சென்னை வலைப்பதிவர்களுக்கு அறிவிப்பு - நந்தி - சினிமா சிறப்புக் காட்சி

16-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நல்லதோ, கெட்டதோ நம்மை மதித்து திரைப்படம் பார்க்க அழைக்கிறார்கள். சாதகமான விமர்சனத்தை எதிர்நோக்கி அல்ல. "நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எப்போதும்போல் முன் வையுங்கள். அவற்றை நாங்களும் அதுபோலவே எதிர்கொள்கிறோம். ஆனால் படம் பார்க்கத் தவறிவிடாதீர்கள்" என்று சொல்லி நமக்காக சிறப்புக் காட்சியொன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.'கல்லூரி' படத்தின் ஹிரோ அகில், மற்றும் 'ரேணுகுண்டா' படத்தில் நடித்திருக்கும் சனுஜா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து தமிழ்வாணன் இயக்கியிருக்கும், "நந்தி" என்னும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நாளை(17-02-2011) வியாழக்கிழமை, மாலை 6.30 மணிக்கு சென்னை தி.நகரில், 137, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட உள்ளது.

நேரம் கிடைக்கப் பெற்றவர்கள், பார்க்க விரும்பும் பதிவர்கள் அவசியம் வரவும். அனைவரையும் வரவேற்கிறோம்..!

நன்றி..!


தொடர்புக்கு : உண்மைத்தமிழன் : 9840998725 
                            ஜி.கெளதம் : 9789977899

24 comments:

உண்மைத்தமிழன் said...

நண்பர்களே.. திரையரங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4 பிரேம்ஸ் தியேட்டர் அல்ல.

தி.நகரில், 137, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட உள்ளது.

இது மீனாட்சி கல்லூரியில் இருந்து மேம்பாலம் ஏறி, இறங்கி வருகையில் சாலையின் வலது புறம் இருக்கிறது. அந்தச் சாலையில் நேராகச் சென்று இரண்டாவது பஸ் ஸ்டாப்பிற்கு சிறிது தூரத்தில் வலது புறம் திரும்பி மீண்டும் வந்தவழியில் திரும்பி வந்தால் ஒரு இரண்டாவது டாஸ்மாக் கடையைத் தாண்டியவுடன் இருக்கிறது. அருகிலேயே மகளிர் ஹாஸ்டலும் உள்ளது. விசாரித்து வரவும்..

Sukumar Swaminathan said...

// அருகிலேயே மகளிர் ஹாஸ்டலும் உள்ளது. விசாரித்து வரவும். //
ரைட்டு தல

ராம்ஜி_யாஹூ said...

படம் பார்க்க எல்லாம் அலைய முடியாது
உங்கள் விமர்சனப் பதிவு படித்தாலே போதும்
படம் பார்த்து பூரண உணர்வு வந்து விடும்

மோகன் குமார் said...

டாஸ்மார்க், லேடிஸ் ஹாஸ்டல் என்னமா அண்ணே வழி சொல்றீங்க

ரிஷி said...

சனுஜா - நான் பக்கத்துல நின்னு பார்த்து ரசிச்ச பொண்ணு! விருதுநகரில் ரேணிகுண்டா சூட்டிங் நடத்துனப்ப வந்திருந்துச்சு. அரக்குக் கலர் பாவாடை வெளிர்ன கலர்ல சட்டை போட்டு அழகா இருந்தது!! (சத்தியமா.. இப்போ என் வாயில ஜொள்ளு வழியல...!!! நம்புங்க..!)

எங்க தெருவில சைக்கிள்ல போறப்ப அடுத்த தெருவில சூட்டிங்க்காக போயிட்டிருந்தது அந்தப் பொண்ணு! பேசலாம்னு நினைச்சா.. எப்படிப் பேசறதுன்னு தெரியல..! விட்டுட்டேன்!

காலப் பறவை said...

கண்டிப்பாக வர முயற்சிக்கிறேன் ஜி

shanmugavel said...

விமர்சனம் எழுதுங்க,நல்லா இருந்தா பார்க்கிறேன்

Philosophy Prabhakaran said...

// இரண்டாவது டாஸ்மாக் கடையைத் தாண்டியவுடன் இருக்கிறது. அருகிலேயே மகளிர் ஹாஸ்டலும் உள்ளது. //

நல்லா கொடுக்குராங்கய்யா டீட்டெயிலு...

! சிவகுமார் ! said...

உலக கோப்பை கிரிக்கெட் அலையில் நல்ல படங்கள் கரை சேர வேண்டும்.

! சிவகுமார் ! said...

சனி அல்லது ஞாயிறு அன்று ஏன் படத்தை போடுவதில்லை? தயவு செய்து பதிவர்களுக்கான காட்சிகளை வார இறுதியில் போட்டால் நன்றாக இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[Sukumar Swaminathan said...

//அருகிலேயே மகளிர் ஹாஸ்டலும் உள்ளது. விசாரித்து வரவும். //

ரைட்டு தல]]]

ஆஹா.. காமெடிக்கு நானே காரணமாயிட்டனா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

படம் பார்க்க எல்லாம் அலைய முடியாது. உங்கள் விமர்சனப் பதிவு படித்தாலே போதும். படம் பார்த்து பூரண உணர்வு வந்து விடும்.]]]

அப்புறம் எப்படி ஸார் உங்களை சந்திப்பது..? வாங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...
டாஸ்மார்க், லேடிஸ் ஹாஸ்டல் என்னமா அண்ணே வழி சொல்றீங்க..]]]

ஹி.. ஹி.. எல்லாம் நம்ம ஆளுகளுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சனுஜா - நான் பக்கத்துல நின்னு பார்த்து ரசிச்ச பொண்ணு! விருதுநகரில் ரேணிகுண்டா சூட்டிங் நடத்துனப்ப வந்திருந்துச்சு. அரக்குக் கலர் பாவாடை வெளிர்ன கலர்ல சட்டை போட்டு அழகா இருந்தது!! (சத்தியமா.. இப்போ என் வாயில ஜொள்ளு வழியல...!!! நம்புங்க..!)

எங்க தெருவில சைக்கிள்ல போறப்ப அடுத்த தெருவில சூட்டிங்க்காக போயிட்டிருந்தது அந்தப் பொண்ணு! பேசலாம்னு நினைச்சா.. எப்படிப் பேசறதுன்னு தெரியல..! விட்டுட்டேன்!]]]

ரிஷி.. பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது..! சரி.. சரி.. என்ஜாய்..!

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...

கண்டிப்பாக வர முயற்சிக்கிறேன் ஜி.]]]

வாங்க.. வாங்க.. வரவேற்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[shanmugavel said...

விமர்சனம் எழுதுங்க, நல்லா இருந்தா பார்க்கிறேன்.]]]

இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

// இரண்டாவது டாஸ்மாக் கடையைத் தாண்டியவுடன் இருக்கிறது. அருகிலேயே மகளிர் ஹாஸ்டலும் உள்ளது. //

நல்லா கொடுக்குராங்கய்யா டீட்டெயிலு.]]]

இப்போ கரீக்ட்டா கண்டு பிடிச்சு வந்திருவியே தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...
உலக கோப்பை கிரிக்கெட் அலையில் நல்ல படங்கள் கரை சேர வேண்டும்.]]]

ரொம்ப கஷ்டம்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

சனி அல்லது ஞாயிறு அன்று ஏன் படத்தை போடுவதில்லை? தயவு செய்து பதிவர்களுக்கான காட்சிகளை வார இறுதியில் போட்டால் நன்றாக இருக்கும்.]]]

வாரக் கடைசியில் திரையிட தயாரிப்பாளருக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவில்லை.. அதனால்தான்..!

ராஜ நடராஜன் said...

நந்தி படத்துக்கும் மஞ்ச தாவணிக்கும் ஏதாவது தொடர்பிருக்குதா?

படம் பார்க்காமலே எனது விமர்சனம்!

Vijay @ இணையத் தமிழன் said...

ஹும்ம் , பெங்களூர் வலைப்பதிவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.

படம் பார்த்து கதை சொல்லுங்கள் , கேட்டு ரசிக்கிறோம் !!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

நந்தி படத்துக்கும் மஞ்ச தாவணிக்கும் ஏதாவது தொடர்பிருக்குதா?

படம் பார்க்காமலே எனது விமர்சனம்!]]]

ஒண்ணுமில்ல ஸார்.. ச்சும்மா கலருக்காக செலக்ட் பண்ணியிருக்காங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Vijay @ இணையத் தமிழன் said...

ஹும்ம், பெங்களூர் வலைப்பதிவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. படம் பார்த்து கதை சொல்லுங்கள், கேட்டு ரசிக்கிறோம்!!]]]

பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லையா? என்ன கொடுமை இது..?

உண்மைத்தமிழன் said...

இத்திரைப்படத்தை பார்க்க வருகை தந்து என்னைப் பெருமைப்படுத்திய பட்டர்பிளை சூர்யா, கேபிள் சங்கர், ஜாக்கிசேகர், தினேஷ், பாலாஜி, மை.பாரதிராஜா, நடிகரும், வாசகருமான திரு.வெங்கடேசன் மற்றும் நண்பர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!