சீமானின் விடுதலை சொல்லும் செய்தி..!

09-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கறிஞர்களும், அரசுத் தரப்பினரும், காவல்துறையினரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்ததை போலவே நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது பாய்ந்திருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் உடைத்தெறிந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், குறிப்பாக ஜன்பத் ரோட்டு அம்மாவையும், அவர்தம் குடும்பத்தையும் குறி வைத்து சீமான் தாக்கியதை ரசிக்காத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு கொடுத்த பிரஷ்ஷரில் நமது ஊழல்களின் தந்தை எதையாவது செய்து தான் காங்கிரஸுக்கு நண்பன் என்பதைக் காட்ட நினைத்தார். இதற்காக அவர் கையாண்டது சீமானின் கைது நடவடிக்கையை..!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து, கடந்த ஜூலை 10-ம் தேதியன்று சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசிய பேச்சைக் குறி வைத்தே இந்தக் கைது சம்பவங்கள் நடந்தன.

இந்தக் கூட்டத்தில் வன்முறையை தூண்டியதாகவும்-158-ஏ (ஐ.பி.சி.), 2 இனங்களுக்கு இடையே பிரிவினை ஏற்படும் வகையில் பேசுவது, ஐ.பி.சி., 188 - அனுமதித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் பேசியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீமான் இதனை எதிர்பார்த்து தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸ் தரப்பில் மூன்று சிறப்புப் படைகளை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 12, 2010 அன்று எப்போதும்போல வீட்டிலோ, அல்லது யார் கண்ணிலும்படாமலோ போலீஸாரை சந்திக்க விரும்பாத சீமான், சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நேரில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது விளக்கத்தை அளித்த பின்பு போலீஸாரிடம் சரணடைய முடிவெடுத்திருந்தார்.
ஆனால் அவரை பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே விடக் கூடாது என்கிற நமது மாநிலத்தை ஆள்வோரின் சர்வாதிகார உத்தரவின்படி நிறைய தள்ளுமுள்ளுகளுக்குப் பின்பு பெரியார் சிலை அருகே அவரைக் கைது செய்து கொண்டு சென்றது ஆளும் எஜமானர்களுக்கு விசுவாசமான போலீஸ் படை. சீமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தொலைதூரத்தில் வைத்தால்தான் தொல்லைகள் கொஞ்சம் தீரும் என்று நினைத்து வேலூரில் தனிமைச் சிறையில் அடைத்தனர்.
இதன் பின்பு ஜூலை 17-ம் தேதி சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு விசாரணையில்லாமல் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசவில்லை என்கிற விஷயத்தைவிட, சீமான் மீது பிறப்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டமே செல்லாது என்றுதான் சீமான் தரப்பு வழக்கறிஞர் அதிகமாகப் பேசியிருக்கிறார்.

சீமானுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட “தேசிய பாதுகாப்புச் சட்ட மீறலினால் கைது” என்கிற அந்த உத்தரவில்  கையொப்பமிட்டவர் அன்றைய சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த சஞ்சய் அரோரா.

அப்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த ராஜேந்திரன் லண்டனில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்காக சென்றிருந்ததால் ஆணையர் பணியினரை சஞ்சய் அரோராவே கூடுதல் பொறுப்பாக மேற்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் “இப்படியொரு உத்தரவில் கையொப்பமிட மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டும்தான் தகுதியும், அனுமதியும் உண்டு. கூடுதல் ஆணையருக்கு இல்லை. ஆகவே இந்த உத்தரவே செல்லாது. எனவே சீமானை விடுதலை செய்ய வேண்டும்” என்பதுதான் சீமான் தரப்பு வழக்கறிஞரின் இறுதியான வாதம்.

இதற்கு இவர் கொடுத்த வலுவான ஆதாரம்.. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்படும் உத்தரவைப் பிறப்பிக்க மாநகர ஆணையர்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் வேறொரு வழக்கில் முன்பு ஒருமுறை பிறப்பித்த உத்தரவை இந்த நீதிமன்றத்தில் தனது தரப்பு ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளார் சீமான் தரப்பு வழக்கறிஞர்.

“அன்றையக் கூட்டத்தில் சீமான் பேசியதில் எந்த தவறும் இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர் எதையும் பேசவில்லை..” என்றெல்லாம் சீமானின் வழக்கறிஞர் வாதாடியிருந்தாலும், இந்த ஒரு விஷயமே தற்போது சீமானை விடுவிக்கப் போதுமானதாக இருந்திருக்கிறது.

இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞரோ, மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இல்லாதபோது, கூடுதல் ஆணையருக்கு முழு அதிகாரமும் உள்ளதாக வாதாடியிருக்கிறார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை மட்டுமே சுட்டிக் காட்டி சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து, அவருக்கு விடுதலையளித்து உத்தரவிட்டுள்ளனர்.
சீமான் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதியிலிருந்து இன்று டிசம்பர் 9-ம் தேதிவரையிலும் கிட்டத்தட்ட 5 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். நாளை உறுதியாக விடுதலையாக இருக்கிறார்.

இப்போது எனது கேள்வி..! உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் இருக்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள், தகவல்கள், ஆலோசனைகள் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு முன்கூட்டியே தெரியாதா..?

இருவரும் ஒரே அளவிலான வழக்கறிஞர்கள்தானே.. இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தின் பல்வேறு வகையான தீர்ப்புகள் ஆண்டு வரிசைப்படியும், குற்றப் பிரிவுகள் வரிசைப்படியும்தான் புத்தகங்களாக வெளி வந்திருக்கிறதே.. போதாக்குறைக்கு இணையத்தில் ஒரு நொடியில் பிரிண்ட் அவுட் எடுக்க முடிகிறதே..

இத்தனை வசதிகள் இருந்தும் உச்சநீதிமன்ற உத்தரவை சீமான் தரப்பு வக்கீல் தாக்கல் செய்யும்வரையில் அரசுத் தரப்பு வக்கீல் என்ன செய்து கொண்டிருந்தார்..? இது பற்றி அரசுக்கு ஆலோசனையே தரப்படவில்லையா..?

ஒருவேளை அரசு வக்கீலுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியாது என்று சொன்னால் அவர் இந்தப் பதவிக்கே லாயக்கிலாதவராகிவிடுவாரே..? முன்பே தெரியும் என்றால் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்றாகிவிடுமே..?

சீமானை சிறை வைத்தது ஜூலை 12. அவருக்கான தேசிய பாதுகாப்புத் தடைச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஜூலை 17. ஆக 5 நாட்கள் இடைவெளியில்தான் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

அப்படியிருக்கும்போது இப்படியொரு உத்தரவை பிறப்பிக்கப் போகும் முன் அரசின் உள்துறை இலாகாவினர், சட்டத் துறையை அணுகி மாநகர ஆணையர் இல்லாத நிலையில் அது மாதிரியான உத்தரவை கூடுதல் ஆணையர் இடலாமா..? அதற்குச் சட்டத்தில் இடமுண்டா.. இல்லையா..? என்றெல்லாம் ஆலோசனை கேட்டிருக்கக் கூடாதா..?

ஏனெனில் ஆணையரும், கூடுதல் ஆணையரும், அரசுத் தரப்பு வக்கீலும், உள்துறை இலாகாவினரும் அரசு சம்பளம் பெறுபவர்கள். அரசுக்கு ஆலோசனை சொல்லக் கூடியவர்கள். அதற்கான பொறுப்பானவர்கள். இவர்கள் எடுக்கும் எந்தச் செயலும் மக்களைப் பாதித்தால் அதற்கு முழுப் பொறுப்பாக வேண்டியது தமிழக அரசுதானே...!

உள்துறைச் செயலாளர் இது பற்றிய நோட்டீஸை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பும்போதே சட்டத் துறையினரிடம் கலந்தாலோசித்துவிட்டு அதன் பின்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தால் தனக்கு அத்தகைய அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது அப்போது கூடுதல் ஆணையருக்குத் தெரிந்திருக்குமே..? இதனால் சீமான் கைது பிரச்சினையே வராமல் போயிருக்குமே ..?

ஒருவேளை உள்துறையிடமிருந்து வந்த உத்தரவை அப்படியே எந்திரம்போல் கூடுதல் ஆணையர் செயல்படுத்தியிருந்தால் இதற்கான நியாயங்கள் இவரிடமிருந்துதான் முதலில் பெறப்பட வேண்டும்..

இது பற்றி சட்டத் துறையிடம் விளக்கம் கேட்கச் அறிவுறுத்தாமல் இருந்திருந்தால் தமிழக அரசின் உள்துறையும், உள்துறை பொறுப்பை வகிக்கும் முத்தமிழ் அறிஞரும் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்..!

ஏனெனில் இந்த முறைகேடான உத்தரவால் சீமான் என்ற மனிதரின் தனி மனித உரிமை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சீமான் இந்த முறைகேடான சட்ட விதிமுறை மீறலால் கடந்த 5 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பொன்னான 150 நாட்கள் வீணாகியிருக்கின்றன. இந்த நாட்களுக்கு இப்போது யார் பொறுப்பாவது..?

அவர் வெளியில் இருந்திருந்தால் சில லட்சங்களை தனது குடும்பத்திற்காக சம்பாதித்திருப்பார். அந்தச் சூழல் அப்போது இருந்தது. சிறையில் அடைக்கப்பட்ட காரணத்தினால் அவர் இழந்த லட்சங்களை இப்போது அரசு இவருக்கு நஷ்டஈடாகத் திருப்பித் தருமா..?

நான் முதல் பத்தியில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த வழக்கின் விவாதங்களை வைத்து சீமான் நிச்சயம் விடுதலையாவார் என்றுதான் சினிமா வட்டாரத்திலும், பத்திரிகைகள் வட்டாரத்திலும், வழக்கறிஞர்களின் சேம்பரிலும் பேசப்பட்டு வந்தது.

இப்படி ஒரு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமே இது சட்ட விரோதச் செயல் என்று தெரிந்திருக்கும் அளவுக்கு தனது சட்ட விரோதச் செயலை ஒரு மாநில அரசே முன் வந்து செய்திருப்பது மிகக் கேவலமானது..!

இப்படி இல்லாத ஒரு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வேறொரு ஆட்சியினர் தற்போதைய முதலமைச்சரின் குடும்பத்தில் ஒருவரை உள்ளே தூக்கிப் போட்டால், தற்போதைய முதலமைச்சர் என்ன செய்வார்..?

விதி என்று சொல்லி சிறைக்கு நேரில் வந்து அழைத்துப் போவாரா..? மாட்டார் அல்லவா..? முரசொலியில் நாலு பக்கத்துக்கு கவிதை எழுதி தீட்டியிருப்பாரே..! தனது உடன்பிறப்புக்களை உசுப்பிவிட்டு தமிழகத்தை ரத்தக் களறியாக்கிருப்பாரே..!

அன்றைக்குத் தன்னை நடுராத்திரியில் காவல் துறையினர் கைது செய்தபோது அவரும், அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் என்னமாய் துடித்தார்கள். துவண்டார்கள். வானமே இடிந்து விழுந்துவிட்டதைப் போல எப்படி கூப்பாடு போட்டார்கள்..?

ஏன் சீமான் என்றொரு மனிதன் மட்டும் இவர்களது கண்ணுக்கு மனிதனாக, ஒரு தமிழனாகத் தெரியவில்லை..!

அவருக்கு மட்டுமே சிந்துவது ரத்தம்.. மற்றவர்களுக்கு என்றால் அது தண்ணீரா..?

அரசுகள் நினைத்தால் தனி மனிதனின் உரிமைகளை முடக்கலாம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை இந்தியாவிலும், தமிழகத்திலும் இதற்கு முன்பும் நாம் கண்டிருக்கிறோம். இப்போது சீமானை வைத்து நாம் அறிந்து கொள்கிறோம்..!

தமிழக அரசின் தற்போதைய அவலட்சணமான நிர்வாக முறைகேட்டுக்கு இதுவும் ஒரு உதாரணம்..!

டிஸ்கி : சீமானின் பேச்சு சட்ட விதிமீறலா? இந்திய இறையாண்மையை மீறியதா என்கிற விஷயத்திற்குள் நான் போகவில்லை. கைதே சட்ட விரோதம் என்கிறபோது அதைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்..?


85 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணன் கடையில் தொடர்ந்து வடை வாங்கும் போலீஸ் வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சத்தியமா படிச்சிட்டு வர்றேன்

செங்கோவி said...

சீமானை குண்டர் சட்டத்தில் அடைத்ததும் தவறுதான்...உங்கள் டிஸ்கியும் சரிதான்.

--செங்கோவி

Indian Share Market said...

நம் நாட்டில் எவ்வளவோ பேர் இது மாதிரி பொய் வழக்கு போட்டு சிறையில் பல வருடங்களாக அடைபட்டு இருக்கிறார்கள்.அண்ணன் சீமானின் அரசியல் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

ஜெய்லானி said...

//இப்படி இல்லாத ஒரு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வேறொரு ஆட்சியினர் தற்போதைய முதலமைச்சரின் குடும்பத்தில் ஒருவரை உள்ளே தூக்கிப் போட்டால், தற்போதைய முதலமைச்சர் என்ன செய்வார்..?//

ஐயோ...கொல்றாங்களே..ன்னு இன்னும் சத்தம் 1000 டெசிபலில் வரும்

/

முருகன் said...

GOOD NEWS.

dare to be wise... said...

இந்த 5 மாதங்களில் தமிழ் மக்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகள் எத்தனை இருக்கும்? தமிழகத்தை மறந்த தமிழ் மக்கள் ஈழத்தை மறந்ததில் அதிர்ச்சியில்லை. ஈழத்தை மறந்தவர்கள் சீமானின் கைதை மறந்ததில் ஆச்சரியமில்லை. தன்னுடைய உயிர் வாழும் உரிமையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் மற்றவர்களின் மனித உரிமை பறிபோவதைப் பற்றி ஆத்திரப்பட முடியாது.மக்களின் பொறுப்பற்ற மறதியும் மட்டித்தனமும் தமிழகத்தின் உயிராதாரமான பிரச்சனைகளை வெகு சொற்பமானவர்களே பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கிற சூழலைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.தனது சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது சிறிதேனும் சமூக உணர்ச்சி தேவைப்படுகிறது என்ற அளவில்கூட இன்னும் புரிந்துகொள்ளவில்லை மக்கள்.

துமிழ் said...

ஒருவேளை அரசு வக்கீலுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியாது என்று சொன்னால் அவர் இந்தப் பதவிக்கே லாயக்கிலாதவராகிவிடுவாரே..? முன்பே தெரியும் என்றால் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்றாகிவிடுமே..?

//
உண்மைத் தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி சந்தேகப் படலாமா?
இது விஜய் படத்தில் லாஜிக் எங்க இருக்கு என்கிறமாதிரி அல்லவா இருக்கு.

D.R.Ashok said...

:)

அகில் பூங்குன்றன் said...

நல்ல இனிப்பான செய்தி.

ஹரிஸ் said...

மகிழ்ச்சியான செய்தி...

Arun Ambie said...

சீமான் விடுதலை தரும் செய்தி..... தேர்தல் நெருங்குகிறது.

Rathi said...

அரச நிர்வாகத்துக்கும் அதிகாரிகளுக்கும் விதிமுறைகள் தெரியவில்லை என்பதால் ஓர் குடிமகன் பாதிக்கப்பட்டால் அரசு அதற்குரிய நஷ்ட ஈட்டை வழங்காதா?

philosophy prabhakaran said...

ஆஹா... மறுபடியும் பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சிட்டீங்களே...

மாணவன் said...

சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்

சீமான் விடுதலை மகிழ்ச்சியான செய்தி சார்,

தொடரட்டும் உங்கள் பணி

தமிழ் திரு said...

சீமான் விடுதலையின் பின்னணியில் ஊழல் பிரச்சனை + காங்கிரஸ் + தேர்தல் போன்றவை உள்ளன. இருந்தாலும் இது மகிழ்ச்சியான செய்தியே !

//சிறிலங்க இராணுவத்தினர் இசைப்பிரியா என்ற தமிழ் பத்திரிக்கையாளரை மானபங்கப்படுத்தி கொலை செய்த காட்சிகளை பிபிசி உள்ளிட்ட பன்னாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றனவே, அவைகள் கூட உணர்ச்சியைத் தூண்டக்கூடியதுதான், அதற்காக அரசு அந்த தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுத்ததா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.//

இதையும் சேர்த்து பதிவு செய்திருக்கலாம்.வாழ்த்துகள் !!!

ராஜ நடராஜன் said...

//.மக்களின் பொறுப்பற்ற மறதியும் மட்டித்தனமும் தமிழகத்தின் உயிராதாரமான பிரச்சனைகளை வெகு சொற்பமானவர்களே பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கிற சூழலைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.தனது சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது சிறிதேனும் சமூக உணர்ச்சி தேவைப்படுகிறது என்ற அளவில்கூட இன்னும் புரிந்துகொள்ளவில்லை மக்கள்.//

கண்ணால் காணும் தமிழக சூழல் இதுமாதிரியே இருக்கிறது.

ஆளில்லாத கடையில டீ ஆத்துவது என்பது மொத்த பதிவர்களுக்கும் பொருந்தும்.

ராஜ நடராஜன் said...

முந்தைய கால கட்டத்தில் சீமான் ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறாரென்றும்,அரசியலுக்கு இது சரிப்பட்டு வராது என்பது மாதிரியுமான பின்னூட்டங்களை காணும்போது பதிவர்கள் புத்திசாலிகள் என்றுதான் நானும் நினைத்தேன்.ஆனால் தமிழக நிலை உணர்ச்சியுள்ளவன் என்பதை விட தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டவனை உணர்ச்சி வயப்படவே வைக்கும்.

மீனவர்கள்,திரையுலகம் சார்ந்தவர்கள் கூட அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது போல் மக்களின் சுயநலங்களை மட்டுமே காட்டுகிறது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக சீமான் முழு எழுச்சியாக வருவதற்கு வாழ்த்துவோம்.

ராஜ நடராஜன் said...

//அரச நிர்வாகத்துக்கும் அதிகாரிகளுக்கும் விதிமுறைகள் தெரியவில்லை என்பதால் ஓர் குடிமகன் பாதிக்கப்பட்டால் அரசு அதற்குரிய நஷ்ட ஈட்டை வழங்காதா?//

ரதி!எந்த ஊரு நீங்க:)

Rathi said...

//ரதி!எந்த ஊரு நீங்க:)//

ராஜ நடராஜன்,

அது வேற ஒண்ணுமில்ல. மனித உரிமைகளை மதிக்கும் ஊரில் இருப்பதால் கேட்டேன். :)

யாரோ ஓர் அதிகாரியின் தவறுக்கு ஏன் ஒருவர் ஐந்து மாதம் சிறைத்தண்டனை பெறவேண்டுமென்று நினைத்தேன். இங்கானால் மில்லியன் கணக்கில் நட்ட ஈடு கேட்டாலும் கேட்பார்கள்.

Rathi said...

தவிர, பெரும்பாலான தமிழ் சினிமாவில் காட்டப்படும் தமிழ்நாடு வேறு என்பது உங்கள் பயண அனுபவங்களைப் படித்தபோது கொஞ்சம் புரிந்துகொண்டேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai]]]

உனக்குத்தான் தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணன் கடையில் தொடர்ந்து வடை வாங்கும் போலீஸ் வாழ்க]]]

உன்னை நீயே வாழ்த்திக்கிறியா..? தி.மு.க.ல சேர்ந்திரு.. நல்லா வருவ..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சத்தியமா படிச்சிட்டு வர்றேன்.]]]

அடப்பாவி.. படிக்காமலேயே இப்படி உடான்ஸா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[செங்கோவி said...
சீமானை குண்டர் சட்டத்தில் அடைத்ததும் தவறுதான். உங்கள் டிஸ்கியும் சரிதான்.

--செங்கோவி]]]

நன்றி செங்கோவி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Indian Share Market said...
நம் நாட்டில் எவ்வளவோ பேர் இது மாதிரி பொய் வழக்கு போட்டு சிறையில் பல வருடங்களாக அடைபட்டு இருக்கிறார்கள். அண்ணன் சீமானின் அரசியல் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.]]]

உண்மைதான். சிறையில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் பொய்யான வழக்குகளில் சிக்கியவர்கள்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெய்லானி said...

//இப்படி இல்லாத ஒரு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வேறொரு ஆட்சியினர் தற்போதைய முதலமைச்சரின் குடும்பத்தில் ஒருவரை உள்ளே தூக்கிப் போட்டால், தற்போதைய முதலமைச்சர் என்ன செய்வார்..?//

ஐயோ. கொல்றாங்களேன்னு இன்னும் சத்தம் 1000 டெசிபலில் வரும்]]]

ஹா.. ஹா.. ஹா.. அதுவே ஒரு செட்டப்புதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[முருகன் said...

GOOD NEWS.]]]

நல்லது..!

விடுத‌லைவீரா said...

தமிழக அரசுக்கு சரியான நேரத்தில் சவுக்கடி நீதிமன்றமும் நீங்களும் கொடுத்து இருக்கிறீர்கள்.தொடரட்டும்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[dare to be wise... said...
இந்த 5 மாதங்களில் தமிழ் மக்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகள் எத்தனை இருக்கும்? தமிழகத்தை மறந்த தமிழ் மக்கள் ஈழத்தை மறந்ததில் அதிர்ச்சியில்லை. ஈழத்தை மறந்தவர்கள் சீமானின் கைதை மறந்ததில் ஆச்சரியமில்லை. தன்னுடைய உயிர் வாழும் உரிமையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் மற்றவர்களின் மனித உரிமை பறி போவதைப் பற்றி ஆத்திரப்பட முடியாது. மக்களின் பொறுப்பற்ற மறதியும் மட்டித்தனமும் தமிழகத்தின் உயிராதாரமான பிரச்சனைகளை வெகு சொற்பமானவர்களே பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டுமிருக்கிற சூழலைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தனது சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது சிறிதேனும் சமூக உணர்ச்சி தேவைப்படுகிறது என்ற அளவில்கூட இன்னும் புரிந்து கொள்ளவில்லை மக்கள்.]]]

சுயநலமிக்க நமது மக்கள் மாறினால் ஒழிய.. இந்த நிலை மாறாது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[துமிழ் said...

ஒருவேளை அரசு வக்கீலுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியாது என்று சொன்னால் அவர் இந்தப் பதவிக்கே லாயக்கிலாதவராகிவிடுவாரே..? முன்பே தெரியும் என்றால் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்றாகிவிடுமே..?//

உண்மைத் தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி சந்தேகப்படலாமா? இது விஜய் படத்தில் லாஜிக் எங்க இருக்கு என்கிற மாதிரி அல்லவா இருக்கு.]]]

தப்புதான் ஸார்..! ஆனால் வாதத்தை இப்படித்தானே எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[D.R.Ashok said...

:)]]]

நன்றி அசோக்ஜி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அகில் பூங்குன்றன் said...
நல்ல இனிப்பான செய்தி.]]]

நம் அனைவருக்கும்தான். நன்றி அகில்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஹரிஸ் said...

மகிழ்ச்சியான செய்தி...]]]

நன்றி ஹரிஸ்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Arun Ambie said...
சீமான் விடுதலை தரும் செய்தி..... தேர்தல் நெருங்குகிறது.]]]

தேர்தல் சமயத்தில் மீண்டும் உள்ளே தள்ளப்படுவார் சீமான்..! இது உறுதி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Rathi said...
அரச நிர்வாகத்துக்கும் அதிகாரிகளுக்கும் விதிமுறைகள் தெரியவில்லை என்பதால் ஓர் குடிமகன் பாதிக்கப்பட்டால் அரசு அதற்குரிய நஷ்டஈட்டை வழங்காதா?]]]

நஷ்டஈடா..? நம்ம அரசா..? அதுக்காக எவ்வளவு அலைய வேண்டியிருக்கும் தெரியுங்களா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[philosophy prabhakaran said...
ஆஹா... மறுபடியும் பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சிட்டீங்களே.]]]

தம்பி.. கொஞ்சம்தாம்பா.. பக்கம், பக்கமால்லாம் இல்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மாணவன் said...
சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.
சீமான் விடுதலை மகிழ்ச்சியான செய்தி சார். தொடரட்டும் உங்கள் பணி.]]]

நன்றி மாணவன் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தமிழ் திரு said...

சீமான் விடுதலையின் பின்னணியில் ஊழல் பிரச்சனை + காங்கிரஸ் + தேர்தல் போன்றவை உள்ளன. இருந்தாலும் இது மகிழ்ச்சியான செய்தியே !

//சிறிலங்க இராணுவத்தினர் இசைப்பிரியா என்ற தமிழ் பத்திரிக்கையாளரை மானபங்கப்படுத்தி கொலை செய்த காட்சிகளை பிபிசி உள்ளிட்ட பன்னாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றனவே, அவைகள் கூட உணர்ச்சியைத் தூண்டக் கூடியதுதான், அதற்காக அரசு அந்த தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுத்ததா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.//

இதையும் சேர்த்து பதிவு செய்திருக்கலாம். வாழ்த்துகள் !!!]]]

ஆஹா.. நான் இதை இப்போதுதானே கேள்விப்படுகிறேன்.. தகவலுக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...

//மக்களின் பொறுப்பற்ற மறதியும் மட்டித்தனமும் தமிழகத்தின் உயிராதாரமான பிரச்சனைகளை வெகு சொற்பமானவர்களே பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டுமிருக்கிற சூழலைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. தனது சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது சிறிதேனும் சமூக உணர்ச்சி தேவைப்படுகிறது என்ற அளவில்கூட இன்னும் புரிந்து கொள்ளவில்லை மக்கள்.//

கண்ணால் காணும் தமிழக சூழல் இது மாதிரியே இருக்கிறது.
ஆளில்லாத கடையில டீ ஆத்துவது என்பது மொத்த பதிவர்களுக்கும் பொருந்தும்.]]]

நன்றி நடராஜன் ஸார்.. இப்படியா பட்டுன்னு போட்டு உடைக்குறது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...

முந்தைய கால கட்டத்தில் சீமான் ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறாரென்றும், அரசியலுக்கு இது சரிப்பட்டு வராது என்பது மாதிரியுமான பின்னூட்டங்களை காணும்போது பதிவர்கள் புத்திசாலிகள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் தமிழக நிலை உணர்ச்சியுள்ளவன் என்பதைவிட தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டவனை உணர்ச்சிவயப்படவே வைக்கும்.

மீனவர்கள், திரையுலகம் சார்ந்தவர்கள்கூட அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பாதது முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது போல் மக்களின் சுயநலங்களை மட்டுமே காட்டுகிறது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக சீமான் முழு எழுச்சியாக வருவதற்கு வாழ்த்துவோம்.]]]

நானும் வாழ்த்துகிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...

//அரச நிர்வாகத்துக்கும் அதிகாரிகளுக்கும் விதிமுறைகள் தெரியவில்லை என்பதால் ஓர் குடிமகன் பாதிக்கப்பட்டால் அரசு அதற்குரிய நஷ்ட ஈட்டை வழங்காதா?//

ரதி! எந்த ஊரு நீங்க:)]]]

நம்ம ஊராத்தான் இருக்கும்.. ஆனால் நமது தமிழக அரசியல் நிலைமை இப்போதுதான் தெரியும்போல..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Rathi said...

//ரதி!எந்த ஊரு நீங்க:)//

ராஜ நடராஜன், அது வேற ஒண்ணுமில்ல. மனித உரிமைகளை மதிக்கும் ஊரில் இருப்பதால் கேட்டேன். :) யாரோ ஓர் அதிகாரியின் தவறுக்கு ஏன் ஒருவர் ஐந்து மாதம் சிறைத் தண்டனை பெற வேண்டுமென்று நினைத்தேன். இங்கானால் மில்லியன் கணக்கில் நட்ட ஈடு கேட்டாலும் கேட்பார்கள்.]]]

அது நாடு.. இது சுடுகாடு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Rathi said...
தவிர, பெரும்பாலான தமிழ் சினிமாவில் காட்டப்படும் தமிழ்நாடு வேறு என்பது உங்கள் பயண அனுபவங்களைப் படித்தபோது கொஞ்சம் புரிந்து கொண்டேன்.]]]

ஆமாம்.. சினிமாவைப் பார்த்து தமிழ்நாட்டை புரிந்து கொள்ளாதீர்கள்! அது ச்சும்மா காசு வாங்கிக் கொண்டு அழகை மட்டுமே காண்பிப்பது.. அழுக்குகள் எல்லாம் தெருவில் இருக்கின்றன..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[விடுத‌லைவீரா said...
தமிழக அரசுக்கு சரியான நேரத்தில் சவுக்கடி நீதிமன்றமும் நீங்களும் கொடுத்து இருக்கிறீர்கள். தொடரட்டும்.]]]

நன்றி விடுதலை வீரர் அவர்களே..!

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

தோழர் ரதியைப் போன்று அயல்நாடுகளில் வசிப்பவர்கள், அங்குள்ள மனித உரிமைச் சட்டங்களைப்பற்றியும், அவை அமல்படுத்தப்படும் முறை பற்றியும் எழுதினால் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தலாம்.

கே.ஆர்.பி.செந்தில் said...

சீமான் யாருக்காக குரல் கொடுத்து சிறைக்கு போனாரோ, அந்த மீனவர்கள் அவருக்காக குரல் எழுப்பாததுதான் வருத்தம் ...

ரிஷி said...

// இது பற்றி சட்டத் துறையிடம் விளக்கம் கேட்கச் அறிவுறுத்தாமல் இருந்திருந்தால் தமிழக அரசின் உள்துறையும், உள்துறை பொறுப்பை வகிக்கும் முத்தமிழ் அறிஞரும் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்..! //

முத்தமிழ் அறிஞர் உடனே திருவாரூருக்குச் சென்று பலசரக்குக்கடை ஒன்றைத் திறந்து வியாபாரம் பார்க்குமாறு ஆணையிடுகிறேன்..!!

எங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் தினம் தினம் அந்தக் கோமாளி செய்யும் கோணங்கித்தனங்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது...!!

ரிஷி said...

சீமான் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.. சரி! சட்டவிரோதமாக இதை கூடுதல் ஆணையரோ, சட்ட அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ செய்து விட்டார்கள்.. சரி! யாரோ ஒருவர் சட்டவிரோதமாக நடந்துவிட்டார் என்பது நீதிபதி தீர்ப்பிலிருந்து தெரிந்து விட்டது இப்போது. அதுவும் சரி..!

இந்த சட்டவிரோதச் செயலுக்கு ஏன் நீதிபதி தண்டனை வழங்கக் கூடாது??? சில நேரங்களில் பத்திரிகைச் செய்திகளையே பொதுநல மனுவாக எடுத்துக் கொண்டு அதை சரிசெய்ய நீதிபதிகள் ஆணையிடுகின்றனரே! இப்போது தங்கள் தீர்ப்பிலேயே சட்டத்தை அரசு மீறியிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறபோது சீமான் தமிழக அரசின் மீது கேஸ் போடாமலேயே அவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிடமுடியுமா??

ரிஷி said...

ஒரு பள்ளிச் சிறுவன் தன் சக சிறுவனை ஆசிரியரிடம் பழி சொல்கிறான். "டீச்சர்! இவன் நான் வச்சிருந்த தமிழ் புஸ்தகத்தை திருடிட்டான்!"

அந்த சிறுவன் சொல்கிறான். "தமிழ் புஸ்தகத்தை நான் திருடலை. எனக்கு எதுவும் தெரியாது. நான் நிரபராதி. "

ஆனாலும் அந்த சிறுவனை டீச்சர் அடித்துவிடுகிறார். காரணம், பழி சொன்ன ஆள் ஸ்கூலில் பெரிய மனுஷனின் மகன்.

அப்புறம், டீச்சரின் தீவிர விசாரணைக்குப் பின் தமிழ் புஸ்தகமே பழி போட்ட சிறுவனிடம் கிடையாது என்பது தெரிய வருகிறது. ஏனென்றால் அவன் இங்கிலிஸ் மீடியம் மாணவன். அவனுக்கு தமிழ் சப்ஜெக்ட்டே கிடையாது என்று தெரிய வருகிறது.

அதன்பின் டீச்சர் சொல்கிறார், அடி வாங்கியவனைப் பார்த்து.."சரி..சரி.. உன்னை தப்பா அடிச்சுட்டேன்.. கிளாஸுக்குப் போ"

ஆனால் பழி போட்ட பையனுக்குத் தண்டனை???!!


"ஏலேய்ய்ய்... அவன் பெரிய மனுஷம்லே... உனக்கு என்னலே தெரியும்..வெண்ணெய்.. மசிரு மாதிரி பழி போடறானு வந்து சொல்றே.. அவன் அப்படித்தாம்லே சொல்வான்."

எண்ணத்துப்பூச்சி said...

உண்மைத்தமிழன்,

உங்களைப்போன்றோர் தன்மானத்துடன் இன்னும்
செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழக ஊடகவியாளர்கள் பெரும்பான்மையானோர்
ஆளும்கட்சிக்கும்,அதிகாரிகளுக்கும் தரகர்களாக செயல்படுகின்றனர்
எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்.

அருந்ததிராய் கூட காஷ்மீர் தனிநாடு கோரிக்கை வைத்தார்.
ஆனால் டில்லி அரசாங்கம் இதுவரை அடாவடித்தனத்தில்
ஈடுபடவில்லை.

ஆனால் கலைஞர் கேவலமாக நடந்துகொண்டது மட்டுமில்லாமல்
தீர்ப்பு அவருக்கு ஒரு சாட்டையடி என்ற போதும் துடைத்துக்கொண்டு
செல்வது கேவலம்.மனசாட்சி இல்லாத அரசு...விரைவில் மடியட்டும்.

Ganpat said...

அன்புள்ள சரவணன்,
உங்களை போலவே காவிரிமைந்தன் எனும் பதிவாளர் நேர்மையுடனும்,நடுநிலமையுடனும் தைரியத்துடனும் பதிவுகள் இடுகிறார்.
நல்ல மனங்கள் இணைந்து செயல்பட்டால் அது அனைவர்க்கும் நல்லது.நேரம் கிடைக்கும்போது செல்லவும்..
http://vimarisanam.wordpress.com/
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இது வேண்டுகோள்.
நன்றி வணக்கம்

ரிஷி said...

சீமானே ஒரு படத்தில் சொல்வார். "வொயிட் காலர் ஜாப்காரன்கூட கையில கத்தி எடுத்துக் கிட்டு சமுதாயத்துல புறப்பட ஆரம்பிச்சான்னா.. அப்புறம்....."

அப்படி யாரும் புறப்படலைங்கற தகிரியத்துலதான் அத்தனை அரசியல் வியாதிகளும், அதிகார வர்க்கத்து வெளக்கெண்ணைகளும் திரியுதுக...

போட்டுடலாமா இவனுங்கள..??

ரிஷி said...

"என்னை கடலிலே தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தமிழர்களை காப்பேன் " ஆகா!! என்ன அற்புதம் !! மீன் பிடிக்கசென்று குண்டடிபட்டு கடல் நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டைமரமாய்' தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த 'கட்டுமரம்' எத்தனைபேரை காப்பாற்றிஇருக்கிறது தெரியுமா ??

ரிஷி said...

பகுத்தறிவு, தன்மானம் என்ற வெள்ளி முளைத்து
DMK, ADMK, CONGRESS, கருணாநிதி போன்ற சனிகள் தொலைந்தால்தான் தமிழகம் என்னும் ஞாயிறு தப்பிப் பிழைக்கும்!!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
தோழர் ரதியைப் போன்று அயல்நாடுகளில் வசிப்பவர்கள், அங்குள்ள மனித உரிமைச் சட்டங்களைப் பற்றியும், அவை அமல்படுத்தப்படும் முறை பற்றியும் எழுதினால் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தலாம்.]]]

வழி மொழிகிறேன். ரதி அவர்களே.. இதனைச் சற்றுப் பரிசீலிக்கவும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
சீமான் யாருக்காக குரல் கொடுத்து சிறைக்கு போனாரோ, அந்த மீனவர்கள் அவருக்காக குரல் எழுப்பாததுதான் வருத்தம்]]]

எனக்கும் அதேதான்..! உண்மையான மீனவர்கள் சார்பான இயக்கங்கள் இல்லையோ என்கிற சந்தேகம் எழுகிறது செந்தில்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

//இது பற்றி சட்டத் துறையிடம் விளக்கம் கேட்கச் அறிவுறுத்தாமல் இருந்திருந்தால் தமிழக அரசின் உள்துறையும், உள்துறை பொறுப்பை வகிக்கும் முத்தமிழ் அறிஞரும் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்..! //

முத்தமிழ் அறிஞர் உடனே திருவாரூருக்குச் சென்று பலசரக்குக்கடை ஒன்றைத் திறந்து வியாபாரம் பார்க்குமாறு ஆணையிடுகிறேன்..!!
எங்களுக்கு நிறைய வேலைகள் இருப்பதால் தினம் தினம் அந்தக் கோமாளி செய்யும் கோணங்கித்தனங்களை சகித்துக் கொண்டிருக்க முடியாது...!!]]]

ஹா.. ஹா.. நானும் இதனை வழி மொழிகிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

சீமான் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.. சரி! சட்ட விரோதமாக இதை கூடுதல் ஆணையரோ, சட்ட அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ செய்து விட்டார்கள்.. சரி! யாரோ ஒருவர் சட்ட விரோதமாக நடந்துவிட்டார் என்பது நீதிபதி தீர்ப்பிலிருந்து தெரிந்து விட்டது இப்போது. அதுவும் சரி..! இந்த சட்ட விரோதச் செயலுக்கு ஏன் நீதிபதி தண்டனை வழங்கக் கூடாது??? சில நேரங்களில் பத்திரிகைச் செய்திகளையே பொதுநல மனுவாக எடுத்துக் கொண்டு அதை சரி செய்ய நீதிபதிகள் ஆணையிடுகின்றனரே! இப்போது தங்கள் தீர்ப்பிலேயே சட்டத்தை அரசு மீறியிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறபோது சீமான் தமிழக அரசின் மீது கேஸ் போடாமலேயே அவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட முடியுமா??]]]

இந்த வழக்கில் முடியாது. சீமான் தனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று கோரி தனி வழக்கு பதிவு செய்து வாதாடினால் நிச்சயம் நஷ்டஈடு கிடைக்கும். ஆனால் அதற்கு ஆண்டுக் கணக்கில் காலதாமதமாகும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

ஒரு பள்ளிச் சிறுவன் தன் சக சிறுவனை ஆசிரியரிடம் பழி சொல்கிறான். "டீச்சர்! இவன் நான் வச்சிருந்த தமிழ் புஸ்தகத்தை திருடிட்டான்!"

அந்த சிறுவன் சொல்கிறான். "தமிழ் புஸ்தகத்தை நான் திருடலை. எனக்கு எதுவும் தெரியாது. நான் நிரபராதி. "

ஆனாலும் அந்த சிறுவனை டீச்சர் அடித்து விடுகிறார். காரணம், பழி சொன்ன ஆள் ஸ்கூலில் பெரிய மனுஷனின் மகன்.

அப்புறம், டீச்சரின் தீவிர விசாரணைக்குப் பின் தமிழ் புஸ்தகமே பழி போட்ட சிறுவனிடம் கிடையாது என்பது தெரிய வருகிறது. ஏனென்றால் அவன் இங்கிலிஸ் மீடியம் மாணவன். அவனுக்கு தமிழ் சப்ஜெக்ட்டே கிடையாது என்று தெரிய வருகிறது.

அதன்பின் டீச்சர் சொல்கிறார், அடி வாங்கியவனைப் பார்த்து "சரி..சரி.. உன்னை தப்பா அடிச்சுட்டேன்.. கிளாஸுக்குப் போ"
ஆனால் பழி போட்ட பையனுக்குத் தண்டனை???!!

"ஏலேய்ய்ய்... அவன் பெரிய மனுஷம்லே... உனக்கு என்னலே தெரியும்..வெண்ணெய்.. மசிரு மாதிரி பழி போடறானு வந்து சொல்றே.. அவன் அப்படித்தாம்லே சொல்வான்."]]]

இதே கதைதான்.. ரிஷி நல்லாவே கதை சொல்றீர்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எண்ணத்துப்பூச்சி said...
உண்மைத்தமிழன், உங்களைப் போன்றோர் தன்மானத்துடன் இன்னும்
செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக ஊடகவியாளர்கள் பெரும்பான்மையானோர்
ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் தரகர்களாக செயல்படுகின்றனர். எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்.
அருந்ததிராய் கூட காஷ்மீர் தனி நாடு கோரிக்கை வைத்தார்.
ஆனால் டில்லி அரசாங்கம் இதுவரை அடாவடித்தனத்தில் ஈடுபடவில்லை.
ஆனால் கலைஞர் கேவலமாக நடந்து கொண்டது மட்டுமில்லாமல்
தீர்ப்பு அவருக்கு ஒரு சாட்டையடி என்ற போதும் துடைத்துக்கொண்டு
செல்வது கேவலம். மனசாட்சி இல்லாத அரசு. விரைவில் மடியட்டும்.]]]

எண்ணத்துப்பூச்சி உமது ஆசை பலிக்கட்டும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Ganpat said...

அன்புள்ள சரவணன், உங்களை போலவே காவிரிமைந்தன் எனும் பதிவாளர் நேர்மையுடனும், நடுநிலமையுடனும் தைரியத்துடனும் பதிவுகள் இடுகிறார்.

நல்ல மனங்கள் இணைந்து செயல்பட்டால் அது அனைவர்க்கும் நல்லது. நேரம் கிடைக்கும்போது செல்லவும்..
http://vimarisanam.wordpress.com/

மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இது வேண்டுகோள்.

நன்றி வணக்கம்]]]

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..! அவசியம் செல்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

சீமானே ஒரு படத்தில் சொல்வார். "வொயிட் காலர் ஜாப்காரன்கூட கையில கத்தி எடுத்துக் கிட்டு சமுதாயத்துல புறப்பட ஆரம்பிச்சான்னா.. அப்புறம்....."

அப்படி யாரும் புறப்படலைங்கற தகிரியத்துலதான் அத்தனை அரசியல் வியாதிகளும், அதிகார வர்க்கத்து வெளக்கெண்ணைகளும் திரியுதுக...

போட்டுடலாமா இவனுங்கள..??]]]

நிச்சயம் அப்படியொரு காலமும் வரத்தான் போகுது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...
"என்னை கடலிலே தூக்கி போட்டாலும் கட்டு மரமாக தமிழர்களை காப்பேன் " ஆகா!! என்ன அற்புதம் !! மீன் பிடிக்க சென்று குண்டடிபட்டு கடல் நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டை மரமாய்' தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த 'கட்டு மரம்' எத்தனை பேரை காப்பாற்றி இருக்கிறது தெரியுமா??]]]

அது கட்டு மரம் ரிஷி.. உயிரற்றது.. அப்படித்தான் இருக்கும். காப்பாற்றச் சொல்லி அதுவிடம் சொல்லி என்ன புண்ணியம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...
பகுத்தறிவு, தன்மானம் என்ற வெள்ளி முளைத்து DMK, ADMK, CONGRESS, கருணாநிதி போன்ற சனிகள் தொலைந்தால்தான் தமிழகம் என்னும் ஞாயிறு தப்பிப் பிழைக்கும்!!!!]]]

அய்.. சூப்பர்.. அட்டகாசம்.. கொன்னுட்டீங்க ரிஷி..

உங்களோட இன்னோரு பேரு சரவணனா..?

ராஜரத்தினம் said...

இதில் உள்ள அரசியல் தெரியாமல் சீமானை பற்றி எழுதிறீங்களே! இந்த நாம் தமிழர் இயக்கம் கருணாநிதியை தமிழ் ஈழம் காரணமாக எதிர்ப்பவர்கள் நடத்தும் இயக்கம். ஆனால் அவர்கள் எந்த காலத்திலும் ஜெயலலிதாவை ஆதரிக்கபோவதில்லை. இதை பற்றீ அமீர் ஏற்கனவே உளறி விட்டார். ஏன்னா அவர்கள்(சீமான், அமீர்) மதம் காரணமாக நிச்சயம் கருணாநிதியைதான் ஆதரிக்கபோகிறார்கள். அப்ப உங்கள் கருணாநிதி எதிர்ப்பு அடிபட்டு போகிறதே! நான் இந்த சீமான் பற்றி படிக்ககூட முடியாமல்தான் இதை சொல்றேன்.

ஈரோடு கதிர் said...

கைதே ஒரு கேவலமான காமெடி என்பது இப்போதுதான் தெரிகிறது

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜரத்தினம் said...

இதில் உள்ள அரசியல் தெரியாமல் சீமானை பற்றி எழுதிறீங்களே! இந்த நாம் தமிழர் இயக்கம் கருணாநிதியை தமிழ் ஈழம் காரணமாக எதிர்ப்பவர்கள் நடத்தும் இயக்கம். ஆனால் அவர்கள் எந்த காலத்திலும் ஜெயலலிதாவை ஆதரிக்கப் போவதில்லை.]]

இதனால் எனக்கென்ன? நான் பேசியிருப்பது முழுக்க முழுக்க கைது பற்றியதையும், முறைப்படி செய்யத் தெரியாத அரசு நிர்வாகத்தின் குறையைச் சுட்டிக் காட்டியும்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஈரோடு கதிர் said...
கைதே ஒரு கேவலமான காமெடி என்பது இப்போதுதான் தெரிகிறது.]]]

உண்மைதான் கதிர்..!

ஒரு மனிதனை சில அரசு ஊழியர்களின் அலட்சியமான கையெழுத்து ஒன்றினால் 5 மாதங்கள் சிறையில் அடைத்திருக்கும் இந்த சர்வாதிகாரத்தை யார் தட்டிக் கேட்பது..?

நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி : சீமானின் பேச்சு சட்ட விதிமீறலா? இந்திய இறையாண்மையை மீறியதா என்கிற விஷயத்திற்குள் நான் போகவில்லை. கைதே சட்ட விரோதம் என்கிறபோது அதைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்..?//

சரியாக சொன்னீர்கள்.

ராஜரத்தினம் said...

//இதனால் எனக்கென்ன? நான் பேசியிருப்பது முழுக்க முழுக்க கைது பற்றியதையும், முறைப்படி செய்யத் தெரியாத அரசு நிர்வாகத்தின் குறையைச் சுட்டிக் காட்டியும்தான்..!//

நீங்க typical DMK Supporter ஆ பேசறீங்க. ஏன்னா அவங்கதான் கருணாநிதியை பிடிக்காது.ஆனால் அவருக்கு ஓட்டு போடலனா ஜெயலலிதாதானே வருவார்.அதனால் நாங்க கருணாநிதியைதான் ஆதிரிக்கவேண்டும். ஏன்னா அப்பதான் தமிழ் ஈழம் பற்றி பேசவாவது முடியும்னு பம்முவாங்க. இன்னும் அவங்க அரசியல் உங்களுக்கு புரியலயா?திமுக காங்கிரஸுடன் கூட்டுவைத்தால் காங்கிரஸைம் மட்டும் எதிர்ப்பாங்களாம்.ஆனால் அதிமுவுடன் காங்கிரஸ் கூட்டுவைத்தால் அதிமுகவையும் சேர்ந்து எதிர்பார்களாம். இதுக்கு நீங்க நேரடியா லக்கிலுக் அடிக்கிற ஜால்ரா மாதிரியே நீங்களும் அடிச்சிடூங்க.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி : சீமானின் பேச்சு சட்ட விதிமீறலா? இந்திய இறையாண்மையை மீறியதா என்கிற விஷயத்திற்குள் நான் போகவில்லை. கைதே சட்ட விரோதம் என்கிறபோது அதைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்..?//

சரியாக சொன்னீர்கள்.]]]

வேறு என்ன சொல்வது..? இந்த விதிமுறைகளே தெரியாதவர்கள்.. ஏதாவது ஒரு பேச்சை சட்ட விரோதம் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜரத்தினம் said...

//இதனால் எனக்கென்ன? நான் பேசியிருப்பது முழுக்க முழுக்க கைது பற்றியதையும், முறைப்படி செய்யத் தெரியாத அரசு நிர்வாகத்தின் குறையைச் சுட்டிக் காட்டியும்தான்..!//

நீங்க typical DMK Supporter ஆ பேசறீங்க. ஏன்னா அவங்கதான் கருணாநிதியை பிடிக்காது. ஆனால் அவருக்கு ஓட்டு போடலனா ஜெயலலிதாதானே வருவார். அதனால் நாங்க கருணாநிதியைதான் ஆதிரிக்க வேண்டும். ஏன்னா அப்பதான் தமிழ் ஈழம் பற்றி பேசவாவது முடியும்னு பம்முவாங்க. இன்னும் அவங்க அரசியல் உங்களுக்கு புரியலயா? திமுக காங்கிரஸுடன் கூட்டு வைத்தால் காங்கிரஸைம் மட்டும் எதிர்ப்பாங்களாம். ஆனால் அதிமுவுடன் காங்கிரஸ் கூட்டு வைத்தால் அதிமுகவையும் சேர்ந்து எதிர்பார்களாம். இதுக்கு நீங்க நேரடியா லக்கிலுக் அடிக்கிற ஜால்ரா மாதிரியே நீங்களும் அடிச்சிடூங்க.]]]

முருகா.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா..?

ஸார்.. நீங்க என்னோட அரசியல் பதிவுகளைக் கொஞ்சம் தோண்டியெடுத்துப் படிச்சுப் பாருங்க.. நான் யாருன்னு தெரியும்..! அப்புறமா வந்து பேசுங்க..!

வசூல்ராஜாmbbs said...

தமிழக அரசின் தற்போதைய அவலட்சணமான நிர்வாக முறைகேட்டுக்கு இதுவும் ஒரு உதாரணம்..!

ராஜரத்தினம் said...

//முருகா.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா//

உங்களை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நான் சொல்வது நீங்கள் கருணாநிதியை எதிர்ப்பது என்பது அவரை மட்டும் எதிர்த்தால் அது நிறைவடையாது. அவரை மறைமுகமாக ஆதிரிப்பவர்களையும் எதிர்த்தால்தான் உங்கள் எதிர்ப்பு அர்த்தம் பெறும் என்பது என்னுடைய கருத்து. நான் நிச்சயாமாக சொல்வேன் சீமானும் அமிரும் அந்த இயக்கமும் கருணாநியை நிச்சயமாக ஜெயலலிதா போல எதிர்க்க மாட்டார்கள். ஏன்னா இவங்களாம் தமிழர்களாம்!. சீமானை எந்த விதத்தில் ஆதரித்தாலும் அது கருணாநிதியை ஆதரிப்பது போலதான். sorry.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வசூல்ராஜாmbbs said...
தமிழக அரசின் தற்போதைய அவலட்சணமான நிர்வாக முறைகேட்டுக்கு இதுவும் ஒரு உதாரணம்..!]]]

நிர்வாகம் செய்யத் தெரியவில்லையெனில் எதற்காக இவர் ஆட்சியில் நீடிக்க வேண்டும்..!?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜரத்தினம் said...

//முருகா.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா//

உங்களை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நான் சொல்வது நீங்கள் கருணாநிதியை எதிர்ப்பது என்பது அவரை மட்டும் எதிர்த்தால் அது நிறைவடையாது. அவரை மறைமுகமாக ஆதிரிப்பவர்களையும் எதிர்த்தால்தான் உங்கள் எதிர்ப்பு அர்த்தம் பெறும் என்பது என்னுடைய கருத்து. நான் நிச்சயாமாக சொல்வேன் சீமானும் அமிரும் அந்த இயக்கமும் கருணாநியை நிச்சயமாக ஜெயலலிதா போல எதிர்க்க மாட்டார்கள். ஏன்னா இவங்களாம் தமிழர்களாம்!. சீமானை எந்த விதத்தில் ஆதரித்தாலும் அது கருணாநிதியை ஆதரிப்பது போலதான். sorry.]]]

மன்னிக்கணும் ஸார்..

நான் இப்படி நினைக்கவில்லை. சீமான் இனிமேற்கொண்டு கருணாநிதியை நெருங்கினால் அவரிடத்தில் இருக்கும் ஈழ ஆதரவாளர்களும், உலகளாவிய ஈழத்து மக்களும் அவரை விட்டு விலகி விடுவார்கள்.. இது அவருக்கும் நன்றாகத் தெரியும்..

எனவே உங்களுடைய கணிப்பு நிச்சயம் பலிக்காது என்றே நம்புகிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பிரபு ராஜதுரை ஸார் பிளாக்கில் பதிவேற்ற முடியாமல் எனக்குத் தனி மடலில் இதனை அனுப்பியுள்ளார்..

தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA), குண்டர்கள் சட்டம் (The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders,Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers and Video Pirates Act,1982.), அந்நியச்செலவாணி மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) போன்ற சட்டங்கள் ஒரு குற்றம் செய்ததற்கான தண்டனையை அளிக்கவல்ல சட்டங்கள் என்பதை விட, ஒரு குற்றம் நிகழாமல் இருக்கவும், பொது ஒழுங்கைக் காப்பதற்குமான சட்டங்கள்.

அதாவது மற்ற குற்றவியல் சட்டமுறைகளால், ஒரு குற்றம் நிகழ்வதை தடுக்க இயலவில்லை என்பதால், அதனை தடுக்கும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட காலம் வரை சிறையில் அடைத்து வைக்க வேண்டி இயற்றப்பட்ட சட்டங்கள்.

அடிப்படையில், இந்த மாதிரியான சட்டங்கள் நமது நாடு ஏற்றுக் கொண்ட குற்றவியல் சட்டமுறைகளுக்கும், நமது அரசியலமைப்பு சட்டமுறைக்கும் விரோதமானதுதான். வேறு வழியின்றி நமது நீதிமன்றங்கள் இந்த சட்டங்களை ஏற்றுக் கொண்டன! இல்லை என்கவுண்ட்ர்தான் ஒரே முடிவு என்று காவலர்கள் கருதுவதாலும் இருக்கலாம்.

சீமானுடைய நடவடிக்கைகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட அலுவலரின் (காவல்துறை ஆணையாளர்) திருப்தியை (subjective satisfaction) பொறுத்தது. எனவே, ஆணையாளர் அவ்வாறு கருதுவது தவறா, சரியா என்ற விடயத்திற்குள் நீதிமன்றம் செல்லாது. எனவே, இம்மாதிரியான வழக்குகளில், நுட்ப காரணங்களில்தான் (technical reasons) சிறை வைக்கப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார். அவருக்கு அளிக்கப்படும் வழக்கு ஆவணங்கள் தெளிவாக நகலெடுக்கப்படுவதில்லை அல்லது அவற்றை கையளிப்பதற்கு ஒரு நாள் காலதாமதாகிவிட்டது என்ற காரணங்கள் உட்பட.

மற்ற குற்ற வழக்குகளில், நுட்ப காரணங்கள் பார்க்கப்படும் என்றாலும், அவற்றை மட்டுமே வைத்து யாரும் விடுதலை செய்யப்படுவதில்லை. ஆனால், இம்மாதிரியான தடுப்பு சிறை (preventive detention) வழக்குகளில், சட்டம் கூறும் நடைமுறைகள் எவ்வித பிசகலும் இன்றி செயல்படுத்தப்பட வேண்டும் (strict application of procedure is necessary). இல்லை விடுதலைதான்.

தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர், குற்றம் ஏதும் செய்ததற்காக சிறை வைக்கப்படாததால் நுட்ப காரணங்களை காட்டி அவர்களை விடுதலை செய்வது நீதிபதிகளுக்கும் திருப்தியளிக்கும் செயலாகவே இருக்கும்.

காவலர்களுக்கும் திருப்திதான். ஏனெனில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதை காலதாமதப்படுத்தி தங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விடுவார்கள். தடுப்புக் காவலில், ஓராண்டு சிறை! எப்படியும் வழக்கு முடிவதற்குள் ஐந்து மாதம் கழிந்து விடும். போதுமே!

எனவே நுட்ப தவறுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். தினமும் உயர்நீதிமன்றங்களில் பல தடுப்புக் காவல் உத்தரவுகள் ஏற்கனவே கூறப்பட்ட நுட்ப தவறுகளை முன் தீர்ப்பாக (precedents) வைத்தே ரத்து செய்யப்படுகின்றன.

மன்னிக்கவும். பின்னோட்டம் நீளமாகி விட்டது! சுருக்கமாக எழுதுவதும் ஒரு கலை. அது எனக்கு கை வரவில்லை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பிரபு ராஜதுரை ஸாரின் பின்னூட்டத்திற்கு எனது பதில் :

பிரபு ஸார்..!

நீங்கள் தெரிவித்திருப்பதுபோல் செயல்படுத்திய முறையில் ஏற்பட்டுள்ள டெக்னிக்கல் தவறுகளைச் சுட்டிக் காட்டித்தான் பல வழக்குகள் உடைக்கப்படுகின்றன.

ஆனால் இந்த வழக்கில் என் காதுக்கு எட்டியவரையில் வேண்டுமென்றே சீமானை சிறையில் வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு யோசித்து இந்தத் தவறுடனேயே முனைந்து செய்துள்ளதாகத் தெரிகிறது..

இது மன்னிக்க முடியாத குற்றம்! ஆட்சியாளர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் அராஜகம் செய்யலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகிவிட்டது..!

இப்போது சீமான் நஷ்ட ஈடு கேட்டாலும் கருணாநிதி அவன் அப்பன் வீட்டு காசில் இருந்து தர எடுத்துத் தர மாட்டார். நமது மக்கள் பணத்தில்தான் கை வைப்பார். ஆக இவருடைய சொந்த அரிப்புக்கு நாம்தான் கிடைத்தோமா..?

ரிஷி said...

//இது மன்னிக்க முடியாத குற்றம்! ஆட்சியாளர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் அராஜகம் செய்யலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகிவிட்டது..!

இப்போது சீமான் நஷ்ட ஈடு கேட்டாலும் கருணாநிதி அவன் அப்பன் வீட்டு காசில் இருந்து தர எடுத்துத் தர மாட்டார். நமது மக்கள் பணத்தில்தான் கை வைப்பார். ஆக இவருடைய சொந்த அரிப்புக்கு நாம்தான் கிடைத்தோமா..? //

சரியான பதில்...

ரிஷி said...

இன்றிரவு ராசா கைது செய்யப்படலாம் என கோவை வட்டார நிருபர் இங்கே தெரிவித்திருக்கிறார்.

http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_4343.html

அடுத்தடுத்து பல அரசியல் திருப்பங்கள் ஏற்படக் காத்திருக்கின்றன.

சரவணன் அண்ணே! நமக்கு இவர்களை வைது தீர்க்க இன்னும் நிறைய வேலை காத்திருக்கு!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

//இது மன்னிக்க முடியாத குற்றம்! ஆட்சியாளர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் அராஜகம் செய்யலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகிவிட்டது..!

இப்போது சீமான் நஷ்ட ஈடு கேட்டாலும் கருணாநிதி அவன் அப்பன் வீட்டு காசில் இருந்து தர எடுத்துத் தர மாட்டார். நமது மக்கள் பணத்தில்தான் கை வைப்பார். ஆக இவருடைய சொந்த அரிப்புக்கு நாம்தான் கிடைத்தோமா..? //

சரியான பதில்...]]]

-)))))))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...
இன்றிரவு ராசா கைது செய்யப்படலாம் என கோவை வட்டார நிருபர் இங்கே தெரிவித்திருக்கிறார்.

http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_4343.html

அடுத்தடுத்து பல அரசியல் திருப்பங்கள் ஏற்படக் காத்திருக்கின்றன. சரவணன் அண்ணே! நமக்கு இவர்களை வைது தீர்க்க இன்னும் நிறைய வேலை காத்திருக்கு!]]]

கைது அளவுக்குப் போவார்கள் என்று நான் நினைக்கவில்லை..!

minorwall said...

'தமிழ்நாட்டு பொலிடிகல் ஜோக்கர்ஸ்' என்று பொன்சேகா சொன்னது என்றென்றும் உண்மைதான்..தமிழகத்துக்கு என்று இல்லை..வேறெந்த மாநிலத்து அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்தும்..போக்கிடம் இல்லாதவர்கள் என்று கூட சொல்லலாம். தலைவர்களுக்கே இது என்றால் தொண்டர்களுக்கு, வாக்களிக்கும் மக்களுக்கு என்ன பெயர் வைப்பது?
மத்திய அரசைப் பிரிந்து ஒரு மாநில அரசு..தனி நாடு..சாத்தியமானால் தவிர இந்த போக்கிடமற்ற நிலை தொடர்வது தவிர்க்கமுடியாதது..இதனால்தான் இந்த சமீபத்திய மெகா ஊழல்அமைச்சரின் மேல் நடவடிக்கை கோரிய தமிழக முன்னாள் முதல்வர் அம்மா 'தேவையான எம்.பி.க்கள் ஆதரவை நிபந்தனையற்ற முறையில் காங்கிரசுக்கு வழங்குவோம்' என்றார். மத்திய அரசின் ஊழலைத் தட்டிக் கேட்கும் தார்மீக பொறுப்பு இங்கே ஏதாவது தென்படுகிறதா?அதே ஊழல் அரசுடன் இருக்கிற ஊழல் கூட்டணியை கழற்றிவிட்டுவிட்டு தான் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் பங்கு வகிப்பது எப்படி? என்கிற ஆர்வ மேலீடுதான் தெரிகிறது..இந்த வகை சிக்கலான தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகும் எண்ணற்ற இந்திய அரசியல் கட்சிகளுக்குள் ஒன்றாகிப் போன நாம் தமிழர் இயக்கமும் சீரழியாமல் வேறெந்தப் பாதையில் பயணித்து என்ன நோக்கத்தை முன்வைத்து எந்தப் பகுதி வாக்களர்களைத் தன்வயப் படுத்தி...நடக்கிற காரியம்..அதுவும் நம்ம ஊரிலே? சீமானின் பேச்சில் இருக்கும் நியாயம் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர எங்கே செல்லும் இந்தப் பாதை..? ஒன்றுமே புரியவில்லை.. போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே சீமானின் எழுச்சி மிகுந்த பேச்சு அன்றைய தேர்தலிலேயே எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை..இந்த மக்களுக்காக..இந்த மக்களிடம்..என்னமோ போங்க..