கலைஞரின் தந்திரத்தில் சிக்கியிருக்கும் காங்கிரஸ்..!

15-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சோனியாவின் தயவால் 63 தொகுதிகளை விடாப்பிடியாகப் பெற்றுக் கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியினரால் கலைஞரிடமிருந்து அவர்களுக்கேற்ற தொகுதிகளைப் பெறுவதற்குள் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது..!

தமிழக காங்கிரஸ் கட்சியில் தனிப்பெரும் தலைவர்கள் பட்டியலில் வாசன், சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ற மூன்று பேர்தான் இதுவரையில் இருந்தனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பதால் தங்கபாலு தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்தார். அதுவரையில் வாசன் கோஷ்டியில் இருந்து ஒரு சிலர் பிரிந்து தங்கபாலுவின் பின்னால் போய்விட்டனர். சிதம்பரம் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்த மாத்திரத்திலேயே தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்தவர் மாதர் குல மாணிக்கம் ஜெயந்தி நடராஜன்.

சிதம்பரம் என்றாலே  ஜெயந்திக்கு இன்றுவரையிலும் எட்டிக் காய்..! இன்றைய தேதி வரையிலும் ஜெயந்தியின் கோஷ்டியில் இருக்கும் பெயர் சொல்லும்படியான ஒரேயொருவர் மதுராந்தகம் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி மட்டும்தான். தன் வீட்டு வாசல்படிவரையில் ஒரு தொண்டனைக் கூட நிற்க விடாத அளவுக்கு தொண்டர்களிடத்தில் நெருக்கம் காட்டும் ஜெயந்திக்கு இப்படியொரு மகளிரணி பிரமுகர் கிடைத்ததே பெரிய விஷயம்தான்.

தன்னுடைய பிறந்த நாளுக்காக போஸ்டர் அடித்து சென்னை முழுக்க தனது பெயரை பிரபலப்படுத்திய ஒரே காரணத்திற்காக 2006 சட்டசபைத் தேர்தலில் தனது கோட்டாவில் காயத்ரிதேவியை மதுராந்தகத்தில் நிற்க சீட் வாங்கிக் கொடுத்தார் ஜெயந்தி.

இளங்கோவன் அண்ணாச்சிக்கு இன்றுவரையிலும் தமிழகம் முழுவதும் பரவலாக தொண்டர்கள் செல்வாக்கும், தலைவர்கள் ஆதரவும் உண்டு. வெட்டு ஒன்று.. துண்டு இரண்டாக காமராஜர் காலத்து காங்கிரஸை நோக்கி தமிழக காங்கிரஸை லேசாக நகர்த்திய பெருமை இவரையே சாரும். ஆனாலும் இன்றைய கூட்டணி அரசுக்கு இவருடைய பேச்சுக்கள் தினம்தோறும் தலைவலியைக் கூட்டித் தந்ததால் அவசரத்துக்கு மட்டுமே பயன்படக்கூடிய தலைவராக இப்போதும் அக்கட்சியின் தலைமைப் பீடத்தால் கவனிக்கப்படுகிறார்.

தமிழ் மாநில காங்கிரஸை, அகில இந்திய காங்கிரஸுடன் கடலில் கரைத்த பெருங்காயமாக கரைத்துவிட்ட பாவத்திற்காக ஜி.கே.வாசனை எப்படி வேண்டுமானாலும் திட்டித் தீர்க்கலாம். அந்தக் கட்சி இப்போதும் தனித்தே நின்றிருந்தால் இன்றைக்கு விஜய்காந்துக்கே இத்தனை மவுசு வந்திருக்காது.. கட்சியின் சொத்துக்களையும், உடனடி பதவிகளையும் அடைய வேண்டிய கட்சியினரின் வற்புறுத்தலினாலும் த.மா.கா.வை தாய்க் கட்சியுடன் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வாசனுக்கு..!

இப்படி ஜல்லிக்கட்டு விளையாடும் இந்தத் தலைவர்களுக்கிடையில் சிதம்பரத்திற்கு முன்பு நெருக்கமாக இருந்தவர்கள் புரசைவாக்கம் ரங்கநாதன், மற்றும் காட்டுமன்னார்கோவில் வள்ளல்பெருமான் ஆகியோர்தான். இதில் ரங்கநாதன் தி.மு.க.வில் சேர்ந்து எம்.எல்.ஏ.வும் ஆகிவிட்டார். வள்ளல்பெருமான் மட்டுமே பாக்கி..! இப்போதைக்கு சிதம்பரம் தலையசைத்தால் சீட்டு கிடைக்கும் என்பதால் அவரது கோஷ்டியில் சில முன்னாள்களும், இன்னாள் எம்.எல்.ஏ.க்களும் இணைந்துள்ளார்கள்.

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் தங்கபாலுவின் தற்போதைய ஒரேயொரு லட்சியமே தனது மனைவியை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி எம்.எல்.ஏ.வாக்கிவிட வேண்டும் என்பதுதான்.

சென்ற தேர்தலிலேயே அதற்கான முஸ்தீபுகளை செய்து பார்த்தார். ஆனால் இளங்கோவன் அப்போது நடந்த நெல்லை பொதுக்கூட்டத்தில் “அப்படியொன்று நடந்தால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்..” என்று போட்ட போட்டில் கடைசி நேரத்தில் இளங்கோவனை பகைத்துக் கொள்ள விரும்பாமல் குலாம்நபி ஆசாத் அதற்கு தடை போட்டுவிட்டார். ஆனால் இப்போது துணிந்து தனது மனைவிக்காகவே ஒரு தொகுதியை கேட்டுத் தொங்கிக் கொண்டிருக்கிறார் தங்கபாலு..!

இப்படி ஆளுக்கொரு கெரகங்களாக இருக்கும் நிலையில் இளங்கோவனைத் தவிர மற்றவர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதிகளை அடையாளம் காணும் குழுவில் செயல்பட்டுள்ளார்கள்.


இருக்கின்ற 63 தொகுதிகளில் வாசன் கோஷ்டிக்கு 17, சிதம்பரம் கோஷ்டிக்கு 16, தங்கபாலு அணிக்கு 12, இளங்கோவன் அணிக்கு 4, ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜெயக்குமார் அணிக்கு தலா 2, இவர்கள் தவிர மிச்சம் இருக்கின்ற 10-ம் இளைஞர் காங்கிரஸுக்கு என்று பிரிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

ராகுல்காந்தியின் நேரடி கண் பார்வையில் இருப்பதால் இளைஞர் காங்கிரஸாருக்கான தேர்வில் மற்றவர்கள் தலையிட முடியாது என்றாலும் அவர்களுக்கேற்ற தொகுதிகளை கண்டறிந்து கொடுப்பதில் இவர்களது பங்கு முக்கியமானதுதான்..!

இந்தப் பேச்சுவார்த்தையின்போது துவக்கத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை அப்படியே திருப்பித் தருகிறோம் என்று உறுதியளித்தது தி.மு.க. மிச்சம், மீதியிருக்கும் தொகுதிகளிலும், மறு சீரமைப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொகுதிகளில் இருந்து காங்கிரஸுக்கு தேவையானவற்றை ஒதுக்குவதிலும்தான் பெரும் சிக்கல்..!

ஆனால் இவர்களது சிக்கலைவிடவும் தி.மு.க. தலைமை ஏற்படுத்திய சிக்கல்தான் மிகவும் தந்திரமானது. காங்கிரஸுடன் பேசுவதற்கு முன்பாகவே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சிகளுடன் பேசி அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை கையில் வைத்துக் கொண்டுதான் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

கூடவே, தனது கட்சியின் நேர்காணலையும் கச்சிதமாகத் தொடர்ந்து நடத்தியபடியே இருந்த கலைஞர், தாங்கள் நிற்கவிருக்கும் தொகுதிகளுக்குத் தோதான ஆட்கள் கிடைக்கின்றவரையில் பேச்சுவார்த்தையின் வெற்றியை ஒத்திப் போட்டுக் கொண்டே போய்விட்டார்.

காங்கிரஸூக்கான ஒதுக்கீட்டில் பிரச்சினையான 15 தொகுதிகளைப் பற்றிப் பேச்செடுத்தபோதுதான் விடுதலைச் சிறுத்தைகள்., பாமக, முஸ்லீம் லீக் என்று இவைகளின் விருப்பப் பட்டியலும் காண்பிக்கப்பட்டு வேண்டாமே என்று இழுத்திருக்கிறார்கள். அவர்கள் கேட்பார்கள். கேட்டால் கொடுத்திரணுமா என்று நாம் கேட்கலாம். ஆனால் காங்கிரஸ் சார்பில் பேசிய அடிமைகள் அப்படி கேட்டிருக்க மாட்டார்கள்..!

ராதாபுரம், திருத்தணி, மாதவரம், ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் போன்ற காங்கிரஸ் பெல்ட் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் பிரதிநிதிகள் கேட்கவே இல்லை என்று இளங்கோவன் நேற்று குற்றம்சாட்டியுள்ளார். வாசனும், சிதம்பரமும் முயற்சி செய்து கேட்ட சில தொகுதிகளை குழுவில் இருந்த தங்கபாலு வற்புறுத்தவில்லை என்று அறைக்குள் நடந்ததை அம்பலப்படுத்தியிருக்கிறார் இளங்கோவன்.

இருக்கின்ற ஐந்து பேரில் நிச்சயம் வாசன் தரப்பில் இருந்துதான் இந்தத் தகவல் இளங்கோவனுக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் சமீப காலமாக வாசனுடன் இளங்கோவன் கொஞ்சம் நெருக்கம் காட்டி வருகிறார். தற்போதைய சட்டசபைத் தேர்தலில் இளங்கோவன், தனது கோட்டாவை கூட வாசன் தரப்பே நிரப்பிக் கொள்ளலாம் என்று ஏதோ மறைமுகமான அக்ரிமெண்ட் போட்டிருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் பேசப்படுகிறது..!


இப்படி அவரவர் ஆதரவாளர்களுக்காகவே ஒரு சில தொகுதிகளை விடாப்பிடியாக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டதையே சாக்காக வைத்து பேச்சுவார்த்தையை இழுத்தடித்திருக்கிறது தி.மு.க.

இடையிலேயே சரத்குமாரை இரவோடு இரவாக பதவி நீக்கம் செய்து உதவியதற்காக என்.ஆர்.தனபாலனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கீடு செய்து வைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸுக்கு செக் வைத்திருக்கிறது.

இறுதிக் கட்டத்தில் விரும்பியோ, விரும்பாமலோ காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் தி.மு.க. கொடுக்க விரும்பிய தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் தலையில் கட்டப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதி. நாளை பட்டியல் வெளியானால் எல்லாம் தெரிந்துவிடும்..!

தங்களுக்குச் செல்வாக்கில்லாத தொகுதிகளினால், தோற்கப் போகிறோம் என்று தெரிந்தும் மேலிடம் கொடுக்கும் தேர்தல் செலவுக்கான பணத்தில் கொஞ்சம் அபேஸ் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் காங்கிரஸ்காரர்களும் இத்தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க பார்க்கலாம். ஆனால் தோற்கவே வேண்டும்..!

கூட்டணியில் இருந்து விலகுகிறேன் என்று அஸ்திரத்தை வீசியும் அசைந்து காட்டாத சோனியாவின் மீதிருக்கும் கோபத்தில், கலைஞர் செய்திருக்கும் இந்த உள்குத்து, அப்படியே தேர்தலில் எதிரொலித்து இந்தக் கூட்டணிக்கு பஞ்சரை ஏற்படுத்தினால் தமிழ்நாட்டுக்கும், நமக்கும் மிக மிக நல்லதுதான்..!

35 comments:

gulf-tamilan said...

காங்கிரசுக்கு இந்த முறை பீகாரை விட மோசமான தோல்வி கிடைக்கும் பாருங்கள்!!

இராமசாமி said...

63 ல 3வது ஜெயிப்பாங்களா அண்ணாச்சி :)

இராமசாமி said...

அது எப்படி அண்ணாச்சி உங்களாள மட்டும் பதிவுக்கு பதிவு மைனஸ் ஒட்டு வாங்க முடியுது :)

இராமசாமி said...

அண்ணாச்சி பஸ்ல போட்ருந்த போட்டோவ புரொபைல் போட்டோவா மாத்திருங்க அண்ணாச்சி :) ரொம்ப நல்லா இருக்கும் :)

ஆனந்தன் said...

அன்பு நண்பர் உண்மை? தமிழனுக்கு

என்ன எழுதுகிரோம் என்பதை தயவு செய்து கவனிக்கவும்.
சிதம்பரம் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்த மாத்திரத்திலேயே தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்தவர் மாதர் குல மாணிக்கம் ஜெயந்தி நடராஜன்.

சிதம்பரத்திற்கு மிக நெருங்கிய உறவினராக இருந்தும், சிதம்பரம் என்றாலே இவருக்கு எட்டிக் காய்..!

சிதம்பரத்திர்க்கும்,இவருக்கும் என்ன உறவு??????? விளக்க முடியுமா?

இடையிலேயே சபைக்கு வந்த கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 சீட்???????????????,

அது அ.தி.மு.க. வில் தனியரசுக்கு ஒதுக்கப்பட்டது அண்ணாச்சி

கூட்டணியில் இருந்து விலகுகிறேன் என்று அஸ்திரத்தை வீசியும் அசைந்து காட்டாத சோனியாவின் மீதிருக்கும் கோபத்தில், கலைஞர் செய்திருக்கும் இந்த உள்குத்து, அப்படியே தேர்தலில் எதிரொலித்து இந்தக் கூட்டணிக்கு பஞ்சரை ஏற்படுத்தினால் தமிழ்நாட்டுக்கும், நமக்கும் மிக மிக நல்லதுதான்..!

இதை மட்டுமே உங்களோடு நானும் சேர்ந்து ஆமோதிக்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உ.தமிழன் அண்ணே...!

உங்கள் விருப்பமே எமது விருப்பமும்!

ஜெயந்தி நடராசன் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகள்...!
நிறைய நாடாளுமன்ற அனுபவம் உடைவர். இவர் எந்தவகையில் பி.சிதம்பரத்துக்குக்கு உறவினர்?

//இதில் ரங்கநாதன் தி.மு.க.வில் சேர்ந்து எம்.எல்.ஏ.வும் ஆகிவிட்டார்.//

அப்படியா?

//
இடையிலேயே சபைக்கு வந்த கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 சீட், சரத்குமாரை இரவோடு இரவாக பதவி நீக்கம் செய்து உதவியதற்காக என்.ஆர்.தனபாலனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கீடு செய்து வைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸுக்கு செக் வைத்திருக்கிறது.
//

இரண்டாவது மேட்டர் சரியான தகவல்!

//கலைஞர் செய்திருக்கும் இந்த உள்குத்து, அப்படியே தேர்தலில் எதிரொலித்து இந்தக் கூட்டணிக்கு பஞ்சரை ஏற்படுத்தினால் தமிழ்நாட்டுக்கும், நமக்கும் மிக மிக நல்லதுதான்..!//

இதத்தான் எல்லோரும் விரும்புறோம்!

பார்வையாளன் said...

அரசியல் போதும் ணே . சினிமா பற்றி எழுதுங்க . இளம் மொட்டுக்கள் என்ற உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள ஆவல்

♔ம.தி.சுதா♔ said...

அரசியல்வாசிகளை வாசிச்ச வாசிச்சு இப்ப எல்லாமே வெறுத்திடுச்சு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

ராஜ நடராஜன் said...

காங்கிரஸ் மட்டும் மண்ணைக் கவ்விடுச்சுன்னா
பழனிமலை முருகன் பேர்ல பதிவுலகம் சார்பா உங்களுக்கு ஒரு மொட்டை போட்டு விடலாம்:)

உண்மைத்தமிழன் said...

என்னங்கப்பா இது..? தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கிறதுக்குள்ள வலையுலகத்துல பிரச்சாரம் ஆரம்பிச்சாச்சா..?

அதுலேயும் காங்கிரஸுக்கு ஆதரவாகவா..? 9 மைனஸ் ஓட்டு குத்தியிருக்கீங்க..? ஆச்சரியமா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[gulf-tamilan said...
காங்கிரசுக்கு இந்த முறை பீகாரைவிட மோசமான தோல்வி கிடைக்கும் பாருங்கள்!!]]]

நானும் இதைத்தான் விரும்புகிறேன்.. ஆனால் அந்தந்த தொகுதிகளில் எதிரணியில் நிற்பவர்கள் யார் என்பதையும் பொறுத்துதான் தோல்வி கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...

63-ல 3-வது ஜெயிப்பாங்களா அண்ணாச்சி :)]]]

ஜெயிக்கக் கூடாதுன்னு முருகனை வேண்டிக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...
அது எப்படி அண்ணாச்சி உங்களாள மட்டும் பதிவுக்கு பதிவு மைனஸ் ஒட்டு வாங்க முடியுது :)]]]

யாரோ பிளான் பண்ணி விளையாடுறாங்கன்னு நினைக்கிறேன்..! நல்லாயிருக்கட்டும் அவங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...

அண்ணாச்சி பஸ்ல போட்ருந்த போட்டோவ புரொபைல் போட்டோவா மாத்திருங்க அண்ணாச்சி :) ரொம்ப நல்லா இருக்கும் :)]]]

சரி.. மாத்திர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆனந்தன் said...

அன்பு நண்பர் உண்மை? தமிழனுக்கு

என்ன எழுதுகிரோம் என்பதை தயவு செய்து கவனிக்கவும். சிதம்பரம் தனிப் பெரும் தலைவராக உருவெடுத்த மாத்திரத்திலேயே தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்தவர் மாதர் குல மாணிக்கம் ஜெயந்தி நடராஜன்.]]]

இது த.மா.கா.வில் ஜெயந்தி தனி ஆளுமையுடன் இருந்தபோது..!

[[[சிதம்பரத்திற்கு மிக நெருங்கிய உறவினராக இருந்தும், சிதம்பரம் என்றாலே இவருக்கு எட்டிக் காய்..!

சிதம்பரத்திர்க்கும், இவருக்கும் என்ன உறவு??????? விளக்க முடியுமா?]]]

மன்னிக்க வேண்டுகிறேன். தமாகா உருவான சமயத்தில் ஜூ.வி.யில் எழுதியிருந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் நானும் இதனை இப்போது எழுதிவிட்டேன். இப்போது மேலும் விசாரித்தேன். நெருங்கிய குடும்பப் பழக்கம் மட்டுமே உண்டு என்றார்கள். தவறுக்குப் பொறுத்தருள்க..!

[[[இடையிலேயே சபைக்கு வந்த கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 சீட்???????????????,]]]

இதுவும் தவறுதான்.. ஆத்தா லிஸ்ட்டை இதிலே அவசரத்தில் திணித்துவிட்டேன்..!

[[[கூட்டணியில் இருந்து விலகுகிறேன் என்று அஸ்திரத்தை வீசியும் அசைந்து காட்டாத சோனியாவின் மீதிருக்கும் கோபத்தில், கலைஞர் செய்திருக்கும் இந்த உள்குத்து, அப்படியே தேர்தலில் எதிரொலித்து இந்தக் கூட்டணிக்கு பஞ்சரை ஏற்படுத்தினால் தமிழ்நாட்டுக்கும், நமக்கும் மிக மிக நல்லதுதான்..!

இதை மட்டுமே உங்களோடு நானும் சேர்ந்து ஆமோதிக்கிறேன்]]]

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கும், அதனை மிகத் தன்மையோடு சொன்னதற்காகவும் மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உ.தமிழன் அண்ணே...! உங்கள் விருப்பமே எமது விருப்பமும்!]]]

எனது, உங்களது மட்டுமல்ல நம் அனைவரின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் ஜோதி..!

[[[ஜெயந்தி நடராசன் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகள்...!
நிறைய நாடாளுமன்ற அனுபவம் உடைவர். இவர் எந்த வகையில் பி.சிதம்பரத்துக்குக்கு உறவினர்?]]]

தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்..!

//இதில் ரங்கநாதன் தி.மு.க.வில் சேர்ந்து எம்.எல்.ஏ.வும் ஆகிவிட்டார்.//

அப்படியா?//

ஆமாம்.. புரசைவாக்கத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அவர்தானே..? இல்லியா..?

//கலைஞர் செய்திருக்கும் இந்த உள்குத்து, அப்படியே தேர்தலில் எதிரொலித்து இந்தக் கூட்டணிக்கு பஞ்சரை ஏற்படுத்தினால் தமிழ்நாட்டுக்கும், நமக்கும் மிக மிக நல்லதுதான்..!//

இதத்தான் எல்லோரும் விரும்புறோம்!]]]

தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஜோதி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
அரசியல் போதும்ணே. சினிமா பற்றி எழுதுங்க. இளம் மொட்டுக்கள் என்ற உலக சினிமா பற்றி தெரிந்து கொள்ள ஆவல்.]]]

அப்படீன்னு ஒரு படமா..? எந்தத் தியேட்டர்ல ரிலீஸ் ஆயிருக்கு..? தகவல் சொல்ல முடியுமா? நேரம் கிடைத்தால் போய் வருகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[♔ம.தி.சுதா♔ said...

அரசியல்வாசிகளை வாசிச்ச வாசிச்சு இப்ப எல்லாமே வெறுத்திடுச்சு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா]]]

ஆனால் காசை அள்ளுவதில் அவர்கள் இன்னமும் ஆசையாக உள்ளார்களே சுதா..! அதுவரையிலும் நாம் அவர்களைப் பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
காங்கிரஸ் மட்டும் மண்ணைக் கவ்விடுச்சுன்னா பழனிமலை முருகன் பேர்ல பதிவுலகம் சார்பா உங்களுக்கு ஒரு மொட்டை போட்டு விடலாம்:)]]]

தாராளமா.. மொட்டை போட நான் ரெடி..!

kama said...

எங்கள் இனத்தை கொன்ற காங்கிரஸ் வேட்பாள நாய்களே வாருங்கள்.. எந்த அரசியல் கட்சியை சேராத தனிநபர் நானே குறைந்தபட்சம் 1000 ஓட்டுக்களை உங்கள் எதிர்வேட்பாளருக ்கு வாக்களிக்க தனி நபராக முயற்சி செய்வேன். உங்களை கருவருக்கமால் என்னை போன்ற ஈழ தாகம் கொண்ட ஒருவன் ஓயமாட்டான்,

உண்மைத்தமிழன் said...

[[[kama said...

எங்கள் இனத்தை கொன்ற காங்கிரஸ் வேட்பாள நாய்களே வாருங்கள்.. எந்த அரசியல் கட்சியை சேராத தனி நபர் நானே குறைந்தபட்சம் 1000 ஓட்டுக்களை உங்கள் எதிர் வேட்பாளருக்கு வாக்களிக்க தனி நபராக முயற்சி செய்வேன். உங்களை கருவருக்கமால் என்னை போன்ற ஈழ தாகம் கொண்ட ஒருவன் ஓய மாட்டான்.]]]

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள். நானும் உங்களைப் பின் தொடர்கிறேன் நண்பரே..!

Ganpat said...

யாருக்கு ஓட்டளிப்பது?

இலக்கு:தி.மு.க மற்றும் அ.தி மு க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

வழிமுறை:

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து,உங்கள் முதல தேர்வு:விஜயகாந்த் கட்சி
இரண்டாம் தேர்வு:CPI
மூன்றாம் தேர்வு:CPI(M)
நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
ஐந்தாம் தேர்வு:காங்கிரஸ்
ஆறாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால் ,சின்ன சனியனுக்கு ஓட்டுப்போடுங்கள்

Ganpat said...

மன்னிக்கவும்.அவசரத்தில் ஒரு தவறு நேர்ந்துவிட்டது:
சரியான பதிவு:
ஐந்தாம் இடத்திற்கு ராமதாஸ் கட்சியும்,ஆறாம் இடத்திற்கு காங்கிரஸ் கட்சியும் மாற்றிக்கொள்ளவும்
நன்றி

இரவு வானம் said...

விரிவான அலசல் சார்...

Damodar said...

VS BABU is present MLA of Purasai

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

ttpian said...

63 PALI AADUKAL:
KOVINDHA!
KOVINDHAAAAAAA

We The People said...

Jayanthi Natarajan is not daughter to of Bakthavatsalam!! FYI, she is grand-daughter!!!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

யாருக்கு ஓட்டளிப்பது?

இலக்கு:தி.மு.க மற்றும் அ.தி மு க பிடியிலிருந்து நம் மாநிலத்தை விடுவிப்பது:

வழிமுறை:

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து,உங்கள் முதல தேர்வு:விஜயகாந்த் கட்சி
இரண்டாம் தேர்வு:CPI
மூன்றாம் தேர்வு:CPI(M)
நான்காம் தேர்வு:வை.கோ கட்சி
ஐந்தாம் தேர்வு:காங்கிரஸ்
ஆறாம் தேர்வு:ராமதாஸ் கட்சி
ஒரு வேளை இரண்டு சனியங்களும் நேருக்கு நேர் போட்டி இட்டால்,சின்ன சனியனுக்கு ஓட்டுப் போடுங்கள்]]]

நன்றி கண்பத்.. இந்த வழிமுறை எனக்கும் பிடித்திருக்கிறது. வழிமொழிகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

மன்னிக்கவும். அவசரத்தில் ஒரு தவறு நேர்ந்துவிட்டது:
சரியான பதிவு:
ஐந்தாம் இடத்திற்கு ராமதாஸ் கட்சியும்,ஆறாம் இடத்திற்கு காங்கிரஸ் கட்சியும் மாற்றிக் கொள்ளவும்
நன்றி]]]

-))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[இரவு வானம் said...

விரிவான அலசல் சார்...]]]

இல்லை.. இல்லை.. கொஞ்சம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Damodar said...

VS BABU is present MLA of Purasai]]]

ஆமாமாம்.. மீண்டும் ஒரு தவறு செய்துவிட்டேன். மன்னிக்கணும். ரங்கநாதன் தற்போது வில்லிவாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்..!

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html

கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி -

சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே..]]]

யார் சாமி நீங்க..? இப்படி போட்டுத் தாக்குறீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[ttpian said...

63 PALI AADUKAL:
KOVINDHA!
KOVINDHAAAAAAA]]]

கோவிந்தா ஆகணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[We The People said...
Jayanthi Natarajan is not daughter to of Bakthavatsalam!! FYI, she is grand-daughter!!!]]]

யெஸ்.. யெஸ்.. பக்தவச்சலத்தின் மகள் சரோஜினி வரதப்பன். அவரின் மகள்தான் ஜெயந்தி நடராஜன்..!

அண்ணே.. வருஷமாச்சு நீங்க என் வீட்டை எட்டிப் பார்த்து..? சொகமா..? ஓய்வா இருந்தா போன் செய்யலாமே..? பேசுவோம்..!