“பெண்கள் நலனுக்காக கருணாநிதி போராடி வருகிறார்” - குஷ்புவின் அரசியல் மேடை கன்னிப் பேச்சு..!


“அன்று முதல் இன்றுவரை பெண்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதி போராடி வருகிறார்” என்று கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசினார்.

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 87-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூர் வடக்கு மாடவீதியில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த நடிகை குஷ்பு முதல் முதலாக பேசினார். அப்போது அவர் பேசியது :

"மு.க.ஸ்டாலினை மகனாகப் பெற்றதால் தலைவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றி இன்றைக்கு துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் வளமான நம்பர் ஒன் மாநிலமாக்கும் தனது தந்தையின் கனவை நனவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் பெயரைச் சொன்னாலே அதிரும். மு.க.அழகிரியின் பெயரை கேட்டாலே எதிர்க்கட்சிகளுக்கு சும்மா எகிறும். இவர் களம் போனாலேயே கலைஞருக்கு வெற்றிதான். இவர் தி.மு.க.வுக்கு கிடைத்த உரம். அப்படிப்பட்டவர்தான் அஞ்சா நெஞ்சன் அழகிரி. நான் கட்சியில் சேர்ந்த பின்பு பொதுக்கூட்டத்தில் பேசுவது இதுதான் முதல் முறை.

எல்லோரும் நான் பேசுவது 'கன்னிப் பேச்சு' என்று கூறினார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் 'கன்னிப் பருவம்' மிக முக்கியமானதாகும். அந்த காலக்கட்டத்தில் ஒரு சிறிய தப்பு நடந்தாலும் அதை பெரிதாக பார்ப்பார்கள்.

எனவே என்னுடைய 'கன்னிப் பேச்சை' ஒரு குழந்தையின் பேச்சாக எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் பேசியதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

நான் தி.மு.க.வில் சேர்ந்ததும் “ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். “நான் பெண்களின் உழைப்புக்காகவும், உரிமைக்காகவும் வந்ததாகத்” தெரிவித்தேன். “ஏன் தி.மு.க.வில் சேர்ந்தீர்கள்?” என்று கேட்டார்கள். “பெண்களுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடும் ஒரே கட்சி தி.மு.க.தான். ஆகவேதான் தி.மு.க.வில் சேர்ந்தேன்” என்று கூறினேன்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அட்சய திருதியையை கொண்டாடி உள்ளனர். வடஇந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஒரு மூட நம்பிக்கை உள்ளது. அட்சய திருதியை அன்று திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று திருமணங்கள் செய்து வைக்கிறார்கள். இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்கும் காட்சியை நான் டி.வி.யில் பார்த்தேன்.

5 வயது, 6 வயது, 10 வயது சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்ற கொடுமையை பார்த்தேன். இந்தியாவில் இது போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட மூடநம்பிக்கையான அராஜகத்தை கனவில்கூட பார்க்க முடியாது. இப்படிப்பட்ட மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராடும் கலைஞரின் படை தமிழ்நாட்டில் உள்ளது. பெண்களின் விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகமாகும். ஆகவேதான் தமிழ்நாட்டில் எல்லா பெண்களும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக பெரியார் விதையை ஊன்றினார். தலைவர் கலைஞர் அதை வளர்த்து பழமாக்கும் வகைக்கு உருவாக்கி உள்ளார். கலைஞருடைய ஆட்சியில் பெண்கள் ஆண்களுக்கு சமம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் ஆண்களைவிட அதிகமாக சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு சிறிய உதாரணத்தை சொல்லவேண்டுமென்றால் திருநெல்வேலியில் வீடு வீடாக துணி விற்பனை செய்யக்கூடிய ஒருவரின் மகள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடத்திற்கு வந்துள்ளார். அதுவும் மாநகராட்சி பள்ளியில் படித்து.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துள்ளது. இப்போதுதான் பாராளுமன்றத்தில் 33 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று பேராடுகிறார்கள். ஆனால் தலைவர் கலைஞர் உள்ளாட்சி அமைப்புகளில் எப்போதோ 33 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கி விட்டார்.

இதுபோல பெண்களுக்காக 'இலவச திருமணத் திட்டம்', 'இலவச கல்வி திட்டம்', 'பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்' என்று பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

முதல் அமைச்சர் கருணாநிதி அன்று முதல் இன்றுவரையிலும் பெண்களுக்காக போராடி வருகிறார். அவர் அந்தக் காலத்தில் உள்ள படங்களான 'ராஜகுமாரி', 'மந்திரிகுமாரி', 'மணமகள்', 'பராசக்தி' எல்லாவற்றுக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படத்திற்கு பெண்களின் பெயர் வைத்துள்ளார்.

இந்த காலத்தில் 'சிங்கம்', 'புலி' என்ற பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் படம் எடுக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய கலைஞர் ஒரு பெண் சிங்கத்தை கொடுத்துள்ளார். தாய்க்குலமே கலைஞரை வாழ்த்தும். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உலகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து ஒருவர் தெரிவித்த வாழ்த்தை உங்களுக்கு நான் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒருவரை கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.30 ஆயிரம் செலவு செய்து சிகிச்சை அளித்து அவரது உயிரை பிழைக்க வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர். அவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டு கூறினார். “வாழ்நாள் முழுவதும் கலைஞருக்கு எதிராக வேலை செய்து இருக்கிறேன். அவருடைய போஸ்டருக்கு சாணி எறிந்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு கலைஞர் போட்ட கையெழுத்துதான் என்னுடைய தலையெழுத்தை மாற்றி உள்ளது” என்று கூறினார்.

இதேபோல மக்களுக்காக கலைஞர் பல நன்மைகளை செய்துள்ளார். கலைஞர் தினம் தினம் சரித்திரத்தை படைத்துக் கொண்டிருக்கிறார். சோனியா காந்தி சென்னையில் தலைமைச் செயலகத்தை திறந்து வைக்க வந்தபோது இந்த நாட்டின் நலனுக்கு எந்த முடிவு எடுத்தாலும் அதை கலைஞரிடம் ஆலோசித்து எடுப்பதாக கூறினார்.

வெளிநாட்டில் பிறந்து, வடஇந்தியாவில் வாழ்க்கைப்பட்டுதான் ஒரு இந்தியப் பெண்மணியாக மாறினார் சோனியா. வடஇந்தியாவில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை பெற்ற இந்த அம்மாவுக்கும், அதாவது எனக்கும், நம்முடைய தலைவரின் அருமை பெருமைகள் தெரிகிறது.

ஆனால் இங்கிருக்கிற அம்மாவுக்கு.......?

நம் எல்லோருக்காகவும் உழைக்கிற ஒரே தலைவர் கலைஞர்தான். தான் வாழ்கிற வீட்டைக்கூட தானமாக கொடுத்து இருக்கிறார்.

கலைஞரின் சுறுசுறுப்புக்கு ஒப்பிட்டு பேசுவதற்கு உலகத்தில் எந்த தலைவரும் இல்லை. எல்லா சிறந்த குணங்களும் இருப்பதால்தான் மாபெரும் தலைவராக விளங்குகிறார். குளித்தலையில் பெற்ற வெற்றி இன்றுவரை குனியாத தலைவராக தலை நிமிரச்செய்துள்ளது.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

நன்றி : தினத்தந்தி - 04-06-10

29 comments:

tamil said...

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரக் காரணமான அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவந்ததவர் ராஜீவ் காந்தி.குஷ்பு கூசாமல் பொய் சொல்கிறார்.அதைக் தட்டிக் கேட்க துணிவற்ற காங்கிரஸ்காரார்கள் இருக்கும் போது திமுகதான் விடுதலை பெற்றுத்தந்தது என்று பேசினாலும் பேசுவார்.

ஜோ/Joe said...

//அதைக் தட்டிக் கேட்க துணிவற்ற காங்கிரஸ்காரார்கள் இருக்கும் போது திமுகதான் விடுதலை பெற்றுத்தந்தது என்று பேசினாலும் பேசுவார்.//

நீங்க விட்டா இப்போ இருக்கிற இந்திரா காங்கிரஸ் தான் சுதந்திரம் வாங்கித் தந்ததுண்ணு சொல்லுவீங்க போல.

நாஞ்சில் பிரதாப் said...

தாத்தாவுக்கு விக்ஸ் இன்கேலர் வாங்கி கொடுங்கண்ணே... இம்புட்டு பெரிய ஐஸ்கட்டியை தலைலவச்சா பாவம் வயசான காலத்துல...

//நீங்க விட்டா இப்போ இருக்கிற இந்திரா காங்கிரஸ் தான் சுதந்திரம் வாங்கித் தந்ததுண்ணு சொல்லுவீங்க போல//

அதைத்தான் காங்கிரஸ்காரனுங்க மேடை மேடையா சொல்லுறானுங்களே...

சுதந்திரற்குப்பின் காங்கிரசை கலைக்காதது காந்தி செய்த மகாகுற்றம்.. அதைவிட குற்றம்
சுதந்திரம் வாங்கித்தந்தது. இந்த கொலைகாரர்கள் ஆட்சி வராமல் இருந்திருக்கும்...

பார்வையாளன் said...

கொஞ்ச நாளா , தேவையில்லாத பதிவகளா போட்டு தள்றீங்க , பாஸ்..

சாந்தப்பன் said...

நீங்க வேற, அன்னை சோனியா அங்கே பிறந்து விட்டார்கள் என்று அறிந்ததும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. உங்களுக்கு தெரியாதா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதற்கு சிறிய உதாரணத்தை சொல்லவேண்டுமென்றால் திருநெல்வேலியில் வீடு வீடாக துணி விற்பனை செய்யக்கூடிய ஒருவரின் மகள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடத்திற்கு வந்துள்ளார். அதுவும் மாநகராட்சி பள்ளியில் படித்து.
//

கன்னிப்பேச்சுக்கு விமர்சனம் தேவையில்லை.


கிராமங்களில் ஏன் நகரங்களிலும் அரசு பள்ளிகள் முற்றாக அழிந்து கொண்டிருப்பது வட நாட்டில் இருந்து வந்த திராவிட இனத்து குசுபுவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மூன்று ஆசியர்களையும வெறும் மூன்று திராவிட பிள்ளைகளையும் கொண்ட அரசாங்க பள்ளிகளைப் பற்றி குறிப்பிட எழுதிக்கொடுத்தவர் மறந்து விட்டார் போலும்!


மொத்தத்தில் கன்னிப்பேச்சு கன்னிப்போச்சு!

விந்தைமனிதன் said...

நாங்கதான் விடுதலை பெற்றுத் தந்தோம்னு காங்கிரஸ் காரங்க மட்டும் நாக்கூசாம பேசலாமாக்கும்.... இப்படி சொல்லித்தானேய்யா 63 வருஷமா ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க???

ஆமா உ.த அண்ணாச்சி... என்ன நியூஸ்பக்கம் மாதிரி வெறும் குஷ்பு உரைய மட்டும் போட்டு முடிச்சிட்டீங்க??!!!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

ஏண்டா குஷ்பு அரசியலுக்கு வந்தாங்க அப்புறம் இந்த S.S. சந்திரன் கும்பல் இவங்களை மேடையில் போட்டு நார அடிப்பானுன்களே என்று ஒருத்தன் ஞேன்னு பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்கான்.

அவர் வேற யாரும் இல்லை. நம்ம பிரபுவே தான்!

சாம்ராஜ்ய ப்ரியன் said...

// தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் வளமான நம்பர் ஒன் மாநிலமாக்கும் தனது தந்தையின் கனவை நனவாக மாற்றிக்கொண்டிருக்கிறார் //

கனவு காண்பது சிலருக்கு பரம்பரை வியாதி என வல்லுநர்கள் சிலர் சொல்கின்றனர். அது உண்மையா என விவரம் அறிந்தவர்கள் சொன்னால் தெரிந்துக் கொள்வேன்!!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////பெண்கள் நலனுக்காக கருணாநிதி போராடி வருகிறார்” - குஷ்புவின் அரசியல் மேடை கன்னிப் பேச்சு../////!

தலைப்பே எங்கோ இடிக்குதே நண்பரே !
அது என்ன கன்னிப் பேச்சு ??

VJR said...

எப்படி சார், இப்படியெல்லாம்? நீர் ஊனத் தமிழன்.

யார் செய்தாலும், அதிலுள்ள நியாயத்தைப் பார்க்க வேண்டுமேயொழிய, சொன்னவரின் வரலாறு பாக்கக்கூடாது.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

'http://www.vinavu.com/2010/06/04/mullai-justice/
’இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.’

.அந்த சந்திப்பில் வினவும்,சிவராமனும்
மன்னிப்பு கேட்பார்களா.அவர்கள் என்னவேண்டுமானாலும் எழுதலாம்,அவதூறு பரப்பலாம் ஆனால் ஒரே ஒடு இடுகைக்கு நர்சிம் மன்னிப்பு கேட்கவேண்டும் இவர்கள் அதை தீர்வாக சொல்வார்களா.இது என்ன நியாயம்.பெயர் சொல்லி சில பதிவர்களைப் பற்றி அவதூறு எழுதியவர்கள் அதற்கு ஆதாரம் தர மறுப்பவர்கள் மன்னிப்புக் கேட்கமாட்டார்களா.சுகுணா திவாகரை அடியாள் என்று எழுதியவர்கள், நர்சிம்மின் தந்தை,சாருவின் மனைவி போன்றவர்களைப் பற்றி எழுதியவர்கள் ஜெண்டில்மேன்களாகவும்,ஜட்ஜ்களாவும் எப்படி இருக்க முடியும்.இவர்கள் மன்னிப்புக் கேட்டால் நர்சிம்மும்,கார்க்கியும் மன்னிப்பு கேட்கலாம்.முதலில் நர்சிம் மன்னிப்பு கேட்டால் அடுத்து வினவு கேட்கட்டும்,
பின் கார்கி, பின் சிவராமன் என்று அது தொடரட்டும்.அப்படி இல்லாதபோது நர்சிம்,கார்கி மன்னிப்பு கேட்பது சரியான முடிவல்ல.இது என் கருத்து, உண்மைத்தமிழன் இதில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.ஒதுங்கி விடுங்கள்.

ஜானகிராமன்.நா said...

//பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரக் காரணமான அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவந்ததவர் ராஜீவ் காந்தி//

உண்மையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு 1987ம் ஆண்டில் 69வது அரசியல் சட்டத்திருத்தமாக ராஜீவ்காந்தியால் முன்மொழியப்பட்டு ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் ராஜீவோட மறைவுக்குப்பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நரசிம்மராவ் அரசாங்கத்தின் போது 1992ம் ஆண்டு 73வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தில் பெண்கள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இது முன்மொழியப்பட்ட இரண்டு முறையும் தமிழ்நாட்டின் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்றுக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. பின்னர் மத்திய அரசாங்க சட்டமாக வந்தபின்னர் வேறுவழியின்றி மாநில அரசு அமல்படுத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

குஷ்பு வரலாற்றை இப்போதே திரிக்க ஆரம்பித்துவிட்டார். நல்ல எதிர்காலம் அவருக்குள்ளது.

ananth said...

//குஷ்பு வரலாற்றை இப்போதே திரிக்க ஆரம்பித்துவிட்டார்//

இதை எழுதிகொடுத்தவர் திரித்து எழுதிக் கொடுத்துவிட்டார். குஷ்பு பாவம் என்ன செய்வார். அதை அப்படியே ஒப்பிப்பது அவர் வேலை. இந்த வரலாறெல்லாம் தெரிந்து கொண்டா பேசியிருப்பார். இன்னேரம் என்ன பேசினோம் என்பதையே மறந்திருப்பார்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[tamil said...
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டு வரக் காரணமான அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவந்ததவர் ராஜீவ் காந்தி. குஷ்பு கூசாமல் பொய் சொல்கிறார். அதைக் தட்டிக் கேட்க துணிவற்ற காங்கிரஸ்காரார்கள் இருக்கும்போது திமுகதான் விடுதலை பெற்றுத் தந்தது என்று பேசினாலும் பேசுவார்.]]]

எழுதிக் கொடுத்ததை அப்படியே ஒப்பிச்சிருக்காரு.. இதுல குஷ்புவின் தவறென்ன..?

அவர் இப்போதுதான் அரசியலில் நுழைந்திருக்கிறார்..! இதற்கு முன்பான சம்பவங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜோ/Joe said...

//அதைக் தட்டிக் கேட்க துணிவற்ற காங்கிரஸ்காரார்கள் இருக்கும் போது திமுகதான் விடுதலை பெற்றுத்தந்தது என்று பேசினாலும் பேசுவார்.//

நீங்க விட்டா இப்போ இருக்கிற இந்திரா காங்கிரஸ் தான் சுதந்திரம் வாங்கித் தந்ததுண்ணு சொல்லுவீங்க போல.]]]

ஜோ.. செளக்கியமா..? எங்க ரொம்ப நாளா நம்ம பக்கம் காணோம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நாஞ்சில் பிரதாப் said...

தாத்தாவுக்கு விக்ஸ் இன்கேலர் வாங்கி கொடுங்கண்ணே... இம்புட்டு பெரிய ஐஸ்கட்டியை தலைலவச்சா பாவம் வயசான காலத்துல...

//நீங்க விட்டா இப்போ இருக்கிற இந்திரா காங்கிரஸ்தான் சுதந்திரம் வாங்கித் தந்ததுண்ணு சொல்லுவீங்க போல//

அதைத்தான் காங்கிரஸ்காரனுங்க மேடை மேடையா சொல்லுறானுங்களே...

சுதந்திரற்குப்பின் காங்கிரசை கலைக்காதது காந்தி செய்த மகா குற்றம்.. அதைவிட குற்றம்
சுதந்திரம் வாங்கித் தந்தது. இந்த கொலைகாரர்கள் ஆட்சி வராமல் இருந்திருக்கும்...]]]

அப்புறம் வேற யாரு ஆட்சிக்கு வந்திருப்பான்னு நினைக்கிறீங்க..? கம்யூனிஸ்ட்டுகளா..? அப்ப மட்டும் என்ன நடந்திருக்குமாம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...
கொஞ்ச நாளா, தேவையில்லாத பதிவகளா போட்டு தள்றீங்க , பாஸ்..]]]

இது நாட்டுக்கு ரொம்ப அவசியமான நியூஸ் பாஸ்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சாந்தப்பன் said...
நீங்க வேற, அன்னை சோனியா அங்கே பிறந்து விட்டார்கள் என்று அறிந்ததும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. உங்களுக்கு தெரியாதா?]]]

இதென்ன கூத்து..? வாதம் சுவையாகத்தான் இருக்கிறது சாந்தப்பன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதற்கு சிறிய உதாரணத்தை சொல்லவேண்டுமென்றால் திருநெல்வேலியில் வீடு வீடாக துணி விற்பனை செய்யக்கூடிய ஒருவரின் மகள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடத்திற்கு வந்துள்ளார். அதுவும் மாநகராட்சி பள்ளியில் படித்து.//

கன்னிப் பேச்சுக்கு விமர்சனம் தேவையில்லை. கிராமங்களில் ஏன் நகரங்களிலும் அரசு பள்ளிகள் முற்றாக அழிந்து கொண்டிருப்பது வட நாட்டில் இருந்து வந்த திராவிட இனத்து குசுபுவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மூன்று ஆசியர்களையும வெறும் மூன்று திராவிட பிள்ளைகளையும் கொண்ட அரசாங்க பள்ளிகளைப் பற்றி குறிப்பிட எழுதிக்கொடுத்தவர் மறந்து விட்டார் போலும்!

மொத்தத்தில் கன்னிப் பேச்சு கன்னிப் போச்சு!]]]

அத்திவெட்டி ஸார்.. குஷ்பு மீதான உங்களது புரிதல் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது..!

ஆனாலும் கன்னிப் பேச்சை விமர்சனம் செய்யக் கூடாது என்கிற நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[விந்தைமனிதன் said...

நாங்கதான் விடுதலை பெற்றுத் தந்தோம்னு காங்கிரஸ்காரங்க மட்டும் நாக்கூசாம பேசலாமாக்கும்.... இப்படி சொல்லித்தானேய்யா 63 வருஷமா ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க???

ஆமா உ.த அண்ணாச்சி... என்ன நியூஸ் பக்கம் மாதிரி வெறும் குஷ்பு உரைய மட்டும் போட்டு முடிச்சிட்டீங்க??!!!]]]

வேறென்ன சொல்றது..? அந்த நிகழ்ச்சிக்குப் போக முடியலை.. போயிருந்தா புல் காவரேஜ் செஞ்சிருப்பேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

ஏண்டா குஷ்பு அரசியலுக்கு வந்தாங்க அப்புறம் இந்த S.S. சந்திரன் கும்பல் இவங்களை மேடையில் போட்டு நார அடிப்பானுன்களே என்று ஒருத்தன் ஞேன்னு பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்கான்.

அவர் வேற யாரும் இல்லை. நம்ம பிரபுவேதான்!]]]

எதுக்கு இதுல தேவையில்லாம பிரபுவை இழுக்குறீங்க ஸார்..!? கண்டிக்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சாம்ராஜ்ய ப்ரியன் said...

//தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் வளமான நம்பர் ஒன் மாநிலமாக்கும் தனது தந்தையின் கனவை நனவாக மாற்றிக்கொண்டிருக்கிறார் //

கனவு காண்பது சிலருக்கு பரம்பரை வியாதி என வல்லுநர்கள் சிலர் சொல்கின்றனர். அது உண்மையா என விவரம் அறிந்தவர்கள் சொன்னால் தெரிந்துக் கொள்வேன்!!]]]]

உண்மையாக இருக்கலாம் ப்ரியன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////பெண்கள் நலனுக்காக கருணாநிதி போராடி வருகிறார்” - குஷ்புவின் அரசியல் மேடை கன்னிப் பேச்சு../////!

தலைப்பே எங்கோ இடிக்குதே நண்பரே! அது என்ன கன்னிப் பேச்சு??]]]

அவருடைய முதல் அரசியல் மேடைப் பேச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

VJR said...
எப்படி சார், இப்படியெல்லாம்? நீர் ஊனத் தமிழன்.

யார் செய்தாலும், அதிலுள்ள நியாயத்தைப் பார்க்க வேண்டுமேயொழிய, சொன்னவரின் வரலாறு பாக்கக்கூடாது.]]]

நானும் அப்படி நினைக்கலியே..!

குஷ்பு அன்றைக்கு பேசியதை பலரும் படித்திருக்க முடியாதல்லவா.. அதற்காகத்தான் இங்கே பதிவாக போட்டேன்..!

குஷ்புவை கிண்டல் செய்து அல்ல..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ரவி ஸ்ரீநிவாஸ் said...

'http://www.vinavu.com/2010/06/04/mullai-justice/

’இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.’

அந்த சந்திப்பில் வினவும், சிவராமனும் மன்னிப்பு கேட்பார்களா. அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அவதூறு பரப்பலாம் ஆனால் ஒரே ஒடு இடுகைக்கு நர்சிம் மன்னிப்பு கேட்க வேண்டும் இவர்கள் அதை தீர்வாக சொல்வார்களா. இது என்ன நியாயம். பெயர் சொல்லி சில பதிவர்களைப் பற்றி அவதூறு எழுதியவர்கள் அதற்கு ஆதாரம் தர மறுப்பவர்கள் மன்னிப்புக் கேட்க மாட்டார்களா. சுகுணா திவாகரை அடியாள் என்று எழுதியவர்கள், நர்சிம்மின் தந்தை, சாருவின் மனைவி போன்றவர்களைப் பற்றி எழுதியவர்கள் ஜெண்டில்மேன்களாகவும், ஜட்ஜ்களாவும் எப்படி இருக்க முடியும். இவர்கள் மன்னிப்புக் கேட்டால் நர்சிம்மும்,கார்க்கியும் மன்னிப்பு கேட்கலாம். முதலில் நர்சிம் மன்னிப்பு கேட்டால் அடுத்து வினவு கேட்கட்டும், பின் கார்கி, பின் சிவராமன் என்று அது தொடரட்டும். அப்படி இல்லாதபோது நர்சிம், கார்கி மன்னிப்பு கேட்பது சரியான முடிவல்ல. இது என் கருத்து, உண்மைத்தமிழன் இதில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.ஒதுங்கி விடுங்கள்.]]]

உங்களுடைய அன்பான புரிதலுக்கு மிக்க நன்றிகள் ரவி ஸார்..!

நான் மேற்கொண்டு இது பற்றி எதுவும் இப்போதைக்கு பேசப் போவதில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜானகிராமன்.நா said...

//பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரக் காரணமான அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவந்ததவர் ராஜீவ் காந்தி//

உண்மையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு 1987-ம் ஆண்டில் 69-வது அரசியல் சட்டத் திருத்தமாக ராஜீவ்காந்தியால் முன் மொழியப்பட்டு ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் ராஜீவோட மறைவுக்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நரசிம்மராவ் அரசாங்கத்தின் போது 1992-ம் ஆண்டு 73-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில் பெண்கள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இது முன்மொழியப்பட்ட இரண்டு முறையும் தமிழ்நாட்டின் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்றுக் கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது.

பின்னர் மத்திய அரசாங்க சட்டமாக வந்த பின்னர் வேறு வழியின்றி மாநில அரசு அமல்படுத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

குஷ்பு வரலாற்றை இப்போதே திரிக்க ஆரம்பித்துவிட்டார். நல்ல எதிர்காலம் அவருக்குள்ளது.]]]

அப்பாடா.. இன்னுமொரு ஆதாரம் வெளியே வந்துவிட்டது..!

எழுதிக் கொடுத்தவரை நாலு சாத்து சாத்தணும்..!

கன்னி உரையையே சொதப்ப வைச்சுட்டாரே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...

//குஷ்பு வரலாற்றை இப்போதே திரிக்க ஆரம்பித்துவிட்டார்//

இதை எழுதி கொடுத்தவர் திரித்து எழுதிக் கொடுத்துவிட்டார். குஷ்பு பாவம் என்ன செய்வார். அதை அப்படியே ஒப்பிப்பது அவர் வேலை. இந்த வரலாறெல்லாம் தெரிந்து கொண்டா பேசியிருப்பார். இன்னேரம் என்ன பேசினோம் என்பதையே மறந்திருப்பார்.]]]

குட் ஸ்டிரோக் ஆனந்த்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஒரு பெண்ணின் வாழ்க்கையில் 'கன்னிப் பருவம்' மிக முக்கியமானதாகும். அந்த காலக்கட்டத்தில் ஒரு சிறிய தப்பு நடந்தாலும் அதை பெரிதாக பார்ப்பார்கள்.//

அதுக்குத்தான் உங்க பாதுகாப்பு செயல்முறை இருக்கே, அதைப் பயன்படுத்துனா தப்பு யாருக்கும் தெரியாது அப்படின்னுதானே சொல்ல வரீங்க குஷ்பக்கா?