தயாநிதி மாறன் செய்திருக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு..!

15-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல்கள் எந்த மாதிரியெல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு ஆ.ராசா மட்டுமல்ல நாங்களும் சளைத்தவர்களில்லை என்பதற்கு உதாரணமாக சன் நெட்வொர்க்கின் மாறன் சகோதரர்களும் இன்னொரு உதாரணத்தை ராசாவுக்கு முன்பாகவே  நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

இந்த மறைமுகமான ஊழலை வெளிக்காட்டியிருப்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரிக்க பிரதமரால் நியமிக்கப்பட்ட சிவராஜ்பாட்டீல் கமிஷன்தான். அந்த கமிஷனின் அறிக்கையினால்தான் மாறன்களின் இந்த விஞ்ஞான ரீதியான ஊழல் வெளியே வந்துள்ளது.

மலேசியாவின் மிகப் பெரும் பணக்காரர் டி.அனந்தகிருஷ்ணன்.  போர்ப்ஸ் பத்திரிகையின் கணிப்புப்படி அனந்தகிருஷ்ணன் 7.6 பில்லியன் சொத்துக்களோடு உலகத்தில் 89-வது பணக்காரராக இருக்கிறார். சொந்த நிறுவனம்தான் ஏர்செல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் டிஷ்நெட் என்ற பெயரில் இயங்கி வந்தது.

இந்த நிறுவனமும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை தனது தொழில் பயன்பாட்டுக்காக பெற்றுள்ளது. இது நடைமுறையில் சாதாரணமானதுதானே என்று எண்ணலாம். ஆனால் எந்த வழியில் பெற்றிருக்கிறது என்பதை நிச்சயமாக நூறு சதவிகிதம் சநதேகப்படக் கூடிய அளவுக்கான சூழலில்தான் பெற்றுள்ளது என்று சிவராஜ்பாட்டீல் கமிஷன் சுட்டிக் காட்டியுள்ளது.

டிஷ்நெட் நிறுவனம் 2004 ஏப்ரல் மாதத்தில் 2 சர்க்கிள்களுக்கும், 2005 மார்ச்சில் 5 சர்க்கிள்களுக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கோரி விண்ணப்பம் அளித்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன்தான்.

தொலைத் தொடர்புத் துறை ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிகளின்படி, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட ஒரு மாதத்தில் அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பாவம் டிஷ்நெட் நிறுவனத்தினருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் நிறையவே சோதனைகள்தான் கிடைத்திருக்கின்றன.

2004 ஆகஸ்ட் 24-ம் தேதியன்று தயாநிதி மாறன் உத்தரவின் பேரில் அவரது தனிப்பட்ட செயலாளர்ர் டிஷ்நெட் நிறுவனம் பற்றி பல கேள்விகளை நோட் செய்து அந்நிறுவனத்திடம் இருந்து அதற்கான பதில்களைப் பெறுமாறு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு மற்றும சென்னை சர்க்கிள்களில் இந்நிறுவனம் மற்றும் இதன் துணை நிறுவனத்தின் செயல்பாடுகள், நிறுவனத்தின் நிதி நிலைமை, இந்நிறுவனத்தின் விற்பனைத் தன்மை குறித்தான பத்திரிகை செய்திக் குறிப்புகள், இந்நிறுவனம் லைசென்ஸ் பெற்ற பின்பு வேறு நிறுவனத்திற்கு லைசென்ஸை விற்பதற்கான சூழல் ஏதும் உள்ளதா... ஏற்கெனவே அது போல் செய்யப்பட்டுள்ளதா.. என்றெல்லாம் கண்டறியும்படி அதில் உத்தரவிடப்பட்டிருந்தது.

2005, மார்ச்-5-ல் மேலும் 5 சர்க்கிள்களில் ஸ்பெக்ட்ரம் கோரிய விண்ணப்பத்தினை டிஷ்நெட் நிறுவனம் சமர்ப்பித்த பின்பு மார்ச் 30-ம் தேதியன்று தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் இது தொடர்பாக தயாநிதி மாறனுடன் கலந்தாலோசிக்கிறார். டிஷ்நெட் நிறுவனம் அதுவரையில் தொலைத் தொடர்புத் துறையின் கேள்விகளுக்கு அனுப்பியிருந்த பதில்கள் அந்தக் கலந்துரையாடலில் பரிசீலிக்கப்படுகிறது.

ஆனால் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் மீண்டும் அது தொடர்பான ஷோகேஸ் நோட்டீஸ்கள் டிஷ்நெட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பொதுவாக இது போன்ற கேள்விகள் மொபைல் போன் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அதன் நெட்வொர்க்கில் சேவை நடத்தும் நிறுவனங்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள். ஆனால் தயாநிதி மாறனோ தொலைக்காட்சி சேனல்களை ஒருங்கிணைத்து நடத்தும் ஒரு நிறுவனத்திடம் இது போன்ற கேள்விகளை முதல்முறையாகக் கேட்டிருப்பதாக கமிஷன் குறிப்பிட்டுள்ளது.

இதன் பின் என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கலாம். ஒருவழியாக டிஷ்நெட் நிறுவனம் ஒரு வழியாக 2006-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது.

டிஷ்நெட்டின் இந்த வி்ண்ணப்பத்திற்கான பதிலைத் தெரிவிக்காமல் 26 மாதங்கள் தாமதித்து, அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து கொடுத்ததால் அத்தனை மாதங்களும் இதற்கென ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையினால் அரசுக்குக் கிடைதிருக்க வேண்டிய வருவாய் வராமல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கமிஷன் கூறியுள்ளது.

இதில் என்ன நடந்திருக்கும் என்று இந்தியத் திருநாட்டின் மக்களாகிய நாம் யூகிக்கக் கூடிய அளவுக்கான ஒரு செயல் இதற்கு 4 மாதங்கள் கழித்து நடந்துள்ளது.

அது என்னவெனில், 2007-ம் பிப்ரவரி 22-ம் தேதியன்று டெல்லியில் கூடிய பொருளாதார விஷயங்களுக்கான மத்திய கேபினட் மந்திரிகளின் கமிட்டி, மொரீஷியஸ் தீவை சேர்ந்த சவுத் ஆசிய எண்ட்டர்டெயிண்மெண்ட் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம், 2007-ம் ஆண்டு துவக்கப்பட்ட மாறன்களின் சொந்த நிறுவனமான சன் டைரக்ட் டி.டி.ஹெச்.ச்சின் மொத்த மூலதனத்தில் 20 சதவிகிதம் அளவுக்கு முதலீடு செய்து  கொள்ள அனுமதித்தது.

இந்த மொரீஷியஸ் ஹோல்டிங் நிறுவனம் மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கு முழுமையாகச் சொந்தமானது. இந்த ஆஸ்ட்ரோ நிறுவனமும் அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானது. அதாவது டிஷ்நெட்டின் சகோதர நிறுவனம்.

இப்போது புரிந்திருக்குமே..? இதில் நாம் சந்தேகப்பட இருக்கும் ஒரே விஷயம் இதுதான்.. எனது நிறுவனத்தில் முதலீடு செய். உனக்கு வேண்டியது கிடைக்கும் என்று மாறன்கள் பிளாக்மெயில் செய்து அந்த முதலீட்டைப் பெற்றிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து..!

இதில் டிஷ்நெட் நிறுவனத்திற்கும் பங்குண்டு என்பதால் இரண்டு பணக்காரர்கள் மோதிக் கொண்டு, பின்பு தங்களுக்குள் சமாதானமாகி கை கோர்த்துக் கொண்டதாகத்தான் நாம் நினைத்துக் கொள்வோம். ஆனால் இதில் இருக்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்தை நாம் நினைப்பதே இல்லை.

முதலில் இது போன்ற சொந்தத் தொழில் செய்யும் அமைச்சர்கள் அந்தத் துறைகளுக்கே அமைச்சர்களாகக் கூடாது. அது ஒரு தார்மீக நெறி. இந்த நெறியைப் பின்பற்ற மாட்டோம் என்றுதான் இன்றைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு போட்டோ போட்டி போடுகின்றன.

இன்றைக்கும் 'முரசொலி'யிலும், 'தினகரனிலும்' அரசுத் தரப்பு விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவே  தவறானது. தார்மீக நெறிகளுக்கு முரணானது. அரசுப் பணியில் இருக்கும்போது அது தொடர்பான எந்தவிதமான சலுகைகளையும், பணிகளையும் தாம் ஏற்பதில்லை என்ற கொள்கையையுடையவன்தான் உண்மையான அரசியல்வாதியாக இருப்பான். இங்கே எல்லாருமே அரசியல்வியாதியாக இருப்பதால்தான் 'முரசொலி'யும், 'தினகரனும்' அரசு விளம்பரங்களை வெளியிட்டு காசை அள்ளுகின்றனர்.

இவர்களைக் கேட்டால் அவர்கள் போயஸ் ஆத்தாவைக் கை காட்டுவார்கள். "அவர்களது ஆட்சியில் 'நமது எம்.ஜி.ஆரி.லும்', 'மக்கள் குரல்' பத்திரிகையிலும் விளம்பரங்கள் வரவில்லையா..? எங்களிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்..?" என்பார்கள்..! இதுவும் உண்மைதான்..!

'நமது எம்.ஜி.ஆரின்' பொற்காலமே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம்தான். அப்போதுதான் அந்தப் பத்திரிகை அரசு விளம்பரங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது..! பக்கம், பக்கமாக ஏதோ டெலிபோன் டைரக்டரி போல பக்கங்களைத் திணித்துக் கொடுத்தார்கள். இவர்களும் இதனை நாகரீகம் இல்லாத செயல் என்றுகூட நினைப்பதில்லை. வந்தவரைக்கும் அள்ளு என்பதுதான் அனைத்து அரசியல்வியாதிகளின் எண்ணமாகவும் இருக்கிறது.

இதில் மாறன்களை மட்டும் குற்றம் சொல்லி என்ன ஆகப் போகிறது..? சரி விடுங்கள்.. இன்னொரு விஷயத்தைப் பார்ப்போம்..

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முன் வைத்து டாடாவும், ரிலையன்ஸும் இன்றைக்கு வார்த்தைகளால் மோதிக் கொண்டுள்ளார்கள்.
 
இரட்டைத் தொழில் நுட்ப உரிமம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே சில தொலைபேசி நிறுவனங்கள் அதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டதாக டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது. 2007, அக்டோபர் 17-ம் தேதியன்று இரட்டைத் தொழில் நுட்ப உரிமம் பற்றிய அரசின் கொள்கை வெளியிடப்பட்ட பின்பு தனது விண்ணப்பத்தினை சமர்ப்பித்த ஒரே நிறுவனம் தான் மட்டுமே என்கிறது டாடா. பிப்ரவரி 2006-ம் ஆண்டில் இருந்து காத்திருந்து ஒன்றை ஆண்டுகள் கழித்தே தங்களால் இரட்டைத் தொழில் நுட்ப உரிமத்தை பெற முடிந்தது என்கிறது டாடா.

இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இரட்டை தொழில் நுட்பத்துக்கான (GSM, CDMA) உரிமம் பெறுவதில் எங்கள் நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்படவில்லை. ஆனால், பழைய ஜி.எஸ்.எம். ஆபரேட்டர்களால்தான் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டாடா நிறுவனத்தை மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், “ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எல்லா தொலைத் தொடர்பு வட்டங்களிலும் இரட்டை தொழில் நுட்பத்துக்கான லைசென்ஸ் 2008 ஜனவரி மாதமே கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்கு விண்ணப்பித்து 83 நாள்கள் தாமதத்துக்கு பிறகுதான் லைசென்ஸ் கிடைத்தது. டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளிலும், 39 வணிக மாவட்டங்களிலும், 9 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் மூன்றாண்டுகள் காத்திருந்தும் எங்களுக்கு இன்னமும் இரட்டை தொழில் நுட்பத்துக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இத்தனைக்கும் நாங்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வந்திருக்கிறோம். இதனால் ரிலையன்ஸின் குற்றச்சாட்டு எங்களுக்குப் பொருந்தாது” என்று கூறியுள்ளது.

இதற்கும் பதிலளித்துள்ள ரிலையன்ஸ், சர்ச்சைக்கிடையான முறைகளில் டாடா டெலிசர்வீசஸ் உரிமத்தைப் பெற விரும்பியதால்தான் டெல்லி உயர்நீதிமன்றம் 2008-ம் ஆண்டு டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தினை ஏற்காமல் தள்ளுபடி செய்தது. உடனேயே ரத்தன் டாடா டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கும், தனக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதுபோல் நடந்து கொண்டதையும் நினைவுபடுத்தியுள்ளது. ஆக.. இப்போது லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதில்கூட நமது ஆட்கள் அடித்துக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது..!

லஞ்சம் தர மாட்டேன். முறைகேடுகள் செய்ய மாட்டேன். நேர்மையாக நடந்துதான் வியாபாரம் நடத்துவேன் என்பதெல்லாம் வெறும் கோஷமாகிவிட்டது. யார் முதலில் முந்துவது.. யார் அதிக சேவையை பரவலாக்குவது.. இதற்காக எப்படி, யாரை, எங்கே வெட்ட வேண்டும் என்றுகூட பகாசூர நிறுவனங்கள் மோதிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அரசியல்வியாதிகளை மட்டுமே திட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

ங்கொய்யால.. மொதல்ல இவனுகளைத்தான் போட்டுத் தள்ளணும் போலிருக்கு..!

40 comments:

bandhu said...

சென்னை வோல்டாஸ் நிலம் கை மாறிய விவகாரத்திலும் டி.அனந்தகிருஷ்ணன் பெயர் தானே அடிபட்டது?

தம்பி கிருஷ்ணா said...

//ங்கொய்யால.. மொதல்ல இவனுகளைத்தான் போட்டுத் தள்ளணும் போலிருக்கு..! //

அண்ணா !!!! வன்முறையை கையில் எடுக்க கூடாது. முதல்ல கையில் இருக்கிற கத்திய கீழ போடுங்க. நம்ம அகிம்சைய கடைபிடிக்க வேணும். அப்பத்தான் எல்லோரும் நமக்கு ஆப்பு வைக்க வசதியாக இருக்கும்.

பட்டாபட்டி.... said...

நாம் அரசியல்வியாதிகளை மட்டுமே திட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
//

இல்லை பாஸ்... ஆணிவேரே அரசியல் இருந்துதான் தொடங்குது

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...
சென்னை வோல்டாஸ் நிலம் கை மாறிய விவகாரத்திலும் டி.அனந்தகிருஷ்ணன் பெயர்தானே அடிபட்டது?]]]

யெஸ்.. எல்லா அரசியல்வியாதிகளும் காசு சம்பாதிக்கத் துடிக்கிறாங்க..

எல்லா பிஸினஸ்மேன்களும் காசு கொடுத்தாதவது காரியம் சாதிக்க நினைக்கிறாங்க..!

இதுதான் வர்த்தக உலகம்..!

udhavi iyakkam said...

உலகின் பெரிய திருட்டுப்பசங்கன்னு பட்டியல்
போட்டாலும் இவனுங்க பேர்தான் வரும்போல . . .

உண்மைத்தமிழன் said...

[[[தம்பி கிருஷ்ணா said...

//ங்கொய்யால.. மொதல்ல இவனுகளைத்தான் போட்டுத் தள்ளணும் போலிருக்கு..! //

அண்ணா !!!! வன்முறையை கையில் எடுக்க கூடாது. முதல்ல கையில் இருக்கிற கத்திய கீழ போடுங்க. நம்ம அகிம்சைய கடைபிடிக்க வேணும். அப்பத்தான் எல்லோரும் நமக்கு ஆப்பு வைக்க வசதியாக இருக்கும்.]]]

ஹி.. ஹி.. ஹி.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம ஆப்பு வாங்கிக்கிட்டே இருக்கிறது..?

உண்மைத்தமிழன் said...

[[[பட்டாபட்டி.... said...

நாம் அரசியல்வியாதிகளை மட்டுமே திட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.//

இல்லை பாஸ்... ஆணி வேரே அரசியல் இருந்துதான் தொடங்குது]]]

அரசியல் சரியாயிருந்தா இந்த அதிகார வர்க்கத்தையும் சரி செஞ்சிரலாம். அஸ்திவாரமே நமக்கு வீக்கா இருக்கே..? என்ன செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[udhavi iyakkam said...
உலகின் பெரிய திருட்டுப் பசங்கன்னு பட்டியல் போட்டாலும் இவனுங்க பேர்தான் வரும்போல.]]]

நிச்சயமா.. இதிலென்ன சந்தேகம்..? அரசு கொடுக்கும் ஒவ்வொரு சலுகையிலும் காசு பார்த்து அதிலும் கமிஷன் கொடுத்து அரசியல்வியாதிகளை வளர்த்து விட்டதில் இந்த மாதிரியான கார்ப்பரேட் ஆசாமிகளுக்கும் பெரும் பங்குண்டு..!

பூங்குழலி said...

இதில் சம்பந்தப்பட்ட தயாநிதி மாறன் ,பர்க்கா தத், டாடா ,ரிலையன்ஸ் போன்றோரைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் கூட பெருமளவு மௌனமே சாதிக்கின்றன ?

சேட்டைக்காரன் said...

அண்ணே, ரிலயன்ஸ், டாடா நிறுவனங்களின் பனிப்போர் தொடங்கிருச்சுங்களே, இதுலே எத்தனை தகவல்களை அவங்களே பகீரங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க? மொத்தத்துலே இது அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறவன் மட்டும் வாழத்தகுதியான நாடுதானோண்ணு தோணுது. ரைட்டு! :-)

சேட்டைக்காரன் said...

இதுக்கும் மைனஸ் ஓட்டுப் போட்டுட்டாய்ங்களா? இக்கி..இக்கி..இக்கி...!

செந்தழல் ரவி said...

தினகரனில் அரசு விளம்பரம் வருகிறது. எப்படி வருகிறது கொஞ்சம் பார்ப்போமா ? இரண்டு வாரம் முன்பு, தயாநிதி அவர்கள் அமைச்சராக இருக்கும் ஜவுளிதுறை சார்பில் டெல்லியில் நடைபெறும் விழா, முதல்வர் ஷீலா தீட்சித் கலந்துகொள்கிறாராம். அதை இந்தியா முழுமைக்கும் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதாவது ஷீலா தீட்சித் யார் என்றே தெரியாத மராட்டி பேசும் மஹாராஷ்ட்ராவில், தமிழில்.

kama said...

நீங்கள் எழுத நாங்கள் படிக்கிறோம்.. இப்படியே தான் நாட்கள் போய்க்கொண்டிருக்கிறது.அவர்கள் பொதுமக்களின் பணத்தைஅள்ளுவதை நிறுத்தவே இல்லை.எனது பின்னூட்டத்திற்கான உங்கள் பதிலில்.....வரும் தேர்தலில் நாம் பாடத்தை கற்றுக்கொடுக்கலாம் என்று கூறுவீர்கள். மீண்டும் அவர்கள் வந்து அள்ளுவார்கள்.. (என்ன நபர்தான் மாறியிருப்பார்) நீங்கள் எழுதுவீர்கள் நாங்கள் படிப்போம்.

R.Gopi said...

//ங்கொய்யால.. மொதல்ல இவனுகளைத்தான் போட்டுத் தள்ளணும் போலிருக்கு..!//

*********

தலைவா...

இவனுங்கள தூக்கறதுக்குன்னே தனியா ஒரு “சுனாமி” வரணும்... இவனுங்கள் மட்டும் தூக்க....

சேக்காளி said...

//அண்ணே, ரிலயன்ஸ், டாடா நிறுவனங்களின் பனிப்போர் தொடங்கிருச்சுங்களே, இதுலே எத்தனை தகவல்களை அவங்களே பகீரங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க? மொத்தத்துலே இது அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறவன் மட்டும் வாழத்தகுதியான நாடுதானோண்ணு தோணுது//.
ஒரு ரூவா அரிசியில வாழ தெரியணும்.அது தான் தகுதி.மற்றதெல்லாம் ஆடம்பரம்

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே! இதுக்கே கோவப்பட்டா எப்புடி?

இன்னும் ஏகப்பட்டது இருக்கு..

உண்மைத்தமிழன் said...

[[[பூங்குழலி said...
இதில் சம்பந்தப்பட்ட தயாநிதி மாறன், பர்காதத், டாடா, ரிலையன்ஸ் போன்றோரைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் கூட பெருமளவு மௌனமே சாதிக்கின்றன?]]]

அவங்க எல்லாம் பெரிய கை இல்லியா..? அதுனாலதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...
அண்ணே, ரிலயன்ஸ், டாடா நிறுவனங்களின் பனிப்போர் தொடங்கிருச்சுங்களே, இதுலே எத்தனை தகவல்களை அவங்களே பகீரங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க? மொத்தத்துலே இது அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறவன் மட்டும் வாழத் தகுதியான நாடுதானோண்ணு தோணுது. ரைட்டு! :-)]]]

உண்மைதான். அதிகாரமும், பண பலமும் இல்லையெனில் இந்த நாட்டில் அனைவருமே அடிமைகள்தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...
இதுக்கும் மைனஸ் ஓட்டுப் போட்டுட்டாய்ங்களா? இக்கி.. இக்கி.. இக்கி...!]]]

போடத்தான செய்வாங்க..! மாற்றுக் கருத்து எல்லாருக்கும் இருக்குமே..?

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

தினகரனில் அரசு விளம்பரம் வருகிறது. எப்படி வருகிறது கொஞ்சம் பார்ப்போமா ? இரண்டு வாரம் முன்பு, தயாநிதி அவர்கள் அமைச்சராக இருக்கும் ஜவுளிதுறை சார்பில் டெல்லியில் நடைபெறும் விழா, முதல்வர் ஷீலா தீட்சித் கலந்து கொள்கிறாராம். அதை இந்தியா முழுமைக்கும் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதாவது ஷீலா தீட்சித் யார் என்றே தெரியாத மராட்டி பேசும் மஹாராஷ்ட்ராவில், தமிழில்.]]]

ஹா.. ஹா.. கண்ணுக்குத் தெரிந்த சுருட்டல் என்பது இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[kama said...
நீங்கள் எழுத நாங்கள் படிக்கிறோம். இப்படியேதான் நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் பொதுமக்களின் பணத்தை அள்ளுவதை நிறுத்தவே இல்லை. எனது பின்னூட்டத்திற்கான உங்கள் பதிலில். வரும் தேர்தலில் நாம் பாடத்தை கற்றுக் கொடுக்கலாம் என்று கூறுவீர்கள். மீண்டும் அவர்கள் வந்து அள்ளுவார்கள்.. (என்ன நபர்தான் மாறியிருப்பார்) நீங்கள் எழுதுவீர்கள் நாங்கள் படிப்போம்.]]]

இந்த முறை தேர்தலுக்குப் பின்பு கட்சிகளின் தேர்தல் கூட்டணிகள் உடைந்து, வேறு கூட்டணி உருவானால்தான் கொஞ்சமாவது இதற்கு விடிவு காலம் பிறக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//ங்கொய்யால.. மொதல்ல இவனுகளைத்தான் போட்டுத் தள்ளணும் போலிருக்கு..!//

*********

தலைவா, இவனுங்கள தூக்கறதுக்குன்னே தனியா ஒரு “சுனாமி” வரணும். இவனுங்கள் மட்டும் தூக்க.]]]

மனசு கஷ்டமா இருந்தாலும், நாட்டுக்காக இதனை ஒத்துக்க வேண்டியிருக்கு கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[சேக்காளி said...

//அண்ணே, ரிலயன்ஸ், டாடா நிறுவனங்களின் பனிப்போர் தொடங்கிருச்சுங்களே, இதுலே எத்தனை தகவல்களை அவங்களே பகீரங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க? மொத்தத்துலே இது அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறவன் மட்டும் வாழத்தகுதியான நாடுதானோண்ணு தோணுது//.

ஒரு ரூவா அரிசியில வாழ தெரியணும். அதுதான் தகுதி. மற்றதெல்லாம் ஆடம்பரம்]]]

இதைதான் இந்த அரசியல்வியாதிகள் மறைமுகமாகச் சொல்லி வருகிறார்கள்..! எடுத்துக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் சேக்காளி..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே! இதுக்கே கோவப்பட்டா எப்புடி? இன்னும் ஏகப்பட்டது இருக்கு..]]]

எனக்கும் தெரியுது. ஆனாலும் என்ன செய்யறது? கோபப்படாம இருக்க முடியலையே..?

தமிழ் குரல் said...

அண்ணே,

இந்த மோசடியில் மூலவர்கள் ஏர்டெல் மிட்டல், அம்பானி, டாடா போன்றவர்களே... அந்த 176 ஆயிரம் கோடியில் பெரும் பகுதியை இழப்பின் பலனை அனுபவித்தவர்கள் பெரும் முதலாளிகள்... ராசா இல்லாவிட்டால் இன்னொரு கூசாவை வைத்து இந்த மோசடிகளை செய்திருப்பார்கள்...

உங்களை போன்றவர்கள் ராசா போன்ற அம்பை எய்து... எய்த பெரும் முதலாளிகளை விட்டு விடுகிறீர்கள்...

உங்களுக்கு தெரிந்த அரசியல் கூட்டத்திடம் கேட்டு பாருங்கள்... இந்த மோசடியில் கிடைத்த பணத்தை மாயாவதி, ஜெயலலிதா, மம்தா, லாலு, முலயாம், பாஜக கட்சியினருக்கு பெரும் முதலாளிகள் கப்பம் கொடுத்திருப்பார்கள்...

இந்த மோசடியை ராகுல் காங்கிரஸ் திமுகவை ப்ளாக் மெயில் செய்ய பயன்படுத்தி கொண்டுள்ளது...

மேலும் இந்த மோசடியில் ராசாவின் பங்கை விட காங்கிரஸுக்கு அதிக பங்கு இருக்கும்... காரணம் ஊழல் இல்லாமல், மனித உரிமை மீறல் இல்லாமல் காங்கிரஸ் இல்லை...

இதில் உங்கள் ஆற்றலை வீணாக்கமல் இருக்க பாருங்கள்...

ஜோதிஜி said...

வன்முறையை கையில் எடுக்க கூடாது. முதல்ல கையில் இருக்கிற கத்திய கீழ போடுங்க. நம்ம அகிம்சைய கடைபிடிக்க வேணும். அப்பத்தான் எல்லோரும் நமக்கு ஆப்பு வைக்க வசதியாக இருக்கும்.

நீங்கள் எழுத நாங்கள் படிக்கிறோம்.. இப்படியே தான் நாட்கள் போய்க்கொண்டிருக்கிறது.அவர்கள் பொதுமக்களின் பணத்தைஅள்ளுவதை நிறுத்தவே இல்லை.எனது பின்னூட்டத்திற்கான உங்கள் பதிலில்.....வரும் தேர்தலில் நாம் பாடத்தை கற்றுக்கொடுக்கலாம் என்று கூறுவீர்கள். மீண்டும் அவர்கள் வந்து அள்ளுவார்கள்.. (என்ன நபர்தான் மாறியிருப்பார்) நீங்கள் எழுதுவீர்கள் நாங்கள் படிப்போம்.

இருவருக்கும் வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் குரல் said...

அண்ணே, இந்த மோசடியில் மூலவர்கள் ஏர்டெல் மிட்டல், அம்பானி, டாடா போன்றவர்களே... அந்த 176 ஆயிரம் கோடியில் பெரும் பகுதியை இழப்பின் பலனை அனுபவித்தவர்கள் பெரும் முதலாளிகள்... ராசா இல்லாவிட்டால் இன்னொரு கூசாவை வைத்து இந்த மோசடிகளை செய்திருப்பார்கள்...

உங்களை போன்றவர்கள் ராசா போன்ற அம்பை எய்து... எய்த பெரும் முதலாளிகளை விட்டு விடுகிறீர்கள்...

உங்களுக்கு தெரிந்த அரசியல் கூட்டத்திடம் கேட்டு பாருங்கள்... இந்த மோசடியில் கிடைத்த பணத்தை மாயாவதி, ஜெயலலிதா, மம்தா, லாலு, முலயாம், பாஜக கட்சியினருக்கு பெரும் முதலாளிகள் கப்பம் கொடுத்திருப்பார்கள்...

இந்த மோசடியை ராகுல் காங்கிரஸ் திமுகவை ப்ளாக் மெயில் செய்ய பயன்படுத்தி கொண்டுள்ளது...

மேலும் இந்த மோசடியில் ராசாவின் பங்கைவிட காங்கிரஸுக்கு அதிக பங்கு இருக்கும். காரணம் ஊழல் இல்லாமல், மனித உரிமை மீறல் இல்லாமல் காங்கிரஸ் இல்லை. இதில் உங்கள் ஆற்றலை வீணாக்கமல் இருக்க பாருங்கள்.]]]

ஹலோ.. இது காமெடியா இல்லையா..? இதில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கருணாநிதியின் குடும்பத்திற்குச் சென்றிருக்கும் கதையை முற்றிலுமாக மறைத்துவிட்டு மற்றவர்களையே சொல்கிறீர்களே..?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

வன்முறையை கையில் எடுக்க கூடாது. முதல்ல கையில் இருக்கிற கத்திய கீழ போடுங்க. நம்ம அகிம்சைய கடைபிடிக்க வேணும். அப்பத்தான் எல்லோரும் நமக்கு ஆப்பு வைக்க வசதியாக இருக்கும். நீங்கள் எழுத நாங்கள் படிக்கிறோம்.. இப்படியேதான் நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் பொதுமக்களின் பணத்தை அள்ளுவதை நிறுத்தவே இல்லை. எனது பின்னூட்டத்திற்கான உங்கள் பதிலில் வரும் தேர்தலில் நாம் பாடத்தை கற்றுக் கொடுக்கலாம் என்று கூறுவீர்கள். மீண்டும் அவர்கள் வந்து அள்ளுவார்கள்.. (என்ன நபர்தான் மாறியிருப்பார்) நீங்கள் எழுதுவீர்கள் நாங்கள் படிப்போம். இருவருக்கும் வாழ்த்துகள்.]]]

இப்படி எழுதினால் நான் என்னதான் பதில் சொல்வது..?

Indian Share Market said...

ஏற்கனவே ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றைப் புரிந்தவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை அளிப்பதும், அவர்கள் ‘அஞ்சாநெஞ்ச’ வழிமுறைகளைப் பயன்படுத்தி மீண்டும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாவதும் ஒரு வகையில் மக்களுக்குச் செய்யும் துரோகமேயல்லவா? அவர்கள் தொடர்ந்து கறைபடிந்தவர்களாக ஆட்சிபுரிவதால் நாட்டுக்கும் களங்கம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. எனவே, இனியாதல் குற்றமிழைத்தவர்கள் எனச் சந்தேகிக்கும் எவரும் மக்கள் மன்றத்தில் எவ்வித பதவிகளையும் பெறாதவாறு சட்டம் இயற்றப்படுதல் வேண்டும். இதனை இன்றுள்ள அரசியல் வாதிகள் நிச்சயம் செய்யப்போவதில்லை! நாட்டு மக்கள் ‘எகிப்தில்’ உள்ளவர்கள் போன்று சொரணையுடையவர்களாக மாறுவதன் மூலமே இது சாத்தியம்.

krishnamoorthy said...

தோண்ட தோண்ட இவ்வளவு குப்பைகளா?
வேண்டாம் இந்த ஆராய்ச்சி முடித்துகொள்வோம் .
2 ஜி என்றால் எனக்கு தெரியாது என சொல்லி பழக வேண்டியதுதான் .சாமி

--

ரிஷி said...

எங்கள் ஊரில் கேபிள் கனெக்ஷன் கொடுப்பதில் தேவகி கேபிள்ஸ், அஜய் கேபிள்ஸ் இருவரிடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில் தேவகி பிஸினஸில் அஜய்யும், அஜய் பிஸினஸில் தேவகியும் நுழைவதில்லை. எங்கள் வீட்டில் தேவகி கேபிள்ஸின் கனெக்ஷன் தான் முதலில் இருந்தது. ஆனால் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் கேபிளே வொர்க் ஆகாது. கஸ்டமர் சர்வீஸ் படுமோசம். அதனால் அஜய் கேபிளுக்கு மாறிவிட்டோம். ஆனால் அப்படி மாறக்கூடாதாம். டிஸ்ட்ரிபுயூட்டருக்கு தேவகி கேபிள்ஸ் தான் பணம் கட்டுகிறார்களாம். நாங்கள் வேறு கேபிளுக்கு மாறவும் கூடாது; ஆனால் இவர்கள் சர்வீஸும் மோசமாகத் தருவார்களாம். அதனால் நாங்கள் டிஷ் போடப்போகிறோம் என்று சொல்லிவிட்டு தேவகிக்கு தெரியாமல் அஜய் கேபிள்ஸில் சொல்லி கேபிள் போட்டு விட்டோம். இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.

இன்று தேவகி கேபிள்ஸ் ஓனர் வீட்டுக்கு வந்து கத்துகிறான். அதெப்படி அவனிடம் நீங்கள் கேபிள் கனெக்ஷன் வாங்குவீர்கள். இந்த வீட்டுக்கு நான் பணம் கட்டறேன் அப்படின்னு சொல்லி ரெண்டு மூணு தடவ வந்து டார்ச்சர் செய்து விட்டான். என்னிடம் தான் இனிமே கேபிளுக்கு பணம் கட்ட வேண்டும். உங்கள் நல்ல சர்வீஸ் நான் தருகிறேன் என்று கூறினான். நாங்கள் முடியவே முடியாது.. அதெப்படி சர்வாதிகாரமாய் என் வீட்டில் வந்து நீ அதிகாரம் பண்ணலாம். நான் எவன் கிட்ட போயி கேபிள் கனெக்ஷன் வாங்கினா உனக்கென்ன.. அது என்னோட உரிமை. அதில் தலையிட உனக்கு உரிமையில்லை என அடித்துக் கூறியாயிற்று மூன்று முறை. இனி வரமாட்டான் என நினைக்கிறேன். அப்படி மீண்டும் வந்து மிரட்டினால் போலிஸுக்கு போவதாக இருக்கிறேன். விருதுநகரையே கதிகலங்க வைக்க வேண்டுமென இருக்கிறேன். இப்போது இது என் தன்மானப் பிரச்சன ஆகிவிட்டது.

ஒரு ஆனானப்பட்ட லோக்கல் கேபிள்காரன்.. மாசம் என்னிடம் 150ரூ சந்தா வாங்குற பொறம்போக்கு நாதாரி.. அந்த 150 ரூபாயை இழக்கிறோமே என்ற ஆத்திரத்தில் என் வீட்டில் வந்து தகராறு செய்யும்போது, கோடி கோடியாய் கொட்டி பிஸினஸ் செய்பவன் அதைத் தக்க வைத்துக் கொள்ள - மன்னிக்கவும்.. இந்த வார்த்தையைச் சொல்ல.. - அவன் பொண்டாட்டியையும், ஆத்தாளைக் கூட கூட்டிக் கொடுப்பான். எவனையும் கொலையும் செய்வான். ஆனால் வெளியே தெரியாது. இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் பிஸினஸ்!! அவனுக்குத் தேவையானதெல்லாம் மிதமிஞ்சிய பணமும், கட்டுக்கடங்காத் சுதந்திரமும், அதிகார போதையும் மட்டுமே!!

இப்போது புரிகிறதா - முதலாளிகளின் ஆங்கார ஆட்டத்திற்கும், அரசியல்வியாதிகளின் சுயசொறிதல்களுக்கும் காரணம்!!

பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிட்டுப் போகட்டுமே என விட்டுக் கொண்டெல்லாம் இருக்க முடியாது. அவன் என் கையில் இருக்கும் பக்கோடாவை பிடிங்கித் தின்றால் அவனது முப்பத்திரண்டு பல்லையும் கழட்டி அவன் கையில் கொடுக்க வேண்டிய தெனாவெட்டும் நமக்கு இருக்க வேண்டும்.

D.R.Ashok said...

arumaiyana detailing... kadaisi vari mattume pathivukku ottavilai :)

(no tamil fonts)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த இன்னொரு வாழப்பழம் எங்கேண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னுமா நெகட்டிவ் ஓட்டு......... ? ஒருவேள அவங்களுக்கும் ஒரு பங்கு கெடச்சிருக்குமோ?

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

ஏற்கனவே ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றைப் புரிந்தவர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை அளிப்பதும், அவர்கள் ‘அஞ்சாநெஞ்ச’ வழிமுறைகளைப் பயன்படுத்தி மீண்டும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாவதும் ஒரு வகையில் மக்களுக்குச் செய்யும் துரோகமேயல்லவா? அவர்கள் தொடர்ந்து கறைபடிந்தவர்களாக ஆட்சி புரிவதால் நாட்டுக்கும் களங்கம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. எனவே, இனியாதல் குற்றமிழைத்தவர்கள் எனச் சந்தேகிக்கும் எவரும் மக்கள் மன்றத்தில் எவ்வித பதவிகளையும் பெறாதவாறு சட்டம் இயற்றப்படுதல் வேண்டும். இதனை இன்றுள்ள அரசியல் வாதிகள் நிச்சயம் செய்யப்போவதில்லை! நாட்டு மக்கள் ‘எகிப்தில்’ உள்ளவர்கள் போன்று சொரணையுடையவர்களாக மாறுவதன் மூலமே இது சாத்தியம்.]]]

நல்ல ஐடியா. ஆனால் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அதே கேடுகெட்ட அரசியல்வியாதிகளின் கைகளில்தான் உள்ளது. அதுதான் கொடுமை..!

உண்மைத்தமிழன் said...

[[[krishnamoorthy said...
தோண்ட தோண்ட இவ்வளவு குப்பைகளா? வேண்டாம் இந்த ஆராய்ச்சி முடித்து கொள்வோம்.
2 ஜி என்றால் எனக்கு தெரியாது என சொல்லி பழக வேண்டியதுதான் சாமி ]]]

இப்படியெல்லாம் செய்யக் கூடாது ஸார்.. தெரியாதவங்களுக்கு இதனைத் தெரியப்படுத்துங்க.. இது நமது கடமையும்கூட..!

உண்மைத்தமிழன் said...

[[[பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிட்டுப் போகட்டுமே என விட்டுக் கொண்டெல்லாம் இருக்க முடியாது. அவன் என் கையில் இருக்கும் பக்கோடாவை பிடிங்கித் தின்றால் அவனது முப்பத்திரண்டு பல்லையும் கழட்டி அவன் கையில் கொடுக்க வேண்டிய தெனாவெட்டும் நமக்கு இருக்க வேண்டும்.]]]

ரிஷி.. இதுதான் நம்ம மக்களிடத்தில் இல்லை. அதே சமயம் உதவி செய்ய வேண்டிய அதிகாரமும், சட்டமும் அவர்கள் பக்கத்தில் இருப்பதும் மக்களின் பயத்திற்கு ஒரு காரணம்..! இதையும் நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.!

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...

arumaiyana detailing... kadaisi vari mattume pathivukku ottavilai :)

(no tamil fonts)]]]

நன்றி அசோக்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த இன்னொரு வாழப்பழம் எங்கேண்ணே?]]]

அதாண்ணே இது..

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னுமா நெகட்டிவ் ஓட்டு? ஒருவேள அவங்களுக்கும் ஒரு பங்கு கெடச்சிருக்குமோ?]]]

இருக்கலாம்.. யார் கண்டது..?