ஜோஷ் - தெலுங்கு சினிமா விமர்சனம்..!

21-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தெலுங்குத் திரையுலக பிரபலங்களான அக்கினேனி நாகேஸ்வரராவ் குடும்பம் ப்ளஸ் டி.ராமாநாயுடு குடும்பத்தின் கூட்டுத் தயாரிப்பில், 'அக்கினேனி' பரம்பரையின் மூன்றாவது தலைமுறையாக உருவெடுத்திருக்கும் 'அக்கினேனி நாகசைதன்யா'வும், கொடியூர் கல்லசரசம்மாவின் சீமந்தப்புத்திரி ராதாவின் மகளான 'கார்த்திகா'வும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் என்பதால் இந்த தெலுங்கு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பார்ததுவிட்டேன்..


ஹீரோ நாகசைதன்யாவின் அப்பாவான நடிகர் நாகார்ஜூனாவின் புகழ் பெற்ற 'சிவா' படத்தின் கதையைப் போலவே இருக்கிறது இப்படத்தின் கதை. ஒரு கல்லூரி, இரண்டு குரூப் மாணவர்கள், இதில் சிலர் அரசியல்வியாதிகளின் அல்லக்கைகள் என்று இவர்களைச் சுற்றியே சுழல்கிறது திரைப்படம்.

முத்தாய்ப்பாக 'சிவா'வில் வில்லனான அசத்திய ஜே.டி.சக்கரவர்த்திதான் இதிலும் வில்லன். 'சிவா'வில் அப்பனிடம் அடி வாங்கி ஓடும் சக்கரவர்த்தி, இதில் மகனிடம் மிதி வாங்கி ஓடுகிறார். சரி கதைக்கு வருவோம்..

என்னை மாதிரி 'யூத்'துகளுக்காவே எடுக்கப்பட்ட திரைப்படம்.

ஏதோ ஒரு காரணத்துக்காக விசாகப்பட்டிணத்தில் இருந்து ஹைதராபாத்தில் இருக்கும் மாமா வீட்டுக்கு வருகிறார் ஹீரோ. அங்கே இருக்கும் எம்.ஜி.எம். கல்லூரியில் இரண்டு மாணவர்கள் குரூப். அதில் ஒரு குரூப்பிற்கு வில்லன் அரசியல்வாதி துர்காராவின் சப்போர்ட்.

மாணவர்களை வைத்து தங்களது அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்கிறான் துர்காராவ். இதற்கு பரிசாக மாணவர்கள் கல்லூரியில் செய்யும் ரகளைகளின்போது அவர்களுக்கு பாதுகாப்பாக கிடைக்கிறது.

ஹீரோ சத்யா அவர்களுடன் நேரடியாக மோத விரும்பாமல், வேறு வழியில் முயல்கிறார். அதே கல்லூரியில் படிக்க வருகிறார். கூட இருந்தே அவர்களை நல்வழிப்படுத்த முயல்கிறார். அரசியல்வியாதிகளின் முகமூடியைக் கிழித்தெறியத் துடிக்கும் அவரை மாணவர்கள் புரிந்து கொள்ளாமல் போகிறார்கள்..

இறுதியில் ஹீரோ அதனை எப்படி சாதிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.


தெலுங்கில் படம் 'ஹிட்' என்கிறார்கள். ஆகியிருந்தால் சந்தோஷம்தான்.. முழுக்க முழுக்க யூத்துகளை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார்கள். கதையும், திரைக்கதையும் கல்லூரி, மாணவர்கள் என்றே சுற்றி சுற்றி வருகிறது. விசாகப்பட்டிண கல்லூரியில் படிக்க பிடிக்காமல், ஹைதராபாத் வந்த கதையை பிளாஷ்பேக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.

இடையில் ஹீரோயினுக்கும் ஒரு கதை. அவளும் அதே கல்லூரியில் சேர விரும்பினாலும், தனது அண்ணனின் பிடிவாதத்தால் கிண்டர்கார்டன் பள்ளியில் எல்.கே.ஜி. பிள்ளைகளை மேய்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கல்லூரியில் படிக்க வேண்டும் என்கிற ஆசையும் கடைசியில் நிறைவேறுகிறதா என்பதை படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..

இந்த படத்தில்தான் ஹீரோ, ஹீரோயினின் காதல், கல்யாணத்தில் போய் முடியாமல் வித்தியாசமாக முடிந்திருக்கிறது.. அந்த வகையில் கதையும், படமாக்கியவிதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


நாகசைதன்யா நச்சென்று இருக்கிறார். ஆனால் வசனம் பேசுவதற்குத்தான் இன்னும் கொஞ்சம் டிரெயினிங் வேண்டும். தெலுங்கு ஹீரோக்களுக்கே உரித்தான நடனத்திலும், சண்டையிலும் கொஞ்சமும் சோடை போகவில்லை. ரவுண்டு கட்டி அடிக்கிறார். தேறிவிடுவார் என்றே நினைக்கிறேன். முதல் படம்தானே.. விட்டுப் பிடிக்கலாம்.. எப்படியோ தெலுங்கு ரசிகர்களுக்கு அடுத்த இதய தெய்வம் ரெடி..

கதாநாயகி கார்த்திகா அச்சு அசலாக ராதாதான்.. ஜீனில் எக்குத்தப்பாக ராதாவின் நடிப்புத் திறமை எய்ஸ்ட் கிருமி போல் பல்கிப் பெருகி விட்டது போலும்.. நடிப்பைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். முதல் படம் போலவே இல்லை. பல இடங்களில் அம்மன் கோவில் கிழக்காலே ராதாவை பார்த்ததுபோல் என் மண்டைக்குள் ரீவைண்ட் ஓடுகிறது. ஆனாலும் இளமை துள்ளல் இவரிடம் கம்மியாக இருக்கிறது. ஏனோ கதாநாயகிக்கான ஈர்ப்பு அம்மணியிடம் குறைவு என்பதுபோல் தோன்றுகிறது. தமிழில் எடுபடுவாரா என்பது சந்தேகம்தான்.


திரைக்கதையில் காதல் போர்ஷன்கள் சுவாரசியமாக படமாக்கப்பட்டிருப்பதால் ரசிக்க முடிகிறது. இப்போதெல்லாம் சிறு குழந்தைகளை பெரிய மனிதர்கள்போல் பேச வைத்து அதனை ரசிக்கும் மனப்பான்மைக்கு திரைப்படத்தின் இயக்குநர்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள். அந்தக் கொடுமை இதிலும் உண்டு.

சக்கரவர்த்தி, 'துர்காரம்' என்னும் இரண்டாம் நிலை அரசியல்வாதியாக அமைதியாக பின்னுகிறார். தூக்கிட்டு வந்து மிதிங்க என்று சக்கரவர்த்தி சொல்லும்போதும், அதை பக்காவாக நோட்ஸ் எடுக்கும் பி.ஏ.வாக பிரம்மானந்தம். காமெடி கம்மி..


சில காட்சிகளே வந்தாலும் பிரகாஷ்ராஜ் வழக்கம்போல அசத்துகிறார். எவ்வளவோ கால்ஷீட் சொதப்பல்கள்.. பிரச்சினைகள் என்றாலும் தெலுங்குக்காரர்கள் ஏன் பிரகாஷ்ராஜை இன்னமும் விடாமல் துரத்துகிறார்கள் என்பது படத்தில் பார்த்தாலே தெரிகிறது.

துக்கக் காட்சியில் வெகு சகஜமாக பேசிக் கொண்டேயிருந்துவிட்டு திடீரென்று மனம் உடைந்து போய் அழுகின்ற காட்சியில் சட்டென்று ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார் பிரகாஷ்ராஜ். இன்னும் பல தேசிய விருதுகள் அண்ணனுக்கு காத்திருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை.

வாசுவர்மாவின் இயக்கம். தப்பில்லாமல்தான் பண்ணியிருக்கிறார். வெற்றியடைய வைத்தாக வேண்டும் என்கிற கட்டாய டென்ஷனோடு படத்தினை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடித்திருப்பார் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.. கதாநாயகனின் நிறை, குறைகளை மனதில் வைத்து அதற்கேற்றாற்போல் செய்திருக்கிறார். ஹீரோவை கண்ணீர்விட்டு அழுகும் காட்சியில் நொடியில் கட் செய்து படம் ஜம்ப் ஆவதை பார்க்கும்போது பொழைக்கத் தெரிஞ்ச இயக்குநர் என்று பாராட்டத்தான் வேண்டும்..


சந்தீப் செளதா இசையமைப்பில் 'ஜிங்குச்சா' என்று தொடங்கும் ஒரு பாடலின் இசை அருமையாக இருந்தது. நேற்று இரவு வரையிலும் நான் அதைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்.

சண்டைக் காட்சிகள் இருந்தாலும் தலைவலி தராத அளவுக்கு சற்று எச்சரிக்கையாக இருந்ததினால், ஆக்ஷன் படம் என்கிற பெயர் இல்லாமல் நடுவாந்திர நிலைமைக்குப் போய்விட்டது படம்.

மலையாள மொழி கிட்டத்தட்ட தமிழுக்கு அண்ணன் மாதிரி.. 95 சதவிகிதம் புரிந்துவிடும். ஆனால் தெலுங்கு புரிவதற்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. அதிலும் தெலுங்குக்காரர்கள் பேசுகின்ற ஸ்பீடில் நாக்கு ஒட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு என்றாலும் எப்படி பேசித் தீர்க்கிறார்கள் என்றே புரியவில்லை.

நிச்சயம் தமிழில் இந்தக் கதை ரீமேக் செய்யப்படும். நல்ல ஸ்கோப் உள்ளது. ஆனால் 'நினைத்தாலே இனிக்கும்' கதையில் பாதி இதில் இருக்கிறது என்பதால் யார் தைரியமாக படமாக்க வருவார்கள் என்பது தெரியவில்லை.

பொழுது போகலைன்னா போய் பாருங்க..!

26 comments:

டவுசர் பாண்டி... said...

இந்த படம் தேறாதுன்னுதான் தோணுது...

வழக்கமான ஸ்பீட்ல விமர்சனம் எழுதீருக்கீங்க.

ஏன்னா...தியேட்டர்ல ப்ளாக் டிக்கெட்டே ...வேனாஞ்சாமி அப்பறம் டென்சனாவி அன்னிக்கு தியேட்டர் நின்னு கூவின மாதிரி இங்கன கூவிருவீங்க

நான் கழண்டுக்கறேன்.

டவுசர் பாண்டி... said...

வலையுலகத்துல இந்த யூத்துங்க தொல்லை தாங்க முடியலப்பா!

பிரபாகர் said...

படம் எப்படியோ, உங்களின் விமர்சனம் அருமை.

பிரபாகர்.

இரும்புத்திரை அரவிந்த் said...

அண்ணே யூத் யூத் அப்படி சொல்லிக்கிட்டு திரியிறது எல்லாம் சும்மா..இத நான் சொல்லல..உங்கள மாதிரி ஒரு யூத் சுகாஷினி சொன்னது.யங் அப்படிதான் சொல்னனுமா

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணேலு... ஏன்லு இப்படி தெலுங்கு பட விமர்சனத்தெல்லாம் போட்டுலு... முடியலண்ணேலு...
என்.டி.ராமராவ்காரு எக்கட உண்ணாருலுலுலு,

தீப்பெட்டி said...

விட்டா கேபிளாருக்கு போட்டியாயிருவீங்க போல எல்லா மொழி படத்துக்கும் விமர்சனம் போடுறீங்க..

ஆமா பாஸ்.. கார்த்திக் பையனும் ராதா பொண்னும் நடிக்கிறத ஒரு பேச்சு வந்ததே என்னாச்சு?

நல்லதந்தி said...

நல்ல விமர்சனம்!. எனக்கு அலைகள் ஓய்வதில்லை இராதாவைத் தான் பிடிக்கும். பொண்ணு அந்த அளவுக்கு இருக்கிறாரா என்பது ஸ்டில்லைப் பார்த்தால் தெரியவில்லை. படம் பார்த்தால் தான் தெரியும்.

☀நான் ஆதவன்☀ said...

//மலையாள மொழி கிட்டத்தட்ட தமிழுக்கு அண்ணன் மாதிரி.. 95 சதவிகிதம் புரிந்துவிடும்.
//

அண்ணே அது தங்கச்சி மாதிரி. அண்ணன் இல்ல :)

ஜெட்லி said...

//என்னை மாதிரி 'யூத்'துகளுக்காவே எடுக்கப்பட்ட திரைப்படம்.
//

எத்தனை காலம் தான் இதையே
சொல்லிட்டு இருக்க போறீங்க...

செ.சரவணக்குமார் said...

//மலையாள மொழி கிட்டத்தட்ட தமிழுக்கு அண்ணன் மாதிரி..//

என்னாது மலையாளம் தமிழுக்கு அண்ணணா? உண்மைத்தமிழன் அண்ணணே இப்பிடிச் சொல்லலாமா?

வஜ்ரா said...

ஹீரோயினு நம்ம அந்த கால நடிகை ராதாவின் மகளாம்ல ?

pappu said...

உங்க யூத்தத்தான் பாலா காண்பிச்சாரே படம் படமா!

மதி.இண்டியா said...

// கல்யாணத்தில் போய் முடியாமல் வித்தியாசமாக முடிந்திருக்கிறது.. அந்த வகையில் கதையும், படமாக்கியவிதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.//

ஏ யாராவது உ.தமிழன்னு ஒரு பொண்னு பாருங்கப்பா , படத்துல யாராவது கல்யாணம் பண்ணுலன்னா கூட மனுசன் சந்தோசபடறாரு .

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டவுசர் பாண்டி... said...
இந்த படம் தேறாதுன்னுதான் தோணுது. வழக்கமான ஸ்பீட்ல விமர்சனம் எழுதீருக்கீங்க. ஏன்னா. தியேட்டர்ல ப்ளாக் டிக்கெட்டே. வேனாஞ்சாமி அப்பறம் டென்சனாவி அன்னிக்கு தியேட்டர் நின்னு கூவின மாதிரி இங்கன கூவிருவீங்க. நான் கழண்டுக்கறேன்.]]]

தெலுங்குல நல்லா ஓடுதுன்னு சொல்றாங்க டவுசரு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டவுசர் பாண்டி... said...
வலையுலகத்துல இந்த யூத்துங்க தொல்லை தாங்க முடியலப்பா!]]]

அப்படியா..? யாருங்க அப்படி தொல்லை பண்ற யூத்து.?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரபாகர் said...

படம் எப்படியோ, உங்களின் விமர்சனம் அருமை.
பிரபாகர்.]]]

நன்றி பிரபாகர்..

போரடித்தால், நேரம் கிடைத்தால் பாருங்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இரும்புத்திரை அரவிந்த் said...
அண்ணே யூத் யூத் அப்படி சொல்லிக்கிட்டு திரியிறது எல்லாம் சும்மா..இத நான் சொல்லல..உங்கள மாதிரி ஒரு யூத் சுகாஷினி சொன்னது. யங் அப்படிதான் சொல்னனுமா]]]

ஓகே.. இன்னிலேர்ந்து நீங்க என்னை யெங்மேன்னு கூப்பிடலாம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நாஞ்சில் பிரதாப் said...
அண்ணேலு... ஏன்லு இப்படி தெலுங்கு பட விமர்சனத்தெல்லாம் போட்டுலு... முடியலண்ணேலு... என்.டி.ராமராவ்காரு எக்கட உண்ணாருலுலுலு]]]

ஏன் முடியல பாபூ.. செப்புண்டி..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தீப்பெட்டி said...
விட்டா கேபிளாருக்கு போட்டியாயிருவீங்க போல எல்லா மொழி படத்துக்கும் விமர்சனம் போடுறீங்க..]]]

இதைத்தான ஆரம்பத்துல இருந்து செஞ்சுக்கிட்டிருக்கேன்..

[[[ஆமா பாஸ்.. கார்த்திக் பையனும் ராதா பொண்னும் நடிக்கிறத ஒரு பேச்சு வந்ததே என்னாச்சு?]]]

கார்த்திக் சைட்ல இருந்து முன்னேற்றம் இல்லை. அதுனால அது அப்படியே நிக்குதாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நல்லதந்தி said...
நல்ல விமர்சனம்!. எனக்கு அலைகள் ஓய்வதில்லை இராதாவைத்தான் பிடிக்கும். பொண்ணு அந்த அளவுக்கு இருக்கிறாரா என்பது ஸ்டில்லைப் பார்த்தால் தெரியவில்லை. படம் பார்த்தால்தான் தெரியும்.]]]

பார்த்து சொல்லுங்கோ நல்லதந்தியாரே..! உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[☀நான் ஆதவன்☀ said...
//மலையாள மொழி கிட்டத்தட்ட தமிழுக்கு அண்ணன் மாதிரி.. 95 சதவிகிதம் புரிந்துவிடும்.//

அண்ணே அது தங்கச்சி மாதிரி. அண்ணன் இல்ல :)]]]

ஓகே.. மாத்திர்றேன்.. தங்கச்சி மாதிரி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெட்லி said...
//என்னை மாதிரி 'யூத்'துகளுக்காவே எடுக்கப்பட்ட திரைப்படம்.//

எத்தனை காலம்தான் இதையே
சொல்லிட்டு இருக்க போறீங்க...]]]

கட்டைல போற வரைக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[செ.சரவணக்குமார் said...

//மலையாள மொழி கிட்டத்தட்ட தமிழுக்கு அண்ணன் மாதிரி..//

என்னாது மலையாளம் தமிழுக்கு அண்ணணா? உண்மைத்தமிழன் அண்ணணே இப்பிடிச் சொல்லலாமா?]]]

சரி.. சரி.. கூப்பாடு போடாதப்பூ.. தங்கச்சின்னு மாத்திரலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வஜ்ரா said...
ஹீரோயினு நம்ம அந்த கால நடிகை ராதாவின் மகளாம்ல?]]]

படம் பார்க்கப் போனதே அதுக்காகத்தானே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[pappu said...
உங்க யூத்தத்தான் பாலா காண்பிச்சாரே படம் படமா!]]]

எந்த பாலா..? எப்படி என் யூத்தை இன்னொருத்தர் காட்ட முடியும்..?

பாப்பூ.. டென்ஷனாக்காத..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மதி.இண்டியா said...

// கல்யாணத்தில் போய் முடியாமல் வித்தியாசமாக முடிந்திருக்கிறது.. அந்த வகையில் கதையும், படமாக்கியவிதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.//

ஏ யாராவது உ.தமிழன்னு ஒரு பொண்னு பாருங்கப்பா, படத்துல யாராவது கல்யாணம் பண்ணுலன்னாகூட மனுசன் சந்தோசபடறாரு.]]]

ஹி... ஹி... ஹி...