட்டை அணிந்து 1000 பிராமண பெண்களின் நடனத்தை கண்டுகளித்ததும் [ அக்கோயிலில் இதுபோன்று பிராமணர்கள் கலைஞர் சமுகத்தை சேர்ந்த பெண்கள் நடனமாடுவதை கண்டுகளிப்பது மரபான ஒன்றாக இருந்து வந்துள்ளது] அச்சமயம் அ.ராசா "பழி தீர்க்கும் நாள்" என்று விளித்ததும் இந்த பார்பனிய கூட்டத்தின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது.]]]

எல்லாஞ்சரி.. இதே பார்ப்பனர்கள் துணையோடுதானே இவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது சொந்த நிறுவனங்களை நடத்துகிறார்கள். அப்போதெல்லாம் இந்த பார்ப்பனீயத்தை இவரும், இவரது அடிப்பொடிகளும் நினைக்க மாட்டார்களாமா..?

ஏன் ஸார் காமெடி பண்றீங்க..? போங்க.. போங்க.. போய் உங்க புள்ளைகளை படிக்க வையுங்க. புண்ணியமாப் போவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷர்புதீன் said...

ஆட்சிக்கு ஆப்பு வைக்குற மாதிரி எழுதியாச்சு, ஆட்சியும் மாரிடும்ன்னு வையுங்க, அடுத்த ஆட்சியையும் நாம திட்டத்தான் போறோம், என்னதான் தீர்வு?

(i have only one choice., i like to settle like singapore or autralia)

i know thats not easy for a midlle class people., but i have only this solutions to escape this kind of irksome matters!]]]

ஆட்சி மாறினால் அந்த ஆட்சிக்காரர்கள் நம்மிடம் குறைவாகத்தான் திட்டு வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். எல்லோருக்கும் இப்போது பயம் வந்திருக்கும்..!