இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-15-12-2010

14-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சவுக்கு சங்கருக்கு வாழ்த்துகள்..!

சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வலைத்தளத்தைத் துவக்கி தனது தார்மீக அறச்சீற்றத்தைக் காட்டத் துவங்கிய தோழர் சவுக்கு, இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் வீறு கொண்டெழுந்து தினம் ஒரு  புதிய செய்தியாக வெளியிடத் தொடங்கினார்.

புயலாய் உள்ளே நுழைந்த ஒரு தென்றல் என்று நாம் சொல்லும் அளவுக்கு அவரது பதிவுகள் இல்லை.. அத்தனையும் அறச்சீற்றல்கள். அதிகாரம் கொண்டவர்களின் இன்னொரு பக்கத்தை தனது ஒவ்வொரு பதிவிலும் இன்றுவரையிலும் மிக, மிக தைரியமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சவுக்கு.நெட்-இன் அலெக்ஸா ரேக்கிங் தற்போது 50,076. இது நிச்சயம் மிகப் பெரிய சாதனை..!

ஒரு நாளில் அவரது தளத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கையும் தற்போது கூடிக் கொண்டே போய் 11000-த்தைத் தொட்டிருக்கிறது.. இந்த அளவுக்கு சகல துறையினரும் தேடி வந்து படிப்பதற்குக் காரணம்.. நாம் இதுநாள்வரையிலும் நம்பியிருந்த வெகுஜன ஊடகங்கள் சிற்சில காரணங்களினால் பல அராஜகங்களை, ஊழல்களை, முறைகேடுகளை முழுவதுமாக மக்கள் முன் வைக்கத் தயங்குகின்றன. ஆனால் சவுக்கு தயங்குவதில்லை. இதுதான் காரணம். 


[உதாரணம் : சென்ற சனிக்கிழமை வெளிவந்த ஜூனியர் விகடனின் வீட்டு வசதி வாரியக் கட்டுரையில் அனைத்துப் பயனாளிகளின் பெயரையும் போட்டுவிட்டு நக்கீரன் இணை ஆசிரியர் அ.காமராஜின் பெயரை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டு அவருடைய மனைவி ஜெயசுதாவின் பெயரை யாரோ ஒரு ஜெயசுதா என்பதுபோல் போட்டிருக்கும் செய்தியைப் படித்துப் பாருங்கள்]

எத்தனை, எத்தனையோ எதிர்ப்புகளும், பயமுறுத்தல்களும், கைதும், சிறையில் அடைப்பும் நடந்தாலும் இனி எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்கிற ஒருவித வெறியோடும், உறுதியோடும் இருக்கும் தோழர் சவுக்கை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நான் நிச்சயமாக சவுக்கு அளவுக்குக்கூட இந்த அரசையும், அராஜகத்தையும் கண்டிக்கவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்..!

எங்கே போனார் இந்த பிரியா..?

மணிரத்னம் ஓஹோவென்று இருந்த காலக்கட்டத்தில் அவரது படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால்கூட ஒரு குடம் நிரம்பும் அளவுக்கு கண்ணீர்விட்டு பீலிங் காட்டுவார்கள் நட்சத்திரங்கள்..

அவர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் அதன் பிறகு மவுசாகத்தான் இருந்து வந்தார்கள். ஒரே ஒருவரைத் தவிர.. அவர் 'இதயத்தைத் திருடாதே' ஹீரோயின் கிரிஜா..!இள வயதாக இருந்தாலும் முகத்தில் துளி கூட கவர்ச்சியில்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போலவும், அதே நேரத்தில் துடிப்பான குறுகுறுப்பான பெண்ணாகவும் நடித்து என்னைப் போன்ற அப்பாவிகள் பலரது இதயத்தையும் திருடியவர்..

இந்தப் படத்திற்குப் பின்பு மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'வந்தனம்' என்னும் படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். இதையும் நான் பார்த்தேன்.. கிட்டத்தட்ட 'இதயத்தைத் திருடாதே' கேரக்டர்தான். ஆனால் கொஞ்சம் மெருகேறி இருந்தது.. நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் திடீரென்று காணாமல் போனார்.

அடுத்தடுத்துச் சில படங்களுக்கு மேக்கப் டெஸ்ட் வரையிலும் வந்து பின்பு ஈர்ப்பு இல்லை என்கிற காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டதால் கோடம்பாக்கத்தில் இருந்து தொலைந்து போனார் கிரிஜா.

இப்போது அம்மணி எங்iகேயிருக்கிறார் என்று தேடிப் பார்த்தால் லண்டனில் பத்திரிகையாளராக இருக்கிறாராம். இந்தியாவில் சமயம் மற்றும் யோகா தத்துவத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறாராம். புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஆன்மிகம் பற்றிய பாடங்களைப் படித்துத் தெளிந்து கொண்டாராம்..!

கல்யாணம் ஆயிருச்சான்றது பத்தி ஒண்ணும் தெரியலை. ஆனா நமது வலையுலகத்தில் இவரும் ஒருவர் என்பது மட்டும் தெரிந்தது. இவரது வலைத்தளம் இது  போய்ப் படிச்சுட்டு யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா.

எனக்கு இங்கிலீபீஸுல எழுத வராது. அதுனால விட்டுட்டேன்..!

தந்தையின் உடலை அறுத்து பாடம் நடத்திய டாக்டர்

இது தற்செயலாக நான் இணையத்தில் பார்த்த செய்தி.. கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவர், டாக்டர் மகந்தேஷ் ராமண்ணா. இவர், பெல்காமில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உடற்கூறுவியல் துறையின் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய தந்தை பசவண்ணப்ப ராமண்ணாவாரும் ஆயுர்வேத டாக்டர். அவர் கடந்த 2008-ம் ஆண்டு காலமாகி விட்டார். தனது உடலை ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்றும், தனது உடலை தன் மகனே அறுத்து, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும் அவர் தனது உயிலில் ஏற்கனவே எழுதி இருந்தாராம்.

அவரது கடைசி ஆசையை அவருடைய மகனும், ஆயுர்வேத டாக்டருமான மகந்தேஷ் ராமண்ணா நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதுவும் எப்படி..? முதலாம் ஆண்டு மாணவர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து நிற்க, தன்னுடைய தந்தையின் உடலை அறுத்து, உடற்கூறுகள் பற்றி பாடம் நடத்தியிருக்கிறாராம். ம்.. மருத்துவ உலகில் மட்டுமல்ல.. குடும்ப உறவிலும் இது நிச்சயம் அரிய நிகழ்ச்சிதான்..!

மலையாள நடிகர்கள்  சுகுமாரன்-ஜெகதி ஸ்ரீகுமாரின்  நாகரிகம்..!

தமிழகத்தில் முன்னாள் மனைவிகள், முன்னாள் கணவர்களெல்லாம் அந்த உறவுகள் அறுந்துபோகும்போது இனி செத்தாலும் உன் மூஞ்சில முழிக்க மாட்டேன் என்று சொல்வதோடு அவர்கள் சம்பந்தமான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு ஒதுங்குவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் மேல்தட்டு வர்க்கத்தில் மட்டுமே எங்காவது பார்த்தால் ஹலோ சொல்லிக் கொள்வதோடு டீஸன்ஸியை மெயின்டெயின் செய்கிறார்கள்..! அதிகம் பேசப்படும் திரையுலக வட்டாரத்திலும் இந்தக் கலாச்சாரம் இப்போதுதான் மெல்ல, மெல்ல தலைதூக்கி வருகிறது.

பிரபுவும், குஷ்புவும் எங்காவது நேரில் பார்த்தால் ஹலோ சொல்லிக் கொள்வதுண்டு.. இது சில ஆண்டுகளுக்கு முன்புவரையில். வருடந்தோறும் சிவாஜியின் பெயரில் கிண்டி ரேஸ் கிளப்பில் நடக்கும் ஒரு ரேஸிற்கு அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் வருவார்கள். அது போன்ற ஒரு வருட நிகழ்ச்சியில்தான் குஷ்பு தனது முதல் குழந்தை அவந்திகாவை பிரபுவிடம் அறிமுகப்படுத்தி வைத்து நீண்ட நாட்கள் கழித்து பேசினார். அதன் பின்பு சிற்சில இடங்களில் சந்தித்துப் பேசியவர்கள் தற்போதுதான் முற்றிலுமாக பேச்சை நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்தச் சூழலிலேயே சுந்தர்.சியின் இயக்கத்தில் பிரபு ஒரு படத்தில்கூட நடிக்க முடியாமல் போனதும் நடந்துள்ளது என்று நினைக்கிறேன். நமக்கு ஈஸியாகத்தான் உள்ளது. எழுதுவதற்கும், பேசுவதற்கும், கேட்பதற்கும். அவர்கள் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும். சமீபத்தில் டூயட் மூவிஸ் நிறுவனத்தின் மேனேஜர் கபாரின் மகள் திருமணத்தில் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதகுமாரி, பிரகாஷ்ராஜின் இன்னாள் மனைவியான போனிவர்மாவை சந்தித்து பேசியிருக்கிறார். ஓகே.. வேறு வழியில்லை. குழந்தைகள் இருக்கிறார்கள். பேசத்தான் வேண்டும்.. இதுவும் நல்ல மாற்றம்தான்.

ஆனால் இந்தக் கலாச்சார நெறிமுறைகள் அறுக்கப்படும் இன்றையச் சூழலில் இல்லாமல் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்படியொரு இக்கட்டான சூழலைப் புறந்தள்ளிவைத்துவிட்டு நடிப்பு ஒன்றே பெரியது என்றெண்ணி இரண்டு பேர் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது நிஜமாகவே மிக மகிழ்ச்சியாக இருந்தது..!

அந்த இருவர் மலையாளத் திரையுலகின் முக்கியப் புள்ளிகளான நடிகர்கள் சுகுமாரனும், ஜெகதி ஸ்ரீகுமாரும்.. இந்த இருவருக்குமே தர்மசங்கடத்திற்கு காரணம்.. ஜெகதி ஸ்ரீகுமாரின் முன்னாள் மனைவியான நடிகை மல்லிகாதான் சுகுமாரனின் மனைவி. இருவரும் சுகுமாரனின் மரணம்வரையிலும் இணை பிரியாத தம்பதிகளாக இருந்தார்கள். சுகுமாரனின் மகன்தான் தற்போதைய மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பிருத்விராஜ். இவரது அண்ணன் இந்திரஜித்தும் ஒரு நடிகர்தான்.. இந்திரஜித்தின் மனைவி பூர்ணிமாவும் நடிகைதான்..!
தற்செயலாக சுகுமாரனைப் பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தளங்களைத் துழாவியபோதுதான் இந்த திடுக்கிடும் செய்தி கிடைத்தது. இதில் எனக்கென்ன  ஆச்சரியமென்றால், ஜெகதியினுடனான திருமண வாழ்க்கை இரண்டு வருடத்தில் முடிவுக்கு வந்து மல்லிகா அடுத்து சுகுமாரனுக்கு மனைவியான பின்பும், ஜெகதியும், சுகுமாரனும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.


அதிலும் பல படங்களில் சுகுமாரனுக்கு உதவியாளராக, எடுபிடியாக, அல்லக்கையாக, மைத்துனனாக, தம்பியாக என்று பற்பல வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெகதி ஸ்ரீகுமார். இத்தனைக்குப் பின்பும் பிருத்விராஜூடன் இணைந்தும் ஜெகதி ஸ்ரீகுமார் பல படங்களில் நடித்திருக்கிறார்.. இதெல்லாம் எப்படி முடிந்தது; முடிகிறது என்பதை இப்போது நினைத்தால் நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..!இத்தனையாண்டு காலத்திற்குப் பின்பும் தனது முதல் திருமணத்தைப் பற்றி அதிகம் வெளியில் பேசாமல் இருந்த மல்லிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெகதி ஸ்ரீகுமாரை கசப்பான சில வார்த்தைகளால் குற்றம்சாட்டிவிட்டார். பரபரப்பாகிவிட்டது மலையாள சினிமாவுலகம். 

மீடியாக்காரர்களை அழைத்த ஜெகதி ஸ்ரீகுமார் தானும் பல தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி மல்லிகாவைக் குதறித் தள்ளியிருக்கிறார்..! விஷயம் பெரிதாவதை உணர்ந்து மல்லிகாவின் மகன்களும், அம்மா அமைப்பினரும் சேர்ந்து இரு தரப்பினரையும் கூல் செய்து "தயவு செய்து இத்தோட விட்ருங்கம்மா. விட்ருங்கப்பா..." என்று கெஞ்சிக் கூத்தாடி ஆட்டத்தை நிறுத்தியிருக்கிறார்களாம்..!

"சுகுமாரன் இறந்து பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவர் உயிரோடு இருந்தவரையில் என்னைப் பற்றியே பேசாத மல்லிகா, இப்போது பேச வேண்டிய அவசியமென்ன..?" என்கிறார் ஜெகதி
ஸ்ரீகுமார். இது நியாயம்தானே..! குடிமகன்களுக்கு ஓ போடுங்கோ..!

தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் 246 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனையாகி உள்ளது.
தீபாவளி பண்டிகை காலத்தில் "குடிமகன்'களை குஷிப்படுத்தும் வகையில், புது வகையாக 39 சரக்குகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் (மூன்று நாட்கள்), தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளில், 246 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனையாகி உள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளில்(நவ., 4) 82 கோடி, தீபாவளியன்று 98 கோடி, மறுநாள் 66 கோடி ரூபாய் என, மூன்று நாட்களில் 246 கோடி ரூபாய் "கல்லா' கட்டப்பட்டுள்ளது.  மூன்று நாட்களில் 6.44 லட்சம் பெட்டிகள் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளும், 4.38 லட்சம் பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனையாகி உள்ளன. தீபாவளியன்று மட்டும் 2.47 லட்சம் பெட்டிகள் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளும், 2.03 லட்சம் பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனையாகி உள்ளன.

வழக்கமாக நாளொன்றுக்கு 1.26 லட்சம் பெட்டிகள் இந்திய தயாரிப்பிலான வெளிநாட்டு மது வகைகளும், 57 ஆயிரம் பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனையாகும். இதன் மூலம் சராசரியாக 45 கோடி ரூபாய் வசூலாகும். தீபாவளியன்று மட்டும் அதிகபட்சமாக சென்னையில் ஏழு கோடி ரூபாயும், காஞ்சிபுரத்தில் ஆறு கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

"குடிமகன்'களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாகவும், பணம் தாராளமாக புரண்டதாலும் தீபாவளிக்கு 246 கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 26 கோடி ரூபாய் அதிகம் என்றாலும், தீபாவளிக்கு டாஸ்மாக் நிர்வாகம் நிர்ணயித்திருந்த 300 கோடி ரூபாய் இலக்கை எட்டாதது அவர்களுக்கு வருத்தமாம்..

இப்படி ஊர்க்காசையும், தமிழகத்துப் பெண்களின் சாபக்கேட்டையும் ஒரு சேர வாங்கிக் கட்டிக் கொண்ட பணத்தில்தான் நமக்கு அன்னதானத்தை வாரி வழங்குகிறார் தாத்தா.. இது எங்க நமக்குச் செரிக்கவா போகுது..?

கோர்ட் வாசலில் டிஷ்யூம் போட்ட நடிகரின் மனைவிமார்கள்..!

பரிதலா ரவி பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தற்செயலாக கிடைத்த செய்தி இது..!
ஆந்திராவில் தற்போது முன்னுக்கு வந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் சித்ரம் சீனு. இவர் திரையுலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் முடித்திருக்கிறார் மகேஸ்வரியை. அது 2004-ம் ஆண்டில்.திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பின்பு வழக்கமாக அனைத்து பிரபல ஆண்களுக்கும் வரும் "தான் ஒரு பிரபலம்" என்ற மமதை இவருக்கும் வந்திருக்கிறது..! தன்னுடைய மனைவி இப்போது தன்னுடைய பெர்சனாலிட்டிக்குப் பொருத்தமானவராக இல்லை என்று கண்டுபிடித்த சீனு, மனிதா என்ற நடன நடிகையுடன் தனது வாழ்க்கையின் அடுத்த இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார்.விஷயம் கேள்விப்பட்டு கண்ணீர் விட்டு அழுது, மூக்கைச் சீந்திக் கொண்டு மூலையில் உட்காரவில்லை மகேஸ்வரி.. நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கிறார். முதலில் போலீஸ் ஸ்டேஷன். அங்கே சீனு வராததால், தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் போய் பஞ்சாயத்தைக் கூட்டினார். "இது உங்களுடைய சொந்த விஷயம். நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.." என்று அவர்கள் வழக்கம்போல சொல்லித் திருப்பியனுப்பிவிட்டார்கள். உடனே பத்திரிகையாளர்களை கூப்பிட்டு ஒப்பாரி வைத்தார் மகேஸ்வரி.


பத்திரிகைகள் சீனுவிடம் கேட்டபோது, "இது எனது குடும்பப் பிரச்சினை. நானே தீர்த்துக்குவேன்.." என்று சொல்லி சமாளித்துவிட்டார். ஆனால் வீட்டுக்கே வராமல் தங்குமிடம் எது என்று தெரியாதவண்ணம் டபாய்த்த தனது கணவனை சிக்க வைக்க போலீஸில் சீனு மீது வரதட்சணை கொடுமை வழக்குத் தொடுத்தார். சீனு பதிலுக்கு நீதிமன்றத்தில் மகேஸ்வரியுடனான தனது பந்தத்தை முறித்துக் கொள்ள விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்காக  தனது  கணவருடன் மனிதா கோர்ட்டுக்கு காரில் வந்தபோது.... அந்தக் காரைத் துரத்திப் பிடித்து மனிதாவின் முடியைப் பிடித்திழுத்து மகேஸ்வரி வெளிப்படுத்திய கோபத்தை கீழேயிருக்கும் வீடியோவில் பார்த்து, புத்திசாலி ரங்கமணிகள் அடக்கமாக இருக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!சரியா தவறா என்று யாராலும் சொல்ல முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று..! எல்லாரும் கண்ணகி மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சா அது நம்ம முட்டாள்தனம்தானே..!

பொருத்தமான இடத்தில்தான் உட்கார்ந்திருக்கிறார் ராகுல்காந்தி..!

மியான்மர் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி டில்லியில் இருந்தபோது வசித்துவந்த வீட்டில்தான், தற்போது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறதாம்.
மியான்மரில், வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங்சான் சூகி, பற்றி  பத்திரிகையாளர் ரசீத் கித்வாய் "24, அக்பர் ரோடு” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், சூகி, டில்லியில் வசித்த நாட்களைப் பற்றி விவரித்துள்ளார். சூகியின் தாயார் டாகின்கி கடந்த 1961-ம் ஆண்டில், பர்மாவின் (இன்றைய மியான்மர்) இந்திய தூதராக இருந்தார். அவர்கள், அக்பர் ரோட்டில் உள்ள 24 எண் என்ற முகவரியில் உள்ள "பர்மா ஹவுஸ்' பங்களாவில் வசித்தனர்.

இந்த பங்களா, பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1911-ம் ஆண்டில் கட்டப்பட்டது. சூகி இந்த பங்களாவில் வசித்தபோது, இந்திய முன்னாள் பிரதமர் இந்திராவின் மகன்களான ராஜிவ் மற்றும் சஞ்சய் இருவரும் சூகியின் விளையாட்டுத் தோழர்களாக இருந்துள்ளனர்.

24, அக்பர் ரோடு பங்களாவுக்கு 1978-ம் ஆண்டில் இந்திரா குடி வந்துள்ளார். தற்போது, 24, அக்பர் ரோடு பங்களாவில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. சூகியின் பெட்ரூம்தான் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல்காந்தியின் அலுவலக அறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்.
ஒருவேளை இந்த லின்க்கை தெரிந்து வைத்துக் கொண்டு சரியாக அறையை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்களோ..? 

பிரேம் நசீரின் இறுதிச் சடங்கு

 


மலையாள நடிகர் திலகம் பிரேம் நசீரின் இறப்பு பற்றிய செய்தியை தெரிந்து கொள்ள நினைத்திருந்தேன். கூகிளாண்டவரிடம் கேட்டதில் இந்த லின்க்கை கொடுத்தார்.


பிரேம்நசீர் 1989-ம் வருடம் ஜனவரி 16-ம் தேதி சென்னையில்தான் இறந்திருக்கிறார். பின்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வந்திருக்கிறார்கள். மோகன்லாலும், மம்முட்டியும் ஆளுக்கொரு பக்கமாகக் கை கொடுத்து அவருடைய சவப்பெட்டியைத் தூக்கி வந்திருக்கிறார்கள். நன்றியுணர்வு கலையுலகில்தான் மிக அதிகம். நீங்களும் பாருங்கள்..!வித்தியாசமான சாதனை தம்பதிகள்..!

பொண்டாட்டியை பக்கத்துல வைச்சுக்கிட்டு ரோட்டுல போற பொண்ணை சைட் அடிக்க முடியலை.. ஊட்ல பூரிக்கட்டை ரெடியா இருக்குன்னுல்லாம் அழுது புலம்பும் ரங்கமணிகளே அவசியம் இதைப் படிச்சுத் தொலைங்கோ..!
40 வயதான ஜியாஸ் டேனியல்ஸ் என்பவரும் இவருடைய காதலியான 39 வயது சாரா மோரே என்பவரும் வியத்தகு சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.  இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் தற்சமயம் காதலர்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்திட்டு வர்றாங்க.

இருவருக்குமே  தொழில் ஒண்ணுதானாம்.. அதாகப்பட்டது என்ன தொழிலுன்னா.. செக்ஸ் சம்பந்தமான பிரச்சினையில் இருப்பவர்களுக்கு ஹெல்ப் பண்றதுதான் இவங்களோட தொழிலாம்.. “செக்ஸ்”சில் யாருக்காச்சும் திருப்தி இல்லைன்னா அது ஆணாக இருந்தாலும் சாராவும், பெண்ணாக இருந்தால் ஜியாஸும் அவங்க திருப்தியடையும் அளவுக்கு தங்களையே தானமாகக் கொடுத்து திருப்திப்படுத்துவார்களாம்..

பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு “செக்ஸ்” மசாஜ் செஞ்சு விடுவதில் இருந்து அவர்கள் விருப்பப்பட்டால் செக்ஸ் உறவும் வைத்து கொள்வார்களாம்.  இப்படியான சிகிச்சை முறையில் இதுவரை 3,323 ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருப்பதாக சாராமோரே கூறி இருக்கிறார். ஜியாஸ் டேனியல் 2,161 பெண்களுடன் உறவு வைத்திருப்பதாகவும் பகிரங்கமாக கூறியிருக்கிறார்கள்..

இந்தத் தொழில் செய்வதால் நாங்கள் விபசார தொழில் செய்வதாக கருதி விடக் கூடாது. இது ஒரு மருத்துவ தொழில். இப்ப நாங்க உலகம் பூரா சுத்தி இந்தத் தொழிலை பிரபலப்படுத்தி வருகிறோம் என்றும் சொல்லியிருக்காங்க. அப்படியே இந்தியாவுக்கு வரச் சொல்லுங்கப்பா..! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!

பரிதலா ரவி-பவன் கல்யாண் சர்ச்சை..!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணையும் நமது ரத்தச்சரித்திரம் புகழ் பரிதலா ரவியையும் இணைத்து ஒரு செய்தி இணையத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது..!
அனந்தப்பூர் மாவட்டத்தில் பவன் கல்யாண் நிலம் ஒன்றை வாங்கியிருந்தாராம். ஆனால் அதற்கான பணத்தை நிலத்தின் உரிமையாளரிடம் முழுதாகத் தருவதற்கு முன்பாகவே நிலத்தை வேறொருவருக்கு விற்று லாபம் பார்த்திருக்கிறார் பவன் கல்யாணம். பாதிக்கப்பட்டவர் பரிதலா ரவியிடம் சென்று முறையிட்டிருக்கிறார். பல முறை சொல்லியனுப்பியும், தூது அனுப்பியும் பவன் கல்யாண், பரிதலா ரவியின் பேச்சைக் கண்டு கொள்ளவே இல்லையாம்..பொறுமையாக இருந்து வந்த ரவி, கடப்பா மாவட்டத்திற்கு ஏதோ ஒரு ஷூட்டிங்கிற்காக வந்திருந்த பவன் கல்யாணை ஹோட்டலில் இருந்து குண்டுக்கட்டாகத் தூக்கி வந்திருக்கிறார். தன் இடத்தில் வைத்து பவன் கல்யாணிடம் பணத்தைக் கேட்க அவர் கொடுக்க மறுத்து தெனாவெட்டாகப் பேசினாராம். கடுப்பான ரவி.. அப்போதே பவன் கல்யாணின் தலையை மொட்டையடித்து திருப்பியனுப்பினாராம்..பத்து மணி நேர இடைவெளியில் மொட்டைத் தலையுடன் வெளியில் காட்சியளிக்க முடியாததால் பவன் கல்யாணம் இரவோடு இரவாக ஹைதராபாத்திற்குத் தப்பியோடிவிட்டதாக பரிதலா ரவியின் சில அல்லக்கைகள் இப்போது மேடை போட்டு சொல்லியிருக்கிறார்கள்..! இதை வழக்கம்போல பவன் கல்யாண் மறுத்திருக்கிறார். இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் இது உண்மையாகவே நடந்தது என்று தெரிந்துதான் ராம்கோபால்வர்மா ரத்தச்சரித்திரம் முதல் பாகத்தில் இப்படியொரு காட்சியை வைத்திருந்தாராம். அந்தக் காட்சியின் ஸ்டில்கள்கூட டிரெயிலரில் வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் விஷயம் தெலுங்கு திரையுலகத்துக்குள்ளேயே புகைச்சலைக் கொடுத்ததால் கடைசி நிமிடத்தில் அந்தக் காட்சியை வர்மாவே கட்  செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நான் அந்தப் படத்தை இதுவரையில் பார்க்கவில்லை. ஆகவே படத்தில் அந்தக் காட்சி இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது..!

படித்ததில் பிடித்தது :

"நந்தலாலா கலந்துரையாடலில் கலந்து கொண்ட நானும், மற்றவர்களும்  நந்தலாலா பற்றித்தானே பேசினோம்..?  எனக்குக் கொடுக்கப்பட்ட 5 நிமிடத்தில் நான் என்ன ஸீரோ டிகிரியைப் பற்றியா பேசினேன்?  அப்படிப் பேசியிருந்தால் மிஷ்கினுக்குக் கொலைவெறி வந்திருக்காதா...?  அப்படி இருக்கும் போது ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் வந்து நந்தலாலா பற்றி 20 நிமிடம் பேசி விட்டு அமர்ந்தால் என்ன அர்த்தம்..?  

 
காலையிலிருந்து எனக்கு ஒரு 50 போன் வந்து விட்டது.  எல்லோரும்  மிஷ்கினின் செயலுக்காக மிகுந்த கோபத்துடன் பேசினார்கள்.  எனக்கே இது பற்றி கடும் கோபம்தான் என்பதால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  அந்த 20 நிமிடமும் அவர் தேகம் நாவலைத் திட்டியிருக்கலாம்.  திட்டியிருந்தால் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்.  என் நாவல் அத்தனை பேருக்கும் பிடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது.  ஆனால் அவர் பேசிய 20 நிமிடமும் நந்தலாலாவை எப்படி எடுத்தேன் என்றே பேசினார்.  அது என்ன நந்தலாலா பற்றிய கூட்டமா?  நாவலைப் பற்றி அவர் கூறிய ஒரே ஒரு வரி: சரோஜாதேவி புத்தகம் மாதிரி இருந்தது.  

சரி, சென்ற வாரம் நான் அவரைச் சந்தித்த போது ஒரு ஆஸ்திரேலிய லெஸ்பியன் கவிஞர் தன் *** பற்றியும் தன்னுடைய தோழியின் *** பற்றியும் அவர்கள் இருவரும் ****போது அடைந்த ஆனந்தம் பற்றியும் பச்சை பச்சையான – மொழிபெயர்த்தால் **, *** என்றுதான் வரும் -  எழுதியுள்ள காமக் கவிதைகளைக் கொடுத்து என்னையும் மனுஷ்யபுத்திரனையும் படித்துப் பார்க்கச் சொன்னார்.  நிச்சயமாக அவை மிக நல்ல கவிதைகள் என்றும், நீங்கள் என்னையும் மனுஷ்யபுத்திரனையும் படிக்காமல் இப்ப்டி ஆங்கிலத்தில் மட்டுமே படிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லி விட்டு வந்தேன்.  

இப்போது மிஷ்கினுக்கு என் நாவல் சரோஜாதேவியை ஞாபகப்படுத்துகிறது.  அவருக்கு அந்த ஆஸ்திரேலிய லெஸ்பியன் கவி ஞாபகம் வரவில்லை.  ஏன்?  அது பற்றி சிறிது ஆராய்வோம்."

- சாருநிவேதிதா தனது தளத்தில் 

பார்த்ததில் பிடித்தது :


58 comments:

இராமசாமி said...

என்னைப் போன்ற அப்பாவிகள்
---
எங்க ஊருல ஒரு பழ மொழி சொல்லுவாங்க ... வேணாம விடுங்க...

ILA(@)இளா said...

வழக்கம் போலவே கலக்கல் அண்ணாச்சி

இராமசாமி said...

அண்ணாச்சி சட்நீயும் , சாம்பாரும் காரம் கம்மி...

அகில் பூங்குன்றன் said...

சூப்பர் டிபன் அங்கிள்

Sugumarje said...

கலக்கல் போங்க... பதிவை பார்த்தா கொஞம் மனசு ரிலாக்ஸ் பண்ணிட்டா மாதிரி இருக்கே :)
போன பதிவுகள் எல்லாம் காட்டமா இருந்துச்சே :)

பிரபாகர் said...

ஓரு சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமண்ணே... படிக்க அருவறுப்பா இருக்கு!...

பிரபாகர்...

philosophy prabhakaran said...

எனக்கு பிடித்த பூரியும் கிழங்கும் போடாத உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அண்ணே : சிறிது இடைவெளி விட்டு வந்தாலும் படையல் அருமையோ அருமை........ வயிறு நிரம்ப கிளம்புகிறேன்..........

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராமசாமி said...

என்னைப் போன்ற அப்பாவிகள்
---
எங்க ஊருல ஒரு பழ மொழி சொல்லுவாங்க. வேணாம விடுங்க.]]]

அட பரவாயில்லை இராமசாமி.. சொல்லிருங்க..! தெரிஞ்சுக்குறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ILA(@)இளா said...
வழக்கம் போலவே கலக்கல் அண்ணாச்சி.]]]

நன்றி இளா..1

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராமசாமி said...
அண்ணாச்சி சட்நீயும், சாம்பாரும் காரம் கம்மி...]]]

எனக்கு வவுத்துக்கடுப்பு. அது தீர்றவரைக்கும் காரம் கம்மியாத்தான் இருக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அகில் பூங்குன்றன் said...
சூப்பர் டிபன் அங்கிள்.]]]

நன்றி அகில்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sugumarje said...
கலக்கல் போங்க... பதிவை பார்த்தா கொஞம் மனசு ரிலாக்ஸ் பண்ணிட்டா மாதிரி இருக்கே :) போன பதிவுகள் எல்லாம் காட்டமா இருந்துச்சே :)]]]

இது இட்லி-வடை பதிவுகள் தம்பி.. இப்படித்தான் இருக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரபாகர் said...
ஓரு சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமண்ணே... படிக்க அருவறுப்பா இருக்கு!...

பிரபாகர்...]]]

இதுலயா..? அப்படி என்னங்கண்ணா வார்த்தைகள்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[philosophy prabhakaran said...
எனக்கு பிடித்த பூரியும் கிழங்கும் போடாத உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...]]]

அடுத்த தபா போடுறேன் பிலாசபி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
அண்ணே : சிறிது இடைவெளி விட்டு வந்தாலும் படையல் அருமையோ அருமை........ வயிறு நிரம்ப கிளம்புகிறேன்..........]]]

அப்பாடா.. வயிறு புல்லுன்னு நீங்க ஒருத்தராவது சொன்னீங்களே.. சந்தோஷம் யோகேஷ்..!

Sundar said...

சிற்றுண்டி மிக அருமை...

இப்பொழுதெல்லாம் நான் ஜனரஞ்சக பத்திரிக்கைகளை படிப்பதை குறைத்துகொண்டு வருகிறேன்...

உங்கள் பகுதியே போதும்...

சிறுகுறிப்பு:

பிரபு/குஷ்பூ பெயர்களை தவிர்த்திருக்கலாம். அவர்கள் வெளிப்படையாக காதலை அறிவிக்கவே இல்லையே. எல்லாம் வதந்திகள் தானே. அப்படிப் பார்த்தால் எந்த நடிகர்/நடிகை விஷயத்திலும் ஒரு தொடுப்பு, அவரது நடிப்பு காலத்தில், ஏதாவது ஒரு சமயம் இருக்கத்தான் செய்கிறது...

- சுந்தர்

பார்வையாளன் said...

திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும் கலைஞர் அரசியல் பேசுவதில்லையா ? அது போல மிஸ்கின் சினிமா பேசிவிட்டார் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
இராமசாமி said...

என்னைப் போன்ற அப்பாவிகள்
---
எங்க ஊருல ஒரு பழ மொழி சொல்லுவாங்க ... வேணாம விடுங்க...//
சொல்லு நண்பா சொல்லு # அடுத்தவர்கள் அசிங்க படுவதை ஆவலோடு வேடிக்கை பார்ப்போர் சங்கம்

dr suneel krishnan said...

அந்த ஆயுர்வேத டாக்டர் செய்தி எனக்கு புதிது ,முடிந்தால் சுட்டி அளிக்கவும் :)
ரவி-கல்யான் விஷயம் உண்மை என்றே சில ஆந்திர நண்பர்கள் கூறுகிறார்கள்.

karthi said...

" படித்ததில் பிடித்தது :

அண்ணே

இத எல்லாம் பொய் நீங்க படித்ததில் பிடித்தது னு... ம்ம்ம் ஒண்ணும் சொல்ல முடியல...
போன வருஷம் என்ன நடந்துச்சுன்னு இந்த லிங்க் ல பாருங்க...
அமீர் ,சசிகுமார் ...........இப்ப மிஷ்கின்..http://pitchaipathiram.blogspot.com/2009/12/121209-2.html

மதுரை பாண்டி said...

Full meals sapitta effect.... !!!

THOPPITHOPPI said...

அண்ணே வாரமலர் மாதிரி மொத்தமா ஒரே பதிவா போட்டுட்டிங்க.

heartsnatcher said...

ஏன் நாவலாகவே எழுதுகிறிர்கள்

செங்கோவி said...

//கல்யாணம் ஆயிருச்சான்றது பத்தி ஒண்ணும் தெரியலை. // இவ்வளவு தீவிரமாயிருக்கிற உங்க கடமை உணர்ச்சியை நான் பாராட்டுறேன்.
--செங்கோவி
சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை

Indian Share Market said...

எல்லா புகழும் சவுக்குக்கே.வாழ்த்துக்கள்.

கிருஷ்குமார் said...

ரொம்ப நாள் கழிச்சு இட்லி -பொங்கல் ...மனம் நிறைய உண்டு மகிழ்ந்தேன் ..

சுகுமாரன் விஷயம் போன்றே மேலும் தமிழிலும் சில உண்டு!
R.P ராஜ நாயஹம் பதிவில் ,(S.வரலட்சுமி ) T.R மகாலிங்கம் மற்றும் AL ஸ்ரீனிவாசன் சேர்ந்து ஒரு படத்தில்
பணியாற்றியதை பற்றி குறிப்பிட்டதாக நினைவு !
(அம்மா) சரண்யா வின் முதல் கணவர் ராஜசேகர் மற்றும் இந்நாள் கணவர் பொன்வண்ணன் இருவரும் ஒரு
மெகா தொடரில் இணைந்து நடித்துள்ளனர் ..
சம்பந்தமே இல்லாமல் இன்னொரு விஷயம் கூட நினைவுக்கு வருகிறது ! அது விஜய காந்தும் ,சரத்தும்
நடிகர் சங்கத்துக்கு ஒன்றாக பணி புரிந்தது !

புதுகைத் தென்றல் said...

full meals sapta thrupthi

சதீஷ் said...

//இந்திரஜித்தின் மனைவி பூர்ணிமாவும் நடிகைதான்..!//

இந்த பூர்ணிமா நமது கோலங்கள் (சன் டிவி) நாடகத்தில் வில்லியாக (டைரக்டரின் பணக்கார தங்கையாக) நடித்தவர்.

Thomas Ruban said...

இட்லி,தோசை,பொங்கல்,வடை,
சட்னி,சாம்பார் சூடாகாவும், சுவையாகவும் இருந்தது.

//இந்தியாவுக்கு வரச் சொல்லுங்கப்பா..! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!//

அண்ணே இதல்லாம் ஓவார தெரியல்ல....

ஒரு புத்தகவிழாவுக்கு சென்ற சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல், அவருடைய தேகம் நாவலை பற்றி மட்டுமே பேசினா‌‌‌ர். இப்பொழுது மிஷ்கின் தேகம் நாவலை பற்றி பேசாமல் "நந்தலாலா" பற்றி பேசுவதாக சாரு குறை கூறுவது சரியா?

சரோஜாதேவி புத்தகம் மாதிரி என்று மிஷ்கின் கூறியதில் கூட தவறு இருப்பதாக தெரியவில்லை!!!

பகிர்வுக்கு நன்றி அண்ணே..

நையாண்டி நைனா said...

தமிழ் உணவு ஐட்டங்களை பேராக கொடுத்து விட்டு
ஆந்திரா லட்டையும், மலையாள புட்டையும் கொடுத்த தாத்தா உனா. தானா அவர்களை கண்டிக்கிறேன்..
(இருந்தாலும் நல்லா தானே இருந்துச்சி)

பந்தலுக்கு பின்னால் தின்றுவிட்டு பந்தலுக்கு முன்னால் உண்ணாவிரதம் இருப்போர் சங்கம்

நையாண்டி நைனா said...

தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க

நையாண்டி நைனா said...

அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

நையாண்டி நைனா said...

அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

நையாண்டி நைனா said...

அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

ம.தி.சுதா said...

களைச்சுப் போனேன் ஒரு காப்பி கிடைக்குமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

நையாண்டி நைனா said...

/*களைச்சுப் போனேன் ஒரு காப்பி கிடைக்குமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.*/
பார்த்து கேளுங்க... அப்புறம் இந்த பதிவையே ஒரு காப்பி எடுத்து கொடுத்துற போறார் . அப்புறம் நீங்க குளுகோசு ஏத்துற நெலமைக்கு போயிருவீங்க.. ஆவ்வ்வ்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sundar said...

சிற்றுண்டி மிக அருமை... இப்பொழுதெல்லாம் நான் ஜனரஞ்சக பத்திரிக்கைகளை படிப்பதை குறைத்துகொண்டு வருகிறேன்...
உங்கள் பகுதியே போதும்...]]]

நன்றி சுந்தர்..!

[[[பிரபு / குஷ்பூ பெயர்களை தவிர்த்திருக்கலாம். அவர்கள் வெளிப்படையாக காதலை அறிவிக்கவே இல்லையே. எல்லாம் வதந்திகள்தானே. அப்படிப் பார்த்தால் எந்த நடிகர் / நடிகை விஷயத்திலும் ஒரு தொடுப்பு, அவரது நடிப்பு காலத்தில், ஏதாவது ஒரு சமயம் இருக்கத்தான் செய்கிறது...]]]

- சுந்தர்]]]

நீங்கள் தமிழ்ப் பத்திரிகைகளையும் கொஞ்சம் அதிகமாக வாசியுங்கள் சுந்தர்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும் கலைஞர் அரசியல் பேசுவதில்லையா ? அது போல மிஸ்கின் சினிமா பேசி விட்டார்.]]]

ஓகே.. ஓகே.. நானும் ஒத்துக்குறேன்.. நம்ம நண்பரின் நிகழ்வுதானே என்று நினைத்து மிஷ்கினும் இப்படி பேசிவிட்டார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இராமசாமி said...
என்னைப் போன்ற அப்பாவிகள்
---
எங்க ஊருல ஒரு பழ மொழி சொல்லுவாங்க ... வேணாம விடுங்க//

சொல்லு நண்பா சொல்லு # அடுத்தவர்கள் அசிங்க படுவதை ஆவலோடு வேடிக்கை பார்ப்போர் சங்கம்.]]]

ம்.. கேவலத்தை கேவலமாவே நினைக்க மாட்டீங்களாப்பூ..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[dr suneel krishnan said...

அந்த ஆயுர்வேத டாக்டர் செய்தி எனக்கு புதிது, முடிந்தால் சுட்டி அளிக்கவும் :)]]]

தேடித் தருகிறேன் ஸார்..!

[[[ரவி-கல்யான் விஷயம் உண்மை என்றே சில ஆந்திர நண்பர்கள் கூறுகிறார்கள்.]]]

என்னிடமும் அப்படித்தான் சொன்னார்கள்..!

dr suneel krishnan said...

மேலும் ஒரு சந்தேகம் ,அந்த பிரேம் நசீர் படத்தை பார்க்கும் பொழுது எனக்கு தசாவதராம் -பல ராம் நாய்டு நினைவுக்கு வருகிறார்:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[karthi said...

" படித்ததில் பிடித்தது :

அண்ணே இத எல்லாம் பொய் நீங்க படித்ததில் பிடித்ததுனு... ம்ம்ம் ஒண்ணும் சொல்ல முடியல...

போன வருஷம் என்ன நடந்துச்சுன்னு இந்த லிங்க்ல பாருங்க... அமீர், சசிகுமார் ........... இப்ப மிஷ்கின்..]]]

சாருவைப் பத்தி நமக்கே தெரியும்தானே.. இதில் எனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் ஏற்படவில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மதுரை பாண்டி said...
Full meals sapitta effect.!!!]]]

பில்லை அனுப்பி வைக்கிறேன். செக்கை அனுப்பி வைங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[THOPPITHOPPI said...
அண்ணே வாரமலர் மாதிரி மொத்தமா ஒரே பதிவா போட்டுட்டிங்க.]]]

இதுதான் இட்லி-வடை பதிவு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[heartsnatcher said...

ஏன் நாவலாகவே எழுதுகிறிர்கள்.]]]

அப்படித்தான் வருது ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[செங்கோவி said...

//கல்யாணம் ஆயிருச்சான்றது பத்தி ஒண்ணும் தெரியலை. //

இவ்வளவு தீவிரமாயிருக்கிற உங்க கடமை உணர்ச்சியை நான் பாராட்டுறேன்.

--செங்கோவி

சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை]]]

நன்றி செங்கோவி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Indian Share Market said...
எல்லா புகழும் சவுக்குக்கே. வாழ்த்துக்கள்.]]]

உண்மைதான். சவுக்கு வாழ்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கிருஷ்குமார் said...

ரொம்ப நாள் கழிச்சு இட்லி - பொங்கல். மனம் நிறைய உண்டு மகிழ்ந்தேன்.

சுகுமாரன் விஷயம் போன்றே மேலும் தமிழிலும் சில உண்டு!

R.P ராஜ நாயஹம் பதிவில், (S.வரலட்சுமி ) T.R மகாலிங்கம் மற்றும் AL ஸ்ரீனிவாசன் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றியதை பற்றி குறிப்பிட்டதாக நினைவு !

(அம்மா) சரண்யாவின் முதல் கணவர் ராஜசேகர் மற்றும் இந்நாள் கணவர் பொன்வண்ணன் இருவரும் ஒரு மெகா தொடரில் இணைந்து நடித்துள்ளனர்.

சம்பந்தமே இல்லாமல் இன்னொரு விஷயம்கூட நினைவுக்கு வருகிறது! அது விஜயகாந்தும், சரத்தும் நடிகர் சங்கத்துக்கு ஒன்றாக பணி புரிந்தது!]]]

தகவல்களுக்கு மிக்க நன்றி ஸார்..

விஜய்காந்த், சரத்குமார் மேட்டர் மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக இல்லை என்று நினைக்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புதுகைத் தென்றல் said...

full meals sapta thrupthi.]]]

அப்பாடா.. இதுதான் எனக்கும் திருப்தியளிக்கிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சதீஷ் said...

//இந்திரஜித்தின் மனைவி பூர்ணிமாவும் நடிகைதான்..!//

இந்த பூர்ணிமா நமது கோலங்கள் (சன் டிவி) நாடகத்தில் வில்லியாக (டைரக்டரின் பணக்கார தங்கையாக) நடித்தவர்.]]]

ஆமாம்..! நன்றி சதீஷ்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Thomas Ruban said...

இட்லி, தோசை, பொங்கல், வடை,
சட்னி, சாம்பார் சூடாகாவும், சுவையாகவும் இருந்தது.

//இந்தியாவுக்கு வரச் சொல்லுங்கப்பா..! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..!//

அண்ணே இதல்லாம் ஓவார தெரியல்ல. ஒரு புத்தக விழாவுக்கு சென்ற சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல், அவருடைய தேகம் நாவலை பற்றி மட்டுமே பேசினா‌‌‌ர். இப்பொழுது மிஷ்கின் தேகம் நாவலை பற்றி பேசாமல் "நந்தலாலா" பற்றி பேசுவதாக சாரு குறை கூறுவது சரியா?

சரோஜாதேவி புத்தகம் மாதிரி என்று மிஷ்கின் கூறியதில்கூட தவறு இருப்பதாக தெரியவில்லை!!!
பகிர்வுக்கு நன்றி அண்ணே..]]]

சாருவும் இதைச் செய்திருக்கிறார் என்பது எல்லாருக்குமே தெரியும்..! நான் இதனைக் குறிப்பிட்டதற்குக் காரணம்.. இவ்ளோ சீக்கிரம் சாருவின் குணம் வெளியே வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை..!

அட்லீஸ்ட் யுத்தம் செய் படம் வரைக்குமாவது நட்பு தொடரும் என்று நினைத்திருந்தேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...

தமிழ் உணவு ஐட்டங்களை பேராக கொடுத்து விட்டு ஆந்திரா லட்டையும், மலையாள புட்டையும் கொடுத்த தாத்தா உனா. தானா அவர்களை கண்டிக்கிறேன்..
(இருந்தாலும் நல்லாதானே இருந்துச்சி)

பந்தலுக்கு பின்னால் தின்றுவிட்டு பந்தலுக்கு முன்னால் உண்ணாவிரதம் இருப்போர் சங்கம்.]]]

எப்படியோ தின்னு முடிச்சா சரிதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...

தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க
தானை தலைவி மனிதா வாழ்க]]]

தமிழனின் குணம் என்றைக்கும் மாறவே மாறாது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...
அண்ணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.]]]

வருகின்ற 23-ம் தேதிவரையிலும் திரைப்பட விழாவுக்குப் போக வேண்டியிருப்பதால் பகல் நேரத்தில் என்னால் ஆன்லைனில் உட்கார முடியாது.. வருந்துகிறேன்..

இனி இரவில்தான் பதிலளிக்கப்படும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ம.தி.சுதா said...

களைச்சுப் போனேன் ஒரு காப்பி கிடைக்குமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4]]]

நேர்ல வாங்க.. வாங்கித் தரேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...

/*களைச்சுப் போனேன் ஒரு காப்பி கிடைக்குமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.*/

பார்த்து கேளுங்க... அப்புறம் இந்த பதிவையே ஒரு காப்பி எடுத்து கொடுத்துற போறார் . அப்புறம் நீங்க குளுகோசு ஏத்துற நெலமைக்கு போயிருவீங்க.. ஆவ்வ்வ்]]]

நல்ல காமெடி.. குட்.. வெரி வெரி குட்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[dr suneel krishnan said...
மேலும் ஒரு சந்தேகம், அந்த பிரேம்நசீர் படத்தை பார்க்கும் பொழுது எனக்கு தசாவதராம் - பலராம் நாய்டு நினைவுக்கு வருகிறார்:)]]]

ஹி.. ஹி.. இப்படி பட்டவர்த்தனமா கொஸ்டீன் கேக்கப்படாது ஸார்..! இருக்கலாம்..!