அந்தரங்கம் - திரை விமர்சனம்


22-07-2010 
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“டேய் மவனே..! இன்னாடா ரொம்ப ரவுசு பண்றே.. முருகன் பேரைச் சொல்லி ஊரையே ஏமாத்துறியா..? நெத்தில பட்டையைப் போட்டுட்டு பலான, பலானா படமா பாத்திக்கின்னு..! பார்க்குறதோட நிறுத்திக்காம ஏதோ ஆஸ்கார் அவார்டு வாங்கின ரேஞ்சுக்கு அந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதிக்கினியா..! மவனே பேஜாராயிருவ..” - இப்படியெல்லாம் நீங்க என்னைத் திட்டுறது என் குறை காதுக்கே, நல்லா கேக்குது மக்கள்ஸ்..!

ஆனால், நான் ஏன் இந்தப் படத்தைப் பார்த்தேன் என்பதற்கான காரணத்தைக் கடைசியில் கொடுத்திருக்கிறேன். படிச்சு தெரிஞ்சுக்குங்க மக்களே..!
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாக 'அவள்' என்றொரு பலான படம் தமிழ்நாட்டில் வெளியாகி சக்கைப் போடு போட்டது. முதலீட்டைவிட பல மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்து அதன் தயாரிப்பாளர் ஜே.வி.ருக்மாங்கதனின் பெயரை என்னைப் போன்ற அப்போதைய சின்னஞ்சிறுசுகளின் மனதில் பச்செக்கென்று பதிய வைத்தது அந்தப் படம்.

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த 'அமுதா' என்ற நடிகையே அந்தப் படத்தை இன்றுவரையில் பார்த்திருக்காதபோது, இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்றுவரையில் பல்லாயிரக்கணக்கான ஷோக்கள் கண்டிருக்கிறது.

'லியோ பிலிம்ஸ்' என்கிற பெயரும் 'ருக்மாங்கதன்' என்கிற பெயரும் இந்தப் படத்துக்குப் பின்புதான் கோடம்பாக்கத்தில் பெரும் பிரபலமானது. ஆனால் அதற்கு முன்பேயே மலையாளத்தின் பலான, பலான படங்களை புரசைவாக்கம் 'மோட்சம்' தியேட்டர் ஓனர் பெர்னாண்டோவுடன் இணைந்து விநியோகம் செய்து கொளுத்த லாபம் சம்பாதித்தவர் இந்த ருக்மாங்கதன்..!

பலான படத் தொழிலில் நீண்ட பல வருட கால அனுபவம் கொண்ட இந்த மனிதர் அந்த மாதிரி படங்களுக்கு இப்போது வாய்ப்பில்லை என்பதால் கொஞ்ச நாள் அமைதியாகவே இருந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இவரை உசுப்பிவிட்டது வேலு பிரபாகரனின் 'காதல் கதை' படம்.

அந்தப் படம் சம்பாதித்து கொடுத்த பணத்தைக் கணக்கு போட்டுப் பார்த்த வேகத்தில் துவக்கியதுதான் இந்த 'அந்தரங்கம்' திரைப்படம்.

விபச்சாரத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும்..!

விபச்சாரத்தை ஒரு தொழிலாக அனுமதிக்க வேண்டும்..!

மும்பை, கொல்கத்தா போல தமிழ்நாட்டிலும் விபச்சார விடுதிகள் அமைக்க அரசு முன் வர வேண்டும்..!

தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..!

இப்படி நான்கு அம்சத் திட்டத்தை முன் மொழிந்திருக்கிறது இத்திரைப்படம்..!

பொதுவாக இம்மாதிரியான திரைப்படங்களில் திரைக்கதை வேகமாக இருந்து தொலையும்.. ஏனெனில் ஒரு ரீலுக்கு அடுத்த ரீலில் கண்டிப்பாக பெட்ரூம் சீன் வைத்தாக வேண்டும் என்பதால் காட்சியின் பில்டப்பிலேயே வாயில் ஜொள்ளு வடிய காத்திருக்க வைப்பதுதான் இது மாதிரியான படங்களின் வடிவமைப்பு..! இந்தப் படத்திலும் அதையேதான் செய்திருக்கிறார்கள்.

பரிமளா என்கிற பெண் ரிப்போர்ட்டர் 'அந்தரங்கம்' என்றொரு புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றுகிறாள். அதில் ஒரு விபச்சாரப் பெண்கள் பற்றிய உண்மைத் தொடர் கதையையும் எழுதி வருகிறாள். சென்னையில் தான் தங்குவதற்கு வீடு தேடுகிறாள் பரிமளா. தனி ஆள் என்பதால் கிடைக்கவில்லை. இவளைப் போலவே வீடு தேடி பேச்சுலர் என்பதால் வீடு கிடைக்காமல் அலையும் மதன் என்னும் இளைஞனை சந்திக்கிறாள். அவனுடைய ஐடியாவின்படி தாங்கள் இருவரும் தம்பதிகள் என்று பொய் சொல்லி ஒரு வீட்டில் குடியேறுகிறார்கள்.

மதன் ஆண் விபச்சாரியாக இருக்கிறான். தன்னை நாடி வரும் பெண்டிர்களைத் திருப்திபடுத்திவிட்டு தானும் நாலு காசு சம்பாதித்துவிட்டு குற்றவுணர்ச்சி எதுவுமில்லாமல் காசுக்கு காசுமாச்சு.. சுகத்துக்கு சுகமும் ஆச்சு என்று ஹாயாக இருக்கிறான்.

பரிமளா 'அந்தரங்கம்' பத்திரிகையில் தான் எழுதும் தொடர் கதையை. மதனிடம் அவ்வப்போது கொடுத்து படிக்கச் சொல்ல.. அவனும் அதனை படிக்கும்போது அது பரிமளாவின் சொந்தக் கதையாகவே திரையில் விரிகிறது.

பரிமளா தனது காதலனை நம்பி ஏமாந்தவள். காதலன் அவளை விபச்சார விடுதியில் தள்ளி விடுகிறான். அங்கே ஆடு, மாடுகளைப் போல அவளையும் ஒருவன் ஏலத்தில் எடுத்து அழைத்துச் சென்று நிர்வாணப் படம் எடுத்து பணம் சம்பாதிக்கிறான்.. அங்கிருந்து மீண்டு வந்தவள் அந்த வீடியோ படத்தை மீட்பதற்காக அதே விபச்சார விடுதிக்கு வருகிறாள்.

இப்போது விடுதி ஓனர் அவளை கட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்குள் தள்ளுகிறாள். தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது என்று சொல்லித் தப்பிக்கும் பரிமளாவை வழக்கம்போல கடைசியில் வரும் போலீஸார் காப்பாற்றுகிறார்கள்.

விஷயம் கோர்ட்டுக்கு வர.. கோர்ட்டில் நாட்டில் இருக்கும் விபச்சாரப் பெண்கள், இவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களான ஆண்கள் என இருவர் சார்பாகவும் வாதாடுகிறாள் பரிமளா.

ஆண்கள் உடல் சுகம் கிடைக்காததால் பெண்களைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது கிடைக்க ஏற்பாடு செய்வதுதான் அரசுகளின் வேலை. அதனால் விபச்சாரத்திற்கு சட்டப்பூர்வ அனுமதியைக் கொடுத்து, தொழில் நடத்த அரசு முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறாள். நீதிபதியும் 'ஆஹா.. ஓஹோ' என்று பாராட்டி அவளது கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்துவிட்டு இவளை அனுப்பி வைக்கிறார்.

பெண்கள் செய்யும் விபச்சாரத்தை சரி என்று சொல்லும் பரிமளா ஆண் விபச்சாரத்தை எதிர்க்கிறாள். கடைசியில் மதனே அப்படி ஆள்தான் என்று தெரியவந்து அவனது சோகக் கதையையும் கொஞ்சம் கலர், கலர் சீன்களோடு தெரிந்து கொண்டு வருத்தப்படுகிறாள்..!

மதன் தனது தரப்புக் கருத்தை வைக்க.. இதுவும் ஏத்துக்குற மாதிரிதானே இருக்கு என்ற பரிமளாவின் புரிதலுடன் மதன் தான் தவறு செய்வதாக ஒத்துக் கொண்டு இனிமேல் அத்தொழிலில் இறங்க மாட்டேன் என்று சொல்லி அவளுடன் இறங்கிவிடுகிறான். முடிந்தது.. சுபம்..!

இது மாதிரியான படங்களில் இயக்கம் பற்றியெல்லாம் மூச்சுகூட விடக்கூடாது. அதேதான் இங்கேயும்.. ஹீரோயின் மும்பை இறக்குமதி என்பது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.. நடிப்பு சுத்தமாக இல்லை. அதைவிட இயக்கம் அரோகரா..! ஏதோ ஒண்ணு.. கேமிரா ஒரு பக்கம் இருக்கு.. அவங்க மூஞ்சி ஒரு பக்கம் இருக்கு..! எங்கயோ பார்த்து எங்கிட்டோ பேசுறாங்க.. பிட்டு படத்துல இதையெல்லாம் கண்டுக்கக் கூடாதில்ல..!

அதிசயமாக பாடல்களின் இசையமைப்பு நன்றாக இருந்து தொலைந்தது. என்னடாவென்று விசாரித்தால் ஒரு ஹிந்தி ஆல்பத்தில் இருந்து அப்படியே சுட்டதாம்..! எவன் கேக்கப் போறான்..?

'மேட்டருக்கு வாடா கபோதி'ன்னு நீங்க கத்துறது என் காதுக்கு கேக்குது..! ஏதோ அங்கே, இங்கேன்னு கொஞ்சம் 'டபுள் எக்ஸ்' சீன்ஸ் எடுத்திருக்காங்க.. 'டிரிபுள் எக்ஸ்' எடுத்திருக்கலாம்.. எடுத்திருந்தா ஆந்திரா பார்டர்ல இருக்குற நகரில ஓடுற தியேட்டர்ல இணைச்சு ஓட்டினா கல்லா கட்டும்..! ஆனா எடுக்கலைன்னு நினைக்கிறேன்..!

எடுத்த சீன்களையெல்லாம் டூயல் சீனாவும், இம்ப்போஸ் சீன்ஸ்களாகவும் காட்டிவிட்டதால் தியேட்டரில் சவுண்ட்டுக்கு மேல சவுண்டு..! “டேய் ஆபரேட்டரு” என்றுகூட எதிர்ப்புக் குரல்கள். அவர் என்ன செய்வாரு பாவம்..? இருந்தாத்தான ஓட்டுவாரு..!?

நாலு குத்து பாட்டு.. ஆடுற அம்மணிகளையெல்லாம் எங்கிட்டிருந்தோ திரட்டிட்டு வந்திருக்குற மாதிரி தெரியுது.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம ஆடியிருக்காங்க.. இதுல இந்த சென்சார் போர்டு எதுக்காக V/U சர்டிபிகேட் கொடுத்தாங்கன்னு தெரியலை..! இதெல்லாம் குடும்பத்தோட, குடும்பக் கண்காணிப்புல பார்க்க வேண்டிய படமா..? இந்த லட்சணத்துல சென்சார்ல படம் பார்த்தவங்கள்ல மூணு பேரு லேடீஸாம்..! கொடுமைடா முருகா..!

இதுல மதனின் கதையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெண்டிர்கள்தான் கவனிக்கப்பட வேண்டியவர்கள். கோடம்பாக்கத்தில் இத்தனை நாட்களாக இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை..! 

விபச்சார விடுதி ஓனராக வரும் பெண்மணி கடந்த சில வருடங்களாகவே துண்டு, துக்கடா கேரக்டரில் நடித்து வந்தவர். இப்போது கவுதமியின் நடிப்பில் கலைஞர் டிவியில் வரும் தொடரில் மெயின் வில்லியாக நடித்து வருகிறார். உருப்படியா நடிச்சிருந்தது இந்தம்மா மட்டுந்தான்..! வாழ்க வளர்க..!

இது மாதிரியான முற்போக்கு கருத்துக்களை பகிரங்கமா வைக்கணும்னா இது மாதிரியான படத்துலதான் வைக்க முடியும். ஆனா இதை அதிகமா தெரிஞ்சுக்க வேண்டிய பெண்கள் ஒருவர்கூட வர முடியாத சூழலில் இப்படி படம் எடுத்து யாருக்கு என்ன ஆகப் போகுது..?

கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் செலவில் டிஜிட்டலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சென்னையிலேயே சொந்தமாகத்தான் ரிலீஸ் செய்திருக்கிறார் ருக்மாங்கதன். நான் பார்த்த உட்லண்ட்ஸில் ரிசல்ட் எப்படி என்று விசாரித்தேன்.. உதட்டைப் பிதுக்கினார்கள் தியேட்டர் ஊழியர்கள். ஒரு ஷோவுக்கு 60 பேருக்கு மேல வரலியாம்..! பாவம் தயாரிப்பு..! இதுவரையில் சம்பாதித்ததெல்லாம் இது ஒன்றிலேயே கரைந்து போயிருக்கும்..!

விபச்சார விடுதிகளை அரசே திறக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான்..! ஆனா அப்புறம் அங்க காத்தாடுதுன்னு சொல்லி அவங்க ப்ரீ டிஸ்கவுண்ட்டெல்லாம் போட்டு விளம்பரப்படுத்தி அடுத்து வர்ற ஜெனரேஷனும் அங்க போக, வர ஆரம்பிச்சா அதுனால யாருக்கு என்ன லாபம்..? மும்பையும், கொல்கத்தாவும் கெட்டது பத்தாதுன்னு தமிழ்நாடு வேறய்யா..? ரொம்பத்தான்யா யோசிக்கிறாங்க..!?

"எல்லாஞ் சரி.. நீ எதுக்குடா இந்தப் படத்துக்குப் போன பரதேசி..?" அப்படீன்னு கேக்குறீங்களா..?

இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது. ஆனால் படத்தின் கதையும், தயாரிப்பாளர், இயக்குநர் ருக்மாங்கதனின் ஜாதகமும் தெரிந்த காரணத்தால் ஒரு கூச்சத்தில் வேண்டாம்னு மறுத்தி்ட்டேன்..

அதான்.. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு போனேன்.. ஹி.. ஹி.. ஹி..!

பச்சைப் புள்ளைகளெல்லாம் இதைப் படிச்சிட்டு இத்தோட மறந்திட்டுப் போயிரணும்.. யாரும் இந்தப் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கால் வைக்கப்படாது சொல்லிப்புட்டேன்..!

பெரியவங்க சொன்னா முருகன் சொன்ன மாதிரி.. கேக்கோணும்..!

37 comments:

பரிதி நிலவன் said...

//இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது.//

நீங்க வசனம் எழுதியிருந்தீங்கன்னா இந்த படத்தீல் எல்லோரும் நீளமா பேசறதை மட்டும்தான் காட்டியிருக்க முடியும், மற்றபடி நீலமா வேற எதையும் காட்டியிருக்க முடியாது :)

தனி காட்டு ராஜா said...

//விபச்சாரத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும்..!
விபச்சாரத்தை ஒரு தொழிலாக அனுமதிக்க வேண்டும்..!
மும்பை, கொல்கத்தா போல தமிழ்நாட்டிலும் விபச்சார விடுதிகள் அமைக்க அரசு முன் வர வேண்டும்..!
தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..!//

வரவேற்க வேண்டிய விஷயம் முருகா ......

//இந்த லட்சணத்துல சென்சார்ல படம் பார்த்தவங்கள்ல மூணு பேரு லேடீஸாம்..! கொடுமைடா முருகா..!//

எல்லாத்துக்கும் நம்ம கண்ணோட்டம் தான் காரணம் முருகா ......திருத்தணியில் காமத்தை தனிப்பவனும் முருகன் தான் .....பழனியில் ஆண்டியாய் கோலம் கொண்டவனும் முருகன் தான் முருகா ................


முடிஞ்சா இதை படிங்க முருகா .......http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

நித்யகுமாரன் said...

அண்ணா...

உங்களின் சமுதாய அக்கறை புல்லரிக்க வைக்கிறது. பொழப்பைத் தவிர எல்லாத்தையும் பாக்கிறீங்க போல இருக்கு...

அன்பு நித்யன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

// இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது. ஆனால் படத்தின் கதையும், தயாரிப்பாளர், இயக்குநர் ருக்மாங்கதனின் ஜாதகமும் தெரிந்த காரணத்தால் ஒரு கூச்சத்தில் வேண்டாம்னு மறுத்தி்ட்டேன்//
பட் ..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!

ஜெட்லி... said...

நேத்தே உங்க கிட்ட கேட்க நினைச்சேன்...
ஆனா அதுக்குள்ள விமர்சனமே போட்டீங்க....

//பச்சைப் புள்ளைகளெல்லாம் இதைப் படிச்சிட்டு இத்தோட மறந்திட்டுப் போயிரணும்.. யாரும் இந்தப் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கால் வைக்கப்படாது சொல்லிப்புட்டேன்..!
//

சொல்லிட்டீங்க இல்ல.... போகாம இருக்க ட்ரை பண்றேன்...

ஸ்ரீராம். said...

படிச்சு முடிச்ச உடன் என்ன படிச்சோம் என்பதே மறந்து விட்டது.... (நாங்கள்ளாம் சொன்ன பேச்சு கேப்போம்ல)....என்ன கமென்ட் போடுவது...?!

ஜாக்கி சேகர் said...

பச்சைப் புள்ளைகளெல்லாம் இதைப் படிச்சிட்டு இத்தோட மறந்திட்டுப் போயிரணும்.. யாரும் இந்தப் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கால் வைக்கப்படாது சொல்லிப்புட்டேன்..!

இப்படி சொல்லி சொல்லியே... படத்தை பாத்துடுறேயே பரட்டை...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பரிதி நிலவன் said...

//இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது.//

நீங்க வசனம் எழுதியிருந்தீங்கன்னா இந்த படத்தீல் எல்லோரும் நீளமா பேசறதை மட்டும்தான் காட்டியிருக்க முடியும், மற்றபடி நீலமா வேற எதையும் காட்டியிருக்க முடியாது:)]]]

ஆஹா..

பரிதியண்ணே..!

உங்க பாசத்துக்கு மிக்க நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தனி காட்டு ராஜா said...

//விபச்சாரத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும்..!
விபச்சாரத்தை ஒரு தொழிலாக அனுமதிக்க வேண்டும்..!
மும்பை, கொல்கத்தா போல தமிழ்நாட்டிலும் விபச்சார விடுதிகள் அமைக்க அரசு முன் வர வேண்டும்..!
தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்..!//

வரவேற்க வேண்டிய விஷயம் முருகா ......

//இந்த லட்சணத்துல சென்சார்ல படம் பார்த்தவங்கள்ல மூணு பேரு லேடீஸாம்..! கொடுமைடா முருகா..!//

எல்லாத்துக்கும் நம்ம கண்ணோட்டம்தான் காரணம் முருகா.. திருத்தணியில் காமத்தை தனிப்பவனும் முருகன்தான்.. பழனியில் ஆண்டியாய் கோலம் கொண்டவனும் முருகன்தான் முருகா..


முடிஞ்சா இதை படிங்க முருகா http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html]]

நன்றிங்கண்ணே..! வர்றோம்ண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நித்யகுமாரன் said...

அண்ணா... உங்களின் சமுதாய அக்கறை புல்லரிக்க வைக்கிறது. பொழப்பைத் தவிர எல்லாத்தையும் பாக்கிறீங்க போல இருக்கு...

அன்பு நித்யன்]]]

அன்புத் தம்பி நித்யா..!

இத்தனை நாள் கழிச்சு வர்றதுக்கு எனது வன்மையான கண்டனங்கள்..!

நம்ம பொழப்புகூடவே இதையும் சேர்த்து பார்த்துக்கிட்டிருக்கோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஆர்.கே.சதீஷ்குமார் said...

//இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது. ஆனால் படத்தின் கதையும், தயாரிப்பாளர், இயக்குநர் ருக்மாங்கதனின் ஜாதகமும் தெரிந்த காரணத்தால் ஒரு கூச்சத்தில் வேண்டாம்னு மறுத்தி்ட்டேன்//

பட்.. உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!]]]

ஹி.. ஹி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெட்லி... said...

நேத்தே உங்ககிட்ட கேட்க நினைச்சேன்... ஆனா அதுக்குள்ள விமர்சனமே போட்டீங்க....

//பச்சைப் புள்ளைகளெல்லாம் இதைப் படிச்சிட்டு இத்தோட மறந்திட்டுப் போயிரணும்.. யாரும் இந்தப் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கால் வைக்கப்படாது சொல்லிப்புட்டேன்..!//

சொல்லிட்டீங்க இல்ல. போகாம இருக்க ட்ரை பண்றேன்.]]]

தம்பி.. ட்ரையெல்லாம் பண்ணக் கூடாது.. போகக் கூடாதுன்னா போகக் கூடாதுதான்..!

டவுசர் பாண்டி... said...

இந்த மாதிரி படஙகள் இருவது வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ அதே தரத்துலதான் இப்பவும் இருக்கு.அதான் நெம்ப ஃபீலா இருக்கு. எத்தனை நாளைக்குத்தான் பெட்ல பீப்பாய்களையே உருட்டீட்டு இருப்பாய்ங்க...

சாந்தீன்னு ஒரு படம் வருதாம் பாஸ், அந்த புள்ள போட்டோதான் இப்ப எல்லா பக்கமும் தூள் பறக்குது. யூட்யூப் ல கூட வீடியோ இருக்காம். அந்த லிங்க் இங்க போட்டா இந்த மாதிரி பதிவு போட்ட பாவம் போய்டுமாம்...சீக்கிரம் லிங்க் குடுங்க பாஸ்!

எறும்பு said...

//இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது.//

naanga paavam.. venaam..

ராம்ஜி_யாஹூ said...

அவள் படம் சுமாரான ஓட்டம் தான், நீங்கள் சொலவது போல மிகப் பெரிய வெற்றி என்று எல்லாம் இல்லை.

மிகப் பெரிய வெற்றி என்பது - கரகாட்ட காரன், அண்ணாமலை, அபூர்வ சகூடரர்கள், காதலுக்கு மரியாதை போன்றவை.

முதல் பாவம் ஓடிய அளவிற்கு கூட அவள் ஓட வில்லை.

ருக்மாதங்கன் நிறைய படங்களுடன் தொடர்பு உடையவர்.

கார்க்கி said...

நீங்க வசனம் எழுதியிருக்க வேண்டிய படம் என்பதற்காக ஒரே ஒரு முறை பார்த்துக்கிறேண்ணா..

நீங்க எழுதியிருந்தா 10 தடவ பார்த்திருப்பேன் என்ப்தை சபைக்கு சொல்லிக் கொள்கிறேன்

ஹாலிவுட் பாலா said...

//ஆண்கள் உடல் சுகம் கிடைக்காததால் பெண்களைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது கிடைக்க ஏற்பாடு செய்வதுதான் அரசுகளின் வேலை. //

பொடனில அடிச்ச மாதிரி இருந்துச்சா... கலிஞ்சார்?? இதை விட வேற என்ன உருப்படியான வேலைய்யா செய்யறீங்க??

=====

//பெண்கள் செய்யும் விபச்சாரத்தை சரி என்று சொல்லும் பரிமளா ஆண் விபச்சாரத்தை எதிர்க்கிறாள்.//

//மதன் தான் தவறு செய்வதாக ஒத்துக் கொண்டு இனிமேல் அத்தொழிலில் இறங்க மாட்டேன்//

இது பெண்ணாதிக்க பாஸிஸ பார்ப்பனீயம்ண்ணே!! இதை சும்மா விடக்கூடாதுண்ணே!!

=====

ஹாலிவுட் பாலா said...

//ஒரு கூச்சத்தில் வேண்டாம்னு மறுத்தி்ட்டேன்//

பொழைக்கத் தெரியாத ஆளுண்ணே நீங்க!!

அய்யருமாருங்க கொம்பெனியில வேலை செய்யறவரு கூட.. ‘பார்ப்பனீயத்துக்கு’ எதிரா பேசிட்டு... அப்புறம் ‘அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல’-ன்னு சொல்லுறாரு.

நீங்கள்ளாம் எப்ப திருந்தி...!!!!

குசும்பன் said...

//கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாக 'அவள்' என்றொரு பலான படம் தமிழ்நாட்டில் வெளியாகி சக்கைப் போடு போட்டது. முதலீட்டைவிட பல மடங்கு லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்து அதன் தயாரிப்பாளர் ஜே.வி.ருக்மாங்கதனின் பெயரை என்னைப் போன்ற அப்போதைய சின்னஞ்சிறுசுகளின் மனதில் பச்செக்கென்று பதிய வைத்தது அந்தப் படம்.

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த 'அமுதா' என்ற நடிகையே அந்தப் படத்தை இன்றுவரையில் பார்த்திருக்காதபோது, இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்றுவரையில் பல்லாயிரக்கணக்கான ஷோக்கள் கண்டிருக்கிறது.

'லியோ பிலிம்ஸ்' என்கிற பெயரும் 'ருக்மாங்கதன்' என்கிற பெயரும் இந்தப் படத்துக்குப் பின்புதான் கோடம்பாக்கத்தில் பெரும் பிரபலமானது. ஆனால் அதற்கு முன்பேயே மலையாளத்தின் பலான, பலான படங்களை புரசைவாக்கம் 'மோட்சம்' தியேட்டர் ஓனர் பெர்னாண்டோவுடன் இணைந்து விநியோகம் செய்து கொளுத்த லாபம் சம்பாதித்தவர் இந்த ருக்மாங்கதன்..!

பலான படத் தொழிலில் நீண்ட பல வருட கால அனுபவம் கொண்ட இந்த மனிதர் அந்த மாதிரி படங்களுக்கு இப்போது வாய்ப்பில்லை என்பதால் கொஞ்ச நாள் அமைதியாகவே இருந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இவரை உசுப்பிவிட்டது வேலு பிரபாகரனின் 'காதல் கதை' படம்.//


முதலிரவு அறையில் உட்காந்துக்கிட்டு, ஒன்னாவதுல உங்க கிளாஸ் டீச்சர் ஆரு? யாரு உன் பிரண்டும், அப்புறம் 2வது படிக்கும் பொழுது கணக்குல எம்புட்டு மார்க் வாங்கினன்னு படிபடியா பேசி MBA வரை வந்தா எவ்வளோ எரிச்சலா இருக்கும்... அதுமாதிரி இருக்கு முதல் 5 பாரா.

அதை எல்லாம் எடிட் செஞ்சுட்டு பிட்டை சேரு அண்ணாத்தே:))

குசும்பன் said...

//ஏதோ ஒண்ணு.. கேமிரா ஒரு பக்கம் இருக்கு.. அவங்க மூஞ்சி ஒரு பக்கம் இருக்கு..! எங்கயோ பார்த்து எங்கிட்டோ பேசுறாங்க.. //

குதிரைக்கு கண்ணுல மறைப்பு போட்டாலும், பாதையில் சரியா ஓடும்

குசும்பன் said...

//இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது. ஆனால் படத்தின் கதையும், தயாரிப்பாளர், இயக்குநர் ருக்மாங்கதனின் ஜாதகமும் தெரிந்த காரணத்தால் ஒரு கூச்சத்தில் வேண்டாம்னு மறுத்தி்ட்டேன்.. //

அண்ணே இந்த படத்துல வசனம் எழுத மாட்டேன் என்று சொல்லிட்டு விமர்சனம் வரிக்கு வரி எழுதுவதுக்கு அந்த வேலையையே செஞ்சிருக்கலாம்.. காசாவது கிடைச்சிருக்கும்.

அப்புறம் வசனம் எல்லாம் என்ன இருக்கும்.... கட்டிபுடி கட்டிபுடி டா பாட்டில் வரும் சவுண்டை வசனமா எழுதவேண்டியது தானே:)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஸ்ரீராம். said...
படிச்சு முடிச்ச உடன் என்ன படிச்சோம் என்பதே மறந்து விட்டது. (நாங்கள்ளாம் சொன்ன பேச்சு கேப்போம்ல) என்ன கமென்ட் போடுவது...?!]]]

அதான் இப்ப போட்டுட்டீங்களே.. இதுவே போதுங்கண்ணா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜாக்கி சேகர் said...

பச்சைப் புள்ளைகளெல்லாம் இதைப் படிச்சிட்டு இத்தோட மறந்திட்டுப் போயிரணும்.. யாரும் இந்தப் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கால் வைக்கப்படாது சொல்லிப்புட்டேன்..!

இப்படி சொல்லி சொல்லியே படத்தை பாத்துடுறேயே பரட்டை.]]]

நான் அண்ணன் இல்லியா ஜாக்கி..! அதுதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டவுசர் பாண்டி... said...
இந்த மாதிரி படஙகள் இருவது வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ அதே தரத்துலதான் இப்பவும் இருக்கு. அதான் நெம்ப ஃபீலா இருக்கு. எத்தனை நாளைக்குத்தான் பெட்ல பீப்பாய்களையே உருட்டீட்டு இருப்பாய்ங்க...]]]

சென்சார் இன்னும் கொஞ்சம் மனசு வைச்சா மிச்சத்தையெல்லாம் பார்க்கலாம்.. எப்படியும் நம்ம பேரனுக காலத்துல அது நடந்திரும்..!

[[[சாந்தீன்னு ஒரு படம் வருதாம் பாஸ், அந்த புள்ள போட்டோதான் இப்ப எல்லா பக்கமும் தூள் பறக்குது. யூட்யூப்லகூட வீடியோ இருக்காம். அந்த லிங்க் இங்க போட்டா இந்த மாதிரி பதிவு போட்ட பாவம் போய்டுமாம். சீக்கிரம் லிங்க் குடுங்க பாஸ்!]]]

கூகிளாண்டவர்கிட்ட கேளுங்க பாஸ்.. உடனே கொடுக்குறாரு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கார்க்கி said...
நீங்க வசனம் எழுதியிருக்க வேண்டிய படம் என்பதற்காக ஒரே ஒரு முறை பார்த்துக்கிறேண்ணா..
நீங்க எழுதியிருந்தா 10 தடவ பார்த்திருப்பேன் என்ப்தை சபைக்கு சொல்லிக் கொள்கிறேன்.]]]

அப்பாடா.. பயபுள்ளை ரொம்ப நாள் கழிச்சு நம்ம வூடு தேடி வந்திருக்கு..!

இப்படி மேட்டரை பத்தி மேட்டர் போட்டா மட்டும்தான் வருவாரு போலிருக்கு..!

தம்பி நல்லாயிருப்பூ..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஹாலிவுட் பாலா said...

//ஆண்கள் உடல் சுகம் கிடைக்காததால் பெண்களைத் தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது கிடைக்க ஏற்பாடு செய்வதுதான் அரசுகளின் வேலை. //

பொடனில அடிச்ச மாதிரி இருந்துச்சா... கலிஞ்சார்?? இதைவிட வேற என்ன உருப்படியான வேலைய்யா செய்யறீங்க??]]]

28-ம் தேதி பாராட்டு விழாவாம்.. மிதப்புல இருக்காரு..!

//பெண்கள் செய்யும் விபச்சாரத்தை சரி என்று சொல்லும் பரிமளா ஆண் விபச்சாரத்தை எதிர்க்கிறாள்.//

//மதன் தான் தவறு செய்வதாக ஒத்துக் கொண்டு இனிமேல் அத்தொழிலில் இறங்க மாட்டேன்//

இது பெண்ணாதிக்க பாஸிஸ பார்ப்பனீயம்ண்ணே!! இதை சும்மா விடக்கூடாதுண்ணே!!]]]

சரிதான்.. மவுண்ட் ரோட்ல மண்ணெண்ணைய்யை ஊத்தி தீக்குளிக்கப் போறேன்.. துணைக்கு வர்றியா பாலா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஹாலிவுட் பாலா said...

//ஒரு கூச்சத்தில் வேண்டாம்னு மறுத்தி்ட்டேன்//

பொழைக்கத் தெரியாத ஆளுண்ணே நீங்க!!

அய்யருமாருங்க கொம்பெனியில வேலை செய்யறவரு கூட.. ‘பார்ப்பனீயத்துக்கு’ எதிரா பேசிட்டு... அப்புறம் ‘அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல’-ன்னு சொல்லுறாரு. நீங்கள்ளாம் எப்ப திருந்தி...!!!!]]]

எனக்குப் பிடிக்கல பாலா..! மத்தவங்களோட குணாதிசயத்துல கம்ப்பேர் பண்ணிக்கக் கூடாது.. நமக்குத்தான் ஆபத்து..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எறும்பு said...

//இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது.//

naanga paavam.. venaam..]]]

அதுனாலதான் விட்டுட்டேன் ராசா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராம்ஜி_யாஹூ said...

அவள் படம் சுமாரான ஓட்டம்தான், நீங்கள் சொலவது போல மிகப் பெரிய வெற்றி என்று எல்லாம் இல்லை.

மிகப் பெரிய வெற்றி என்பது - கரகாட்ட காரன், அண்ணாமலை, அபூர்வ சகூடரர்கள், காதலுக்கு மரியாதை போன்றவை.]]]

அண்ணே.. வெற்றின்னு சொன்னவுடனேயே இந்த அளவுக்கு ஏண்ணே நினைச்சுக்குறீங்க..? பலான படங்கள் வரிசைல வெற்றிப் படம்தான்..!

இரண்டாவது, மூன்றாவது ரவுண்ட்டுலேயும் விநியோகஸ்தர்களுக்கு காசை அள்ளிக் கொடுத்துச்சு..! இடைல ஓட்டுன பிட்டுனாலதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

குசும்பன் said...

//முதலிரவு அறையில் உட்காந்துக்கிட்டு, ஒன்னாவதுல உங்க கிளாஸ் டீச்சர் ஆரு? யாரு உன் பிரண்டும், அப்புறம் 2-வது படிக்கும் பொழுது கணக்குல எம்புட்டு மார்க் வாங்கினன்னு படிபடியா பேசி MBAவரை வந்தா எவ்வளோ எரிச்சலா இருக்கும்...?]]

யாருக்கு ராசா..? எனக்கா? அவுகளுக்கா..? எனக்கு அனுபவம் இல்லை. அதான் கேக்குறேன்..!

[[[அது மாதிரி இருக்கு முதல் 5 பாரா. அதை எல்லாம் எடிட் செஞ்சுட்டு பிட்டை சேரு அண்ணாத்தே:))]]]

பிட்டே இல்லையாடா கண்ணா.. அப்புறம் எங்க ஓட்டுறது..? அதுனாலதான் நம்ம பிட்டை வைச்சு ஒப்பேத்தினேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குசும்பன் said...

//ஏதோ ஒண்ணு.. கேமிரா ஒரு பக்கம் இருக்கு.. அவங்க மூஞ்சி ஒரு பக்கம் இருக்கு..! எங்கயோ பார்த்து எங்கிட்டோ பேசுறாங்க.. //

குதிரைக்கு கண்ணுல மறைப்பு போட்டாலும், பாதையில் சரியா ஓடும்.]]]

இடைல பள்ளம் இருந்தா என்ன செய்யும்..?

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
படம் பார்த்தவங்கள்ல மூணு பேரு லேடீஸாம்..!

.....
......

ஆனா இதை அதிகமா தெரிஞ்சுக்க வேண்டிய பெண்கள் ஒருவர்கூட வர முடியாத சூழலில் இப்படி படம் எடுத்து யாருக்கு என்ன ஆகப் போகுது

//
அண்ணே : சென்சார் போர்டு புண்ணியத்துல 3 லேடீஸ் பாத்து இருக்காங்களே....

//
//
இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது
//
வேல செய்யாம சம்பளம் மட்டும் வாங்குரது உங்களுக்கு பிடிக்காதுங்கிறது எனக்கு தெரியும்.

சி.பி.செந்தில்குமார் said...

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த 'அமுதா' என்ற நடிகையே அந்தப் படத்தை இன்றுவரையில் பார்த்திருக்காதபோது, இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்றுவரையில் பல்லாயிரக்கணக்கான ஷோக்கள் கண்டிருக்கிறது

உங்க ஞாபக சக்திக்கு ஒரு ஓ போடலாம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//படம் பார்த்தவங்கள்ல மூணு பேரு லேடீஸாம்..!

.....
......

ஆனா இதை அதிகமா தெரிஞ்சுக்க வேண்டிய பெண்கள் ஒருவர்கூட வர முடியாத சூழலில் இப்படி படம் எடுத்து யாருக்கு என்ன ஆகப் போகுது//

அண்ணே : சென்சார் போர்டு புண்ணியத்துல 3 லேடீஸ் பாத்து இருக்காங்களே....

// இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு என்னிடம் வந்தது//

வேல செய்யாம சம்பளம் மட்டும் வாங்குரது உங்களுக்கு பிடிக்காதுங்கிறது எனக்கு தெரியும்.]]]

நச்சென்று இருக்கிறது கடைசி வரிகள்.. நன்றி வழிப்போக்கன் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சி.பி.செந்தில்குமார் said...

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த 'அமுதா' என்ற நடிகையே அந்தப் படத்தை இன்றுவரையில் பார்த்திருக்காதபோது, இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்றுவரையில் பல்லாயிரக்கணக்கான ஷோக்கள் கண்டிருக்கிறது

உங்க ஞாபக சக்திக்கு ஒரு ஓ போடலாம்]]]

நன்றி செந்தில் ஆண்டவா..!

abeer ahmed said...

See who owns mickdonald.com or any other website:
http://whois.domaintasks.com/mickdonald.com

abeer ahmed said...

See who owns waptrick.in or any other website.