அபிஅப்பாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

01-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது வலையுலக சீனியரும், உப்புக் கழகத்தின் ஒப்பு விருப்பெற்ற  தோழரும், மயிலாடுதுறை கண்டெடுத்த முத்துவும், பாசத்துக்கு மறுபெயர் கொண்டவருமான அண்ணன் அபிஅப்பா, சென்ற வாரம் 'குமுதம்' பத்திரிகையைப் படித்ததில் இருந்து அழுது கொண்டேயிருக்கிறாராம்..!

எப்பவும் நள்ளிரவு 2 மணிவரையிலும் மன்மோகன்சிங்கைவிடவும் அதிக நேரம் வேலை பார்ப்பதாக பாவ்லா காட்டி ஆன்லைனிலேயே குடியிருந்த அபியப்பாவை இப்போது ஒரு வாரம் கழித்து இன்றைக்குத்தான் பார்க்க முடிந்தது..! ஐயோ பாவம்..!

அபியும், நட்ராஜும் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் கண்ணீர் நிற்கவில்லையாம்.. கொட்டிய கண்ணீரை குண்டாசட்டியில் பிடித்து வீட்டுக்கு வெளியே ஊற்றி, ஊற்றியே அபியம்மாவுக்கு வெறுத்துப் போய்விட்டதாம்.

என்னதான் நாம் ஆறுதலைக் குவித்தாலும் அந்த மனசு ஆறாதுதான். ஆனாலும் என்றைக்காவது ஒரு நாள் இது மாதிரி நடக்கும் என்பது எதிர்பார்த்ததுதானே..!

ஆகவே அபியப்பா.. பாசக் கொழுந்தே.. மாசற்ற மாணிக்கமே, ரசிகர் குலத் தலைவனே.. உங்களது கண்ணீரைத் துடைத்துவிட்டு மனசைத் தேற்றிக் கொள்ளுங்கள்.. ஒரு தேவதை போனால் என்ன..? இன்னொரு தேவதையை கொஞ்சலாமே..? நாட்டில் தேவதைகளுக்கா பஞ்சம்..? புதிய, புதிய தேவதைகள்தான் தினம்தோறும் பொறந்து வருகிறார்களே..? தேடுங்கள்.. ஏதேனும் புதிய தேவதை கிடைக்கும்.. தூக்கிக் கொஞ்சலாம்..!

மனதைக் கல்லாக்கிக் கொண்டு பழையதை மறந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுங்கள் அபியப்பா.

இதோ உங்கள் மனசை ஆற்றுவதற்காக என்னால் முடிந்ததொரு உதவி. இந்தப் பாடலைக் கேட்டு மனதை ஆற்றிக் கொள்ளுங்கள்..!

வாழ்க வளமுடன்..!42 comments:

KVR said...

:-))))))))))))))))))))

LK said...

mudiyalai

ம.தி.சுதா said...

/////மனதைக் கல்லாக்கிக் கொண்டு பழையதை மறந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுங்கள் அபியப்பா. /////

ஆமாங்க.. சரியாத்தான் சொல்லறிங்க...
அருமை...

Indian said...

:)

அபி அப்பா said...

அடப்பாவிங்களா இது உங்க எல்லாருக்கும் ஹாட் நியூஸ் எனக்கு ஹார்ட் நியூஸ்!இருங்க வர்ரேன்!

துளசி கோபால் said...

போன வாரக் குமுதமா???? அப்படி என்ன ஹார்ட் ப்ரேக்கிங் நியூஸ் ஃபார் அபி அப்பா??????

எனிவே ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!!

அபி அப்பா said...

உனாதானா நான் உங்க வீட்டு தீப்பெட்டி காணா போயிடுச்சுன்னு அழுவலை, எங்க தீபாவெங்கட் போயிடுச்சுன்னு கதறிகிட்டு இருக்கேன்!

அபி அப்பா said...

என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் வலையுலகமே உடனே இதுக்கு மைனஸ் குத்தி உங்க எதிர்ப்பை காட்டுங்க!

ஊக்கூம் உடனே பிளஸ் குத்தி என் மீது பாசத்தை கொட்டுவீங்களே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எதோ புரிஞ்ச மாதிரி இருக்கு. நானும் தீபாவாய் ச்சே தீயாய் அழுதேன்
ஹிஹி

பழமைபேசி said...

மாயவரத்துல இருந்து சேதி வந்து சேர்ந்துச்சுங்கண்ணே!!!

பார்வையாளன் said...

"ஊக்கூம் உடனே பிளஸ் குத்தி என் மீது பாசத்தை கொட்டுவீங்களே "

கரக்டா தெரிஞ்சு வச்சு இருக்கீங்க..
இதோ என் பிளஸ் ஓட்டை போட்டுட்டேன்

என். உலகநாதன் said...

ஒண்ணும் புரியலை

தஞ்சாவூரான் said...

Hello FM மூலம் செய்தி தெரிந்தவுடன், அபி அப்பாவைத்தான் நினைத்துக்கொண்டேன்.. ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

கவலப்படாதீங்க அபி அப்பா. கொளத்துல நெறய மீனு...:))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

விஜய் T.V நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சில பாப்பா பகுமானமா பேசும்போதே இந்த அப்பாவி ஜீவன பத்தி நினச்சேன்....... இப்ப எரியிர நெருப்புல எண்ணய பதிவு வழியா ஊத்துறரீங்க. நடக்கட்டும் ...

ILA(@)இளா said...

எங்க சங்கத்து சிங்கம் இப்படி அழுது பார்த்ததே இல்லீங்க. போன் பண்ணினா ஒரே அழுவாச்சி சத்தம்தான் 2 1/2 மணி நேரத்துக்கும், பேசாமையே வெக்க வேண்டியதா போயிருச்சாம்

அபி அப்பா said...

ஹூம் விடுங்க வட போச்சேன்னு நினைச்சு மனச தேத்திக்க வேண்டியது தான்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[KVR said...
:-))))))))))))))))))))]]]

முதற்கண் நன்றி உமக்கே..! எங்ககிட்டேயெல்லாம் சிக்காத அபியப்பா உம்மகிட்ட சிக்கிட்டாரு பாருங்க..! நன்றிங்கோ..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[LK said...
mudiyalai..]]]

சோகத்தைத் தாங்க முடியலைன்னுதான் அவர் அழுவுறாரு..

அது தாங்க முடியாமத்தான் நானும் அழுவுறேன்..

நீங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ம.தி.சுதா said...

/////மனதைக் கல்லாக்கிக் கொண்டு பழையதை மறந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுங்கள் அபியப்பா. /////

ஆமாங்க.. சரியாத்தான் சொல்லறிங்க... அருமை...]]]

அப்படீங்களா.. நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Indian said...
:)]]]

வருகைக்கு நன்றி இந்தியன் ஸார்..!

ஜாக்கி சேகர் said...

வீசும் காற்றுக்கு பீலிங்ஸ் தெரியதா????பேசும் கண்ணுக்கு உண்மை தெரியாதா??

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அபி அப்பா said...
அடப்பாவிங்களா இது உங்க எல்லாருக்கும் ஹாட் நியூஸ் எனக்கு ஹார்ட் நியூஸ்! இருங்க வர்ரேன்!]]]

ஹார்ட்டா.. அதான் உங்ககிட்ட இப்போ இல்லியே.. அப்புறம் எதுக்கு அதைப் பத்திப் பேசுறீங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[துளசி கோபால் said...
போன வாரக் குமுதமா???? அப்படி என்ன ஹார்ட் ப்ரேக்கிங் நியூஸ் ஃபார் அபி அப்பா?????? எனிவே ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!!]]]

ஒண்ணுமில்ல டீச்சர்.. ஒரு சி்ன்ன மேட்டர்தான்.. சின்னத்திரை இளவரசி தீபாவெங்கட் ஹஸ்பெண்ட்டோட ஹனிமூனுக்கு போயிட்டு வந்த கதையை குமுதத்துல போட்டிருக்காங்க..!

அதை படிச்சிட்டு்த்தான் நம்ம அபியப்பா ஒரு வாரமா "ஓ" ஒப்பாரி வைச்சுக்கிட்டிருக்காரு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அபி அப்பா said...
உனாதானா நான் உங்க வீட்டு தீப்பெட்டி காணா போயிடுச்சுன்னு அழுவலை, எங்க தீபாவெங்கட் போயிடுச்சுன்னு கதறிகிட்டு இருக்கேன்!]]]

மிஸ்டர் வெங்கட் கதறினா அதுல அர்த்தம் இருக்கு. நீங்க அழுதா எப்படிங்கண்ணா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அபி அப்பா said...

என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் வலையுலகமே உடனே இதுக்கு மைனஸ் குத்தி உங்க எதிர்ப்பை காட்டுங்க!

ஊக்கூம் உடனே பிளஸ் குத்தி என் மீது பாசத்தை கொட்டுவீங்களே!]]]

இதுதான் மறைமுகமான கேன்வாஸிங்கா..? நன்றிங்கண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பழமைபேசி said...
மாயவரத்துல இருந்து சேதி வந்து சேர்ந்துச்சுங்கண்ணே!!!]]]

ஆஹா.. வந்திருச்சா தம்பி..? சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.. நல்லாயிருங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எதோ புரிஞ்ச மாதிரி இருக்கு. நானும் தீபாவாய் ச்சே தீயாய் அழுதேன்.
ஹிஹி]]]

ஓகே.. ஓகே.. கண்ணைத் தொடச்சுக்க ராசா.. வேற ஆளு தேடிக்கலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...

"ஊக்கூம் உடனே பிளஸ் குத்தி என் மீது பாசத்தை கொட்டுவீங்களே "

கரக்டா தெரிஞ்சு வச்சு இருக்கீங்க..
இதோ என் பிளஸ் ஓட்டை போட்டுட்டேன்.]]]

நன்றி பார்வையாளன் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[என். உலகநாதன் said...
ஒண்ணும் புரியலை]]]

இப்போ புரிஞ்சிருக்குமே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தஞ்சாவூரான் said...
Hello FM மூலம் செய்தி தெரிந்தவுடன், அபி அப்பாவைத்தான் நினைத்துக் கொண்டேன்.. ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

கவலப்படாதீங்க அபி அப்பா. கொளத்துல நெறய மீனு...:))]]]

கரீக்ட்டு ஸார்.. இதைத்தான் நானும் சொல்றேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
விஜய் T.V நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சில பாப்பா பகுமானமா பேசும்போதே இந்த அப்பாவி ஜீவன பத்தி நினச்சேன்....... இப்ப எரியிர நெருப்புல எண்ணய பதிவு வழியா ஊத்துறரீங்க. நடக்கட்டும் ...]]]

ஹா.. ஹா.. ஹா.. குடம், குடமா எண்ணெய்யை ஊத்திருக்கு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ILA(@)இளா said...
எங்க சங்கத்து சிங்கம் இப்படி அழுது பார்த்ததே இல்லீங்க. போன் பண்ணினா ஒரே அழுவாச்சி சத்தம்தான் 2 1/2 மணி நேரத்துக்கும், பேசாமையே வெக்க வேண்டியதா போயிருச்சாம்]]]

ம்.. என்ன செய்றது.. அண்ணன் கொடுத்து வைச்சது அவ்ளோதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அபி அப்பா said...
ஹூம் விடுங்க வட போச்சேன்னு நினைச்சு மனச தேத்திக்க வேண்டியதுதான்!]]]

இப்பத்தான் எனக்குச் சந்தோஷம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜாக்கி சேகர் said...
வீசும் காற்றுக்கு பீலிங்ஸ் தெரியதா???? பேசும் கண்ணுக்கு உண்மை தெரியாதா??]]]

இனிமே இதையே நினைச்சு பாடிக்க வேண்டியதுதான்..!

S.Menaga said...

அண்ணே இந்த தலைப்பை படித்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்..

அமைதிச்சாரல் said...

போனவார குமுதத்தை போட்டோ சகிதமா பாக்கும்போதே நினைச்சேன்..

ஆழ்ந்த அனுதாபங்கள் :-)))))

அபி அப்பா said...

\\ S.Menaga said...

அண்ணே இந்த தலைப்பை படித்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்..\\

கவலையே படாதீங்க மேனகா! ஒன்னியும் ஆவாது. நீங்களாவது தலைப்பை பார்த்து ஆடிபோயிட்டீங்க. நான் மேட்டரை படிச்சுட்டு வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிப்போயிட்டேன்:-(((

அனாமிகா துவாரகன் said...

தலைப்பை பார்த்து நானும் ஆடிப்போயிட்டேன்.

//என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் வலையுலகமே உடனே இதுக்கு மைனஸ் குத்தி உங்க எதிர்ப்பை காட்டுங்க! ஊக்கூம் உடனே பிளஸ் குத்தி என் மீது பாசத்தை கொட்டுவீங்களே!//

ஓக்கே. ஒரு டீல் போட்டுக்கலாம். நான் இங்க போடற ஒவ்வொரு மைனஸ் ஓட்டுக்கும் நீங்க என் வலைப்பக்கத்தில் எல்லா பதிவுக்கும் இரண்டு மடங்கு பிளஸ் ஓட்டுப் போடணும். சரியா? புள்ள ரொம்ப விபரமானவ தெரியுமோ.

@ உ.த அங்கிள்,
உங்க பதிவிலேயே ரொம்ப சின்ன பதிவு இது தான். உங்க அட்ரஸ் கொடுங்க. ஒரு பொக்கே அனுப்பறேன். வேச்சுவல் பொக்கே சார். ஈமெயில் அட்ரஸ் தான் கேக்கறேன். =))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[S.Menaga said...
அண்ணே இந்த தலைப்பை படித்ததும் ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டேன்..]]]

ஹி.. ஹி.. குமுதத்துல தீபா வெங்கட் போட்டோவைப் பார்த்ததும் நானும்தான் இப்படி ஆடிப் போயிட்டேன் மேடம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அமைதிச்சாரல் said...
போன வார குமுதத்தை போட்டோ சகிதமா பாக்கும்போதே நினைச்சேன்..
ஆழ்ந்த அனுதாபங்கள் :-)))))]]]

ஓகே.. ஓகே.. சோகத்தைப் பகிர்ந்துக்குவோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அபி அப்பா said...

\\ S.Menaga said...

அண்ணே இந்த தலைப்பை படித்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்..\\

கவலையேபடாதீங்க மேனகா! ஒன்னியும் ஆவாது. நீங்களாவது தலைப்பை பார்த்து ஆடி போயிட்டீங்க. நான் மேட்டரை படிச்சுட்டு வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிப் போயிட்டேன்:-(((]]]

ஹா.. ஹா.. ஹா..! அண்ணே.. திரும்பி இந்த ஓரத்துக்கு வந்திருங்க.. வாழ்க்கைல நீங்க பார்க்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அனாமிகா துவாரகன் said...

தலைப்பை பார்த்து நானும் ஆடிப் போயிட்டேன்.

//என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் வலையுலகமே உடனே இதுக்கு மைனஸ் குத்தி உங்க எதிர்ப்பை காட்டுங்க! ஊக்கூம் உடனே பிளஸ் குத்தி என் மீது பாசத்தை கொட்டுவீங்களே!//

ஓக்கே. ஒரு டீல் போட்டுக்கலாம். நான் இங்க போடற ஒவ்வொரு மைனஸ் ஓட்டுக்கும் நீங்க என் வலைப்பக்கத்தில் எல்லா பதிவுக்கும் இரண்டு மடங்கு பிளஸ் ஓட்டுப் போடணும். சரியா? புள்ள ரொம்ப விபரமானவ தெரியுமோ.]]]

ரொம்ப, ரொம்ப விவரம்..!

[[[@ உ.த அங்கிள்,
உங்க பதிவிலேயே ரொம்ப சின்ன பதிவு இதுதான். உங்க அட்ரஸ் கொடுங்க. ஒரு பொக்கே அனுப்பறேன். வேச்சுவல் பொக்கே சார். ஈமெயில் அட்ரஸ்தான் கேக்கறேன். =))]]]

tamilsaran2002@gmail.com - பாசத்திற்கும், பரிவிற்கும் மிக்க நன்றி..!