குசும்பனின் சீக்ரெட் போட்டோ அம்பலம்..!

20-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கல்யாணத்திற்குப் போனாலும், கருமாதிக்குப் போனாலும் ஒரு சிலருக்கு ராஜ மரியாதை கிடைக்கும். மற்றவர்கள் சொம்பாக இருக்க வேண்டியதுதான். இது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் லக்கு..!

இன்னிக்குப் பாருங்க.. தற்செயலா மல்லிகா ஷெராவத்தோட போட்டோ தேடி(எதுக்குன்னுல்லாம் கேக்கப்படாது) அலைஞ்சுக்கிட்டிருந்தேன். கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒரு நல்ல ஸ்டில் கிடைச்சா போதும்னு தேடிக்கிட்டிருக்கும்போது மான் கூட்டத்துக்கு நடுவுல ஒரு சிம்பன்ஸி உக்காந்திருந்த மாதிரி நம்மாளு ஒருத்தன் உக்காந்திருந்தான்.

அட.. இந்தக் குரங்கை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கேன்னு மூளையைக் கசக்கிக்கிட்டு யோசிச்சா அட நம்ம குசும்பன்..!ஆபீஸ்ல இருந்த கேரளத்துப் பொண்ணுங்க எல்லாம் வரிசையா ரிலீவ் ஆயிட்டதால "போஸ்ட் போட மாட்டேன். பஸ்ஸுல ஏற மாட்டேன்.. ஜிடாக்குக்கு வர மாட்டேன்.. பேஸ்புக்ல தலையைக் காட்ட மாட்டேன். ட்விட்டர்ல முகம் கொடுக்க மாட்டேன்"னு அடம் பிடிச்சிட்டு வீட்ல குப்புறப் படுத்துத் தூங்குறானாம்பா..!

இந்தப் பய கெட்ட கேட்டுக்கு எம்புட்டு தகரியமா எவ்ளோ அழகா போஸ் கொடுக்குறான் பாருங்க. நான் தேடுனது மல்லிகா ஷெராவத்தை. இவன் எதுக்கு நடுவால வர்றான்..? இவனுக்கும் மல்லிகாவுக்கு என்ன தொடர்பு..? இல்ல கூகிள் கம்பெனிக்கு காசு கொடுத்து இது மாதிரி செட்டப்பு நடத்துறானா..? ஒண்ணும் புரியலை..!

ஆருக்காச்சும் உண்மை தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!

டிஸ்கி :  யார், யாரோ கும்மி போஸ்ட் போட்டு கல்லா கட்டும்போது நான் செய்யக் கூடாதா என்ன..?

42 comments:

LK said...

இது உண்மையில் உங்கப் பதிவு தானா ?? ரொம்ப சின்னதா இருக்கே ??

சூரியப்பிரகாஷ் said...

^^^^^^^^^
நியாயமான கேள்வி...........

பதுவு ரொம்ப சின்னதாதான் இருக்கு....

கூகுளுக்கு காசு கொடுத்து செட் பண்ணியிருப்பாருனு நினைக்கிறேன்.......

Jeeves said...

காலம் போன காலத்துல நீங்க எதுக்கு மல்லிகா ஷெராவத்தை ஏன் தேடுனீரு

மொக்கராசா said...

//ஆருக்காச்சும் உண்மை தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!

இது வயித்தெரிச்சல்ல சொல்லுர மாதிரி இருக்கே!

விடுங்க நம்ம குடுத்து வைச்சது அவ்வளவு தான் :)

முரளிகண்ணன் said...

LK and Jeeves

கமெண்டுகளுக்கு பெரிய ரிப்பீட்டே

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணே இதுகூடவா தெரியல.... குசும்பன்தான் மல்லிக்கா ஷேராவத்துக்கு பாடிகார்டு.
"தமிழ்ல" சொன்னா வாட்ச்மேன...:)))

நாஞ்சில் பிரதாப் said...

ஆமா நீங்க எதுக்கு மல்லிக்கா ஷெராவாத்தை தேடுனீங்க... பழைய மல்லிகா அக்கா ஞாபகம் வந்துடுச்சோ...:)

நாஞ்சில் பிரதாப் said...

உண்மைத்தமிழன் பதிவுன்னு உள்ள வந்தா வேறயாரோடவோ பதிவா இருக்கு... இம்புட்டு சின்னதா

Joseph said...

உ. த அண்ணா,
உடம்பு சரியில்லையா ? நல்லாருக்கிங்களா? என்னாச்சு ? ஏன் இப்டி ஆயிருச்சு ? என்னால இத தாங்கிக்கவே முடியலண்ணே. உங்ககிட்ட இருந்து இப்டி ஒருசின்ன பதிவ நான் எதிர்பார்கவே இல்ல.

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணே பதிவுபோட லீட் கிடைக்கலைன்னா தினத்தந்தில வர்ற ஏதாச்சும் ரெண்டுப்பக்க
செய்தியை டைப்பண்ணி போட்டிருக்கலாமே.... இப்படியா குசும்பனை பப்ளிக்கா அசிங்கப்படத்தறது....எத்தனை நாளா பிளான் பண்ணீங்க....

இராமசாமி கண்ணண் said...

நன்னி அண்ணாச்சி :)

ரங்கன் said...

முருகா!!

என்ன கொடுமை இது..!!
சுத்தி அந்த புள்ள அரைகுறையா நிக்கிது..
நடுவுல நம்மாளு ஜாலியா போஸ் குடுக்குது..

கூகிள்காரன் காசு வாங்கிட்டான் போல..!!

எஸ்.கே said...

ஆராய்ச்சி கண்டுபிடிப்பு:
அவரின் இந்த புகைப்படம் உள்ள தளத்தில் அவரின் புகைப்படம் உள்ள பக்கத்தில்(குறிப்பாக புகைப்படத்திற்கு மேலேயே) மல்லிகா ஷெராவத் பெயரும் உள்ளது. அதனால் நீங்கள் மல்லிகா ஷெராவத் என தேடும்பொழுது இவரின் படமும் வந்துள்ளது.
ஆதாரம்:
http://kusumbuonly.blogspot.com/2008/07/blog-post_27.html
(நான் ஒரு விஞ்ஞானி!!!!:-))))

தமிழ் செல்வன் said...

அணைத்து பின்னுட்டங்களும் மிக அருமை, செமையா கலாசிடீங்க சூப்பர்

ராம்ஜி_யாஹூ said...

nice, firefox katchiyaa neenga

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[LK said...
இது உண்மையில் உங்கப் பதிவுதானா?? ரொம்ப சின்னதா இருக்கே ??]]]

இனிமேல் எனது பதிவுகள் இப்படித்தான் இருக்கும் நண்பரே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சூரியப்பிரகாஷ் said...
நியாயமான கேள்வி. பதுவு ரொம்ப சின்னதாதான் இருக்கு.
கூகுளுக்கு காசு கொடுத்து செட் பண்ணியிருப்பாருனு நினைக்கிறேன்.]]]

ஓகே.. தோள் கொடுத்தமைக்கு நன்றி.. மான நஷ்ட கேஸ் போட்டான்னா கூட வருவீங்கள்ல..?

மங்களூர் சிவா said...

:))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Jeeves said...
காலம் போன காலத்துல நீங்க எதுக்கு மல்லிகா ஷெராவத்தை ஏன் தேடுனீரு?]]]

எது காலம் போன காலம்..? எனக்கு இப்பத்தான்யா காலமே பொறந்திருக்கு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மொக்கராசா said...

//ஆருக்காச்சும் உண்மை தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!

இது வயித்தெரிச்சல்ல சொல்லுர மாதிரி இருக்கே! விடுங்க நம்ம குடுத்து வைச்சது அவ்வளவுதான் :)]]]

அப்படிங்கிறீங்க..? நாங்களும்தான இத்தனை நாளா கூகுள்ல இருக்கோம். எங்க போட்டோ மட்டும் ஏன் வரலை..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[முரளிகண்ணன் said...

LK and Jeeves

கமெண்டுகளுக்கு பெரிய ரிப்பீட்டே]]]

அதுக்குப் போட்ட பதிலையே திருப்பிப் படிச்சுக்குங்கண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே இது கூடவா தெரியல.... குசும்பன்தான் மல்லிக்கா ஷேராவத்துக்கு பாடிகார்டு. "தமிழ்ல" சொன்னா வாட்ச்மேன...:)))]]]

எப்போ இருந்து? எனக்குத் தெரியாதே..? தம்பி குசும்பா எனக்கும் மல்லிகாகிட்ட ஏதாச்சும் வேலை வாங்கிக் கொடுப்பா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நாஞ்சில் பிரதாப் said...
ஆமா நீங்க எதுக்கு மல்லிக்கா ஷெராவாத்தை தேடுனீங்க... பழைய மல்லிகா அக்கா ஞாபகம் வந்துடுச்சோ...:)]]]

நான் ஒரு "இது"க்காகத் தேடுனேன். அதான் சொல்லிட்டனே.. கேக்கப்படாதுன்னு..!?

அப்புறம் அந்த "மல்லிகா அக்கா" யாருங்கண்ணே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நாஞ்சில் பிரதாப் said...
உண்மைத்தமிழன் பதிவுன்னு உள்ள வந்தா வேற யாரோடவோ பதிவா இருக்கு. இம்புட்டு சின்னதா..]]]

போதும்ப்பா.. பெரிசு, பெரிசா எழுதினாலும் நீங்க அப்படியே பெரிசு, பெரிசா பின்னூட்டம் போட்டுத் தள்ளப் போறீங்க பாருங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜோஸப் தம்பி..

உன் மாப்பியைக் கிண்டல் செஞ்சவுடனேயே ஓடி வந்துட்ட பாத்தியா..? நினைச்சேன்.. அவன் அடி வாங்கணும்னு எத்தனை பேர் நினைப்பாவே இருக்காங்க போலிருக்கு..!

பாவம் குசும்பன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே பதிவு போட லீட் கிடைக்கலைன்னா தினத்தந்தில வர்ற ஏதாச்சும் ரெண்டுப் பக்க செய்தியை டைப் பண்ணி போட்டிருக்கலாமே. இப்படியா குசும்பனை பப்ளிக்கா அசிங்கப்படத்தறது. எத்தனை நாளா பிளான் பண்ணீங்க.]]]

இன்னிக்குத்தாம்பா.. சட்டுன்னு பார்த்தேன். பட்டுன்னு போட்டுட்டேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராமசாமி கண்ணண் said...
நன்னி அண்ணாச்சி:)]]]

குசும்பனைத் திட்டலையா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரங்கன் said...
முருகா!! என்ன கொடுமை இது..!! சுத்தி அந்த புள்ள அரைகுறையா நிக்கிது.. நடுவுல நம்மாளு ஜாலியா போஸ் குடுக்குது.. கூகிள்காரன் காசு வாங்கிட்டான் போல..!!]]]

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்..! எதுக்கும் குசும்பன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிடுவோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எஸ்.கே said...

ஆராய்ச்சி கண்டுபிடிப்பு:

அவரின் இந்த புகைப்படம் உள்ள தளத்தில் அவரின் புகைப்படம் உள்ள பக்கத்தில்(குறிப்பாக புகைப்படத்திற்கு மேலேயே) மல்லிகா ஷெராவத் பெயரும் உள்ளது. அதனால் நீங்கள் மல்லிகா ஷெராவத் என தேடும் பொழுது இவரின் படமும் வந்துள்ளது.

ஆதாரம்:

http://kusumbuonly.blogspot.com/2008/07/blog-post_27.html

நான் ஒரு விஞ்ஞானி!!!!:-))))]]]

ஹி.. ஹி.. ஸார்.. இதெல்லாம் உள் அரசியல்.. கண்டுக்கக் கூடாது.. இப்படியா பட்டவர்த்தனமா உண்மையைப் போட்டு உடைக்கிறது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தமிழ் செல்வன் said...
அணைத்து பின்னுட்டங்களும் மிக அருமை, செமையா கலாசிடீங்க சூப்பர்.]]]

நன்றி தமிழ்செல்வன் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராம்ஜி_யாஹூ said...
nice, firefox katchiyaa neenga]]]

ஆமாம்.. ரொம்ப நாளாவே அதுதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...
:))))]]]

-((((((((((((((((((((((

Gopi Ramamoorthy said...

இந்தப் பதிவின் ஆழமும் அடர்த்தியும் என்னைப் பிரமிக்க வைக்கிறது.

உங்கள் குதூகலம் ஆர்கிமிடிஸ் அடைந்த குதூகலத்தை விட அதிகமாக உள்ளதில் வியப்பேதும் இல்லை.

இந்த மாதிரி ஒரு பதிவாவது நான் போட்டு விட மாட்டேனா என்று என்னை இந்தப் பதிவு ஏங்க செய்கிறது.

உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்து பிரமித்து வாயடைத்துப் போய் நிற்கிறேன். பேச நா எழவில்லை.

இது போல பதிவுகள் மேலும் பல பதிவுகளை எழுதி எங்களை ஆற்றுப் படுத்துங்கள்.

எனக்கு மட்டும் சொல்லுங்க. மல்லிகா ஷெராவத் ஏன் தேடுறீங்க? நீங்க எதிர்பார்த்த போட்டோ கிடைத்ததா இல்லையா?

பார்வையாளன் said...

"இனிமேல் எனது பதிவுகள் இப்படித்தான்
இருக்கும் நண்பரே"

என்னடா இது... திண்டுக்கல்லுக்கு வந்த சோதனை....

சரி.. உங்களுக்கு ஒரு கேள்வி.
பிட்டு பட விமர்சனம் அப்படீனு டைப் செஞ்சு தேடுனா, யார் படம் வரும்னு நினைக்கிறீங்க ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Gopi Ramamoorthy said...

இந்தப் பதிவின் ஆழமும் அடர்த்தியும் என்னைப் பிரமிக்க வைக்கிறது.

உங்கள் குதூகலம் ஆர்கிமிடிஸ் அடைந்த குதூகலத்தை விட அதிகமாக உள்ளதில் வியப்பேதும் இல்லை.

இந்த மாதிரி ஒரு பதிவாவது நான் போட்டு விட மாட்டேனா என்று என்னை இந்தப் பதிவு ஏங்க செய்கிறது.

உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்து பிரமித்து வாயடைத்துப் போய் நிற்கிறேன். பேச நா எழவில்லை.

இது போல பதிவுகள் மேலும் பல பதிவுகளை எழுதி எங்களை ஆற்றுப் படுத்துங்கள்.

எனக்கு மட்டும் சொல்லுங்க. மல்லிகா ஷெராவத் ஏன் தேடுறீங்க? நீங்க எதிர்பார்த்த போட்டோ கிடைத்ததா இல்லையா?]]]

கோபி..

இதுவொரு சாதாரண மொக்கை பதிவுதான். கும்மியடிக்கலாம் என்றுதான் போட்டேன். அப்படியொன்றும் நீங்கள் சொல்லியிருப்பதைப் போல் புளகாங்கிதம் அடைய வேண்டிய பதிவல்ல..!

இருந்தாலும் உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...

"இனிமேல் எனது பதிவுகள் இப்படித்தான் இருக்கும் நண்பரே"

என்னடா இது... திண்டுக்கல்லுக்கு வந்த சோதனை....
சரி.. உங்களுக்கு ஒரு கேள்வி.
பிட்டு பட விமர்சனம் அப்படீனு டைப் செஞ்சு தேடுனா, யார் படம் வரும்னு நினைக்கிறீங்க ?]]]

யார் படம் வந்தால் எனக்கென்ன? என் படம் வராது.. அதுவரையில் சந்தோஷம்..!

தியாவின் பேனா said...

நல்ல பதிவு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தியாவின் பேனா said...
நல்ல பதிவு]]]

வருகைக்கு நன்றி தியா..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போட்டது போட்டீங்க அந்த மல்லிகா ஷெராவத்து போட்டோவுல ஒண்ணு ரெண்ட எடுத்து போட்டிருக்கலாம்ணே!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
போட்டது போட்டீங்க அந்த மல்லிகா ஷெராவத்து போட்டோவுல ஒண்ணு ரெண்ட எடுத்து போட்டிருக்கலாம்ணே!]]]

அந்த ஸ்கிரீன் ஷாட்லதான் பத்து, பன்னெண்டு மல்லிகா இருநதாங்களே.. பத்தலையா?

abeer ahmed said...

See who owns hotmail.ru or any other website:
http://whois.domaintasks.com/hotmail.ru

abeer ahmed said...

See who owns weebiz.com or any other website.