குருசிஷ்யன் - திரை விமர்சனம்

11-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ஓம் ஸ்ருதி (எ) ஹேமமாலினியாய நமஹ..!'

'ஓம் ஷகிலாயாய நமஹ..!

'ஓம் கிரணாய நமஹ..!'


தமிழ்ச் சினிமா கொஞ்சம் தலை நிமிர்ந்துவிட்டதாக நினைக்கக்கூட விடமாட்டார்கள் போலிருக்கிறது.

மார்க்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.. ஓரளவுக்கு நல்ல பொழுதுபோக்கு சினிமாவைத்தான் கொடுப்பேன் என்று நினைக்க மாட்டார்கள் போலிருக்கிறது..

ரெண்டு படம் பெயிலியர்ன்னு தெரிஞ்ச உடனேயே ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏத்திவிட்டுத்தான் நம்ம ஹீரோ பொஸிஸனை தக்க வைச்சுக்கணும்னுதான் முக்கால்வாசி ஹீரோக்களும் நினைக்குறாங்க.. இதற்கு சுந்தர்.சி-யும் விதிவிலக்கானவரில்லை போலும்..!அடுத்தடுத்த தொடர் தோல்விகளின் உண்மையான காரணம் என்ன என்பதைப் பற்றியறியாமல் மசாலாவை தண்ணி மாதிரி கலந்து கொடுத்தா மக்கள் புது டேஸ்ட்டா இருக்குன்னு ஒரு கை பார்ப்பாங்கன்னு நினைச்சுட்டாரு..

எல்லாத்துலேயும் ஓவர் டோஸ்..!

கதை ரொம்ப சிம்பிள்.. அக்கா மேல கொள்ள பாசத்தோட திரியுற தம்பி.. சின்ன வயசுல விளையாடும்போது அக்கா தன்னோட பிரெண்ட்டை கீழே தள்ளிவிட பிரெண்டு செத்தது மாதிரி நடிச்சுத் தொலையறா.. இதைப் பார்த்து கொலைன்னு நினைச்ச அந்த சின்னப் பையன் அக்காவைக் காப்பாத்த நினைச்சு தான்தான் அந்தக் கொலையை செஞ்சேன்னு ஊருக்குள்ள சொல்லிருக்கான்னுட்டு மும்பைக்கு ஓடிர்றான்..

இருபத்தைஞ்சு வருஷம் கழிச்சு மும்பைல ஒரே நாள்ல ஒரே நேரத்துல செத்துப் போன மாதிரி நடிச்ச அக்காவோட பிரெண்ட்டை அடையாளம் கண்டுபிடிச்சு(திரைக்கதையோட வேகம் அப்படி..) அக்காவோட இன்னிக்கு நிலைமையை கேட்டவுடனேயே கொதிச்சுப் போய் ஊருக்கு ஓடி வர்றாரு..அக்காவுக்கும், அவ ஹஸ்பெண்ட்டுக்கும் இடைல தகராறு. அக்காவை மாமன்காரன் துரத்திவிட்டுட்டான். ஊருக்குள்ளேயே நடமாடவிடக் கூடாதுன்னு சொல்லி விரட்டி விரட்டியடிக்கிறான். இதுனால தந்திரமாத்தான் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்னு சொல்லிட்டு அக்கா வீட்டுக்காரர்கிட்ட அடியாள் மாதிரி வேலைக்கு சேர்ந்து பல ரகளையும் செஞ்சுட்டு இடைவேளைல “நான் அக்காவுக்கு தம்பி மாமா.. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சுட்டுத்தான் மறுவேலை”ன்னு சவால் விடுறாரு..

சினிமா பாணில அதைக் கடைசில செஞ்சு முடிச்சாலும் எப்படி செய்யறாருன்றதுதான் இடைவேளைக்கப்புறமான கதை.. இதைச் சொல்ற விதம் இருக்கு பாருங்க.. சீரியல் தோத்துச்சு போங்க.. அப்படியொரு திரைக்கதை.

சத்யராஜ்ன்னு சொன்னாலே லொள்ளும், ஜொள்ளும் இருக்கும்.. இதுலேயும் இருக்கு.. ஆனா ரொம்ப ஓவரு.. சத்யராஜ் இடத்தைப் பிடிச்சுட்டாரு சுந்தர்.. அவரோட அறிமுகமே படம் எந்த லட்சணத்துல இருக்கப் போகுதுன்னு காட்டுது.

மாப்பிள்ளை கோலத்துல மண்டபத்துக்கு வர்றவரு ஆரத்தி எடுக்குற மாமியார்கிட்ட நக்கலா பேசிக்கிட்டு தட்டுல போட வேண்டிய ரூபாய் நோட்டை மாமியாரின் நெஞ்சில் குத்திவிட்டுப் போவதில் அதிர்ச்சியானது கணவராக நடித்த 'பட்டிமன்றப் புகழ்' ராஜா மட்டுமில்ல.. நானும்தான்.. இப்படியொரு காட்சியை நான் தெலுங்கு படங்களில்தான் பார்த்திருக்கேன். தமிழ் சினிமா கலாச்சாரத்திற்கு இது ரொம்பவே புதுசு..

இது மட்டுமா..? ஹேமமாலினியை பொண்ணு பார்க்கப் போற இடத்துல அவங்க அம்மா ஜெயரேகாவை(இந்த அம்மாவின் பூர்வீகம் பற்றி சினிமா வரலாற்றோடு சம்பந்தப்பட்ட நிஜக் கதை ஒன்று இருக்கிறது. யாராவது அடையாளம் கண்டு கொண்டு தெரிவித்தால் நான் அவருக்கு உடனடியாக சிஷ்யனாகி விடுகிறேன்) சைட் அடிக்கிறது.. அந்தம்மா கன்னத்தைக் கிள்ளிவிட்டுட்டுப் போறது.. அப்புறம் சந்தானத்தின் ஐடியாபடி பாத்ரூம்ல ஹேமமாலினியை பார்க்கப் போக.. அந்த நேரத்துல அவங்க அம்மா வந்து நிக்க.. மாப்பிள்ளையை பார்த்து மாமியார் அதிர்ச்சியாகி கீழ விழுகப் போக வருங்கால மாப்பிள்ளை.. வருங்கால மாமியாரைக் கட்டிப் பிடிக்க.. மாமனார் “என்ன சத்தம்”ன்னு வந்து கேட்க.. “மாப்பிள்ளை எப்படி கட்டிப் பிடிச்சாரு தெரியுமா? நீங்களும்தான் இருக்கீங்களே.. ஒரு நாளாவது அது மாதிரி கட்டிப் பிடிச்சிருப்பீங்களா?”ன்னு பொண்டாட்டி கேட்டுட்டுப் போக.. இதைக் கேட்டு மாமனார் சிரிச்சு.. “இது என் பரம்பரைப் பழக்கம்.. என் சின்ன வயசுல என் மாமியாரை நான் எப்படியெல்லாம் கட்டிப் பிடிச்சேன்”னு சொல்றாரு பாருங்க.. சத்தியமா இதுக்காக ஷக்தி சிதம்பரத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை தங்கத் தட்டுல வைச்சு நீட்டிரலாம்..

நகைச்சுவைக்கு என்றாலும்கூட இப்படியா வைப்பது..? ம்ஹூம்.. தமிழ்ச் சினிமா உருப்பட்டாப்புலதான்..

சத்யராஜ் அமைச்சரின் பினாமி.. பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய கேரக்டர்.. அவரிடம் வந்து அடிமையாகிறார் அண்ணன் சுந்தர். செய்ற தப்புக்கெல்லாம் ஒரு விளக்கம் வைச்சு நல்லாவே தப்பு பண்ணுங்கப்பா என்று அட்வைஸும் செய்கிறார்.

சரண்யாவுக்கும் அவருக்குமான போர்ஷன் மட்டும் கச்சிதமான வெட்டுப்புலி ஆட்டம் போல் கத்திரி போட்டு வெட்டியிருக்கிறார்கள். படம் முழுவதும் இடையிடையே பிளாஷ்பேக் காட்சிகளாக வருவதால் முழு கதையும் தெரியாமல் கடைசி வரையிலும் உட்கார வேண்டியிருக்கு..

ஹீரோயின் ஹேமமாலினி. இந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் 'மச்சான்ஸ்' புகழ் நமீதாதான். 'நான் அவன் இல்லை 'படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்த ஹீரோயின்களையெல்லாம் ஓரங்கட்டியிருந்த ஹேமமாலினியை பார்த்த மாத்திரத்தில் புக் செய்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம். அதே வேகத்தில் கொஞ்சம் நடிப்பதற்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.சுந்தர் பெண் பார்க்க வந்திருக்கும்போது ஜூஸ் டம்ளரை நீட்டியபடியே ஹேமா நிற்கும் கோணத்திற்கே தியேட்டரில் இருந்த 25 சொச்சம் பேரும் கை தட்டினார்கள்.. அம்மணியை உரித்து எடுத்திருக்கிறார் ஷக்தி. மாலத்தீவு கடலில் சுந்தருடன் போடுகின்ற ஆட்டத்திலும், அம்மணி பிகினி உடையில் ஓடி வருகிறதையும் பார்த்தால் ஒரு நல்ல ஹிட்டாகக்கூடிய படத்தில் ஹேமா இருந்தால் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புண்டு.

இடையிடையே ஒரே ஒரு பாடல் காட்சியில் எனதருமை தங்கத் தலைவி ஷகீலா தோன்றுகிறார். ஸ்கிரீன்ல பார்த்து எவ்ளோ நாளாச்சு..? கொஞ்சம் இளைச்சுட்ட மாதிரி தோணுது.. என்ன கவலையோ..? அவங்க இந்த விஷயத்துல ரிட்டையர்மெண்ட் ஆயிட்டதால, அவங்களை கவர்ச்சி காட்ட வைக்காம.. கிரணை கூட்டியாந்து ஆட விட்டிருக்காங்க.. 

‘பத்ரகாளி' படத்தோட ‘கேட்டேளா அங்கே.. பார்த்தேளா இங்கே' பாடலை ரீமிக்ஸ் செய்து கொடுமை செய்திருக்கிறார்கள். மொதல்ல இந்த ரீமிக்ஸுக்கு தடை போடணும்பா.. பாட்டையும் கெடுத்து, சீனையும் கெடுத்து எழுதினவருக்கும் மதிப்பில்லை.. இசையமைச்சவருக்கும் மருவாதை இல்லாம போகுது..

சுந்தருக்கு அழுக வேண்டிய சீனே இல்லைன்றதால அத்தனையையும் சரண்யாவே குத்தகைக்கு எடுத்துக்கிட்டாங்க. ச்சும்மாவே பதைபதைக்குற கேரக்டரு. இதுல புருஷன் தன்னை ஓட, ஓட விரட்டுறான்னு தெரிஞ்சும் அக்மார்க் தமிழச்சியைப் போல புருஷனோட சேர்றதுக்கு துடியாய் துடிக்கிற கேரக்டர்.. ம்ஹும்.. ஒரு தைரியமான தமிழச்சியைக்கூட தமிழ்ச் சினிமால பார்க்க முடியாது போலிருக்கு.. எல்லாரும் கண்ணகி பரம்பரையாவே இருக்காங்க..!

இவருக்காகவும் ஒரு ரீமிக்ஸ்.. கடலோரக் கவிதைகள்ல வரும் ‘அடி ஆத்தாடி' பாட்டு.. பாவம் பாரதிராஜா.. இதைப் பார்த்தாருன்னு என்ன நினைப்பாரு..? கவிதை மாதிரி எடுத்திருந்தாருப்பா இயக்குநர் இமயம்..

சந்தானம் ஹேமமாலினியோட முறைப் பையன்.. இன்னும் எத்தனை படத்துலதான் இப்படி முறைப் பையனாவே நடிச்சு ஓய்ஞ்சு போகப் போறாருன்னு தெரியலை. ஆனா படத்துல இவருக்குக் கொடுத்திருக்கிற ஓப்பனிங் பில்டப்பெல்லாம் இந்த அளவுக்குத் தேவையான்னு கேக்கத் தோணுது.. ஆனாலும் இவரும் இல்லைன்னா படத்துல உக்காந்திருக்கவே முடியாது. வசனத்தை பக்கம், பக்கமா பேசித் தள்ளுறாரு.. சிரிக்க முடியலைன்னாலும் பரவாயில்லை.. புன்னகைக்க முடியுது..

விஜய்யின் வேட்டைக்காரன் பட ரிலீஸுக்கு போயி தல அஜீத்தை வாரி விடுற சீனே போதும்.. “தல இருக்கிறவன்லாம் தலதான்டா.. எல்லாரும் ஒருத்தனை மட்டும் தலன்னு சொன்னா எப்படி?”ன்னு நியாயம் கேக்குறாரு.. தல வரட்டும். படத்தைப் பார்க்கட்டும். அப்புறம் சந்தானம் தல படத்துல இருப்பாரான்னு யோசிப்போம்..

முதல் பாதில ஏதோ ஹேமமாலினி புண்ணியத்துலேயும் சந்தானம் புண்ணியத்துலேயும் போனாலும் இடைவேளைக்கப்புறம் மாமனும், மச்சானும் போட்டி போட்டுக் கொண்டு இழுக்குற இழுப்புல கதை ஜவ்வா கிழியுது.. ஆனாலும் ச்சின்ன ச்சின்ன டிவிஸ்ட்டுகளை போட்டு இழுத்துப் பிடிக்க பார்த்தாலும் எந்திரிச்சு ஓடுறவங்களை நிறுத்த முடியலை.

படம் பார்க்க உக்காரும்போது இருந்த கூட்டம் படம் முடியும்போது இல்லை.. இப்படித்தான் நடக்கப் போகுதுன்னு ஷக்தி சிதம்பரத்திற்கு முன்னாடியே தெரியும் போல.. அதுதான் எண்ட் டைட்டில்ல டேக்கன் ஷாட்களை போட்டும், மச்சான்ஸ் நமீதாவை ஓரங்கட்டி ஒரு ஷாட்டுக்கு நிக்க வைச்சும் காட்டிருக்காரு.. ஆனாலும்.. ம்ஹூம்..

கவர்ச்சியில் ஓவர் டோஸ்.. முகம் சுழிக்க வைக்கும் சில காட்சிகள்.. ஹெவியான கதைக்கு லைட்டான திரைக்கதை.. உணர்ச்சியைக் கொட்ட வேண்டிய ஒரு கான்செப்ட்டை காமெடியாக்கியது. படத்தின் போஸ்டர்களிலேயே ஓவராக ஜொள்ளுவிட வைத்தது என்று பலவும் வெளியில் பரவ.. இது ஆண்களுக்கான திரைப்படம் என்று நினைக்க வைத்துவிட்டது போலும். நேற்று நான் பார்த்த காட்சியில் இரண்டே இரண்டு பெண்கள்தான் வந்திருந்தார்கள்.

இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் வந்தால் போதும்.. சத்யராஜூம், சுந்தரும் இருக்குற மார்க்கெட்டும் போய் வீட்ல உக்கார வேண்டியதுதான்..

புரிஞ்சுக்கிட்டா சரிதான்..

“அப்புறம் எதுக்குடா வெண்ணை.. இப்படி நடுராத்தில ஏழு பக்கத்துக்கு என்னத்தையோ எழுதி வைச்சு எங்க உயிரை எடுக்குற?”ன்னு கேக்குறீங்களா..?

அதான் தலைப்புலேயே ‘ஓம் நமஹ'ன்னு மூணு பேருக்கு அர்ச்சனை செஞ்சிருக்கனே.. புரியலையா..? அதுக்குத்தான்.. ஹி.. ஹி.. ஹி..

லொள்ளும், ஜொள்ளும் பிடிச்சவங்க போய்க்குங்க..! 

34 comments:

பிள்ளையாண்டான் said...

தமிழ் திரைப் படத் துறை கடுமையான நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

பெண்கள் திரையரங்களுக்கு வருவதையே நிறுத்தி விட்டார்கள்!!


அட போங்கப்பா!!

இராகவன் நைஜிரியா said...

// லொள்ளும், ஜொள்ளும் பிடிச்சவங்க போய்க்குங்க..! //

அண்ணே இது... கலக்கிட்டீங்க.

அண்ணே உங்களுக்கு பிடிச்சு இருந்ததா அண்ணே?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிள்ளையாண்டான் said...
தமிழ் திரைப்படத் துறை கடுமையான நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது.
பெண்கள் திரையரங்களுக்கு வருவதையே நிறுத்தி விட்டார்கள்!!
அட போங்கப்பா!!]]]

பிள்ளையாண்டான் இது இரண்டுமே உண்மைதான்..!

படம் நன்றாக ஓடுகிறது என்றாலும் வசூல் இருக்காது.. வசூலில் குறைவில்லை என்று தயாரிப்பாளர்கள் சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்..

கந்தசாமி படம் பெருத்த நஷ்டம்தான் என்று இப்போதுதான் அதன் தயாரிப்பாளர் தாணு வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்..!

படம் ஓடிக் கொண்டிருக்கும்போது அவர் கொடுத்த பில்டப் ஞாபகம் இருக்கிறதா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராகவன் நைஜிரியா said...

//லொள்ளும், ஜொள்ளும் பிடிச்சவங்க போய்க்குங்க..! //

அண்ணே இது... கலக்கிட்டீங்க.
அண்ணே உங்களுக்கு பிடிச்சு இருந்ததா அண்ணே?]]]

படத்துல இருந்த மூணு பேரை மட்டும் புடிச்சிருந்தது..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
:)))]]]

காத்தாடுற நேரத்துல வந்து ஆஜர் கொடுத்து காப்பாத்துறீங்களே..!

கண்ணுல தண்ணி வருது ஸார்..!)))))))))

பிரபாகர் said...

அண்ணே இதுக்கப்புறமும் பாப்போங்கறீங்க!

சுருங்க அழகா இருக்கு(போன இடுகையில தான் சோடா ஊத்தற மாதிரி ஆயிடுச்சி!)

பிரபாகர்...

Sukumar Swaminathan said...

ரைட்டு தல...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரபாகர் said...

அண்ணே இதுக்கப்புறமும் பாப்போங்கறீங்க!

சுருங்க அழகா இருக்கு(போன இடுகையிலதான் சோடா ஊத்தற மாதிரி ஆயிடுச்சி!)

பிரபாகர்...]]]

ஓகே.. ஓகே.. சினிமா விமர்சனத்தை இனிமே இந்த அளவோட வைச்சுக்குறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Sukumar Swaminathan said...

ரைட்டு தல...]]]

ஓகே தல..!

ஜெட்லி said...

நானும் இந்த எழவு எடுத்த காவியத்தை நேத்து பார்த்தேன்....
மீதி என் பதிவில் விரைவில்....

தருமி said...

பதிவில் படம் எல்லாம் பார்த்தேன் ............

சுரேஷ் கண்ணன் said...

//ஜெயரேகாவை//

இவர் பழைய நடிகை கண்ணாம்பாவின் (கண்ணகியாக நடித்தவர் என்று சொன்னால் சிலருக்கு உடனே விளங்கக்கூடும்) பேத்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மலையாள 'பிட்' படங்களில் இவரை பார்த்த போது இந்த தகவலினால் அதிர்ச்சியாகவும் பொதுவாக கிளுகிளுப்பாகவும் இருந்தது. :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெட்லி said...

நானும் இந்த எழவு எடுத்த காவியத்தை நேத்து பார்த்தேன்....
மீதி என் பதிவில் விரைவில்....]]]

வாங்க ஜெட்லி வாங்க..! சாத்துங்க.. சாத்துங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தருமி said...

பதிவில் படம் எல்லாம் பார்த்தேன் ............]]]

நினைச்சேன்.. ஏத்தம் எவ்வளவுக்கு இருக்கு..?

உங்களை மாதிரியானவங்களுக்காகத்தான் போட்டோவையே போடுறோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சுரேஷ் கண்ணன் said...

//ஜெயரேகாவை//

இவர் பழைய நடிகை கண்ணாம்பாவின் (கண்ணகியாக நடித்தவர் என்று சொன்னால் சிலருக்கு உடனே விளங்கக்கூடும்) பேத்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மலையாள 'பிட்' படங்களில் இவரை பார்த்த போது இந்த தகவலினால் அதிர்ச்சியாகவும் பொதுவாக கிளுகிளுப்பாகவும் இருந்தது. :-)]]]

குருவே நமஸ்காரம்..!

அடியேனை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளவும்..!

Suddi said...

Anna,

After ThalaiNagaram, all Sundar. C movies are dabba. Infact
ThalaiNagaram itself ran for
"Naai Sekar" Vadivelu..

Innoru thadavai Sura parunga, Guru
Sishyan supera irukkum.

Hems takkara irukku.. intha bit padam link irukka ?.

தருமி said...

அந்தக் கண்ணாம்பா பேத்தி படமும் போட்டீங்கன்னா, பார்த்து புண்ணியம் சேர்த்துக்குவோமே ...

kanagu said...

neenga irumbu kottai muratu singam ku pogama ethuku na ithuku poneenga????

sundar.C padamellam paakura thairiyam enakku illana... :) :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Suddi said...

Anna, After ThalaiNagaram, all Sundar. C movies are dabba. Infact
ThalaiNagaram itself ran for
"Naai Sekar" Vadivelu..

Innoru thadavai Sura parunga, Guru
Sishyan supera irukkum. Hems takkara irukku.. intha bit padam link irukka?]]]

சுதி ஸார்.. சுறாவுக்கு குருசிஷ்யன் பெட்டர்தான் ஒத்துக்குறேன்..!

இந்த பிட்டு படம் லின்க்கெல்லாம் கேட்டா எப்படிங்க ஸார்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தருமி said...
அந்தக் கண்ணாம்பா பேத்தி படமும் போட்டீங்கன்னா, பார்த்து புண்ணியம் சேர்த்துக்குவோமே.]]]

நினைச்சேனுங்க ஐயா..

நம்ம மதுரை யூத்து இப்படியெல்லாம் கொஸ்டீன் கேப்பாரேன்னுட்டு கூகிளாண்டவர்கிட்ட கேட்டுப் பார்த்துட்டேன். எல்லாமே வில்லங்கமான போட்டோவாத்தான் கிடைச்சது.. அதுதான் போட முடியலை..

நீங்களே வேணும்னா தேடிப் பாருங்களே..! அந்தப் பாவம் எனக்கெதுக்கு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kanagu said...
neenga irumbu kottai muratu singamku pogama ethuku na ithuku poneenga????
sundar.C padamellam paakura thairiyam enakku illana... :) :)]]]

கனகு.. என்ன இது..? இப்படியொரு பி்ன்னூட்டத்தை நீங்க போடலாமா..?

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கோரிப்பாளையம்னு வரிசையா விமர்சனத்தை போட்டுட்டுத்தான் கடைசியா குருசிஷ்யனை போட்டிருக்கேன்..!

கொஞ்சம் கண்ணை அகலமாத் திறந்து பாருங்க தம்பி..!

kanagu said...

mannikanum anna.. rendu naala ooruku poi irundhen... so vegama padikura aarvathula matha pathivugala vittuten.. athayum padichitu solren na :) :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kanagu said...
mannikanum anna.. rendu naala ooruku poi irundhen... so vegama padikura aarvathula matha pathivugala vittuten.. athayum padichitu solren na :) :)]]]

ok kanagu..!

ஜாக்கி சேகர் said...

லொள்ளும், ஜொள்ளும் பிடிச்சவங்க போய்க்குங்க..! //

நினைச்சேன்... நீங்க இந்த படத்தை பத்தி விமர்சன்ம் எழுதும் போதே நினைச்சேன்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜாக்கி சேகர் said...

லொள்ளும், ஜொள்ளும் பிடிச்சவங்க போய்க்குங்க..! //

நினைச்சேன்... நீங்க இந்த படத்தை பத்தி விமர்சன்ம் எழுதும்போதே நினைச்சேன்.]]]

ஹி.. ஹி.. ஹி..

இவ்ளோ நாள் பழகியு்ம் இதைக் கண்டுபிடிக்க முடியலைன்னா ஜாக்கி ஜாக்கியாவே இருக்க முடியாதே..!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com

ஷர்புதீன் said...

உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஷர்புதீன் said...
உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்]]]

ஞாபகம் வைத்திருந்து குறிப்பிட்டமைக்கு நன்றிகள் ஷர்புதின்..

அப்படியொன்றும் நான் பெரிதாகச் செய்யவில்லையே..!

தமிழ்நதி said...

:)மக்கள் மாறிவிட்டார்கள். திரைக்குத்தான் தெரியவில்லை.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///சுரேஷ் கண்ணன் said...

//ஜெயரேகாவை//

இவர் பழைய நடிகை கண்ணாம்பாவின் (கண்ணகியாக நடித்தவர் என்று சொன்னால் சிலருக்கு உடனே விளங்கக்கூடும்) பேத்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மலையாள 'பிட்' படங்களில் இவரை பார்த்த போது இந்த தகவலினால் அதிர்ச்சியாகவும் பொதுவாக கிளுகிளுப்பாகவும் இருந்தது. :-)///

இதுலே என்னா அதிர்ச்சி? கண்ணாம்பா கண்ணகியாக நடித்தவர் என்றால் அவள் கற்புக்கு அரசியா? இல்லை அவரது பேத்தி இது மாதிரி நடித்தால் என்ன அதிர்ச்சி? சினிமாவில் நடிப்பது Side-தொழில்...அது தான் எல்லா நடிகைக்கும் முழு நேர தொழில்.

மேலும் கண்ணகி மற்றும் சிலப்பதிகாரம் எல்லாம் இடைச் செருகல்கள் எல்லாம் Full- புருடா. என்ன பெரிய வெங்காய கண்ணகி. ஒரு முXயை எடுத்து மதுரையை கொளுத்துன புருடா.. அவ புருசன் செத்தால் அரசனை கொல். அது என்ன மதுரை முழுக்க எரிப்பது? சரி. அதுவும் அந்தணர்கள் தவிர்த்து எல்லா கசுமாலதையும் எரித்த கற்ப்புக்அரசி கண்ணகி. ஏன் அந்தணர்களுக்கு அந்த "ஸ்பெஷல் Protection" சரி கண்ணாம்பா நடித்த பிறகு விஜயகுமாரி ஆத்தாவும் தான் அந்த கருமாந்திரம் புடிச்ச கண்ணகியாக நடித்தவர் .

இந்த சிலப்பதிகாரமே பார்பனர்கள் உயர்ந்தவர்கள், நீங்களும் நானும் கசுமாலம் என்று உறுதிபடுத்துவர்த்க்கு எழுதப்பட்ட ஒரு இடைச் செருகல்கள்....அம்புடுதான்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Dear உண்மைத்தமிழன்:

////====>இந்த தேவதாசி கருமாந்திரத்தை நிலை நிறுத்த பாடு பட்ட கழிசடைகள் தான் Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT. You can also add Dr. Annie Besant, Rukmani Arundlae to the list with H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, and the GREAT Mr. Sathya Murthy Iyer—-இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

இவாளப்பத்தி நன்னா தெரியும்னுன்னா நம்ம மதிமாறன், தமிழ் ஓவியா அப்புறம் சங்கமித்திரன் அவர்களைக் கேளுங்கள். இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை பிச்சு எடுத்துடுவாங்க. அப்படியே கூடவே காயப்போட்டுறுவாங்க.

என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

PS: Shame on Congress to have the headquarters at Chennai in the name of Mr. Sathya Murthy Iyer who encouraged prostitution….Wait…wait…But NOT from his OWN Brahmin caste—-That is why he is called as GREAT Sathya Murthy ஐயர்….ர் .ர் .ர் .ர் .ர் ருங்கோ..ஓ..ஓ…ஓ…////.

மேலே கூறியது இந்த கீழ்க்கண்ட பதிவில் உள்ளது.

http://www.vinavu.com/2010/05/20/kushpu-dmk/


இந்த பதிவில் JAMES FRIEDRICH (மறுமொழி 12 ) என்று ஒருவர் தேவதாசி முறையைப் பற்றி உளறி இருக்கிறார். அதற்கு என் பதில் (மறுமொழி 16) மேலே அடைப்புக்குள் இருப்பது .

இது உங்களுக்கு:

Annie Besant ஒரு பார்பன சொம்பு தூக்கி. வருணாசிரமத்தை மற்றும் தீண்டாமையை வலியுறித்திய கழிசடை. உங்களிடம் ஆதாரம் இருந்தால் அவாளுக்கு பதில் அடி கொடுங்கள்.

உங்கள் ஈமெயில் விலாசம் இல்லாததால் உங்கள்;உடைய பதிவில் இந்த செய்தியை கொடுத்துள்ளேன். மன்னிக்கவும்...


என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

abeer ahmed said...

See who owns budidian.com or any other website:
http://whois.domaintasks.com/budidian.com

abeer ahmed said...

See who owns domainkatalogus.hu or any other website.