கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் துடிக்கும் ஜெயலலிதா..!

17-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலைஞர் கருணாநிதியைப் போலவே ஆட்சி நடத்தும் தகுதியே இல்லாத புரட்சித் தலைவி ஜெயலலிதா, கட்சி நடத்தும் தகுதியும் தனக்கு இல்லாததை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்..!


தற்போதைய பொது எதிரி யார் என்பதை தமிழகமே அடையாளம் கண்டு அவரை வீட்டுக்கு அனுப்பும் வேலையைச் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் அலுங்காமல், குலுங்காமல் அதே எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க தன்னால் முடிந்த அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா தனது கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்திருக்கும் இந்திய மரியாதைக்கு அசட்டுத்தனமான, திமிர்த்தனமான, முட்டாள்தானமான என்று இந்த வரிசையில் எத்தனை இருக்கோ... அத்தனையும் போட்டுக் கொள்ளலாம்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுவதற்கு முன்பு வரையிலும் தமிழினத்தின், தமிழகத்தின் பொது எதிரியான கருணாநிதி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றுதான் தமிழகமே நம்பிக் கொண்டிருந்தது. ஏன், கருணாநிதியே இதைத்தான் நம்பினார். இல்லாவிடில் சென்னையை கூட்டணிக் கட்சியினருக்கு தாம்பாளத் தட்டில் வைத்து வழங்கிவிட்டு தான் மட்டும் ஊரைவிட்டு ஓடுவாரா...?

அவரே பயந்து ஓடிக் கொண்டிருக்கும்போது மேலும் ஓட, ஓட துரத்தும் வேலைகளைக் கவனிக்காமல், போதும். திரும்பி வந்திருங்க என்று அறைகூவல் விடுத்திருக்கும் ஜெயலலிதாவின் இந்தச் செயலால் நாசமாகப் போவது அவரும், அவரது கட்சியினரும்தான்..! கூடவே தமிழகத்து மக்களும்தான்..!

தனது கட்சிக்காரர்களை மட்டும்தான் ஜெயலலிதா இதுவரையில் மதிக்காமல் இருந்திருக்கிறார் என்றால், இப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அதேபோல் நினைத்துவிட்டார்..! ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இதுதான் வித்தியாசம்..!

தனது வீடு திறந்த வீடு என்பதை வெளிக்காட்டி தமிழகத்தின் கலாச்சாரத்திற்கேற்றவாறு, நாகரிகமான முறையில் யார் வந்தாலும் வரவேற்கிறார் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாவோ தான் சந்திர மண்டலத்தில் குடியிருப்பதைப் போல காட்டிக் கொண்டு இறுக மூடிய வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு பொது வாழ்க்கைப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்..!

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு ஒன்று சேரும் அனைத்துக் கட்சிக்காரர்களையும் அனுசரித்து, தோழமையோடு அரவணைத்து வெற்றி வாகை சூடுவதைவிட்டுவிட்டு தனது வழக்கமான திமிர்த்தனத்தைக் காட்டி தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

இப்போது தே.மு.தி.க. ஜெயலலிதாவுக்கு நிபந்தனை விதிக்கும் அளவுக்குத் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளது. இது ஆத்தாவுக்கு நிச்சயம் தேவையானதுதான்..! அனைத்து எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்களும் பிரிந்திருப்பதால்தான் கருணாநிதி ஆட்சிக்கு வந்திருக்கிறாரே தவிர, தமிழகத்து மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் அவருக்கு வாக்களித்து அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவில்லை என்பதை துரதிருஷ்டவசமாக அவர் மட்டுமே உணர்ந்திருக்கிறார்.

இதனை அவருக்கு முன்பாகவே உணர வேண்டிய எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா ஏனோ தனக்காகவே தமிழகத்து மக்கள் காத்திருப்பதைப் போல ஒரு கனவை கண்டுவிட்டு அதனை நோக்கி நடப்பதாக நினைத்து புதைகுழியில் இறங்கிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மதிமுக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை என்று மெகா கூட்டணியாகத் திகழ வேண்டிய இந்த இடத்தில் முக்கியமான கட்சிகள் கழன்று கொள்ளும்போது கடையாணி கழன்ற மாட்டு வண்டியில் எந்த ஊருக்கு பிரயாணம் செய்யப் போகிறார் இந்த ஆத்தா..?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். அதனை பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்று நேற்று பட்டவர்த்தனமாக சி.பி.ஐ.யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இதனைவிடவும் மிகக் கேவலமான ஒரு விஷயம் தமிழகத்து மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் இதுவரையில் நடந்ததில்லை..!

ஆளும் கட்சி கூட்டணியில், தான் அமைச்சரவை வகிக்கும் ஒரு அரசியல் அமைப்பில் செயல்படும் போலீஸ் அமைப்பு ஒன்றே, தனது கட்சியின் அமைச்சர் ஒருவர் லஞ்சம் வாங்கிக் குவித்துவிட்டார் என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியிருக்கும்போது இதனை எந்தெந்த வழிகளில் மக்களிடத்தில் கொண்டு சென்று இந்தக் கொள்ளைக் கூட்டத்தை அப்புறப்படுத்தும் வழியைக் கவனிப்பதைவிட்டுவிட்டு, மீண்டும், மீண்டும் தனது சொந்த சுகத்தையே முன் வைத்து அரசியல் நடத்தும் ஜெயலலிதா அரசியல் என்னும் பொது வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டார்.

“யானை தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போடுவதைப் போல தமிழகத்து மக்கள் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை இந்த அம்மையார் தானே கெடுத்துக் கொள்கிறார்..” என்று கலைஞர் கருணாநிதியே ஜெயலலிதாவி்ன் முந்தைய ஆட்சியின் அலங்கோலங்கள் பற்றி வருத்தப்பட்டுச் சொன்னார்.. இப்போது அந்த வாக்கியத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார்  ஜெயலலிதா. வசனகர்த்தா கருணாநிதி. நடிகை ஜெயலலிதா..!

தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்றே ஆரம்பிக்கிறது என்பதால்தான் கருணாநிதிக்குப் பதிலாக ஜெயலலிதா என்ற பேச்சே எழும்புகிறது. மக்கள் ஆதரவு இவர்கள் இருவரைத் தவிர மற்ற யாரேனும் ஒருவருக்கு அமோகமாக கிடைத்துவிட்டால் இந்த இரண்டு திருடர்களையும் யார் கொண்டாடப் போகிறார்கள்?

ஊழல் விஷயத்தில் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சில வருடங்களுக்கு முன்புவரையிலும் முன்னணியில் இருந்தார். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முன்பு ஜெயலலிதாவையும் வீழ்த்திவிட்டு 'அகில உலக ஊழல் திலகம்' என்ற பட்டத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதியை வீழ்த்த நாம் ஜெயலலிதா என்னும் இரண்டாவது ஊழல்வாதியை தேட வேண்டியது நமது துரதிருஷ்டம்தான்..!

இதற்கு மக்களைத்தான் குற்றம் சுமத்த வேண்டும். வைகோ இருக்கிறார். வாக்களித்திருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன வாக்களித்திருக்கலாம். விஜயகாந்த் வந்திருக்கிறார் வாக்களித்துப் பார்க்கலாம். ஆனால் இதையெல்லாம்விட்டுவிட்டு மீண்டும், மீண்டும் தி.மு.க., அதிமுக என்று மாறி மாறி திருடர்களையே கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த முட்டாள்தனமான மக்கள் இருக்கின்றவரையில் இந்த நிலைமை மாறவே மாறாது..!  இப்போது திருந்த வேண்டியது தமிழகத்து மக்கள்தான்.

தேர்தல் கூட்டணி வைப்பதுகூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கண்டிப்பாக நடத்த வேண்டிய ஒரு சடங்காகவே இருக்கிறது என்பதையும் நாம் ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் கமிஷனின் சின்ன விதிமுறை மட்டும் இவ்வளவு கடினமானதாக இல்லாமல் இருந்தால், கட்சிகள் அனைத்தும் தனித்தனியே நின்றே தங்களது பலத்தைக் காட்டிவிடும். ஆனால் பெரிய கட்சிகளை எதிர்த்து சிறிய கட்சிகள் வளர்ந்துவிடக் கூடாதே என்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கும் சின்னம் தொடர்பான அந்த விதிமுறையை மறுபரீசிலனை செய்ய, இதுவரையில் பெரிய கட்சிகள் எதுவும் கோரிக்கை விடுக்கவில்லை என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். புரியும்..!

ஜனநாயகத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் சம அளவில் வாய்ப்புகள் தரப்பட வேண்டும். நம் நாட்டில் சாமான்ய மக்களின் கல்வியறிவே மிகக் குறைவாக இருக்கின்றபோது தேர்தலுக்கு தேர்தல் சின்னங்களை மாற்றிக் கொண்டேயிருந்தால் அக்கட்சி வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. உதயசூரியன் சின்னமும், இரட்டை இலையும், அரிவாள் சுத்தியலும் தமிழகத்து மக்கள் மத்தியில் பிரபலமானதற்குக் காரணம் நீண்ட வருடங்களாக அக்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்தான்.

இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே இப்போதைய அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் அபிலாஷைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓரளவுக்கு கொள்கைகள் ஒத்துப் போகின்ற கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. வேறு வழியில்லாமல் நாமும் இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

நேற்று இரவில் இருந்து எழுந்த எதிர்ப்புகளையெல்லாம் ஏதோ சாதாரணமாக கொசு கடித்தாற்போன்று அலட்சியப்படுத்திய ஜெயலலிதா சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் தே.மு.தி.க. அலுவலகம் முன்பாக அதன் தொண்டர்கள் காட்டியிருக்கும் எதிர்ப்புணர்வுக்கு பின்பு லேசாக இறங்கி வந்திருப்பதுபோல் தெரிகிறது. மாலைக்குப் பின்பு எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறார்களாம். 

இன்னொரு பக்கம் இத்தனை வருடங்களாக தனக்கென்று எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக் கொண்டு ஆதரவை அளித்து வந்த வைகோ தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார். தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!

திருமாவளவனைப் போல காலையில் இலங்கை தூதரகத்தை அகற்று என்று முழங்கிவிட்டு மதியத்தில் அறிவாலயத்தில் போய் சாமி கும்பிடும் கேவலத்தைச் செய்யத் தெரியாததால்தான் வைகோ இன்றைக்கு இந்த லட்சணத்தில் இருக்கிறார். ஈழப் பிரச்சினை ஒன்றுதான் வைகோ இன்றைக்கு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கவிடாமல் வைத்தது என்பது வரலாற்று உண்மை..!
இன்றைய நிலைமையே நாளையும் நீடித்து ஒருவேளை மூன்றாவது அணி அமையும்பட்சத்தில் இந்த இரண்டு கயவர்களையும் விரட்ட அந்த அணிக்கு ஆதரவு தர வேண்டியது நமது கடமை.. இதையும் நாம் செய்யவில்லையெனில் வருங்காலத்தில் நமது வாரிசுகளுக்கென்று மிச்சம் மீதி எதுவும் தமிழகத்தில் இருக்காது என்கின்ற உண்மையையும் நாம் இந்த நேரத்திலாவது உணர வேண்டும்.

இன்றைய நிலைமையே நிச்சயமாகத் தொடரும் என்றால் கருணாநிதியின் வெற்றியும் உறுதியானதுதான். இதற்கடுத்து அடுத்தாண்டு பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதாவை காணும் பாக்கியம் அவர்தம் கட்சியினருக்கு நிச்சயமாக கிடைக்கும்..!

சொத்துக் குவிப்பு வழக்கு தனது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ஆத்தாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைய தேர்தல் நேரத்தை வைத்து வேண்டுமானால் மே மாதம் வரையிலும் விசாரணைக்கு ஆஜராகமாமல் ஜெயலலிதா தப்பிக்கலாம். ஆனால் ஜூன், ஜூலையில் நிச்சயமாக விசாரணை முடிந்துவிடும். விசாரணையின் முடிவும் நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு பாதகமாகத்தான் வரப் போகிறது என்றே நானும் நம்புகிறேன்.

ஊர்க் காசை அடித்து உலையில் போடும் வித்தையில் கரை கண்ட முதல் தமிழகத்து அரசியல் பெண்மணி என்ற கெட்ட பெயரோடு ஜெயலலிதா ஜெயிலுக்குள் வாசம் செய்யப் போவதும் உறுதிதான்..! இத்தனை விஷயங்கள் தனக்காகக் காத்திருக்கும்போது அதனை எதிர்கொள்ள எத்தனை ராஜதந்திர விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்..? கருணாநிதியிடம் இத்தனை நாட்களாக அரசியல் நடத்திய ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொண்டதுதான் என்ன..?

கருணாநிதியாவது விஞ்ஞானி ரீதியாக ஊழல் செய்து இதுவரையில் மாட்டிக் கொள்ளாத புத்திசாலி. இதைக்கூட ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொள்ளாமல் மாட்டிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

நமக்கும் வேறு வழியில்லை.. இந்த இரண்டு கொள்ளைக் கூட்டக் கும்பல்களுக்கு மத்தியிலும் மாறி, மாறி அல்லல்பட வேண்டும் என்று நம் தலையில் எழுதப்பட்டிருக்கிறது..!

அனுபவிப்போம்..!

67 comments:

இராமசாமி said...

தாத்தான் கிங்கு திரும்பவும்.. நீங்க சொன்னாலும் சொல்லட்டியும் :)

jegan said...

Thathku neram romba Nalla iruku .

Suresh Kumar said...

அருமையான அலசல் மக்கள் திருந்துவார்களா?

Unmaivirumpi said...

அடேங்கப்பா, என்ன ஒரு புலம்பல் ... சாரி நடை .... கொட்டி தீத்துடீங்க .... அருமை அண்ணேன், பெரும்பாலும் உண்மையே

Anandha Loganathan said...

//தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!
//

100% True.

PARAYAN said...

//இந்த முட்டாள்தனமான மக்கள் இருக்கின்றவரையில் இந்த நிலைமை மாறவே மாறாது..! //
100% True.

MANI said...

அண்ணே! நீங்க ஒருத்தரே போதும் ஜெயலலிதாவுகே தெரியாத வித்தையெல்லாம் எடுத்து விட்டு எங்க மக்களை கவுத்துடுவீங்களோன்னு பயமா இருக்கு.

ஸ்பெக்டரம் பிரச்சனையை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஜெயலலிதாவை விட கலைஞர் எவ்வளவோ தேவலாம் போல. இன்னிக்கு பட்டிதொட்டியெல்லாம் கலர்டிவி, காஸ் அடுப்பு இருக்குன்னா அதுக்கு காரணம் கலைஞர் தான். அரியணை ஏறிய முதல்நாளே 1 ரூபாய் அரிசி திட்டத்தில் கையெழுத்து போட்டவர். பலமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயரல, பலதரப்பு மக்களையும் அனுசரிச்சு அவங்க பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு செய்தவர். தன்னைவிட தகுதிகுறைந்தவர்களானாலும் அவர்களை கலந்தாலோசிச்சு முடிவுகள் எடுத்தார்.

அந்தம்மாவும் தான் ஆட்சி பண்ணிச்சு யாராச்சும் கிட்ட நெருங்க முடிஞ்சுதா, எல்லாரும் பொத்துன்னு கால்ல விழற சத்தம்தான் கேட்டுது. விலைவாசி, பஸ்கட்டணம் எல்லாம் எப்படி இருந்துச்சு, வீட்ல இருந்த செருப்பு, நகையெல்லாம் பார்தீங்கல்ல. அட எதாச்சும் சம்பாரிச்சா கூட பரவாயில்ல ஆனா மக்களுக்குன்னு உருப்படியா எதாச்சும் பண்ணினாங்களா. அரசு ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் பண்ணியது தான் சாதனை.

நாமெல்லாம் நினைக்கிறமாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழல் 1 லட்சத்து 76 கோடியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. சில பெரிய தொழிலதிபர்கள், பணமுதலைகள் ஸ்பெக்ட்ரம் மதிப்பு தெரியாத ராசாவுக்கு சில ஆயிரம் கோடிகள் பணம் கொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டனர் என்றாலும் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட போட்டிகளால் பெரும் பயன் பெற்றவர்கள் பொதுமக்கள்தான் ஏனெனில் ஏலமுறையில் 2ஜி நடந்திருந்தால் இந்த அளவிற்கு குறைந்த விலையில் செல்போன் பயன்பாட்டிற்கு வந்திருக்காது. மேலும் 3ஜி விலையுடன் 2ஜி விலையை ஒப்பிடுவது என்பது மாட்டு வண்டியை காருடன் ஒப்பிடுவதற்கு சமம். இரண்டும் வேறுபட்ட தலைமுறை தொழில்நுட்பம் உடையவை.

ஊழலை கூட ஓரளவு சகித்துக் கொள்ளலாம் ஆனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பிய ஆணவமும், தான்தோன்றிதனமாகவும் நடக்கும் ஒரு பெண்மணி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று அந்த ஆண்டவனே நினைத்திருப்பான் போல அதான் அந்தம்மா புத்தியை இப்படி பேதலிச்சு போகச் செய்தான்.

எப்படியோ மூன்றாவது அணி அல்லது கூட்டணி ஆட்சி என்று இந்த முறை வந்தால் இந்த அளவிற்கு திருட முடியாது என்பது என் கருத்து. ம்ம் பார்ப்போம் விஜயகாந்த் கையில் லகான் இருக்கு என்ன பன்றாருன்னு பார்க்கலாம் (பின்னூட்டம் வருமில்ல)

வருண் said...

நான் இது மாதிரியா ஒரு பதிவை எதிர்பார்த்துட்டே இருந்தேன்!

எந்த ஒரு புத்திசாலி அரசியல்வாதியும் இதுபோல் தேவையில்லாத ஒரு பிரச்சினையை/சூழ்நிலையை (வைகோவை தள்ளிவிட்டு, கூட்டணிகளை மதிக்காமல் இதுதான் என் தொகுதிகள் னு 160 பேரு பட்டியலை வெளியிடுவது) உருவாக்கமாட்டான்.

எதுவும் மனநிலைக் கோளாரோ என்ன எழவோ!

If CPI & CPI (M) come out of the alliance, there is no chance! I dont think Vijaykanth and Amma can do a good job together.They look awful when they are together! They badly need vaiko and communist parties to win this election!

மு.சரவணக்குமார் said...

மூன்றாவது அணி சாத்தியமில்லை என்றே படுகிறது. அதிமுக கூட்டணியில் ஒருவரை ஒருவர் மிரட்டிப் பார்க்கும் காரியமே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று முனையும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் வெற்றி சாத்தியமாகும். இல்லையேல் பெரியவர் குழம்பிய குட்டையில் எளிதாய் மீன்பிடித்து குடும்பத்துக்கு கொடுத்து விடுவார்.

Kalee J said...

அண்ணே, உங்கள் கருத்து அத்தனையும் உண்மை, சத்தியம்.
தமிழ்நாடு அரசியல் வரலற்றில் வைகோ ஒரு நேர்மையான, உணர்வு பூரணமான, தன்மான தமிழர். இந்த கேடுகெட்ட அரசியல்வியாதிகளுக்கு தன்மானமும் இல்லை தன்மானமுள்ள தலைவனை மதிக்கும் தன்மையும் இல்லை.

PRINCENRSAMA said...

//தற்போதைய பொது எதிரி யார் என்பதை தமிழகமே அடையாளம் கண்டு// பார்ப்பனியம் தான் எப்போதும் பொது எதிரி!

மு.சரவணக்குமார் said...

வைக்கோ ஆதரவு தருகிறேன் பேர்வழி என அதிமுக மாவட்ட செயலாளர் ரேஞ்சுக்கு இறங்கிப் போனதுதான் இன்றைய அவரது நிலைக்கு காரணம்.

இத்தனை அவமானத்துக்கு பின்னரும் பத்தொன்பதாம் தேதி கூடிப் பேசுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பது அபத்தமாய் இருக்கிறது.

சீமான் என்கிற காமெடி பீஸ் இனி என்ன செய்வார்,இன்னொரு அரசியல் கோமாளி!

Yoga.s.FR said...

வழி மொழிகிறேன்!ஆனாலும் மூன்றாவது அணி என்ற ஒன்று உருவாக கால அவகாசம் போதுமா?கேப்புடன் வெளியேறுவாரா?ஏனைய கம்யூனிஸ்டுகளுக்கும் அந்தத் தைரியம் வருமா?மூன்றாவது அணி உருவானால் வாக்குகள் பிரிந்து இரு பெரிய?!கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத போது,நிபந்தனைகள் மூலம் மூன்றாவது அணி "சாதிக்க" முடியுமே?

இராமசாமி said...

அட இன்னும் ஒரு மைனஸ் ஒட்டு கூட விழல .. என்ன கொடுமை அண்ணாச்சி இது

கல்வெட்டு said...

உதா,
நீங்கள் விரும்பும் 10 மாற்றங்களைச் சொல்லுங்கள்.
அதிமுக வாக இருந்தாலும் திமுக வாக இருந்தாலும் அவைகள் நடக்கப்போவது இல்லை.

இது சபிக்கப்பட்ட நாடு. வெட்கம் இல்லாமல் தனது ஓட்டிற்கு காசு வாங்கிற நாட்டில் அதிக காசு தருபவனே ஆட்சியமைப்பான்.

ஒருவேளை புரட்சித்தலைவி ஆட்சிக்கு வந்தாலும் ஏதும் மாறப்போவது இல்லை.கொஞ்ச்காலம் திமுக பழிவாங்கும் படலம் இருக்கும் அப்புறம் அவர் நடத்தும் ஆட்சியில் நொந்துபோய் அடுத்த தேர்தலில் திமுக வராத என்று பதிவு போடுவீர்கள்.

மாற்றத்தை விரும்புவர்களுக்கே மாற்றம் வரும்.

அப்படி வேண்டும் மக்கள், அவர்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தெருவில் திரண்டிருப்பார்கள். அமெரிக்காவில் விஸ்கான்சன் மாநிலத்தில் சட்டசபையையிலேயே படுத்து உறங்கும் அளவிற்கு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

வெற்றியோ தோல்வியோ மக்கள் எத்தனை போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்குகொண்டுள்ளார்கள்?

-ஆட்டோக்காரர் பிரச்சனைக்கு ஆட்டோக்காரர் மட்டும்
-ஆசிரியர் பிரச்சனைக்கு ஆசிரியர் மட்டும்
-கோவிலில் நுழையமுடியா தலித் பிரச்ச்னைக்கு தலித்மட்டும்
-மாணவர் பிரச்சனைக்கு மாணவர்கள் மட்டும் (பெற்றோர்கள் கூட கலந்து கொள்வது இல்லை)
-மீனவர் பிரச்சனைக்கு மீனவர் மட்டும்....

இப்படி தன்வீடு எரியாதவரை பக்கத்துவீட்டுக்காரன் சாவதைப்பற்றி கவலைப்படாத தேசம்.

இது சபிக்கப்பட்ட நாடு.

.

Shankar said...

You have hit the nail on its head.You have written 100 % right. Word for word you have matched my thoughts.It will be political suicide if jaya does not avail this chance to uproot MK.I appreciate for bringing out this very eye opening piece. I shall forward tis to as many people as I can in India before they go for polls.Your language and style in arresting. There is sincerity and concern in you rapproach. If hopes were duped, then fears come true.

palani said...

மிக சரியான பார்வைங்கோ..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல அலசல்,
வைகோவை வெளியேற்றியது, ராஜகுரு-சோ ஆலோசனையாக இருக்கும்.
இந்த ஆத்தாவிலும், தாத்தா மேல்.
என்னவாவது செய்யுங்கள்.

தமிழ்நங்கை said...

கல்வெட்டை வரிக்கு வரி வழிமொழிகின்றேன். சூடு சொரணையற்ற ஜென்மங்கள் தான் தமிழக வாக்காளர்கள் இல்லையென்றால் திருடன் என தெரிந்தும் கருணாநிதிக்கும் திருடி எனத் தெரிந்தும் ஜெயலலிதாவுக்கும் புரியாணிக்கும் குவாட்டருக்கும் ஆசைப்பட்டு தன்மானத்தை விற்பவர்கள் இவர்கள்.

ஜோதிஜி said...

நீங்கள் ஒவ்வொரு முறையும் கூவிக் கேட்கும் ஓட்டுக்களை இந்த மக்கள் விரைவாக இந்த தலைப்புக்கு குத்தியுள்ளார்கள். மூச்சு விடாமல் கலைஞரை குறித்து தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு வந்த போது நான் மனதிற்குள் நினைத்து வைத்து இருந்தேன். இதே போல் நொந்து போய் ஒரு கட்டுரை உங்களிடம் இருந்து வருமென்று. காரணம் யாரை எதிர்க்க யாரை ஆதரிக்கின்றீர்கள் என்பது தெரியாமலேயே அள்ளித் தெளித்து உணர்ச்சி வேகத்தில் இடுகையாக ரொப்பிக் கொண்டு வந்தீங்க. நல்ல வேளை இந்த தலைப்புக்கு உருப்படியாக கல்வெட்டு பதில் கொடுத்துள்ளார். அதற்காக கலைஞர் விசிறி என்று என்னை ஒரு வட்டத்திறகுள் கொண்டு வராதீங்க.
தன்னுடைய தகுதி என்னவென்று தெரியாமல் வாழும் தமிழர்கள் மத்தியில் இது போன்ற வியாதிகள் தான் நமக்குத் பெருந் தலையாக தெரியும்.
கெட்டவன் கெட்டுப்போனால் எதிரிக்கு கிட்டிடும் ராஜயோகம். இது எதற்காக சொல்லியுள்ளார்கள் என்பதை நண்பர்களிடம் கேட்டுப் பாருங்க. இது தான் அன்று முதல் இன்று வரையிலும் கலைஞருக்கு உதவிக் கொண்டு இருப்பது.
திருந்தாத ஜென்மங்கள் வாழ்ந்தென்ன லாபம் உண்மைதமிழா?

ஜாக்கி சேகர் said...

அண்ணே.. சத்தியமா சொல்லறேன் அண்ணே ஒரு நடுநிலையான ஆதங்கத்தை கொட்டி இருக்கிங்க...ரொம்ப ரொம்ப அற்புதம்.நான் பின்னுட்டம் இடுவது ரொம்பவும் குறைவு.. ஆனா இந்த பதிவு என்னை போட வைக்குது...

அதே போல பின்னுட்டங்களில் மணி என்பவர் எழுதி இருக்கும் வரிகள் அத்தனையும் 100க்கு 100 உண்மை... அற்புதம்...
மணி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...இந்த பதிவுக்கு தார்முக நடுநிலையான கோபத்துக்கும் ஹேட்ஸ் ஆப்....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

Namy said...

Tamil nadu people ready to sell their vote to DMK OR ADMK. So dont bother about their fate, 'vinai vidaippavan vinai aruppan'. Jaya also make easy pathway for DMK achive his goal.

வெத்து வேட்டு said...

ஜெயலலிதா பொட்டி ஏதாச்சும் வாங்கிச்சோ தெரியாது..

sasibanuu said...

அருமையான அலசல் .... அருமை ..அருமை ....

சிவா said...

நண்பர்களே, மனம் தளராதீர்கள்.சில சமயம் நமக்கு சோதனை வருவது கூட நமக்கு நன்மையில் முடியலாம். இந்த அதிமுக கூட்டணி கௌரவமான நிலையில் தொடர்ந்தால் சரி. இல்லை, மூணாவது அணி வந்தால் முழு மூச்சுடன் அதன் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இதைதான் நானும் எனது பதிவில் வலியுறுத்தியிருக்கிறேன்.குறைந்த பட்சம் அடுத்து ஆட்சி அமைக்கும் அரசின் குடுமி இந்த மூன்றாவது அணியின் கையில் இருக்க வேண்டும்.

முகமூடி said...

பொட்டில் அறைந்தாற் போல் சொல்லி விட்டிர்கள்

KASBABY said...

Fantastic.

Ponchandar said...

தமிழக மக்கள் திருந்தி தாத்தாவையும், அம்மையையும் வீட்டுக்கு அனுப்பணும்... செய்வாங்களா மக்கள் ! ! ! தற்போதைய நிலையில் 3-வது அணி உருவானால் தாத்தா-தான் மீண்டும் சி.எம். தமிழ்நாடு நாறிப் போகும்...

Prakash said...

ஊற்றிக் கொடுத்தவருக்கு
போதை ஏறிக்கிச்சி
வாங்கிக் குடித்தவருக்கு
போதை கலைஞ்சிருச்சி
From : http://writersuryakumaran.blogspot.com/2011/03/3.html

Kumar said...

arivu jeevigala!
jeyyithuvittu thathavidam adaikkalam thedubavargalukku alli kudukka venduma????

muthu said...

அறிவு ஜீவிகளாக நினைத்துக் கொண்டு இதுபோல் கருத்து சொல்லி ஏன் அணிகளை ஆதரிக்கத்துடிக்கிறீர்கள்.? அந்த அந்தத் தொகுதியில் போட்டியிடும் நல்லவருக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்கள்.

ராஜ நடராஜன் said...

//மாற்றத்தை விரும்புவர்களுக்கே மாற்றம் வரும். //

அழகாய் சொன்னீர்கள் கல்வெட்டு!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...
தாத்தான் கிங்கு திரும்பவும்.. நீங்க சொன்னாலும் சொல்லட்டியும் :)]]]

அதையும் பார்க்கத்தான போறோம்..!?

உண்மைத்தமிழன் said...

[[[jegan said...
Thathku neram romba Nalla iruku.]]]

இல்லை.. நேரம் ரொம்ப கெட்டுப் போய்க் கெடக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Suresh Kumar said...

அருமையான அலசல் மக்கள் திருந்துவார்களா?]]]

திருந்தினால் அவர்களுக்கே நல்லது.

உண்மைத்தமிழன் said...

[[[Unmaivirumpi said...

அடேங்கப்பா, என்ன ஒரு புலம்பல். சாரி நடை. கொட்டி தீத்துடீங்க. அருமை அண்ணேன், பெரும்பாலும் உண்மையே]]]

இது ஒரு சராசரி தமிழனின் புலம்பல்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anandha Loganathan said...

//தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!//

100% True.]]]

புரிதலுக்கு நன்றி லோகு..!

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

//இந்த முட்டாள்தனமான மக்கள் இருக்கின்றவரையில் இந்த நிலைமை மாறவே மாறாது..! //

100% True.]]]

இந்த நிலைமை மாறத்தான் வேண்டும். இல்லையெனில் ஒரு நாளைக்கு இந்த நாட்டில் புலம்புபவர்களே அதிகம் இருப்பார்கள்..! மனிதர்களைத் தேட வேண்டியிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[MANI said...

அண்ணே! நீங்க ஒருத்தரே போதும் ஜெயலலிதாவுகே தெரியாத வித்தையெல்லாம் எடுத்து விட்டு எங்க மக்களை கவுத்துடுவீங்களோன்னு பயமா இருக்கு.]]]

உண்மையைத்தான சொல்லியிருக்கேன். இதுல என்ன தப்பு இருக்கு..?

[[ஸ்பெக்டரம் பிரச்சனையை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஜெயலலிதாவைவிட கலைஞர் எவ்வளவோ தேவலாம் போல.]]]

பாவம் நீங்க.. தொடர்ந்து எனது பதிவுகளைப் படிச்சிட்டு வந்திருந்தீங்கன்னா இப்படி பேசியிருக்க மாட்டீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

நான் இது மாதிரியா ஒரு பதிவை எதிர்பார்த்துட்டே இருந்தேன்!
எந்த ஒரு புத்திசாலி அரசியல்வாதியும் இதுபோல் தேவையில்லாத ஒரு பிரச்சினையை/சூழ்நிலையை (வைகோவை தள்ளிவிட்டு, கூட்டணிகளை மதிக்காமல் இதுதான் என் தொகுதிகள் னு 160 பேரு பட்டியலை வெளியிடுவது) உருவாக்கமாட்டான்.]]]

வாஸ்தவம் வருண்..!

If CPI & CPI (M) come out of the alliance, there is no chance! I dont think Vijaykanth and Amma can do a good job together. They look awful when they are together! They badly need vaiko and communist parties to win this election!]]]

அனைவரையும் அனுசரித்து பணியாற்றினால் ஜெயிக்கலாம். இல்லையெனில் அவருடைய பிற்கால வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தை அனுபவிக்கப் போகிறார் ஜெயலலிதா..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

மூன்றாவது அணி சாத்தியமில்லை என்றே படுகிறது. அதிமுக கூட்டணியில் ஒருவரை ஒருவர் மிரட்டிப் பார்க்கும் காரியமே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று முனையும்போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் வெற்றி சாத்தியமாகும். இல்லையேல் பெரியவர் குழம்பிய குட்டையில் எளிதாய் மீன் பிடித்து குடும்பத்துக்கு கொடுத்து விடுவார்.]]]

சரியாகச் சொன்னீர்கள் சரவணக்குமார்..! இன்னமும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள் பாருங்கள்.. இதெல்லாம் எங்கே போய் முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[Kalee J said...
அண்ணே, உங்கள் கருத்து அத்தனையும் உண்மை, சத்தியம்.
தமிழ்நாடு அரசியல் வரலற்றில் வைகோ ஒரு நேர்மையான, உணர்வுபூரணமான, தன்மான தமிழர். இந்த கேடு கெட்ட அரசியல் வியாதிகளுக்கு தன்மானமும் இல்லை. தன்மானமுள்ள தலைவனை மதிக்கும் தன்மையும் இல்லை.]]]

வைகோ இப்பவும் அது போலவே இருந்துவிட நினைக்கிறார். தனி மனித வாழ்க்கையில் அது ஓகே. ஆனால் பொது வாழ்க்கையில் கொஞ்சம் மாறித்தான் ஆக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[PRINCENRSAMA said...

//தற்போதைய பொது எதிரி யார் என்பதை தமிழகமே அடையாளம் கண்டு//

பார்ப்பனியம்தான் எப்போதும் பொது எதிரி!]]]

உங்க ஐயா, அம்மாவுக்கு விருது கொடுத்துப் பாராட்டியபோது இந்தப் பார்ப்பனியம் பொது எதிரியா இல்லையா தம்பி..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
வைகோ ஆதரவு தருகிறேன் பேர்வழி என அதிமுக மாவட்ட செயலாளர் ரேஞ்சுக்கு இறங்கிப் போனதுதான் இன்றைய அவரது நிலைக்கு காரணம். இத்தனை அவமானத்துக்கு பின்னரும் பத்தொன்பதாம் தேதி கூடிப் பேசுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பது அபத்தமாய் இருக்கிறது. சீமான் என்கிற காமெடி பீஸ் இனி என்ன செய்வார், இன்னொரு அரசியல் கோமாளி!]]]

அவருடைய பொது எதிரி கருணாநிதி. அவருக்காகத்தான் இத்தனை அவமானங்களையும் அவர் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Yoga.s.FR said...
வழி மொழிகிறேன்! ஆனாலும் மூன்றாவது அணி என்ற ஒன்று உருவாக கால அவகாசம் போதுமா? கேப்புடன் வெளியேறுவாரா? ஏனைய கம்யூனிஸ்டுகளுக்கும் அந்தத் தைரியம் வருமா? மூன்றாவது அணி உருவானால் வாக்குகள் பிரிந்து இரு பெரிய?! கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத போது, நிபந்தனைகள் மூலம் மூன்றாவது அணி "சாதிக்க" முடியுமே?]]]

இன்று இரவுக்குள் நிச்சயமாக தெரிந்துவிடும்.. காத்திருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...
அட இன்னும் ஒரு மைனஸ் ஒட்டு கூட விழல. என்ன கொடுமை அண்ணாச்சி இது.]]]

நீ வாய் வைச்சுட்டீல்ல.. போட்டுத் தாக்கிட்டாங்க பாரு..!

உண்மைத்தமிழன் said...

கல்வெட்டு said...

மாற்றத்தை விரும்புவர்களுக்கே மாற்றம் வரும். அப்படி வேண்டும் மக்கள், அவர்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தெருவில் திரண்டிருப்பார்கள். அமெரிக்காவில் விஸ்கான்சன் மாநிலத்தில் சட்ட சபையையிலேயே படுத்து உறங்கும் அளவிற்கு மக்கள் போராட்டம் நடத்தினார்கள். வெற்றியோ தோல்வியோ மக்கள் எத்தனை போராட்டங்களில் பெருந்திரளாகப் பங்கு கொண்டுள்ளார்கள்?
-ஆட்டோக்காரர் பிரச்சனைக்கு ஆட்டோக்காரர் மட்டும்
-ஆசிரியர் பிரச்சனைக்கு ஆசிரியர் மட்டும்
-கோவிலில் நுழையமுடியா தலித் பிரச்ச்னைக்கு தலித்மட்டும்
-மாணவர் பிரச்சனைக்கு மாணவர்கள் மட்டும் (பெற்றோர்கள் கூட கலந்து கொள்வது இல்லை)
-மீனவர் பிரச்சனைக்கு மீனவர் மட்டும்....
இப்படி தன்வீடு எரியாதவரை பக்கத்து வீட்டுக்காரன் சாவதைப் பற்றி கவலைப்படாத தேசம். இது சபிக்கப்பட்ட நாடு.]]]

உண்மைதான் கல்வெட்டு அண்ணே.. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்..!

நாட்டு மக்கள் திருந்தாதவரையில் அரசியல்வியாதிகள் திருந்தப் போவதில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[Shankar said...

You have hit the nail on its head. You have written 100 % right. Word for word you have matched my thoughts. It will be political suicide if jaya does not avail this chance to uproot MK. I appreciate for bringing out this very eye opening piece. I shall forward tis to as many people as I can in India before they go for polls. Your language and style in arresting. There is sincerity and concern in you rapproach. If hopes were duped, then fears come true.]]]

மிக்க நன்றிகள் ஸார்.. இன்னும் பல பேருக்கும் இதனை அனுப்பி வையுங்கள்.. பலரும் படித்துப் பார்த்து அதில் ஒருவராவது போராடும் குணத்தோடு வெளிவரட்டும்!

உண்மைத்தமிழன் said...

[[[palani said...

மிக சரியான பார்வைங்கோ..]]]

நன்றிங்கோ பழனி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல அலசல், வைகோவை வெளியேற்றியது, ராஜகுரு-சோ ஆலோசனையாக இருக்கும்.]]]

இருக்காது. இப்போதைக்கு செய்ய வேண்டாம் என்று மட்டுமாவது சொல்லியிருப்பார். ராஜகுருவின் பொது எதிரி இப்போதைக்கு கருணாநிதிதான். பிரபாகரன் இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்நங்கை said...

கல்வெட்டை வரிக்கு வரி வழிமொழிகின்றேன். சூடு சொரணையற்ற ஜென்மங்கள்தான் தமிழக வாக்காளர்கள் இல்லையென்றால் திருடன் என தெரிந்தும் கருணாநிதிக்கும் திருடி எனத் தெரிந்தும் ஜெயலலிதாவுக்கும் புரியாணிக்கும் குவாட்டருக்கும் ஆசைப்பட்டு தன்மானத்தை விற்பவர்கள் இவர்கள்.]]]

என்ன செய்வது..? நம் தலையெழுத்து..! அரசியல்வியாதிகளைத் திருத்துவதற்கு முன்பு மக்களைத் திருத்த வேண்டியிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

தன்னுடைய தகுதி என்னவென்று தெரியாமல் வாழும் தமிழர்கள் மத்தியில் இது போன்ற வியாதிகள்தான் நமக்குத் பெருந்தலையாக தெரியும்.
கெட்டவன் கெட்டுப் போனால் எதிரிக்கு கிட்டிடும் ராஜயோகம். இது எதற்காக சொல்லியுள்ளார்கள் என்பதை நண்பர்களிடம் கேட்டுப் பாருங்க. இதுதான் அன்று முதல் இன்றுவரையிலும் கலைஞருக்கு உதவிக் கொண்டு இருப்பது.
திருந்தாத ஜென்மங்கள் வாழ்ந்தென்ன லாபம் உண்மைதமிழா?]]]

சாவும் வர மாட்டேங்குதே..! நல்ல மனிதர்களெல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்களே.. இப்படியும் ஒரு கெட்ட காரியத்தைச் செய்து வைத்திருக்கிறான் முருகன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜாக்கி சேகர் said...

அண்ணே.. சத்தியமா சொல்லறேன் அண்ணே ஒரு நடுநிலையான ஆதங்கத்தை கொட்டி இருக்கிங்க. ரொம்ப ரொம்ப அற்புதம். நான் பின்னுட்டம் இடுவது ரொம்பவும் குறைவு. ஆனா இந்த பதிவு என்னை போட வைக்குது. அதே போல பின்னுட்டங்களில் மணி என்பவர் எழுதி இருக்கும் வரிகள் அத்தனையும் 100க்கு 100 உண்மை... அற்புதம்...]]]

வாராது மணிபோல் வந்த தம்பியின் வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Namy said...
Tamil nadu people ready to sell their vote to DMK OR ADMK. So dont bother about their fate, 'vinai vidaippavan vinai aruppan'. Jaya also make easy pathway for DMK achive his goal.]]]

மக்கள் மாற மாட்டார்களா என்கிற ஆதங்கம் நம் எல்லோருக்குள்ளும் உண்டு..! இப்படி காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் மக்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[வெத்து வேட்டு said...
ஜெயலலிதா பொட்டி ஏதாச்சும் வாங்கிச்சோ தெரியாது.]]]

ஹா.. ஹா.. ஹா.. நோ சான்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[sasibanuu said...

அருமையான அலசல். அருமை. அருமை ....]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி..

உண்மைத்தமிழன் said...

[[[சிவா said...

நண்பர்களே, மனம் தளராதீர்கள். சில சமயம் நமக்கு சோதனை வருவது கூட நமக்கு நன்மையில் முடியலாம். இந்த அதிமுக கூட்டணி கௌரவமான நிலையில் தொடர்ந்தால் சரி. இல்லை, மூணாவது அணி வந்தால் முழு மூச்சுடன் அதன் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இதைதான் நானும் எனது பதிவில் வலியுறுத்தியிருக்கிறேன். குறைந்தபட்சம் அடுத்து ஆட்சி அமைக்கும் அரசின் குடுமி இந்த மூன்றாவது அணியின் கையில் இருக்க வேண்டும்.]]]

இதற்கு மக்கள்தான் முன் வர வேண்டும்..! ஓட்டுப் போடுவார்களா என்று பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[முகமூடி said...
பொட்டில் அறைந்தாற் போல் சொல்லிவிட்டிர்கள்.]]]

வேற வழியில்லண்ணேண்....

உண்மைத்தமிழன் said...

[[[KASBABY said...

Fantastic.]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

தமிழக மக்கள் திருந்தி தாத்தாவையும், அம்மையையும் வீட்டுக்கு அனுப்பணும். செய்வாங்களா மக்கள்!!! தற்போதைய நிலையில் 3-வது அணி உருவானால் தாத்தா-தான் மீண்டும் சி.எம். தமிழ்நாடு நாறிப் போகும்.]]]

வேறு என்ன செய்ய? தி.மு.க., அதிமுக இருக்கும்வரையில் ஏதாவது ஒன்றை வைத்துத்தான் இன்னொன்றை வீழ்த்த வேண்டியிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...
ஊற்றிக் கொடுத்தவருக்கு
போதை ஏறிக்கிச்சி
வாங்கிக் குடித்தவருக்கு
போதை கலைஞ்சிருச்சி
From : http://writersuryakumaran.blogspot.com/2011/03/3.html]]]

ஹா.. ஹா.. செம டைமிங்கான கவிதை..! சூப்பர் பிரகாஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[Kumar said...
arivu jeevigala! jeyyithuvittu thathavidam adaikkalam thedubavargalukku alli kudukka venduma????]]]

பாட்டாளி மக்கள் கட்சிதான் இந்த வேலையைச் செய்யும். இந்தக் கூட்டணியில் இருந்து வெளியேற்றினால்தான் இவர்கள் செய்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[muthu said...

அறிவு ஜீவிகளாக நினைத்துக் கொண்டு இதுபோல் கருத்து சொல்லி ஏன் அணிகளை ஆதரிக்கத் துடிக்கிறீர்கள்.? அந்த அந்தத் தொகுதியில் போட்டியிடும் நல்லவருக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கள்.]]]

அப்படிச் செய்தால் கிடைத்த கேப்பில் இவர்களே மீண்டும் வந்துவிடுவார்கள் முத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//மாற்றத்தை விரும்புவர்களுக்கே மாற்றம் வரும். //

அழகாய் சொன்னீர்கள் கல்வெட்டு!]]]

கல்வெட்டு என்றைக்குமே இப்படித்தான் பேசுவார்..!

R.Gopi said...

இதுவரைக்கும் நம்ம அகில உலக அரசியல்வாதி டி.ராஜேந்தர் ஒரு சவுண்டும் விடலியேன்னு நெம்ப வருத்தத்துல இருக்கேன் வாத்யாரே...

டி.ராஜேந்தர் கேப்டன் மேல் பாசம் கொண்டு, டாக்குடரு கேப்டன் அவர்களுக்கு, எழுதிய கவிஜ இதோ :

இரவினில் பிராந்தி
கரங்களில் ஏந்தி
தேடுவது சாந்தி
சுவைக்கவோ பூந்தி
காலையில் வாந்தி
ஆக முடியுமா காந்தி

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

இதுவரைக்கும் நம்ம அகில உலக அரசியல்வாதி டி.ராஜேந்தர் ஒரு சவுண்டும் விடலியேன்னு நெம்ப வருத்தத்துல இருக்கேன் வாத்யாரே...

டி.ராஜேந்தர் கேப்டன் மேல் பாசம் கொண்டு, டாக்குடரு கேப்டன் அவர்களுக்கு, எழுதிய கவிஜ இதோ :

இரவினில் பிராந்தி
கரங்களில் ஏந்தி
தேடுவது சாந்தி
சுவைக்கவோ பூந்தி
காலையில் வாந்தி
ஆக முடியுமா காந்தி]]]

யாரும் அவரைக் கூப்படிலியே.. அதுனால அமைதியா இருக்காரு. இப்போ காசு செலவழிக்க வேண்டாம்னு வீட்டுல கண்டிஷனா சொல்லிட்டதால வேறென்ன செய்வார் அவரு..?

சூர்யகதிர் said...

>>ஈழப் பிரச்சினை ஒன்றுதான் வைகோ இன்றைக்கு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கவிடாமல் வைத்தது என்பது வரலாற்று உண்மை..!

இது ரொம்ப ஓவர் நண்பரே.

இப்படியே போனால் இன்னும் பத்து வருடம் கழித்து சீமானும் வாய் கிழிய கத்தி ஒன்றுக்கும் பெறுமதி இல்லாத ஒரு கட்சி நடத்தி கொண்டு இருப்பார், அப்பொழுதும் அவருடைய ஈழ ஆதரவு தான் கரணம் என்று கூறுவீர்கள் போல் உள்ளது.

என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால் தயவு செய்து புது புது வரலாறுகளை உருவாக்காதீர்கள்.