நமது அரசியல்வியாதிகள் இதனை எப்போது உணர்வார்கள்..?

20-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடந்து முடிந்த பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வெற்றிகரமாக கூச்சல், குழப்பத்துடன் நடந்து முடிந்தது குறித்து சிலருக்கு அதிருப்தி. பலருக்கு திருப்தி.. இந்தச் சிலரும், பலரும் நிச்சயம் அரசியல்வியாதிகள்தான்.

ஆனால் பொதுமக்களாகிய நமக்குத்தான் பெரும் எரிச்சலைக் கூட்டியிருக்கிறது..! இது தொடர்பாக நானே ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமில்லாததால் போட முடியவில்லை.

ஆனால் இன்றைக்கு வெளிவந்திருக்கும் தினமலர் பத்திரிகையில் இது பற்றிய செய்திக் கட்டுரை வெளிவந்திருக்கிறது. கிட்டத்தட்ட எனது கருத்துக்களை முழுமையாக உள்ளடக்கியதாக இருந்ததினால் அதனை இங்கே முன் மொழிந்து பதிவிடுகிறேன் :

நமது மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகளால் மீண்டும் ஒரு முறை பொதுமக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. "மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பணத்தை வீணடிப்பது வழக்கமானதுதானே' என, காமெடியாக நினைத்து இந்த விவகாரத்தை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.

ஏனென்றால், இந்த முறை, சற்று அதிகமாகவே 200 கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் பிடிவாதமும், ஆளும் கட்சியின் விதண்டாவாதமும் சேர்ந்து, பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரை முற்றிலுமாக முடக்கியதால்தான், இந்த அளவுக்கு மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

மணியோசை வரும் முன்னே.. யானை வரும் பின்னே, என பழமொழி உண்டு. அதற்கேற்ப, பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடு விஸ்வரூபம் எடுக்க துவங்கி விட்டது.

இது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஊழல் என, பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை போட்டு தாக்குவதற்கு தேவையான விஷயங்கள் ஏராளமாக இருந்தன. இந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நன்றாகவே பயன்படுத்தி கொண்டன.

வழக்கமாக பாராளுமன்றத்தில் போராட்டம் என்றால், தே.ஜ., கூட்டணி கட்சியினர் ஒருபுறமும், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒருபுறமும் தனித்தனியாக செயல்படுவர்.

ஆனால், ஸ்பெக்ட்ரம் விவரகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் என்ற மெகா தொகை, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தது. பாராளுமன்றத்துக்கு உள்ளே மட்டுமல்லாமல், பார்லிமென்டுக்கு வெளியிலும் இவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

கடந்த நவம்பர் 9-ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியது. துவங்கிய நாளில் இருந்து, கூட்டத் தொடரின் கடைசி நாளான கடந்த 13-ம் தேதிவரை, ஒரு நாள்கூட முழுமையாக சபை அலுவல்கள் நடக்கவில்லை.

வழக்கம்போல் காலையில் சபை துவங்கும். உடனடியாக "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்புவர். இதற்கு பதிலடியாக, ஆளும் கட்சியினரும், கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் ஊழல் குறித்து கோஷம் எழுப்புவர். ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவும். இதையடுத்து, சில மணி நேரங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்படும். மீண்டும் சபை கூடியதும், இதேபோன்ற சம்பவங்கள் தொடரும். இறுதியாக, சபை நடவடிக்கைகளை நாள் முழுவதற்கும் ஒத்திவைத்து விட்டு, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரியும் வருத்தத்துடன் எழுந்து செல்வர். இந்த நடவடிக்கைகள்தான், கடந்த ஒரு மாதமாக நடந்தன.

பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு இடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணைகள், ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.

"ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்காதது ஏன்? சி.பி.ஐ., வழக்கு விசாரணையில் இன்னும் தீவிரம் காட்டாதது ஏன்? ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் அமர்த்தியது ஏன்?” என, சுப்ரீம் கோர்ட் வரிசையாக கேள்விகளை எழுப்பியதால், மத்திய அரசு அதிர்ந்து போனது. எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை இறுக பிடித்துக் கொண்டு, அரசை ஒரு வழியாக்கி விட்டனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் அமளியால், பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடங்கியதில், ரொம்பவே பாதிக்கப்பட்டவர்கள் இருவர். ஒருவர் சபாநாயகர் மீரா குமார். அடுத்தவர், ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி. சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி, சபை அலுவல்களை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற இவர்களின் முயற்சி இறுதிவரை பலிக்கவில்லை.

இது தொடர்பாக, இருவருமே விரிவாக கலந்துரையாடினர். இது போன்ற பிரச்னைகள் எழும்போது, வெளிநாடுகளில் பார்லிமென்ட் எப்படி சுமுகமாக இயங்குகிறது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடத்தினர். ஆனால், எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

குளிர்கால கூட்டத் தொடர் முடியும்வரை, ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி இரு தரப்புமே இறங்கி வரவில்லை. தங்கள் நிலையில் கடைசிவரை உறுதியாக இருந்தனர்.

"ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடும் வரை சபையை நடத்த விட மாட்டோம்' என்பது, எதிர்க்கட்சிகளின் பிடிவாதமாக இருந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை' என்பது ஆளும் கட்சியின் விதண்டாவாதம்.

நடந்து முடிந்த பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவில் நடந்தது என்ன?

* தனி நபர் மசோதா எதுவுமே தாக்கல் செய்யப்படவில்லை

* தனி நபர் மசோதா தொடர்பான விவாதம் எதுவும் நடக்கவில்லை.

* எந்த தனி நபர் மசோதாவும் வாபஸ் பெறப்படவில்லை.

* தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் விவாதிக்கப்படவில்லை.

* தனி நபர் தீர்மானம் எதுவும் சபையில் ஏற்கபடவில்லை.

* தீர்மானம் வாபஸ் பெறப்படவும் இல்லை.

இதுவும் ஒரு சாதனை(?)தான் :

* தெகல்கா விவகாரத்தின்போது, பாராளுமன்றம் தொடர்ந்து 17 நாட்கள் செயல்படாமல் இருந்தது.

* கடந்த 1996-ல், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமின் வீடுகளில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதால், 13 நாட்கள் சபை நடக்கவில்லை.

* கடந்த 1987-ல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் நடந்த அமளியால், 45 நாட்கள் சபை அலுவல்கள் முடக்கப்பட்டன.

பாராளுமன்றம் நடக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும், மக்களின் வரிப் பணம் பெருமளவில் செலவிடப்படுகிறது. இந்த பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் 22 நாட்கள் சபை அலுவல்கள் நடக்கவில்லை. இதைக் கணக்கிட்டு பார்த்தால், ஒட்டு மொத்தமாக 200 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், “பாராளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு ஆளும் கட்சிதான் காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மெகா ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், இதை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்ததன் மூலம், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கு மத்திய அரசு காரணமாகிவிட்டது” என்கிறார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை, பாராளுமன்றப் பொதுக் கணக்கு குழு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றன. இதன் மூலம் விதிமுறைகளை எதிர்க்கட்சியினர் மீறுகின்றனர். சபை முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம்' என்கிறார்.

இப்படி இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் செயல்படுவதால்,  அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சாதாரண மக்களுக்குதான் பாதிப்பு. ஏனென்றால், மக்களின் வரிப் பணம்தானே வீணடிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தை சுமுகமாக இயங்க செய்ய வேண்டிய பொறுப்பு, இரு தரப்புக்குமே உண்டு. மக்களுக்கு சேவை செய்வதற்காக, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே மக்கள் பிரதிநிதிகள். இதை அவர்கள் எப்போதுதான் உணர்வார்களோ...?

நன்றி : தினமலர் - 19-12-2010

52 comments:

வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஊரான் வீட்டு நெய்யே.......... என் பொண்டாட்டி கைய்யே...............

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அப்பாடா............ ரொம்ப நாளக்கி அப்புறம் வட நமக்கு............

ஏதிலி... said...

அப்பட்டமாக-பகிரங்கமாக-கூச்சமின்றி-பயமின்றித் தமது மக்கள் விரோதத் தன்மையையும்,சமூக-சட்ட விரோத நடவடிக்கைகளையும் இந்திய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சமூக அரங்கில் வெளிப்படுத்த என்றுமே தயங்கியதில்லை. "நாங்கள் மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளோம்" என்ற பழைய புரளியைக்கூட அவர்கள் இப்போதெல்லாம் சொல்வதில்லை; "நாங்க அப்படித்தான். உன்னால என்ன புடுங்கமுடியுமோ புடுங்கு" என்று சொல்லி வெகு நாட்களாகிவிட்டது. அரசியல் அறிவும் சனநாயக உணர்வும் சமூகப் பொறுப்பும் மந்தித்துப் போன-இலட்சக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டுகிடக்கிற-சுய சிந்தனையற்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு பயப்படவோ, பதுங்கவோ அவர்களென்ன முட்டாள்களா? அல்லது நம்மைப் போல் மறதிப் பேர்வழிகளா?

str said...

சரவணன்

ரோட்டில் ஒரு ரவுடி அப்பாவியை மிரட்டி அடித்துக் கொண்டிருக்கிறான். அப்பாவியோ ரவுடியிமிருந்து திமிறி விடுபடுவதற்காக ரவுடியைத் தள்ளி விட்டு விட்டு வெளியேறப் பார்க்கிறார். அந்தப் பக்கம் வரும் ஏட்டையா தெருவில ரெண்டு பேரும் சண்டை போடுகிறார்கள் என்று சொல்லி இருவரையும் கொண்டு போய் லாக்கப்பில் வைத்தது போல இருக்கிறது இந்தக் குற்றச் சாட்டு. பாராளுமன்றம் முடக்கப் பட்டதில் எதிர்க் கட்சிகளையும் சேர்த்துக் குற்றம் சொல்வது அந்த ஏட்டையாவின் செயல். இங்கு தெளிவாகக் குற்றவாளிகள் சோனியாவின் இத்தாலிய காங்கிரஸ் மட்டுமே. ஜே பி சி யை மிகப் பிடிவாதமாக மறுக்கும் பொழுதே இதில் சோனியாவின் பங்கு இருப்பது உறுதிப் பட்டு விடுகிறது. ஆகவே பாராளுமன்றம் தடுக்கப் படுவதற்கு முழுப் பொறுப்பும் சோனியாவை மட்டுமே சாரும். இதில் எதிர்க்கட்சிகளை இழுப்பது அபாண்ட்மான ஒரு செயலாகும். சி பி ஐ மற்றும் பி ஏ சி செய்ய முடியாத ஒரு சில விசாரணைகளை ஜே பி சி செய்ய முடியும் அதற்காகவே சோனியா அஞ்சுகிறார். ஜே பி சி அமைக்கப் படும் வரை இந்தியப் பாராளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் நடத்தவே விடக் கூடாது. பாராளுமன்றம் நடப்பது என்பதே ஒரு பெரிய ஜோக். நம் பாராளுமன்றம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஏதும் பெரிய வித்தியாசம் இல்லை என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இருந்தாலும் இத்தனை நூறு கோடிகள் வீணாவதற்கு முழுப் பொறுப்பையும் சோனியா மட்டுமே ஏற்க வேண்டும். பாராளுமன்றம் முடிந்தவுடன் எதிர்க் கட்சிகள் தூங்கப் போய் விடாமல் எமர்ஜென்ஸியை எதிர்த்து ஜே பி தலைமையில் அன்று போராடிய அதே உத்வேகத்துடன் இன்று எதிர்க்கட்சிகள் முக்கியமாக பி ஜே பி அதிமுக போராடி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அன்று இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அடுத்து வந்த தேர்தலில் சாதாரண ஒரு பள்ளி மாணவனான நான் கூட கார்ட்டூன் போர்டுகள் வரைந்து கொடுத்து ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு உதவியிருக்கிறேன் அதே உணர்வு இன்று மீண்டும் வர வேண்டும் இதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்ற எதிர்கட்சிகள் முனைப்புடன் செயல் பட வேண்டும் அது வரை பாராளும்னறம் நடக்காவிட்டாலும் கூட எதுவும் மோசமில்லை எதுவும் குடி முழுகிப் போய் விடாது.
அன்புடன்
ச.திருமலை

செங்கோவி said...

தவறு எதுவும் செய்யவிக்கையென்றால் விசாரணைக்கு உத்தரவிடுவடுவதில் என்ன தயக்கம்..நல்ல கட்டுரை..அப்படியே பொடுறீங்களே, தினமலர் ஒன்னும் சொல்லாதா? (தெரிஞ்சுக்கலாம்னு கேட்கிறேன்)
=---செங்கோவி
அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்

ரிஷி said...

//நமது அரசியல்வியாதிகள் இதனை எப்போது உணர்வார்கள்..? //

எப்போதுமே உணர மாட்டார்கள்!

Indian Share Market said...

இந்திய தேசியக் கொடியின் வண்ணத்திற்கு தான் அவமரியாதை காங்கிரஸ் எனும் கட்சியால்....

ரிஷி said...

"ஜே.பி.சியை உருவாக்கினால் அதை எதிர்கட்சிகள் தேர்தலுக்கு ஆதாயமாக ஆக்கிக் கொள்ளக்கூடிய அபாயமிருக்கிறது" என்று முன்னர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மடியில் கனமில்லையென்றால் அதை நிரூபித்து எதிர்கட்சிகள் மூஞ்சியில் கரியைப் பூசி அதை தங்களுக்கு ஆதாயமாக ஆக்கியிருக்கலாமே காங்கிரஸ்??

அவரது வார்த்தைகளில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது ஊழல் நடந்திருக்கிறது என்று. இதற்குமேல் என்ன வேண்டும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.]]]

இதுக்கு நாமளும் ஒரு காரணம் யோகேஷ்.. ஓட்டுப் போடும்போது இதை மட்டும் நாம யோசிக்கிறதில்ல..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
அப்பாடா............ ரொம்ப நாளக்கி அப்புறம் வட நமக்கு]]]

இப்படியொரு பெருமையா..? நடு ராத்திரிவரைக்கும் முழிச்சிருந்தால் இப்படித்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஏதிலி... said...

அப்பட்டமாக-பகிரங்கமாக-கூச்சமின்றி-பயமின்றித் தமது மக்கள் விரோதத் தன்மையையும், சமூக-சட்ட விரோத நடவடிக்கைகளையும் இந்திய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சமூக அரங்கில் வெளிப்படுத்த என்றுமே தயங்கியதில்லை.

"நாங்கள் மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளோம்" என்ற பழைய புரளியைக்கூட அவர்கள் இப்போதெல்லாம் சொல்வதில்லை;

"நாங்க அப்படித்தான். உன்னால என்ன புடுங்கமுடியுமோ புடுங்கு" என்று சொல்லி வெகு நாட்களாகிவிட்டது.

அரசியல் அறிவும் சனநாயக உணர்வும் சமூகப் பொறுப்பும் மந்தித்துப் போன-இலட்சக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கிற-சுய சிந்தனையற்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு பயப்படவோ, பதுங்கவோ அவர்களென்ன முட்டாள்களா?
அல்லது நம்மைப் போல் மறதிப் பேர்வழிகளா?]]]

ஏதிலி ஸார்..

நியாயமான பேச்சு இது..! மக்களாகிய நாம் மாறினால் ஒழிய அவர்கள் மாறப் போவதில்லை..! அவர்களை உணர்த்த வேண்டியவைகளை நாம்தான் உணர்த்த வேண்டும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[str said...

சரவணன்

ரோட்டில் ஒரு ரவுடி அப்பாவியை மிரட்டி அடித்துக் கொண்டிருக்கிறான். அப்பாவியோ ரவுடியிமிருந்து திமிறி விடுபடுவதற்காக ரவுடியைத் தள்ளி விட்டுவிட்டு வெளியேறப் பார்க்கிறார். அந்தப் பக்கம் வரும் ஏட்டையா தெருவில ரெண்டு பேரும் சண்டை போடுகிறார்கள் என்று சொல்லி இருவரையும் கொண்டு போய் லாக்கப்பில் வைத்தது போல இருக்கிறது இந்தக் குற்றச்சாட்டு.

பாராளுமன்றம் முடக்கப்பட்டதில் எதிர்க் கட்சிகளையும் சேர்த்துக் குற்றம் சொல்வது அந்த ஏட்டையாவின் செயல். இங்கு தெளிவாகக் குற்றவாளிகள் சோனியாவின் இத்தாலிய காங்கிரஸ் மட்டுமே. ஜேபிசியை மிகப் பிடிவாதமாக மறுக்கும்பொழுதே இதில் சோனியாவின் பங்கு இருப்பது உறுதிப்பட்டு விடுகிறது. ஆகவே பாராளுமன்றம் தடுக்கப்படுவதற்கு முழுப் பொறுப்பும் சோனியாவை மட்டுமே சாரும். இதில் எதிர்க்கட்சிகளை இழுப்பது அபாண்ட்மான ஒரு செயலாகும்.

சிபிஐ மற்றும் பிஏசி செய்ய முடியாத ஒரு சில விசாரணைகளை ஜேபிசி செய்ய முடியும். அதற்காகவே சோனியா அஞ்சுகிறார்.

ஜேபிசி அமைக்கப்படும்வரை இந்தியப் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் நடத்தவே விடக் கூடாது. பாராளுமன்றம் நடப்பது என்பதே ஒரு பெரிய ஜோக்.

நம் பாராளுமன்றம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஏதும் பெரிய வித்தியாசம் இல்லை என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இருந்தாலும் இத்தனை நூறு கோடிகள் வீணாவதற்கு முழுப் பொறுப்பையும் சோனியா மட்டுமே ஏற்க வேண்டும்.

பாராளுமன்றம் முடிந்தவுடன் எதிர்க் கட்சிகள் தூங்கப் போய் விடாமல் எமர்ஜென்ஸியை எதிர்த்து ஜே பி தலைமையில் அன்று போராடிய அதே உத்வேகத்துடன் இன்று எதிர்க்கட்சிகள் முக்கியமாக பி ஜே பி அதிமுக போராடி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அன்று இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அடுத்து வந்த தேர்தலில் சாதாரண ஒரு பள்ளி மாணவனான நான் கூட கார்ட்டூன் போர்டுகள் வரைந்து கொடுத்து ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு உதவியிருக்கிறேன் அதே உணர்வு இன்று மீண்டும் வர வேண்டும்.

இதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்ற எதிர்கட்சிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் அது வரை பாராளும்னறம் நடக்காவிட்டாலும்கூட எதுவும் மோசமில்லை எதுவும் குடி முழுகிப் போய்விடாது.
அன்புடன்
ச.திருமலை]]]

திருமலை ஸார்..

பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்ததற்குப் பதிலாக நாடாளுமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து அன்றைக்கே நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தைத் துவக்கியிருக்கலாம்..!

ஏன் ஒபாமா இந்தியா வந்தபோதுகூட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக எதிர்ப்பு காட்டி பாராளுமன்றத்தைப் புறக்கணிப்போம் என்று சொல்லியிருக்க வேண்டும்..!

இது மக்கள் போராட்டமாக மாறுவதற்கு மக்களிடத்தில் இருந்துதான் ஆர்வமும், வெறியும் கிளம்ப வேண்டும். இங்கே சினிமாவும், தனி மனித குடும்ப நலனும் மேலோங்கி நிற்பதால் ஒன்றும் செய்வதற்கில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[செங்கோவி said...
தவறு எதுவும் செய்யவில்லையென்றால் விசாரணைக்கு உத்தரவிடுவடுவதில் என்ன தயக்கம்.]]]

தவறுகள் நடந்திருப்பதால்தான் உத்தரவிட மறுக்கிறார்கள்..!

[[[நல்ல கட்டுரை. அப்படியே பொடுறீங்களே, தினமலர் ஒன்னும் சொல்லாதா? (தெரிஞ்சுக்கலாம்னு கேட்கிறேன்)
=---செங்கோவி
அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்]]]

பல முறை செய்திருக்கிறேன். இதுவரையில் எதுவும் சொன்னதில்லை. அவர்கள் பெயர் போடாமல் போட்டால்தான் தவறு..! இது அவர்களுக்கு ஓசியில் கிடைக்கிற விளம்பரம் மாதிரிதானே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

//நமது அரசியல்வியாதிகள் இதனை எப்போது உணர்வார்கள்..? //

எப்போதுமே உணர மாட்டார்கள்!]]]

நாசமாகப் போகட்டும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Indian Share Market said...
இந்திய தேசியக் கொடியின் வண்ணத்திற்குதான் அவமரியாதை காங்கிரஸ் எனும் கட்சியால்]]]

நேற்று அந்த மூவர்ணக் கொடியில் பூமாலை செய்து இத்தாலி அன்னைக்கு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் தேசத் துரோகிகள் சிலர்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

"ஜே.பி.சியை உருவாக்கினால் அதை எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு ஆதாயமாக ஆக்கிக் கொள்ளக்கூடிய அபாயமிருக்கிறது" என்று முன்னர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மடியில் கனமில்லையென்றால் அதை நிரூபித்து எதிர்கட்சிகள் மூஞ்சியில் கரியைப் பூசி அதை தங்களுக்கு ஆதாயமாக ஆக்கியிருக்கலாமே காங்கிரஸ்?? அவரது வார்த்தைகளில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது ஊழல் நடந்திருக்கிறது என்று. இதற்கு மேல் என்ன வேண்டும்.]]]

நம்ம மக்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டுமே..? அட்லீஸ்ட் தேர்தல் சமயத்திலாவது..!

thamizhan said...

ஒட்டு யாருக்கு போட?எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?வெறுப்பில் 60 சதவீத மக்கள் ஓட்டே போடுவதில்லை.நேர்மையானவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் விடிவு காலம்?

பார்வையாளன் said...

யாரையோ திருப்தி படுத்த, அம்பேத்கர் பட விமர்சனததை சில பதிவர்கள் எழுதவில்லை என்று பரவலாக பேசபடுவது குறித்து?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[thamizhan said...
ஒட்டு யாருக்கு போட? எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? வெறுப்பில் 60 சதவீத மக்கள் ஓட்டே போடுவதில்லை. நேர்மையானவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் விடிவு காலம்?]]]

அந்த நேர்மையானவர்கள் எங்கே இருக்கிறார்கள் தமிழன் ஸார்..? தனி அடையாளத்துடன் வாழ்கிறார்களா? என்ன..? நாம்தான் அவர்கள்.. நாம்தான் முழிக்க வேண்டும். உழைக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் முழிக்க வேண்டும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
யாரையோ திருப்திபடுத்த, அம்பேத்கர் பட விமர்சனததை சில பதிவர்கள் எழுதவில்லை என்று பரவலாக பேசபடுவது குறித்து?]]]

செம காமெடி..! இதனால் யாருக்கு என்ன லாபம்..? யாருக்கு என்ன நஷ்டம்..?

ரிஷி said...

(((உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

"ஜே.பி.சியை உருவாக்கினால் அதை எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு ஆதாயமாக ஆக்கிக் கொள்ளக்கூடிய அபாயமிருக்கிறது" என்று முன்னர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். மடியில் கனமில்லையென்றால் அதை நிரூபித்து எதிர்கட்சிகள் மூஞ்சியில் கரியைப் பூசி அதை தங்களுக்கு ஆதாயமாக ஆக்கியிருக்கலாமே காங்கிரஸ்?? அவரது வார்த்தைகளில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது ஊழல் நடந்திருக்கிறது என்று. இதற்கு மேல் என்ன வேண்டும்.]]]

நம்ம மக்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டுமே..? அட்லீஸ்ட் தேர்தல் சமயத்திலாவது..!

)))

தேர்தல் சமயத்தில் இவர்களைத் தூக்கியெறிந்து விடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். கண்டிப்பாக அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நாம் திரும்பப் பெறப் போவதே இல்லை. வரப்போகிற புதிய கட்சிகளின் ஆட்சியில் ஊழலின் சதவீதம் வேண்டுமானால் குறையலாமே ஒழிய ஊழலும் குறையப் போவதில்லை. இது குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூடத் தெரியும். இதே காங்கிரஸோ, திமுகவுக்கோ வெறும் ஐந்து வருடங்கள்தான் வனவாசமாக இருக்கும். அதன்பின் மீண்டும் வந்து விடுவார்கள். இது ஒரு பருவகால மாற்றம் போல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். மக்கள் உணர்கிறார்கள் அல்லது உணரவில்லை என்பது பிரச்சினை அல்ல! இதற்குப் பின் என்ன என்பதுதானே பிரச்சினை??

புதிய சிந்தனைகள், புதிய சித்தாந்தங்கள், புதிய கொள்கைகள் - யாரால் கொண்டுவர முடியும்?

நம் எண்பது, தொன்னூறு வயது காலகட்டங்களில் இதே போல நம் பிள்ளைகளும் பேரன்களும் ஊழலுக்கெதிராய் போராடிக் கொண்டிருப்பதைத்தான் பார்க்கப் போகிறோம். (அவர்களுக்கு நாம் நேர்மை சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தால்!!!)

பார்வையாளன் said...

"அம்பேத்கர் பட விமர்சனததை சில பதிவர்கள் எழுதவில்லை என்று பரவலாக பேசபடுவது குறித்து?]]]

"செம காமெடி..! இதனால் யாருக்கு என்ன லாபம்..? யாருக்கு என்ன நஷ்டம்..?"சிலர் பதிவர்கள் எழுதி இருந்தால், அந்த படம் இன்னும் பலரை அடைந்து இருக்கும்... விவாதங்களால் சில புதிய விஷயங்கள் தெரிய வந்திருக்கும.. இதெல்லாம் நடக்காமல் போனது நஷ்டம்தானே..

அந்த படம் பற்றி ஆர்வம் இல்லாதவர்கள், படம் பார்க்காதவர்கள் என்பது வேறு விஷயம்...
ஆனால் படத்தில் ஆர்வம் உடைய, படம் பார்த்த சிலர் , அதை பற்றி எதுவும் சொல்லாதது , பதிவுலகில் கேள்விக்குறியை எழுப்பி இருக்கிறதே?

வேழமுகன் said...

///இப்படி இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் செயல்படுவதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. /////இந்த கட்டுரையின் நோக்கம் என்ன?

பொறுப்பில் இருக்கும் அரசு தவறு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, எதிர்க் கட்சிகள் ஆர்பாட்டம் செய்கின்றன. ஆனால் "சரி சரி இருவரும் சண்டை போடாமல் சமாதானமாக போங்க,, " என்பது போல தொனியில் இந்தக்கட்டுரை இருக்கிறது.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு உடன்பாட்டுடன் போனால் நமக்கு சந்தோஷமா?

(எனகென்னவோ அப்படித்ததான் பல விஷயங்கள் நடக்கிறது என்று தோன்றுகிறது..)

தவறுகள் நடக்கும்போது எதிர்கட்சிகளும் மக்களும் பிரச்சனை கிளப்பவேண்டும் அதுவே ஜனநாயகத்துக்கு நல்லது... சகித்துக்கொண்டு போவது அல்ல...

பார்வையாளன் said...

"இதனால் யாருக்கு என்ன லாபம்..? "

no comments ...

Thomas Ruban said...

உங்களை போலவே ஓட்டுப்போடும மக்கள் அட்லீஸ்ட் தேர்தல் சமயத்திலாவது!!!! இப்படி யோசித்துப் பார்த்து நேர்மையாக வாக்களித்தால் மட்டுமே அரசியல்வியாதிகள் திருந்துவார்கள்!!!
முடிந்தவரை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்போம்.

டுபாக்கூர் பதிவர் said...

பாராளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவே கருதுகிறேன்.எதிர்கட்சிகளிடையே நிலவிய ஒற்றுமையின்மையே இதற்கு காரணம்.

அரசின் மீதான நிர்பந்தத்தை அதிகரிக்கும் யுக்திகள் வகுப்பத்தில் அக்கறையில்லாதவர்களாகவே செயல்பட்டனர் என்றே தோன்றுகிறது.

ஒட்டு மொத்தமாக எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது விலகல் கடிதத்தினை கொடுத்திருக்கலாம். அத்தகைய ஒரு முன்னெடுப்பு அரசு தரப்பினை சங்கடத்திற்குள் ஆளாக்கியிருக்கும்.ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் வெறுமனே கூச்சல் போட்டு படம் காட்டியது கூட்டு களவானி தனமாகவே இருந்தது.

Sundar said...

மீண்டும் ஒரு அரசியல் பக்கம்!

இந்த அரசியல்வியாதிகள் எல்லாம் குணம் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க நண்பரே?

திரை விமர்சனம் மட்டும்தானா?

சும்மா வம்பிழுத்தேன்!!!

வணக்கம்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

தேர்தல் சமயத்தில் இவர்களைத் தூக்கியெறிந்து விடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். கண்டிப்பாக அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நாம் திரும்பப் பெறப் போவதே இல்லை. வரப் போகிற புதிய கட்சிகளின் ஆட்சியில் ஊழலின் சதவீதம் வேண்டுமானால் குறையலாமே ஒழிய ஊழலும் குறையப் போவதில்லை. இது குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூடத் தெரியும். இதே காங்கிரஸோ, திமுகவுக்கோ வெறும் ஐந்து வருடங்கள்தான் வனவாசமாக இருக்கும். அதன் பின் மீண்டும் வந்து விடுவார்கள். இது ஒரு பருவகால மாற்றம் போல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். மக்கள் உணர்கிறார்கள் அல்லது உணரவில்லை என்பது பிரச்சினை அல்ல! இதற்குப் பின் என்ன என்பதுதானே பிரச்சினை??]]]

புதிய நபர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். மீண்டும் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆட்சிக்கு வரக் கூடாது என்றால் வைகோவையோ, விஜய்காந்தையோ கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கலாம்...!

ஆனால் அதற்கு தோதாக அவர்கள் தனியாக நிற்க வேண்டுமே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
சிலர் பதிவர்கள் எழுதி இருந்தால், அந்த படம் இன்னும் பலரை அடைந்து இருக்கும்... விவாதங்களால் சில புதிய விஷயங்கள் தெரிய வந்திருக்கும.. இதெல்லாம் நடக்காமல் போனது நஷ்டம்தானே..]]]

ஓ.. மன்னிக்கணும் பார்வையாளன் ஸார்.. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்..

நான் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்று கேட்டது "பரவலாகப் பேசப்படுகிறதே?" என்று நீங்கள் ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறீர்களே.. அதைப் பற்றித்தான்..!

படத்தைப் பற்றியல்ல..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
"இதனால் யாருக்கு என்ன லாபம்..?"

no comments ...]]]

திரும்பவும் சொல்கிறேன். நான் சொன்னது படத்தின் விமர்சனத்தைப் பற்றியல்ல.. நீங்கள் கிளப்பிவிட்ட புரளியைப் பற்றித்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Thomas Ruban said...
உங்களை போலவே ஓட்டுப் போடும மக்கள் அட்லீஸ்ட் தேர்தல் சமயத்திலாவது!!!! இப்படி யோசித்துப் பார்த்து நேர்மையாக வாக்களித்தால் மட்டுமே அரசியல்வியாதிகள் திருந்துவார்கள்!!!
முடிந்தவரை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்போம்.]]]

அதற்காகத்தான் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இப்படி பதிவுகளை இடுவது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டுபாக்கூர் பதிவர் said...

பாராளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவே கருதுகிறேன். எதிர்கட்சிகளிடையே நிலவிய ஒற்றுமையின்மையே இதற்கு காரணம். அரசின் மீதான நிர்பந்தத்தை அதிகரிக்கும் யுக்திகள் வகுப்பத்தில் அக்கறையில்லாதவர்களாகவே செயல்பட்டனர் என்றே தோன்றுகிறது.
ஒட்டு மொத்தமாக எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது விலகல் கடிதத்தினை கொடுத்திருக்கலாம். அத்தகைய ஒரு முன்னெடுப்பு அரசு தரப்பினை சங்கடத்திற்குள் ஆளாக்கியிருக்கும். ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் வெறுமனே கூச்சல் போட்டு படம் காட்டியது கூட்டு களவானிதனமாகவே இருந்தது.]]]

நமக்கு வாய்த்தவர்களும் சரியில்லை. நாம் வாழ்க்கைப்பட்ட இடங்களும் சரியில்லை..! என்ன செய்வது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sundar said...

மீண்டும் ஒரு அரசியல் பக்கம்!

இந்த அரசியல்வியாதிகள் எல்லாம் குணம் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க நண்பரே?

திரை விமர்சனம் மட்டும்தானா?

சும்மா வம்பிழுத்தேன்!!!

வணக்கம்...]]]

ஆமாம்.. அப்போ ஒரு பாயிண்ட்டுதான்.. திரைவிமர்சனம் மட்டும்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வேழமுகன் said...

///இப்படி இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் செயல்படுவதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. /////

இந்த கட்டுரையின் நோக்கம் என்ன?
பொறுப்பில் இருக்கும் அரசு தவறு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, எதிர்க்கட்சிகள் ஆர்பாட்டம் செய்கின்றன. ஆனால் "சரி சரி இருவரும் சண்டை போடாமல் சமாதானமாக போங்க,, " என்பது போல தொனியில் இந்தக் கட்டுரை இருக்கிறது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு உடன்பாட்டுடன் போனால் நமக்கு சந்தோஷமா?
(எனகென்னவோ அப்படித்ததான் பல விஷயங்கள் நடக்கிறது என்று தோன்றுகிறது..)
தவறுகள் நடக்கும்போது எதிர்க்கட்சிகளும் மக்களும் பிரச்சனை கிளப்ப வேண்டும் அதுவே ஜனநாயகத்துக்கு நல்லது. சகித்துக் கொண்டு போவதல்ல.]]]

இங்கே எதிர்க்கட்சிகள் நினைத்திருந்தால் இந்த விஷயத்தை மக்கள் பிரச்சினையாகக் கருதி பெரிய அளவுக்குக் கொண்டு போயிருக்க முடியும்.

ஆனால் அவர்களுக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை..! பாராளுமன்றத்தை முடக்கிப் போடுவதால் ஏதோ தாங்கள் போராடுவதாக ஒரு சீனை போட்டுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்..!

Ganpat said...

தினமலரில் வந்த இந்த பகுதியை,நண்பர்கள் படித்து "மகிழ"
இங்கு பதிவு செய்கிறேன்..
(நன்றி: தினமலர்)

சென்னை : ""குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.

பதில்:முதல்வர் கருணாநிதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி:

கேள்வி:சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?

பதில்:இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே...

கேள்வி:இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?

பதில்:அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.

கேள்வி:ராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.

கேள்வி:காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?

பதில்: உங்களால் வெட்ட முடியாது.

கேள்வி:ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.

கேள்வி:நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்:இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.

கேள்வி:சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே?

பதில்: அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கண்பத் ஸார்..

தகவலுக்கு மிக்க நன்றி..!

பூசி மெழுகுவது என்பது இதுதான். இந்த வாதத் திறமையால்தான் கருணாநிதி இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றி வருகிறார்..!

ரிஷி said...

ஆண்டவா! யாராவது இந்தப் பெருசு வாய மூடச் சொல்லுங்களேன்! முடியல... ஆஅவ்வ்வ்வ்வ்!!!

ரிஷி said...

//கேள்வி:நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்:இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.//

யாரைப் பார்த்துக் கேட்கிறாய் கேள்வி?
எதை நினைத்துக் கேட்கிறாய் கேள்வி?
என்னோடு மிசாவில் சிறை சென்றாயா?
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தாயா?
ஆரியரை எதிர்த்துப் போரிட்டாயா?
அல்லது
கொஞ்சி விளையாடும் எம் வீட்டுப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? (பணி புரிந்திருந்தால் ஒரு வீடு உண்டு!!!!)
யாரைப் பார்த்துக் கேட்கிறாய் கேள்வி?
எதை நினைத்துக் கேட்கிறாய் கேள்வி?

மூடனே! ஆ..! நெஞ்சம் வெடிக்கிறது!
உடன்பிறப்பே பொங்கி எழுக!

(டைரக்டர் : கட்..கட்..ஓவர் ஆக்ஷன் சார்! கொஞ்சம் குறைச்சுக்கங்க..)

ரிஷி said...

//கேள்வி:நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்:இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.//

ஆமாம்..ஆமாம்.!! அவர்கள் இருவரும் சமையல் குறிப்பு பகிர்ந்து கொண்டார்கள். அவர் வடநாட்டு தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று கூற, இவரோ தென்னாட்டு செட்டிநாடு சமையலைப் பற்றிக் கூறினார். இதிலிருந்து வடக்குக்கும் தெற்குக்கும் தெரியவரும் ஒற்றுமையை சில நாசகார சக்திகள் சீர்குலைக்க முயலுகின்றன. அவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

(கருணாநிதி இப்படிச் சொல்லியிருக்கலாம்!)

Sai said...

Please write an article regarding Mullai periyar issue. Just want to know whose side justice is.. TN or Kerala...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...
ஆண்டவா! யாராவது இந்தப் பெருசு வாய மூடச் சொல்லுங்களேன்! முடியல... ஆஅவ்வ்வ்வ்வ்!!!]]]

பெரிசு என்று யாரைச் சொல்கிறீர்கள் ரிஷி..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[ரிஷி said...

//கேள்வி:நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்:இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.//

யாரைப் பார்த்துக் கேட்கிறாய் கேள்வி?
எதை நினைத்துக் கேட்கிறாய் கேள்வி?
என்னோடு மிசாவில் சிறை சென்றாயா? தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தாயா? ஆரியரை எதிர்த்துப் போரிட்டாயா?
அல்லது கொஞ்சி விளையாடும் எம் வீட்டுப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா? (பணி புரிந்திருந்தால் ஒரு வீடு உண்டு!!!!)
யாரைப் பார்த்துக் கேட்கிறாய் கேள்வி?
எதை நினைத்துக் கேட்கிறாய் கேள்வி?
மூடனே! ஆ! நெஞ்சம் வெடிக்கிறது!
உடன்பிறப்பே பொங்கி எழுக!
டைரக்டர் : கட்..கட்..ஓவர் ஆக்ஷன் சார்! கொஞ்சம் குறைச்சுக்கங்க..)]]]

ஹா.. ஹா.. ரிஷி.. கலக்கல்..! இப்படியே தொடருங்கள். எனக்குத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்ச மாதிரியிருக்கு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

//கேள்வி:நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்:இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.//

ஆமாம்..ஆமாம்.!! அவர்கள் இருவரும் சமையல் குறிப்பு பகிர்ந்து கொண்டார்கள். அவர் வடநாட்டு தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று கூற, இவரோ தென்னாட்டு செட்டிநாடு சமையலைப் பற்றிக் கூறினார். இதிலிருந்து வடக்குக்கும் தெற்குக்கும் தெரியவரும் ஒற்றுமையை சில நாசகார சக்திகள் சீர்குலைக்க முயலுகின்றன. அவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
(கருணாநிதி இப்படிச் சொல்லியிருக்கலாம்!)]]]

நிச்சயம் சொல்லியிருக்கலாம். அறிவாலயத்தில் ஆலோசகர் போஸ்ட் காலியாக இருக்கிறதாம்.. செல்கிறீர்களா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sai said...
Please write an article regarding Mullai periyar issue. Just want to know whose side justice is.. TN or Kerala...]]]

எழுதிருவோம் ஸார்..!

ரிஷி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...
ஆண்டவா! யாராவது இந்தப் பெருசு வாய மூடச் சொல்லுங்களேன்! முடியல... ஆஅவ்வ்வ்வ்வ்!!!]]]

பெரிசு என்று யாரைச் சொல்கிறீர்கள் ரிஷி..? //

ஆவ்வ்! உங்களைச் சொல்லலைங்ணா... "தில்லுதுர" கருணாநிதியைச் சொன்னேன். அவருதானே ரொம்ப தில்லா பதில் சொல்றாரு எந்தக் கேள்விக்கும்!!

ரிஷி said...

///Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

//கேள்வி:நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்:இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.//

ஆமாம்..ஆமாம்.!! அவர்கள் இருவரும் சமையல் குறிப்பு பகிர்ந்து கொண்டார்கள். அவர் வடநாட்டு தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று கூற, இவரோ தென்னாட்டு செட்டிநாடு சமையலைப் பற்றிக் கூறினார். இதிலிருந்து வடக்குக்கும் தெற்குக்கும் தெரியவரும் ஒற்றுமையை சில நாசகார சக்திகள் சீர்குலைக்க முயலுகின்றன. அவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
(கருணாநிதி இப்படிச் சொல்லியிருக்கலாம்!)]]]

நிச்சயம் சொல்லியிருக்கலாம். அறிவாலயத்தில் ஆலோசகர் போஸ்ட் காலியாக இருக்கிறதாம்.. செல்கிறீர்களா..? ///

அறிவாலயத்தில் அறிவாளிகளுக்கு மட்டும்தாண்ணே இடம்? எனக்கெல்லாம் கிடையாதுண்ணே. இடம் கேட்டால் இதயத்தில் இருக்கிறது இடம் என்பார் விடத்தை மனதில் வைத்திருக்கும் என் பாசத்தலைவன்.

ரிஷி said...

[[ஹா.. ஹா.. ரிஷி.. கலக்கல்..! இப்படியே தொடருங்கள். எனக்குத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்ச மாதிரியிருக்கு..!]]

சிக்கினா சிதறுதேங்காயே போடுவோம்ணே! வரட்டும் இன்னும் நிறைய சரக்கு டெலிவரி பண்ண வேண்டியிருக்கு!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

பெரிசு என்று யாரைச் சொல்கிறீர்கள் ரிஷி..? //

ஆவ்வ்! உங்களைச் சொல்லலைங்ணா... "தில்லுதுர" கருணாநிதியைச் சொன்னேன். அவருதானே ரொம்ப தில்லா பதில் சொல்றாரு எந்தக் கேள்விக்கும்!!]]]

ஓ.. அவ்ளோ தில்லு இருக்காங்க உங்களுக்கு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...
அறிவாலயத்தில் அறிவாளிகளுக்கு மட்டும்தாண்ணே இடம்? எனக்கெல்லாம் கிடையாதுண்ணே. இடம் கேட்டால் இதயத்தில் இருக்கிறது இடம் என்பார் விடத்தை மனதில் வைத்திருக்கும் என் பாசத் தலைவன்.]]]

ஆஹா.. பாசத் தலைவனின் குணத்தை அப்படியே பிட்டுப் பிட்டு வைக்கிறீர்களே ரிஷி.. வாழ்க வளமுடன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

[[ஹா.. ஹா.. ரிஷி.. கலக்கல்..! இப்படியே தொடருங்கள். எனக்குத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்ச மாதிரியிருக்கு..!]]

சிக்கினா சிதறு தேங்காயே போடுவோம்ணே! வரட்டும் இன்னும் நிறைய சரக்கு டெலிவரி பண்ண வேண்டியிருக்கு!]]]

பார்த்துப் பண்ணுங்க.. போடுற போட்டுல என் தலையை உடைச்சிராதீங்கண்ணே..!

ரிஷி said...

///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...

பெரிசு என்று யாரைச் சொல்கிறீர்கள் ரிஷி..? //

ஆவ்வ்! உங்களைச் சொல்லலைங்ணா... "தில்லுதுர" கருணாநிதியைச் சொன்னேன். அவருதானே ரொம்ப தில்லா பதில் சொல்றாரு எந்தக் கேள்விக்கும்!!]]]

ஓ.. அவ்ளோ தில்லு இருக்காங்க உங்களுக்கு..?
///

ஓ!.. இருக்கே.. உங்கள் கட்டுரைகளையும், மற்றும் இது போல தெளிவாக எழுதி வரும் பிற பதிவர்களின் கட்டுரைகளையும் தொடர்ந்து நண்பர்களுக்கு அனுப்பி வருகிறேன்.

அதுமட்டுமில்லை! சி.எம்.செல்லுக்கே மெயில் அனுப்புற அளவுக்கும், அத்தனை கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், முக்கிய தலைவர்கள், பல துறைச் செயலர்கள் அனைவருக்கும் மெயில் அனுப்புற அளவுக்கும் தில்லு இருக்கு! என்னால் சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை சந்திக்க முடியாது. ஆனால் சிங்கங்களை என் இடத்துக்கு வரவழைச்சு காறித் துப்ப முடியும்!!! அந்த அளவுக்கு தில்லு இருக்கு.. நான் உயிரை வெறுத்தவண்ணே!

கூடிய சீக்கிரம் உங்கள் புகழும் ஓங்கும்! என் புகழும் ஓங்கும்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரிஷி said...
ஓ.. அவ்ளோ தில்லு இருக்காங்க உங்களுக்கு..?///

ஓ!.. இருக்கே.. உங்கள் கட்டுரைகளையும், மற்றும் இது போல தெளிவாக எழுதி வரும் பிற பதிவர்களின் கட்டுரைகளையும் தொடர்ந்து நண்பர்களுக்கு அனுப்பி வருகிறேன்.

அது மட்டுமில்லை! சி.எம். செல்லுக்கே மெயில் அனுப்புற அளவுக்கும், அத்தனை கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், முக்கிய தலைவர்கள், பல துறைச் செயலர்கள் அனைவருக்கும் மெயில் அனுப்புற அளவுக்கும் தில்லு இருக்கு! என்னால் சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை சந்திக்க முடியாது. ஆனால் சிங்கங்களை என் இடத்துக்கு வரவழைச்சு காறித் துப்ப முடியும்!!! அந்த அளவுக்கு தில்லு இருக்கு.. நான் உயிரை வெறுத்தவண்ணே! கூடிய சீக்கிரம் உங்கள் புகழும் ஓங்கும்! என் புகழும் ஓங்கும்!]]]

ஓகே.. ஓகே.. எனக்கு இன்னுமொரு தோஸ்த் கிடைச்சுட்டாப்புல.. ரிஷி அடிச்சு ஆடுங்க.. முருகன் இருக்கான்.. பார்த்துக்கலாம்..!