நான் தாத்தாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாயிட்டேன்..!!!

09-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏற்கெனவே வாழ்க்கைல நொந்து நூடூல்ஸா போய் உக்காந்திருக்கிறவனை இன்னும் கொஞ்சம் மிதிச்சுப் பார்க்கணும்னு நினைக்கிறான்யா அந்த முருகன்..!

இன்னிக்குக் காலைல அதிசயமா ஒரு பயபுள்ளை ஊர்ல இருந்து போன் அடிச்சான்.. தெரிஞ்சவன் செத்தாக்கூட போன் அடிக்காதவனாச்சே இவன்னு நினைச்சு, “ஹலோ..” சொன்னா.. பதிலுக்கு நூறு கிலோ ஈயத்தை காய்ச்சி, காதுல ஊத்துற மாதிரி ஒரு நியூஸை போடுறான்பா..!

எடுத்த எடுப்பிலேயே, “சரவணா.. நீ தாத்தா ஆயிட்டடா.. தாத்தா ஆயிட்ட..” என்றான். “என்ன எழவுடா இது.. காலங்கார்த்தால  சாவடிக்கிற..?”ன்னு திட்டுனா.. பய சொல்றான்.. “சரவணா உன்னோட அமலா.. அதாண்டா உன்னோட 'ஆட்டோகிராப் மல்லிகா'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பியே.. அவதான்.. பாட்டியாயிட்டா. தெரியுமா..? நேத்து ராத்திரி அபிராமி அம்மன் கோவில்கிட்ட பார்த்தேன். புது பேத்தியைக் கைல தூக்கிக் கொஞ்சுக்கிட்டே மக, மருமகனோட போயிட்டிருந்தா.. அவ பாட்டின்னா... நீ தாத்தாதானடா..?” என்றான்.

திக்கென்னு ஆயிப் போச்சு மனசு..  நானே கொஞ்சூண்டு மறந்து தொலைஞ்சிருக்கும் நேரத்துல இப்படி அணுகுண்டை வீசுறானேன்னு..! “ஏண்டா எழவெடுத்தவனே.. ஆறு மாசம் கழிச்சு போன் பண்றவன் இதைத்தான் மொதல்ல சொல்லணுமாடா..?”ன்னு கேட்டா.. “என்ன செய்யறது.. நீயும் சம்சாரியா ஆக முடியலைன்னு சோகத்துல இருக்குற. சரி தாத்தாவாயிட்டன்னு ஒரு நியூஸை சொன்னாலாவாது கொஞ்சம் சந்தோஷமா இருப்ப பாரு.. அதுக்குத்தான் சொன்னேன்.. அடுத்தத் தடவை உன் மல்லிகாவைப் பார்த்தா உன் நம்பரை கண்டிப்பா கொடுத்து பேசச் சொல்றேன். வைச்சிரவா?”ன்னு சொல்லிட்டு வைச்சுப்புட்டான்யா..

நேத்து ராத்திரி போட்ட போஸ்ட்டே பி.பி.யையும், டென்ஷனையும் ஏத்துச்சுன்னா.. இது அதுக்கும் மேல..

என்னத்த செஞ்சாவது குறைக்கலாம்னு பார்க்குறேன். அதுக்குத்தான் இந்த போஸ்ட்டு..

ஆகவே இதன் மூலம் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்.. நான் கல்யாணம் பண்ணாமலேயே தாத்தா ஆயிட்டேன் மக்களே..!!!

வாழ்த்துங்கப்பா..   

54 comments:

எறும்பு said...

வாழ்த்து

எறும்பு said...

Voted for this good news :)

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

LK said...

உண்மைத் தமிழன் தாத்தா வாழ்க

வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

தாத்தாவுக்கு வாழ்த்துகள்.

ஐத்ருஸ் said...

Vazhthukkal

நையாண்டி நைனா said...

/*வாழ்த்துங்கப்பா.. */

இப்படி சொல்ல கூடாது...
வாழ்த்து தா தா தா ன்னு தான் சொல்லணும்...

இப்படிக்கு உங்கள் அன்பு பேரன்
நையாண்டி நைனா
தலைவர்
உண்மை தமிழன் பதிவுகளை ஒரு வார்த்தை விடாமல் படிப்போர் சங்கம்
மும்பை கிளை.
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...)

நசரேயன் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

Indian Share Market said...

இதை படிக்கும் போதே தலை சுற்றுகிறது !!! உண்மைத் தமிழன் தாத்தா வாழ்க வாழ்த்துக்கள்....

நையாண்டி நைனா said...

அட வாழ்த்து சொல்ல மறந்து போச்சே...

வாழ்க தமிழ் தாத்தா உ.வே... சா...ரி... சாரி...சாரி..

வாழ்த்துக்கள் தமிழ் தாத்தா உனா.தானா

நையாண்டி நைனா said...

தாத்தா உனா தானா அவர்கள் சிறப்புற "பேத்தி கொண்டான்" என்ற பட்டதை வழங்குகிறோம்.

ஐயாமாரே... அண்ணன்மாரே.... அம்மாமாரே... அக்காமாரே... "பேத்தி கொண்டான்" என்ற பட்டத்தில்
உள்ள "த்" -ஐ விட்டு விடாமல் அழுத்தி உச்சரிக்குமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.

நையாண்டி நைனா said...

நீங்க தாத்தா ஆனா சந்தோசத்திலே எனக்கும் கையும் ஓடலே காலும் ஓடலே அதனாலே தான்

நா.மணிவண்ணன் said...

தாத்தாவுக்கு தாத்தாவாகவும் வாழ்த்துக்கள்

நையாண்டி நைனா said...

அண்ணனும் நம்ம கலீஞர் ஐய்யா போல ஆல் போல் தழைத்து அருகு போல் வாழ வாழ்த்துகிறோம்....

(இப்ப உங்களுக்கு டென்சன் கொரஞ்சிருக்குமே)

டுபாக்கூர் பதிவர் said...

என்ன கொடுமை இது சரவணன்!

நையாண்டி நைனா said...

அண்ணன் தாத்தா வான இந்த தினத்தை... மக்கள் எல்லாரும் வீடுகளிலே பட்டாசு வெடித்து கொன்டாடவும் வருகின்ற பில்லை அண்ணன் unaa தானா avarkalukku அனுப்பி வைத்தால் அண்ணன் செட்டில் செய்வார் என்பதனை இந்த பொன்னான நேரத்திலே தெரிவித்து "கொல்"கிறோம்

நையாண்டி நைனா said...

வாழ்க தமிழ் வளர்க தாத்தா நாமம்

(தாத்தாவுக்கு நாமம் போட்டுராதீய... )

பார்வையாளன் said...

இளைஞன் போல ஆக்ட் கொடுத்து வந்த உங்களுக்கு இப்படி ஒரு சோதனையா..

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் தாத்தானாரே....

(ஹை....

எனக்கு ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருதே....

யாராவது கண்டுபுடிச்சு, தாத்தாவுக்கு சொல்லுங்களேன் ப்ப்ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........)

:))

நையாண்டி நைனா said...

பேத்தி: தாத்தா தாத்தா ஒ மை தாத்தா உன்னை கண்டாலே ஆனந்தமே...!!!

உனா தானா : பேத்தி பேத்தி ஒ மை பேத்தி உன்னை கண்டாலே ஆனந்தமே...???

பேத்தி: உன் கவிதை கண்டாலே, உன் பதிவை பார்த்தாலே....எல்லாரும் டரியல் ஆகிறார்களே ஏன்

உனா தானா : பதிவர்கள் சில பேரு எழுதுகிற மொக்கை தான் அடியேனும் செயறேனப்பா

பேத்தி: அதில் என்ன தப்பு...

பதிவர்கள் (கோரசாக): ஹான்... பக்கம் பக்கமா போயிருது... அது தான் தப்பு...

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்.

+ ஓட்டு போடுவதா, - ஓட்டு போடுவதான்னு குழப்பம் வந்துடுச்சு. சரி நமக்கு பழக்கமான + ஓட்டு போட்டுவிடுவோம் என அதையே போட்டுட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

தாத்தாவா ஆகியதை போட்டு, மிகச்சிறிய இடுகை போட்டு, ரெக்கார்ட் ப்ரேக் பண்ணிட்டீங்க போலிருக்கு..

philosophy prabhakaran said...

முதல்முறையாக உங்களுடைய இடுகையை முழுமையாக படித்திருக்கிறேன்...

philosophy prabhakaran said...

இருப்பினும் உங்கள் பிளாஷ்பேக் கொஞ்சம் கனக்க வைத்தது...

Thomas Ruban said...

//நான் கல்யாணம் பண்ணாமலேயே தாத்தா ஆயிட்டேன் மக்களே..!!!//

அப்போ உங்களுக்கு பேரன்களள்!! தொல்லைகள் இல்லை தாத்தா... சந்தோஷபடுங்க தாத்தா.....

பார்வையாளன் said...

தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி கொடு

துமிழ் said...

//ஆகவே இதன் மூலம் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்.. நான் கல்யாணம் பண்ணாமலேயே //

பெண்கள் கவனத்திற்கு ...

மாணவன் said...

என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் சார்,

வெறுமை said...

அட போங்கண்ணே ...பீல் பண்ண வச்சிடீங்களே..

கனாக்காதலன் said...

:) :)

அகில் பூங்குன்றன் said...

விரைவில் கொள்ளு தாத்தா , எள்ளு தாத்தா ஆக வாழ்த்துக்கள் அங்கிள்.

அகில் பூங்குன்றன் said...

அந்த ஆட்டோகிராப் கதையை விரைவில் முடிந்த வரை சுருக்கமாகா வெளியிடவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மன்மத லீலையை வென்றார் உண்டோ..??? பதிவு போடும்போதே நான் சொல்லலை. நீங்க தாத்தா தான்னு. அப்போ நாந்தான முதல் வாழ்த்து சொன்னேன். ஹிஹி

பார்வையாளன் said...

"முடிந்த வரை சுருக்கமாகா வெளியிடவும்"

சுருக்கம் : தமிழில் எங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...

துளசி கோபால் said...

அடடே!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

இப்போ ஒரு மூணுமணி நேரம் முந்திதான் முருகனைப் பார்த்துட்டு வந்தேன்.

பயபுள்ளை இந்த சேதி ஒன்னும் சொல்லலை பாருங்க.

வெள்ளிக் கவசத்தோட....அடடா என்ன அழகுன்னு ஜொலிப்புதான். அதுவும் அந்தக் கவசம் கச்சிதமாப் பொருந்தி இருந்துச்சு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) வாழ்த்துகள்.

RR said...

இப்படி சுருக்கமா நச்சுன்னு ஒரு பதிவு போட்டா முழுசா படிச்சிட்டு கமெண்டும் போடோவோம் இல்ல...........ஹ்ம்ம் அப்படியே தாத்தா ஆனதுக்கு வாழ்த்துகள்!......... (நான் கூட இவளோ நாள் யூத்ன்னு இல்ல நெனெச்சிட்டு இருந்தேன்)

கும்மி said...

வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழ்கிறேன்!

காவேரி கணேஷ் said...

வாத்தியார்ரே,

அந்த அமலாவா நீங்க இப்போ கரெக்ட் பண்ணா என்னா?

கல்யாணம் ஆனா என்னா? இப்போ இது தான் பேசனாச்சே..

வானம்பாடிகள் said...

இருந்தா கலைஞர மாதிரி தாத்தாவா இருக்கணும். நீரு நானெல்லாம் தாத்தாவா இருந்தா என்ன தத்தக்காபித்தக்காவா இருந்தா என்ன:))

செங்கோவி said...

என்னது தாத்தா ஆயிட்டீங்களா?..அப்போ உங்களை அண்ணன்னு பாசமா கூப்பிடற நாங்களும் தாத்தாவா..என்ன கொடுமை முருகா இது!
--செங்கோவி

பிரபு . எம் said...

:)

நிலாமதி said...

என்ன கொடுமை இது ..........

ரோஸ்விக் said...

இனிமே உங்களை அண்ணன்னு சொன்னால் என்னை சின்ன தாத்தாவாக்கி விடுவார்கள். எனவே நீங்கள் இனிமேல் எனக்கு மாமா. :-)

அத்திரி said...

ச்சே......போயும் போயும் ஒரு தாத்தா வத்தான் அண்ணன்னு சொன்னேனா.................................சரவணத்தாத்தா நல்லாத்தான் இருக்க்

Cool Boy கிருத்திகன். said...

ஒரு தாதா தாத்தா ஆயிட்டாருங்கோவ்...!!!
வாழத்து

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அண்ணே : இதுக்கு என்ன கமெண்ட் போடுறதுன்ணு கொஞ்சம் யோசனயா இருக்கு........

அமைதிச்சாரல் said...

:-)))))

Ram said...

சரவணா நல்ல வேணும் ஒனக்கு...

Ram

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பின்னூட்டமி்ட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியோ நன்றி..!

உங்களது ஆசையும், ஆர்வமும், பொறாமையும் எனக்கு நன்கு தெரிகிறது..!

நல்லா இருங்கடே..!

நாஞ்சில் மனோ said...

//ஆகவே இதன் மூலம் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்.. நான் கல்யாணம் பண்ணாமலேயே தாத்தா ஆயிட்டேன் மக்களே..!!!//

கொள்ளு தாத்தா ஆவற வரைக்கும் போன் கால் தொடர வாழ்த்துகிறேன்....

Indian said...

:(

என்னே உலகம் இது.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நாஞ்சில் மனோ..

உங்க ஆசீர்வாதம்..!

இந்தியன் ஸார்.. கொடுமையான உலகம் இது..!

விஜய்கோபால்சாமி said...

அப்படி பாத்தா நான் கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா ஆனவன். வாங்க, கட்டிப் புடிச்சு ஒரு கதறு கதறுவோம்.