வலையுலகத் தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு..!

02-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


முதற்கண் வலையுலகப் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அவரவர் மனதில் நினைத்திருக்கும் தீர்மானங்களும், எண்ணங்களும் நிறைவேற என் அப்பன் முருகனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இதுவரையிலும் முகமறியாத பட்சத்திலும் தொடர்ச்சியாக எனக்கு ஆதரவினையும், அன்பினையும் செலுத்தி வரும் வலையுலகத் தோழர்களுக்கு புது வருடம் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1 அன்று வலைப்பக்கமே வரக் கூடாது என்று கங்கணம் கட்டியிருந்தேன். இந்த ஒரு தீர்மானத்தை மிகச் சரியாக நிறைவேற்ற ஆசியும், அருளும் வழங்கிய என் அப்பனுக்கு நன்றி.

இந்த ஆண்டு நான் செய்ய நினைத்திருக்கும் செயல்களில் முதலாவதை இன்றிலிருந்தே துவக்குகிறேன்.

இதுவரையில் எனது பெயருக்குப் பின்னால் அனுமார் வால் போல் நீண்டிருக்கும் பிளாக்கர் எண்களை உண்மைத் தமிழன்(15270788164745573644) இன்று முதல் துறக்க முடிவு செய்துள்ளேன்.

அந்த நம்பர்களை அடையாளமாகக் கொண்டு எனது பெயருக்குப் பின்னால் போட வேண்டிய துர்பாக்கியம் ஒரு காலத்தில் எனக்கு ஏற்பட்டது. அந்தக் கர்மத்தை மீண்டும் வருடத் துவக்கத்தில் நல்ல மூடில் இருக்கும் உங்களுக்குத் தெரிவித்து, காண்பித்து உங்களது தற்போதைய மகிழ்ச்சியான தருணங்களைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

ஏதோ ஒரு கருமாந்திரம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். போதும்.. அவ்வளவுதான். இப்போது அந்த நம்பர்கள் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். எடுத்து விடப் போகிறேன். (மா.சிவக்குமாரும், பாலபாரதியும் சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கிறேன்)

இனிமேல் நான் எங்கே பின்னூட்டமிட்டாலும் உண்மைத்தமிழன் என்ற பெயர் மட்டும்தான் இருக்கும். பின்னால் இருந்த எண்கள் இருக்காது. பதிவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளுமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

ஒருவேளை இந்தப் பெயரில் வரும் விமர்சனத்தில் உங்களுக்கு சந்தேகம் வந்ததெனில் உடனேயே எனது தொலைபேசியில் 9840998725 தொடர்பு கொண்டு கேட்கலாம். அல்லது tamilsaran2002@gmail.com என்ற முகவரிக்கும் தொடர்பு கொண்டு கேட்கலாம்..

இரண்டும் முடியாமல் உங்களுக்குச் சந்தேகமே மேலானதாக இருந்தால், தயவு செய்து அந்தப் பின்னூட்டத்தைத் தயவு தாட்சண்யமில்லாமல் நீக்கி விடுங்கள்.

எனது பெயரில் அனானி மற்றும் அதர் ஆஃஷனை பயன்படுத்தி யாராவது பின்னூட்டங்களைப் போட்டால் அதற்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பில்லை என்பதை மிகத் தெளிவாக உங்களிடம் கூற விரும்புகிறேன்.

இதை அழுத்தமாகச் சொல்வதற்கு காரணம் என்னவெனில் நான் ஏற்கெனவே எழுதிய இந்தப் பதிவில் சொல்லியிருந்ததைப் போல பதிவர் சண்முககுமார், உண்மைதமிழன் என்னும் பதிவினை உருவாக்கி வைத்திருக்கிறார். அதில் என்னையும் கேபிள் சங்கரையும், உஜிலா தேவியையும் இணைத்து வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக எங்களுக்குப் பின்னூட்டமும் போட்டு வருகிறார். இவருடைய உண்மையான நோக்கம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

சென்ற பதிவில் நான் எழுதியபோதே பல பதிவர்கள் எனக்கு அறிவுரை சொன்னார்கள். “நீங்கள்தான் அளவுக்கு அதிகமாக சீன் போடுகிறீர்கள்..” என்றார்கள். அவர்களையெல்லாம் இந்தப் பதிவுக்குப் போய் பார்த்துவிட்டு வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அவர் தெரியாமல்தான் உருவாக்கியிருக்கிறார் என்றெல்லாம் எனக்குப் பதிலளித்த பதிவர்களிடம் மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். அவர் தெரிந்துதான் செய்திருக்கிறார். இப்போதும் செய்து வருகிறார். மேற்கொண்டு நடப்பவைகளுக்கு நான் பொறுப்பில்லை.

உண்மைத்தமிழன் என்னும் பெயருக்கு நான் ராயல்டியோ, கியாரண்டியோ இல்லை என்கிற உங்களது கருத்தை தலை குனிந்து நான் ஏற்றுக் கொள்கிறேன். இது பற்றி கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.. அது இன்னொரு உண்மைத்தமிழன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்..

இனிமேலும் இந்த மாதிரி சில்லுண்டி வேலைகளுக்கு எனது பொன்னான நேரத்தைச் செலவழிக்க நான் தயாராக இல்லை.. இந்த வருடம் மெய்யாலுமே செய்ய வேண்டிய வேலைகள் எனக்கு நிறைய இருக்கின்றன. வலையுலகப் பணிகளைவிட சொந்தப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப் போகிறேன்.

பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து தற்போதைக்கு விடைபெறுகிறேன்.

நன்றி

வணக்கம்.

62 comments:

பாரத்... பாரதி... said...

உண்மைத்தமிழன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மைக் முனுசாமி said...

சார் பதிவர்களுக்குதான் புத்தாண்டு வாழ்த்து சொல்வீர்களா... எம் போன்ற படிப்பவர்களுக்கு சொல்ல மாட்டீர்களா...

பாரத்... பாரதி... said...

சோதனைகள் வருவதும் அதனை சாதனைகளாக மாற்றுவது ஒன்றும் உங்களுக்கு புதிதில்லையே.

ஐத்ருஸ் said...

Ok

மாணவன் said...

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

ம.தி.சுதா said...

சகோதரா தீட்டத் தீட்டத் தான் வைரங்களின் மதிப்பு கூடுகிறது அதை ஒரு பக்கம் கடாசி விட்டு வழமை போல் தொடருங்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னண்ணே இது, மேடைப் பேச்சு மாதிரியே இருக்கு :)

கும்மி said...

இதுக்கும் மைனஸா? ஒரு மார்க்கமாதான் இருக்காய்ங்க போலிருக்கு. :-(

Feroz said...

Agreed.

கலையன்பன் said...

இது  எனது முதல் கமெண்ட்.
இந்தப் பதிவில் உங்களது தன்னிலை விளக்கத்தை,
தெளிவாய் தந்துள்ளீர்கள்.  எனவே, நீங்கள்பாட்டுக்கு
மற்றதைப் பற்றிக் கவலைப்படாமல்
போய்க்கொண்டேயிருங்கள்.
உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
-கலையன்பன்.
இது பாடல் பற்றிய தேடல்!

கோவி.மணிசேகரன் பற்றி சிறு குறிப்பு + ஒரு பாடல்!


!

பழமைபேசி said...

தேர்தல் வேலைகளில் களமிறங்கப் போகிறேன்ன்னு சுருக்கமா சொல்ல வர்றீங்க. வாழ்த்துகள்ணே! அம்மா, யார் யாரையோ சந்திச்சு, உரையாடினதா செய்தி வந்துச்சு... உங்க பேரைத் தவறுதலா விட்டிட்டாய்ங்க போலிருக்கு... போனாப் போவுது, அதிலென்ன கெடக்கு?! சமூகக் கடமைதான முக்கியம்?!

ராஜன் said...

மேல தூக்கி இருக்கறது + ஓட்டு தானே!

சேக்காளி said...

புத்தாண்டில் நல்ல முடிவு எடுத்திருக்கீங்க.வாழ்த்துக்கள்.இதே கொள்கைய கூடிய மட்டும் எப்பவும் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எத்தனை லிங்க். முடியலை. வாழ்த்துக்கள் அண்ணா

புகழேந்தி said...

It is unfortunate for us to see such people. They are capable of writing in Tamil. Using this capability they wrote any thing discriminating letters, drafts, posts, comments,etc., We have seen media in Tamil Nadu, of course in India, irrespective of press or electronic, spread rumours against Tamils in Tamil. You need not worry about some dirty comments by somebody. It is not a work of an individual, it is an organized crime against the entire Tamil community. I suspect some times that all of these forces are trying to eradicate Tamil, Tamils and their Home Land. Sorry for the message in English. I am not able to type my message in Tamil. So, forgive me. Be united where ever we are. Don't be shy of these things. Let us continue our journey.....

பார்வையாளன் said...

பதிவர் சண்முககுமார், உண்மைதமிழன் என்னும் பதிவினை உருவாக்கி வைத்திருக்கிறார் ”

அவருடன் தொடர்பு கொண்டு விசாரித்தால், தான்தான் உண்மையான உண்மைதமிழன் என்கிறாரே..

குடும்ப பாடலை பாடி நீங்கள்தான் உண்மையான உண்மை தமிழன் என நிரூபிக்குமாறு கேட்டு கொள்கிறேன்..

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
இந்த வருடம் மெய்யாலுமே செய்ய வேண்டிய வேலைகள் எனக்கு நிறைய இருக்கின்றன. வலையுலகப் பணிகளைவிட சொந்தப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப் போகிறேன்.
//
சரியான முடிவுண்ணே..........

Indian Share Market said...

புத்தாண்டில் நல்ல முடிவு எடுத்திருக்கீங்க.வாழ்த்துக்கள்

தில்லு முல்லு said...

///////// ஒருவேளை இந்தப் பெயரில் வரும் விமர்சனத்தில் உங்களுக்கு சந்தேகம் வந்ததெனில் உடனேயே எனது தொலைபேசியில் 9840998725 தொடர்பு கொண்டு கேட்கலாம்
/////////

அப்படியே போன் பண்ணிட்டாலும் நீங்க FIRST RING போகறதுக்குல எடுத்து பேசிட போறீங்கல்லாகும் ..போங்க சார் ...,இந்த தடவை BOOK FAIR ல நான் உங்களை பார்க்க தான் போறேன் ..,அன்னிக்கி இருக்கு கச்சேரி :))))

தில்லு முல்லு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழன்

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
உண்மைத்தமிழன் அவர்களுக்கு ரோஜாப் பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.]]]

நானும் உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மைக் முனுசாமி said...
சார் பதிவர்களுக்குதான் புத்தாண்டு வாழ்த்து சொல்வீர்களா... எம் போன்ற படிப்பவர்களுக்கு சொல்ல மாட்டீர்களா...?]]]

மன்னிச்சுக்குங்க முனுசாமி ஸார்.. உங்களுக்கும் சேர்த்துத்தான்.. திருத்திவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
சோதனைகள் வருவதும் அதனை சாதனைகளாக மாற்றுவது ஒன்றும் உங்களுக்கு புதிதில்லையே.]]]

இருந்தாலும் சொல்லிவிட்டுச் செய்வது நல்லதுதானே.. அதனால்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஐத்ருஸ் said...

Ok]]]

வருகைக்கு நன்றி ஐத்ரூஸ் ஸார்.. இதென்ன பெயரோ..? வித்தியாசமாக இருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.]]]

நன்றி மாணவன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...
சகோதரா தீட்டத் தீட்டத்தான் வைரங்களின் மதிப்பு கூடுகிறது. அதை ஒரு பக்கம் கடாசிவிட்டு வழமை போல் தொடருங்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)]]]

தங்களுடைய உற்சாகத்திற்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என்னண்ணே இது, மேடைப் பேச்சு மாதிரியே இருக்கு :)]]]

அப்போ நான் மேடையேறலாம்னு சொல்றீங்க..? நன்றி குருஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...
இதுக்கும் மைனஸா? ஒரு மார்க்கமாதான் இருக்காய்ங்க போலிருக்கு. :-(]]]

அதான.. ஏன் இந்தக் கொலை வெறியோ..?

உண்மைத்தமிழன் said...

[[[Feroz said...

Agreed.]]]

நன்றி பெரோஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[கலையன்பன் said...
இது எனது முதல் கமெண்ட்.
இந்தப் பதிவில் உங்களது தன்னிலைவிளக்கத்தை,
தெளிவாய் தந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் பாட்டுக்கு மற்றதைப் பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டேயிருங்கள்.
உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
-கலையன்பன்.
இது பாடல் பற்றிய தேடல்!
கோவி.மணிசேகரன் பற்றி சிறு குறிப்பு + ஒரு பாடல்!]]]

வருகைக்கும், பின்னூட்ட ஆதரவிற்கும் நன்றி கலையன்பன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
தேர்தல் வேலைகளில் களமிறங்கப் போகிறேன்ன்னு சுருக்கமா சொல்ல வர்றீங்க. வாழ்த்துகள்ணே! அம்மா, யார் யாரையோ சந்திச்சு, உரையாடினதா செய்தி வந்துச்சு. உங்க பேரைத் தவறுதலா விட்டிட்டாய்ங்க போலிருக்கு. போனாப் போவுது, அதிலென்ன கெடக்கு?! சமூகக் கடமைதான முக்கியம்?!]]]

நன்னி பழமைபேசி.. அம்மா கட்சியில என்னையும் சேர்த்து வைத்து பேசிய புண்ணியம் உம்மையே சேரட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...
மேல தூக்கி இருக்கறது + ஓட்டுதானே!]]]

ஓவர் நக்கலு தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[சேக்காளி said...
புத்தாண்டில் நல்ல முடிவு எடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். இதே கொள்கைய கூடிய மட்டும் எப்பவும் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.]]]

அறிவுரைக்கு நன்றி சேக்காளி..

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எத்தனை லிங்க். முடியலை. வாழ்த்துக்கள் அண்ணா.]]]

படிச்சுத்தான் ஆவணும்.. வேற வழியில்லை தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[புகழேந்தி said...
It is unfortunate for us to see such people. They are capable of writing in Tamil. Using this capability they wrote any thing discriminating letters, drafts, posts, comments, etc., We have seen media in Tamil Nadu, of course in India, irrespective of press or electronic, spread rumours against Tamils in Tamil. You need not worry about some dirty comments by somebody. It is not a work of an individual, it is an organized crime against the entire Tamil community. I suspect some times that all of these forces are trying to eradicate Tamil, Tamils and their Home Land. Sorry for the message in English. I am not able to type my message in Tamil. So, forgive me. Be united where ever we are. Don't be shy of these things. Let us continue our journey.]]]

நன்றி புகழேந்தி.. நேர்மையான முறையில் விவாதம் செய்யவோ, கருத்துப் பரிமாற்றம் செய்யவோ தயாராகவே உள்ளேன்.

ஆனால் இதுபோல் மறைமுகமாக குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பது தவறுதானே..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

பதிவர் சண்முககுமார், உண்மைதமிழன் என்னும் பதிவினை உருவாக்கி வைத்திருக்கிறார் ”

அவருடன் தொடர்பு கொண்டு விசாரித்தால், தான்தான் உண்மையான உண்மைதமிழன் என்கிறாரே..]]]

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்..?

[[[குடும்ப பாடலை பாடி நீங்கள்தான் உண்மையான உண்மை தமிழன் என நிரூபிக்குமாறு கேட்டு கொள்கிறேன்..]]]

குடும்பப் பாடலைத் தேடிக் கொண்டிருக்கிறேன் பார்வை..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//இந்த வருடம் மெய்யாலுமே செய்ய வேண்டிய வேலைகள் எனக்கு நிறைய இருக்கின்றன. வலையுலகப் பணிகளைவிட சொந்தப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப் போகிறேன்.//

சரியான முடிவுண்ணே.]]]

நன்றி யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[தில்லு முல்லு said...

///////// ஒருவேளை இந்தப் பெயரில் வரும் விமர்சனத்தில் உங்களுக்கு சந்தேகம் வந்ததெனில் உடனேயே எனது தொலைபேசியில் 9840998725 தொடர்பு கொண்டு கேட்கலாம்/////////

அப்படியே போன் பண்ணிட்டாலும் நீங்க FIRST RING போகறதுக்குல எடுத்து பேசிட போறீங்கல்லாகும். போங்க சார். இந்த தடவை BOOK FAIR ல நான் உங்களை பார்க்க தான் போறேன். அன்னிக்கி இருக்கு கச்சேரி :))))]]]

சரி.. சரி. கோச்சுக்காதீங்க பிரதர்.. புத்தக விழால சந்திச்சு நிறைய பேசுவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[தில்லு முல்லு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழன்.]]]

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ஸார்..!

kanagu said...

உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா :) :)

Philosophy Prabhakaran said...

//
பதிவர் சண்முககுமார், உண்மைதமிழன் என்னும் பதிவினை உருவாக்கி வைத்திருக்கிறார் ”

அவருடன் தொடர்பு கொண்டு விசாரித்தால், தான்தான் உண்மையான உண்மைதமிழன் என்கிறாரே..

குடும்ப பாடலை பாடி நீங்கள்தான் உண்மையான உண்மை தமிழன் என நிரூபிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.. ///

ஓஹோ... இதுதான் அந்த கிசுகிசு மேட்டரா...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே உங்களுக்கும் பிரச்சனையா? சரி விடுங்க நாங்க இருக்கோம்

R.Gopi said...

தலைவா...

இந்த பிரச்சனை புத்தாண்டு பிறந்து, இன்னும் ஜாஸ்தியா ஆயிடுச்சே...

உங்க மேல இவ்ளோ அன்பா அந்த நபருக்கு...

இன்னும் என்னவெல்லாம் செய்யப்போறாரோ!!?

சரி, நீங்க சொன்ன மாதிரி, இதெல்லாம் கண்டுக்காம, அடுத்த வேலைய பாருங்க ஜி...

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா :) :)]]]

நன்றி கனகு தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

//பதிவர் சண்முககுமார், உண்மைதமிழன் என்னும் பதிவினை உருவாக்கி வைத்திருக்கிறார் ”

அவருடன் தொடர்பு கொண்டு விசாரித்தால், தான்தான் உண்மையான உண்மைதமிழன் என்கிறாரே. குடும்ப பாடலை பாடி நீங்கள்தான் உண்மையான உண்மை தமிழன் என நிரூபிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.. ///

ஓஹோ... இதுதான் அந்த கிசுகிசு மேட்டரா...]]]

கிசுகிசுவா பேசுற மேட்டரா இது..? மெயின் மேட்டரே இதுதாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே உங்களுக்கும் பிரச்சனையா? சரி விடுங்க நாங்க இருக்கோம்.]]]

உங்களுக்கும் பிரச்சினையா..? சரி விடுங்க சிபி.. நான் இருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
தலைவா... இந்த பிரச்சனை புத்தாண்டு பிறந்து, இன்னும் ஜாஸ்தியா ஆயிடுச்சே. உங்க மேல இவ்ளோ அன்பா அந்த நபருக்கு. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறாரோ!!? சரி, நீங்க சொன்ன மாதிரி, இதெல்லாம் கண்டுக்காம, அடுத்த வேலைய பாருங்க ஜி.]]]

ஆறுதலுக்கும், ஆலோசனைக்கும் நன்றி கோபி..!

தமிழ் அனானி said...

ஏன்ணே.... உஜிலாதேவிக்கு இனிமா கொடுத்த மாறி.. அந்த உ.தவுக்கும் கொடுத்துடலமா?

SurveySan said...

tamilmanam 3rd rank koduthirukkaanga. neenda 2nd rank padaththai potturukkeenga. fyi :)

congrats anyway.

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் அனானி said...
ஏன்ணே.... உஜிலாதேவிக்கு இனிமா கொடுத்த மாறி.. அந்த உ.தவுக்கும் கொடுத்துடலமா?]]]

வேண்டாம்.. அவர்களுக்கே தோணும்போது தோணட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...
tamilmanam 3rd rank koduthirukkaanga. neenda 2nd rank padaththai potturukkeenga. fyi :)

congrats anyway.]]]

நன்றி சர்வேசன். இப்போது மாற்றி விட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.]]]

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸார்..!

சிவகுமார் said...

எதிர்காலப்பணி வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்!!

vinodh said...

இந்தப் பதிவை நீங்க எழுதுனீங்களா இல்லை அந்த இன்னொரு உண்மைத்தமிழன் எழுதினதா? ரொம்ப எதிர்பார்த்து வந்த என்னை வழக்கத்துக்கு மாறாக ரொம்ப சின்னப் பதிவாக போட்டு ஏமாற்றியதாலேயே இந்த சந்தேகம். தெளிவுபடுத்தவும்.

மற்றபடிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்....

balaa said...

sondha vaelai-na enna brother?????????? Aanalum naan happy new year sonna neenga badhiluku sollaama poiduvingala?

balaa said...

sorry sorry.... seyya vendya vaelai-na enna brother????????

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
எதிர்காலப் பணி வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்!!]]]

நன்றி சிவகுமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[balaa said...
sondha vaelai-na enna brother?????????? Aanalum naan happy new year sonna neenga badhiluku sollaama poiduvingala?]]]

மன்னிக்கணும்.. எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும், உமது குடும்பத்திற்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[balaa said...
sorry sorry.... seyya vendya vaelai-na enna brother????????]]]

நிறைய இருக்கு.. முதல்ல வேலை தேடணும்.. அதுதான் முதல் தலையாய பிரச்சினை..!

பார்வையாளன் said...

உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!]]]

அடங்க மாட்டியா நீயி..? இதெல்லாம் தேவையில்லாதது..!