ஆறாவது வனம் - திரை விமர்சனம்


02-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கமர்ஷியல் படம்தான்னு முடிவு பண்ணிட்டா அது மாதிரியே செஞ்சுப்புடணும்.. இல்லை.. அவார்டு படம்ன்னா அது மாதிரியே கிழிச்சுப்புடணும்.. இந்த ரெண்டு மாதிரியும் இல்லாம புது மாதிரியா சிந்திக்கிறேன்னு சொல்லி இப்படி படம் எடுத்தா எப்படி விமர்சனம் எழுதுறது..?

கொஞ்சமாச்சும் விமர்சனம் எழுதறதுக்கு இடம் கொடுக்கணுமில்லையா..? 75 ரூபா கொடுத்து படம் பார்க்க வந்தா, கழுத்துல கத்தியை வைச்சு கடைசிவரைக்கும் உக்கார்றான்னு சொன்ன மாதிரி இப்படியா..?

இப்படியொரு சொதப்பலான படத்தை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லடா சாமி..! அம்புட்டு கொடுமை..!

இப்பல்லாம் புதுசா கிரியேட்டிவ்வா படத்தோட போஸ்டரை மட்டும் டிஸைன் செஞ்சுக்குறது.. விளம்பரத்தை அதே மாதிரி நல்ல கிரியேட்டர்கிட்ட கொடுத்து மோல்டு பண்ணிக்கிறது..! அப்படியே வாராவாரம் துட்டு கொடுத்து படத்தை பத்தி பில்டப் கொடுக்கிறது.. இப்படி எல்லாவிதத்திலும் இந்தப் படத்தைப் பத்தி விளம்பரப்படுத்தியிருந்ததால.. ஏதோ புரட்சியைத் தூண்டப் போற படம்னு நினைச்சு போய் உக்காந்தா..!?????????????

சமீபத்தில ரெண்டு வருஷத்துக்குள்ள வந்த அத்தனை கிராமத்துப் படங்கள்ல இருந்தும் ஒவ்வொரு சீனையும் எடுத்துப் போட்டு அதுக்கேத்தாப்புல ஒரு கதையை எழுதி எடுக்கத் தெரிஞ்சவரைக்கும் எடுத்துத் தள்ளியிருக்காரு இயக்குநரு.. அவரைக் குத்தம் சொல்லி புண்ணியமில்லை. சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்..?

ஆறாவது வனம்ன்றது ஒரு ஊரு. அந்த ஊர்ல ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் பண்ணா கவுரவமா கொலை பண்ணிப்புட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.. 


அந்த ஊர்ப் பொண்ணு ஒண்ணு வழக்கம்போல ரவுடியான ஹீரோவை காதலிச்சுத் தொலைக்குது.. அந்தப் பொண்ணுக்கு ஒரு தாய்மாமன்.. இவன்தான் படத்துல வில்லன்னு உங்களுக்குத் தனியா சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.. தாய்மாமன் தாலி கட்டப் போற நாள்ல, பொண்ணு  ஹீரோவோட ஊரைவிட்டே எஸ்கேப்பாகுது..

அந்தச் சமயத்துல ஆக்சிடெண்ட்ல ஹீரோ தலைல அடிபட்டு மென்ட்டல் ஆகிடறார்.. அவரைக் காப்பாத்துறேன்னு சொல்லி தாய் மாமா, டிராமா போட்டு ஹீரோவை ஆஸ்பத்திரில இருந்து வெளில துரத்திர்றாரு.. அவரைத் தேடி அலுத்துப் போய் ஓய்ஞ்ச பின்னாடி தாய் மாமன் மேல பரிதாபப்படுது பொண்ணு. அவரையே கட்டிக்கலாம்னு இன்னொரு தடவை கல்யாணத்துக்கு தேதிய குறிச்சு வைக்க..


திடீர்ன்னு நம்ம ஹீரோவுக்கு எல்லாம் சரியாகி ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டரை பீச்சுல பார்த்து கரீக்ட்டா அடையாளம் கண்டுபிடிச்சு விசாரிச்சு, காதலியைத் தேடி ஊருக்குத் திரும்பி வர்றாரு.. தாய் மாமன் ஆளுங்க அவனை அடிச்சு, உதைச்சு, கொலை செஞ்சு செங்கல் சூளைக்குள்ள திணிச்சு வைச்சர்றாங்க..

அன்னிக்கு ராத்திரி மப்புல, மாப்ளைக்காரன் மாமனார்கிட்ட இதை உளறிக் கொட்ட.. ஒட்டுக் கேக்குற பொண்ணு மறுநாள் வைக்கிறா பாருங்க ஆப்பு..! ஒட்டு மொத்த ஊர் ஜனத்தையும் கல்யாண விருந்துல விஷம் வைச்சு கொன்னுடறா.. தானும் செத்துர்றா.. தாய் மாமன் இதனாலேயே பைத்தியமாகி அதே ஊர்ல திரியறான்.. கூடவே அவன் அல்லக்கை ஒருத்தனும்.. 


இந்தத் தாய் மாமன் செத்தவுடனேயே அவனைக் குழி தோண்டிப் புதைச்ச இடத்துல 'ஆறாவது வனம்'ன்ற ஊர் பேரோட போர்டை நட்டுட்டு நடையைக் கட்டுறாரு அல்லக்கை. இதுதாம்பா இந்தக் காவியப் படத்தோட கதை..!

“மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மிகவும் சோதனைக் களமாக அமைந்தது ஆறாவது வனத்தில் அவர்கள் அஞ்ஞாத வாசம் புரிந்த காலகட்டம்தான். அதேபோல காதலில் மிகுந்த சோதனைகளை காதலனும் காதலியும் எதிர்நோக்கும் காலகட்டத்தைச் சித்தரிப்பது இந்த ‘ஆறாவது வனம்’.

ஒரு இளம் ஜோடியின் காதலுக்காக ஒட்டு மொத்த மக்களும் ஊரைக் காலிபண்ணிக் கொண்டு போக, கடைசியில் அந்த ஊரில் இரண்டே இரண்டு பேர் மட்டும் மிஞ்சுகிறார்கள். இப்போதும் அந்த கிராமம் அப்படியே இருக்கிறது. இன்றுவரை அந்த இருவர் மட்டுமே அந்த ஊரில் வசிக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவம்தான் ஆறாவது வனம்.

இந்த கதைக்கு உயிரூட்ட சம்பந்தப்பட்ட அந்த கிராமத்துக்கே போய் படமாக்க எண்ணினோம். ஆனால் அந்த கிராமத்தில் மிச்சமிருக்கும் அந்த இருவர் கடைசிவரை இதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள்.


வேறு வழி இல்லாததால், பொருத்தமான வேறொரு கிராமம் தேடியபோது இந்த சிங்கராம்பாளையம் கண்ணில் பட்டது. கதைக்குப் பொருத்தமாகவும் இருந்தது.

ஷூட்டிங்குக்காக ஊரை ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு மட்டும் காலி செய்து தர முடியுமா என்று அந்த மக்களைக் கேட்டபோது முதலில் கடுமையாகக் கோபப்பட்டனர். எங்க ஊரை காலி பண்ணச் சொல்ல நீ யாருய்யா என்றுதான் கேட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கு பொறுமையாக, அந்த உண்மைக் காதல் சம்பவத்தையும் இப்போது ஏற்பட்டுள்ள ஷூட்டிங் சிக்கலையும் சொன்னோம். அவர்கள் ஊர்க்கூட்டம் நடத்தி ஒருமனதாக எங்களுக்கு ஒத்துழைக்க முடிவு செய்தார்கள். பெரியவர் சிறியவர் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் அனைவரும் எங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறிய காட்சி கண்ணில் நீரை வரவழைத்தது. அவர்களுக்கு நன்றி சொல்லக் கூட நா எழவில்லை.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார்கள் சிங்கராம்பாளையம் மக்கள்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் வேறு எந்தப் படத்துக்காவது மக்கள் இந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்…” என்றார் இயக்குநர் புவனேஷ்.

இம்புட்டு பில்டப்பு இந்தப் படத்துக்குத் தேவையா..? படத்தின் கதைதான் இப்படியென்றால் இயக்கம்..!? எஸ்.வி.சேகரின் டிராமாகூட பரவாயில்லை என்றே நினைக்கிறேன்.

முதல் இருபது நிமிஷத்துல ஏதோ 'அவதார்' பட ரேஞ்சுக்கு படத்தோட கதையைச் சொல்லப் போறதா நினைச்சு. மெதுவா உருட்டிப் புரட்டிக் கொண்டு போகும்போதே நினைச்சேன்.. எனக்கு நேரம் சரியில்லையோன்னு..! அது நிசம்தான்..!


கன்னடத்துல கதாநாயகனா பல படங்கள்ல நடிச்ச பூஷன் அப்படீன்றவர் ஹீரோவா நடிச்சிருக்காரு.. இவருக்கு நம்ம விஷால் பரவாயில்லைதான்..! கடைசிவரைக்கும் ஒரே மாதிரியே முகத்தை வைச்சிருந்தால்தான் நடிப்புன்னு டைரக்டர் நினைச்சிருக்காரு.


வித்யான்ற கேரளத்துப் பொண்ணு ஹீரோயின்.. முக அழகு ஓகே.. ஆனா நடிப்பு.. இருந்தாலும், வரவழைக்கத் தெரியாத இயக்குநரா இருக்கிறதால பழியை அவர் மேலேயே போட்டுக்கலாம்..!
 
படத்துக்கு இன்னும் பில்டப்பு வேணும்னு நினைச்சு வேணும்னே ஒரு 'கிஸ்' சீனை திணிச்சிருக்காங்க.. அதுக்காக ஒரு வாரம் கோடம்பாக்கத்துல அலப்பறை பண்ணிட்டாங்க.. "பொண்ணு நடிக்க மாட்டேன்னு சொல்லிருச்சு.. அப்புறம் எப்படியோ கெஞ்சி, கூத்தாடி நடிக்க வைச்சோம்"னு..! 


சரி.. அதையாவது உருப்படியா எடுத்துக் காட்டினாங்களா..? இதுல "மூணு கேமிராவை வைச்சு எடு்த்தோம்"னு ஒரு கதை வேற..! இதுக்குப் பதிலா பழைய தமிழ்ச் சினிமால காட்டுற மாதிரி, இடைல பூவை காட்டிட்டுப் போயிருக்கலாம். இப்படி ரீல் விட்டும் தியேட்டருக்கு கூட்டம் வரலைன்றத பார்த்தா.. நம்மாளுக அம்புட்டு அறிவாளிகளான்னு ஆச்சரியமா இருக்கு..!?


படத்துல கொஞ்சமாச்சும் நடிச்சிருக்கிறது  தாய் மாமனா வரும் போஸ்வெங்கட்தான். ஆனா அதுக்காக 2 மணி நேரம் மிளகாய்த்தூள் மேல உக்காந்திருக்க முடியுமா..?

கிளைமாக்ஸ் காட்சி லொகேஷனை தேடிக் கண்டுபிடிச்ச நேரத்துக்காவது, கதை டிஸ்கஷனுக்கு டைம் ஒதுக்கியிருக்கலாம்..! இல்லாட்டி எடுத்தவரைக்கும் யாராவது பெரிய இயக்குநர்கள்கிட்ட படத்தைப் போட்டுக் காட்டி ஏதாவது கரெக்ஷன் கேட்டிருக்கலாம்.. பாக்யராஜ், பார்த்திபன்கிட்ட அஸிஸ்டெண்ட்டா இருந்திட்டு இப்படி படம் எடுத்தா, அவங்க பேர் கெடாதா..?

சந்திரன் தியேட்டர்ல 55 ரூபா டிக்கெட்ல படம் போடும்போது அஞ்சு பேர் உக்காந்திருந்தோம்..  அரை மணி நேரம் கழிச்சு திரும்பி பார்த்தேன் 2 பேரை காணோம்.. அடுத்த அரை மணி நேரம் கழிச்சு திரும்பிப் பார்த்தேன். அடுத்த 2 பேரையும் காணோம்.. இடைவேளைக்கு அப்புறம் நான் ஒரே ஆளு ரொம்பத் தைரியமா தன்னந்தனியா உக்காந்திருந்தேன்னா பார்த்துக்குங்கோ..!

ஏற்கெனவே மாசாமாசம் தியேட்டருக்கு வர்ற கூட்டம் குறைஞ்சுக்கிட்டே போகுது..! இது மாதிரி மாசத்துக்கு ஒரு படம் வந்தா போதும்.. தியேட்டர்கள் காத்தாடுவது உறுதி..!

எவ்வளவுதான் சொதப்பலான கதையாக இருந்தாலும் சுமாரான நடிகர்களை வைத்து தேற்றிவிடும் இயக்குநர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். சுமாரான திரைக்கதையில் நடிகர்களின் ஸ்கோப்பால் தப்பித்த படங்களும் உண்டு..! இது இரண்டுமில்லாமலும் எடுக்கத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் படங்களுக்கு உதாரணம் இத்திரைப்படம்.

படம் முடிந்து வெளியில் வரும்போது 'களவாணி' படம் பார்க்க ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்ததை பார்த்து கொஞ்சம் சந்தோஷம் வந்தது. பேசாமல் இதைப் பார்த்த நேரத்தில் இரண்டாவது முறையாக அதையாவது பார்த்துத் தொலைந்திருக்கலாம்..

இது மாதிரி இயக்கமே இல்லாமல் எடுக்கப்பட்டு. தயக்கமே இல்லாமல் தியேட்டரை விட்டு ஓடுகின்ற படங்களை பார்ப்பது எங்க தலையெழுத்து..? உங்களுக்கென்ன..? போய் அவங்கங்க சோலியைப் பாருங்கப்பூ..!

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

37 comments:

gopi g said...

உண்மையிலேயே பொறுமைக்கார மனிதன் தான் நீங்க. இந்த மாதிரி படம் பார்க்கறது மட்டுமில்லாம அதுக்கு ஒரு விமரிசனம் கூட எழுதறீங்களே பட்...உங்க நேர்மை புடிச்சிருக்கு


gopi g

Vidhoosh(விதூஷ்) said...

முருகா ... இவரை இப்படி சோதிக்கிராயே.. கொஞ்சம் ஏதோ பாத்து பண்ணப்பா .

Sundaresh said...

மகா பொறுமைசாலியான உங்களையே வெறுப்பேற்றியதில் படம் வெற்றி பெற்று விட்டது

பரிதி நிலவன் said...

சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது என்பது இதுதான். இதில உங்கள மிஞ்ச ஆளேயில்லை.

பரிதி நிலவன் said...

சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது என்பது இதுதான். இதில உங்கள மிஞ்ச ஆளேயில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அது எப்படி இது போல படத்தையே பார்க்கறீங்க ;))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[gopi g said...
உண்மையிலேயே பொறுமைக்கார மனிதன்தான் நீங்க. இந்த மாதிரி படம் பார்க்கறது மட்டுமில்லாம அதுக்கு ஒரு விமரிசனம்கூட எழுதறீங்களே பட். உங்க நேர்மை புடிச்சிருக்கு
gopi g]]]

நன்றி கோபிஜி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Vidhoosh(விதூஷ்) said...
முருகா இவரை இப்படி சோதிக்கிராயே.. கொஞ்சம் ஏதோ பாத்து பண்ணப்பா.]]]

என்னைய சோதிக்கிறதே இவனோட வேலையாப் போச்சுங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sundaresh said...
மகா பொறுமைசாலியான உங்களையே வெறுப்பேற்றியதில் படம் வெற்றி பெற்று விட்டது.]]]

ஓ.. முருகா.. இப்படியொரு பாயிண்ட்டும் இருக்கா இதுல..! சுந்தரேஷ் ஸார்.. நன்றி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பரிதி நிலவன் said...
சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது என்பது இதுதான். இதில உங்கள மிஞ்ச ஆளேயில்லை.]]]

ம்.. ஒப்புக்குறேன் பரிதி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
அது எப்படி இது போல படத்தையே பார்க்கறீங்க ;))]]]

அது தானா வந்து அமையுது ஸார்..! வேற வழியில்லையே..?

Jey said...

உங்க, இந்த பதிவ படிச்சிதான், இப்படி ஒரு படம் வந்திருக்குனு தெரிஞ்சிகிட்டேன் :)

பித்தன் said...

அட்டுப்படமா பாத்து அடியில சூடு வச்சுக்குறதே உங்களுக்கு வேலையாப் போச்சு..... இருந்தாலும் உங்க தைரியத்தைப் பாராட்டனும் அப்படியும் முழுப் படத்த பார்த்துட்டீங்க போல.... இதுல மூணு பக்க விமர்சனம் வேற பேஷ் பேஷ் தொடரட்டும் உங்கள் சேவை.

பித்தன் said...

தலைவருக்கு பாராட்டு விழா எடுக்கும்போது உங்களுக்கும்.......

ஹாலிவுட் பாலா said...

//போய் அவங்கங்க சோலியைப் பாருங்கப்பூ..!
//

ஆகட்டும்ண்ணே!! எப்பவும் போல கடைசி வரியா படிச்சா, இப்படி இருந்துச்சி!! ;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Jey said...
உங்க, இந்த பதிவ படிச்சிதான், இப்படி ஒரு படம் வந்திருக்குனு தெரிஞ்சிகிட்டேன் :)]]]

அடக் கர்மமே.. நாட்டுல நிலைமை இந்த லட்சணத்துல இருக்கா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...
அட்டுப் படமா பாத்து அடியில சூடு வச்சுக்குறதே உங்களுக்கு வேலையாப் போச்சு. இருந்தாலும் உங்க தைரியத்தைப் பாராட்டனும் அப்படியும் முழுப் படத்த பார்த்துட்டீங்க போல. இதுல மூணு பக்க விமர்சனம் வேற பேஷ் பேஷ் தொடரட்டும் உங்கள் சேவை.]]]

நன்றிங்கோ பித்தன்ஜி..! இதுக்காகவாச்சும் என் மேல பரிதாபப்பட்டு ஓட்டு போட்டிருக்கலாமே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...
தலைவருக்கு பாராட்டு விழா எடுக்கும்போது உங்களுக்கும்.]]]

ஐயா சாமி.. ஆளை விடுங்க..!

எதுக்கு பாராட்டு விழாவெல்லாம்..!? உங்க முன்னாடியே செத்துப் போனன்னா ஒரு மாலைய மட்டும் வாங்கிப் போடுங்க.. போதும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஹாலிவுட் பாலா said...
//போய் அவங்கங்க சோலியைப் பாருங்கப்பூ..!//

ஆகட்டும்ண்ணே!! எப்பவும் போல கடைசி வரியா படிச்சா, இப்படி இருந்துச்சி!! ;)]]]

நக்கலு..! நானே பாதை போட்டுக் கொடுத்திருக்கேன்ல.. அதான்..!

பிரபாகர் said...

கடைசி வரிய மொதலா போட்டிருந்தா படிக்காம அண்ணனுக்கு ஓட்டுங்கள மட்டும் போயிட்டு போயிருப்பேன்!

பிரபாகர்...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.///

உங்களுடைய தன்னடக்கம் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது!

இது மாதிரி படம் பார்ப்பதே ஒரு சாதனை தான்! அதற்கு விமர்சனம் எழுதுவது அதைவிட சாதனை!!

அதை எங்களை படிக்க வைத்து அதற்கு பின்னூட்டம் இட செய்வது மிக மிகப் பெரிய சாதனை!!!

உண்மைதமிழரே உங்கள் "profile" மாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. மேலே சொன்ன வாக்கியங்களையும் உங்கள் "profile" -இல சேர்த்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு,

பொய்த் தமிழன்!!!!!!!!!!!!!

குசும்பன் said...

அண்ணே இதுமாதிரி படம் தொடர்ந்து பார்க்கும் பொழுது ஒரு அல்லகை வெச்சிக்க, அட்லீஸ்ட் படத்தில் வருவது போல ஒரு போர்ட் நட உதவும்:))

டவுசர் பாண்டி... said...

எடிட்டர், மீசிக் டேரக்டர்,டேரக்டர்,ஆப்பரேட்டருக்கு அப்புறம் முழுப் படத்தையும் பார்த்த மவராசன் நீங்கதான்னு கோலிவுட்ல பேசிக்கறாங்களாமே...! உண்மையா?

ஜெட்லி... said...

கிஸ் சீன் இருக்குனு சொன்னவுடனே பார்க்க கிளம்பி இருப்பீங்க...

ஹ்ம்...

உண்மைய சொல்லுங்க இந்த படத்தை பார்க்க பிரியாணியும் குவாட்டரும் கொடுத்தாங்களா இல்லையா...??

சி.பி.செந்தில்குமார் said...

lip to lip சீன் இருந்தா உடனே போய்டுவீங்களோ

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
இடைவேளைக்கு அப்புறம் நான் ஒரே ஆளு ரொம்பத் தைரியமா தன்னந்தனியா உக்காந்திருந்தேன்னா பார்த்துக்குங்கோ..!
//

அண்ணே : உங்க தைரியத்த கண்டிப்பா பாராட்டியே ஆகணும்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரபாகர் said...
கடைசி வரிய மொதலா போட்டிருந்தா படிக்காம அண்ணனுக்கு ஓட்டுங்கள மட்டும் போயிட்டு போயிருப்பேன்!
பிரபாகர்...]]]

அதுனாலதான் நானும் கடைசியா போட்டேன்..!

எப்பூடி..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

//பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.///

உங்களுடைய தன்னடக்கம் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது!
இது மாதிரி படம் பார்ப்பதே ஒரு சாதனைதான்! அதற்கு விமர்சனம் எழுதுவது அதைவிட சாதனை!!

அதை எங்களை படிக்க வைத்து அதற்கு பின்னூட்டம் இட செய்வது மிக மிகப் பெரிய சாதனை!!!

உண்மைதமிழரே உங்கள் "profile" மாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. மேலே சொன்ன வாக்கியங்களையும் உங்கள் "profile" -இல சேர்த்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
பொய்த் தமிழன்!!!!!!!!!!!!!]]]

ஆஹா.. அம்பி..!

உங்களுடைய பாசம் என்னை புல்லரிக்க வைக்கிறது..!

இவ்ளோ பெரிய வார்த்தைகளை புரொபைலில் சேர்த்தால் அதன் பின்பு நான் என்ன எழுதினாலும் அது தற்புகழ்ச்சியாகத்தான் இருக்கும்..!

இதையெல்லாம் நீங்க மனசுக்குள்ளாற வைச்சுக்கிட்டாலே எனக்குப் போதும் சாமி..!

நன்றியோ நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குசும்பன் said...
அண்ணே இது மாதிரி படம் தொடர்ந்து பார்க்கும் பொழுது ஒரு அல்லகை வெச்சிக்க, அட்லீஸ்ட் படத்தில் வருவது போல ஒரு போர்ட் நட உதவும்:))]]]

அடப்பாவி குசும்பா..!

தியேட்டர்லயே என் உசிர் போனாலும் போயிரும்னு மறைமுகமாச் சொல்றியா..?

சரி.. நல்லாயிரு.. உன்னை மாதிரி தம்பிகள் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும் ராசா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டவுசர் பாண்டி... said...
எடிட்டர், மீசிக் டேரக்டர், டேரக்டர், ஆப்பரேட்டருக்கு அப்புறம் முழுப் படத்தையும் பார்த்த மவராசன் நீங்கதான்னு கோலிவுட்ல பேசிக்கறாங்களாமே...! உண்மையா?]]]

நிசம்தான் டவுசர் பாண்டி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெட்லி... said...

கிஸ் சீன் இருக்குனு சொன்னவுடனே பார்க்க கிளம்பி இருப்பீங்க...]]]

சத்தம் போட்டு சொல்லாத ராசா.. எல்லாருக்கும் கேட்டிரப் போகுது..!

[[[ஹ்ம்... உண்மைய சொல்லுங்க இந்த படத்தை பார்க்க பிரியாணியும் குவாட்டரும் கொடுத்தாங்களா இல்லையா...??]]]

ஐயோடா சாமி.. எனக்குத்தான் 75 ரூபா வேஸ்ட்டாயிருச்சு.. பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்திருந்தா இப்படியா எழுதியிருப்பேன்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
lip to lip சீன் இருந்தா உடனே போய்டுவீங்களோ]]]

ஹி.. ஹி.. ஹி.. ச்சும்மா.. எப்படி எடுத்திருக்காங்கன்னு பார்க்கலாம்னுதான்..!

பார்வையாளன் said...

இலக்கண பிழை படம் குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவல் ...

sivakasi maappillai said...

பதிவுலக பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

அண்ணன் உ.த. விற்கு உடனே கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்... இல்லாவிடில் இப்படிப்பட்ட விமர்சனங்களை படிக்க நேரிடும்... பீ கேர்புல்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//இடைவேளைக்கு அப்புறம் நான் ஒரே ஆளு ரொம்பத் தைரியமா தன்னந்தனியா உக்காந்திருந்தேன்னா பார்த்துக்குங்கோ..!//

அண்ணே : உங்க தைரியத்த கண்டிப்பா பாராட்டியே ஆகணும்.]]]

வெறும் பாராட்டுன்னு வாயாலயே முழம் போடுறீங்களே சாமி..!

வேற எதுனாச்சும் செய்யுங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
இலக்கண பிழை படம் குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவல்.]]]

எழுதிட்டாப் போச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[sivakasi maappillai said...

பதிவுலக பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

அண்ணன் உ.த.விற்கு உடனே கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்... இல்லாவிடில் இப்படிப்பட்ட விமர்சனங்களை படிக்க நேரிடும்... பீ கேர்புல்]]]

சிவகாசி மாப்பிள்ளை..

கையைக் கொடுங்க.. நீங்கதான் எனது நிஜமான நண்பர்..!

நான் தயாரா இருக்கேன்..! நாட்டாமைகளை சீர்வரிசையோட வரச் சொல்லுங்க..