போப் ஆண்டவரை தத்து எடுத்து அவரிடம் கொடுக்கலாமே..?

26-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“நான் சீக்கிரம் சாகப் போறேன்.. எனது பெயரில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வாரிசுதாரர் இல்லை. நான் செத்துவிட்டால் வங்கிக்காரர்களே அதனை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். எனக்கு அந்தக் கயவர்களிடம் பணத்தைக் கொடுக்க விருப்பமில்லை. உங்களது ஜிமெயில் முகவரியை பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள்தான் எனது வாரிசு என்பதை முடிவு செய்துவிட்டேன். உடனேயே என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.. எனது வாரிசாக உங்களை நியமிக்கும் கடிதத்தை விரைந்து உங்களுக்கு அனுப்புகிறேன். நான் இறந்த பின்பு அந்தப் பணத்தை என் நியாபகமாக வைத்து நீங்கள் அனுபவியுங்கள்.. உடனேயே மெயில் செய்யுங்கள்..” - இப்படி தொடர்ச்சியாக பல மெயில்கள் கடந்த சில ஆண்டுகளாக வந்தவண்ணம் இருந்தன.

பல அப்பாவி தமிழர்கள் இதனையும் உண்மை என்பதை உணர்ந்து அவர்கள் சொன்னதை நம்பி பல கோடிகள் கிடைக்கப் போகிறது என்பதற்காக சில லட்சங்களை அவர்கள் கேட்டவிதத்தில் கொடுத்துவிட்டு பின்னர் உண்மை தெரிந்து காவல்துறையினரை நோக்கி ஓடிச் சென்றிருக்கிறார்கள். செல்கிறார்கள். இப்போதும் சென்று கொண்டிருக்கிறார்கள்..


இப்போது, இன்றைக்குத்தான் கொஞ்சம் புது மாதிரியாக கன்னியாஸ்திரி கதையோடு ஆரம்பித்திருக்கிறார்கள்.. இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு ஒரு கன்னியாஸ்திரி எதற்காகக் புலம்ப வேண்டும். அப்படியே வாடிகனுக்கோ, அல்லது திருச்சபைக்கோ சமர்ப்பித்துவிட்டு கர்த்தருக்குள் நித்திரை அடைந்துவிடலாமே..?

இவ்வளவு ஏன்..? வாடிகனை தற்போது ஆட்சி செய்யும் போப் ஆண்டவரை தத்துப் பிள்ளையாக எடுத்து அவர் தலையில் இந்த பில்லியன் டாலரைக் கட்டிவிட்டு கர்த்தரைத் தழுவிக் கொள்ளலாமே..? எதற்காக வேறு நபர்களுக்கு தாரை வார்க்க வேண்டும்..?


லண்டன்வாழ் பதிவர்கள் நேரில் சென்று இந்தக் கன்னியாஸ்திரிக்கு நல்ல புத்திமதி சொல்லி சொர்க்கத்தை காட்டி புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

Hello Beloved,

I am Rev. Sister Carol Mitchell a Missionary in St Peters Catholic Church London United Kingdom, But I am Citizen of America from California USA.I am very sick now and I deposited the Sum of 6M USD in Intercontinental Bank London United Kingdom here, But my Doctor here in the Hospital told me that I will not survive this Sickness that I have only two weeks more to live.

So I want you to help me stand as my next of kin to enable Bank here in London Uk Transfer this 6M USD to you, But note that you will take 3M USD out of this 6M USD and give the remaining 3M USD to any Charity Home around you because that was the vow I made to my God Almighty before I became a Missionary.

I want you to get back to me immediately if you are interested to stand as my Next of Kin, So that I can introduce you to my Doctor and direct you on how to proceed before I pass away in this world because I have only two weeks to live according to
my Doctor.

Thanks,

Missionary Carol Mitchell.

carolmitchell3@aol.com
From St Peters Catholic Church
136 Clergywomen Road,
London EC1R 5DL,
United  Kingdom.

38 comments:

abbeys said...

AHA VADAI YENAKA

எல் கே said...

ஹெஹெஹ்

abbeys said...

irrunga padichutu varen :)

காலப் பறவை said...

ஓசியில தானே கிடைக்கிறது.... சும்மா தட்டி விடுங்க பாஸ் ஒரு மடல்.......... இன்னும் சுவாரசியமா ஒரு மடல் திருப்பி வரும்....

Indian Share Market said...

அண்ணே.தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

எஸ்.கே said...

பரலோக பிதாவே!

துளசி கோபால் said...

நீங்கள் ஆசீர்வதிப்பட்டவர்!!!!!!!!!!!

முருகன் கன்யாஸ்த்ரீ வேஷத்துலே வர்றான்:-)))))

அத்திரி said...

//துளசி கோபால் said...
நீங்கள் ஆசீர்வதிப்பட்டவர்!!!!!!!!!!!
முருகன் கன்யாஸ்த்ரீ வேஷத்துலே வர்றான்:-)))))//

repeeeeeeeeeeeeeeeaaaaaaaaaaaatttttttttttttttuuuuuuuuuuuuuu...........

சேட்டைக்காரன் said...

//பல அப்பாவி தமிழர்கள் இதனையும் உண்மை என்பதை உணர்ந்து அவர்கள் சொன்னதை நம்பி பல கோடிகள் கிடைக்கப் போகிறது என்பதற்காக சில லட்சங்களை அவர்கள் கேட்டவிதத்தில் கொடுத்துவிட்டு பின்னர் உண்மை தெரிந்து காவல்துறையினரை நோக்கி ஓடிச் சென்றிருக்கிறார்கள்.//

அச்சச்சோ! நம்மூரு காவல்துறையினரை நோக்கி ஓடினார்களா? மெய்யாலுமே அப்பாவிங்க தான் போலிருக்கு! :-)

ஐத்ருஸ் said...

avarthan poli endru theliva theriyudhula.
Pinna ethukku intha visayathula kartharaiyum,popeaiyum ilukkureenga......santhadi saakula thaakka.nadathunga anne nadathunga.

செங்கோவி said...

உங்களை ஏற்கனவே முருகன் தத்தெடுத்த மேட்டர் அவங்களுக்குத் தெரியாது போல..விடுங்கண்ணே.

kanagu said...

/*துளசி கோபால் said...

நீங்கள் ஆசீர்வதிப்பட்டவர்!!!!!!!!!!!

முருகன் கன்யாஸ்த்ரீ வேஷத்துலே வர்றான்:-)))))*/

ஹா ஹா ஹா... ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்... :) :)

bandhu said...

அண்ணே! உங்க லெவலுக்கு இது மாதிரி ஒரு டம்மி மெய்லுக்கு பதிவு தேவையா? சும்மா லூஸ்ல விடுங்க!

டக்கால்டி said...

I also got a mail from an african girl stating that her father died in a war and she is in refuge camp with 2000 Million USD. She wants to continue her studies in india and bla bla.

But I am the gr8 escape.

பன்-பட்டர்-ஜாம் said...

இந்த மாதிரி தான்ணே SMS ஒண்ணு வரும். பதினோரு பேருக்கு forward பண்ணு. ஒன் ஹவர்ல நல்ல செய்தி வரும்.பெரம்பூர்ல பிளாட் கிடைக்கும்னு. இந்த மாதிரி ஒருத்தர் கிட்ட இருந்து ரெகுலரா SMS வரவும் நானும்
'!@#$%^&*())(*&^%$#@!' அப்டின்னு டைப் பண்ணி, இது சைனீஸ் மந்திரம் - இத்த நீ 1,23,456 பேருக்கு forward பண்ணலன்னா ரத்தம் கக்கி சாவான்னு அனுப்பிச்சேன்.

உண்மைத்தமிழன் said...

[[[abbeys said...

AHA VADAI YENAKA]]]

அதான.. எப்பவுமே வர்றவங்க ஏன் வரலை..?

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

ஹெஹெஹ்]]]

திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன எல்.கே. ஸார்..!

நேர்மைக்கு ஒரே வழிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[abbeys said...

irrunga padichutu varen :)]]]

அடப்பாவிகளா.. இருக்கிறதே 15 வரி.. இதுக்கே இப்படி சீன் காட்டுறீங்களேப்பா?

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
ஓசியிலதானே கிடைக்கிறது.... சும்மா தட்டி விடுங்க பாஸ் ஒரு மடல்.......... இன்னும் சுவாரசியமா ஒரு மடல் திருப்பி வரும்....]]]

ஏற்கெனவே ஒரு அனுபவம் இருக்கு ஸார்.. தேவையில்லாம நேரத்தை வீணாக்க வேண்டாம்ல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
அண்ணே. தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்.]]]

ம்.. எல்லாமே இங்க காமெடியாயிருச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...

பரலோக பிதாவே!]]]

இந்தப் பாவிகளை மன்னியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

நீங்கள் ஆசீர்வதிப்பட்டவர்!!!!!!!!!!!

முருகன் கன்யாஸ்த்ரீ வேஷத்துலே வர்றான்:-)))))]]]

ஹா.. ஹா.. ஹா.. டீச்சர் செமத்தியான பின்னூட்டம்.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[அத்திரி said...

//துளசி கோபால் said...
நீங்கள் ஆசீர்வதிப்பட்டவர்!!!!!!!!!!!
முருகன் கன்யாஸ்த்ரீ வேஷத்துலே வர்றான்:-)))))//

epeeeeeeeeeeeeeeeaaaaaaaaaaaatttttttttttttttuuuuuuuuuuuuuu.]]]

ரொம்ப நாள் கழிச்சு எட்டிப் பார்த்ததுக்கு நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//பல அப்பாவி தமிழர்கள் இதனையும் உண்மை என்பதை உணர்ந்து அவர்கள் சொன்னதை நம்பி பல கோடிகள் கிடைக்கப் போகிறது என்பதற்காக சில லட்சங்களை அவர்கள் கேட்டவிதத்தில் கொடுத்துவிட்டு பின்னர் உண்மை தெரிந்து காவல்துறையினரை நோக்கி ஓடிச் சென்றிருக்கிறார்கள்.//

அச்சச்சோ! நம்மூரு காவல்துறையினரை நோக்கி ஓடினார்களா? மெய்யாலுமே அப்பாவிங்கதான் போலிருக்கு!:-)]]]

நிசமாத்தான்..! அதிலும் வயதான பலர் இருந்ததைக் கண்டு வருத்தப்பட்டேன். எப்போது இவர்கள் திருந்துவார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஐத்ருஸ் said...
avarthan poli endru theliva theriyudhula. Pinna ethukku intha visayathula kartharaiyum, popeaiyum ilukkureenga. santhadi saakula thaakka. nadathunga anne nadathunga.]]]

ஹி.. ஹி.. ஹி.. இதுவும் ச்சும்மா ஒரு காமெடிக்குத்தான்..! இதுல போப்புக்கு பங்கு இருக்குன்னு நான் சொல்லலியே..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

/*துளசி கோபால் said...

நீங்கள் ஆசீர்வதிப்பட்டவர்!!!!!!!!!!!

முருகன் கன்யாஸ்த்ரீ வேஷத்துலே வர்றான்:-)))))*/

ஹா ஹா ஹா... ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்... :) :)]]]

நன்றி கனகு..!

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...
அண்ணே! உங்க லெவலுக்கு இது மாதிரி ஒரு டம்மி மெய்லுக்கு பதிவு தேவையா? சும்மா லூஸ்ல விடுங்க!]]]

ஆஹா.. இவரன்றோ ரசிகர்.. நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[டக்கால்டி said...

I also got a mail from an african girl stating that her father died in a war and she is in refuge camp with 2000 Million USD. She wants to continue her studies in india and bla bla. But I am the gr8 escape.]]]

தப்பிச்சிட்டீங்களா.. வாழ்க வளமுடன்..! இதையும் நாலு பேருக்கு சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்-பட்டர்-ஜாம் said...

இந்த மாதிரிதான்ணே SMS ஒண்ணு வரும். பதினோரு பேருக்கு forward பண்ணு. ஒன் ஹவர்ல நல்ல செய்தி வரும். பெரம்பூர்ல பிளாட் கிடைக்கும்னு. இந்த மாதிரி ஒருத்தர்கிட்ட இருந்து ரெகுலரா SMS வரவும் நானும்..

'!@#$%^&*())(*&^%$#@!' அப்டின்னு டைப் பண்ணி, இது சைனீஸ் மந்திரம் - இத்த நீ 1,23,456 பேருக்கு forward பண்ணலன்னா ரத்தம் கக்கி சாவான்னு அனுப்பிச்சேன்.]]]

ஆஹா.. இது நல்லாயிருக்கே..! இனிமே நானும் பாலோ பண்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
உங்களை ஏற்கனவே முருகன் தத்தெடுத்த மேட்டர் அவங்களுக்குத் தெரியாது போல. விடுங்கண்ணே.]]]

கரீக்ட்டு.. தெரியாதுல்ல.. இனிமே தெரிஞ்சுக்கட்டும்..!

jeeva said...

உங்க அப்பன் முருகபெருமான் தான் இந்த வேசத்துல வருவது....விட்டு விடாதீர்கள் ...

பிரதீபா said...

அண்ணே..இங்க மேப்ல பாத்தேன் ,இருந்தா நேர்ல போயி என்னா சமாச்சாரம்ன்னு கேக்கலாம்னு கூட இருந்தேன் உங்களுக்காக.. ஆனா பாருங்க இப்படி வருது :
We were not able to locate the address:
136 Clergywomen Road, London EC1R 5DL

அப்படி ஒரு போஸ்டல் கோடே இல்லையாம்.
அடுத்த தடவை இப்படி எதாச்சும் உங்களுக்கு வந்தா ",மொக்கையாக் வர்ற கேள்விகளையும், திட்டி வர்ற கமண்டுகளையும்,என் அப்பன் முருகன் உங்களுக்கு தள்ளிவிட சொல்லி இருக்கான்" ன்னு ஒரு மெய்ல போட்ட்ருவோம். :)

சீனு said...

இதாச்சும் பரவாயில்ல. எனக்கு இன்னைக்கு மெயில்ல ஒரு word document அட்டச் பன்னி ஒரு மெயில் வந்தது, BBC-ல் இருந்து. பிரிட்டிஷ் அரசாங்க கொடி, BBC logo எல்லாம் போட்டு படு புரபஷனலாக...

BBC One National Lottery Team
National Lottery Draws Results
Po Box 200, Harrogate England, United Kingdom
BBC One Lottery Representative
Tel: +447010045098
Email: bbcworldraw@info.lt
Visit Our Web Site www.bbc.co.uk/lottery/

Batch No: BNL/515944052/548/UK
Draw No: 1557
Bonus No: 37
GOOD DAY WINNER NO.45 (11) (30) (38) (45) (46) (49) BONUS (37).
This is to inform you that you have WON the sum of 500.000.00 Great British Pounds from our 2011 charity bonanza. The draw No.1557 brought out your e-mail address from a Data Base of Internet Email Users and qualified you a benefited winner of the stated winning amount, in the ongoing £44.4million Spring lottery charity bonanza for London's heritage,
Held on January The BBC One National Lottery Fund gives grants to sustain and transform individual lives all over the globe for the less privilege once; we are here to use our diverse heritage to change lives in every part.
Please Fill the Information below and Send To:
(bbcworldraw@info.lt)
A Scan copy of your Identification (Driving License or any Valid I.D Proof) is needed

1. Full Name:
2.Full Address:
3.State:
4. Occupation:
5.Age:
6.Sex:
7. Marital Status
8. Winning Email:
9. Contact
10. Country:

Visit Our Web Site www.bbc.co.uk/lottery/

Your online coordinator
Dr Richard Smith,
The online coordinator, B.B.C Department,
National Lottery Results England
Email: bbcworldraw@info.lt
Tel: +447010045098

எப்பூடி, இதோட பரினாம வளர்ச்சி?

உண்மைத்தமிழன் said...

[[[jeeva said...
உங்க அப்பன் முருகபெருமான்தான் இந்த வேசத்துல வருவது. விட்டுவிடாதீர்கள்.]]]

அது தெரிஞ்சுதான் முன் ஜாக்கிரதையா தப்பிச்சிருக்கேன்.. இது மாட்டி விடுற வேலை..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரதீபா said...

அண்ணே இங்க மேப்ல பாத்தேன், இருந்தா நேர்ல போயி என்னா சமாச்சாரம்ன்னு கேக்கலாம்னுகூட இருந்தேன் உங்களுக்காக. ஆனா பாருங்க இப்படி வருது:

We were not able to locate the address:
136 Clergywomen Road, London EC1R 5DL
அப்படி ஒரு போஸ்டல் கோடே இல்லையாம். அடுத்த தடவை இப்படி எதாச்சும் உங்களுக்கு வந்தா, மொக்கையாக் வர்ற கேள்விகளையும், திட்டி வர்ற கமண்டுகளையும், என் அப்பன் முருகன் உங்களுக்கு தள்ளிவிட சொல்லி இருக்கான்" ன்னு ஒரு மெய்ல போட்ட்ருவோம்.:)]]]

ஓகே.. எனக்காக கொஞ்சூண்டு சிரமம் மேற்கொண்டமைக்கு எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

சீனு..

உலகம் முழுக்க நம்மாளுக நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு..!

சரி.. சரி.. அவங்க கேட்ட தகவலையும் கொடுத்திட்டு கொடுக்குறதை வாங்கிட்டு வாங்க..!

abeer ahmed said...

See who owns futboldenofa.org or any other website:
http://whois.domaintasks.com/futboldenofa.org

abeer ahmed said...

See who owns almolltaqa.com or any other website.