விரிவுபடுத்தப்பட்ட கொள்ளைக் கும்பல் - புதிய பட்டியல்..!

26-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 19-ம் தேதியன்று தனது கொள்ளை அமைச்சரவையில் புதிதாக மூன்று ராஜாங்க மந்திரிகளை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நமது மாண்புமிகு பிரதம மந்திரி மன்னமோகனசிங்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா, பஞ்சாப்பைச் சேர்ந்த அஷ்வினி குமார், கேரளாவின் கே.சி.வேணுகோபால் ஆகிய மூவர்தான் புதிய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.


1996-ல் மத்தியில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் மந்திரியாக இருந்த பெனிபிரசாத்வர்மா, இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரியாக மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு ஒதுக்கப்பட்ட துறை உருக்கு..!

அஷ்வினி குமார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கு துணை அமைச்சராகவும், கே.சி.வேணுகோபால் மின்சாரத் துறையின் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு கூடவே தனது அமைச்சரவைக் கும்பலில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார் மன்மோகன்.. தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக இருந்த பிரபுல் பட்டேல், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் சல்மான் குர்ஷித் மூவரும் கேபினட் அமைச்சராகியுள்ளனர்.

விமானப் போக்குவரத்துத் துறையின் தனிப் பொறுப்பை வகித்து வந்த  பிரஃபுல் பட்டேலுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு அவருக்கு கனரக தொழில்சாலைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இணையமைச்சர்களாக இருந்து இதுவரை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் அமைச்சராக இருந்த வயலார் ரவி விமான போக்குவரத்துத் துறையின் தனி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா பெரு நிறுவன விவகாரங்கள் துறையின் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஜெய்பால் ரெட்டி வகித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கமல் நாத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. கமல் நாத் வகித்த தேச சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சக பொறுப்பு சி.பி.ஜோஷிக்கு அளிக்கப்பப்ட்டது.

குர்ஷித் ஆலம்கான் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெருநிறுவனங்கள் துறை முரளி தியோராவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறை தொடர்ந்து குர்ஷித்திடம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜய் மக்கான், இ.அகமது, பி.பி.வர்மா ஆகியோர் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையைச் சேர்ந்த என்.நாராணசாமி, பிரிதிவிராஜ் சவான் வகித்த பிரதமர் அலுவலக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். விலாஸ் ராவ் தேஷ்முக் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.கில் புள்ளி விவரத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விளையாட்டு, இளைஞர் நலம் துறை அஜித் மக்கானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து இப்போது மன்னமோகனின் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேபினட் அந்தஸ்தில் 35 அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக 6 பேரும், துணை அமைச்சர்களாக 37 பேரும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரவிருக்கும் சில மாநிலங்களின் தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக்கேற்ப கூடலாம்.. அல்லது குறையலாம்..தற்போதைய மத்திய மந்திரிகளின் துறை விவரங்கள் :-

1. மன்மோகன்சிங் : பிரதமர் - பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்சன் திட்டம். அணுசக்தி, விண்வெளி ஆய்வு துறைகள்

கேபினட் மந்திரிகள்

2. பிராணாப்முகர்ஜி : நிதி

3. சரத்பவார் : விவசாயம் மற்றும் உணவுபதப்படுத்தும் தொழில்கள்

4. ஏ.கே.அந்தோணி : ராணுவம்

5. ப.சிதம்பரம் : உள்துறை

6. எஸ்.எம்.கிருஷ்ணா : வெளியுறவு துறை

7. மம்தாபானர்ஜி : ரெயில்வே

8. குலாம்நபி ஆசாத் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

9. சுஷில்குமார் சிண்டே : மின்சாரம்

10. எம்.வீரப்பமொய்லி : சட்டம் மற்றும் நீதித் துறை

11. எஸ்.ஜெய்பால்ரெட்டி : பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

12. கமல்நாத் : நகர்ப்புற வளர்ச்சித் துறை

13. வயலார் ரவி : வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன், சிவில் விமான 
      போக்குவரத்து.

14. முரளி தியோரா : கம்பெனி விவகாரம்

15. கபில்சிபில் : மனிதவள மேம்பாடு, தொலை தொடர்பு மற்றும் தகவல் 
      தொழில் நுட்பம்

16. அம்பிகா சோனி : தகவல் ஒலிபரப்பு

17. பி.கே.ஹாண்டிக் : வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை

18. ஆனந்த் ஷர்மா : வர்த்தகம் மற்றும் தொழில் துறை

19. வீரபத்திரசிங் : மிகச்சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்

20. விலாஸ்ராவ் தேஷ்முக் : கிராமப்புற மேம்பாடு- பஞ்சாயத்து ராஜ்

21. சி.பி.ஜோஷி : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

22. குமாரி செல்ஜா : வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, கலாசாரம்

23. சுபாத் காயந்த் சகாய் : சுற்றுலா

24. எம்.எஸ்.கில் : புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம்
 
25. ஜி.கே.வாசன் : கப்பல் துறை

26. தயாநிதிமாறன் : ஜவுளித் துறை

27. பரூக்அப்துல்லா : மறு பயன்பாட்டு எரிசக்தி

28. மல்லிகார்ஜூன கார்கே : தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு

29. பவன் கே. பன்சால் : பாராளுமன்ற விவகாரம் மற்றும் விஞ்ஞான 
     தொழில் நுட்பம், புவி அறிவியல்

30. முகுல் வாஷ்னிக் : சமூகநீதி

31. காந்திலால் பூரியா : பழங்குடியினர் நலன்

32. மு.க.அழகிரி : ரசாயனம், உரம்

33. பிரபுல்படேல் : கனரகத் தொழில்-பொதுத்துறை நிறுவனங்கள்

34. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் : நிலக்கரி

35. சல்மான் குர்ஷீத் : நீர்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலன்

தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள் :

36. அஜய் மக்கான் : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

37. பேனி பிரசாத் வர்மா: உருக்கு

38. கே.வி.தாமஸ் : நுகர்வோர் நலன்- உணவு- பொது வினியோகம்

39. தின்ஷா ஜே.படேல் : சுரங்கம்

40. கிருஷ்ணா தீரத்: பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு

41. ஜெய்ராம் ரமேஷ் : சுற்றுச்சூழல், வனம்

ராஜாங்க மந்திரிகள் :

42. ஸ்ரீகாந்த் ஜெனா : ரசாயனம், உரம்

43. ஈ.அகமது : வெளியுறவு

44. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் : உள்துறை

45. வி.நாராயணசாமி : பாராளுமன்ற விவகாரம், பணியாளர் நலன், 
      பொதுமக்கள் குறை தீர்ப்பு, பென்சன், பிரதமர் அலுவலகம்

46. ஜோதிர் ஆதித்ய சிந்தியா : வர்த்தகம், தொழில் துறை

47. டி.புரந்தேஸ்வரி : மனித வள மேம்பாடு

48. கே.எச்.முனியப்பா : ரெயில்வே

49. பனபாக லட்சுமி : ஜவுளி

50. நமோ நாராயண் மீனா : நிதித் துறை

51. எம்.எம்.பல்லம் ராஜூ : ராணுவம்

52. சவுகதா ராஜ் : நகர்ப்புற வளர்ச்சி

53. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் : நிதி

54. ஜிதின் பிரசாத் : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

55. ஏ.சாய் பிரதாப் : கனரக தொழில்- பொதுத் துறை நிறுவனங்கள்

56. பிரனீத் கவுர் : வெளியுறவு

57. குர்தாஸ் காமத் : உள்துறை

58. ஹாரிஷ் ரவாத் : விவசாயம்- உணவு பதப்படுத்தும் தொழில்

59. பாரத்சிங் சோலங்கி : ரெயில்வே

60. மகாதேவ் எஸ்.கந்தேலா : பழங்குடியினர்

61. தினேஷ் திரிவேதி : சுகாதாரம், குடும்ப நலன்

62. சிசிர் அதிகாரி : கிராமப்புற மேம்பாடு

63. சுல்தான் அகமது: சுற்றுலா

64. முகுல்ராய் : கப்பல்

65. சவுத்ரி மோகன்ஜதுவா: தகவல் ஒலிபரப்பு

66. டி.நெப்போலியன்: சமூகநீதி, அமலாக்கம்

67. எஸ். ஜெகத்ரட்சகன் :தகவல் ஒலிபரப்பு

68. எஸ்.காந்திசெல்வன் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

69. துஷார்பாய் சவுத்ரி : சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை

70. சச்சின் பைலட் : தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

71. அருண் யாதவ் : விவசாயம், உணவு பதப்படுத்துதல் துÛ

72. பிரதீக் பிரகாஷ்பாபு படீல் : நிலக்கரி

73. ஆர்.பி.என்.சிங் : பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு, கம்பெனி 
      விவகாரம்

74. வின்சென்ட் பாலா : நீர்வளம், சிறுபான்மையினர் நலன்

75. பிரதீப் ஜெயின் : கிராமப்புற மேம்பாடு

76. அகதா சங்மா : கிராமப்புற மேம்பாடு

77. அஷ்வினி குமார் : திட்டம், பாராளுமன்ற விவகாரம், விஞ்ஞான 
      தொழில் நுட்பம், புவி அறிவியல்

78. கே.சி.வேணுகோபால் : மின்சாரம்.

இத்தனை நாட்கள் கழித்து இது ஏன் என்கிறீர்களா..? 

அன்னை சோனியாவின் தலைசிறந்த எடுபிடியான பிரதமர் மன்னமோகனசிங்கின் முதல் அமைச்சரவைப் பட்டியலை  புதிய கொள்ளைக் கூட்டக் கும்பல் - சில புள்ளி விபரங்கள் என்ற தலைப்பில்   ஏற்கெனவே எனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

அதன் தொடர்ச்சியாக இதுவும் ஒரு தகவல் சேமிப்புக்காக  இங்கே பதிவிடப்படுகிறது..!

8 comments:

Indian Share Market said...

நாராயணா !அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா .................

Indian Share Market said...

அண்ணே, உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
நாராயணா !அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.]]]

வலையிலும் இது சகஜம் நாராயணா..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
அண்ணே, உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்...]]]

நமக்கு இது ரொம்ப அவசியம் பாருங்க..!

Jayadev Das said...

இதுதான் அலிபாபாவும் எழுபத்தெட்டு திருடங்களும் பட்டியலா? ஹா.. ஹா.. ஹா.. சுவிஸ் வங்கியில எந்த நாய் எவ்வளவு வச்சிருக்குதுங்குற பட்டியலை வெளிப்படையாய் தர அவர்கள் முன்வந்தும், அதை வேண்டாம்னு சொல்லிட்டு, இந்த திருடர்கள் இவனுங்கலாவே ஏதோ ஒப்பந்தம் போட்டு ரகசியமாகவே வாங்கி, வெளியில சொல்ல முடியாதுன்னு அதே ஒப்பந்தத்தை காமிக்கிரானுங்கலாம். திருட்டுப் பசங்க.

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

இதுதான் அலிபாபாவும் எழுபத்தெட்டு திருடங்களும் பட்டியலா? ஹா.. ஹா.. ஹா..

சுவிஸ் வங்கியில எந்த நாய் எவ்வளவு வச்சிருக்குதுங்குற பட்டியலை வெளிப்படையாய் தர அவர்கள் முன் வந்தும், அதை வேண்டாம்னு சொல்லிட்டு, இந்த திருடர்கள் இவனுங்கலாவே ஏதோ ஒப்பந்தம் போட்டு ரகசியமாகவே வாங்கி, வெளியில சொல்ல முடியாதுன்னு அதே ஒப்பந்தத்தை காமிக்கிரானுங்கலாம். திருட்டுப் பசங்க.]]]

ஒண்ணாம் நம்பர் திருட்டுப் பசங்க..! இவனுக வீட்டுக் காசுன்னு இவ்ளோ அசால்ட்டா பேசுவானுங்களா..?

abeer ahmed said...

See who owns westclarkfootball.com or any other website:
http://whois.domaintasks.com/westclarkfootball.com

abeer ahmed said...

See who owns arab2all.com or any other website.