தேவலீலை - திரை விமர்சனம் - மதுர பெருசு தருமிக்கு சமர்ப்பணம்


17-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“குருவே தங்கள் சித்தப்படி நடப்பேன்..

உனக்கு மங்களம் உண்டாகட்டும்..

கற்றுக் கொடுத்த குருவையே கொன்றுவிட்டாயே.. இது நீச பாவமில்லையா..?

இளவரசி.. தங்களைக் காணாமல் அரசர் அங்கே கவலைப்படுவார்..

என் மணாளனைக் கண்டுபிடிக்காமல் நான் நாடு திரும்ப மாட்டேன்..

அந்த மூன்று பெண்களையும் அடைந்தே தீருவேன்..

எனது சக்தி எப்படிப்பட்டது என்பதை நீயே நேரில் காணப் போகிறாய்..

துஷ்டனே.. விலகிச் செல்.. என் வழியில் குறுக்கிடாதே..

குழந்தாய் நீ கேட்டது கிடைக்கும். விரும்பியது அனுகூலமாகும்.. வெற்றி நிச்சயம்..”


- இப்படியெல்லாம் தூயத் தமிழை 70 எம்.எம். திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது. அந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார்   பிரபாகரன் என்ற இயக்குநர். 

இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்குரிய திரைப்படம். சந்தேகமேயில்லை. இதன் கதை இதுவரையில் தமிழ்த் திரையுலகில் யாருமே சிந்திக்காத கதை.. இது மாதிரியான கதைகளையெல்லாம் சிந்தித்து எழுத வேண்டுமெனில் நீங்கள் பிரபாகரனைப் போல பகுத்தறிவுவாதியாக இருந்தால் மட்டுமே முடியும்..

ஆதி காலமாம். ஒரு குரு தனது சிஷ்யனுக்கு எதை, எதையோ சொல்லிக் கொடுத்து ஆளாக்குகிறார். பரிசாகத் தனக்கு குரு கொடுத்த வாளால் அவரையே வெட்டி வீழ்த்திவிட்டு நானே இவ்வுலகின் ராஜா என்கிறான் அந்தக் கிறுக்கன். கிழக்கு, மேற்கு, வடக்கு என்ற மூன்று திசைகளில் காணப்போகும் மூன்று கன்னிகளையும் அடைந்தால் அவன் உலகையே ஆளும் சக்தியை அடைவான் என்று குரு சொன்னதை உடன் இருக்கும் ஒரு அல்லக்கையும் ரிப்பீட் செய்ய கதை தொடர்கிறது. ஒவ்வொரு திசையில் இருந்து ஒரு பெண் கிடைக்க மூவரையும் அடைவதற்கு ஐயா அல்லல்படுகிறார். கடைசியில் கன்னிகளை அடைந்தாரா அல்லது கைலாசத்தை அடைந்தாரா என்பதுதான் கதை. அட்டகாசம்ல்ல..

படத்துல மொத்தமே பத்தே பத்து கேரக்டர்கள்தான். இதுல நாலு பேர் பெண்கள்.. முன்பு ஒரு காலத்தில் மதுரையின் மது தியேட்டரில் சொப்னசுந்தரி படம் பார்த்த நினைப்புதான் வந்தது. கதைதான் டுபாக்கூர் என்றால், எடுத்தது கூடவா..?

இது மாதிரி கதைகளை அல்வா சாப்பிடுவதுபோல் சுட்டுத் தள்ளிய மலையாள கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு கோவில் கட்டலாம் போலத் தோன்றியது இந்தக் கர்மத்தை பார்த்த பின்பு..  வசந்த் டிவியில் பகல் நேர ஸ்லாட் டைமில் ஓடும் சீரியல்கூட இதனைவிட கச்சிதமாக எடுத்திருப்பார்கள். அவ்வளவு கன்றாவி..

காட்சியமைப்புகள்தான் சோதனையைக் கொடுத்தனவென்றால், எடுத்த விதம்.. ஏதோ கேமிராவைக் கையில் வைத்துக் கொண்டு ஹேண்டியாகவே சுட்டுத் தள்ளியிருந்தாலும் அதில் ஒரு ஒழுங்கு வேண்டாமா..? இதுதான் இப்படியென்றால் நடிப்பு.. அட்சரச் சுத்தம்.. ஒருத்தர்கூட டேக்ல நடிக்கலை.. ரிகர்சல்ல நடிச்ச மாதிரி நடிச்சுத் தொலைஞ்சிருக்காங்க..

பாதி வசனம் பேசி முடிக்கிறதுக்குள்ள ஷாட் மாறுது.. லிப்ஸ் தடம் மாறுது.. கேமிரா எங்கிட்டோ இருக்கு.. இவுக எங்கிட்டோ பார்த்து பேசுறாங்க.. பெண்களை காட்டுகின்றபோது மட்டும் கேமிரா அனைத்து பகுதிகளையும் வளைத்து, வளைத்துச் சுட்டுத் தள்ளியிருக்கிறது. அவர்களது நோக்கம் அதுதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..

இடையில் நிறைய பிட்டு படங்கள் எடுத்திருக்கும் வாய்ப்பு இருந்தது போல எனக்குத் தோன்றியது. ஆனால் எடுத்தார்களா என்று தெரியவில்லை. எடுத்திருந்தால் திருச்சியைத் தாண்டி இணைத்து ஓட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

மிஞ்சிப் போனால் இந்தப் படத்துக்காக 30 லட்சம் ரூபாய் செலவாயிருக்கும். இதில் பிரிண்ட் போடுவதற்கு மட்டுமே கூடுதல் செலவாகியிருக்கும்.. 

படத்தில் நடித்த பெண்கள் எக்குத்தப்பாக 'திறமை'யை காட்டித் தொலைத்த, சில ஸ்டில்ஸ்களை அவசரம், அவசரமாக மீடியா பக்கம் தள்ளிவிட்டது தயாரிப்பு தரப்பு. பின்பு மீண்டும் அதே அவசரமாக தொடர்பு கொண்டு "அதை மட்டும் போட்டுறாதீங்க.. மேட்டர் படம்னு நினைச்சு கூட்டம் வராம போயிரும்" என்று சொல்லி தடுத்ததாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

இவுங்க சொன்னாத்தான் பிட்டு படம்னு தெரியணுமாக்கும். போஸ்டரே தெள்ளத் தெளிவா சொல்லுதே.. நான் பார்த்தவரையிலும் இன்றைக்குத்தான் சக்தி கருமாரி தியேட்டர்ல 75 சதவிகிதம் கூட்டம்.. மதராசபட்டினத்துக்குக்கூட இந்தக் கூட்டம் இல்லப்பா..!

ஆனால் படம் எதிர்பார்த்தது போல் இல்லாததால் படம் முடிந்தவுடன் ஆபரேட்டரின் நான்கு தலைமுறையையே நாறடித்துவிட்டுத்தான் ஒரு கும்பல் படியிறங்கியது.. கிழிப்பதற்கு குஷன் சேர்கள் இல்லாததால் அவர்களால் முடிந்தது இதுதான்..!

இந்தக் கண்றாவிக்கு நானும் வேற அறுபது ரூபாயை செலவழிச்சுத் தொலைஞ்சிருக்கேன்.. யாரைக் கேட்டுடா போனன்னு கேக்குறீங்களா..? எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!

இதுக்கு மேலேயும் யாராவது இந்தப் படத்துக்குப் போயி பார்த்துப்புட்டு வந்து விமர்சனம் எழுதுனீங்க.. ஒரு மாசத்துக்கு அவங்களுக்கு மைனஸ் குத்து குத்திருவேன்.. ஜாக்கிரதை..!

டிஸ்கி-1 : மதராசப்பட்டினம் படத்துக்குத்தான் முதல்ல விமர்சனம் எழுதலாம்னு நினைச்சேன். ஆனா அந்தப் படம் பார்க்கும்போது பக்கத்துல வந்து உக்காந்த ஒரு குடிகாரத் தமிழ்க்குடிமகன் செஞ்ச கொடுமையால படத்துல முழுசா லயிக்க முடியாம போயி இப்போ எழுதறதுக்கே எதுவும் வர மாட்டேங்குது.. ச்சே.. எங்க போனாலும் இந்த குடிகாரனுங்க தொல்லை தாங்கலப்பா..

டிஸ்கி-2 : நேற்றைக்குத்தான் நமது மதுரைக்கார பெரியவர், இனமானப் பேராசிரியர், நண்பர் தருமி அவர்கள் தனது களவாணி படத்தின் விமர்சனத்தில் தமிழ்ச் சினிமாவின் இன்றைய நிலைமையைப் பற்றி வருத்தத்துடன் ஏதேதோ சொல்லியிருக்கிறார். அன்னார் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் விமர்சனம் எழுதினால் தன்யனாவேன்.. அதற்காகத்தான் அந்த சமர்ப்பணம் போர்டு..

44 comments:

இராமசாமி கண்ணண் said...

எப்படி அண்ணாச்சி இந்த படத்தயும் பாத்தூட்டு விமர்சனலாம் போடுறீங்க :)

இராமசாமி கண்ணண் said...

அதுவும் சுடச்சுட.

இராமசாமி கண்ணண் said...

இதுக்க்காக ஒங்களுக்கு ஒரு பாராடு விழா எடுத்தே ஆகனும். :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தலைவரே என்ன இதெல்லாம்...

இராமசாமி கண்ணண் said...

//
இந்தக் கண்றாவிக்கு நானும் வேற அறுபது ரூபாயை செலவழிச்சுத் தொலைஞ்சிருக்கேன்.. யாரைக் கேட்டுடா போனன்னு கேக்குறீங்களா..? எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!
//
அண்ணாச்சி நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவரு அண்ணாச்சி. ஆனா நான் என்னிக்கு டிரைலர் பார்த்தேனோ(லிங்க் உபயம் tamildigitalcinema.com) அப்பவே முடிவு பன்னிட்டேன். இது சும்மா டுபாக்ஸ்தான்னு.

ஜாக்கி சேகர் said...

மாதவி படத்துக்கு அப்புறம் இந்த காவியத்தை எழுதி இருக்கும் பதிவுலக தலைவர் உண்மைதமிழனுக்கு நன்றிகள்..

தலைவரே உடம்பு எப்படி இருக்கு..???

சிபி.செந்தில்குமார் said...

சீன் படம் பார்த்த சிங்ககுட்டியே அருமை

நசரேயன் said...

//
இடையில் நிறைய பிட்டு படங்கள் எடுத்திருக்கும் வாய்ப்பு இருந்தது போல எனக்குத் தோன்றியது.
//

அண்ணே தகவல் உரிமை சட்டத்திலே கேட்டா பதில் கிடைக்குமா ?

குழலி / Kuzhali said...

குருவே தங்கள் சித்தப்படி நடப்பேன்..

உனக்கு மங்களம் உண்டாகட்டும்..

கற்றுக் கொடுத்த குருவையே கொன்றுவிட்டாயே.. இது நீச பாவமில்லையா..?

இளவரசி.. தங்களைக் காணாமல் அரசர் அங்கே கவலைப்படுவார்..

என் மணாளனைக் கண்டுபிடிக்காமல் நான் நாடு திரும்ப மாட்டேன்..

அந்த மூன்று பெண்களையும் அடைந்தே தீருவேன்..

எனது சக்தி எப்படிப்பட்டது என்பதை நீயே நேரில் காணப் போகிறாய்..

துஷ்டனே.. விலகிச் செல்.. என் வழியில் குறுக்கிடாதே..

குழந்தாய் நீ கேட்டது கிடைக்கும். விரும்பியது அனுகூலமாகும்.. வெற்றி நிச்சயம்
//இப்படியெல்லாம் தூயத் தமிழை //
யோவ் நீர் மேல சொன்ன சொற்றொடர்களெல்லாம் தூயத் தமிழா? கொலை விழும்

Cable Sankar said...

அண்ணே. இது அந்த வேலுபிரபாகரன் இல்லை.. வெறும் பிரபாகரனின் படம். இவரது இயற்பெயர் டான் கவுதம். சுமார் 15 லட்ச ரூபாயில் ஒரு காட்டில் எடுக்க்கப்பட்ட படம். டிஜிட்டலில் எடுத்த படம். வேலுபிரபாகரனின் காதல் கதை ஓடியதால்.. இவருடய இன்னொரு பெயரான பிரபாகரன் பெயரில் படத்தை ரிலீஸ் செய்து கல்லா கட்ட பார்த்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து சிங்கிள் எக்ஸ்படத்தில் கூட கொஞ்சம் சீன்கள் இருக்க வாய்ப்பிருக்கும். இதில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.. ஸ்டில்களை தவிர...

ஸ்ரீராம். said...

மதுரைல மது தியேட்டர்...? எங்கே இருக்கு... நினைவில்லை...

திருச்சியைத் தாண்டி எவ்வளவு தூரம் என்று சரியாய்ச் சொல்லவில்லை நீங்கள்...!

அறுபது ரூபாய் போச்சா? எல்லா பதிவர்களும் ஆளுக்கு ஒரு பைசா மணி ஆர்டர் செய்ய வேண்டியதுதான்...

ராம்ஜி_யாஹூ said...

அருமை சுட சுட விமர்சனம்.

ஸ்ரீராம், மதுரை மது திரை அரங்கம் (வில்லாபுரம்) தெரியாதா.

மாயஜால், அலங்கார், ஆல்பர்ட், காசி திரை அரங்கங்களை விட புகழ் வாய்ந்த திரை அரங்கம் ஆச்சே அது.

கணேஷ் said...

//
எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!
//

உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்..

பரிதி நிலவன் said...

//நானும் வேற அறுபது ரூபாயை செலவழிச்சுத் தொலைஞ்சிருக்கேன்.. //

இது எப்படி இருக்கு என்றால், சாரு சாப்பிட காசு இல்லை என்று புலம்பியபடியே வெஸ்ட் மினிஸ்டர் பாரில் சரக்கு சாப்பிடுவது போல இருக்கு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராமசாமி கண்ணண் said...
எப்படி அண்ணாச்சி இந்த படத்தயும் பாத்தூட்டு விமர்சனலாம் போடுறீங்க:)]]]

எல்லாம் உங்களை மாதிரி தோழர்கள் இருக்கின்ற தைரியந்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராமசாமி கண்ணண் said...
அதுவும் சுடச்சுட.]]]

தள்ளிப் போட்டா சோம்பேறித்தனம் வந்திரும்ண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராமசாமி கண்ணண் said...
இதுக்க்காக ஒங்களுக்கு ஒரு பாராடு விழா எடுத்தே ஆகனும்.:)]]]

எப்போ.. எப்போ.. எப்போ..? நான் ரெடி..?

விழால என்னண்ணே தருவீங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
தலைவரே என்ன இதெல்லாம்.]]]

ச்சும்மா ஒரு சேஞ்ச்சுக்குத்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராமசாமி கண்ணண் said...

//இந்தக் கண்றாவிக்கு நானும் வேற அறுபது ரூபாயை செலவழிச்சுத் தொலைஞ்சிருக்கேன்.. யாரைக் கேட்டுடா போனன்னு கேக்குறீங்களா..? எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!//

அண்ணாச்சி நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவரு அண்ணாச்சி. ஆனா நான் என்னிக்கு டிரைலர் பார்த்தேனோ(லிங்க் உபயம் tamildigitalcinema.com) அப்பவே முடிவு பன்னிட்டேன். இது சும்மா டுபாக்ஸ்தான்னு.]]]

ஆஹா.. அந்தக் கொடுமையைப் பார்த்திட்டே நீங்க தப்பிச்சிட்டீங்களே.. நான் பார்க்காம விட்டுட்டனே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜாக்கி சேகர் said...

மாதவி படத்துக்கு அப்புறம் இந்த காவியத்தை எழுதி இருக்கும் பதிவுலக தலைவர் உண்மைதமிழனுக்கு நன்றிகள்..]]]

இன்னும் ஒரு காவியம் பாக்கியிருக்கு ஜாக்கி..!

[[[தலைவரே உடம்பு எப்படி இருக்கு..???]]]

ஓகே.. நல்லாயிருக்கு தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சிபி.செந்தில்குமார் said...
சீன் படம் பார்த்த சிங்ககுட்டியே அருமை.]]]

வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கப்பா..! ஒரு சீன்கூட இல்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நசரேயன் said...

//இடையில் நிறைய பிட்டு படங்கள் எடுத்திருக்கும் வாய்ப்பு இருந்தது போல எனக்குத் தோன்றியது.//

அண்ணே தகவல் உரிமை சட்டத்திலே கேட்டா பதில் கிடைக்குமா?]]]

நாசரேயன்..

நீங்க புலனாய்வு பத்திரிகைல வேலை பார்க்க வேண்டியவரு..! இம்புட்டு அறிவா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குழலி / Kuzhali said...

குருவே தங்கள் சித்தப்படி நடப்பேன்..

உனக்கு மங்களம் உண்டாகட்டும்..

கற்றுக் கொடுத்த குருவையே கொன்றுவிட்டாயே.. இது நீச பாவமில்லையா..?

இளவரசி.. தங்களைக் காணாமல் அரசர் அங்கே கவலைப்படுவார்..

என் மணாளனைக் கண்டுபிடிக்காமல் நான் நாடு திரும்ப மாட்டேன்..

அந்த மூன்று பெண்களையும் அடைந்தே தீருவேன்..

எனது சக்தி எப்படிப்பட்டது என்பதை நீயே நேரில் காணப் போகிறாய்..

துஷ்டனே.. விலகிச் செல்.. என் வழியில் குறுக்கிடாதே..

குழந்தாய் நீ கேட்டது கிடைக்கும். விரும்பியது அனுகூலமாகும்.. வெற்றி நிச்சயம்

//இப்படியெல்லாம் தூயத் தமிழை //

யோவ் நீர் மேல சொன்ன சொற்றொடர்களெல்லாம் தூயத் தமிழா? கொலை விழும்]]]

மை காட்.. குழலியண்ணே.. அப்போ இதெல்லாம் தூயத் தமிழ் இல்லியா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Cable Sankar said...
அண்ணே. இது அந்த வேலுபிரபாகரன் இல்லை.. வெறும் பிரபாகரனின் படம். இவரது இயற்பெயர் டான் கவுதம். சுமார் 15 லட்ச ரூபாயில் ஒரு காட்டில் எடுக்க்கப்பட்ட படம். டிஜிட்டலில் எடுத்த படம். வேலுபிரபாகரனின் காதல் கதை ஓடியதால்.. இவருடய இன்னொரு பெயரான பிரபாகரன் பெயரில் படத்தை ரிலீஸ் செய்து கல்லா கட்ட பார்த்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து சிங்கிள் எக்ஸ் படத்தில்கூட கொஞ்சம் சீன்கள் இருக்க வாய்ப்பிருக்கும். இதில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.. ஸ்டில்களை தவிர.]]]

நினைச்சேன் கேபிளு.. இப்படியொரு தப்பு வரும்னு..!

ராத்திரில அவசரமா போட்டதால போன் பண்ணி உறுதிப்படுத்திக்க முடியலை..!

அவராத்தான் இருக்குமோன்னு நினைச்சு ஊதிட்டேன்..

தேங்க்ஸ் கேபிளு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஸ்ரீராம். said...

மதுரைல மது தியேட்டர்...? எங்கே இருக்கு... நினைவில்லை...]]]

அவனியாபுரத்துல.. இப்போ வெற்றின்னு பேர் மாத்தியாச்சாம்..!

[[[திருச்சியைத் தாண்டி எவ்வளவு தூரம் என்று சரியாய்ச் சொல்லவில்லை நீங்கள்...!]]]

எனக்கும் தெரியலையே பிரதர்..!

[[[அறுபது ரூபாய் போச்சா? எல்லா பதிவர்களும் ஆளுக்கு ஒரு பைசா மணி ஆர்டர் செய்ய வேண்டியதுதான்.]]]

சீக்கிரமா கலெக்ட் பண்ணிக் கொடுங்க ஸார்..!

அக்பர் said...

மதராச பட்டிணம் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன்.

(ஆனாலும் பதிவு இம்புட்டு சின்னதா எழுதக்கூடாது)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராம்ஜி_யாஹூ said...
அருமை சுட சுட விமர்சனம்.
ஸ்ரீராம், மதுரை மது திரை அரங்கம் (வில்லாபுரம்) தெரியாதா. மாயஜால், அலங்கார், ஆல்பர்ட், காசி திரை அரங்கங்களைவிட புகழ் வாய்ந்த திரை அரங்கம் ஆச்சே அது.]]]

ராம்ஜி ஸார்.. பேர் மாத்திட்டதால ஒருவேளை தெரியாம போயிருக்கலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கணேஷ் said...

//எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!//

உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்..]]]

சரி.. சரி.. இந்தப் புண்ணியத்தை அப்படியே சேர்த்து வைங்க.. பின்னாடி எதுக்காச்சும் பயன்படும்..!

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//

முன்பு ஒரு காலத்தில் மதுரையின் மது தியேட்டரில் சொப்னசுந்தரி படம் பார்த்த நினைப்புதான் வந்தது
//
அண்ணே : அந்த சொப்னசுந்தரி படத்த பத்தி விமர்சனம் எழுதுற ஐடியா இருக்கா?

மயில்ராவணன் said...

இந்தக்காவியத்தை பார்த்து அதற்கு விமர்சன்மும் எழுதிய யூத் பதிவர் அண்ணன் உ.தா வாழ்க வாழ்க என என் அப்பன் முருகனிடம் பிரார்த்திக்கிறேன். முருக பக்தரெல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் இருக்காய்ங்க. :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அக்பர் said...
மதராசபட்டிணம் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன். ஆனாலும் பதிவு இம்புட்டு சின்னதா எழுதக்கூடாது)]]]

மூடு போயிருச்சு அக்பர்..! வராதுன்னு நினைக்கிறேன்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

படம் பார்த்ததால் உடம்பு சரியில்லையா...இல்லை..அதற்கு முன்பே உடம்பு சரியில்லையா
:))))

சதீஷ் said...

பிட்டு படத்துக்குக் கூட விமர்சனம் போடும் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க.

அப்புறம்
//எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!//
ஒங்க இந்த அக்கறைதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

//இவுங்க சொன்னாத்தான் பிட்டு படம்னு தெரியணுமாக்கும். போஸ்டரே தெள்ளத் தெளிவா சொல்லுதே..//
தெரிஞ்சேதான் போனீங்களா????

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//முன்பு ஒரு காலத்தில் மதுரையின் மது தியேட்டரில் சொப்னசுந்தரி படம் பார்த்த நினைப்புதான் வந்தது//

அண்ணே : அந்த சொப்னசுந்தரி படத்த பத்தி விமர்சனம் எழுதுற ஐடியா இருக்கா?]]]

இல்லீங்கோ.. அதைப் பத்தி எழுதணும்னா முழுப் படத்தையும் பார்த்தாத்தான் எழுத முடியும்..!

நான் 25 தடவையும் பிட்டு பிட்டாத்தானே பார்த்தேன்..!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மயில்ராவணன் said...
இந்தக் காவியத்தை பார்த்து அதற்கு விமர்சன்மும் எழுதிய யூத் பதிவர் அண்ணன் உ.தா வாழ்க வாழ்க என என் அப்பன் முருகனிடம் பிரார்த்திக்கிறேன். முருக பக்தரெல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் இருக்காய்ங்க.:)]]]

ஹி.. ஹி.. ஹி..!

மயிலு.. பேரையே இப்படி வைச்சுக்கிட்டு முருகனை மாட்டிவிடலாமா..?

sivakasi maappillai said...

வாழ்த்துக்கள்... அந்தரங்கம் விமர்சனம் எப்போ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
படம் பார்த்ததால் உடம்பு சரியில்லையா... இல்லை.. அதற்கு முன்பே உடம்பு சரியில்லையா
:))))]]]

படம் பார்க்கிறதுக்கு முன்னாடியே பார்க்கப் போற பீலிங்ல இப்படி ஆயிருச்சு ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சதீஷ் said...

பிட்டு படத்துக்குக் கூட விமர்சனம் போடும் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க.

அப்புறம்

//எல்லாம் நம்ம தம்பிமார்களுக்காகத்தான். போய்த் தொலையாதீங்கப்பான்னு எச்சரிக்கை செய்யலாம்னுதான்..!//

ஒங்க இந்த அக்கறைதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

//இவுங்க சொன்னாத்தான் பிட்டு படம்னு தெரியணுமாக்கும். போஸ்டரே தெள்ளத் தெளிவா சொல்லுதே..//

தெரிஞ்சேதான் போனீங்களா????]]]

நன்றி சதீஷ்..!

தெரிஞ்சுதான் போனேன்..

போனதுக்கான காரணத்தைத்தான் சொல்லிட்டனே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[sivakasi maappillai said...
வாழ்த்துக்கள்... அந்தரங்கம் விமர்சனம் எப்போ?]]]

பார்த்த உடனே வரும்..!

மணிஜீ...... said...

செம்மொழி சிங்கம்யா நீ

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மணிஜீ...... said...
செம்மொழி சிங்கம்யா நீ]]]

உடன்பிறப்பெல்லாம் அடிக்க வரப் போறாங்கண்ணே..!

வஜ்ரா said...

//
மதுரையின் மது தியேட்டரில் சொப்னசுந்தரி படம் பார்த்த நினைப்புதான் வந்தது.
//

மதுரையின் மது தியேட்டரை இப்படிக் கேவலப்படுத்தியது வருத்தமளிக்கிறது...(மதுரை மது இப்போது வெற்றி தியேட்டர் ஆகிவிட்டது...தசாவதாரம் போன்ற உலக சினிமா தான் அங்கு திரையிடுகிறார்கள் சொப்பனசுந்தரி போன்ற படங்கள் திரையிடப்படுவது இல்லை).

மொத்தத்தில் சீன் படத்துல கூட கதை உருப்படியா இருக்கும் சீரியஸ் பகுத்தறிவுல கதையே இல்லை என்று சொல்கிறீர்கள்...சரி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வஜ்ரா said...

//மதுரையின் மது தியேட்டரில் சொப்னசுந்தரி படம் பார்த்த நினைப்புதான் வந்தது.//

மதுரையின் மது தியேட்டரை இப்படிக் கேவலப்படுத்தியது வருத்தமளிக்கிறது. (மதுரை மது இப்போது வெற்றி தியேட்டர் ஆகிவிட்டது. தசாவதாரம் போன்ற உலக சினிமாதான் அங்கு திரையிடுகிறார்கள். சொப்பனசுந்தரி போன்ற படங்கள் திரையிடப்படுவது இல்லை).]]]

நல்லாத் தெரியும் ஸார்..!

இருந்தாலும் ஒரு காலத்துல என் சொத்தையே அழித்தது அந்தத் தியேட்டர்தான்கிறதால எனக்கு ரொம்பவே கோபம் அந்தத் தியேட்டர்காரர்கள் மேல..!

[[[மொத்தத்தில் சீன் படத்துலகூட கதை உருப்படியா இருக்கும் சீரியஸ் பகுத்தறிவுல கதையே இல்லை என்று சொல்கிறீர்கள். சரி.]]]

ரொம்பச் சரி..!

abeer ahmed said...

See who owns nnid.co.uk or any other website:
http://whois.domaintasks.com/nnid.co.uk