முத்தான கலைஞன் வி.எம்.சி.ஹனீபா - ஒரு அஞ்சலி

17-02-10

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற ஆண்டுதான் லோகிததாஸ், ராஜன் பி.தேவ், முரளி என்று முத்தான மூன்று கலைஞர்களை இழந்திருந்த மலையாளத் திரையுலகத்திற்கு இந்தாண்டு துவக்கமே மோசமானதாக இருந்துவிட்டது. வி.எம்.சி.ஹனீபா என்னும் பாசக்கார மனிதரின் மரணம் மலையாள திரையுலகத்தினரை ரொம்பவே அப்ஸெட்டாக்கியிருக்கிறது.


கல்லீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 2-ம் தேதியன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மரணமடைந்த வி.எம்.சி.ஹனீபாவின் மரணத்தை இத்தனை சீக்கிரம் யாரும் எதிர்பார்க்கவில்லை.. திருமணமாகி 16 வருடங்களுக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் குழந்தைகள் பிறந்ததில் மனிதர் உச்சிகுளிர்ந்து போயிருந்தார். அதுவும் இரட்டை பெண் குழந்தைகள். சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதாக பெருமிதத்துடன் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்குள் இந்தத் துயரம்..


மாதத்தில் 30 நாட்களும் கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்க வேண்டியிருந்தாலும் சென்னையில் சாலிக்கிராமத்தில்தான் குடியிருந்து வந்தார். கடைசியாக தமிழில் 'வேட்டைக்காரனில்' நடித்திருந்தார். 'மதராஸபட்டினம்', 'கற்றது களவு' ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ஹனீபா மிகச் சமீபத்தில்தான் தன்னை கேன்ஸர் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 28-ம் தேதிதான் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். 2-ம் தேதி காலையில் ஏற்பட்ட கடும் மாரடைப்பு அவருடைய உயிரைப் பறித்திருக்கிறது.


1951-ம் ஆண்டு கொச்சியில் பிறந்த கொச்சி ஹனீபாவின் இயற்பெயர் சலீம் அஹமத் கெளஸ். தாவரவியலில் பட்டப் படிப்பை முடித்த சலீமுக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட.. நடிகர் ஜெயராம், பிந்து பணிக்கர், ஹரிஅசோகன், காலாபாவன் மணி என்ற கலைஞர்களெல்லாம் நடித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற நாடகக் குழுவான கலாபாவனில் ஒரு உறுப்பினராக சேர்ந்தார். 'காலாபாவன்' அமைப்பு நடத்தும் நாடகங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தபோது ஒரு நாடகத்தில் அவர் ஏற்றிருந்த 'ஹனீபா' என்றொரு கேரக்டர் டாப்கியருக்கு செல்ல.. இந்தப் பெயரும் பிறந்த ஊரான கொச்சியும் சேர்ந்து கொச்சின் ஹனீபா என்பதே இவரது பெயராக நிலைத்துப் போய்விட்டது.

1976-களில் சென்னை வந்த ஹனீபா அப்போதைய நமது வில்லன் நடிகரான ஆர்.எஸ்.மனோகரின் தம்பி சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியபடியே நடிக்கத் தொடங்கினார்.

1979-ல் 'அஷ்தவக்ரம்' என்னும் மலையாளப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகமான ஹனீபாவுக்கு முதலில் சில சிறிய வேடங்களே கிடைத்தாலும் பிற்பாடு அவருடைய முகத்தோற்றம் வில்லனுக்குரியதாக இருந்ததால் 'மாமாங்கம்' என்னும் படத்திலிருந்து வில்லனாக நடிக்கத் துவங்கினார்.

இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 17 மலையாளத் திரைப்படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். 7 மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஹனீபா தமிழிலும் 6 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் 'பாடாத தேனீக்கள்', 'பாசப் பறவைகள்' இரண்டு படங்களுமே அவர் மலையாளத்தில் இயக்கிய திரைப்படங்களின் தமிழ் ரீமேக்தான். இந்த இரண்டிற்குமே கலைஞர்தான் வசனம் எழுதினார்.

1985-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஒரு சந்தோஷம் கூடி' இன்றைக்கும் மலையாள திரையுலகில் மிகப் பிரபலமான திரைப்படம். மம்முட்டியும், ரோகிணியும் நடித்தது. 2001-ம் ஆண்டு 'சூத்ரதாரன்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றிருக்கிறார்.


பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எளிமையானவர்.. ஈகோ இல்லாத மனுஷன்.. ஒரு இயக்குனருக்கு எந்த மாதிரியாகவும் செட்டாகக் கூடியவர் என்பதால்தான் தமிழ், மலையாளம், இந்தி என்று மூன்று மொழிப் படங்களிலுமே களைகட்டியவர். இவருடைய மிக நெருங்கிய நண்பரான இயக்குநர் பிரியதர்ஷனின் திரைப்படங்கள் அத்தனையிலும் தவிர்க்க முடியாத நபர் ஹனீபாதான். வில்லத்தனத்தில் இருந்து நகைச்சுவை கேரக்டருக்கு இவரை மாற்றியது பிரியதர்ஷன்தான்.


ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் பிரியதர்ஷனிடம் ஸ்கிரீன் அவார்டு விஷயமாக பேசுவதற்காக சந்திக்கச் சென்றிருந்தேன். ஒரு காலைப் பொழுதில் வாகினி ஸ்டூடியோவில் ஒரு விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் பிரியதர்ஷன். நான் சென்ற நேரம் என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே வி.எம்.சி.ஹனீபாவுடன், சீனிவாசனும் உடன் இருந்தார். நிமிடத்திற்கு ஒரு ஜோக் அடித்தபடியே நான் எதிர்பார்த்திருந்த வில்லன் கதாபாத்திரமும், இயக்குநர் கதாபாத்திரமும் இல்லாமல் சக தோழனைப் போல் பார்த்த நிமிடத்தில் தோளில் கை போட்டு பேசிய அந்த நேசத்தை நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

நான் என்றில்லை.. அவருடன் இணைந்து பணியாற்றிய அத்தனை தமிழ்நாட்டு டெக்னீஷினியன்களும் இதைத்தான் சொல்கிறார்கள். கொடுத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மிச்சம், மீதியிருந்தாலும் பின்னாடி வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர்களுக்கும் பிடித்தமானவராக இருந்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகன் மீது முன்னணி மலையாள நடிகர்கள் கோபம் கொண்டு அவரைப் புறக்கணிப்பு செய்திருந்தபோதிலும், சமீபத்தில் நடந்த திலகனின் மகள் திருமணத்திற்கு ஹனீபா ஓடோடிச் சென்று வாழ்த்தியதை மலையாளப் பத்திரிகைகள் பெரும் செய்தியாக வெளியிட்டிருந்தன.

ஹனீபா தமிழில் முதலில் பிரபலமானது கே.பாலசந்தரின் 'வானமே எல்லை' படத்தில்தான். மகளின் காதலைத் தடுக்க மகள் விரும்பியவனின் தாயையே திருமணம் செய்து கொண்டு வரும் அதிவில்லத்தனமான கேரக்டர்.. யார் இந்த ஆளு என்று புருவத்தை உயர்த்த வைத்தது இவருடைய பாடி லாங்வேஜூம்.. டயலாக் டெலிவரியும்.. அடுத்த வருடமே வெளிவந்த 'மகாநதி' இவரை எங்கயோ கொண்டு போனது.. அந்த அலட்சியத்தனமான, நம்ப முடியாத வில்லத்தனம் இது போன்ற கேரக்டர்களுக்கே இவரை இழுத்து வந்தாலும். 'சிறைச்சாலை', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்கள் பக்கம் திசை திரும்பிவிட்டார்.

அவருடைய உடல் வாகுக்கு ஏற்றாற்போல் வில்லனாகவும், அதே சமயம் மாட்டிக் கொள்ள விரும்பாத காமெடியனாகவும் அவருடைய அவதாரங்கள் பல பல.. 'கிரீடம்' படத்தில் ரவுடி போன்று கைகளை வீசிக் கொண்டு அவர் நடந்து வரும் தோரணை பயமுறுத்துவதற்கு பதிலாக சிரிப்பைத்தான் வரவழைத்தது. இதையேதான் மலையாள இயக்குநர்கள் விரும்பினார்கள். சப்பையான வில்லன் என்றால் அது ஹனீபாதான் என்பதற்கு ஏற்றாற்போல் அவருக்குள் இருந்த நகைச்சுவைத்தனத்தை மலையாள உலகம் கச்சிதமாகவே பயன்படுத்திக் கொண்டது.

மலையாள சேனல்களில் தமாஷ் நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹனீபாவை இப்போது பார்க்கின்றபோது இறைவன் அவசரப்பட்டுவிட்டானோ என்று திட்டத்தான் தோன்றுகிறது. எத்தனையோ நடிப்புகள் அவரிடமிருந்து திரையுலகத்திற்கு தேவையிருக்கும்போது சாவிற்கு என்ன அவசரம்..? இது நிச்சயம் கொடுஞ்சாவுதான்..!

காரணம், இறப்புக்குக் காரணமாக இருந்த கல்லீரல் கேன்சர் இவருக்கு ஏன் வந்தது என்பதும் தெரியவில்லை. மனிதர் திரையில்தான் நிறைய குடித்தது போல் நடித்திருக்கிறார். நிஜத்தில் குடிப்பழக்கம் இல்லாதவர். சிகரெட்டுகளைக்கூட தனது மகள்கள் பிறப்பிற்குப் பின் பெருமளவு குறைத்துக் கொண்டதாக அவருடைய பல வருட நண்பரான இயக்குநர் சசிமோகன் தெரிவித்தார். (பதிவர்களின் பின்னூட்டங்களுக்குப் பின்பு விசாரித்தபோது தெரிந்தது)

எர்ணாகுளத்தின் ஜூம்மா மசூதியில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட ஹனீபா, வந்தாரை வாழ வைக்கும் சென்னைதான் தன்னையும் வாழ வைத்தது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அதே சென்னையில்தான் அவருடைய மரணமும் நிகழ்ந்து உடல் மட்டும் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது காலத்தின் கொடூரம்.

46 comments:

பிரபாகர் said...

வெல்கம் பேக் அண்ணே!

ஹனிபாவை பற்றி அஞ்சலி செலுத்தும் வண்ணமாய் ஒரு இடுகை...

நிறைய எழுதுங்கள் அண்ணே!

பிரபாகர்.

ராஜ நடராஜன் said...

ஹனிபா பற்றிய தெரியாத பல தகவல்கள்.

V.Radhakrishnan said...

அன்னாருக்கு என் இதய அஞ்சலிகள், பல விசயங்கள் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும்படியாக இருந்தது. நன்றி ஐயா.

செ.சரவணக்குமார் said...

அருமையான கலைஞனுக்கு எனது அஞ்சலிகளும்.

சுரேகா.. said...

மிகவும் அன்பான பதிவு! திரு.ஹனீபாவின் ஆன்மா உங்களை வாழ்த்தியிருக்கும்!

உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணே!

Mrs.Menagasathia said...

ஹனீபாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி...

மோகன் குமார் said...

நல்ல பதிவு; நிறைய புது தகவல்கள் நன்றி அண்ணா

காவேரி கணேஷ் said...

பழகுவதற்கு எளிமையானவர், நகைசுவையில் தனக்கென தனிபாணி அமைத்து கொண்டவர்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அறிவன்#11802717200764379909 said...

உ.த.
லிவர் கேன்சர் பெரும்பாலும் மொடாக் குடியர்களையே தாக்கும்...அவர் குடிப்பழக்கம் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை;அப்படி இருந்தால் அவரது முடிவு அவரே தேடிக்கொண்டதாகத்தான் இருக்கும் !

ஜோதிஜி said...

அறிவன் சொன்னது தான். கலை உலக நாயகர்களை கல்லீரல் ஓரளவிற்குத் தான் பொதி சுமக்கும். பிறகு அதன் வேலையை காட்டி விடுகிறது.

சென்ஷி said...

//'சிறைச்சாலை', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்கள் பக்கம் திசை திரும்பிவிட்டார்.

//

காதலுக்கு மரியாதை படத்துல ஹனீஃபா நடிச்சிருக்காரா?

சப்ராஸ் அபூ பக்கர் said...

////ஹனீபாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி...///

அன்புடன்-மணிகண்டன் said...

மிகவும் நெகிழ்வான பதிவு..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நிறைய விஷயங்கள் புதிது .. ஆம் நிச்சயம் அவசரமாய் தான் போய்விட்டார் மனிதர்..:(

ஸ்ரீராம். said...

வருத்தத்துக்குரிய மறைவு...

D.R.Ashok said...

கணத்த பதிவு... வெளியே வர சில நாட்கள் பிடிக்குமெனக்கு ...

முகமூடி said...

// லிவர் கேன்சர் பெரும்பாலும் மொடாக் குடியர்களையே தாக்கும்... //

# Hepatitis B or C virus infection
# Certain autoimmune diseases of the liver
# Diseases that cause long-term inflammation of the liver
# Too much iron in the body (hemochromatosis)

மேற்கண்ட ஏதாவதாலும், மற்றும் வேறு ஏதோ ஒரு பாகத்தில் ஆரம்பித்து லிவருக்கு கேன்சர் பரவியதாலும் கூட லிவர் கேன்சரால் பாதிக்கப்படலாம்.. அப்படி இருக்க இறந்தவர் வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியாமல்

//அவர் குடிப்பழக்கம் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை;அப்படி இருந்தால் அவரது முடிவு அவரே தேடிக்கொண்டதாகத்தான் இருக்கும் //

குருட்டாம்போக்காக தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட அனுமானம் காரணமாக போகிற போக்கில் எழுதப்படும் “விமர்சனம்” அருவருப்பானது என்றால்

//அறிவன் சொன்னது தான். கலை உலக நாயகர்களை கல்லீரல் ஓரளவிற்குத் தான் பொதி சுமக்கும். பிறகு அதன் வேலையை காட்டி விடுகிறது.//

அதற்கு ஒரு ”இன்ஸ்டன்ட்” ஒத்தூதி பின்பாட்டு வேறு.

*

சினிமாவில் இருப்பவர்களை நிம்மதியாய் வாழத்தான் விடுவதில்லை என்றால் நிம்மதியாய் சாகக்கூடவா...

முகமூடி said...

// லிவர் கேன்சர் பெரும்பாலும் மொடாக் குடியர்களையே தாக்கும்... //

# Hepatitis B or C virus infection
# Certain autoimmune diseases of the liver
# Diseases that cause long-term inflammation of the liver
# Too much iron in the body (hemochromatosis)

மேற்கண்ட ஏதாவதாலும், மற்றும் வேறு ஏதோ ஒரு பாகத்தில் ஆரம்பித்து லிவருக்கு கேன்சர் பரவியதாலும் கூட லிவர் கேன்சரால் பாதிக்கப்படலாம்.. அப்படி இருக்க இறந்தவர் வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியாமல்

//அவர் குடிப்பழக்கம் கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை;அப்படி இருந்தால் அவரது முடிவு அவரே தேடிக்கொண்டதாகத்தான் இருக்கும் //

குருட்டாம்போக்காக தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட அனுமானம் காரணமாக போகிற போக்கில் எழுதப்படும் “விமர்சனம்” அருவருப்பானது என்றால்

//அறிவன் சொன்னது தான். கலை உலக நாயகர்களை கல்லீரல் ஓரளவிற்குத் தான் பொதி சுமக்கும். பிறகு அதன் வேலையை காட்டி விடுகிறது.//

அதற்கு ஒரு ”இன்ஸ்டன்ட்” ஒத்தூதி பின்பாட்டு வேறு.

*

சினிமாவில் இருப்பவர்களை நிம்மதியாய் வாழத்தான் விடுவதில்லை என்றால் நிம்மதியாய் சாகக்கூடவா...

ஜெட்லி said...

ச்சே...நல்ல நடிகர்...இல்லாதது இழப்பே...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரபாகர் said...

வெல்கம் பேக் அண்ணே!

ஹனிபாவை பற்றி அஞ்சலி செலுத்தும் வண்ணமாய் ஒரு இடுகை...

நிறைய எழுதுங்கள் அண்ணே!

பிரபாகர்.]]]

நன்றி பிரபாகர்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...
ஹனிபா பற்றிய தெரியாத பல தகவல்கள்.]]]

இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்றி ராதா ஸார்..!

நன்றி சரவணக்குமார்..

நன்றி சுரேகா. நான் உங்களுக்கு அண்ணனா..? தம்பிண்ணா..!

நன்றி மிஸஸ் மேனகாசத்யா..

நன்றி மோகன்குமார்..

ஆமாம் காவேரி.. நகைச்சுவையில் ஏற்கெனவே அங்கே இருக்கும் ஜெகதி, ஜெகதீஷ், இன்னசென்ட் இவர்களிடமிருந்தெல்லாம் வித்தியாசமான டைமிங்சென்ஸ் இவருக்கு உண்டு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அறிவன் ஸார்.. உங்களிடமிருந்து இப்படியொரு இரங்கல் செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை..

ஜோதிஜி.. என்ன இப்படி பொட்டென்று பத்திரிகைக்காரர்கள்போல் முடிவு கட்டிச் சொன்னால் எப்படி.. வருந்துகிறேன்..!

தம்பி சென்ஷி.. அவர் இல்லையா அந்தப் படத்தில்..! மீனவர் குப்பத்தின் தலைவராக வருவார் என்று ஞாபகத்தில் வேகமாக எழுதிவிட்டேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சப்ராஸ் நன்றி..

அன்புடன் மணிகண்டன் நன்றிகள்..

நன்றி ஷங்கர்..!

நன்றிகள் ராமுக்கும், அசோக்குக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முகமூடியண்ணே..

எனக்கும் ரொம்ப வருத்தம்தான்..!

நானும் கண்டித்துவிட்டேன். விட்ருங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜெட்லி..

மலையாள உலகத்துக்கு பெரும் இழப்பு..!

வினவு said...

ஒரு கலைஞனின் மறைவை அவனது வாழ்க்கையோடு எளிமையாக அறிமுகம் செய்தவாறே நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

வானம்பாடிகள் said...

உன்னதமான அஞ்சலி.

வெற்றிவேல் said...

மறைந்த கலைஞன் வி.எம்.சி.ஹனிபா பற்றிய அறிமுகத்துடன் கூடிய அஞ்சலி. ஆனால் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் இதில் இல்லாததால் தெரிந்து கொள்ளும் பொருட்டே இக்கேள்வி..ஹனிபா கேரள சிவாஜி ரசிகர் மன்றத்தலைவராக இருந்ததாகக் கேள்விப்படேன்..அந்த விஷயம் உண்மையா எனத் தெரியவில்லை..தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்

அக்பர் said...

நல்ல கலைஞனுக்கு எனது அஞ்சலிகளும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வினவு said...
ஒரு கலைஞனின் மறைவை அவனது வாழ்க்கையோடு எளிமையாக அறிமுகம் செய்தவாறே நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.]]]

நன்றி வினவு..!

தங்களுடைய முதல் வருகை இந்தப் பதிவிற்குத்தான் இருக்க வேண்டுமா..? இதுவும் ஒரு கொடுமைதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்றி வானம்பாடிகள், அக்பர்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வெற்றிவேல்..

நிச்சயம் விசாரித்துச் சொல்கிறேன்..!

புலவன் புலிகேசி said...

மரியாதைக்குரிய கலைஞன் ஹனீபா...அவருக்கு அஞ்சலி..

gopi g said...

அன்புள்ள உண்மைத்தமிழன் அவர்களுக்கு,

குணச்சித்திர நடிகர் உறனீபாவின் மறைவு திரையுலகத்திற்கு ஒரு நிச்சயமான இழப்பு. தங்கள் பதிவு என்னை மேலும் கலங்கச் செய்தது. அவருடைய நடிப்பு எனக்கு மிகப் பிடித்தமானது. எந்த நடிகருடன் நடிக்கும் போதும் அவர் ஒரு scene stealer.

கடந்த இரு ஆண்டுகளாக பதிவுலகில் இடப்படும் பெரும்பாலான பதிவுகளைப் படிப்பவன் என்ற முறையில் உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன். நான் படித்த பதிவர்களில் சிறப்பான பதிவுகளை வெளியிடும் ஒரு சிலரில் நீங்கள் ஒருவர். அதனால்தான் நீங்கள் எழுதாது இருந்த போது உங்களுடன் தொடர்பு கொண்டேன். போலி வார்த்தைகள் இல்லாமல் உங்களுக்குத் தெரிந்தவற்றை மிக அழகாகவும் கோர்வையாகவும் எங்களுக்குத் தருவதற்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

JIGOPI

தாராபுரத்தான் said...

தேடி தேடி அவர் நடித்த படங்களை பார்த்து ரசிப்பேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

புலவன் புலிகேசி, தாராபுரத்தான் இருவருக்கும் நன்றி..!

கோபி ஸார்.. ஹனீபாவின் இருப்பிடத்தை மலையாள உலகில் நிரப்புவது என்பது மிக மிக கடினம்..! அந்த அளவுக்கு அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் ஒவ்வொரு திரைப்படத்திலும் பின்னப்பட்டிருக்கும்.

தங்களுடைய எதிர்பார்ப்பை ஈடுகட்டும்வகையில் எனது பதிவுகள் இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

தங்களுடைய மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி..!

butterfly Surya said...

ஹனிபாவை பற்றி அஞ்சலிக்கு நன்றி.

நிறைய எழுதுங்கள் அண்ணே!

ஜெரி ஈசானந்தா. said...

மனசை உலுக்கிய பதிவு.அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

பித்தன் said...

my deepest condolence to his family members.

kanagu said...

Hanifa unmaiyilaye sirantha kalaingar... neraya padangalil rasithullen...


avar patriya vazhkai ninaivugalai pakirnthu kondatharku nandri anna...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சூர்யாண்ணே..

ஜெர்ரியண்ணே..

பித்தன் அண்ணே..

கனகு அண்ணே..

வருகைக்கு நன்றி..!

~~~Romeo~~~ said...

நல்ல நடிகர் அண்ணே. சிவாஜி படத்த நேத்து பார்க்கும் போது இவர் சம்பந்த பட்ட காட்சி வரும் போது என்னையும் அறியாமல் ச்சே சொல்லிட்டேன்.

ananth said...

அவருக்கு எனது அஞ்சலி. அன்னாரைப் பிரிந்து துயருரும் அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் அதிகமாக ரசித்த நடிகர்களுல் ஒருவர். உண்மையிலேயே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

abeer ahmed said...

See who owns 100best-domain-names.com or any other website:
http://whois.domaintasks.com/100best-domain-names.com

abeer ahmed said...

See who owns islamictop.net or any other website.