மாஸ்கோவின் காவிரி..! - சினிமா விமர்சனம்

28-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படம் தயாரித்து முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும்  தயாரிப்பாளரான ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், இதனை வெளியிடாமல் வைத்திருந்தது ஏன் என்பது இப்போது படத்தை பார்த்த பின்புதான் தெரிகிறது..!

கிட்டத்தட்ட 25 வருடங்களாக தமிழ்ச் சினிமா துறையில் இருந்துவரும் பழுத்த அனுபவசாலியான ரவிச்சந்திரன், இந்தப் படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்தவுடனேயே தெளிவாகியிருப்பார் இது நிச்சயம் தேறாது என்று..!

அதனால்தான் தசாவதாரம் படத்திற்குப் பின் அடுத்த வெளியீடாக உடனேயே வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம், இத்தனை காலம் தாழ்த்தி வெளி வந்திருக்கிறது.

அதிலும் ஒரு விஷயம். தன்னுடைய ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தாலும் அந்த பேனரில் வெளியிட்டால் கம்பெனியின் பெயர் நாஸ்தியாகிவிடும் என்பதால் தனது உடன் பிறந்த தம்பியான ரமேஷ்பாபுவின் பெயரில் அவசரம், அவசரமாக ஆர் பிலிம்ஸ் என்னும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, அதன் மூலமாக இப்படத்தினை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.

இந்த அளவுக்குப் பயப்பட வேண்டிய அவசியமென்ன..? இது 70 எம்.எம். சினிமா இல்லை. வெறும் டாக்குமெண்ட்டரி. படத்தின் கதையை இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம். ஆனால் சொல்லிய விதத்தைச் சொல்ல வேண்டுமெனில் அது மாபெரும் கொடுமை..!

ஐ.டி. துறையில் பணியாற்றும் காதலர்கள், லிவிங் டூ கெதராக சேர்ந்து வாழ்ந்து பின் தங்களால் ஒத்துப் போக முடியாது என்பதை உணர்ந்து பிரிய நினைக்கிறார்கள். முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை..!

இதற்காக இயக்குநர் பெரும் சிரமமேற்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் போலும். பொதுவாக ஒளிப்பதிவாளர்களாக இருந்து இயக்குநர்காளாக மாறி வெற்றி பெற்றவர்கள் மிகச் சிலர்தான்.. தோல்வியடைந்த பட்டியல்தான் அதிகம்..! அதில் ரவிவர்மனும் ஒருவர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவில் அவர் காட்டியிருக்கும் வெறியையும், ஆர்வத்தையும் படத்தின் கதையிலும், திரைக்கதையும் கொஞ்சமாவது காட்டியிருந்தால் படத்தின் பூஜையன்று செலவழித்த தொகையாவது தயாரிப்பாளருக்குத் திரும்பக் கிடைத்திருக்கும்..!

முதல் காட்சியில் ஹீரோயினை சந்திக்கிறார். பார்த்தவுடனேயே காதல் கொள்கிறார். ஒரு பாடல். நாயகியைப் பின் தொடர்கிறார்.. நாயகியின் புகைப்படங்கள் முழுவதையும் தனது வீட்டில் ஒட்டி வைத்து அழகு பார்க்கிறார். அடுத்தக் காட்சியில் நாயகி யார் நீ என்று கேட்டுவிட.. உடனேயே வீடு திரும்பி புகைப்படங்களை கிழித்தெறிகிறார்.

அதற்கடுத்த காட்சிகளில் சம்பந்தமேயில்லாமல் இருவரின் பிறந்த வீட்டுக் கதைகள் திணிக்கப்பட்டுள்ளன.  தன் அப்பா கையை வெட்டும் வன்முறையாளராக இருப்பதைப் பார்த்து பயந்து போய் ஹீரோயின் ,ஹீரோவைத் தேடி அவன் ஊருக்குச் செல்கிறாள்.

ஹீரோ தனது ஊரில் தனது சொந்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த ஊருக்கு வரும் ஹீரோயின், தான் தனது கணவனைத் தேடி வந்ததாகச் சொல்லி, ஹீரோவைக் கை காட்டுகிறார். ஹீரோ சந்தோஷப்படுகிறாராம்..

சென்னைக்கு வந்து இருவரும் சேர்ந்து வாழத் துவங்குகிறார்கள். வீட்டுக்காரன் வீட்டைக் காலி செய்யச் சொல்கிறான். ரோஷப்பட்ட ஹீரோயின் வீட்டுப் பொருட்களுடன் நடுத்தெருவில் வந்து அமர்ந்து கொண்டு நட்ட நடுரோட்டில் லேப்டாப்பில் கூகிளாண்டவரைத் துழாவி வீடு தேட ஆரம்பிக்கிறாள்.

இந்தக் காட்சியில் கை தட்டத் துவங்கிய சில நண்பர்கள் படம் முடியும்வரையில் கை வலிக்கத் தட்டித் தீர்த்துவிட்டார்கள். இந்த ஒரு காட்சியமைப்புக்காகவே இந்தப் படத்திற்கு அவசியம் விருது கொடுத்தாக வேண்டும்.

கடற்கரையோர வீட்டை விலைக்கு வாங்கி அங்கே குடி போகிறார்கள். அடுத்த நாளே ஹைதரபாத்திற்கு டிரெயினிங் என்று சொல்லி டூர் கிளம்புகிறார்கள்.

ஹீரோயினின் அப்பாவுக்கு எப்படித்தான் இந்த விஷயம் தெரிந்ததோ தெரியலை சாமி.. பொண்ணைத் தேடி அந்த வீட்டுக்கு வருகிறார். “பொண்ணும், மாப்ளையும் நல்லா இருக்காங்களாம்.. வீட்டு வாட்ச்மேன் சொன்னான்” என்று ஊர் திரும்பி தனது மனைவியிடம் சொல்லும்போது என் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. ச்சே.. நாமளும்தான் இருக்கோம்.. இது மாதிரி ஒரு சீனாவது நமக்குத் தோணுச்சா..? மரமண்டை.. மரமண்டை..!

ஹைதராபாத்தில் காதலர்களுக்குள் ஏற்படும் சின்ன பிரச்சினையால் திரும்பி வரும்போது ரொம்பவே முட்டிக் கொள்கிறது.

இடையில் சம்பந்தமே இல்லாமல் ஒரு கிரிமினல் டிராக் வேறு.. அவன் இவர்கள் வீட்டில் இவர்களைப் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொள்ள.. தனது மனைவியைக் கொல்ல முயற்சித்த அவனை போலீஸ் கமிஷனர் பெரும் படையுடன் வீடு புகுந்து கொன்று இவர்களைக் காப்பாற்றுகிறாராம்.

அப்பாடா.. முடிச்சிட்டானுகடா சாமின்னு எந்திரிச்சா.. அப்பன்காரன் “மாப்ளைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திரு”ன்னு பெண்ணிடம் சொல்ல.. அப்பாவுக்காக காதலனிடம் பை சொல்ல வரும் காதலி.. காதலன் தங்களது போட்டோவை பார்த்து புலம்புவதைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி அவனைக் கட்டிக் கொண்டு நமக்கு மங்களம் பாடுகிறாள்.

எவனாவது ஏமாந்த சோணகிரி சிக்கிட்டான்னா, அவன் தலைல சுத்தமா மிளகா அரைச்சிருவாங்கன்னு சொல்வாங்களே.. நிச்சயமா இந்தப் படத்தை அதுக்கு உதாரணமா காட்டலாம்.

ரவிவர்மன் சிறந்த, சிறந்த, சிறந்த ஒளி்பபதிவாளர். அதில் சந்தேகமேயில்லை. இந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையில் பிரேம் டூ பிரேம் அழகு.. கொள்ளை அழகு. அதோடு அழகுக்கு ஆபரணம் சேர்ப்பதுபோல் கதாநாயகியும் அழகு. இது போதுமா படம் ஓடுறதுக்கு..?

கதைன்னு ஒண்ணு வேணாமா..? நான் எடுக்கறதுதான் படம்.. நான் சொல்றதுதான் கதைன்னு முடிவு பண்ணி எடுத்திருப்பார் போலிருக்கு.

படத்தின் பிற்பாதியில் இருக்கும் சந்தானத்தின் காமெடி டிராக் சமீபத்தில் எடுக்கப்பட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் விற்பனைக்காக எடுத்ததாகச் சொல்கிறார்கள். அப்படியும் இது போணியாகவில்லை. சரி. அதையாவது உருப்படியாக எடுத்துத் தொலைத்தார்களா..? அதுவும் உச்சப்பட்ச லாஜிக் மீறல்..! சந்தானத்திற்கு இதெல்லாம் தேவைதானா..?

ஏற்கெனவே மாதாமாதம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்றுதான் தியேட்டர் ரிப்போர்ட்டுகள் சொல்கின்றன. இந்த லட்சணத்தில் இது மாதிரி இன்னும் ரெண்டு சினிமா வந்தால்போதும்.. தயாரிப்பாளர் மட்டுமல்ல.. சினிமா ரசிகனும் வெறியாகிவிடுவார்கள்..!

பாடல் காட்சிகளை தொல்லைக்காட்சிகளில் பார்த்தால், கண்டு மகிழுங்கள்.. அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்..!

நேரமும், பணமும் வீணானதுதான் மிச்சம்..!

65 comments:

வடுவூர் குமார் said...

முத‌ல் இர‌ண்டு ப‌த்தியிலேயே முடிச்சிட்டீங்க‌ளே! மேற்கொண்டு ப‌டிக்க‌னுமா? :-)

சின்னப்பயல் said...

கழட்டி மாட்டிட்டீஹப்பு...:-)

பிரபாகர் said...

பார்த்ததோட விட்டிருக்கலாமண்ணே! எழுதி எங்களையும் மூட் அவுட் பண்ணிட்டீங்க!

பிரபாகர்...

ராம்ஜி_யாஹூ said...

yes by seeing the title we can make out. thanks for your review and help.

Mohan said...

இந்தப் படத்திற்கு உங்களின் விமர்சனம் இவ்வளவு சின்னதாக இருக்கும்போதே தெரிகிறது,படம் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்குமென்று!

சென்ஷி said...

அண்ணே,

ஒரு சின்ன சந்தேகம்.. மாஸ்கோவின் காவிரி அப்படின்னு தலைப்பு இருக்குதே.. அதுக்கு என்ன அர்த்தம். கதையில இந்த டைட்டிலுக்கு லீட் வருதா? :))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வடுவூர் குமார் said...
முத‌ல் இர‌ண்டு ப‌த்தியிலேயே முடிச்சிட்டீங்க‌ளே! மேற்கொண்டு ப‌டிக்க‌னுமா? :-)]]]

படிச்சுத்தான் பாருங்களேன்.. நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கான்னு உங்களுக்கே தெரியும்ண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சின்னப்பயல் said...
கழட்டி மாட்டிட்டீ ஹப்பு...:-)]]]

பின்ன.. அவனவன் தயாரிப்பாளர் கிடைக்கலையேன்னு அலையோ அலைன்னு அலைஞ்சுக்கிட்டிருக்கான்.. லட்டு மாதிரி தயாரிப்பாளர் கிடைச்சும் இப்படி படத்தை எடுத்துக் கொடுத்தா கோபம் வராதா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரபாகர் said...
பார்த்ததோட விட்டிருக்கலாமண்ணே! எழுதி எங்களையும் மூட் அவுட் பண்ணிட்டீங்க!

பிரபாகர்...]]]

நீங்களும் போய் மாட்டிக்கக் கூடாதேன்ற பாசம்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராம்ஜி_யாஹூ said...
yes by seeing the title we can make out. thanks for your review and help.]]]

அதைப் பார்த்துதான் போய்த் தொலைஞ்சேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Mohan said...
இந்தப் படத்திற்கு உங்களின் விமர்சனம் இவ்வளவு சின்னதாக இருக்கும்போதே தெரிகிறது, படம் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்குமென்று!]]]

என்ன செய்யறது மோகன்..? அவங்கவங்களுக்கு எது நல்லா வருமோ, அதைச் செய்யறதுதான் எல்லாருக்குமே நல்லது..!

ராம்ஜி_யாஹூ said...

me sick with Tamilmanam- movie review posts must go to tiraimanam.They still come in main page

VISA said...

evanavathu oru padam nalla edukama vitta umaku kushi thaan poala iruku. padam paathuu veliyavarum poathu umma mugatha paaanum.

"padamaada edukura kilikirean paarunu" NAASAM PANNIPUTEENGA.

avangalukum ithu theva than

R Gopi said...

ஏன் இந்தக் கொலைவெறி? ஆனால் படம் கொஞ்சமும் நன்றாக இல்லை எனபது உங்கள் விமர்சனத்தில் தெரிகிறது.

ஹாலிவுட் பாலா said...

// இது 70 எம்.எம். சினிமா இல்லை. வெறும் டாக்குமெண்ட்டரி.//

என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? இது அப்படியே ஆப்போசிட்டா வரணும்.

அது எப்பேர்பட்ட படமா இருந்தாலும், டாகுமெண்ட்ரியின் தாக்கத்தை நம்ம மனசில் ஏற்படுத்த முடியுமா?

சி.பி.செந்தில்குமார் said...

படத்தோட ஹிஸ்டரியை புட்டு புட்டு வெச்சிட்டீங்களெ,சபாஷ் அண்ணே

ananth said...

படத்தின் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ வித்தியாசமான அருமையான கதை என்று நினைத்தேன். நல்ல வேளை, என் பணம் தப்பித்தது. இனி தங்கள் விமர்சனத்தைப் படித்து விட்டுதான் எந்த திரைப் படத்தையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆகாயமனிதன்.. said...

அப்புறம் எதை பார்த்து படம் பார்க்கப் போனீங்க...
இந்த விமர்சனம் எழுதவா ?

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
பெயர் நாஸ்தியாகிவிடும் என்பதால் தனது உடன் பிறந்த தம்பியான ரமேஷ்பாபுவின் பெயரில் அவசரம், அவசரமாக ஆர் பிலிம்ஸ் என்னும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, அதன் மூலமாக இப்படத்தினை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.
//
அப்புறம் எதுக்காக அண்ணே ரிலீஸ் பண்ணி இருக்கார்? எவ்ளோ நாளக்கித்தான் படப்பெட்டிய பூட்டி வக்கறதுன்னு நினச்சிருப்பாரோ??

raja said...

இந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையில் பிரேம் டூ பிரேம் அழகு.. கொள்ளை அழகு. அதோடு அழகுக்கு ஆபரணம் சேர்ப்பதுபோல் கதாநாயகியும் அழகு.............-உயிரற்ற பிண உடலுக்கு போர்த்திய அழகிய பூமாலையை இப்படித்தான் ரசிப்பீர்கள் போல.. இப்படிப்பட்ட அழகை ரசிக்க நீங்கள் அமெரிக்காவில் தயாராகும் செமி போர்னோகிராபியை பார்த்து ரசிக்கலாம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராம்ஜி_யாஹூ said...
me sick with Tamilmanam- movie review posts must go to tiraimanam. They still come in main page.]]]

கொஞ்ச நாளைக்கு தமிழ்மணத்துலேயும் இது வருமாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[VISA said...
evanavathu oru padam nalla edukama vitta umaku kushi thaan poala iruku. padam paathuu veliyavarum poathu umma mugatha paaanum.

"padamaada edukura kilikirean paarunu" NAASAM PANNIPUTEENGA.

avangalukum ithu theva than]]]

விசா.. என் வயித்தெரிச்சல் இதுவல்ல.. நல்ல தயாரிப்பாளர் கிடைச்சும் இப்படி வீணாக்கிட்டாங்களேன்றதுதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[R Gopi said...
ஏன் இந்தக் கொலைவெறி? ஆனால் படம் கொஞ்சமும் நன்றாக இல்லை எனபது உங்கள் விமர்சனத்தில் தெரிகிறது.]]]

படம் நல்லாயில்லைன்னா கோபம் வராதா..?

அதுலேயும் எத்தனை கோடிகளை முழுங்கியிருக்கிறது இத்திரைப்படம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஹாலிவுட் பாலா said...

// இது 70 எம்.எம். சினிமா இல்லை. வெறும் டாக்குமெண்ட்டரி.//

என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? இது அப்படியே ஆப்போசிட்டா வரணும். அது எப்பேர்பட்ட படமா இருந்தாலும், டாகுமெண்ட்ரியின் தாக்கத்தை நம்ம மனசில் ஏற்படுத்த முடியுமா?]]]

அதான.. அப்படியும் வைச்சிக்கலாம் பாலா.. ஆனா பாருங்க.. இயக்கம்னா என்னன்றதை இந்தப் படத்தைப் பார்த்துக்கூட தெரிஞ்சுக்கலாம். அந்த அளவுக்கு இருக்கு..!

சென்ஷி said...

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரலை உ.த. ;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
படத்தோட ஹிஸ்டரியை புட்டு புட்டு வெச்சிட்டீங்களெ, சபாஷ் அண்ணே]]]

மூணு வருஷமா எதிர்பார்த்துக்கிட்டிருந்தோம்ண்ணே..! அதுதான் புட்டு புட்டு வைக்க வேண்டியதாப் போச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...
படத்தின் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ வித்தியாசமான அருமையான கதை என்று நினைத்தேன். நல்ல வேளை, என் பணம் தப்பித்தது. இனி தங்கள் விமர்சனத்தைப் படித்து விட்டுதான் எந்த திரைப் படத்தையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.]]]

தங்களுடைய முடிவுக்கு மிக்க நன்றி ஆனந்த்..! அவ்ளோ நம்புறீங்களா என்னை..? எவ்ளோ நல்லவரு நீங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஆகாயமனிதன்.. said...
அப்புறம் எதை பார்த்து படம் பார்க்கப் போனீங்க... இந்த விமர்சனம் எழுதவா?]]]

படத்தின் பெயர்.. இயக்குநரின் பெயர்.. தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்..! விளம்பரங்கள்..

இதையெல்லாம் பார்த்துதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//பெயர் நாஸ்தியாகிவிடும் என்பதால் தனது உடன் பிறந்த தம்பியான ரமேஷ்பாபுவின் பெயரில் அவசரம், அவசரமாக ஆர் பிலிம்ஸ் என்னும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, அதன் மூலமாக இப்படத்தினை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.//

அப்புறம் எதுக்காக அண்ணே ரிலீஸ் பண்ணி இருக்கார்? எவ்ளோ நாளக்கித்தான் படப் பெட்டிய பூட்டி வக்கறதுன்னு நினச்சிருப்பாரோ??]]]

இதே காரணம்தான்.. வேறில்லை. இப்போ அடிமாட்டு விலையா இருந்தாலும் டிவி ரைட்ஸ் கொஞ்சூண்டு வருமா இல்லியா..?

ஜாக்கி சேகர் said...

ஒய் பிளட் ...??? சேம் பிளட்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[raja said...

இந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையில் பிரேம் டூ பிரேம் அழகு.. கொள்ளை அழகு. அதோடு அழகுக்கு ஆபரணம் சேர்ப்பதுபோல் கதாநாயகியும் அழகு. - உயிரற்ற பிண உடலுக்கு போர்த்திய அழகிய பூமாலையை இப்படித்தான் ரசிப்பீர்கள் போல.. இப்படிப்பட்ட அழகை ரசிக்க நீங்கள் அமெரிக்காவில் தயாராகும் செமி போர்னோகிராபியை பார்த்து ரசிக்கலாம்.]]]

இது எங்க கிடைக்கும் ராஜா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சென்ஷி said...
நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரலை உ.த. ;)]]]

ஐயையோ ஸாரி தம்பி.. மன்னிச்சுக்குடா ராசா..!

மாஸ்கோ என்பது ஹீரோவின் பெயர்.. காவிரி என்பது ஹீரோயினின் பெயர்..

இதுதான் மாஸ்கோவின் காவிரி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜாக்கி சேகர் said...
ஒய் பிளட் ...??? சேம் பிளட்...]]]

வேறு என்னத்த சொல்றது..?

சென்ஷி said...

//

மாஸ்கோ என்பது ஹீரோவின் பெயர்.. காவிரி என்பது ஹீரோயினின் பெயர்..//

ப்ச்.. காவிரின்னாலே தமிழனுக்கு மாத்திரம்தான் தகராறுன்னு நினைச்சேன். மாஸ்கோவுக்கும் அப்படித்தான் போல.. :(

butterfly Surya said...

ஏண்ணே..? நீயும் மொக்கை படமெல்லாம பார்க்க ஆரம்பிச்சிடீங்களா..?? அதுக்கு விமர்சனம் வேற.. ??

வேளைக்கு சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க.

julie said...

பாவம் சார் நீங்கள்

எங்களுக்காக நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க

முருகன் உங்கள ரொம்ப சோதிக்கிறான்


உங்க விமர்சனத்த பார்த்துதான் இப்பவெல்லாம் எங்க வீட்டுல படமே பார்க்குறது

ஏற்கனவே என் HUSBAndu கு BP இருக்கு
அதனால் இந்த படத்த பார்க்க பயமா இருக்கு
அப்புறம் யாரு மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போரது

அதனால் இந்த கஷ்டம் உங்களோட போகட்டும்

அது சரி மாஸ்கோனு ஏன் பெயர் வச்சி இருக்காங்க

அட கடவுளே இப்பவே கண்ணா கட்டுதே

பார்வையாளன் said...

"இப்படிப்பட்ட அழகை ரசிக்க நீங்கள் அமெரிக்காவில் தயாராகும் செமி போர்னோகிராபியை பார்த்து ரசிக்கலாம்.]]]

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

"இது எங்க கிடைக்கும் ராஜா..?"


பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க ,,.. ஆவலா காத்துக்கிட்டு இருக்கோம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

" அவங்கவங்களுக்கு எது நல்லா வருமோ, அதைச் செய்யறதுதான் எல்லாருக்குமே நல்லது."

ரொம்ப நல்லது... அப்படீனா நீங்க விமர்சனம் எழுத வேண்டிய படம் "விலை.".. அதை எழுதுனாத்தான் உங்களுக்கும் திருப்தியா இருக்கும்.. எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்...

காவேரி கணேஷ் said...

இந்த படத்துக்கு போட்ட பதிவுகளில் உங்க பதிவு தான் பெரிய பதிவு.

பித்தன் said...

" அவங்கவங்களுக்கு எது நல்லா வருமோ, அதைச் செய்யறதுதான் எல்லாருக்குமே நல்லது."

well said... will he listen to you...?

I love his photography..... but...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[butterfly Surya said...

ஏண்ணே..? நீயும் மொக்கை படமெல்லாம பார்க்க ஆரம்பிச்சிடீங்களா..?? அதுக்கு விமர்சனம் வேற.. ??

வேளைக்கு சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க.]]]

படத்துக்குப் போன பின்னாடிதான தெரியுது அதோட லட்சணம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[julie said...

பாவம் சார் நீங்கள்

எங்களுக்காக நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க. முருகன் உங்கள ரொம்ப சோதிக்கிறான்.

உங்க விமர்சனத்த பார்த்துதான் இப்பவெல்லாம் எங்க வீட்டுல படமே பார்க்குறது.

ஏற்கனவே என் HUSBAnduகு BP இருக்கு. அதனால் இந்த படத்த பார்க்க பயமா இருக்கு. அப்புறம் யாரு மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போரது. அதனால் இந்த கஷ்டம் உங்களோட போகட்டும். அது சரி மாஸ்கோனு ஏன் பெயர் வச்சி இருக்காங்க. அட கடவுளே இப்பவே கண்ணா கட்டுதே]]]

ஜுலி மேடம்..

மாஸ்கோன்றது படத்துல ஹீரோவின் பெயர்..

காவிரின்றது ஹீரோயினோட பெயர்.

இதுக்கெல்லாம் போயி காசை கரியாக்காதீங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...

ரொம்ப நல்லது... அப்படீனா நீங்க விமர்சனம் எழுத வேண்டிய படம் "விலை.". அதை எழுதுனாத்தான் உங்களுக்கும் திருப்தியா இருக்கும். எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்.]]]

ம்.. 100 ரூபாயை மணியார்டர்ல அனுப்பி வைங்க.. பார்க்கலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[காவேரி கணேஷ் said...
இந்த படத்துக்கு போட்ட பதிவுகளில் உங்க பதிவுதான் பெரிய பதிவு.]]]

அப்படியா..? அதுலேயும் நான்தான் பர்ஸ்ட்டா..! முருகா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...

"அவங்கவங்களுக்கு எது நல்லா வருமோ, அதைச் செய்யறதுதான் எல்லாருக்குமே நல்லது."

well said... will he listen to you...? I love his photography..... but...]]]

அதேதான் பித்தன்..! அவர் இனி ஒளிப்பதிவிலேயே செயல்படலாம்..! இது அவருக்கும் நல்லது.. நமக்கும் நல்லது.. சினிமா தொழிலுக்கும் நல்லது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சென்ஷி said...

//மாஸ்கோ என்பது ஹீரோவின் பெயர்.. காவிரி என்பது ஹீரோயினின் பெயர்..//

ப்ச்.. காவிரின்னாலே தமிழனுக்கு மாத்திரம்தான் தகராறுன்னு நினைச்சேன். மாஸ்கோவுக்கும் அப்படித்தான் போல.. :(]]]

-)))))))))))))

ஸ்ரீராம். said...

நேற்றுதான் போஸ்டர் பார்த்தேன். கதாநாயகன் பார்க்க அழகாக இருக்கிறார்.

sivakasi maappillai said...

இந்த விமர்சன பதிவுக்கு இன்ட்லி ல லைக்னு ஓட்டு போட்டா படத்த லைக் பண்றதா அர்த்தம் வந்துருமோங்கிற‌ பயத்துல ஓட்டு போடல‌

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஸ்ரீராம். said...
நேற்றுதான் போஸ்டர் பார்த்தேன். கதாநாயகன் பார்க்க அழகாக இருக்கிறார்.]]]

அப்போ கதாநாயகி அழகில்லையா..? ஜாக்கி சேகர் அருவாளோட வர்றாரு.. ஓடிப் போயிருங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[sivakasi maappillai said...
இந்த விமர்சன பதிவுக்கு இன்ட்லி ல லைக்னு ஓட்டு போட்டா படத்த லைக் பண்றதா அர்த்தம் வந்துருமோங்கிற‌ பயத்துல ஓட்டு போடல‌]]]

அதெப்படி படத்தை லைக் பண்றதா அர்த்தம் வரும்..? பதிவிற்காகத்தான் ஓட்டு.. பதிவின் உட்கருத்து எதுவோ அதனை நீங்கள் ஆதரிப்பதாகத்தான் அர்த்தமாகும்..

தயங்காமல் ஓட்டுப் போடுங்கள் சிவகாசி மாப்ளே..!

ஆகாயமனிதன்.. said...

//அதிலும் ஒரு விஷயம். தன்னுடைய ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தாலும் அந்த பேனரில் வெளியிட்டால் கம்பெனியின் பெயர் நாஸ்தியாகிவிடும் என்பதால் தனது உடன் பிறந்த தம்பியான ரமேஷ்பாபுவின் பெயரில் அவசரம், அவசரமாக ஆர் பிலிம்ஸ் என்னும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, அதன் மூலமாக இப்படத்தினை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன்//
தசாவதாரம் பட்ஜெட் எகிறிய காலத்தில் இவர் அண்ணனை விட்டு வெளியே வந்து தனியாகத்தான் படம் பண்ணிகொன்டிருகிறார்....ஆஸ்கர் ரவியின் வேலாயுதம், விஜய்க்கும் ராஜாவிற்கும் பெரிய பட்ஜெட் படம் தான்...

புரட்சித்தலைவன் said...

must read
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473

kanagu said...

இந்த படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனம் எழுதி இருக்கீங்களே அண்ணா...

இந்த படத்துல தூங்காம இருந்ததுக்கே உங்கள பாராட்டலாம் அண்ணா :)

sivakasi maappillai said...

//தயங்காமல் ஓட்டுப் போடுங்கள் சிவகாசி மாப்ளே..!///

போட்டாச்சி... போட்டாச்சி....

ஸ்ரீ said...

அடப் பாவமே!!

பிரியமுடன் ரமேஷ் said...

படத்தின் தலைப்பையும் அவர் பத்திரிகைகளில் தந்த பேட்டிகளையும் படித்துவிட்டு...இந்தப்படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலைன்னு நினைச்சேன்...ரிலீஸ் ஆகாமலே இருந்திருந்தா கூட....அவர் பேரு இப்படி கெட்டுப் போயிருக்காது போல....

Mohamed said...

நல்ல விமர்சனம்.. ஆனாலும் நீங்க ரொம்ப பாவம் :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஆகாயமனிதன்.. said...

//அதிலும் ஒரு விஷயம். தன்னுடைய ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தாலும் அந்த பேனரில் வெளியிட்டால் கம்பெனியின் பெயர் நாஸ்தியாகிவிடும் என்பதால் தனது உடன் பிறந்த தம்பியான ரமேஷ்பாபுவின் பெயரில் அவசரம், அவசரமாக ஆர் பிலிம்ஸ் என்னும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, அதன் மூலமாக இப்படத்தினை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன்//

தசாவதாரம் பட்ஜெட் எகிறிய காலத்தில் இவர் அண்ணனை விட்டு வெளியே வந்து தனியாகத்தான் படம் பண்ணிக் கொன்டிருகிறார். ஆஸ்கர் ரவியின் வேலாயுதம், விஜய்க்கும் ராஜாவிற்கும் பெரிய பட்ஜெட் படம்தான்.]]]

அப்படியா? என்ன படம் தயாரித்தார்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புரட்சித்தலைவன் said...

must read
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473]]]

பார்த்தேன்.. படித்தேன்.. பரவசப்பட்டேன்.. இப்படியாச்சும் தமிழ் வாழட்டுமேன்னு அவுங்க நினைக்கிறாங்க போலிருக்கு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kanagu said...
இந்த படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனம் எழுதி இருக்கீங்களே அண்ணா. இந்த படத்துல தூங்காம இருந்ததுக்கே உங்கள பாராட்டலாம் அண்ணா :)]]]

அப்படியா..? பார்த்துத் தொலைச்சாச்சா..? சேம் பிளட் கனகு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[sivakasi maappillai said...

//தயங்காமல் ஓட்டுப் போடுங்கள் சிவகாசி மாப்ளே..!///

போட்டாச்சி... போட்டாச்சி....]]]

மிக்க நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஸ்ரீ said...
அடப் பாவமே!!]]

யாரை பாவம்னு சொல்றீங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...
படத்தின் தலைப்பையும் அவர் பத்திரிகைகளில் தந்த பேட்டிகளையும் படித்துவிட்டு இந்தப் படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலைன்னு நினைச்சேன். ரிலீஸ் ஆகாமலே இருந்திருந்தாகூட அவர் பேரு இப்படி கெட்டுப் போயிருக்காது போல.]]]

ஹா... ஹா.. ஹா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Mohamed said...
நல்ல விமர்சனம்.. ஆனாலும் நீங்க ரொம்ப பாவம் :)]]]

உங்களுக்காச்சும் தெரியுதே முகமது..!? நன்றிகள் கோடி..!

abeer ahmed said...

See who owns arbodettwiller.fr or any other website:
http://whois.domaintasks.com/arbodettwiller.fr

abeer ahmed said...

See who owns aitechsystem.com or any other website.