சட்டி சுட்டதடா..! கை விட்டதடா...!

சட்டி சுட்டதடா..! கை விட்டதடா...!
சட்டி சுட்டதடா..! கை விட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!

நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா..!
சட்டி சுட்டதடா..! கை விட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா..!
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா..!
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா..!
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா..!
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா..!
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா..!
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா..!

சட்டி சுட்டதடா..! கை விட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா..!
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா..!
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா..!
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா..!
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா..!

சட்டி சுட்டதடா..! கை விட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா..!
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா..!
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா..!
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா..!
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா..!
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா..!
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா ..!

சட்டி சுட்டதடா..! கை விட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!
புத்தி கெட்டதடா..! நெஞ்சைத் தொட்டதடா...!

திரைப்படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்

34 comments:

ஜெட்லி said...

என்ன அண்ணே ஆச்சு...
ஒய்..பீலிங்க்ஸ்????
அண்ணனுக்கு ஒரு புல் நெப்போலியன்
பார்சல்.

பித்தன் said...

அண்ணே என்ன ஆச்சி ஒரே பீளிங்க்சா கொட்டுறீங்க அதுவும் ரொம்ப சின்ன சின்ன பதிவா..... நா வேணா ஒரு புல் வெளிநாட்டு சரக்கு அனுப்பவா....

பித்தன் said...

அண்ணே என்ன ஆச்சி ஒரே பீளிங்க்சா கொட்டுறீங்க அதுவும் ரொம்ப சின்ன சின்ன பதிவா..... நா வேணா ஒரு புல் வெளிநாட்டு சரக்கு அனுப்பவா....

SP.VR. SUBBIAH said...

ஜீவனுள்ள இந்தப் பாட்டை நீங்கள் மொக்கை என்று தலைப்பிட்டு எப்படிப் பதிவு செய்யலாம்? என் வருத்தத்தைப் பதிவு செய்கிறேன் உனா தானா!

அகல் விளக்கு said...

சார் என்னாச்சு...............

துளசி கோபால் said...

வாழ்க்கைத் தத்துவம் பூரா அடங்குன இதுவா மொக்கை????

என்ன ஆச்சு சரவணன்? எதற்கு இத்தனை ஃபீலிங்ஸ்???????

ராஜராஜன் said...

ஒண்ணுமே புரியலையே.. என்ன ஆச்சு தலக்கு ?? யாராவது சூனியம் வச்சிடாங்கள ??

Arun Kumar said...

என்ன ஆச்சு அண்ணே
இரண்டு நாளாக ஒரே சோக மூட்ல இருக்கீங்க

சென்ஷி said...

நே(நா)யர் விருப்பத்தில் அடுத்தப்பாடலாக “ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா” என்ற இனிமையான பாடலை சார்ஜா சென்ஷிக்காக வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்

T.V.Radhakrishnan said...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் ..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

ஜோ/Joe said...

//திரைப்படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்//

நடித்தவர் : நடிகர் திலகம் :)

pappu said...

நீங்க கவித எழுதாத வரைக்கும் எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்ல!

குசும்பன் said...

என்னது ஜட்டி சுட்டதா? அண்ணே சுட்ட ஜட்டி எல்லாம் வேண்டாம் ! இன்பெக்சன் ஆயிடும்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெட்லி said...

என்ன அண்ணே ஆச்சு...
ஒய்.. பீலிங்க்ஸ்????
அண்ணனுக்கு ஒரு புல் நெப்போலியன்
பார்சல்.]]]

அதுக்கெல்லாம் அடங்காது எனது சோகம்..!

எனக்கு வாய்க்கரிசி போடும்போதுதான் அடங்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...
அண்ணே என்ன ஆச்சி ஒரே பீளிங்க்சா கொட்டுறீங்க அதுவும் ரொம்ப சின்ன சின்ன பதிவா..... நா வேணா ஒரு புல் வெளிநாட்டு சரக்கு அனுப்பவா....]]]

ஆஹா.. தம்பிமார்களின் பாசம் எந்த அளவுக்கு நிக்குது பாருங்க..

பித்தன் தம்பி.. கண்ணுல குளம் கட்டிருச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[SP.VR. SUBBIAH said...
ஜீவனுள்ள இந்தப் பாட்டை நீங்கள் மொக்கை என்று தலைப்பிட்டு எப்படிப் பதிவு செய்யலாம்? என் வருத்தத்தைப் பதிவு செய்கிறேன் உனா தானா!]]]

மன்னிக்கணும் வாத்தியாரே..!

எனது சூழ்நிலையை அப்படி பதிவு செய்துள்ளேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அகல் விளக்கு said...
சார் என்னாச்சு...............?]]]

எதுவுமே ஆகலை.. அதுனாலதான்.. ஏதாச்சும் ஆகணும்னு எதிர்பார்த்து..!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[துளசி கோபால் said...

வாழ்க்கைத் தத்துவம் பூரா அடங்குன இதுவா மொக்கை????

என்ன ஆச்சு சரவணன்? எதற்கு இத்தனை ஃபீலிங்ஸ்???????]]]

என் வாழ்க்கையே மொக்கையா இருக்கு.. அதுனாலதான் டீச்சர்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜராஜன் said...
ஒண்ணுமே புரியலையே.. என்ன ஆச்சு தலக்கு?? யாராவது சூனியம் வச்சிடாங்கள??]]]

எனக்கு சூனியம் வைச்சு ஒண்ணும் ஆகாது ராஜராஜன்..

அப்படியே வைக்காம இருந்தாலும் வைச்ச மாதிரிதான் இருக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Arun Kumar said...
என்ன ஆச்சு அண்ணே? இரண்டு நாளாக ஒரே சோக மூட்ல இருக்கீங்க?]]]

எப்படி தம்பி இப்படியெல்லாம் கேட்க மனசு வருது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சென்ஷி said...
நே(நா)யர் விருப்பத்தில் அடுத்தப் பாடலாக “ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா” என்ற இனிமையான பாடலை சார்ஜா சென்ஷிக்காக வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்]]]

கண்டிப்பா.. உனக்கு இல்லாததாடா ராசா..!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[T.V.Radhakrishnan said...
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்]]]

ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜோ/Joe said...

//திரைப்படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்//

நடித்தவர் : நடிகர் திலகம் :)]]]

-))))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[pappu said...
நீங்க கவித எழுதாதவரைக்கும் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்ல!]]]

எழுதினா மட்டும் என்ன பிரச்சினை வந்திரப் போகுது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குசும்பன் said...
என்னது ஜட்டி சுட்டதா? அண்ணே சுட்ட ஜட்டி எல்லாம் வேண்டாம் ! இன்பெக்சன் ஆயிடும்!]]]

குசும்பா.. என்ன குசும்பா..?

உன் மேல மானநஷ்ட கேஸ் போடப் போறேன்..!

ஒரு எழுத்தை மாத்தி கொல்றியேடா தங்கம்..!

பாலகுமார் said...

என்ன சார் ஆச்சி உங்களக்கு? ...குசும்பன் சார் கமெண்ட் டாப்.. :)

தீப்பெட்டி said...

கொஞ்சம் இளையராஜாவைக் கேளுங்க..
மனசு தென்றலாயிடும்..

snkm said...

அருமையான பாட்டு! தத்துவங்கள் அடங்கியது! கவலைகள் தீர்ந்து சந்தோஷமான பாட்டுக்களையும் போடுங்கள்!

நாமக்கல் சிபி said...

I Like the Song "Aaru Maname Aaru Antha Andavan Kattalai Aaru" to be published in your blog!

Namakkal Shibi from Chennai(now)

மங்களூர் சிவா said...

சட்டி சுட்டா இடுக்கி வைச்சி புடிங்க!

:))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பாலகுமார் said...
என்ன சார் ஆச்சி உங்களக்கு? குசும்பன் சார் கமெண்ட் டாப்.. :)]]]

சட்டி சுட்டு, கை விட்டு, சட்டி கீழே விழுந்து உடைஞ்சிருச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தீப்பெட்டி said...
கொஞ்சம் இளையராஜாவைக் கேளுங்க.. மனசு தென்றலாயிடும்..]]]

தீப்பெட்டி ஸார்.. எப்படி ஸார் இப்படி?

நான் நிசமாவே அதைத்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்..

"செவ்வந்திப் பூக்களில் செய்தவீடு" ஒலித்துக் கொண்டிருக்கிறது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[snkm said...
அருமையான பாட்டு! தத்துவங்கள் அடங்கியது! கவலைகள் தீர்ந்து சந்தோஷமான பாட்டுக்களையும் போடுங்கள்!]]]

அது கவலையெல்லாம் தீர்ந்த பின்னாடிதான்..

எனக்கு நம்பிக்கையில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...

சட்டி சுட்டா இடுக்கி வைச்சி புடிங்க!

:))]]]

இடுக்கியும் சுட்டா என்ன பண்றது தம்பீ..!