கோட்டி - சினிமா விமர்சனம்

06-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்ப நாளாகிவிட்டது இது மாதிரியான லோ பட்ஜெட் மொக்கை படங்களைப் பார்த்து.. புண்ணியம் கிட்டிவிட்டது..!

ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போவதற்கு ஏதாவது ஒன்று காரணமாக இருந்து தொலைகிறது. இந்த முறை போஸ்டர் டிஸைன். சரி.. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பதுதான் நமக்குத் தெரியாதே என்பதால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். வழக்கம்போல 9 பேர்தான்.

படமும் என்னை ஏமாற்றவில்லை. "இதைத்தான்.. இதைத்தான எதிர்பார்த்து வந்து.. நல்லா வாங்கிக்கடா மவனே.." என்று சொல்லி நெஞ்சில் ஏறி மிதித்தார்கள். இது போன்ற திரைப்படங்களையெல்லாம் ரசிக்க  வேண்டுமெனில் அவன் உலகப் படங்களையெல்லாம் பார்க்காதவனாக இருந்து தொலைய வேண்டும். இல்லாவிடில் இது போன்ற படங்கள் குப்பையாகத்தான் தெரியும். அப்படித்தான் எனக்குத் தெரிந்தது.

சுவாரசியமே இல்லாமல்.. பழகிப் போன கதை.. கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன கதையை.. அதே போன்று பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன திரைக்கதையில் ஊற வைத்து, காய வைத்து நமக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஹீரோவாக நடித்து, இயக்கியிருப்பவர் தனது அறிமுகத்தை மிகக் குறைந்த பட்ஜெட்டில் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்து அதனை அரங்கேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமில்லை.

ஒரு ஊரில் இரண்டு தாதாக்கள். பெரிய தாதாவான சாய்குமாரின் மகன்தான் ஹீரோ சிவன். ஆனால் சிவன், தந்தையைப் பிரிந்து அதே ஊரில் ஏனோ, தானோவென்று தனது சித்தி மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். கூடவே சைட் அடித்தும், காதலித்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டு தாதாக்களும் ஒவ்வொரு விஷயத்திலும் மோதிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வில்லன் தாதா ஜெயிலுக்குப் போக அப்பன் தாதா காரணமாக இருந்துவிடுகிறார். இதனால் கோபமான வில்லன் தாதா வழக்கம்போல நரி வேலை செய்து அவர் ஆட்களையெல்லாம் தன் பக்கம் இழுத்துவிடுகிறார்.

 (இவர்தாம்பா படத்தோட ஹீரோ)

கடைசியாக அப்பன் தாதாவை வீடு புகுந்து வெட்டிவிட்டு "இன்னும் பத்து நாள்ல உனக்கு கருமாதிதான்.." என்று எச்சரித்துவிட்டுப் போகிறார். தனக்குக் கொள்ளி வைக்கக்கூட ஆள் இல்லையே என்று வில்லன் தாதா சொல்லிவிட்டுப் போனதை எண்ணி அப்பன் தாதா உருகிப் போய் நிற்கையில் மகன் படியேறி வருகிறான். அப்பனைப் பார்த்து கண்ணீர் விட்டவன், "யார் சொன்னது எங்கப்பனுக்கு கொள்ளி போட ஆளில்லைன்னு..? நான் இருக்கேன்டா. இந்த சிவன் இருக்கான்டா"ன்னு சொல்லி வில்லன் தாதாக்களை அழிக்கப் புறப்படுகிறார். முடிவு நீங்கள் எதிர்பார்த்ததுதான்.. 

முதற்பாதியில் 1 மணி நேர காட்சிகளை ஒரே நாளில் எடுத்து முடித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அவ்வளவு சிக்கனம்.. ஹீரோ பஸ் ஸ்டாப்புக்கு வருகிறார். நிற்கிறார். சாம்ஸுடன் நக்கல் விடுகிறார். சிகரெட்டுக்கு லைட்டர் கேட்கிறார். நேரம் கேட்கிறார். ஹீரோயின் பொண்ணு வருது. லுக்கு விடுறார். சைட் அடிக்கிறார். கலர் பார்க்குறார்.. இதையே தொடர்ச்சியா நாலு சீன்களில் விட்டுவிட்டு செய்து நம்மை தூக்கிப் போட்டு மிதிக்கிறார்.

நான்காவது சீனில் பிராக்கெட் போட்டு மடக்கி விடுகிறார். முடிந்தது பிரச்சினை. இடையிலேயே இரண்டு பாடல் காட்சிகள்.. இதிலேயே சாம்ஸ் இருந்ததால் ஏதோ கொஞ்சம் தப்பித்தோம். இல்லையெனில் மொன்னை கத்திக்கு கழுத்தை நீட்டிய கதைதான்..!

அப்பன் தாதாவாக சாய்குமார்.. ஏதோ படத்துக்கு ஒரு அளவுக்காவாவது விளம்பரம் இருக்கணுமேன்னு அவரை கூப்பிட்டிருக்காங்க போலிருக்கு. வஞ்சகமில்லாமத்தான் நடிச்சிருக்காரு. அதே மாதிரி வில்லன் தாதாவா நடிச்சவரும் நல்லாத்தான் நடிப்பைக் கொட்டியிருக்காரு. அவருக்கு இன்னும் கொஞ்சம் இடம் கிடைச்சா கோடம்பாக்கத்தில் கால் ஊன்றிவிடுவார் என்று நினைக்கிறேன்.

ஹீரோயினா பாக்யாஞ்சலி. சமீபத்துல வில்லன் நடிகரோட மல்லுக்கட்டி போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு அலைஞ்சதே.. அந்தப் பொண்ணுதான். பாரதிராஜாவின் மருமகளின் சொந்தத் தங்கை. ஒரு அட்வைஸ் கூடவா செய்யக் கூடாது..? நல்ல படமா பார்த்து நடிம்மான்னு..


நடக்குது. பார்க்குது.. சிரிக்குது. போகுது.. இப்படியே முக்கால் மணி நேரம் செஞ்சுட்டு 55 நிமிஷம் கழிச்சுதான்பா பாப்பா வாய் திறந்து பேசுது. அப்ப படத்தை எந்த மாதிரி யோசிச்சு எடுத்திருக்காங்கன்னு பார்த்துக்குங்க.. இதுல இந்தப் பொண்ணுக்கு இந்தப் படத்துல இப்படி வாக்கிங் போனதுக்காக 2 லட்சம் ரூபா சம்பளமாம்.. கொடுமையா இல்லே..?

இதுல இன்னொரு கேவலமான காமெடி. ஹீரோவின் தங்கையை ஒரு குட்டிப் பையன் டாவடிப்பது.. காமெடிக்கு ஒரு அளவில்லையா..? இந்த மாதிரி கர்மத்தையெல்லாம் செஞ்சுட்டு அப்புறம் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வரலை.. வரலைன்னு புலம்பினா என்ன அர்த்தம்..? ஏதோ ஒரு வரில சொல்லிட்டுப் போனால்கூட பரவாயில்லை.. சீன் பை சீன் அந்தப் பையன் பிளஸ் டூ படிக்கிற பொண்ணை லவ் பண்றான்ற மாதிரி சீன் வைச்சா என்ன அர்த்தம்..? சென்சார்காரங்க கட்டிங் வாங்கிட்டாங்களோன்னு சந்தேகம் வருது..

ஒளிப்பதிவு சுமார்தான்.. காட்சிகளின் இடையிடையே ஒளி கூடுதல், குறைதல் என்று பல்லாங்குழி விளையாடுகிறது. இசையும் அதே போலத்தான். நடனக் காட்சிகளைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தப் படத்தின் நடனக் காட்சிகளைப் போல் நீங்கள் கண்டிப்பாக வேறு படங்களில் பார்த்திருக்கவே முடியாது. அவ்வளவு வேகம்.. ஆமாமாம்.. நடக்குறாங்க.. நடக்குறாங்க.. நடக்குறாங்க.. இப்படி நடக்குறதையே டான்ஸுன்னு வைச்சு இத்தனை நாளா நாம நினைச்சிருந்த சினிமா டான்ஸுக்கு மங்களம் பாடியிருக்காரு இயக்குநர். ரொம்பவே பாராட்டலாம். இதுலேயும் சிக்கனம் பார்த்திருக்காரு போலிருக்கு.

பையனும், அப்பாவும் ஏன் பிரிஞ்சாங்கன்றதை சொல்ற அந்த பிளாஷ்பேக் மட்டும் கொஞ்சம் தேறும்னு நினைக்கிறேன். ஏன்னா நம்ம சடுகுடு யுவராணி இதுலதான் வர்றாங்க.. ஓகே..

ஏதோ இந்த ஹீரோ கம் இயக்குநர் மாதிரி ஆர்வம் இருக்குறவங்களும் இப்படியே படம் எடுத்து ஒரு படம் எடுத்திட்டேன்னு கணக்குக் காட்டிட்டு போயிடறாங்க.. இதனால வர்றவங்களும் இதே மாதிரி படம் எடுக்கலாம்னு நினைச்சு உள்ளதும் போய் ஓடுறாங்க. இதுதான் சினிமாவுலகத்துல தொடர்ந்து நடக்குது.

லோ பட்ஜெட் படம்ன்னு காட்டுறதுக்காக படத்தோட ஸ்டில்ஸ்களைக்கூட எடுக்காம, எடுத்தும் பிரஸ்ஸுக்குக் கொடுக்காம சிக்கனம் பார்த்தது ரொம்பவே டூ மச்சால்ல இருக்கு.. இப்ப இதுக்கு நான் எங்கேயிருந்து போட்டோஸை சுடுறது..? அல்லாருக்கும் போன் பண்ணிக் கேட்டா.. “அந்தக் கம்பெனிக்காரங்க போட்டோவே தரலையே..? தந்தாத்தானே போடுறதுக்கு..?” என்றார்கள்.. எனக்கு வந்த சோதனையைப் பாருங்க.. வேற வழியில்லாம இந்தப் படத்தோட ஆடியோ ரிலீஸ் விழால எடுத்த போட்டோக்களைத்தான் இங்க போட வேண்டியதாப் போச்சு..

ஆனாலும், அனைத்து வகை ரைட்ஸ்களை விற்றாலும் இந்தப் படத்துக்குப் போட்ட காசை எடுத்திரலாம்.. இதுல சாய்குமார் இருக்கிறதால தெலுங்குல 1 லட்சத்துக்காச்சும் வித்திரலாம்.. ஹீரோ போட்ட கணக்கு ஓகேயாயிருச்சு. எனக்குத்தான் 60 ரூபா தண்டச் செலவு.

யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இன்னொருத்தனும் இருக்காண்டான்னு.. யாராவது கிளம்புங்கப்பா.. ப்ளீஸ்..

52 comments:

வழிப்போக்கன் - யோகேஷ் said...

anne : motha thenda selavy
60 rupa + call charge

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//நம்ம சடுகுடு //

ஆஹா.., வசந்த கால நினைவுகள்.

சடுகுடு ராஜா வோட ரசிகரா நீங்கள்?

Gnana Prakash said...

எப்படி தான் இந்த படத்தை எல்லாம் பார்கீறீங்க

kanagu said...

உங்களோட மன தைரியத்த பாராட்டுறேன் அண்ணா :)

jaya said...

http://www.shreyafilms.com/production.html

if u r true tamilan pls comments on this film

jaya said...

i i know u r not comment on this film, film name is thaa,

u r the business man , who ever watching or click ur url, u will get money from web maker.

ம.தி.சுதா said...

சடுகுடுவா... அப்ப கலாய்ப்போமா..??

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

சேட்டைக்காரன் said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இன்னொருத்தனும் இருக்காண்டான்னு.. யாராவது கிளம்புங்கப்பா.. ப்ளீஸ்..//

ஏன் இந்த கொலைவெறி...? :-)

Indian said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இன்னொருத்தனும் இருக்காண்டான்னு.. யாராவது கிளம்புங்கப்பா.. ப்ளீஸ்.//


கோட்டி - சினிமா விமர்சனம்

படகோட்டி said...

மொக்கைப் படம்னுதான் தெரியதே... அப்புறம் ஏங்க இதுக்கு ஒரு பதிவு எழுதுணீங்க... நீங்க தெரிஞ்சே தியேட்டருக்குப் போய் படம் பார்த்த மாதிரி, எங்களையும் ஒரு மொக்கைப் பதிவைப் படிக்க வைச்சுட்டீங்களே.. நீங்க எண்ணிக்கைக்கு ஒரு பதிவு போடுவதற்காக எங்களை இப்படி காவு வாங்கக்கூடாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வழக்கம்போல 9 பேர்தான்.///

படம்பார்க்க சொன்னா தியேட்டர்ல எத்தனை பேருன்னு என்னிக்கிட்டா இருக்கீங்க

ரிஷி said...

"அய்யனார்" அப்படினு ஒரு படம் வந்திருக்கு சரவணன். ஆதி நடிச்சது. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பார்த்தேன். நல்லாத்தான் இருந்தது விறுவிறுவினு. மசாலாதான். ஆனா கொடுத்த விதம் நல்லாருந்தது. முடிஞ்சா அந்தப் படம் பத்தி ஒரு பதிவு போடுங்க..

ஜெட்லி... said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இன்னொருத்தனும் இருக்காண்டான்னு.. யாராவது கிளம்புங்கப்பா.. ப்ளீஸ்

//


ஹீ ...ஹீ.. நான் இப்போ படத்துக்கு போறதே ரொம்ப கம்மியாகி போச்சு...

பன்-பட்டர்-ஜாம் said...

heroein மனோஜ் மச்சினிச்சியா ? ஏதோ ரூட் விட்ட மாதிரி கதை கேள்விப்பட்டேன். மெய்யாலுமாவா

globetrotter said...

அண்ணா, யாம் பெற்ற இன்பம்தான் பெருக இவ்வைகம் யாம் பெற்ற துன்பம் இல்லை... அதுசரி உங்கள நம்பி ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே ....

பட்டாபட்டி.... said...

எண்ணி அப்பன் தாதா உருகிப் போய் நிற்கையில் மகன் படியேறி வருகிறான். அப்பனைப் பார்த்து கண்ணீர் விட்டவன், "யார் சொன்னது எங்கப்பனுக்கு கொள்ளி போட ஆளில்லைன்னு..? நான் இருக்கேன்டா. இந்த சிவன் இருக்கான்டா"ன்னு சொல்லி வில்லன் தாதாக்களை அழிக்கப் புறப்படுகிறார்.
//


ஏண்ணே.. அப்பவே தீப்பெட்டி கொடுத்து, கொள்ளிபோட உதவியிருந்தால்.. முடிஞ்சிருக்குமே..(அதாவது..படம் முடிஞ்சிருக்குமே!!)

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
anne : motha thenda selavy
60 rupa + call charge]]]

வேற வழி.. சினிமாவுக்கும் போகணும். அதுவும் நல்ல படமா இருக்கோணும். எங்கிட்டுப் போறது..?

உண்மைத்தமிழன் said...

[[[SUREஷ் (பழனியிலிருந்து) said...

//நம்ம சடுகுடு //

ஆஹா.. வசந்த கால நினைவுகள்.
சடுகுடு ராஜாவோட ரசிகரா நீங்கள்?]]]

ராஜா இல்லை. ராணியின் ரசிகன்..

உண்மைத்தமிழன் said...

[[[Gnana Prakash said...
எப்படிதான் இந்த படத்தை எல்லாம் பார்க்கீறீங்க?]]]

தலைவிதி.. வேற என்னத்த சொல்ல..?

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
உங்களோட மன தைரியத்த பாராட்டுறேன் அண்ணா:)]]]

நானே வம்படியா படத்துக்குப் போயிட்டு இப்ப புலம்புறேன். இதுல என்னத்த தைரியம்..?

உண்மைத்தமிழன் said...

[[[jaya said...

http://www.shreyafilms.com/production.html

if u r true tamilan pls comments on this film.]]]

பார்த்திருவோம்.. வர்றேன் மேடம்.. வர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[jaya said...

i i know u r not comment on this film, film name is thaa,

u r the business man, who ever watching or click ur url, u will get money from web maker.]]]

"தா" படமா..? நம்ம சூரியபிரபாகர் படமாச்சே..? பிரிவியூலேயே பார்த்துட்டு விமர்சனம் எழுதியாச்சே.. நீங்க படிக்கலையா..?

இங்க போய் படிங்க மேடம் : http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_04.html

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

சடுகுடுவா... அப்ப கலாய்ப்போமா..??

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்]]]

ம்.. ரெடி.. ஸ்டார்ட்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இன்னொருத்தனும் இருக்காண்டான்னு.. யாராவது கிளம்புங்கப்பா.. ப்ளீஸ்..//

ஏன் இந்த கொலைவெறி...? :-)]]]

புலம்புறதுக்கு எனக்கொரு துணை கிடைக்கும் பாருங்க.. அதுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இன்னொருத்தனும் இருக்காண்டான்னு.. யாராவது கிளம்புங்கப்பா.. ப்ளீஸ்.//

கோட்டி - சினிமா விமர்சனம்]]]

இந்தியனுக்கு ஒரு ஜே..!

உண்மைத்தமிழன் said...

[[[படகோட்டி said...

மொக்கைப் படம்னுதான் தெரியதே... அப்புறம் ஏங்க இதுக்கு ஒரு பதிவு எழுதுணீங்க. நீங்க தெரிஞ்சே தியேட்டருக்குப் போய் படம் பார்த்த மாதிரி, எங்களையும் ஒரு மொக்கைப் பதிவைப் படிக்க வைச்சுட்டீங்களே.. நீங்க எண்ணிக்கைக்கு ஒரு பதிவு போடுவதற்காக எங்களை இப்படி காவு வாங்கக் கூடாது.]]]

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு சொல்ற மாதிரிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வழக்கம்போல 9 பேர்தான்.///

படம் பார்க்க சொன்னா தியேட்டர்ல எத்தனை பேருன்னு என்னிக்கிட்டா இருக்கீங்க?]]]

இப்பல்லாம் தியேட்டருக்குள்ள போன உடனேயே முதல் வேலையே இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
"அய்யனார்" அப்படினு ஒரு படம் வந்திருக்கு சரவணன். ஆதி நடிச்சது. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பார்த்தேன். நல்லாத்தான் இருந்தது விறுவிறுவினு. மசாலாதான். ஆனா கொடுத்த விதம் நல்லாருந்தது. முடிஞ்சா அந்தப் படம் பத்தி ஒரு பதிவு போடுங்க..]]]

போட்டிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.. இன்னொருத்தனும் இருக்காண்டான்னு.. யாராவது கிளம்புங்கப்பா.. ப்ளீஸ்//

ஹீ ...ஹீ.. நான் இப்போ படத்துக்கு போறதே ரொம்ப கம்மியாகி போச்சு...]]]

நீ கல்யாணம் பண்ணினதுல இருந்து வீட்டை விட்டு வெளில வர்றதே குறைஞ்சு போச்சுன்னு தகவல் வந்திருக்கு தம்பி.. எங்களைக்கூட பார்க்க வர மாட்டேன்ற..?

உண்மைத்தமிழன் said...

[[[பன்-பட்டர்-ஜாம் said...
heroein மனோஜ் மச்சினிச்சியா ? ஏதோ ரூட் விட்ட மாதிரி கதை கேள்விப்பட்டேன். மெய்யாலுமாவா..]]]

அதான் ஏகத்துக்கும் பிரச்சினையாகி கொஞ்ச நாள் பரபரப்பா இருந்துச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[globetrotter said...
அண்ணா, யாம் பெற்ற இன்பம்தான் பெருக இவ்வைகம் யாம் பெற்ற துன்பம் இல்லை. அது சரி உங்கள நம்பி ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே.]]]

பணப் பெட்டியோட வர்றீங்களா..? ரெடியா இருக்கேன்..

உண்மைத்தமிழன் said...

[[[பட்டாபட்டி.... said...

எண்ணி அப்பன் தாதா உருகிப் போய் நிற்கையில் மகன் படியேறி வருகிறான். அப்பனைப் பார்த்து கண்ணீர் விட்டவன், "யார் சொன்னது எங்கப்பனுக்கு கொள்ளி போட ஆளில்லைன்னு..? நான் இருக்கேன்டா. இந்த சிவன் இருக்கான்டா"ன்னு சொல்லி வில்லன் தாதாக்களை அழிக்கப் புறப்படுகிறார்.//

ஏண்ணே.. அப்பவே தீப்பெட்டி கொடுத்து, கொள்ளிபோட உதவியிருந்தால் முடிஞ்சிருக்குமே..(அதாவது படம் முடிஞ்சிருக்குமே)]]]

கரெக்ட்டு பட்டாபட்டி.. உன்னை மாதிரி திங்க் பண்ற ஆளுங்க கோடம்பாக்கத்துல கம்மியா இருக்காங்க. நீ உடனே ஒரு மஞ்சப் பையைத் தூக்கிக்கிட்டு கோடம்பாக்கம் வந்து சேரு.. எங்கியோ போயிருவ..!

மதுரை பாண்டி said...

//ஹீரோ போட்ட கணக்கு ஓகேயாயிருச்சு. எனக்குத்தான் 60 ரூபா தண்டச் செலவு

Ha ha... romba comedy-ah iruku... annalum unga nermai pidichurukku!!!

ஐத்ருஸ் said...

ஒலக சினிமானா என்ன? ஒலக நாயகனின் சினிமாவா?

ungal manathairiyathai mechukiren.

கானா பிரபா said...

இன்று முதல் இடிதாங்கி உண்மைத் தமிழன் என்ற பட்டத்தை வழங்கி அமர்கிறேன் அண்ணே

செங்கோவி said...

இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்துட்டே நொந்து போனேன்..என்ன இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவர்ணே!

பன்-பட்டர்-ஜாம் said...

[[[பன்-பட்டர்-ஜாம் said...
heroein மனோஜ் மச்சினிச்சியா ? ஏதோ ரூட் விட்ட மாதிரி கதை கேள்விப்பட்டேன். மெய்யாலுமாவா..]]]

/// அதான் ஏகத்துக்கும் பிரச்சினையாகி கொஞ்ச நாள் பரபரப்பா இருந்துச்சே..! ///

அண்ணே அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்களேன்...

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை பாண்டி said...

//ஹீரோ போட்ட கணக்கு ஓகேயாயிருச்சு. எனக்குத்தான் 60 ரூபா தண்டச் செலவு.

Ha ha... romba comedy-ah iruku... annalum unga nermai pidichurukku]]]

ஒருத்தன் புலம்புறது இன்னொருத்தனுக்கு நேர்மையா இருக்கு..! என்ன கொடுமை சரவணா இது..?

உண்மைத்தமிழன் said...

[[[ஐத்ருஸ் said...
ஒலக சினிமானா என்ன? ஒலக நாயகனின் சினிமாவா?
ungal manathairiyathai mechukiren.]]]

உலக நாயகனின் சிறப்பான படங்கள் மட்டுமில்லாமல் அது போன்ற வெளிநாட்டுப் படங்களையும் குறிக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...
இன்று முதல் இடி தாங்கி உண்மைத் தமிழன் என்ற பட்டத்தை வழங்கி அமர்கிறேன் அண்ணே.]]]

நன்றி தம்பி.. பட்டம் ஓகே.. பொற்கிழியெல்லாம் கிடையாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்துட்டே நொந்து போனேன். என்ன இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவர்ணே!]]]

நான் டிரெயிலர் பார்க்கலியே..? நீங்க தப்பிச்சிட்டீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்-பட்டர்-ஜாம் said...
[[[பன்-பட்டர்-ஜாம் said...
heroein மனோஜ் மச்சினிச்சியா? ஏதோ ரூட் விட்ட மாதிரி கதை கேள்விப்பட்டேன். மெய்யாலுமாவா..]]]

//அதான் ஏகத்துக்கும் பிரச்சினையாகி கொஞ்ச நாள் பரபரப்பா இருந்துச்சே.!//

அண்ணே அந்த கதைய கொஞ்சம் அவுத்து விடுங்களேன்.]]]

அதுகூடத் தெரியாதா..? கூகிளாண்டவர்கிட்ட கேட்டுப் பாருங்க.. கொண்டாந்து கொட்டுவார்..!

ஒரு வாசகன் said...

இது போன்ற படங்களுக்கு ரவிக்குமார் எப்படி இசைத்தட்டு வெளியிட ஒத்துக்கொண்டார்?

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...
இது போன்ற படங்களுக்கு ரவிக்குமார் எப்படி இசைத் தட்டு வெளியிட ஒத்துக் கொண்டார்?]]]

படத்தைப் பார்த்த பின்புதானே அதன் தகுதி என்னவென்று தெரியும்..!

தெரிந்தவர்கள், நண்பர்கள் அழைத்தால் வரத்தானே செய்ய வேண்டும். இதுதான் சினிமாவுலகம். ஒருவருக்கொருவர் உதவி..!

காவேரி கணேஷ் said...

அடிக்கிற பனியில போர்வைய போத்தி தூங்காம , உமக்கு கோட்டி படம் கேக்குதா?

உன் கடமையுணர்ச்சுக்கு அளவே இல்லையா?

சிவகுமார் said...

இந்த வாரம் வெளியான No one killed Jessica எனும் ஹிந்தி படம் பத்திரிக்கைகளால் பாராட்டப்படுகிறது. நாளை செல்கிறேன் சார். தரமான படங்களே என் முதல் சாய்ஸ். எப்போதாவது சில மசாலா படங்கள். நீங்கள் ஏன் எந்த படமாக இருப்பினும் பார்க்கிறீர்கள்???

பட்டாபட்டி.... said...

கரெக்ட்டு பட்டாபட்டி.. உன்னை மாதிரி திங்க் பண்ற ஆளுங்க கோடம்பாக்கத்துல கம்மியா இருக்காங்க. நீ உடனே ஒரு மஞ்சப் பையைத் தூக்கிக்கிட்டு கோடம்பாக்கம் வந்து சேரு.. எங்கியோ போயிருவ..!
//

ஹி..ஹி.. போங்கண்ணே.. இப்ப எதுக்கு என்னைய குழப்புறீங்க?..

கோடம்பாக்கம் வா-னு சொல்றீங்க..அப்புறம் எங்கேயோ போயிடுவீகனு சொல்றீங்க..

எங்கேனு கடைசிவரைக்கும் பதிலே சொல்லாம போறிங்க பாருங்க..அங்கதான்...உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..!!!!
:-)

R.Gopi said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்//

********

தலைவா...

இதே போல எல்லா மொக்கை படத்தையும் பார்த்துட்டு ஏதோ ஒரு சாக்கு சொல்ல வேண்டியது... இதே வேலையா போச்சு..

நாங்க எல்லாம், இந்த படத்தோட போஸ்டர கூட பார்க்க மாட்டோம்...

கடைசியா போஸ்டர்ல பார்த்த ரெண்டு டெர்ரர் படங்கள்...

1) “மன்மதன் அம்பு”
2) “விருதகிரி”

உண்மைத்தமிழன் said...

[[[காவேரி கணேஷ் said...
அடிக்கிற பனியில போர்வைய போத்தி தூங்காம, உமக்கு கோட்டி படம் கேக்குதா? உன் கடமையுணர்ச்சுக்கு அளவே இல்லையா?]]]

எத்தனை நாள்தான்.. எவ்ளோ நேரம்தான் தூங்குறது..? கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டாமா காவேரி..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
இந்த வாரம் வெளியான No one killed Jessica எனும் ஹிந்தி படம் பத்திரிக்கைகளால் பாராட்டப்படுகிறது. நாளை செல்கிறேன் சார். தரமான படங்களே என் முதல் சாய்ஸ். எப்போதாவது சில மசாலா படங்கள். நீங்கள் ஏன் எந்த படமாக இருப்பினும் பார்க்கிறீர்கள்???]]]

கண்டிப்பா பார்த்திருவோம்..! வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற தியேட்டர்ல ஹிந்தி படமெல்லாம் போடுறது இல்லையே.. அதுனாலதான் அது மாதிரி படங்களையெல்லாம் பார்க்க முடிவதில்லை..! இனி பார்க்கிறேன்.. நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[பட்டாபட்டி.... said...

கரெக்ட்டு பட்டாபட்டி.. உன்னை மாதிரி திங்க் பண்ற ஆளுங்க கோடம்பாக்கத்துல கம்மியா இருக்காங்க. நீ உடனே ஒரு மஞ்சப் பையைத் தூக்கிக்கிட்டு கோடம்பாக்கம் வந்து சேரு. எங்கியோ போயிருவ!//

ஹி..ஹி.. போங்கண்ணே.. இப்ப எதுக்கு என்னைய குழப்புறீங்க?..
கோடம்பாக்கம் வா-னு சொல்றீங்க..அப்புறம் எங்கேயோ போயிடுவீகனு சொல்றீங்க..
எங்கேனு கடைசிவரைக்கும் பதிலே சொல்லாம போறிங்க பாருங்க. அங்கதான். உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..]]]

பரவாயில்லை.. கற்பூரமா இருக்கியே தம்பி.. பக்குன்னு பத்திக்கிற பாரு. நீதான் கோடம்பாக்கத்துக்குத் தேவை.. உடனே வா..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//யாராவது இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதே மாதிரி வந்து சொன்னா என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்//

********
தலைவா... இதே போல எல்லா மொக்கை படத்தையும் பார்த்துட்டு ஏதோ ஒரு சாக்கு சொல்ல வேண்டியது... இதே வேலையா போச்சு. நாங்க எல்லாம், இந்த படத்தோட போஸ்டர கூட பார்க்க மாட்டோம். கடைசியா போஸ்டர்ல பார்த்த ரெண்டு டெர்ரர் படங்கள்...

1) “மன்மதன் அம்பு”
2) “விருதகிரி”]]]

நீங்க லக்கி மேன் கோபி.. நாங்கள்லாம் அன் லக்கி மேன்..!