எந்திரன் - ஒரு கொத்து புரோட்டா..!


06-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது எந்திரன் எதிர்ப்பு வாரமாம்..! இந்த ஜோதியில் ஐக்கியமான தோழர்களும், நண்பர்களும் சன் டிவியின் தில்லாலங்கடி வேலைகளை எதிர்க்கும் முகமாக அது கொண்டு வந்திருக்கும் 'எந்திரன்' திரைப்படத்தை குப்பை என்றும், வேகாதது என்றும், பாதி வெந்தது என்றும் சொல்லி தங்களது வயித்தெரிச்சலைக் கொட்டி வருகிறார்கள்.

இதில் கலந்து கொள்ளாதவர்களையெல்லாம் 'தமிழினத் துரோகிகள்' என்று பட்டம் சூட்டி ஓரம்கட்டும் வேலையும் ஓரமாக நடந்து வருவதாகத் தெரிகிறது. தினம்தோறும் பல்வேறு வழிகளில் புலம்பித் தள்ளி வரும் இந்த அறிவுஜீவித் திம்மிகளுக்கும், புத்திசாலி அல்லக்கைகளுக்கும் மேற்கொண்டும் நேசக்கரம் நீட்டுவதற்காக நானும் 'எந்திரன்' பற்றிய எனது கும்மிகளை இங்கே அவர்கள் முன் வைக்கிறேன்..

இதனை எடுத்துக் கையாண்டு அந்த 'எந்திரன்' என்னும் 'தொந்திரனை' தமிழ்நாட்டை விட்டே அடித்துத் துரத்தி தமிழ் கூறும் நல்லுலகத்தை  கொள்ளையடிக்க வந்த இந்த பாஸிஸ்ட்டு கும்பலிடம் இருந்து மீட்கும்படியாய் அவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்


முதலில் இது ரஜினி படமே இல்லை. ரஜினி படம் என்றாலே  அவருடைய அறிமுகத்தின்போது, கால் விரல் நுனியில் இருந்து கேமிரா மெல்ல, மெல்ல உயரத் துவங்கி, தியேட்டரில் ரசிகர்கள் கைகளைத் தட்டி, தட்டி ஓய்ந்த பின்புதான் அந்த பரட்டைத் தலை, கில்பான்ஸ் மூஞ்சியையே காட்டும்.. ஆனால் இங்கே எடுத்த எடுப்பிலேயே ரஜினியை மொன்னையாகக் காட்டிவிட்டதால் இந்தக் காட்சி நிச்சயம் செல்லாது. ஸோ இது ரஜினி படமல்ல..

நான் இதுவரையிலும் பார்த்த விஞ்ஞானிகளெல்லாம் வெள்ளை கோட் உடையணிந்து கம்ப்யூட்டர் கீபோர்டில் பட்டனைத் தட்டிவிட்டு மானிட்டரை பார்த்து கை தட்டுவதையும்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆனால், ஸ்குரு டிரைவரை வைத்து நட்டை டைட் செய்யும் தலை சிறந்த விஞ்ஞானியை முதல் முறையாக இங்கேதான் பார்க்கிறேன்.. இவர்தான் விஞ்ஞானியா..? ஐ.டி.ஐ.யில் படித்த மெக்கானிக் வேலை பார்க்கும் இவரை விஞ்ஞானி என்று சொல்லி, என் காதில் பூச்சுற்றப் பார்த்திருக்கும் இயக்குநர் ஷங்கரை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

தனது அடுத்தக் கட்ட நிலையில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தான் கற்றதை, செய்வதைச் சொல்லித் தர மனமில்லாமல் அதை எடு, இதைக் கொடு என்று ஸ்குரூ டிரைவரையும், ஸ்பேர் பார்ட்ஸையும் எடுக்க வைத்திருக்கும் பார்ப்பனீய, மேலாதிக்க, துரோணரின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் புத்தியைத்தான் ஷங்கர் இதில் திணித்திருக்கிறார் என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பெண்கள் என்றாலே காதல் செய்யவும், டூயட் பாடவும்தான் லாயக்கு என்பதைச் சொல்லாமல் சொல்வதைப் போல நாட்டிற்காக உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானிக்கு 145 மிஸ்டு கால் கொடுத்து உயிரை எடுக்கும் அறிவு கெட்ட பெண்ணாக உலக அழகி ஐஸ்வர்யாவின் கேரக்டரை ஸ்கெட்ச் செய்திருக்கும் ஷங்கரின் பெண்ணாதிக்க குறுக்குப் புத்தியை என்னவென்று சொல்வது..?

காதலனைத் தேடி வரும் காதலியை பார்க்கக்கூட முடியாது என்று சொல்லும் அந்த விஞ்ஞானியைத் தூக்கிப் போட்டு மிதிக்காமல், “இனிமேல் என்னை பார்க்க வரவே வேண்டாம்னு சொல்லிருங்க.” என்று சீதை காலத்து புராணத்தை பேச வைத்து பெண்ணடிமைத்தனத்தை போதித்திருக்கும் ஷங்கரின் மடமையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விஞ்ஞானி தனக்கு மட்டும் வசீகரன் என்று அழகான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தான் சிருஷ்டித்த தன்னைப் போன்ற உருவமுடைய ரோபோவுக்கு சிட்டி என்ற தமிழ் அல்லாத பெயரைச் சூட்டி எந்தக் காலத்திலும் தமிழர்கள் ரோபோ அளவுக்கு வல்லவர்களாக இருக்க முடியாது என்பதை சூசகமாகச் சொல்லித் தமிழ் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கும் ஷங்கரின் ஈனப் புத்தியை உலகத் தமிழர்கள் இப்போதாவது உணர வேண்டும்.

ரோபோ கார் ஓட்டும்போது ஓவர் ஸ்பீடில் போகக் கூடாது.. டிராபிக் ரூல்ஸை பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுக்காமல், தான் சொன்னால்தான் எதையும் செய்ய வேண்டும் என்று தனது கைப்பாவையாக அதனை உருவாக்கி வைத்து விபத்து ஏற்படுத்தும் அளவுக்கு முனைப்பான வசீகரனின் ரோபா திட்டமே ஒரு வேஸ்ட்டு..

வசீகரன் வீடு திரும்பும்போது இத்தனை நாட்கள் கழித்து விஸ்வாமித்திர முனிவரைப் போல் தாடியும், மீசையும் அட்டக்கரியுமாக வந்து நிற்கும் மகனைப் பார்த்து இப்படியா ஒரு தாய் ஆச்சரியப்பட்டு வரவேற்பாள்..? அதில் ஒரு நடிப்பு வேண்டாமா?

ஷங்கருக்கு அந்த அளவுக்கு இயக்கம் செய்யத் தனக்குத் தெரியவில்லையெனில் பராசக்தியின் இறுதிக் காட்சியில் குணசேகரனை அடையாளம் கண்டு கொண்டு அவனது தங்கை கல்யாணி கோர்ட்டில் மயங்கி விழுகின்ற காட்சியையும், மனோகாரவில் சிறைக் கொட்டடியில் இருக்கும் மனோகரனைப் பார்க்க வரும் தாயைப் பார்த்து மனோகரன் துடிக்கின்ற காட்சியையும் ஷங்கர் வீடியோவில் போட்டுப் பார்த்து கற்றுக் கொண்டிருக்க வேண்டாமா..?

இப்பூவுலகில் அனைவரும் சமம் என்று அனைவரும் சொல்லி வரும்வேளையில் செட்டப்போடு உருவாக்கப்பட்டதுதான் என்றாலும் வந்தாரை இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்கும் தமிழ்க் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்வதைப் போல் “இது மெஷினும்மா.. ஒண்ணும் சாப்பிட முடியாது..” என்று கிண்டல் செய்வது ஆண்டான், அடிமை வர்க்கத்தை நமக்கு ஞாபகப்படுத்தவில்லையா..? 

இலையின் முன் உட்கார்ந்தவர்களை எமனே அழைப்பதற்கு தயங்குவான் என்னும் பண்பாட்டை உடைய நமது இந்துத்துவ கலாச்சாரத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும் ரோபோவை “போய் டிவியை போட்டுப் பாரு” என்று விரட்டியடிக்கும் வசீகரனின் குணம்தான் என்ன..?

ஹீரோயின் வீட்டைக் காட்டும்போது அங்கே இருக்கும் அவளுடைய அத்தனை உறவினர்களின் முகங்களும் வெள்ளை பெயிண்ட் அடித்தாற்போன்று அவாள்களாகவே இருப்பதன் மர்மம்தான் என்ன? இயக்குநர் ஷங்கர் இங்கே என்ன சொல்ல வருகிறார்..?

'அவாள்'களின் பெண்கள் இது மாதிரியான புத்திஜீவிகளை மட்டும்தான் காதலிப்பார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்ள வருவார்கள்.. ஸோ.. 'நீங்களெல்லாம் சீக்கிரமாக வசீகரனைப் போல அறிவாளியாக மாறுங்கள்' என்று வருணாசிரமத் தத்துவத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல் ஏற்றியிருப்பதை படம் பார்த்த ரசிகர்களே தயவு செய்து  மறந்து விடாதீர்கள்.

இந்தியா முழுக்கத்தான் ஸ்பீக்கர் வைத்து அவரவர் கடவுளைக் கும்பிடுகிறார்கள். அது எல்லாமா படிக்கிறதுக்கு தொந்தரவா இருக்கு..? செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா என்ற பாடலைக் கேட்டால் கல்லும் மாவிளக்காக கரையும். அப்படியொரு பாடலைக் கேட்டுவிட்டு சகிக்க முடியவில்லை என்பதைப் போல் முகத்தைச் சுளிக்கும் பார்ப்பன வர்கத்தின் அடையாளச் சின்னமான ஹீரோயினை வைத்து ஷங்கர் எழுப்பியிருக்கும் கேள்விதான் என்ன..?

இது போல் காலையில் டிவிக்களில் திருப்பதி பிரம்மோத்சவத்தையும், சுப்ரபாதத்தையும் போட்டுத் தாக்குகிறார்களே. அது தொந்தரவாக இல்லையாமா? சாயந்தர வேளைகளில் நவராத்திரிக்காக சங்கீதத்தையும், டொய்ங்.. டொய்ங்.. ரீங்காரத்தையும் போட்டு நம் காதைப் பொளந்து கட்டுகிறார்களே.. இது மட்டும் கேட்பதற்கு இனிக்குதாக்கும்..? இதையெல்லாம் ஷங்கரால் கேட்க முடிந்ததா..? முடியாது.. ஏனெனில் காளியாத்தாவும், மாரியாத்தாவும் சூத்திரர்களின் சாமி.. புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே.. இங்குதான் இருக்கிறது ஷங்கரின் விபீஷண புத்தி..

மைக் செட்டை உடைத்தெறிந்துவிட்டு நடக்கும் ரோபாவைத் தாக்க வரும் மண்ணின் மைந்தர்களின் ஆயுதங்களை தனது சக்தியில் ரோபா கிரகித்துக் கொள்ளும்போது மஞ்சள் சேலை கட்டிய மாரியாத்தாவின் பக்தைகள் குலவி எழுப்பி சாமி குத்தமோ என்பதைப் போல பரவசப்படுவது எப்படி நடக்கும்..? ஏன் நடக்கிறது..? அந்த இடத்தில் அந்த சினிமாவின் லாஜிக்கே அடிபட்டு போய்விட்டதே..? ஷங்கருக்கு தோணவில்லையா?

இப்போது மாட்டிக் கொண்டது தமது மைந்தர்கள் என்பதையும் மறந்துவிட்டு அவர்களது தாய்மார்கள் கோஷ்டி மாறியது அவர்களது மூடத்தனமான பக்தியினால் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஷங்கர். அப்படியானால் அவாள்கள் எல்லாம் புத்திசாலிப் பெண்கள்.. நம்ம வீட்டுப் பெண்கள் எல்லாம் முட்டாள்கள் என்கிறாரா..? இதற்கென்ன பதில்..?

வீட்டுக்கு வீடு ஹோம் தியேட்டர் வாங்கிப் போட்டிருக்கும் சினிமாக்காரர்கள் மத்தியில் ஹோம் தியேட்டரில் பாட்டு கேட்கும் இளைய வர்க்கத்தினரை கேவலம்.. ஒரு பெண் கேட்டுவிட்டாள் என்பதற்காக வீட்டையே துவம்சம் செய்யும் ரோபோவின் செயல் வன்முறையில்லையா..? அந்த இளைஞர்களுக்குப் பிடிக்காத கோலத்தை வாசலில் அள்ளித் தெளித்து நடக்க முடியாமல் செய்து வைக்கும் அந்த அக்கிரம அக்கிரஹாரத்துப் பெண்களின் வீட்டை ரோபாவால் என்ன செய்ய முடிந்தது..? ஹா.. ஹா.. இதுதான் ஷங்கரின் சமூக நீதி போலும்..

ரோபோவை முதல் முறையாக அறிமுகப்படுத்தி வைக்கும்போது தானே சிருஷ்டித்தேன் என்று ஏதோ முருகப் பெருமான் ரேஞ்ச்சுக்கு தன்னை உயர்த்திப் பேசும் வசீகரன் டேனி ரோபா ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கேட்டவுடன் படாரென்று பம்முகிறாரே.. ஏன்..? அவர் தயவு இல்லாமல் ரோபாவை மேய்ச்சலுக்குவிட முடியாது என்பதை உணர்ந்து கொண்டுதானே..

அப்படியானால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது அறிவை பொதுவில் நாட்டுடமையாக்காமல் தான் மட்டுமே அனுபவித்து மேலே வரும் பார்ப்பனியத்தனத்தை வைத்துத்தான் வசீகரன் போன்ற விஞ்ஞானிகள் இந்த அகண்ட பாரத தேசத்தையே குத்தகைக்கு எடுத்துக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறாரா ஷங்கர்..?

ஹீரோயினுடன் டிரெயினில் செல்லும்போது ரவுடிக் கும்பலுடன் சண்டைக்கு நிற்கும் ரோபோ போடும் சண்டைக் காட்சியில் யார் முகத்தையும் தெளிவாகக் காட்டாததன் மர்மம் என்ன..? ரோபோவின் மூஞ்சியே காணாமல் போய் கையும், காலும்தான் தெரிந்தது.. ஒருவேளை ஒளிப்பதிவாளர் சரியாகச் செய்யவில்லையோ..?

அதெப்படி மாடர்ன் தியேட்டர்ஸ் காலத்தில் இருந்தே முக்கியமான நேரத்தில் ஏதாவது நேர்ந்து கதாநாயகன் படுத்து விடுகிறான். அல்லது வலிமை குன்றி விடுகிறான். பேட்டரியில் சார்ஜ் இல்லாத நிலைமையில் ரோபோவை கட்டையால் அடிக்கிறார்களே.. ஒரு நட்டு, போல்ட்டு கூடவா தெறிக்காது..? எந்த ஊர் நட்டுய்யா அதெல்லாம்..? சைனா தயாரிப்பா? தைவான் தயாரிப்பா..?

இதில் ஒரு சிரிப்பாய் சிரிக்க வேண்டிய மேட்டர்.. இரும்பு ஆயுதங்கள் எல்லாத்தையும் ரோபோவால் பறிமுதல் செய்ய முடியும் என்று தெரிந்து அவர்கள் கட்டையை எடுத்துக் கொண்டு வருகிறார்களாம். ஒருவேளை ரோபோவையும், ஹீரோயினையும் பாலோ செய்து வந்தார்களா..? இதற்கு பதிலே கிடையாது படத்தில்.

தூக்கி வீசப்படும்போது ரோபாவின் பக்கத்தில் போஸ்ட் கம்பம்தான் இருந்தது. பவர் ஹவுஸ் கிடையாது. பின்பு எங்கிருந்து வந்தது அந்த பவர் ஹவுஸ்? மயங்கிக் கிடக்கும் ரோபா அதைப் பார்த்தவுடன் பட்டென்று தனக்குத்தானே பவரை சார்ஜ் செய்து கொள்கிறதாம்.. இதைவிட கேவலமாக திரைக்கதையை எழுதியிருக்க முடியாது.. படு சொதப்பல்.. அவ்தாரில்கூட அந்த நேரம் முடியப் போகிறது என்பது தெரிந்தவுடன் ஒரு பிரசவ வலி போன்ற துடிப்புடன் பெட்டில் படுக்க ஓடோடி வருவார்கள். அந்த அளவுக்கு நடிப்பை அதில் காட்டியிருந்தார்கள். இதில்..? 

பொதுவாக ஹீரோ தன்னைக் காப்பாற்றிவிட்டால் ஹீரோயின் ஒரு முத்தம் கொடுத்து கையோடு வெளிநாட்டுக்கு அழைத்துப் போய் டூயட் பாடுகின்ற இந்தக் காலத்தில் ரோபோ என்றாலும் அதுவும் ஒரு உயிர் என்பதை மதிக்காமல் வெறும் முத்தத்தோடு நிறுத்தி வைத்து அதனை சிறுமைப்படுத்தியிருக்கும் ஷங்கரை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும்.
 

ரோபோவின் புகுத்தப்பட்ட அறிவுத் திறமை எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதற்காக ஒரு சலூன் கடை சீன் வைத்திருக்கிறார் ஷங்கர். அதிலாவது ஒரு நியாயத்தைக் கடைப்பிடித்தாரா இல்லை. ரோபோவிடம் அங்கேயிருக்கும் புத்தகங்களை எடுத்து படிக்கச் சொல்லி கொடுக்கிறார் கடைக்காரர். அத்தனையும் ஆங்கிலப் புத்தகங்கள். நொடியில் ஸ்கேனிங் செய்து முடித்துவிட்ட ரோபாவிடம் டெலிபோன் டைரக்டரியைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார். அதையும் ஸ்கேனிங் செய்து படித்துவிட, சலூனில் முடி வெட்ட வந்த கஸ்டமர்கள் (கவனிக்க) கஸ்டமர்கள்தான் ரோபோவின் திறமையைச் சோதிக்க விரும்பி கேள்வி கேட்கிறார்களே தவிர, முடி வெட்டும் தொழிலாளர்கள் அல்ல. இங்கேதான் ஷங்கர் தனது வழக்கமான வித்தையைக் காட்டிவிட்டார். முடி வெட்டுறவன், வெட்டுறவன்தான். அவனுக்கு இப்படி அறிவுப்பூர்வமா கேள்வி கேக்குற அளவுக்கெல்லாம் அறிவில்லை. அவன் கேள்வி கேட்கவே கூடாது என்பதை ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாக  திவு செய்திருக்கிறார் ஷங்கர். இது மேல் சாதி மனப்பான்மையின்றி வேறென்ன தோழர்களே..?

தேர்வு எழுதப் போகும் ஹீரோயினுக்கு மைக்ரோபோனில் வெளியில் இருந்து பிட்டு எடுத்துக் கொடுக்கிறாராம் ரோபோ. அந்தச் சமயம் வேறு வேலையே இல்லாத கல்லூரி பிரின்சிபால் மிகச் சரியாக அங்கே வந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு ரோபோ செய்யும் தில்லாலங்கடி வேலையைக் கண்டறிகிறாராம்.  

ரோபோவை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குள் நுழையும் பிரின்சிபால் ஹீரோயினிடம் இது பற்றிக் கேட்க காதில் இருக்கும் மைக்ரோபோனை அலட்சியமாக கழற்றிவிட்டு ரோபோவை யாரென்றே தெரியாது எனக்கு என்று சொல்கிறார்.  ஏன் இந்த இடத்தில் ரோபோவின் பேச்சில் இருந்தே அது ஒரு மறை கழன்ற கேஸ் என்று பிரின்சிபாலுக்குத் தெரியாதா? இத்தனைக்கும் அது மெடிக்கல் காலேஜ்.. ! கடைசீல நாமதான் மறை கழன்ற கேஸுன்னு ஷங்கர் நினைச்சிட்டாரு போலிருக்கு..!
 
வில்லன் டேனி என்பவரும் இதே போன்ற ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் என்பதைக் காட்டினாலும் அவருக்கு வசீகரன் அளவுக்குத் திறமையும், அறிவும், புத்தியும் இல்லை என்பதைக் காட்டிவிட்டு ஆனால் அவர் மட்டும் எப்படி வசீகரனுக்கே ஆசிரியராக இருந்தார் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்ட திரைக்கதைக் குழப்பத்திற்கு ஷங்கர் என்ன பதில் சொல்லப் போகிறார்..?

ரோபோவை விஞ்ஞானிகள் முன்னிலையில் டெமான்ஸ்ட்ரேஷன் செய்து காண்பிக்கச் சொல்லும்போது அதற்கு புகுத்தப்பட்ட அறிவுதான் உள்ளது.. தான் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலும், திறனும் கிடையாது என்பதை பேப்பர் வடிவத்தில் தீஸிஸாக கூடவா சப்மிட் செய்திருக்க மாட்டார்  விஞ்ஞானி வசீகரன்..? அவருடைய ஆராய்ச்சி அறிக்கையைப் படிக்காமலா அந்த விஞ்ஞானிகள் கூட்டம் அங்கே வந்து அமர்ந்திருக்கிறது..? யாரை ஏமாற்றப் பார்க்கிறார் ஷங்கர்..? 

படம் பார்க்க வந்தவர்களில் பாதிப் பேர் வசீகரனைவிடவும் திறமையான விஞ்ஞானிகளாக இருந்திருக்க வேண்டியவர்கள்.. ஏதோ அவர்களது ஜாதகத்தில் எட்டில் சனியும், ஒன்பதில் ராகுவும் இருந்து தொலைத்ததால் கடைசிவரையில் அவர்கள் சாதாரணமானவர்களாகவே தென்பட வேண்டிய கட்டாயம்.. இதுவெல்லாம் ஷங்கரின் ஏமாற்று வேலை..

தானே சிந்திக்கும் ஆற்றலை எப்படி ஸார் கொடுப்பது என்று வீரமாக கேள்வியெழுப்பும் வசீகரன், “உன் பிராஜெக்ட்டை மூட்டைக் கட்டி வைச்சிட்டு ரோபோவை உடைச்சு எடைக்கு எடை பேரிச்சம்பழத்துக்குப் போட்டிரு..” என்று டேனி சொன்னவுடன் கடைசியாக ஒரு வாய்தா வாங்குகிறாரே ஏன்..? அதான் முடியாதுன்னு சொல்லியாச்சுல்ல.. அப்புறமென்ன..?

இந்தக் காட்சியில் டேனி எப்படி அனுமதியே இல்லாமல் சோதனைக் கூடத்திற்குள் நுழைந்து வசீகரனின் எதிரில் வந்து நின்றார் என்பது ஷங்கருக்கே வெளிச்சம். அதற்கு முந்தையக் காட்சிகளில் அவரவர் அடையாளத்தைக் காண்பித்த பின்புதானே கதவு திறந்தது.. செலக்டிவ் அம்னீஷியா.. ஷங்கருக்கேவா?

தானே சிந்திக்கும் ஆற்றலை ஒரு சிப்புக்குள் வைத்து புகுத்தி விடும் திறமை வசீகரனுக்கு இருக்குமானால் அதை ஏன் முதல் ரீலிலேயே செய்து தொலைக்கவில்லை. இதனால் கூடுவதலாக 5 ரீல்கள் வேஸ்ட்டானதுதான் மிச்சம். ஒருவேளை நமக்கு ஒண்ணும், ஒண்ணும் ரெண்டு வாய்ப்பாடு சொல்லித் தருகிறாரோ..?

ஜூனியர் சயின்ட்டிஸ்ட்டுகள் பிச்சைக்காரத்தனமாய் டேனியிடம் கூனி, குனிந்து குறுகி நின்று விஸிட்டிங் கார்டை நீட்டி தங்களுக்கு வாய்ப்பு கேட்பதைப் பார்க்கின்றபோது வசீகரனைப் போன்ற பார்ப்பனீய விதைகள் மட்டுமே அறிவைப் பயன்படுத்தி மேலே வருவதைப் போலவும், அடுத்த நிலையில் இருப்பவர்கள் இப்படித்தான் வளைந்து, நெளிந்து எப்படியாவது ஆள் பிடித்து மேலே வரப் பார்ப்பார்கள் என்று குலத்திற்கே குல நாசம் செய்திருக்கிறார் ஷங்கர்..

தீப்பற்றி எரியும் பில்டிங்கில் இருப்பவர்களைக் காப்பாற்றும் நோக்கமே வசீகரனுக்கு முதலில் இல்லை. தனது கண்டுபிடிப்பான ரோபோவின் புகழை பரப்ப வேண்டும் என்பதற்காகத்தான் உள்ளேயிருப்பவர்களை காப்பாற்றி வரும்படி சொல்லியனுப்புகிறார். காப்பாற்றுவது மட்டுமே அவரது நோக்கம் என்றால் ஏன் டிவி செய்தியாளர்களுக்கு சொல்லிவிட வேண்டும். டேனிக்கு போன் செய்து “டிவியைப் பாருங்க..” என்று எகத்தாளம் செய்ய வேண்டும்..? அவருடைய நோக்கம் அப்பாவி ஜனங்களைக் காப்பாற்றுவது அல்ல. தன்னுடைய கண்டுபிடிப்பை வைத்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளும் அந்த பார்ப்பனீயத்தை செய்வதுதான்.

அரசு அடுக்கு மாடி குடியிருப்புக்களை போன்ற அந்தக் கட்டிடத்திற்குள் எந்த வீட்டில் பாத்டப் கட்டியிருக்கிறார்கள் என்பது ஷங்கருக்கே வெளிச்சம். இப்போது பாத்ரூம் இல்லாத வீடுகளே சென்னையில் ஆயிரம் இருக்கும் சூழலில், இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காட்டி அதில் பட்டப் பகலில் ஒரு தமிழ்ப் பெண் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக குளித்துக் கொண்டிருப்பதைப் போல் காட்டியிருக்கும் இந்த அக்கிரமத்தை திரைக்கதையாக எழுத ஷங்கருக்கு எங்கேயிருந்து மனசு வந்தது..? எந்த வீட்டில் இது சாத்தியம்..?

ரோபோ அந்தப் பெண்ணைத் தூக்கி வந்தவுடன் வசீகரன் தர்மசங்கடத்துடன் ஏன் தூக்கிட்டு வந்த என்று கேட்கும்போது “நீங்கதான தூக்கிட்டு வரச் சொன்னீங்க..?” என்று கீ கொடுத்த பொம்மை போல் பேசும் ரோபோவிடம் “முட்டாள்.. முட்டாள்..” என்று திட்டும் வசீகரன்தானே உண்மையில் முட்டாள். அந்தச் சூழலில் தொலைக்காட்சிகள் அந்தப் பெண்ணை விரட்டி, விரட்டி பதிவு செய்யும் கொடுமைக்கு முன்பாக யாரோ ஒருவரின் துணியை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் போர்த்திவிட்டு கோபப்பட்டுவிட்டால் வசீகரனின் கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி அவர் நல்லவராகிவிட முடியுமா..?

இது போன்ற சந்தர்ப்பங்களில் சராசரியான வருணாசிரமத் தத்துவத்தின்படி கீழ்த்தட்டு மக்கள் செய்கின்ற அந்தச் செயலையே அப்பெண்ணின் மீது திணித்து கற்பு என்பது ரோபாவோகவே இருந்தாலும் ஒன்றுதான். மனிதனாக இருந்தாலும் ஒன்றுதான்.. அம்மணமாக பார்த்துவிட்டான்.. தூக்கிவிட்டான்.. இனி அந்தப் பெண் உயிரோடு இருந்தாலும் செத்தப் பொணம்தான். உயிரோடு இருப்பதற்கு சாவதே மேல் என்ற ஆதிக்கச் சாதியின் அதிகார மனப்பான்மையை அந்தப் பெண்ணின் மேல் திணித்து சாகடித்திருக்கும் ஷங்கரின் மனதுக்குள் இருக்கும் சாதி வெறியை, தமிழர்களாகிய நீங்களெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ரோபோவுக்கு சிந்திக்கும் ஆற்றலைத் திணிக்க இரவு, பகல் பாராமல் உழைக்கும் வசீகரன் அது ஒர்க் அவுட் ஆகிவிட்டதா என்பதைக்கூட செக் செய்யாமல் இருப்பதைக் காட்டும் திரைக்கதை நொண்டியடிக்கிறது. ரோபோவுக்கு கோபம் வருகிறது என்பதை ஹீரோயின் சுட்டிக் காட்டியவுடன்தான் வசீகரனுக்கே இது தெரியும், என்றால் இவரெல்லாம் என்ன விஞ்ஞானி..?

ஒரு மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இருப்பதாலேயே மனித குலம் தழைக்கிறது. வளர்கிறது.. அதனை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதாலேயே இந்தச் சுழற்சி நடக்கிறது என்று கம்யூனிஸ தத்துவாதிகளும், சோத்துக் கட்சி தத்துவவாதிகளும், ஜடாமுடி தத்துவவாதிகளும், சுடுகாட்டில் வசிக்கும் தத்துவவாதிகளும் ஒன்று சேர குரல் எழுப்பியிருக்கும் சூழலில் ஒரு ஜடமாய் இருந்த இயந்திரத்திற்கு சிந்திக்கும் ஆற்றல் வந்தவுடன் அது முதலில் சிந்திப்பது காதல் என்றா சொல்ல வேண்டும்..?

சிக்மண்ட் பிராய்டு மட்டும் இதைக் கேட்டிருந்தாலோ, பார்த்திருந்தாலோ, கூவம் நதியில் குதித்தே செத்திருப்பான். மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இதற்காகவா அத்தனை பெரிய தலையணைப் புத்தகத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள்? வெண்தாடிவேந்தர் மூத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு சாகும்வரையில் ஊர், ஊராகச் சுற்றிக் கொள்கையைப் பரப்பியது இதற்காகவா..? ஐயகோ.. பகுத்தறிவு உலகமே, இந்த ஷங்கருக்கு கொஞ்சம் புத்தியைப் புகட்டக் கூடாதா..?

தன்னைப் படைத்தவனின் காதலி, தனது எஜமானின் வருங்கால மனைவி என்று தெரிந்தும் அவளைக் காதலிக்கத் துணியும் ரோபோவுக்கு அந்தச் சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் என்ன? இல்லாமல் போனால்தான் என்ன..?

“என்னைப் பிடித்த கொசுவைப் நீ பிடித்து வா” என்று அலைய விடும் காதலிகளைப் போல ரோபோவிடம் சொல்ல.. ரோபோ கொசுக்களின் உலகத்திற்குள் நுழைந்து கடிக்கும் கொசு ராணிகளிடம் சவுண்ட்டு விட்டு ஆளைத் தூக்கி வரும் ஜில்பான்ஸ் காட்சியைப் பார்த்தால் இதைவிடவும் காதலை கேவலப்படுத்தும் காட்சியை வேறு எவரும் வைத்துவிட முடியாது என்பது தெள்ளத் தெளிவு..

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பீச்சுக்கு வரும் காதலிகள், “என்னைக் கடிச்ச மூட்டைப்பூச்சியைப் பிடிச்சிட்டு வா..” “கொசுவை அள்ளிட்டு வா..” “கரப்பான்பூச்சியை தூக்கிட்டு வா..” “நாயை கொன்னுட்டு வா..” என்றெல்லாம் கண்டிஷன்களை போட்டால் தற்போதைய காதலர்களின் கதி என்னாவது..? ஷங்கருக்கு காதல் அனுபவம் இல்லாமல் இருந்திருக்கலாம். அதற்காக மற்றவர்கள் காதலிக்கக் கூடாதா என்ன..?

பிரவச வேதனையில் துடிக்கும் ஹீரோயினின் அக்காவின் வயிற்றில் இருக்கும் சிசுவின் உடலைத் தொப்புள் கொடி சுற்றியிருப்பதால் பெரும் ஆபத்து என்று மருத்துவர் சொல்லும்போது ரோபோ தான் காப்பாற்றுவதாகச் சொல்லச் சொல்ல மருத்துவர் மறுக்கிறார்.

திடீரென்று ரோபோ ஆங்கிலத்தில் பதில் சொல்லி தான் அத்தனை அறுவை சிகிச்சை முறைகளையும் படித்து மனப்பாடம் செய்திருப்பதாகச் சொன்னவுடன் மருத்துவர் வாய் மூடி அனுமதிப்பது ஷங்கர் தமிழுக்குச் செய்திருக்கும் எவ்வளவு பெரிய துரோகம் என்பதை உணராமலேயே தியேட்டரில் கை தட்டிவிட்டார்களே இந்த ரசிகர்கள்.

ஆங்கிலத்தில் சொன்னதைத்தானே அதற்கு முன்புவரையிலும் தமிழில் சொன்னார் ரோபோ. அப்போது ஏற்றுக் கொள்ளாத மருத்துவர், ஆங்கிலத்தில் சொன்னவுடன் ஏற்றுக் கொள்கிறார் என்றால் அதற்கென்ன அர்த்தம். இங்கே நம் தாய்த் தமிழுக்கு மரியாதை இல்லை என்றுதானே..

தமிழை செம்மொழியாக்குவதாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்து தன் குடும்பத்தை மட்டும் வளமாக்கிக் கொண்ட உத்தமச் சோழனின் ஆட்சியிலேயே இந்தக் கொடுமை நடக்கிறது என்றால் நமது தமிழ் மொழி தமிழகத்தில் எப்படி வளரும்..? ஷங்கர் ஒரு தமிழினத் துரோகி என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே.. 

ராணுவத்தின் மேஜர்கள் முன்னிலையில் திறமையைக் காட்டச் சொல்லி ரோபோவை அமர்த்திவிட்டு வசீகரன் அல்லல்படும் காட்சியில் தனது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் மறைமுகமாக ரோபோ வசீகரனுக்கு உதவ மறுக்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் காட்சியில் படமே செத்துவிட்டது.

ராணுவத்திற்கு உதவுவதற்காகத்தான் வசீகரன் இதனை தயார் செய்யும் பணியில் இறங்கினார். “ராணுவத்திற்குப் போ.. ராணுவத்திற்குப் போ..” என்று உத்தரவிடும் சிப்பை அவர் ரோபோவின் உடலில் சொருகி வைச்சிருந்தாலே மேட்டர் முடிந்தது. ஆனால் அதில் என்னத்தை சொருகினார் என்று தெரியவில்லை. அது ஹீரோயினை கேட்டு தகராறு செய்ய மேஜர்கள் கோபித்துக் கொண்டு போய் வசீகரனை டென்ஷனாக்கி நம்மையும் டென்ஷனாக்கிவிட்டார்கள். தப்பு யார் மீது..? திரைக்கதை எழுதியவர் மீதுதானே..?

தான் காதலிக்கும் பெண்ணையே தாரை வார்க்கச் சொல்கிறானே என்கிற கோபத்தில் வசீகரன் ரோபோவை அடித்து நொறுக்கும் காட்சியெல்லாம் தேவைதானா..? முறையானதுதானா..? இதற்கும் காதல் தகராறில் சக நண்பனையே போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகும் சக தமிழனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா..? இதுவே தவறு என்னும்போது படைப்பு சார்ந்த புள்ளியில் சமூகத்திற்கு பிரயோசனமாக இருக்கும்வகையில் காட்சியை மாற்றி அமைத்திருக்கக் கூடாதா..?

இல்லையெனில், “உன் லவ்வரை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீயே பார்க்கப் போறடா மவனே..”ன்னு 'அண்ணாமலை' ஸ்டைலில் தொடை தட்டி சவால் விட்டுவிட்டு ரோபா அதனைச் செய்து காட்டியிருந்தால் அதுதான் உண்மையான கதை. ஆனால் இது..?

அடித்து நொறுக்குவதுதான் நொறுக்குகிறார்கள்.. ஜல்லி உடைக்கும் மிஷினில் போட்டு கரைத்துப் போட்டிருந்தால் கதை நகர வாய்ப்பு போய்விடும் என்பதால், பல ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்த காட்சிகளைப் போல் உடைத்தெறிந்த பாகங்கள் தானாகவே சேர்ந்து பிழைத்துக் கொள்வதைப் போல் வைத்திருக்கிறாரே ஷங்கர்.. இந்த விஷயம் வசீகரனுக்குத் தெரியவே தெரியாதா.. தெரியாதெனில் அவர் என்ன விஞ்ஞானி..? நியாயமான்னு நீங்களே போன் போட்டுக் கேளுங்கப்பா..

தன்னை அடித்து நொறுக்கிய பின்புதான் வீரம் வந்து ஹீரோயினை கடத்தும் ரோபோவுக்கு அடிக்கும்வரையில் ரோஷம் வராது என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கும் ஷங்கர் இதன் மூலம் சொல்ல வருவது என்ன..?

அத்தனை ஜனங்களையும் சாகடித்து சுடுகாட்டில் சமாதி கட்டிய பின்பும்கூட இன்னமும் சொரணையில்லாமல்தான் இருக்கிறது தமிழ்ச் சமூகம்.. இந்த லட்சணத்தில் அதே குணத்தை வளர்த்து விடுவதைப் போல இவர் வைத்திருக்கும் திரைக்கதை, தமிழர்களுக்கு எதிரானது என்பதை தோழர்கள் திரும்பவும் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்யாண மண்டபத்தில் இருந்து ஹீரோயினை கடத்தும் காட்சி சின்னப்புள்ளத்தனமாக படமாக்கப்பட்டிருக்கிறது. எகிறியடிப்பது, தூக்கி வீசுவது. சுமோ ஸ்டைலில் மல்யுத்தம் செய்வது, கை, கால்களை உதைப்பது என்றெல்லாம் இல்லாமல் காரை தூக்கி வீசுவது.. காரிலேயே பல்டி அடிப்பது.. என்று மெஷின்தனமாகச் செய்து தமிழர்கள் உடல் உழைப்பையே விரும்ப மாட்டார்கள். 'சோம்பேறித் திலகங்கள்' என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் அண்ணன் ஷங்கரின் மொள்ளமாரித்தனத்தை நாம் கண்டு கொள்ள வேண்டும்.

தனக்குச் சிந்திக்கும் ஆற்றல் வந்துவிட்டதால் தானே ஒரு வசீகரனாக உருமாறி தன்னைப் போன்ற ரோபோக்களை உருவாக்கிக் கொண்டு ஒரு கல்லூரியையே தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளும்வரையில் போலீஸும், வசீகரனும் என்னத்த புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை யாராவது ஷங்கரிடம் கேட்டுச் சொன்னால் உத்தமம்.

தான் உருவாக்கிய படைப்பை அழிப்பதற்கு ஐடியா கொடுக்கும் இடைவேளையில் ஊரையே துவம்சம் செய்யும் ரோபோக்களை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கிறதே இந்த அரசு. இதற்காகவா இவர்களுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்து கோட்டையில் அமர வைத்தோம். இதை எதிர்த்து, போலீஸை எதிர்த்து, ஆட்சியாளர்களின் கொறட்டைவிடும் சப்தத்தை எதிர்த்து ஒரு வரி வசனத்தையாவது ஷங்கர் இதில் வைத்திருக்கிறாரா..? இல்லை.. அவரும் கூட்டணி மாறி குட்டையோடு குட்டையாக மட்டையாகிவிட்டாரா..?

அக்கம்பக்கம் இருக்கும் மின் சப்ளை முழுவதையும் துண்டித்துவிட்டால் பவர் இல்லாமல் செத்து மடிவார்கள் என்று ஐடியா கொடுத்துவிட்டு வசீகரன் மட்டும் தானும் ஒரு ரோபோவாக மாறி உள்ளே நுழைகிறாரே.. இதற்குப் பதிலாக கல்லூரி வாசலிலேயே தன் உயிருக்கு உயிரான காதலியை மீட்க சாகும்வரையில் போராட்டம் என்று திரைக்கதையை மாற்றியிருந்தால்.. தியேட்டருக்கு வந்த கூட்டம், உச்சுக் கொட்டி, கண்ணீர் கொட்டி பாசத்தைப் பொழிந்து கை தட்டி மகிழ்ந்திருக்காதா..? காலையில் சாப்பிட்டுவிட்டு நேராக பந்தலுக்கு வந்து ஒரு மணி நேரம் ஹாயாக படுத்துத் தூங்கிவிட்டு 'தனது உண்ணாவிரத்தால் போர் நின்றது'ன்னு கோயபல்ஸ் பிரச்சாரத்தையெல்லாம் தாங்கின நாடாச்சே இது..? இதைவிடவா பெரிய 'அல்வா'வா இருந்திரப் போகுது..?

தான் உண்மையான வசீகரன்தான் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தன் கையை கீறிக் கொண்டு ரத்தத்தைச் சிந்த விடும் முட்டாள்தனத்தை செய்யும் வசீகரன், அதற்குப் பதிலாக அகில இந்தியாவும் திரும்பிப் பார்க்கும்வகையில் ஹீரோயினுடன் லிப் டூ லிப்பாக கிஸ்ஸடித்து எலெக்ட்ரோ எனர்ஜியை பாஸ் செய்திருந்தால்.. 'யூடியூப்பில்' இந்த வருடம் அதிகமாக தேடப்படும் காட்சி என்ற சாதனையையாவது அது தொட்டிருக்குமே.. விட்டுவிட்டாரே ஷங்கர்..

இந்த கிஸ் கொடுத்திருந்தால் அந்த ரத்தம் சிந்தியிருக்காது. ரத்தம் இல்லாது போயிருந்தால் நிஜ ரோபோ அங்கே வசீகரன் வந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கவே முடியாதே.. எங்கே போனது ஷங்கரின் புத்தி..?

தானும் ஹீரோயினும் சந்தித்துப்பது கேமிராவில் பதிவாகாமல் இருக்க.. அங்கேயிருக்கும் ஒரு ரோபோவின் ஐ.டி.யை உருவி கேமிராவில் சொருகி ஆஃப் செய்வது எவ்வளவு மடத்தனம். ஒரு ரோபோ செயல் இழந்து இருப்பதை கவனிக்க மாட்டார்களா..? அந்த அளவுக்கு முட்டாளா பாஸ் ரோபோ..? என்ன கொடுமைய்யா இது..?

வசீகரன் உள்ளே வந்திருப்பதை அடையாளம் கண்டு கொண்ட ரோபோ, அவரைக் கண்டுபிடிக்க பரேடு எடுப்பதையும், அதில் தலையைச் சுற்ற வைத்து வசீகரனைக் கண்டுபிடிப்பதும் மகாதேவி காலத்துக் கதை.. இந்தத் தலை சுற்றல் டெக்னிக்கை முதல் முறையிலேயே கண்டுபிடித்திருந்தால் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடியே வீட்டுக்குக் கிளம்பியிருக்கலாம்..

மிகச் சரியாக அந்த நேரத்தில்தான் அத்தனை ரோபோக்களுக்கும் சார்ஜ் குறையத் துவங்கி சொத்தென்று கீழே விழுவதாக வைத்திருப்பது காமெடி. அதற்குப் பதிலாக யாராவது ஒரு ரோபோ “ஐயோ முருகா.. எனக்கு பவர் போகப் போகுது.. யாராவது பவர் கொடுங்க.. பவர் கொடுங்க..” என்று கட்டிடம் முழுவதும் கதறியபடியே ஓட வைத்திருந்தால் என்னம்மா டென்ஷன் கூடி மக்களுக்கு பாவம் பொறந்திருக்கும்.. ஷங்கருக்கு ஒண்ணும் தெரியலப்பா..

கட்டிடத்தைச் சுற்றி போலீஸை ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிறுத்தி வைத்து சுட வைத்து வேடிக்கை பார்க்கிறார் வசீகரன். எத்தனை கிலோ ரவைகள் வேஸ்ட்டு..? அதுதான் இரும்புக் கம்பியால் ஆனதுன்னு முதல் காட்சியிலேயே சொல்லியாச்சுல்ல.. அப்புறம் எதுக்கு துப்பாக்கி..? யார்கிட்டப்பா காது குத்துறாரு இந்த ஷங்கரு..?

அப்புறம் அந்த கிராபிக்ஸு.. ஒரு கோணம், இரு கோணம், முக்கோணம், நாலு கோணம், அறுகோணம்ன்னு பத்தாம் கிளாஸ்ல கணக்குல படிச்ச டிஸைன், டிஸைன்லேல்லாம் நொடிக்கு நொடி தப்பிக்கிறதை எத்தனை தமிழ்ப் படத்துலதான் பார்க்குறது.. பார்த்து, பார்த்து சலிச்சுப் போனதையே திருப்பித் திருப்பிப் பார்த்து டாஸ்மாக் தண்ணிச் சரக்கு மாதிரி சலிச்சுப் போச்சுப்பா..

இத்தனை பேரு ஊருல செத்திருக்கானுகளே.. உடனே மிக், சோயுஸ் டைப் விமானப் படை விமானத்தையெல்லாம் கொண்டாந்து டஜன் கணக்குல குண்டை போட்டிருந்தாலே போதுமே.. அவ்ளோவ் செலவு பண்ணி கிராபிக்ஸ் செஞ்சதுக்கு விமானத்தை வாடகைக்கு எடுத்த செலவு எவ்வளவோ மிச்சமாயிருக்கும்.. இதெல்லாம் யார் வூட்டுக் காசு..? ஷங்கர் அவரோட காசாயிருந்தா இப்படி செலவு பண்ணியிருப்பாரா..?

அதுலேயும் ஒரு காமெடியைப் பாருங்க.. ஹெலிகாப்டரை கொண்டாந்து அதை வைச்சுக் கொல்றாங்களாம்.. ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கின உடனேயே அடுத்தவன் சுதாரிச்சு ஓடிருக்க வேணாம். அவனும் சிரிச்சுக்கிட்டே தானா வந்து விழுந்து சாகுறான்.. கொஞ்சமாவது யோசிக்க வேணாமா..?

அப்படியும் விடாம வசீகரன் நம்மகிட்ட காமெடி பண்றாருப்பா.. டேனி செஞ்ச சிப்பை செயலிழக்க வைக்க தன்னோட கம்ப்யூட்டர்ல வேலை பண்றாருப்பா.. அதை முன்னாடியே செஞ்சிருக்கலாமே சாமி.. எம்புட்டு பேருக்கு வேலை மிச்சமாயிருக்கும். அதென்ன அல்லா டைரக்டரும் கடைசி சமயத்துல மட்டும் மூளையை யூஸ் பண்றாங்க..?

ரோபோவோட பவரை பிடுங்குறதுக்கு ஒரு சாப்ட்வேரை அள்ளிவிட்டு அதை மயக்கி அப்புறமா டேனியோட அக்கிரம குணம் வாய்ந்த சிப்பை உருவிட்டு வசீகரன் பெருமூச்சுவிடும்போது நமக்கும் கொஞ்சம் மூச்சு வருது. அப்பாடா.. சாமி.. இப்பவாவது விட்டாங்களே தப்பிச்சோம்டா சாமி.. உண்மையா இந்த இடத்துல கலாநிதிமாறனுக்குத்தான் பெரும் நிம்மதியா இருந்திருக்கும். இத்தோட விட்டதடா சனியன்னு நினைச்சு சந்தோஷப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.

அதான் ஆளை பிடிச்சாச்சுல.. இந்தத் தடவை சுக்கு நூறாக்கி பட்டுன்னு பேரிச்சழம் பழத்துக்கு எடைக்குப் போடாம.. மறுபடியும் அதுக்கு உசிரை கொடுத்து கோர்ட்டுக்கு கொண்டாந்து நிறுத்திட்டாங்க. இப்ப எப்படிடான்னா நல்ல மனசுள்ள சிப்பை உள்ளுக்குள்ள போட்டுட்டாங்களாம்.. இன்னாமா ரீல் விடுறாருய்யா ஷங்கரு..? இதைத்தான் நான் சின்னப்புள்ளைல ரத்னபாலா புத்தகத்துல படிச்சேன்.. இப்ப விஷூவலா பார்க்குறேன். அம்புட்டுத்தான் வித்தியாசம்..

உண்மையா இதுக்குத் தண்டனை கொடுக்கணும்னா வசீகரனுக்கும், அவருடைய ஆராய்ச்சிக்கு உதவிகள் செய்த இந்திய அரசுக்கும்தான் கொடுக்கணும். நம்மளோட அதிகார வர்க்கத்தைப் பத்தித்தான் நமக்கே தெரியுமே..? ஊர்ல அல்லாரும் சாகக் கெடக்குறானுங்கய்யா.. பூட்டி வைச்சிருக்கிற அரிசியை எடுத்துக் கொடுய்யான்னா அதுக்கே ஆயிரத்தெட்டு விளக்கம் சொல்ற பயலுவ.. இதெல்லாம் ஒரு விஷயமாங்கிற மாதிரி அவனுக தப்பிச்சு வசீகரனை மாட்டி விடுறானுக..

வசீகரனாவது கடைசிக் கட்டத்துல இதைச் சொல்லித் தொலைய வேணாம். அவரும் தனது 'குல புத்தி' காரணமாய், அதிகார வர்க்கத்தின் கூலிப் படைத் தலைவனாய் செயல்பட்டு கமுக்கமா இருந்தர்றாரு.. கடைசில ரோபோ நெஞ்சுல கடப்பாறையை இறக்கிர்றாங்க.. அதை ஒழிச்சுக் கட்டணும்ன்னு..

எங்க மறுபடியும் அடிச்சு நொறுக்குன்னா தியேட்டர்ல சீட்டை ரசிகர்கள் கிழிச்சு எறிஞ்சிருவாங்கன்னு சந்தேகப்பட்டு அதுக்கு ஒரு சென்டிமெண்ட் சீனு.. 'புதியபறவை' கிளைமாக்ஸ்ல சிவாஜி மூக்கை உறிஞ்சிட்டு 'பெண்மையே நீ வாழ்க'ன்னு சரோஜாதேவிகிட்ட சொல்லிட்டுப் போற மாதிரி.. ஒரு நாலு பக்க டயலாக்கைச் சொல்லிக்கிட்டே ரோபோ தானே தன்னோட உடல் பாகங்களை கழட்டி வைச்சிட்டு உசிரை விடுற மாதிரி எடுத்து நம்ம உசிரை எடுத்திட்டாருய்யா இந்த ஷங்கரு.. இப்படியெல்லாம் சீன் வைக்கணும்னு எவன் அழுதான்..?

அதான் படம் முடிஞ்சிருச்சே.. வீட்டுக்குக் கிளம்பலாம்னு பார்த்தா கொடுமை கொடூரமா அதுக்கு மேலதான் ஆடுச்சு.. எண்ட் டைட்டில் போகுது.. போகுது.. போய்க்கிட்டே இருக்குது.. அதையெல்லாம் பார்த்துட்டுத் திரும்பிப் பார்த்தா தியேட்டர்ல ஒருத்தருமே இல்லை. நான்தான் கடைசியா நிக்குறேன்..

இத்தனை பேர் ஹெல்ப் பண்ணித்தான் ஷங்கர் இந்தப் படத்தை டைரக்ட் செஞ்சிருக்காருன்றதை மட்டும் ஏன் நம்ம மகாஜனங்க புரிஞ்சுக்காம, ஷங்கர் ஹாலிவுட் டைரக்டர்.. கலிபோர்னியால ஹாலிவுட் சிட்டில பொறந்திருக்க வேண்டியவரு.. தெரியாத்தனமா நம்மூர்ல பொறந்து தொலைச்சிட்டாரு. அங்க பொறந்திருந்தா அவர் இந்நேரம் இருக்குற நிலைமையே வேறய்யாத்தான் இருக்கும்னு கிளி ஜோஸியக்காரன் மாதிரி கொடுத்த காசுக்கு மேலேயே கூவுறானுங்களேப்பா.. அவனுகளையெல்லாம் என்னன்னு சொல்றது..? 

ஹீரோவா நடிச்ச ரஜினின்ற பையன் நல்லாத்தான் நடிச்சிருக்காரு.. வில்லன் ரோபோ ரஜினியும் இவரேதான். ஆனாலும் இதைவிட அசத்தல் நடிப்பை நெற்றிக்கண் படத்துலேயும், மூன்று முகம் படத்துலேயும் பார்த்துட்டதால இது ரொம்ப அசத்தலா இல்ல.. வசீகரனை கண்டுபிடிச்ச சந்தோஷத்துல துள்ளாறாரு பாருங்க ரோபோ ரஜினி.. அங்கதான் ஷங்கரோட குறுக்குப் புத்தி மறுபடியும் எந்திரிச்சு வருது.. அதான் கண்டுபிடிச்சாச்சுல.. படார்ன்னு போட்டுத் தள்ள வேண்டியதுதானே.. அதை விட்டுட்டு என்னாத்துக்கு அப்படியொரு பில்டப்பான சிரிப்பு? இந்த இடத்துல திரைக்கதைல கோட்டை விட்டதாலதான் கடைசியா அவரே மண்டையைப் போடுறாரு..

தனது மகளைவிட பதிமூணே வயசு கம்மியான பொண்ணுகூட ஜோடி போட்டு ஆடியிருக்காரேன்னு சொல்றவங்க மொதல்ல ஷங்கரை மட்டும் இதுக்கு குத்தம் சொல்லக் கூடாது. தியேட்டருக்கு வந்திருந்த அத்தனை தமிழர்களும் அந்தப் பொண்ணோட குளோஸப் காட்சிகளிலெல்லாம் வாய்ல ஜொள்ளு வடியறதுகூட தெரியாம வாயைப் பொளந்து வைச்சிக்கிட்டிருந்தாங்கன்னா பார்த்துக்குங்க.. அப்போ தமிழர்களின் இந்த அப்பாவித்தனத்தை தனக்கு ஆயுதமாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று படத்தை இயக்கியிருக்கும் ஷங்கர் நிச்சயம் ஒரு தமிழினத் துரோகிதான்.

சரி.. அந்தப் பொண்ணாச்சும் கல்யாணமான, லட்சணமான பொண்ணா நடிச்சுத் தொலையக் கூடாது.. மொதல்ல அது நடிக்க வந்திருக்கவே கூடாது. கல்யாணமாகி மூணு வருஷமாகப் போவுது. ஒழுங்கா, லட்சணமா இந்துத்துவா பொண்ணு மாதிரி அடக்க, ஒடுக்கமா ரெண்டு புள்ளைய பெத்துப் போட்டோமா.. அதுகளை வளர்த்தோமான்னு இல்லாம இன்னாத்துக்கு இப்படி கண்டவங்களோட இன்னமும் ஆடிக்கிட்டிருக்கிறது.. வெட்கமா இல்லை..? கண்றாவி..

ஜொள்ளு விடுற தமிழர்களுக்குத்தான் சூடு, சொரணை இல்லைன்னா நடிக்க வைச்சவங்களுக்காச்சும் இருக்க வேணாம்.. என்னமோ போங்க.. எனக்குத் தெரிஞ்சு கல்யாணமாகியும் மார்க்கெட் குறையாம இருக்குற ஒரே நடிகை, இன்னிக்கு இந்தியாலேயே இந்தப் பொண்ணுதான்.. ஒருவேளை சரஸ்வதியின் நெற்றிப் பொட்டில் இருந்து பிறந்திருப்பாரோ..?

'ராவணன்' படத்துல அங்கிட்டும், இங்கிட்டுமா பொத்தி, பொத்தி காமிச்சிட்டு வந்துட்டு கடைசி கிளைமாக்ஸ்ல மொத்தமா காட்டி பூகம்பத்தையே ஏற்படுத்தின மாதிரி இதுல ஒரு சிங்கிள் சீனுல வசீகரனும், அந்தப் பொண்ணும் கலாபவன் மணிகிட்ட தப்பிச்சு வந்து மூச்சு வாங்குறதுக்காக குனிஞ்சு நிக்கும்போது.. தியேட்டர்காரல அத்தனை ஆம்பளைங்களும்விட்ட பெருமூச்சுல தியேட்டரே நாறிருச்சு.. இதுக்காகவெல்லாம் ஷங்கர் மேல ஈவ்டீஸிங் கேஸ் போட முடியாதா..? என்ன கொடுமைடா சாமி இது..?

எப்படியும் தத்தக்கா பித்தக்கா டான்ஸ்தான் ஆடப் போறாங்க.. இதை மடிப்பாக்கத்துல ஆடினா என்ன? மால்டால ஆடினா என்ன..? காசு.. காசுதான.? அப்படியென்ன ஆடுனாங்க.. கிளிமாஞ்சரோ பாட்டு மட்டும்தாங்க கேக்குறதுக்கு நல்லாயிருந்தது.. ரோபோ பாட்டு பார்க்குறதுக்கு நல்லாயிருந்தது. இதுல மைக்கேல் ஜாக்ஸன் வேடத்துல வசீகரன் ஆடுற டான்ஸை பார்த்து என்னா கைதட்டலு..? இத்தனை வயசுக்கப்புறம் இப்படியெல்லாம் டான்ஸ் ஆடி இவர் தமிழ்ச் சினிமாவைக் காப்பாத்தலைன்னு எவன் கேட்டது..? ஷங்கருக்காவது இது தோணியிருக்க வேணாம்..?

'தளபதி' படத்துல இந்த ஹீரோவுக்கு எத்தனை குளோஸப் ஷாட் வைச்சு அசத்தியிருந்தாரு அந்த டைரக்டரு.. அப்படியொரு சூப்பர் குளோஸப் ஷாட்டாவது இதுல உண்டா..? இருக்குற எல்லாத்தையும் அசமஞ்சா, மைலாப்பூர் அசமஞ்சு மாதிரி தேமேன்னு நிக்குறாரு ஹீரோ.. எடுக்கத் தெரியாம எடுத்தா இப்படித்தாங்க ஆவும்..

ஏதோ 'தமிழ்', 'தமிழு'ன்றாங்களே.. ஹீரோகூட எல்லா மேடையிலேயும் 'என்னை வாழ வைச்ச தமிழகத்து ரசிகப் பெருமக்களே'ன்னுதான் சொல்வாராம்.

இதுல வர்ற பாட்டுல தமிழ் வரிகள் பட்டிருக்கும் பாட்டைப் பார்த்தா அந்த முருகனுக்கே அடுக்காது சாமிகளா..?

“எஃகை வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி..”

- இப்படி போகுது 'புதிய மனிதா' பாட்டு. இத்தனைக்கும் பாட்டை எழுதினவரு கவிப்பேரரசாம். தமிழ் வாழுதுப்பா..

இந்தப் பாட்டுலேயே இன்னொரு கூத்தைக் கேளுங்க..

“ரோபோ ரோபோ
பழ மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி
தமிழ் அல்லவா?”

- அப்படீங்கிறாரு கவிப்பேரரசு.. இதைவிட என்ன கேவலம் வேணும் தமிழுக்கு.. அன்னைத் தமிழுக்கு.. தமிழ்த் தாய் என்றெல்லாம் பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு சமமாக மரியாதை கொடுத்து வரும் தாய்த் தமிழகத்திலேயே ஒரு கவிஞர், 'தந்தை மொழி' என்று உளறித் தொலைத்திருக்கிறார்.. இதையும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஹோக்கு பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோக்கு பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

- இதுவும் பாட்டுதான் தங்கங்களே.. 'காதல் அணுக்கள்' பாட்டுக்கு நடுவுல வருது.. இதையும் நம்ம கவிப்பேரரசுதான் எழுதியிருக்காரு.. 'படிக்கிறது இராமாயணம்.. இடிக்கிறது பெருமாள் கோவிலாம்..' அப்படித்தான இருக்கு இது..?

You want to seal my kiss
Boy you can't touch this
Everbody Hyptonic.. Hyptonic
Super sonic.
Super star can't can't can't get this..

- இப்படித்தாம்மா தொடங்குது 'இரும்பிலே ஓர் இதயம்'ன்ற பாட்டு. இதை எழுதினது கவிப்பபேரரசோட புத்திரன் கார்க்கியாம்..

தமிழ்ச் சினிமாவோட தலைப்பு தமிழ்ல வைச்சாத்தான் தமிழ்நாட்டுல தமிழ் வளரும்ன்றது இப்போதைய உத்தமச் சோழனின் அரிய கண்டுபிடிப்பு. அப்படி வைச்சு தமிழை வளர்க்கப் போறவரு இந்தப் பாட்டையும் கேட்டுப்புட்டுத்தான் புல்லரிச்சுப் போய் தியேட்டர் வாசல்ல கொன்னுப்புட்டாங்கன்னு பாராட்டித் தள்ளிட்டுப் போயிருக்காரு..

“எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா?
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா?”

- இப்படி கொஞ்சம் இலக்கியத்தை உள்ளே வைத்து கூடவே ஆங்கிலத்தில் அடுக்கு மொழியையும் அள்ளி வீசி என்ன பாட்டுன்னே புரியாத அளவுக்கு தமிழைக் கொலை செய்வதற்குத் துணை போயிருக்கிறார் ஷங்கர்..

“எந்திரா.. எந்திரா..
மேகத்தை உடுத்தும்
மின்னல்தான் நானென்று
ஐஸுக்கே ஐஸு வைக்காதே..”

-- இப்படி கவிப்பேரரசின் ஜொள்ளு 'அரிமா அரிமா' பாடலிலும் தொடர்கிறது.

இதே பாடலில் வைரமுத்துவின் ஜொள்ளு கொஞ்சம் ஓவராகி,

“உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே
பந்தி நடத்து
கட்டில், இலை போட்டு..”

-- 'யு சர்டிபிகேட்' என்னும் கர்மத்தையும் வாங்கிக் கொண்டு இப்படி கண்டதையும் எழுதி வைத்து அதனை நாங்கள் கேட்டு, பார்த்து... இதுக்கா குடும்பத்தோட வந்து இந்தப் படத்தை பார்க்கச் சொல்றீங்க..? ஷங்கரு.. ஏனப்பா இப்படி கொடுமை பண்ற..?

கொடுமை இத்தோட விட்டுச்சா? இல்லையே..?

“கிளிமாஞ்சாரோ-மலை
கனிமாஞ்சாரோ-கள்ளக்
குழிமாஞ்சாரோ
யாரோ யாரோ
மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பையக்
கொழஞ்சதாரோ யாரோ.. யாரோ..”

- இப்படி கண்ட கர்மத்தையும் வைச்சு பாட்டெழுதி இடுப்பொடிய ஹீரோயினை ஆட விட்டு “அம்மா வாங்க..” “ஐயா வாங்க..” “அண்ணா வாங்க..” “அக்கா வாங்க..” “தங்கச்சி வாங்க”ன்னு வெத்தலை பாக்கு வைச்சுக் கூப்பிடுறதுக்கு எப்படிய்யா இவங்களுக்கு மனசு வந்தது..?

“ஏவாளுக்கு
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா..
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா..?”

- அடங்கொக்கா மக்கா.. புருஷன்காரன் அபிஷேக்பச்சனுக்குகூட இப்படியொரு ஐடியா தோன்றிருக்காதுப்பா.. கவிஞர் விஜய் போட்டுத் தாக்கியிருக்காரு..

இப்படியெல்லாம் அடுத்தவன் பொண்டாட்டியை பாராட்டி எழுதி, வாழ்த்திப் பேசிட்டு சூப்பர்ன்னு சொன்னா எப்படிங்க.. இது மாதிரி நான் ஒரு கவிதை எழுதி பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்ட கொடுக்குறேன்.. எது நடந்தாலும் நீங்க வந்து பஞ்சாயத்து பண்ணுவீங்களா ஷங்கர் ஸார்..?

பாருங்க.. இம்புட்டு அக்கிரமத்தையும் செஞ்சுபோட்டு அதெல்லாம் கவிஞர்கள் எழுதினது.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லாத மாதிரி பேசுறாரே ஷங்கரு.. இதைப் பாடுறதுல முக்கால்வாசி பேரு நம்மாளுக இல்லை.. அங்கதான் இருக்கு ஷங்கரோட மேல்சாதி திமிரு... 

எடுக்கிறது தமிழ்ப் படம்.. அத்தனையும் தமிழர்களின் காசு.. ஆனா அள்ளிட்டுப் போறது மட்டும் வேற வேற ஆட்களா..? விடக் கூடாது கண்ணுகளா.. இந்த ஷங்கரோட சட்டையைப் பிடிச்சு உலுக்குற உலுக்குல இன்னொரு தடவை இது மாதிரி ஹாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைக்கப் போற படம்ன்னு டயலாக்கே அவரு பேசக் கூடாது.

எனக்குத் தெரிஞ்சு கிட்டத்தட்ட கால்வாசியை மட்டும் பிட்டு வைச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. முடிஞ்சவங்க.. வேணும்கிறவங்க.. பொறுக்கிக்குங்க..

அப்படியே விட்டுறக் கூடாது.. ச்சும்மா கும்முற கும்முல ஷங்கர் திரும்பவும் பழையபடி சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன், எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல கஞ்சா விக்கவே போயிரணும்.. கோடம்பாக்கத்துலயே இருக்கக் கூடாது.

ரோபோ ரஜினி திரும்பவும் பெங்களூர்ல கண்டக்டர் வேலைக்கே போயிரணும்.. இல்லாட்டி ஜோல்னா பையை மாட்டிக்கின்னு இமயமலை ஏறிரணும்.. திரும்பி வரப்படாது.

அப்புறம் எல்லாம் நம்ம ராஜ்யந்தான்.. நாம என்ன மாதிரி படமெடுத்தாலும் இதே மாதிரி முதல் நாளே மக்கள் கூட்டம் அலை மோதும்.. நாலு நாளைக்கு உலகம் முழுக்க அட்வான்ஸ் புக்கிங் செஞ்சிருவாங்க.. 2000 தியேட்டர்ல ரிலீஸ் செஞ்சாலும் இன்னும், இன்னும்ன்னு தியேட்டர்காரங்க கியூல வந்து நிப்பாங்க.. போட்ட காசுக்கு மேல 3-வது நாளே நாம காசு பார்த்திரலாம். அப்பவும் இதே தமிழனுங்க 120 ரூபா டிக்கெட்டை 500 ரூபான்னு கொடுத்தாலும் வந்து பார்ப்பானுங்க.. ஏன்னா இவனுங்க சூடு, சொரணையே இல்லாதவனுங்க..!

வாழ்க தமிழகம்..!!

வளர்க தமிழ்..!!

163 comments:

PARAYAN said...

SOOOOOOPER!
EXCELLENT REPLY TO 'SELF PROCLAIMED GENIUSES'& CRITICS WHO HAVE NOT SEEN A FILM ROLE IN LIFE , BUT ASSUME QUALIFICATION TO CRITICIZE A MOVIE.

நசரேயன் said...

அண்ணே படிச்சிட்டு பின்னூட்டம் போட ரெண்டு நாள் ஆகும் பரவா இல்லையா ?

நசரேயன் said...

எழுத்திலே சிகப்பும், நீலமும் இருக்கே .. நீங்க நீலத்துக்கு பதில் சொல்லுறீங்களா சிகப்பிலே .. இல்ல சிகப்புக்கு பதில் சொல்லுறீங்களா நீலத்திலே

இளங்கோ said...

Annaaaaaaaa.. ah
சரணம் அண்ணா. பாதி தான் படிச்சிருக்கேன், மீதி நாளைக்கு படிக்கிறேன். :)

கோழை said...

"தாவு தீர்ரது தாவு தீர்ரது" என்னு கேள்விப்பட்டு இருக்கேன்... இதை படிச்சாப்பிறகுதான் அப்படின்னா என்ன அர்த்தம் என்னு தெரிஞ்சுக்கிட்டேன்.... 4 பிரேக் எடுத்து ஒரு மாதிரி படிச்சு முடிச்சாப்பிறம் பார்த்தா 4 பின்னுட்டம் போட்டுட்டாங்க... எம்ப்பா பின்னுட்டம் போட்ட கண்ணுங்களா மனசாட்சியத்தொட்டு சொல்லுங்க உண்மையிலேயே முழுசா படிச்சீங்களா??

PARAYAN said...

எழுத்து கூடி படிச்சுக்கிடிருந்தா எப்புடி 'மீ தி பர்ஸ்ட்' ஆக முடியும்?
தலைவர் மாறி ஸ்கேன் பண்ணுங்கப்பூ!

முசமில் இத்ரூஸ் said...

Arumaiyaana padhivu endhiran kuritha padhivugalil sirandha padhivu idhuthaan.....superrrrrrrr!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யம்ம்ம்ம்மா....எம்புட்டு பெரிய்ய்ய்ய்ய பதிவு... படிச்சிட்டு அடுத்த வாரம் வாரேன், ஒரு வாரம் ஆபிசுக்கு லீவு சொல்லனும்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[PARAYAN said...
SOOOOOOPER! EXCELLENT REPLY TO 'SELF PROCLAIMED GENIUSES'& CRITICS WHO HAVE NOT SEEN A FILM ROLE IN LIFE , BUT ASSUME QUALIFICATION TO CRITICIZE A MOVIE.]]]

நன்றிகள் ஸார்.. உங்களுடைய வேகத்திற்கு எனது சல்யூட்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நசரேயன் said...
அண்ணே படிச்சிட்டு பின்னூட்டம் போட ரெண்டு நாள் ஆகும் பரவாயில்லையா?]]]

மெதுவா வாண்ணே.. பிளாக் எங்க ஓடிரப் போகுது..? இங்கிட்டுத்தான இருக்கப் போகுது..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நசரேயன் said...
எழுத்திலே சிகப்பும், நீலமும் இருக்கே. நீங்க நீலத்துக்கு பதில் சொல்லுறீங்களா சிகப்பிலே. இல்ல சிகப்புக்கு பதில் சொல்லுறீங்களா நீலத்திலே..]]]

அப்படியில்லை.. வேறு வேறு காட்சிகள் என்பதற்கான குறியீடு அவை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இளங்கோ said...

Annaaaaaaaa.. ah
சரணம் அண்ணா. பாதி தான் படிச்சிருக்கேன், மீதி நாளைக்கு படிக்கிறேன். :)]]]

ஓகே..! காத்திருக்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கோழை said...

"தாவு தீர்ரது தாவு தீர்ரது"ன்னு கேள்விப்பட்டு இருக்கேன். இதை படிச்சாப் பிறகுதான் அப்படின்னா என்ன அர்த்தம் என்னு தெரிஞ்சுக்கிட்டேன்.... 4 பிரேக் எடுத்து ஒரு மாதிரி படிச்சு முடிச்சாப்பிறம் பார்த்தா 4 பின்னுட்டம் போட்டுட்டாங்க. எம்ப்பா பின்னுட்டம் போட்ட கண்ணுங்களா மனசாட்சியத் தொட்டு சொல்லுங்க உண்மையிலேயே முழுசா படிச்சீங்களா??]]]

ஹா.. ஹா.. அண்ணேன் சத்தியமா முழுசையும் படிச்சிட்டுத்தான் போட்டிருக்காங்க.. ரெண்டு பேரைத் தவிர..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[PARAYAN said...
எழுத்து கூடி படிச்சுக்கிடிருந்தா எப்புடி 'மீ தி பர்ஸ்ட்' ஆக முடியும்? தலைவர் மாறி ஸ்கேன் பண்ணுங்கப்பூ!]]]

ஆஹா.. உங்க ஸ்பீடு இதுதானா..? அப்போ நிதானமான படிப்பு எப்பங்கண்ணா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[முசமில் இத்ரூஸ் said...
Arumaiyaana padhivu endhiran kuritha padhivugalil sirandha padhivu idhuthaan. superrrrrrrr!!!]]]

நன்றி முசமில் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
யம்ம்ம்ம்மா. எம்புட்டு பெரிய்ய்ய்ய்ய பதிவு. படிச்சிட்டு அடுத்த வாரம் வாரேன், ஒரு வாரம் ஆபிசுக்கு லீவு சொல்லனும்!]]]

எப்ப வேண்ணாலும் வந்து பின்னூட்டம் போடுங்கண்ணே. ஆனா வராமல் மட்டும் இருந்திராதீங்க..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல கஞ்சா விக்கவே போயிரணும்.. கோடம்பாக்கத்துலயே இருக்கக் கூடாது.///

அப்பிடியா? வேற என்னென்ன (!) பண்ணிக்கிட்டு இருந்தாரு டாகுடரு ஷங்கரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஏவாளுக்கு
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா..
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா..?”///

வைரமுத்துவுக்கும் சரி, ஷங்கருக்கும் சரி ஆலிவ் பழம் டேஸ்ட் எப்பிடி இருக்கும்னு தெரியாதுன்னு நெனக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இதே பாடலில் வைரமுத்துவின் ஜொள்ளு கொஞ்சம் ஓவராகி, ///

ஆமா அந்தாளு ஜீன்ஸ் படத்துலேயே 'சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்' ன்னு இல்லாததப் பத்தியும் ஜொள்ளு விட்டாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எப்படியும் தத்தக்கா பித்தக்கா டான்ஸ்தான் ஆடப் போறாங்க.. இதை மடிப்பாக்கத்துல ஆடினா என்ன? மால்டால ஆடினா என்ன..? காசு.. காசுதான.? அப்படியென்ன ஆடுனாங்க..////

நல்லவேளை புதுசா ட்ரைப் பண்றோம்னு எதையாவது விபரீதமா பண்ணாம வுட்டானுங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இப்படி கண்டவங்களோட இன்னமும் ஆடிக்கிட்டிருக்கிறது.. வெட்கமா இல்லை..? கண்றாவி..///

எல்லாம் காசு சார் காசு! காசுக்குகாக என்னென்னமோ....... சரி விடுங்க!

கார்க்கி said...

முடியலண்னே.. இத மட்டும் அந்த சலூன் கடைக்காரர் ரோபோகிட்ட கொடுத்திருந்தா, நிம்மதியா ரஜினிக்கு முடிவெட்டியிருக்கலாம்.. ஜஸ்ட் மிஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஹீரோவா நடிச்ச ரஜினின்ற பையன் நல்லாத்தான் நடிச்சிருக்காரு.. வில்லன் ரோபோ ரஜினியும் இவரேதான். ஆனாலும் இதைவிட அசத்தல் நடிப்பை நெற்றிக்கண் படத்துலேயும், மூன்று முகம் படத்துலேயும் பார்த்துட்டதால இது ரொம்ப அசத்தலா இல்ல.. ///

ஆமா சார் நம்ம அலெக்ஸ்பாண்டியன் மாதிரி வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அப்படியும் விடாம வசீகரன் நம்மகிட்ட காமெடி பண்றாருப்பா.. டேனி செஞ்ச சிப்பை செயலிழக்க வைக்க தன்னோட கம்ப்யூட்டர்ல வேலை பண்றாருப்பா.. அதை முன்னாடியே செஞ்சிருக்கலாமே சாமி.. எம்புட்டு பேருக்கு வேலை மிச்சமாயிருக்கும். அதென்ன அல்லா டைரக்டரும் கடைசி சமயத்துல மட்டும் மூளையை யூஸ் பண்றாங்க..?///

என்ன இப்பிடிக் கேட்டுபுட்டீங்க, அப்புறம் எப்பிடி 150 கோடிய செலவு பண்றது?

தீப்பெட்டி said...

பின்னிட்டீங்க பாஸ்..

முழுசா படிச்சுட்டு அடுத்த பின்னூட்டத்த போடுறேன்..

எத்தனை நாளாகுமோ?

;))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கட்டிடத்தைச் சுற்றி போலீஸை ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிறுத்தி வைத்து சுட வைத்து வேடிக்கை பார்க்கிறார் வசீகரன். எத்தனை கிலோ ரவைகள் வேஸ்ட்டு..? அதுதான் இரும்புக் கம்பியால் ஆனதுன்னு முதல் காட்சியிலேயே சொல்லியாச்சுல்ல.. அப்புறம் எதுக்கு துப்பாக்கி..? யார்கிட்டப்பா காது குத்துறாரு இந்த ஷங்கரு..?///


என்ன பண்றது, எல்லா இங்கிலீஷ் படத்துலயும் AK47 யூஸ் பன்றாங்ய! நம்ம படத்துலயும் யூஸ் பண்ணலேன்னா அப்புறம் இன்கிலிபீசு படம் மாதிரி இல்லேன்னு சொல்லிடுவாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மிகச் சரியாக அந்த நேரத்தில்தான் அத்தனை ரோபோக்களுக்கும் சார்ஜ் குறையத் துவங்கி சொத்தென்று கீழே விழுவதாக வைத்திருப்பது காமெடி. அதற்குப் பதிலாக யாராவது ஒரு ரோபோ “ஐயோ முருகா.. எனக்கு பவர் போகப் போகுது.. யாராவது பவர் கொடுங்க.. பவர் கொடுங்க..” என்று கட்டிடம் முழுவதும் கதறியபடியே ஓட வைத்திருந்தால் என்னம்மா டென்ஷன் கூடி மக்களுக்கு பாவம் பொறந்திருக்கும்.. ஷங்கருக்கு ஒண்ணும் தெரியலப்பா..///


இராமநாராயணனுக்கும் நமக்கும் அந்த அளவுகூட வித்தியாசம் இல்லேன்னா அப்புறம் எப்பிடி எல்லாத்தையும் ஏமாத்துறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தான் உண்மையான வசீகரன்தான் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தன் கையை கீறிக் கொண்டு ரத்தத்தைச் சிந்த விடும் முட்டாள்தனத்தை செய்யும் வசீகரன், அதற்குப் பதிலாக அகில இந்தியாவும் திரும்பிப் பார்க்கும்வகையில் ஹீரோயினுடன் லிப் டூ லிப்பாக கிஸ்ஸடித்து எலெக்ட்ரோ எனர்ஜியை பாஸ் செய்திருந்தால்.. 'யூடியூப்பில்' இந்த வருடம் அதிகமாக தேடப்படும் காட்சி என்ற சாதனையையாவது அது தொட்டிருக்குமே.. விட்டுவிட்டாரே ஷங்கர்..///

சைக்கிள் கேப்புல நம்ம கமல்கிட்ட இருக்க ஒரே மேட்டரையும் புடுங்கப் பாக்குறீங்களே அது ஏன் சார்? உங்களுக்கு என்ன கமல்னா பிடிக்காதா? இதையும் இவர் பண்ணிட்டாருன்னா அப்புறம் கலைஞானி அடுத்த படத்துல புதுசா என்னதான் பண்ணுவாரு? அவருக்காக இதையாவது விட்டு வையுங்க சார்!

அபி அப்பா said...

ங்கொக்கமக்கா! விமர்சனம் பண்ணுய்யான்னு கோடானு கோடி ரசிகர்களும் கேட்டா நீர் எதிர் கோஷ்டிக்கு பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து கிட்டா இருக்க? இரு இரு.... உம்மை ரஜினி ரசிகர் பட்டாளத்துக்கு கிட்டே பிடிச்சு கொடுக்குறேன்!

ஆனா ஒன்னுய்யா! நீ இந்த 6 நாள்ல 6 தடவையாவது பார்த்திருக்கனும். இல்லாட்டி இத்தனை டீடெய்ல்ஸ் கொடுக்க முடியாது.

சும்மா சொல்ல கூடாது பிரேம் பை பிரேம் அலசிட்டேப்பா!!!

நண்பேன்டா....நண்பேன்டா. said...

இன்னா சார்.. இம்மாம் பெரிய பதிவுக்கு இவ்வளவு சீக்கிரமாய் இவ்வளவு comments.. ஆமா சார் எதாவது நோட் புக் எடுத்துட்டு பொய் குறிபெடுதீன்களா ஒவ்வொரு சீனுக்கும்... இதுக்கு எத்தன தடவ சார் படம் பார்த்தீங்க?ஆனா ஒன்னு மட்டும் விளங்கல... நீங்க உண்மையிலேயே படத்த திட்டுறீங்களா? .. இல்ல காமெடி கீமேடியா ?
btw சுறா வசூலில் எந்திரனை முந்தியது.... ஆதரங்களுடன் பதிவிட்டுளேன்.... வந்து பாருங்களேன்,,,,
http://nanbendaaa.blogspot.com/2010/10/blog-post.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தனக்குச் சிந்திக்கும் ஆற்றல் வந்துவிட்டதால் தானே ஒரு வசீகரனாக உருமாறி தன்னைப் போன்ற ரோபோக்களை உருவாக்கிக் கொண்டு ஒரு கல்லூரியையே தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளும்வரையில் போலீஸும், வசீகரனும் என்னத்த புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை யாராவது ஷங்கரிடம் கேட்டுச் சொன்னால் உத்தமம்.///

பாவம் சார், அவங்கள்லாம் ஏதாவது பாராட்டு விழாவுக்குப் போயிருந்திருப்பாங்க!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல கஞ்சா விக்கவே போயிரணும்.. கோடம்பாக்கத்துலயே இருக்கக் கூடாது.///

அப்பிடியா? வேற என்னென்ன(!) பண்ணிக்கிட்டு இருந்தாரு டாகுடரு ஷங்கரு]]]

பாவம்ண்ணே.. ரொம்ப ஏழ்மை நிலைமையில் இருந்துதான் இந்த அளவுக்கு முன்னேறிருக்காரு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஏவாளுக்கு
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா..
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா..?”///

வைரமுத்துவுக்கும் சரி, ஷங்கருக்கும் சரி ஆலிவ் பழம் டேஸ்ட் எப்பிடி இருக்கும்னு தெரியாதுன்னு நெனக்கிறேன்!]]]

எனக்கும்கூடத்தான் தெரியாது. எப்படிண்ணே இருக்கும்?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இதே பாடலில் வைரமுத்துவின் ஜொள்ளு கொஞ்சம் ஓவராகி///

ஆமா அந்தாளு ஜீன்ஸ் படத்துலேயே 'சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்' ன்னு இல்லாததப் பத்தியும் ஜொள்ளு விட்டாரு!]]]

ஹா.. ஹா.. ஹா.. ஹி.. ஹி.. ஹி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எப்படியும் தத்தக்கா பித்தக்கா டான்ஸ்தான் ஆடப் போறாங்க.. இதை மடிப்பாக்கத்துல ஆடினா என்ன? மால்டால ஆடினா என்ன..? காசு.. காசுதான.? அப்படியென்ன ஆடுனாங்க..////

நல்லவேளை புதுசா ட்ரைப் பண்றோம்னு எதையாவது விபரீதமா பண்ணாம வுட்டானுங்களே?]]]

அதுவரைக்கும் எனக்கும் சந்தோஷம்தாண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இப்படி கண்டவங்களோட இன்னமும் ஆடிக்கிட்டிருக்கிறது.. வெட்கமா இல்லை..? கண்றாவி..///

எல்லாம் காசு சார் காசு! காசுக்குகாக என்னென்னமோ. சரி விடுங்க!]]]

விட்டுட்டேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கார்க்கி said...
முடியலண்னே.. இத மட்டும் அந்த சலூன் கடைக்காரர் ரோபோகிட்ட கொடுத்திருந்தா, நிம்மதியா ரஜினிக்கு முடி வெட்டியிருக்கலாம்.. ஜஸ்ட் மிஸ்]]]

ஓ மை காட்.. தம்பி கார்க்கி.. இந்த முக்கியமான சீனை எழுதாம விட்டுட்டனே..! எடுத்துக் கொடுத்ததுக்கு நன்னி தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஹீரோவா நடிச்ச ரஜினின்ற பையன் நல்லாத்தான் நடிச்சிருக்காரு.. வில்லன் ரோபோ ரஜினியும் இவரேதான். ஆனாலும் இதைவிட அசத்தல் நடிப்பை நெற்றிக்கண் படத்துலேயும், மூன்று முகம் படத்துலேயும் பார்த்துட்டதால இது ரொம்ப அசத்தலா இல்ல.///

ஆமா சார் நம்ம அலெக்ஸ் பாண்டியன் மாதிரி வருமா?]]]

அதான.. அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயரை உச்சரிக்கும் ஸ்டைலே தனிதான்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அடித்து நொறுக்குவதுதான் நொறுக்குகிறார்கள்.. ஜல்லி உடைக்கும் மிஷினில் போட்டு கரைத்துப் போட்டிருந்தால் கதை நகர வாய்ப்பு போய்விடும் என்பதால்,///

என்னண்ணே 150 கோடி ரூவா படத்த 150 ரூவாயில முடிக்கப் பாக்குறீங்க?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அப்படியும் விடாம வசீகரன் நம்மகிட்ட காமெடி பண்றாருப்பா.. டேனி செஞ்ச சிப்பை செயலிழக்க வைக்க தன்னோட கம்ப்யூட்டர்ல வேலை பண்றாருப்பா.. அதை முன்னாடியே செஞ்சிருக்கலாமே சாமி.. எம்புட்டு பேருக்கு வேலை மிச்சமாயிருக்கும். அதென்ன அல்லா டைரக்டரும் கடைசி சமயத்துல மட்டும் மூளையை யூஸ் பண்றாங்க..?///

என்ன இப்பிடிக் கேட்டுபுட்டீங்க, அப்புறம் எப்பிடி 150 கோடிய செலவு பண்றது?]]]

சரிதான்.. இதுதானா விஷயம்.. எனக்கே இப்பத்தான தெரியுது..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஏவாளுக்கு
தங்கச்சியே யெங்கூடத்தான்
இருக்கா..
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா..?”///

வைரமுத்துவுக்கும் சரி, ஷங்கருக்கும் சரி ஆலிவ் பழம் டேஸ்ட் எப்பிடி இருக்கும்னு தெரியாதுன்னு நெனக்கிறேன்!]]]

எனக்கும்கூடத்தான் தெரியாது. எப்படிண்ணே இருக்கும்?///

ஆலிவ் பழங்கள் ப்ரஷா சாப்பிடவே முடியாது, அவ்வளவு கசப்பா இருக்கும், புளிக்க வைத்து ஊறுகாய் போட்டுதான் சாப்பிடுவார்கள் (ப்ரஷ் பழம் எங்குமே விற்கப்படுவதில்லை!)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தீப்பெட்டி said...

பின்னிட்டீங்க பாஸ்.. முழுசா படிச்சுட்டு அடுத்த பின்னூட்டத்த போடுறேன்..
எத்தனை நாளாகுமோ? ;))]]]

இப்படியெல்லாம் சொன்னா எப்படி பாஸ்.. உங்களை நம்பித்தான இருக்கேன் நானு..! நாளைக்கே போட்டிருங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கட்டிடத்தைச் சுற்றி போலீஸை ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிறுத்தி வைத்து சுட வைத்து வேடிக்கை பார்க்கிறார் வசீகரன். எத்தனை கிலோ ரவைகள் வேஸ்ட்டு..? அதுதான் இரும்புக் கம்பியால் ஆனதுன்னு முதல் காட்சியிலேயே சொல்லியாச்சுல்ல.. அப்புறம் எதுக்கு துப்பாக்கி..? யார்கிட்டப்பா காது குத்துறாரு இந்த ஷங்கரு..?///

என்ன பண்றது, எல்லா இங்கிலீஷ் படத்துலயும் AK47 யூஸ் பன்றாங்ய! நம்ம படத்துலயும் யூஸ் பண்ணலேன்னா அப்புறம் இன்கிலிபீசு படம் மாதிரி இல்லேன்னு சொல்லிடுவாங்களே?]]]

ஓஹோ.. அப்ப இதுக்காகவாச்சும் நாம ஒத்துக்கலாமே.. இது இங்கிலீஷ் படம் மாதிரிதான்னு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மிகச் சரியாக அந்த நேரத்தில்தான் அத்தனை ரோபோக்களுக்கும் சார்ஜ் குறையத் துவங்கி சொத்தென்று கீழே விழுவதாக வைத்திருப்பது காமெடி. அதற்குப் பதிலாக யாராவது ஒரு ரோபோ “ஐயோ முருகா.. எனக்கு பவர் போகப் போகுது.. யாராவது பவர் கொடுங்க.. பவர் கொடுங்க..” என்று கட்டிடம் முழுவதும் கதறியபடியே ஓட வைத்திருந்தால் என்னம்மா டென்ஷன் கூடி மக்களுக்கு பாவம் பொறந்திருக்கும்.. ஷங்கருக்கு ஒண்ணும் தெரியலப்பா..///

இராம.நாராயணனுக்கும் நமக்கும் அந்த அளவுகூட வித்தியாசம் இல்லேன்னா அப்புறம் எப்பிடி எல்லாத்தையும் ஏமாத்துறது?]]]

ஓகே.. ஓகே.. ஏத்துக்க வேண்டிய சமாதானம்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தான் உண்மையான வசீகரன்தான் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தன் கையை கீறிக் கொண்டு ரத்தத்தைச் சிந்த விடும் முட்டாள்தனத்தை செய்யும் வசீகரன், அதற்குப் பதிலாக அகில இந்தியாவும் திரும்பிப் பார்க்கும்வகையில் ஹீரோயினுடன் லிப் டூ லிப்பாக கிஸ்ஸடித்து எலெக்ட்ரோ எனர்ஜியை பாஸ் செய்திருந்தால்.. 'யூடியூப்பில்' இந்த வருடம் அதிகமாக தேடப்படும் காட்சி என்ற சாதனையையாவது அது தொட்டிருக்குமே.. விட்டுவிட்டாரே ஷங்கர்..///

சைக்கிள் கேப்புல நம்ம கமல்கிட்ட இருக்க ஒரே மேட்டரையும் புடுங்கப் பாக்குறீங்களே அது ஏன் சார்? உங்களுக்கு என்ன கமல்னா பிடிக்காதா? இதையும் இவர் பண்ணிட்டாருன்னா அப்புறம் கலைஞானி அடுத்த படத்துல புதுசா என்னதான் பண்ணுவாரு? அவருக்காக இதையாவது விட்டு வையுங்க சார்!]]]

ச்சே.. கமலை இப்படியெல்லாம் எடை போடுறது நல்லதில்லை. அவர் படத்துல கிஸ் ஒரு சின்ன விஷயம்தான். படம் பார்க்குற விடலைப் பசங்களுக்குத்தான் அது ரொம்ப முக்கியம்..! அவ்ளோதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அபி அப்பா said...

ங்கொக்கமக்கா! விமர்சனம் பண்ணுய்யான்னு கோடானு கோடி ரசிகர்களும் கேட்டா நீர் எதிர் கோஷ்டிக்கு பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து கிட்டா இருக்க? இரு இரு. உம்மை ரஜினி ரசிகர் பட்டாளத்துக்குகிட்டே பிடிச்சு கொடுக்குறேன்!

ஆனா ஒன்னுய்யா! நீ இந்த 6 நாள்ல 6 தடவையாவது பார்த்திருக்கனும். இல்லாட்டி இத்தனை டீடெய்ல்ஸ் கொடுக்க முடியாது.

சும்மா சொல்ல கூடாது பிரேம் பை பிரேம் அலசிட்டேப்பா!!!]]]

ஒரு தடவைதாண்ணே பார்த்தேன்..!

பிடிச்சுக் கொடுக்கிறதைப் பத்தி நோ பிராப்ளம்..! நாங்க எல்லாத்தையும் பார்த்தவங்கதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நண்பேன்டா....நண்பேன்டா. said...

இன்னா சார்.. இம்மாம் பெரிய பதிவுக்கு இவ்வளவு சீக்கிரமாய் இவ்வளவு comments.. ஆமா சார் எதாவது நோட் புக் எடுத்துட்டு பொய் குறிபெடுதீன்களா ஒவ்வொரு சீனுக்கும்... இதுக்கு எத்தன தடவ சார் படம் பார்த்தீங்க? ஆனா ஒன்னு மட்டும் விளங்கல. நீங்க உண்மையிலேயே படத்த திட்டுறீங்களா? இல்ல காமெடி கீமேடியா?]]]

காமெடியேதான்..! உண்மையா திட்ட முடியுமா ஸார்...?

[[[btw சுறா வசூலில் எந்திரனை முந்தியது.... ஆதரங்களுடன் பதிவிட்டுளேன்.... வந்து பாருங்களேன்.

http://nanbendaaa.blogspot.com/2010/10/blog-post.html]]]

பார்த்தேன். தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தனக்குச் சிந்திக்கும் ஆற்றல் வந்துவிட்டதால் தானே ஒரு வசீகரனாக உருமாறி தன்னைப் போன்ற ரோபோக்களை உருவாக்கிக் கொண்டு ஒரு கல்லூரியையே தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளும்வரையில் போலீஸும், வசீகரனும் என்னத்த புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை யாராவது ஷங்கரிடம் கேட்டுச் சொன்னால் உத்தமம்.///

பாவம் சார், அவங்கள்லாம் ஏதாவது பாராட்டு விழாவுக்குப் போயிருந்திருப்பாங்க!]]]

நோ.. நோ.. நீங்க சொன்ன காரணம்தான்.. கதையை நகர்த்தணும்னு முடிவு பண்ணியிருக்காங்க.. அதான் இப்படின்னு ஒரு தோஸ்த்து சொல்றாரு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அடித்து நொறுக்குவதுதான் நொறுக்குகிறார்கள்.. ஜல்லி உடைக்கும் மிஷினில் போட்டு கரைத்துப் போட்டிருந்தால் கதை நகர வாய்ப்பு போய்விடும் என்பதால்,///

என்னண்ணே 150 கோடி ரூவா படத்த 150 ரூவாயில முடிக்கப் பாக்குறீங்க?]]]

ஹி.. ஹி.. ஹி.. ஒரு சீன் விடாமல் படித்து எனக்குப் பெருமை சேர்க்கும் அண்ணன் இராமசாமி அவர்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்.. நீவிர் வாழ்க.. பல்லாண்டு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆலிவ் பழங்கள் ப்ரஷா சாப்பிடவே முடியாது, அவ்வளவு கசப்பா இருக்கும், புளிக்க வைத்து ஊறுகாய் போட்டுதான் சாப்பிடுவார்கள் (ப்ரஷ் பழம் எங்குமே விற்கப்படுவதில்லை!)]]]

அப்படியா? சந்தோஷம்ண்ணே.. இனிமே எங்கிட்டாச்சும் கிடைச்சா வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்குறேன்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///திடீரென்று ரோபோ ஆங்கிலத்தில் பதில் சொல்லி தான் அத்தனை அறுவை சிகிச்சை முறைகளையும் படித்து மனப்பாடம் செய்திருப்பதாகச் சொன்னவுடன் மருத்துவர் வாய் மூடி அனுமதிப்பது ஷங்கர் தமிழுக்குச் செய்திருக்கும் எவ்வளவு பெரிய துரோகம் என்பதை உணராமலேயே தியேட்டரில் கை தட்டிவிட்டார்களே இந்த ரசிகர்கள்.///


இங்கிலிபீசுலேயும் ரோபோ அதத்தான் சொல்லுதுன்னு நம்ம பக்கிகளுக்கு எப்பிடி சார் புரியும்? இந்த டெக்கினிக்க வெச்சித்தானே நெறையப் பேரு பீட்டரு வுடுறாங்ய!

Unmaivirumpi said...

ரொம்ப பெருசா இருக்கு , படம் இன்னும் பாக்கல (எந்த கிரகத்தில இருக்கேனு கேக்குறது தெரியுது), அதனால் முழுசா உங்க அர்ச்சனையை புரிஞ்சுக்க முடியல, ஆனா திட்றீங்கனு மட்டும் தெரியுது, புரிஞ்ச அளவுக்கு நீங்க நல்ல அலசி புழிஞ்சி காய போட்டுருக்கீங்க, படம் பார்த்தா இவ்வளவு டீட்டேல பார்க்கணும் போல!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பீச்சுக்கு வரும் காதலிகள், “என்னைக் கடிச்ச மூட்டைப்பூச்சியைப் பிடிச்சிட்டு வா..” “கொசுவை அள்ளிட்டு வா..” “கரப்பான்பூச்சியை தூக்கிட்டு வா..” “நாயை கொன்னுட்டு வா..” என்றெல்லாம் கண்டிஷன்களை போட்டால் தற்போதைய காதலர்களின் கதி என்னாவது..?///

மாசா மாசம் செல்போனு ரீசார்ஜ் பண்ணிக்கொடுக்குறதுக்கு இதெல்லாம் எவ்வளவோ தேவலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யம்மா இன்னும் பாதிக்கு மேலே இருக்கும் போல? இன்னொரு குவார்ட்டரு ஏத்துனாத்தான் இனி முடியும்! இதோ வந்துர்ரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜடமாய் இருந்த இயந்திரத்திற்கு சிந்திக்கும் ஆற்றல் வந்தவுடன் அது முதலில் சிந்திப்பது காதல் என்றா சொல்ல வேண்டும்..?///

கொன்னேபுடுவேன், பின்னே! 15 கோடிக்கு ஐஸ்வர்யாவ புக் பண்ணி வெச்சிட்டு ரோபோவப் போயி முடி வெட்ட சொல்றீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரோபோவுக்கு சிந்திக்கும் ஆற்றலைத் திணிக்க இரவு, பகல் பாராமல் உழைக்கும் வசீகரன் அது ஒர்க் அவுட் ஆகிவிட்டதா என்பதைக்கூட செக் செய்யாமல் இருப்பதைக் காட்டும் திரைக்கதை நொண்டியடிக்கிறது. ரோபோவுக்கு கோபம் வருகிறது என்பதை ஹீரோயின் சுட்டிக் காட்டியவுடன்தான் வசீகரனுக்கே இது தெரியும், என்றால் இவரெல்லாம் என்ன விஞ்ஞானி..?////

ஒரு விஞ்ஞானி சந்தானம், கருனாஸ் மாதிரி அசிஸ்டென்டுகள வெச்சிக்கிட்டு வேற என்ன பண்ணமுடியும்?

King said...

எப்பா இபவே கண்ணை கட்டுதே

அகில் பூங்குன்றன் said...

அண்ணே!!... கிழக்கு பதிப்பகத்திடம் பேசி புத்தகமா வெளியிட சொல்லுங்க...

படிக்க முடியல( i mean lengthy ) ......யப்பா என்ன ஒரு ஆராய்ச்சி ....முருகா ஞான பண்டிதா....காப்பாத்துப்பா..

MSATHIA said...

இவ்வளவு தவறுகள் கண்டுபுடிச்ச உங்க பதிவுல Hyptonic.. Hyptonic
ன்னு தப்பா எழுதி இருக்கீங்க.
இதுல என்ன உள்குத்து இருக்குன்னு தெரியலை. ஆனா அது hypnotic.. hypnotic.. அப்பிடின்னு சரியா மாத்தற வரைக்கும் போராட்டம் நடத்தலாமான்னு இருக்கேன்.

Ram said...

என்ன வில்லத்தனம்.. அதெப்பிடி கடைசி வரைக்கும் யார தாக்கரன்னே தெரியாத மாதிரியே தாக்கிருக்கே?

Ram said...

On a personal note, too much caste bashing, which I always find uncomfortable!

Kumaran said...

இதுக்கு நீ படத்தோட கதைய எழுதி இருக்கலாம் டா லூசு..

ஆமா... நீ எதுக்கு படம் பார்த்தே..

எவனாவது ஓசில காமிச்சானா?

Suresh said...

ஒரு காட்சியில் ரோபோவை உடைத்து சாதாரண குப்பையோடு குப்பையாக தூக்கி போடுகிறார்கள். ரோபோவை உடைத்து சாதாரண குப்பையோடு குப்பையாக தூக்கி போடுவது சரியா? கணினி தொடர்பான மென் பொருட்களை சாதாரண குப்பைகளோடு போடக்கூடாது என்பது சதாரண மாணவனுக்கு தெரிந்த விஷயம், ஏன் இவ்வளவு சிந்திக்க தெரிந்த இயக்குனருக்கு தெரியவில்லை? கதைக்கு அவசியம் என்பதாலா?

ஜிஜி said...

பிரேம் பை பிரேம் விமர்சனம் நல்லா இருக்குங்க..தங்களது 'எந்திரன் ஒரு முன்னோட்டம்' பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்.நன்றி.

ஜாக்கி சேகர் said...

அண்ணே படிச்சிட்டு பின்னூட்டம் போட ரெண்டு நாள் ஆகும் பரவா இல்லையா ?


ரிப்பிட்டேய்.

ஜாக்கி சேகர் said...

சிங்கம் ஒன்று புறப்பட்டதே?

Anandkrish said...

enna than sir venum ungaluku,evalo kaduppa irukinga.

"You want to seal my kiss
Boy you can't touch this
Everbody Hyptonic.. Hyptonic
Super sonic.
Super star can't can't can't get this.."

i think this lyrics are written by the girls who sing that song. if wrong correct me.
those girls r fom malaysia.

Sugumarje said...

ஐயா! நான் ஒரு தப்பும் பண்ணல! எனக்கு ஏன் இந்த தண்டனை? நல்லா, தப்பே இல்லாத மனசுங்குற பாசங்கு இல்லாத குளத்தில் விசத்தை (விமர்சனத்தை) கலக்குறதே பொழைப்பா போச்சு....

இத விட எந்திரன் திரைப்படம் பார்த்ததுக்கு கூப்பிட்டு வச்சு நாலு போடு போட்டிருக்கலாம்...
ஆனா நல்லாத்தான் போட்டுட்டீங்க... கன்னத்தை மாறி, மாறி காட்டினதுக்கு இப்படிதானா அறைகிறது?

சரி. சரி ஒரு நாளைக்கு எத்தனை காட்சி பார்த்தீங்க...?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

//திடீரென்று ரோபோ ஆங்கிலத்தில் பதில் சொல்லி தான் அத்தனை அறுவை சிகிச்சை முறைகளையும் படித்து மனப்பாடம் செய்திருப்பதாகச் சொன்னவுடன் மருத்துவர் வாய் மூடி அனுமதிப்பது ஷங்கர் தமிழுக்குச் செய்திருக்கும் எவ்வளவு பெரிய துரோகம் என்பதை உணராமலேயே தியேட்டரில் கை தட்டிவிட்டார்களே இந்த ரசிகர்கள்.///

இங்கிலிபீசுலேயும் ரோபோ அதத்தான் சொல்லுதுன்னு நம்ம பக்கிகளுக்கு எப்பிடி சார் புரியும்? இந்த டெக்கினிக்க வெச்சித்தானே நெறையப் பேரு பீட்டரு வுடுறாங்ய!]]]

கரீக்ட்டுண்ணே..! இந்த பீட்டரு பசங்களை ஒரு நாளைக்கு கும்மினாத்தான் சரிப்படுவானுங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Unmaivirumpi said...

ரொம்ப பெருசா இருக்கு, படம் இன்னும் பாக்கல (எந்த கிரகத்தில இருக்கேனு கேக்குறது தெரியுது), அதனால் முழுசா உங்க அர்ச்சனையை புரிஞ்சுக்க முடியல, ஆனா திட்றீங்கனு மட்டும் தெரியுது, புரிஞ்ச அளவுக்கு நீங்க நல்ல அலசி புழிஞ்சி காய போட்டுருக்கீங்க, படம் பார்த்தா இவ்வளவு டீட்டேல பார்க்கணும் போல!!]]]

உண்மை விரும்பி.. இன்னுமா நீங்க படம் பார்க்கலை.. தேசத் துரோகியாயிட்டீங்க..! உங்களை நாடு கடத்த உத்தரவிடுறோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பீச்சுக்கு வரும் காதலிகள், “என்னைக் கடிச்ச மூட்டைப்பூச்சியைப் பிடிச்சிட்டு வா..” “கொசுவை அள்ளிட்டு வா..” “கரப்பான்பூச்சியை தூக்கிட்டு வா..” “நாயை கொன்னுட்டு வா..” என்றெல்லாம் கண்டிஷன்களை போட்டால் தற்போதைய காதலர்களின் கதி என்னாவது..?///

மாசா மாசம் செல்போனு ரீசார்ஜ் பண்ணிக் கொடுக்குறதுக்கு இதெல்லாம் எவ்வளவோ தேவலாம்!]]]

அப்படிங்கிறீங்க.. எனக்கு அனுபவம் இல்லையேண்ணே..! இருந்தாலும், உங்க சோகத்துல நானும் பங்கெடுத்துக்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
யம்மா இன்னும் பாதிக்கு மேலே இருக்கும் போல? இன்னொரு குவார்ட்டரு ஏத்துனாத்தான் இனி முடியும்! இதோ வந்துர்ரேன்!]]]

மை காட்.. குவார்ட்டரு அடிச்சிட்டுத்தான் இதைப் படிச்சிட்டிருக்கீங்களா..? ஓ.. முருகா..! நான் தெளிவான நிலைமைலதான் எழுதினேன்..! அப்புறமும் எப்படி இப்படி?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜடமாய் இருந்த இயந்திரத்திற்கு சிந்திக்கும் ஆற்றல் வந்தவுடன் அது முதலில் சிந்திப்பது காதல் என்றா சொல்ல வேண்டும்..?///

கொன்னேபுடுவேன், பின்னே! 15 கோடிக்கு ஐஸ்வர்யாவ புக் பண்ணி வெச்சிட்டு ரோபோவப் போயி முடி வெட்ட சொல்றீங்களா?]]]

ஹி.. ஹி.. ஹி..! இதுவும் நியாயமான பேச்சுத்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரோபோவுக்கு சிந்திக்கும் ஆற்றலைத் திணிக்க இரவு, பகல் பாராமல் உழைக்கும் வசீகரன் அது ஒர்க் அவுட் ஆகிவிட்டதா என்பதைக்கூட செக் செய்யாமல் இருப்பதைக் காட்டும் திரைக்கதை நொண்டியடிக்கிறது. ரோபோவுக்கு கோபம் வருகிறது என்பதை ஹீரோயின் சுட்டிக் காட்டியவுடன்தான் வசீகரனுக்கே இது தெரியும், என்றால் இவரெல்லாம் என்ன விஞ்ஞானி..?////

ஒரு விஞ்ஞானி சந்தானம், கருனாஸ் மாதிரி அசிஸ்டென்டுகள வெச்சிக்கிட்டு வேற என்ன பண்ண முடியும்?]]]

அதானே.. அவங்களை சுத்தமா காமெடியனா மாத்திட்டாரு.. கூடமாட ஹெல்ப் பண்ற மாதிரி கடைசிவரைக்கும் அவங்களை யூஸ் பண்ணியிருக்கலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[King said...
எப்பா இபவே கண்ணை கட்டுதே.]]]

நோ பிராப்ளம்.. ஒரு சோடா அடிங்க.. சரியாப் பூடும்..!

sivakasi maappillai said...

அய்யா தல சுத்துது....
அப்புறம் வரேன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அகில் பூங்குன்றன் said...
அண்ணே!!... கிழக்கு பதிப்பகத்திடம் பேசி புத்தகமா வெளியிட சொல்லுங்க...
படிக்க முடியல( i mean lengthy ) யப்பா என்ன ஒரு ஆராய்ச்சி முருகா ஞான பண்டிதா காப்பாத்துப்பா..]]]

கொஞ்சமாதாம்ப்பா எழுதியிருக்கேன். இதுக்குப் போயி முருகனையெல்லாம் கூப்பிடுறீங்களே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

MSATHIA said...

இவ்வளவு தவறுகள் கண்டுபுடிச்ச உங்க பதிவுல Hyptonic.. Hyptonicன்னு தப்பா எழுதி இருக்கீங்க.

இதுல என்ன உள்குத்து இருக்குன்னு தெரியலை. ஆனா அது hypnotic.. hypnotic.. அப்பிடின்னு சரியா மாத்தறவரைக்கும் போராட்டம் நடத்தலாமான்னு இருக்கேன்.]]]

இருங்க.. இருங்க.. நாம பேசியே தீர்த்துக்கலாம்.. இப்ப உடனே மாத்திர்றேன்..!

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Ram said...
என்ன வில்லத்தனம்.. அதெப்பிடி கடைசி வரைக்கும் யார தாக்கரன்னே தெரியாத மாதிரியே தாக்கிருக்கே?]]]

ஹா.. ஹா.. ஓகே.. அப்போ நான் எழுதினது வொர்க் அவுட் ஆயிருச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Ram said...
On a personal note, too much caste bashing, which I always find uncomfortable!]]]

ஸாரி ராம்.. இதுல ஜாதியை இழுத்து வைச்சது நானில்லை..! ஒரு சிலர்தான்..! இப்படியெல்லாம் சிந்திச்சு சிந்திச்சுதான் எல்லா சினிமாவையும் நொட்டை, நொள்ளை சொல்றாங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Kumaran said...
இதுக்கு நீ படத்தோட கதைய எழுதி இருக்கலாம்டா லூசு.. ஆமா... நீ எதுக்கு படம் பார்த்தே.. எவனாவது ஓசில காமிச்சானா?]]]

குமரன்.. கிட்டத்தட்ட கதை முழுசையும் நான் சொல்லிட்டனே.. இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்கு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Suresh said...

ஒரு காட்சியில் ரோபோவை உடைத்து சாதாரண குப்பையோடு குப்பையாக தூக்கி போடுகிறார்கள். ரோபோவை உடைத்து சாதாரண குப்பையோடு குப்பையாக தூக்கி போடுவது சரியா? கணினி தொடர்பான மென் பொருட்களை சாதாரண குப்பைகளோடு போடக்கூடாது என்பது சதாரண மாணவனுக்கு தெரிந்த விஷயம், ஏன் இவ்வளவு சிந்திக்க தெரிந்த இயக்குனருக்கு தெரியவில்லை..? கதைக்கு அவசியம் என்பதாலா?]]]

நானும் இப்படித்தான் நினைக்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜிஜி said...
பிரேம் பை பிரேம் விமர்சனம் நல்லா இருக்குங்க. தங்களது 'எந்திரன் ஒரு முன்னோட்டம்' பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன். நன்றி.]]]

நன்றி.. நன்றி.. நன்றி..! பரப்புங்க..! தப்பேயில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜாக்கி சேகர் said...
அண்ணே படிச்சிட்டு பின்னூட்டம் போட ரெண்டு நாள் ஆகும் பரவா இல்லையா? ரிப்பிட்டேய்.]]]

பரவாயில்லை.. எப்போ முடியுதோ அப்போ போடு..!

Sugumarje said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு, மிஸ்டர் உண்மைத் தமிழன்... ;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜாக்கி சேகர் said...
சிங்கம் ஒன்று புறப்பட்டதே?]]]

சிங்கமில்ல.. கழுதை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Anandkrish said...
enna than sir venum ungaluku, evalo kaduppa irukinga.

"You want to seal my kiss
Boy you can't touch this
Everbody Hyptonic.. Hyptonic
Super sonic.
Super star can't can't can't get this.."

i think this lyrics are written by the girls who sing that song. if wrong correct me. those girls r fom malaysia.]]]

ஆமாம்.. "கேஷ்" அப்படீன்னு சொன்னாங்க..!

மறுபடியும் முதல் பாராவை படிங்க. புரியும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sugumarje said...

ஐயா! நான் ஒரு தப்பும் பண்ணல! எனக்கு ஏன் இந்த தண்டனை? நல்லா, தப்பே இல்லாத மனசுங்குற பாசங்கு இல்லாத குளத்தில் விசத்தை (விமர்சனத்தை) கலக்குறதே பொழைப்பா போச்சு....

இதவிட எந்திரன் திரைப்படம் பார்த்ததுக்கு கூப்பிட்டு வச்சு நாலு போடு போட்டிருக்கலாம்...

ஆனா நல்லாத்தான் போட்டுட்டீங்க... கன்னத்தை மாறி, மாறி காட்டினதுக்கு இப்படிதானா அறைகிறது? சரி. சரி ஒரு நாளைக்கு எத்தனை காட்சி பார்த்தீங்க...?]]]

ஓகே.. ஓகே.. நீங்களும், நானும் ஒரு தப்பும் செய்யலை.. நாம செஞ்ச தப்பெல்லாம் தமிழ்நாட்டுல பொறந்ததுதான். லூஸ்ல விடுங்க..!

Sugumarje said...

//ஸாரி ராம்.. இதுல ஜாதியை இழுத்து வைச்சது நானில்லை..! ஒரு சிலர்தான்..! இப்படியெல்லாம் சிந்திச்சு சிந்திச்சுதான் எல்லா சினிமாவையும் நொட்டை, நொள்ளை சொல்றாங்க..!//

உண்மையை உடைச்சிட்டீங்களே ஐயா...?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[sivakasi maappillai said...
அய்யா தல சுத்துது. அப்புறம் வரேன்]]]

மாப்ளே.. இப்படி எஸ்கேப்பானா என்ன அர்த்தம்..? விட மாட்டேன்..!

மருவாதையா வந்திருங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sugumarje said...
உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு, மிஸ்டர் உண்மைத் தமிழன்... ;)]]]

மிக்க நன்றி சுகுமார்ஜி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sugumarje said...

//ஸாரி ராம்.. இதுல ஜாதியை இழுத்து வைச்சது நானில்லை..! ஒரு சிலர்தான்..! இப்படியெல்லாம் சிந்திச்சு சிந்திச்சுதான் எல்லா சினிமாவையும் நொட்டை, நொள்ளை சொல்றாங்க..!//

உண்மையை உடைச்சிட்டீங்களே ஐயா...?]]]

சொல்லித்தான ஆகணும்..! ஜாதிகளுக்கென்றே தனியாக ஒரு புத்தி இருக்கிறது என்பதை திருப்பித் திருப்பிச் சொல்கிறார்கள். ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என்றால் முகத்தைத் திருப்பிக் கொண்டு எஸ்கேப்பாகுகிறார்கள்..!

எறும்பு said...

ம்ம்ம்மேமேஏஏஏஏஏஏஏஏஏ

எறும்பு said...

voted

பார்வையாளன் said...

ஒரு வழியா படிச்சு முடிசசுட்டேன்.. அப்பாடா ..

அருமையான எழுது னே ..
இசை சக்கரவர்த்தி சொன்னது போல , எழுத்து துறைதான் உங்களுக்கான இடம்...
பாராட்ட வார்த்தை இல்லை.. ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன்..

பார்வையாளன் said...

எ ழுத்து துறைல இப்பவே நீங்க கில்லாடிதான்... இன்னும் பெரிய அளவில் சாதிததால் இசை சக்கரவர்த்தி சந்திர போசின் ஆத்மா மகிழும்...

என்.ஆர்.சிபி said...

உண்மைத் தமிழன் உண்மைத் தமிழன் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எறும்பு said...
ம்ம்ம்மேமேஏஏஏஏஏஏஏஏஏ]]]

ஆடு, மாடெல்லாம் இங்க மேயக்கூடாது.. ஒன்லி மனுஷங்க மட்டும்தான் மேயணுமாக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எறும்பு said...
voted]]]

மிக்க நன்றிங்கோ தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
ஒரு வழியா படிச்சு முடிசசுட்டேன்.. அப்பாடா. அருமையான எழுதுனே.
இசை சக்கரவர்த்தி சொன்னது போல, எழுத்து துறைதான் உங்களுக்கான இடம். பாராட்ட வார்த்தை இல்லை.. ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன்..]]]

நன்றிங்கோண்ணா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
எழுத்து துறைல இப்பவே நீங்க கில்லாடிதான். இன்னும் பெரிய அளவில் சாதிததால் இசை சக்கரவர்த்தி சந்திரபோசின் ஆத்மா மகிழும்.]]]

ஓ.. நீங்க அப்படி வர்றீங்களா..? நல்லாவே முடிச்சுப் போடுறீங்க பார்வையாளன் அண்ணே..!

நானும் ஏதாவது சாதிக்க முடிந்தால் அந்த அண்ணனை நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்வேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[என்.ஆர்.சிபி said...
உண்மைத் தமிழன் உண்மைத் தமிழன்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள்!]]]

இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ஒடம்பை ரணகளமாக்கிட்டீங்களே தம்பி..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[ஜாக்கி சேகர் said...
சிங்கம் ஒன்று புறப்பட்டதே?]]]

சிங்கமில்ல.. கழுதை..!////

அண்ணே நீங்க சூப்பர் ஸ்டாரத்தானே சொல்றீங்க? (ஹைய்யா எப்பூடி? சிக்கவெச்சிட்டோம்ல)

kavi said...

எவ்ளோ பெரிய்யயயயயயயயயயயயயயய பதிவுண்ணே, எழுத எத்தனை நாளாச்சி, இதுக்கே, உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தனும்னே.....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[ஜாக்கி சேகர் said...
சிங்கம் ஒன்று புறப்பட்டதே?]]]

சிங்கமில்ல.. கழுதை..!////

அண்ணே நீங்க சூப்பர் ஸ்டாரத்தானே சொல்றீங்க? (ஹைய்யா எப்பூடி? சிக்க வெச்சிட்டோம்ல)]]]

நோ.. நோ.. நான்தாண்ணே கழுதை.. அவர் சூப்பர் ஸ்டாருண்ணே.. சிங்கம்ண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kavi said...
எவ்ளோ பெரிய்யயயயயயயயயயயயயயய பதிவுண்ணே, எழுத எத்தனை நாளாச்சி, இதுக்கே, உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தனும்னே.]]]

நான் ரெடி..! ஏற்பாடு பண்ணுங்க..!

பார்வையாளன் said...

ஒரு படத்துல, நான் கட்டி பிடிச்சேன, முத்தம் கொடுத்தேனா , கைய பிடிச்சு இழுத்தேனா சொல்லி , எல்லாத்தையும் செஞ்சு முடிகிற வடிவேலு மாதிரி, யாரையோ கிண்டல் செய்ற மாதிரி முழு கதையையும் சொல்லி முடிச்சுட்டீங்களே.. இதை டைப் செய்ய எத்தனை நாள் ஆச்சு ?

பார்வையாளன் said...

இதெல்லாம் ஒ கே ... உண்மை தமிழனின் உண்மையான விமர்சனம் எப்ப வரும்..

படத்தோட வரலாறு, புவியியல் எல்லாம் கலந்து ஒரு நீண்ட விமர்சனம் எழுதுங்கண்ணே...
இதை படிக்கவே ஒரு நாள் ஆகுது..எழுத எத்தனை நாள் ஆகுதோ? அந்த முருகனுக்குத்தான் தெரியும் ..

Vijay said...

நாள் முழுக்க திறந்து வச்சு ஒரு வழியா முழுசா படிச்சுட்டேன். இன்னும் படம் பார்கலை, அதனால நீங்க திட்டுறது நிறைய புரியல.
தமிழ் சினிமா பார்த்து விமர்சனம் எழுதும் மக்களுக்காக பொதுவா ரெண்டு வார்த்தை மட்டும் சொல்லிடறேன்: அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.

K said...

நீங்க நல்லவரா கெட்டவரா?

anyway

என் பார்வையில் எந்திரன் - Rich Man's Ramanarayanan Movie.

பனங்காட்டு நரி said...

பாவம் ....,
*
*
*
*
*
கீ போர்ட் :)

Indian said...

//[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல கஞ்சா விக்கவே போயிரணும்.. கோடம்பாக்கத்துலயே இருக்கக் கூடாது.///

அப்பிடியா? வேற என்னென்ன(!) பண்ணிக்கிட்டு இருந்தாரு டாகுடரு ஷங்கரு]]]

பாவம்ண்ணே.. ரொம்ப ஏழ்மை நிலைமையில் இருந்துதான் இந்த அளவுக்கு முன்னேறிருக்காரு..!
//

Demystifying India's highest paid film-maker - the elusive S Shankar

...
So what’s Shankar all about? Born in a fairly affluent family in Kumbakonam, Tamil Nadu, he worked as a quality control supervisor till the movie bug bit him. On a telephone call he still introduces himself as, “Hi I’m Shankar, the director,’’ and when you incredulously ask him why he says that, he replies, “my films and I are twins, joined at the hip.’’
...

Reminds me something else... :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
ஒரு படத்துல, நான் கட்டி பிடிச்சேன, முத்தம் கொடுத்தேனா, கைய பிடிச்சு இழுத்தேனா சொல்லி, எல்லாத்தையும் செஞ்சு முடிகிற வடிவேலு மாதிரி, யாரையோ கிண்டல் செய்ற மாதிரி முழு கதையையும் சொல்லி முடிச்சுட்டீங்களே. இதை டைப் செய்ய எத்தனை நாள் ஆச்சு?]]]

நான்கரை மணி நேரம் மட்டுமே செலவானது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
இதெல்லாம் ஒ.கே. உண்மைதமிழனின் உண்மையான விமர்சனம் எப்ப வரும்..?
படத்தோட வரலாறு, புவியியல் எல்லாம் கலந்து ஒரு நீண்ட விமர்சனம் எழுதுங்கண்ணே. இதை படிக்கவே ஒரு நாள் ஆகுது. எழுத எத்தனை நாள் ஆகுதோ? அந்த முருகனுக்குத்தான் தெரியும்..]]]

இதுக்கு மேலேயும் உமக்கு விமர்சனம் தேவையா..? ரொம்பக் கொழுப்பு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Vijay said...
நாள் முழுக்க திறந்து வச்சு ஒரு வழியா முழுசா படிச்சுட்டேன். இன்னும் படம் பார்கலை, அதனால நீங்க திட்டுறது நிறைய புரியல. தமிழ் சினிமா பார்த்து விமர்சனம் எழுதும் மக்களுக்காக பொதுவா ரெண்டு வார்த்தை மட்டும் சொல்லிடறேன்: அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.]]]

சரி.. இதை அப்படியே எந்திரனுக்கு எழுதப்பட்டிருக்கும் அத்தனை எதிர்விமர்சனப் பதிவுகளிலும் பதிவு செய்து விடுங்கள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[K said...

நீங்க நல்லவரா கெட்டவரா?

anyway

என் பார்வையில் எந்திரன் - Rich Man's Ramanarayanan Movie.]]]

நல்லவனுக்கு நல்லவன்..

கெட்டவனுக்கு கெட்டவன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பனங்காட்டு நரி said...
பாவம் ....,
*
*
*
*
*
கீ போர்ட் :)]]]

அழுகத்தான் செய்யுது.. அதையெல்லாம் பார்த்தா முடியுமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Indian said...

Demystifying India's highest paid film-maker - the elusive S Shankar
So what’s Shankar all about? Born in a fairly affluent family in Kumbakonam, Tamil Nadu, he worked as a quality control supervisor till the movie bug bit him. On a telephone call he still introduces himself as, “Hi I’m Shankar, the director,’’ and when you incredulously ask him why he says that, he replies, “my films and I are twins, joined at the hip.’’...

Reminds me something else... :)]]]

அவருடைய தந்தை சினிமாவில் டெக்னீஷியனாக வேலை பார்த்தவர். அவருடைய மறைவிற்குப் பின் சினிமாவில் நுழைந்த சங்கர் அனைத்து வேலைகளையும் செய்து வந்தார் சினிமாவில்..! நடிக்கவும் செய்தார். சின்னச் சின்ன வேடங்களில்..! இடையில் வாய்ப்பில்லாமல் இருந்தபோதுதான் ரயில்வே ஸ்டேஷனில் கஞ்சா விற்றதாக அவரே சொல்லியிருக்கிறார்.. அதைத்தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

முதுலும்பு இல்லாமல் இல்லோரும் எந்திரன் புகழ் பாடிக்கொண்டிருக்க தாங்கள் மட்டுமே அதன் உண்மையான நிலையை தோலுரித்துக் காட்டியதற்காக உமக்கு தலை வணங்குகிறேன். உங்கள் பதிவை படிக்க நான் இதுவரை முப்பது பேருக்கு பரிந்துரைத்திருக்கிறேன்!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அண்ணே உங்க விமர்சனத்துக்கு பதிவுலகத்தில் ஒரு மருவாத இருக்கு அத கெடுத்துக்காதேங்க,ஒரு பொழுதுபோக்கு படத்துக்கு என்ன வேண்டுமோ அது படத்தில் உள்ளது,நீங்கள் மீண்டும் ஒரு முறை இந்த படத்திற்கு மற்ற படங்களுக்கு எழுதுவது போல் விமர்சனம் எழுத வேண்டும்

பார்வையாளன் said...

“ நீங்கள் மீண்டும் ஒரு முறை இந்த படத்திற்கு மற்ற படங்களுக்கு எழுதுவது போல் விமர்சனம் எழுத வேண்டும்”

என்னது?... இன்னொன்னா? வேணாம்... அழுதுடுவேன்...

ஜானகிராமன் said...

இவ்வளவு தீவிரமான விமர்சனம் எழுத எடுத்துக்கொண்ட உங்களின் உழைப்புக்கும், சிந்தனைக்கும், நேரத்துக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அற்புதமான பார்வை. நிச்சயம் பிரிச்சி மேய்ஞ்சிருக்கீங்க.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எஸ்.எஸ்.பூங்கதிர் said...
முதுலும்பு இல்லாமல் இல்லோரும் எந்திரன் புகழ் பாடிக் கொண்டிருக்க தாங்கள் மட்டுமே அதன் உண்மையான நிலையை தோலுரித்துக் காட்டியதற்காக உமக்கு தலை வணங்குகிறேன். உங்கள் பதிவை படிக்க நான் இதுவரை முப்பது பேருக்கு பரிந்துரைத்திருக்கிறேன்!]]]

ஆஹா.. வாசகரென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.

நன்றி பூங்கதிர் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கமெண்ட் மட்டும் போடுறவன் said...
அண்ணே உங்க விமர்சனத்துக்கு பதிவுலகத்தில் ஒரு மருவாத இருக்கு அத கெடுத்துக்காதேங்க, ஒரு பொழுதுபோக்கு படத்துக்கு என்ன வேண்டுமோ அது படத்தில் உள்ளது, நீங்கள் மீண்டும் ஒரு முறை இந்த படத்திற்கு மற்ற படங்களுக்கு எழுதுவது போல் விமர்சனம் எழுத வேண்டும்.]]]

சரிங்கண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...

“நீங்கள் மீண்டும் ஒரு முறை இந்த படத்திற்கு மற்ற படங்களுக்கு எழுதுவது போல் விமர்சனம் எழுத வேண்டும்”

என்னது?... இன்னொன்னா? வேணாம்... அழுதுடுவேன்...]]]

நானும்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜானகிராமன் said...
இவ்வளவு தீவிரமான விமர்சனம் எழுத எடுத்துக் கொண்ட உங்களின் உழைப்புக்கும், சிந்தனைக்கும், நேரத்துக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அற்புதமான பார்வை. நிச்சயம் பிரிச்சி மேய்ஞ்சிருக்கீங்க.]]]

நன்றிகள் ஜானகிராமன் ஸார்..!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

Anne,

Roooooompa nerama padichi ippathan mudichen.....
//
எனக்குத் தெரிஞ்சு கிட்டத்தட்ட கால்வாசியை மட்டும் பிட்டு வைச்சிருக்கேன்னு நினைக்கிறேன்

//
aathadee....

என்.ஆர்.சிபி said...

இப்படியே போனா நடிகர் ஒரு படம் கொடுக்க நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்வது போல நீங்களும் ஒரு பதிவு கொடுக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொ'ல்'வீர்கள் போல இருக்கிறது! முருகா! உண்மைத் தமிழனுக்கு உயிரெழுத்துக்கள் மட்டும் மறக்கக் கடவதாக!

a said...

///// தூக்கி வீசப்படும்போது ரோபாவின் பக்கத்தில் போஸ்ட் கம்பம்தான் இருந்தது. பவர் ஹவுஸ் கிடையாது. பின்பு எங்கிருந்து வந்தது அந்த பவர் ஹவுஸ்? /////

Meendum nanraga orumurai padathi parkavm Lamp post pakkathil siriya power house box irukkum

பித்தன் said...

naanum eppothum kadaisi ezhuththu varai paapen aanaa naan mattumthaan iruppen

பித்தன் said...

rendu naal achchu padikka romba perusu

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

Anne, Roooooompa nerama padichi ippathan mudichen.....//

எனக்குத் தெரிஞ்சு கிட்டத்தட்ட கால்வாசியை மட்டும் பிட்டு வைச்சிருக்கேன்னு நினைக்கிறேன்//

aathadee....]]]

என்ன ஆத்தாடி..?

மொதல்ல இத்தனை நாளா ஏன் ஆஜராகலைன்னு காரணத்தை சொல்லுங்க மிஸ்டர் யோகேஷ்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[என்.ஆர்.சிபி said...
இப்படியே போனா நடிகர் ஒரு படம் கொடுக்க நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்வது போல நீங்களும் ஒரு பதிவு கொடுக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொ'ல்'வீர்கள் போல இருக்கிறது!

முருகா! உண்மைத் தமிழனுக்கு உயிரெழுத்துக்கள் மட்டும் மறக்கக் கடவதாக!]]]

நோ.. முருகன் இதற்கு நிச்சயம் அருள் பாலிக்க மாட்டான்..! என்னைக் கொல்றதுன்னா அவனுக்கு அம்புட்டு இஷ்டம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[a said...

//தூக்கி வீசப்படும்போது ரோபாவின் பக்கத்தில் போஸ்ட் கம்பம்தான் இருந்தது. பவர் ஹவுஸ் கிடையாது. பின்பு எங்கிருந்து வந்தது அந்த பவர் ஹவுஸ்?//

Meendum nanraga orumurai padathi parkavm Lamp post pakkathil siriya power house box irukkum.]]]

அப்படியா? சரி பார்க்கிறேன்.. தகவலுக்கு நன்றிகள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...
naanum eppothum kadaisi ezhuththu varai paapen aanaa naan mattumthaan iruppen.]]]

சரி.. திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...
rendu naal achchu padikka romba perusu.]]]

அப்படியா..? சந்தோஷம்.. எப்படியோ படிச்சாச்சுல.. இதுவே போதும் பித்தன்ஜி..!

கதிர்கா said...

ஷங்கர் கூட, இந்த படத்துக்கு இந்தளவு உழைச்சிருக்க மாட்டாரு. உங்க உழைப்புக்கு அளவே இல்லையாண்ணே?

Rafeek said...

சரவணன் என்ன பதிவு இது? எந்திரன கிண்டல் பண்றிங்களா இல்ல கிண்டல் பண்றவங்கள கிண்டல் பண்றிங்களா? சத்தியமா புரியல.. சில கேள்விகள் நிஜமான லாஜிக் தவறுகள் என்றால் பல கேள்விகள் மகா மட்டமான ஜாதிய பார்வயில். விளக்கம் தேவை அய்யா. கை நோக எழுதுவதும் எழுத்தும் ஒரு வேளை உங்க அடிக்‌ஷனா மாறிப்போச்சோ? தயவு செய்து எந்திரனுக்கு அதை வேஸ்ட் ஆக்காமல்.. நல்ல கட்டுரைகளுக்கு செலவிடுங்கள் ஸார்.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.எந்திரனை கிழி கிழினு கிழிச்சிருக்கீன்க்களே,ஏன்?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கதிர்கா said...
ஷங்கர்கூட, இந்த படத்துக்கு இந்தளவு உழைச்சிருக்க மாட்டாரு. உங்க உழைப்புக்கு அளவே இல்லையாண்ணே?]]]

ஹா.. ஹா.. இதுவெல்லாம் நமக்கு சர்வசாதாரணம் கதிர்கா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Rafeek said...

இல்ல கிண்டல் பண்றவங்கள கிண்டல் பண்றிங்களா?]]]

இதைத்தான் செஞ்சிருக்கேன்.. கோபம் வேண்டாம்.. கோபித்துக் கொள்ளாமல் முதல் இரண்டு பாராக்களை மறுபடியும் படியுங்கள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே. எந்திரனை கிழி கிழினு கிழிச்சிருக்கீன்க்களே, ஏன்?]]]

இவ்ளோ எழுதின பின்னாடியும் இப்படியொரு கொஸ்டீனை கேக்குறியேண்ணே.. இது நியாயமா?

முதல் இரண்டு பாராக்களை மீண்டும் படிக்கவும்..!

குறை ஒன்றும் இல்லை !!! said...

இன்னொரு முக்கிய விசயத்த கவனிக்க மறந்துட்டீங்க ..... ரஜினி ,ரோபோ மற்றும் வில்லன் சமாசாரம் எல்லாம் பயங்கர விஞ்ஞான விஷயமா இருக்கும் போது மத்தவங்க கிட்ட அது மிஸ்ஸிங் !!!! கதைப்படி இந்த மூணு பேர் மட்டும் 2020 ல இருக்கும் போது மத்தவங்க மட்டும் 2010 ல இருப்பாங்களாம் !!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குறை ஒன்றும் இல்லை !!! said...
இன்னொரு முக்கிய விசயத்த கவனிக்க மறந்துட்டீங்க. ரஜினி, ரோபோ மற்றும் வில்லன் சமாசாரம் எல்லாம் பயங்கர விஞ்ஞான விஷயமா இருக்கும்போது மத்தவங்ககிட்ட அது மிஸ்ஸிங் !!!! கதைப்படி இந்த மூணு பேர் மட்டும் 2020-ல இருக்கும் போது மத்தவங்க மட்டும் 2010-ல இருப்பாங்களாம் !!!!]]]

அதான.. கரெக்ட்டுத்தான் நண்பரே.. இதை நான் கவனிக்காம போயிட்டனே.. நன்றி.. நன்றி..!

மோனி said...

விமர்சனம் ரொம்பவும் சின்னதுதான்..
ஆபிஸுக்கு லீவு போட்டு அரை நாள்லயே படிச்சு முடிச்சிட்டேன்..
என்னங்கண்ணே.. இன்னும் - இன்னும் - எதிர்பார்க்குறோம்..

access said...

thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
அன்பே சிவம் rocks

எந்திரன் sucks

sorry compassion is dead
passion rocks
all passionate arrakargal endorse enthiran in big way

யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
வெறும் மசாலா மாமனார்கள்
அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மோனி said...
விமர்சனம் ரொம்பவும் சின்னதுதான்.. ஆபிஸுக்கு லீவு போட்டு அரை நாள்லயே படிச்சு முடிச்சிட்டேன்..
என்னங்கண்ணே.. இன்னும் - இன்னும் - எதிர்பார்க்குறோம்..]]]

மன்மதன் அம்பு வரட்டும்.. கச்சேரியை வைச்சுக்குவோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[access said...
கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை]]]

நன்றிகள் ஸார்.. இன்னும் இரண்டு முக்கிய விஷயங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்..!

இதனை வைத்தும் ஷங்கரையும், ரஜினியையும் விரும்புபவர்கள் கும்மலாம்..!

ரோஸ்விக் said...

அண்ணே பாதிதான் படிச்சேன்... அதுக்குள்ள ஆம்புலன்ஸ் வீட்டு வாசலுக்கு வந்திருச்சுண்ணே!!! :-)

லீவு போட்டே ஆகனும் போல.... :-)))

smk981 said...

சீன் பை சீன் விமர்சனம் இன்னு இது என்ன புது அக்கப்போர்.மிக அருமை.keep it up அண்ணே .

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரோஸ்விக் said...
அண்ணே பாதிதான் படிச்சேன்... அதுக்குள்ள ஆம்புலன்ஸ் வீட்டு வாசலுக்கு வந்திருச்சுண்ணே!!! :-)
லீவு போட்டே ஆகனும் போல.:-)))]]]

அப்படியா..? அப்ப மெதுவா ஆஸ்பத்திரில இருந்து வந்த பின்னாடி படிக்கலாம்..! மொதல்ல உடம்பை பார்த்துக்க தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[smk981 said...
சீன் பை சீன் விமர்சனம் இன்னு இது என்ன புது அக்கப்போர். மிக அருமை. keep it up அண்ணே.]]]

நல்லாயிருக்குல்ல..! நன்றி..!

எப்பூடி.. said...

access

//யாருமே கமலை நெருங்க முடியாது//

எந்த விசயத்தில? ஏதாவது டபிள் மீனிங?

//ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்//

தம்பி அறிவை நினைச்சா எனக்கு புல்லரிச்சு போச்சு, நீங்க இருக்க வேண்டியது செவ்வாய் கிரகத்தில. சீக்கிரமா இந்த தம்பிய ஏத்தி செவ்வாய்க்கு ஒரு ராக்கட்ட லாஞ் பண்ணுங்கப்பா!!!!!!

பத்து வயசுப் பசங்களெல்லாம் இப்ப கூகிள்ல எக்கவுண்ட் ஒப்பின் பண்ணி கமன்ட் போட ஆரம்பிச்சிட்டாங்கபோல!!!!!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எப்பூடி.. said...

access

//யாருமே கமலை நெருங்க முடியாது//

எந்த விசயத்தில? ஏதாவது டபிள் மீனிங?

//ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்துதான் மிச்சம்//

தம்பி அறிவை நினைச்சா எனக்கு புல்லரிச்சு போச்சு, நீங்க இருக்க வேண்டியது செவ்வாய் கிரகத்தில. சீக்கிரமா இந்த தம்பிய ஏத்தி செவ்வாய்க்கு ஒரு ராக்கட்ட லாஞ் பண்ணுங்கப்பா!!!!!!

பத்து வயசுப் பசங்களெல்லாம் இப்ப கூகிள்ல எக்கவுண்ட் ஒப்பின் பண்ணி கமன்ட் போட ஆரம்பிச்சிட்டாங்கபோல!!!!!!!]]]

அவருக்குத் தெரிஞ்சது இவ்ளோதான்னு விட வேண்டியதுதான்..!

vinodh said...

//திம்மி//

திம்மினா என்னண்ணே?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[vinodh said...

//திம்மி//

திம்மினா என்னண்ணே?]]]

அடியாள்.. அல்லக்கை.. ஏவலாள்.. தொண்டன்.. அடிமை.. - இப்படி எதை வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்..!

ராஜவம்சம் said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

வைகறை தங்கராஜ்... said...

ஏம்பா .உண்மைத் தமிழா எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் அதில் குத்தம் கண்டுபிடிக்கலாம்...உன் பதிவை எவனாவது படிப்பானா?திரைப்படம் என்பது தொழில்...அது காலத்திற்கு காலம் மாற்றம் அடைவது...உன்னப் போய் 1950’60 களில் வந்த படத்தைப் போய் பார்க்கச் சொன்னால் பார்ப்பியா? தமிழ் கலாச்சாரம் அழிக்கப்படுகிறது என்பது உண்மைதான்....ஆனால் திரைபடத்தில் நடிப்பவர்களை நீ விமர்சிக்க உனக்கு அருகதையில்லை...நாட்டில் எத்தனையே பிரச்சனை நடக்குது அதையெல்லாம் விட்டுட்டு இந்த விசயத்த எழுதிய நீ ஒரு முட்டாள்..உனக்கு தழிழ் மணம் விருது தந்தவன் ஒரு அடிமுட்டாள்.....

முத்துசிவா said...

//
“ரோபோ ரோபோ
பழ மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி
தமிழ் அல்லவா?”

- அப்படீங்கிறாரு கவிப்பேரரசு.. இதைவிட என்ன கேவலம் வேணும் தமிழுக்கு.. அன்னைத் தமிழுக்கு.. தமிழ்த் தாய் என்றெல்லாம் பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு சமமாக மரியாதை கொடுத்து வரும் தாய்த் தமிழகத்திலேயே ஒரு கவிஞர், 'தந்தை மொழி' என்று உளறித் தொலைத்திருக்கிறார்.. இதையும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
//

அய்யா உண்மைத்தமிழன் அவர்களே... நீங்க மேல எழுதிருக்க இந்த வரிகள பாத்தாலே தெரியுது உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்குன்னு. ஏன் சார் தமிழ தாய் மொழின்னு ஏன் சொல்றோம்? நமக்கு எல்லாரயும் விட முக்கியமானவங்க, நம்ம அம்மா. அதே முக்கியத்துவத்த நம்ம பேசுற மொழிக்கும் குடுக்கனும்னு தான் தாய் மொழின்னு சொல்றோம். ஆனா அந்த ரோபோவ கண்டுபுடிக்கிறது ஒரு ஆண். அந்த ரோபோவுக்கு எல்லாமே அவருதான். அப்போ அது எப்புடி தாய் மொழின்னு சொல்லும்.

அந்த பாட்டுலயே ரொம்ப அருமையான வரின்னா அது தான். தயவுசெஞ்சி இனிமே பாட்ட எதும் விமர்சனம் பண்றேனு கெளம்பாதீங்க. கன்றாவியா இருக்கு உண்மை தமிழன்னு பேரு வச்சிகிட்டு இப்புடி கப்பி தனமா விமர்சனம் பண்ணும் போது

உண்மைத்தமிழன் said...

[[[ராஜவம்சம் said...
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.]]]

நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[வைகறை தங்கராஜ்... said...
ஏம்பா உண்மைத் தமிழா எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் அதில் குத்தம் கண்டுபிடிக்கலாம். உன் பதிவை எவனாவது படிப்பானா? திரைப்படம் என்பது தொழில். அது காலத்திற்கு காலம் மாற்றம் அடைவது. உன்னப் போய் 1950’60களில் வந்த படத்தைப் போய் பார்க்கச் சொன்னால் பார்ப்பியா? தமிழ் கலாச்சாரம் அழிக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் திரைபடத்தில் நடிப்பவர்களை நீ விமர்சிக்க உனக்கு அருகதையில்லை. நாட்டில் எத்தனையே பிரச்சனை நடக்குது அதையெல்லாம் விட்டுட்டு இந்த விசயத்த எழுதிய நீ ஒரு முட்டாள். உனக்கு தழிழ் மணம் விருது தந்தவன் ஒரு அடிமுட்டாள்.]]]

வைகறை ஸார்..

உங்களுடைய வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும் எனது மானசீகமான நன்றி..!

உண்மைத்தமிழன் said...

முத்துசிவா..

முன்னுரையை இன்னும் இரண்டு முறை படித்துப் பாருங்கள். புரியும்..!

Raj said...

Please change your blog name. You are not true tamil. True tamil will not bother about unnecessary entertainment. You wasted your one day to criticize the movie.
You were making an indirect publicity to the movie. if you really care about society, deactivate your blog and look after your family.