தினமலரின் திடீர் தி.மு.க. ஆதரவு..! காரணம் என்ன..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'பார்ப்பான் பத்திரிக்கை'.. 'அவாள்கள் பேப்பர்ஸ்'.. 'தினமலம்' என்றெல்லாம் இழித்தும், பழித்தும் பேசப்பட்டு வந்த 'தினமலர்' பத்திரிகையைப் பற்றி சமீபகாலமாக உடன்பிறப்புகள் அதிகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே.. என்ன விஷயம் என்று பார்த்தால்.. 'கவுத்துட்டோம்ல' என்று கையை விரித்து கடவாய்ப்பல்வரைக்கும் வாயைப் பொளந்து சிரிக்கிறார்கள் எதற்கும் அஞ்சாத உடன்பிறப்புக்கள்.

அந்தப் பத்திரிகையின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பாகப்பிரிவினை, பங்காளி சண்டைகள்.. நீதிமன்ற வழக்குகள் என்று பலவற்றாலும் பத்திரிகையின் நிறம் இப்போது அடியோடு மாறிவிட்டதாக அங்கு பணியாற்றும் பத்திரிகையாளர்களே சொல்கிறார்கள்.

மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டபோது மறுநாள் வந்த தினமலரின் முதல் பக்கத் தலைப்புச் செய்தியான 'நாய்த்தொல்லை'யை இன்றைக்கும் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியவில்லை..

ஆனால் இன்றைக்கு முழுக்க, முழுக்க தி.மு.க. சார்பு பத்திரிகையாகவே மாறிவிட்டது 'தினமலர்'. முன்பெல்லாம் 'டீக்கடை பெஞ்சில்' தி.மு.க.வும், அதன் தலைவர்களும் உருட்டப்படாத நாட்களே இல்லை.. ஆனால் இப்போது காவல்துறை செய்திகளும், அரசு அதிகாரிகளுமே வறுக்கப்படுகிறார்கள். அரசுத் தரப்பை கூல் செய்ய வேண்டி, தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் தினம் ஒருவர் என்கிற கணக்கில் கொலைக்குற்றவாளியைப் போல் எழுதி வருகிறது.

கோர்ட்டு வழக்குகளிலும், பங்காளிச் சண்டையிலும் அரசுத் தரப்பின் ஆதரவு தங்களுக்கு மிகவும் வேண்டும் என்கிற ஆசையும், ஆவலும் இருப்பதால் சென்னை நிர்வாகம் தனது கொள்கையில் இருந்து அந்தர்பல்டி அடித்துவிட்டதாம்.

ம்.. சொத்துக்கு முன்னாடி கொள்கையாவது.. மண்ணாவது..!

17 comments:

ராஜகோபால் said...

போங்கண்ணே போய் ஒரு பாட்டில் டகிலா அடிச்சிட்டு படுங்க.......

kicha said...

"ஆட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு முந்தானை விரிக்கும் தின‌ம‌ல‌ரின் ப‌த்தினித்த‌ன‌ம் எங்க‌ளுக்கு தெரியாத‌து இல்லை" ‍னு துரைமுருக‌ன் ரொம்ப‌ நாளைக்கு முன்னாடி சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து!

பித்தன் said...

thanakkunnu vanthaal ethuvum saaththiyam.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜகோபால் said...
போங்கண்ணே போய் ஒரு பாட்டில் டகிலா அடிச்சிட்டு படுங்க.......]]]

அட்வைஸுக்கு நன்றிங்கோ..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[kicha said...
"ஆட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு முந்தானை விரிக்கும் தின‌ம‌ல‌ரின் ப‌த்தினித்த‌ன‌ம் எங்க‌ளுக்கு தெரியாத‌து இல்லை"‍னு துரைமுருக‌ன் ரொம்ப‌ நாளைக்கு முன்னாடி சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து!]]]

இதுதான் இவர்களது பத்தினித்தனம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பித்தன் said...
thanakkunnu vanthaal ethuvum saaththiyam.]]]

உண்மை பித்தன் ஸார்..!

தண்டோரா ...... said...

தினமலர் திமுகவின் குடும்பமலராகிவிட்டது(ஒரு பாலியல் வழக்கும் காரணம் என்று புலனாய்வு சொல்கிறது)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தண்டோரா ...... said...
தினமலர் திமுகவின் குடும்ப மலராகிவிட்டது(ஒரு பாலியல் வழக்கும் காரணம் என்று புலனாய்வு சொல்கிறது)]]]

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..! தண்டோரா.. நானும் மறந்து தொலைத்துவிட்டேன். எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்..!

டவுசர் பாண்டி... said...

தினமலர் மாதிரியான நடுநிலை நாளிதழை விமர்சிக்கும் உங்களை மாதிரியான அம்மா ரசிகர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும் :))

கிறுக்கன் said...

யோவ் அதான் வாழ்க்கையே வெறுத்து போயி இங்க புலம்புறோம்..(தட்டி கேட்க சாமான் கூட இங்க இல்லை)

கிருஷ்ணமூர்த்தி said...

தினமலரின் திடீர் தி.மு.க பாசத்திற்குப் பின்னால், வியாபாரப் போட்டி தான் பிரதான காரணமாக இருக்கிறது. அடுத்தவன் காசில் ஓசி நிறையக் கொடுத்து, தினகரன் களம் இறங்கியபோது தினமலர் வாயில் கை விரலைச் சூப்பிக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தபோது, ஆனாவோட பகையைத் தினகரன் தேடிக் கொண்டதில் இருந்து, தினமலருக்குக் கொண்டாட்டம் அவ்வளவுதான்.

ஆட்சியில் இருப்பவருக்கு அனுசரித்துப் போவது விளம்பரத்திற்காக அட்ஜஸ்ட் செய்துபோவது கட்சிகளே நேரடியாக நடத்துவதை விட்டால்,எல்லாப் பத்திரிகைகளுக்குமே இயல்புதான்! தினமலர் விதிவிலக்கல்ல.

மங்களூர் சிவா said...

/
ம்.. சொத்துக்கு முன்னாடி கொள்கையாவது.. மண்ணாவது..!
/

சூப்பரா சொண்ணீங்க!
:))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டவுசர் பாண்டி... said...
தினமலர் மாதிரியான நடுநிலை நாளிதழை விமர்சிக்கும் உங்களை மாதிரியான அம்மா ரசிகர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்:)]]]

நான் அம்மா ரசிகனா..?

இதைவிட மிகப் பெரிய கொடுமை எதுவும் இருக்காது..!

ஆமா.. என்ன செஞ்சாத்தான் நான் அம்மா ரசிகன் இல்லைன்னு நம்புவீங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கிறுக்கன் said...
யோவ் அதான் வாழ்க்கையே வெறுத்து போயி இங்க புலம்புறோம்.. (தட்டி கேட்க சாமான்கூட இங்க இல்லை)]]]

அதுல இதுவும் ஒரு புலம்பல்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...

தினமலரின் திடீர் தி.மு.க பாசத்திற்குப் பின்னால், வியாபாரப் போட்டிதான் பிரதான காரணமாக இருக்கிறது. அடுத்தவன் காசில் ஓசி நிறையக் கொடுத்து, தினகரன் களம் இறங்கியபோது தினமலர் வாயில் கை விரலைச் சூப்பிக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தபோது, ஆனாவோட பகையைத் தினகரன் தேடிக் கொண்டதில் இருந்து, தினமலருக்குக் கொண்டாட்டம் அவ்வளவுதான்.
ஆட்சியில் இருப்பவருக்கு அனுசரித்துப் போவது விளம்பரத்திற்காக அட்ஜஸ்ட் செய்துபோவது கட்சிகளே நேரடியாக நடத்துவதை விட்டால், எல்லா பத்திரிகைகளுக்குமே இயல்புதான்! தினமலர் விதிவிலக்கல்ல.]]]

அப்படியானால் அரசியல்வியாதிகளைப் போல் இவர்களும் ஜனநாயக விரோதிகள்தானே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...
/ம்.. சொத்துக்கு முன்னாடி கொள்கையாவது.. மண்ணாவது..!/
சூப்பரா சொண்ணீங்க!:))]]]

ஹி.. ஹி.. ஹி.. தேங்க்ஸ் கண்ணா..!

abeer ahmed said...

See who owns cpamobile.com or any other website:
http://whois.domaintasks.com/cpamobile.com