வலையுலக வாசகர் கேட்ட திகிலான கேள்வி..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திருப்பூரில் இருந்து கருப்பசாமி என்றொரு நண்பர் எனது வலைத்தளத்தின் நீண்ட நாள் வாசகர். சில சமயங்கள் எனக்கு போன் செய்து பேசுவார். ரொம்ப வெள்ளந்தியான பேச்சு. கொஞ்சம்தான் படிச்சிருக்காராம். தமிழில் கொஞ்சமாக எழுதவும், படிக்கவும் மட்டும்தான் தெரியுமாம். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராம்.. ஆனால் பேச்சு மிக மரியாதையாகவும், கிராமத்து வாசனை வீசுவதாகவும் இருக்கும்..

"நல்லாயிருக்கு ஸார்.. ரொம்ப நீளமாத்தான் இருக்கு.. ஆனாலும் நல்லாத்தான் இருக்கு.. ஏன் ஸார் பதிவு போடலை.. அஞ்சு நாளாச்சு ஸார்.. அந்த சினிமா விமர்சனம் எப்ப எழுதுவீங்க..?" என்றெல்லாம் அக்கறையாக விசாரிப்பார்.

கடைசியாக ஒரு முறை அவர் என்னுடன் பேசியபோது கேட்ட ஒரு கேள்வி என்னைத் தூக்கிவாரிப் போட்டது.. இப்படியுமா ஒரு அப்பாவி தமிழ்நாட்டில் இருப்பார் என்று..

அவர் கேட்ட கேள்வி "பார்ப்பான்.. பார்ப்பான்னு நிறைய பேர் எழுதுறாங்க.. பார்ப்பனீயம்னு எழுதுறாங்களே ஸார்.. அப்படீன்னா என்ன ஸார்..?" என்றார்.

ஒரு கணம் நான் திகைத்துத்தான் போனேன். வலையுலகில் அதனைப் பற்றிப் பக்கம், பக்கமாக பலரும் எழுதியும், பேசியும், விவாதித்தும் எத்தனையோ நாட்களைக் கழித்தாகிவிட்டது. அத்தனையும் பதிவாகியுள்ளது. எவ்வளவு எழுதியும் அடிப்படையான அது என்ன என்பது பற்றி யாரும் எழுதவில்லை என்பதைத்தான் அந்த வாசகரின் இந்தக் கேள்வி காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்.

ஆஹா.. இவ்ளோ நல்லவரா இருக்காரே இந்த கருப்பு என்று நினைத்து அதனைப் பற்றி சின்னதா ஒரு கிளாஸ் எடுத்து, "அது எதையும் மனசுல நினைச்சுக்காதீங்க.. நீங்க பாட்டுக்கு உங்க வேலைய பாருங்க.. அது வேலையத்தவங்களின் புலம்பல்"ன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.

இருந்தாலும் நம்ம கருப்பு மாதிரியுமான அப்பாவி மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே என்று நினைத்து மனம் கொஞ்சம் சந்தோஷமாகிறது.

இவர்களாவது நிம்மதியாக இருக்கட்டுமே.. என்ன தப்புங்குறேன்..?

7 comments:

ராஜகோபால் said...

அண்ணே அப்படியே எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கனே.... பார்ப்பான்.... அப்படினா யாருனே .....

RAD MADHAV said...

//இருந்தாலும் நம்ம கருப்பு மாதிரியுமான அப்பாவி மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே என்று நினைத்து மனம் கொஞ்சம் சந்தோஷமாகிறது.

இவர்களாவது நிம்மதியாக இருக்கட்டுமே.. என்ன தப்புங்குறேன்..?//

//அண்ணே அப்படியே எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கனே.... பார்ப்பான்.... அப்படினா யாருனே .....

எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க... ப்ளீஸ்... இதைப் பற்றி உங்களது அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜகோபால் said...
அண்ணே அப்படியே எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கனே.... பார்ப்பான்.... அப்படினா யாருனே .....]]]

லூஸ்ல விடுங்க ராஜகோபால்.. இதையெல்லாம் மண்டைல ஏத்திக்க வேணாம்..! நமக்கு ஆயிரம் சோலி இருக்கு. அதைப் பார்ப்போம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[RAD MADHAV said...

//இருந்தாலும் நம்ம கருப்பு மாதிரியுமான அப்பாவி மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே என்று நினைத்து மனம் கொஞ்சம் சந்தோஷமாகிறது. இவர்களாவது நிம்மதியாக இருக்கட்டுமே.. என்ன தப்புங்குறேன்..?//

//அண்ணே அப்படியே எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கனே.... பார்ப்பான்.... அப்படினா யாருனே .....

எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க... ப்ளீஸ்... இதைப் பற்றி உங்களது அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.....]]]

ராஜகோபாலுக்கு பதில் சொல்லிவிட்டேன்..!

மங்களூர் சிவா said...

/
அது வேலையத்தவங்களின் புலம்பல்"
/

:)))))))))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...
/அது வேலையத்தவங்களின் புலம்பல்/
:)))))))))))))))))]]]

ஸ்மைலி போடுறதை நிறுத்த சட்டம் கொண்டு வரணும்ப்பா..

சிம்பிளா போட்டுட்டு நடையைக் கட்டிர்றாங்க..!

abeer ahmed said...

See who owns programmersheaven.com or any other website:
http://whois.domaintasks.com/programmersheaven.com