மாதவி - திரை விமர்சனம்..!

13-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தில் பருவ மழையும், வெப்ப நிலையும் தாறுமாறாக வீசியும், பொழிந்தும் கொண்டிருப்பதால் தமிழகத்து ஆண்களின் மனநிலையும் சற்றுத் தட்டுத் தடுமாறித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

ஊருக்கு ஒரு நல்லவர் என்பதைப் போல யாரோ ஒரு புண்ணியவான் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு தியேட்டரை கட்டி வைத்து ஊரில் இருக்கும் விடலைப் பசங்களுக்கும், காமுக ஆண்களுக்கும் பிட்டு படங்களைக் காட்டி வழி காட்டிக் கொண்டிருந்தார்.

தமிழகம் முழித்துக் கொண்டதோ இல்லை.. அந்த பிட்டுப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் வாலண்டரி ரிட்டையர்மெண்ட்டில் வீடு போய்ச் சேர்ந்தார்களோ தெரியவில்லை.. இப்போது சுத்தமாக அந்த மாதிரி திரைப்படங்கள் தயாரிக்கப்படவும் இல்லை.. வருவதும் இல்லை..

நமது 'நடிப்புலக தேவதை' ஷகிலாவின் பழைய திரைப்படங்களையே பெயர் மாற்றி, மாற்றி ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம் சில இடங்களில்.. பல இடங்களில் இது மாதிரியான திரைப்படங்கள் கிடைக்காததால் டப்பாவான ஆங்கிலத் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். அவர்கள் சோகம் அவர்களுக்கு..

ஆனால் நம்ம ஆளுக கம்பங்கொல்லைல நின்னுக்கிட்டே காய்ஞ்சு கருவாடா இருக்காங்க.. தோதான இடமும் இல்லை.. படமும் இல்லைன்றதால அது மாதிரி ஏதாவது படங்கள் வந்து தங்களது தாகத்தைத் தீர்த்து வைக்காத என்கிற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு சமீபத்தில் வந்த இரண்டு திரைப்படங்கள் ஏதோ கொஞ்சூண்டு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

அதில் ஒன்று 'வேலு பிரபாகரனின் காதல் கதை'.. இன்னொன்று இத்திரைப்படம்.

அதனால்தானோ என்னவோ.. இந்த இரண்டு திரைப்படங்களுமே முதலுக்கு மோசம் வைக்காமல், கையைக் கடிக்காமல், போனஸ் கிடைத்தாற்போல் கொஞ்சமாவது வீட்டுக்கு அள்ளிக் கொண்டு போகும்வகையில் விநியோகஸ்தர்களுக்கு கலெக்ஷனை குவித்திருக்கிறதாம்.

அந்த ஆசைலதான்.. ஏன்னா நானும் 'யூத்'துதான.. அதுனால சொல்றேன்.. இந்த 'மாதவி' படத்தையும் பார்த்துட்டேன்..கதை என்னவோ கையடக்க கதைதான்.. ஒரு ஏ 4 பேப்பர்ல சாதாரணமா எழுதிரலாம்.. அம்புட்டுத்தான்..

ஹீரோயின் கிணத்துல குதிக்கப் போகும்போது ஹீரோ வந்து காப்பாத்துறாரு. ஆனா ஹீரோயின் நிஜமாவே கிணத்துல விழுந்த ஆட்டுக் குட்டியைக் காப்பாத்ததான் குதிச்சிருக்கா.. ஆனா நம்ம ஹீரோ அவசரத்துல குதிச்சிட்டாரு. பாருங்க.. நம்ம ஹீரோவுக்கு நீச்சல் தெரியாது.. பிறகென்ன நம்ம ஹீரோயின் திரும்பவும் கிணத்துக்குள்ள குதிச்சு ஹீரோவைக் காப்பாத்துறா.. இப்படித்தான் இவங்க கனெக்ஷன் துவங்குது..

ஹீரோயினோட நாய் ஹீரோவை ஒரு கடி கடிச்சு வைக்க.. ஊர் வைத்தியர் "நாயை தொடர்ந்து 15 நாளைக்கு பாலோ பண்ணுங்க.. அது செத்துச்சுன்னா மவனே நீயும் செத்திருவ.." என்று சொல்ல.. ஹீரோ அதே ஊரில் 15 நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம்.இங்கே ஹீரோ நிஜத்தில் வில்லன். ஹீரோயினை எப்படிடா ரூட்டுவிட்டு மடக்கிரலாம்னு கங்கணம் கட்டுறான்.. ஹீரோவுக்கு உடம்பு சரியில்லைன்னா பார்க்க வந்த ஹீரோயினோட இடுப்பைப் பிடிச்சு ஒரு மடக்கு மடக்கிர்றான் ஹீரோ.. ஹீரோயின் அந்தக் காதலை நம்பி அவன்கூட சூட்கேஸைத் தூக்கிடுறா.. பய மும்பைக்கு அவளைக் கொண்டு போய் பிரார்த்தல் இடத்துல விட்டுர்றான்..

அங்க இருந்து தப்பிச்சு வர்றவளை ஏற்கெனவே அவளை பொண்ணு பார்த்துட்டு போன மாப்ளைக்காரன் காப்பாத்தி திருப்பி அவளை அவ வீட்டுக்கே கொண்டு வந்து விட்டுர்றான்.. கூடவே அவளை கல்யாணமும் பண்ணிக்கிறான்.கல்யாணம் பண்ணின ரெண்டாவது நாள்தான் நம்ம ஹீரோ அதே வீட்டுக்குள்ள வர்றான். என்னடா கனெக்ஷன்னு பார்த்தா மாப்ளைக்கு ஹீரோ தம்பியாம்.. அட நம்ம வாலி கதை மாதிரில்ல இருக்குன்னா அதுக்குள்ள இடைவேளை விட்டுட்டாங்க..

மறுபடியும் ஆரம்பிச்சா.. ஹீரோயினுக்கும் அவனை பார்த்து ஷாக்கு.. ஹீரோவுக்கும் அவளைப் பார்த்து ஷாக்கு.. ரெண்டு பேர் ஷோக்கையும் பார்த்து குடும்பமே ஷாக்கடிச்ச மாதிரி நிக்குது.. ஏதேதோ சொல்லி ரெண்டு பேரும் சமாளிக்கிறாங்க..

அப்பனுக்கு ஹீரோவைக் கண்டாலே பிடிக்கலை.. வீட்டுக்கு ஒரு தறுதலை இருக்கும்ல.. அதுதான் இவன்னு சொல்லி எரிஞ்சு விழுறாரு.. ஆனா அம்மா.. அக்மார்க் தெய்வம்.. புள்ளைய கொஞ்சு, கொஞ்சுன்னு கொஞ்சுறாங்க.. "பிள்ளையைத் திட்டாதீங்க"ன்னு புருஷனைத் திட்டுறாங்க..

இதுக்கப்புறம் ஹீரோவும், ஹீரோயினும் நீயா, நானான்னு முறைச்சுக்குறாங்க.. தனிமைல இவன் அவளை கவுக்கப் பாக்குறான்.. அவன் இவளை கவுக்கப் பார்க்குறான்.. இந்த சீன்ஸ்தாங்க படத்துல ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.. நிறைய ட்விஸ்ட்.. நச்சுன்னு சின்ன, சின்னதா பண்ணிருக்காரு டைரக்டரு..

இடைல ஹீரோவுக்கு ஒரு பெரிய இடத்துல பொண்ணு சிக்குது.. அதையே கல்யாணம் பண்ணிக்க பிளான் பண்றான்.. இது ஹீரோயினுக்குத் தெரிஞ்சு ஆளைக் கவுக்க ஏற்பாடு பண்றா.. அவளோட வளைகாப்பு நிகழ்ச்சியப்ப ஒரு பொண்ணு வீட்டுக்குள்ள வந்து "நானும் முழுகாமத்தான் இருக்கேன். எனக்கும் ஏழு மாசமாகுது. நானும் இந்த வீட்டு மருமகதான். எனக்கும் வளைகாப்பு நடத்துங்க"ன்னு ஒத்தக் கால்ல நிக்குது..

பெத்தவங்களும், வந்தவங்களும் குழம்பிப் போய் நிக்க.. ஹீரோவோட 'ஜல்சா' பாடுன போட்டோவை காட்டுது வந்த பொண்ணு.. ஏற்கெனவே காட்டத்துல இருந்த அப்பன்காரன் அவனை அடிக்கப் போக.. ஹீரோ ஹீரோயினை கை காட்ட. அவளும் பதிலுக்குத் திட்ட..

ஹீரோ உண்மையைச் சொல்லி விடுகிறான்.. பிராத்தல் பார்ட்டிகிட்ட தான்தான் ஹீரோயினை கொண்டுபோய்விட்டவன்னு.. ஏற்கெனவே இந்த உண்மை புருஷனுக்கு மட்டும்தான தெரியும்.. வீடே அசிங்கமாகி நிற்க.. ஹீரோவின் காதலி "த்தூ.." என்று துப்பிவிட்டுப் போக..

ஹீரோவுக்கு அவமானமாகிறது.. ஹீரோயினை குத்துவிளக்கால குத்தப் போக.. அதுக்குள்ள அவனை பத்து மாசம் சுமந்து பெத்த, அவனுடைய தாய் இன்னொரு குத்துவிளக்கால அந்த வீட்டின் கடைசி குத்துவிளக்கைக் குத்திக் கொல்ல..

திரைப்படம் சுபமாக முடிந்தது.

இம்புட்டுத்தான் கதை..

படத்தின் துவக்கமே சம்பந்தமே இல்லாமல் பாடல் காட்சியுடன் துவங்க.. நிச்சயம் இது வேற்றுலகத் திரைப்படம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது.

இடைவேளைக்கு முன்னாடி மூணு பாட்டு.. பின்னாடி ரெண்டு பாட்டு.. எல்லா பாட்டுலேயும் ஹீரோயினை கிட்டத்தட்ட எல்லாக் கோணத்துலேயும் அரைகுறை உடைல நிக்க வைச்சு, படுக்க வைச்சு போஸ் எடுத்து சுட்டிருக்கிறதால பாட்டு சீன் போனதே தெரியலை..ஹீரோயினா நடிச்ச பொண்ணோட பேரு மோகனான்னு டைட்டில்ல பார்த்தேன். குளோஸப் ஷாட்ல நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா வசனம் பேசும்போது இழுத்து, இழுத்து விடுறதை பார்த்தா நமக்கே பாவமா இருக்கு. ஏன் இந்தப் புள்ளைய போட்டு இம்புட்டு கஷ்டப்படுத்தணும்..? ஆனாலும் வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம காட்டிட்டுப் போயிருக்கு.. என்ன செய்றது.. புகழும், பணமும் சும்மாவா வரும்.. சினிமா ஆசை யாரை விட்டுச்சு..?ஹீரோவான ராஜ் ஏற்கெனவே 'கேம்பஸ்', 'கட்டுவிரியன்'னு ரெண்டு படத்துல ஹீரோவா நடிச்ச அனுபவம் இருக்கிறதால பரவாயில்லை சுமாரா நடிச்சு முடிச்சிருக்காரு.. டான்ஸ்லேயும் ஏதோ சும்மா அப்படி, இப்படின்னு ஆடி சமாளிச்சிட்டாரு..

அடுத்து புருஷனா நடிச்சிருக்கிறது டான்ஸர் ராம்ஜி. நடிக்கவே இல்லை. பிறகென்ன சொல்றது..?

வெற்றிகரமாக 50-வது முறையா சினிமா தம்பதிகளாக நடித்து முடித்திருக்கிறார்கள் அம்மா ரேகாவும், அப்பா நிழல்கள் ரவியும்.. கால்ஷீட்டை வாங்கிட்டு மூணு நாள்ல இவங்க போர்ஷன் முழுசையும் முடிச்சிருப்பாங்க போலிருக்கு.. காஸ்ட்யூமை மாத்தாமயே அடுத்தடுத்த சீன்ல நடிக்க வைச்சு சமாளிச்சிருக்காங்க..இதுல ரேகா, சின்னப் பையன் மேல ரொம்பப் பாசம் வைச்சு பேசுறது.. பையனுக்கு ஆக்ஸிடெண்ட்டுன்னு சொன்ன உடனே அழுவுறது.. புருஷனைத் திட்டுறது.. மருமகளைக் கொஞ்சுறது.. கடைசியா கோபம் வந்து பெண்மையைக் காப்பாத்த வேண்டி மகனைக் குத்திக் கொல்றதுன்னு பின்னிருக்காங்க..

பிரார்த்தல் பிஸினஸ் நடத்துற அம்மாவா நம்ம வடிவுக்கரசி.. ஆள் கெட்டப்பே ரொம்ப ரொம்ப வித்தியாசமா வாய் நிறைய வெத்தலையை போட்டுக் குதப்பிக்கிட்டு இவரும், ரேகாவும்தான் படத்துல நடிச்சிருக்காங்க.. வடிவுக்கரசி இடத்துக்கு ஆளே இல்லப்பா தமிழ்நாட்டுல..இடைல அப்பப்ப வந்து காமெடி செஞ்சு சிரிக்க வைச்சிருக்காரு நம்ம ஜெயா டிவி மாறன். ஆனாலும் ஒரு கதையோடதான் வந்திருக்காரு. அவரை நேசிக்கிற பக்கத்து வீட்டு பஞ்சவர்ணத்தை விட்டுவிட்டு தான் அவளைவிட பெரிய லெவல்ல பிடிக்கப் போறேன்னு பிளான் போடுறாரு.. அதுக்கு அவர் சொல்ற டயலாக்குதான் அட்டகாசம். "வேலைக்காரியா வந்து குனிஞ்சு கூட்டியே, வீட்டுக்காரியா ஆயிருவீங்களே.. அது மாதிரி இங்கேயும் செஞ்சு இந்த வீட்டுக்காரியா மாறிரு.." என்று அட்வைஸ் செய்யும்போது செம காமெடிதான் போங்க..

அவரும் வீட்டுக்கு வர்ற காய்கறிக்காரிகள், வேலைக்காரிகளை ஓட்டு, ஓட்டுன்னு ஓட்டிட்டு(எல்லாம் டிரிபுள் மீனிங் டயலாக்குகள்தான்) கடைசில அதே பஞ்சவர்ணத்துகிட்டயே போய் மாட்டிக்கிறாரு.. ஒரு கதைக்குள்ள இன்னொரு கதை..

மியூஸிக் இருக்கிறது தெரியுது.. பெரியவங்களே சுமாரா போடும்போது வாலு மட்டும் என்ன செய்யும்.. அதேதான்.. ஏதோ ஒண்ணு போட்டு சமாளிச்சிருக்காரு.. ஒரு குத்துப் பாட்டு வைச்சும்.. தோதான இசை இல்லாம ஜல்லியடிக்குது..

படத்தின் வியாபாரமே 'பிட்டு படம்' என்கிற பெயர்தான் என்பதால் அதற்கே முக்கியத்துவம் கொடுத்து விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் கொஞ்சூண்டுதான் இருக்கு.. சென்சார்காரங்க மட்டும் பார்த்திருக்காங்க போலிருக்கு.. தியேட்டர்ல சென்சார் சர்டிபிகேட்டை பார்த்தேன்.. மொத்தம் 7 நிமிஷத்தை வெட்டி எறிஞ்சிருக்காங்க.. நல்லாயிருப்பாங்களா அவங்க..

பரவாயில்லை விடுங்க.. மிச்ச சொச்சத்தை வைச்சே ஓட்டிரலாம்னு முடிவு செஞ்சு ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சிருக்காங்க.. எப்படி? எப்படி போஸ்டர் அடிச்சா என்னை மாதிரி 'யூத்'துக படத்துக்கு விழுந்தடிச்சு ஓடி வருவாங்களோ.. அதே மாதிரி.. படத்துல ஒரு செகண்ட்டு.. ரெண்டு நிமிஷம் வர்ற போஸ்தான் போஸ்டர்ல பளிச்சுன்னு இருக்கு..

இது போதாதா..? நான் போன அன்னிக்கு சனிக்கிழமை. மாலை காட்சி 200 பேர் இருந்தோம். 6000 ரூபா வசூல்.. சனி, ஞாயிறுல மட்டும் குறைந்தபட்சம் இருபதாயிரம் தேறியிருக்கும். மத்த நாள்ல ஒரு பதினைஞ்சு கிடைச்சிருக்கும்.. மொத்தத்துல ஏழு நாளைக்கு ஒரு லட்சத்துக்கு கிட்டக்க வந்திருக்கும்னு நினைக்கிறேன். இது ஒரு பெட்டிக்கு..

ஸோ.. எப்படியும் ஒரு பெட்டி எடுத்தவங்களும், ரெண்டு பெட்டி எடுத்தவங்களும் போட்ட காசை எடுத்திருப்பாங்க..

இனிமே செகண்ட் ரவுண்ட்டா படம் வெளிவராத ஊர்களுக்கு சப்ளை பண்ணும்போது வர்ற காசு அல்வாதான்..

டைரக்ஷன்..? அப்படீன்னா..? அதான் சுத்தமா இல்லையே.. அப்புறம் எங்க அதைப் பத்தி பேசுறது..? லூஸ்ல விடுங்க..

“அப்புறம் எதுக்குடா வெண்ணை படத்துக்குப் போன?”ன்னு கேக்குறீங்களா..?

அதான் நான் ஆரம்பத்துலேயே சொன்னனே..

நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!

36 comments:

எவனோ ஒருவன் said...

//நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!//
அடுத்த பதிவுலயும் இதே மாதிரி சொன்னீங்க....

கானா பிரபா said...

தல

நீங்க யுத்துன்னு நிரூபிக்க இப்பிடியா பிட்டு, மொக்கைப் படங்க பார்த்துக்கிட்டு திரிவாங்க

RAD MADHAV said...

////நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!//

உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலீங்களா???? :-)

#சுந்தரராஜன்# said...

:(

மங்களூர் சிவா said...

/
ஒரு ஏ 4 பேப்பர்ல சாதாரணமா எழுதிரலாம்..
/

அது மத்தவங்க ஆனா நீங்க??

மங்களூர் சிவா said...

//நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!//

ஸ்ஸப்ப்பா இந்த யூத்துங்க சல்லை தாங்கமுடியலையே சாமி
:)))

கத்துக்குட்டி said...

இந்த மாதிரி மொக்க படத்த எல்லாம் இப்ப uncles தான் பாக்குறாங்க...

இப்டி சொல்லாம சொல்லிடிங்களே உ.த....!!!

Kiruthikan Kumarasamy said...

ஒரு ஆறு தரம் சொல்லிட்டாரு நான் யூத்து நான் யூத்துன்னு... அதிலயே தெரியுது இவரு நெசம்மாலுமே ரொம்ப யூத்துன்னு

நித்யகுமாரன் said...

உங்களுக்கு நெட் கனெக்ஷன் கிடைக்காமயே இருந்திருக்கலாம்...

அப்பன் முருகனின் சதி தொடர்ந்திருக்கலாம்...

நித்யன்

T.V.Radhakrishnan said...

//ஒரு ஏ 4 பேப்பர்ல சாதாரணமா எழுதிரலாம்//

ஆனா..உங்க விமரிசனம் 3 ஏ4 அளவு இருக்கும் போல இருக்கு

அத்திரி said...

இந்த யூத்துங்க தொல்லை தாங்கலப்பா

இராகவன் நைஜிரியா said...

நீங்க யூத்துதான்... யூத்துதான் ... நம்பிட்டோம்.. அதுக்காக இப்படி ஒரு மொக்கை படத்துக்கு 40 பக்கம் விமர்சனம் எழுதுவாங்க...


ஐயோ.. தாங்க முடியலடா சாமி..

ராஜராஜன் said...

எச்சரிக்கை : இந்த பதிவில் இடம் பெற்று இருக்கும் கடைசி வாகியம் கற்பனையே, இதை படித்து விட்டு யார் மனதேணும் புண் பட்டாள் அப்பன் முருக பெருமாளிடம் முறை இடலாம். இந்த பதிவிற்கும் அதற்கும் எந்த சமந்தமும் இல்லை.

முருகப் பெருமான் said...

// நித்யகுமாரன் said...
உங்களுக்கு நெட் கனெக்ஷன் கிடைக்காமயே இருந்திருக்கலாம்...
அப்பன் முருகனின் சதி தொடர்ந்திருக்கலாம்...
நித்யன்//

இதென்ன விந்தை?இதெற்கெல்லாம் என்மீது பழி சுமத்துவது அநியாயம்.

//ராஜராஜன் said...
எச்சரிக்கை : இந்த பதிவில் இடம் பெற்று இருக்கும் கடைசி வாகியம் கற்பனையே, இதை படித்து விட்டு யார் மனதேணும் புண் பட்டாள் அப்பன் முருக பெருமாளிடம் முறை இடலாம். இந்த பதிவிற்கும் அதற்கும் எந்த சமந்தமும் இல்லை.//

என்னிடம் முறையிட்டு யாதொரு பயனும் இல்லை.அவர் வாங்கி வந்த வரம் அப்படி.

ஜெட்லி said...

//நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!

//
நாற்பது வயது யூத் நண்பரே...
நீங்க உண்மையிலேயே பெரிய ஆளு....
காதல் கதை பிட்டு படத்துல வர வாத்தியார்
மாதிரி இருக்கீங்க அண்ணே.....
வாழ்த்துக்கள்...

ஜெட்லி said...

//நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!

//
நாற்பது வயது யூத் நண்பரே...
நீங்க உண்மையிலேயே பெரிய ஆளு....
காதல் கதை பிட்டு படத்துல வர வாத்தியார்
மாதிரி இருக்கீங்க அண்ணே.....
வாழ்த்துக்கள்...

வண்ணத்துபூச்சியார் said...

இந்த யூத் புராணம் நல்லாயிருக்கு.

”நிங்க ரொம்ம நல்லவருண்ணே””

அது சரி said...

//
ஹீரோயினோட நாய் ஹீரோவை ஒரு கடி கடிச்சு வைக்க.. ஊர் வைத்தியர் "நாயை தொடர்ந்து 15 நாளைக்கு பாலோ பண்ணுங்க.. அது செத்துச்சுன்னா மவனே நீயும் செத்திருவ.." என்று சொல்ல.. ஹீரோ அதே ஊரில் 15 நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம்.
//

ஆஹா....ஒரு மொக்கைப் படம் எடுக்கிறதுக்கு கூட எப்பிடியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு :0)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///எவனோ ஒருவன் said...

//நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!//

அடுத்த பதிவுலயும் இதே மாதிரி சொன்னீங்க....///

ஹி.. ஹி.. மெயின் சப்ஜெக்ட்டே இதுதானே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///கானா பிரபா said...
தல, நீங்க யுத்துன்னு நிரூபிக்க இப்பிடியா பிட்டு, மொக்கைப் படங்க பார்த்துக்கிட்டு திரிவாங்க///

என்ன செய்யறது..?

இதுக்காக கழுத்துல போர்டு எழுதி மாட்டிக்கிட்டா திரிய முடியும்..!

நம்மாள முடிஞ்சது இதுதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[RAD MADHAV said...

//நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!//

உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலீங்களா???? :-)]]]

தெரியலை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[#சுந்தரராஜன்# said...
:(]]]

என்ன ஸ்மைலி..!

எப்படியோ நாசமா போடான்றீங்களா..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...

/ஒரு ஏ 4 பேப்பர்ல சாதாரணமா எழுதிரலாம்../

அது மத்தவங்க ஆனா நீங்க??]]]

எனக்கு 3 ஏ4 பேப்பர் தேவைப்படும் சிவா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கத்துக்குட்டி said...
இந்த மாதிரி மொக்க படத்த எல்லாம் இப்ப uncles தான் பாக்குறாங்க...
இப்டி சொல்லாம சொல்லிடிங்களே உ.த....!!!]]]

நான் அங்கிள் இல்ல.. யூத்து.. யூத்து.. யூத்து.. சொல்லிட்டேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Kiruthikan Kumarasamy said...
ஒரு ஆறு தரம் சொல்லிட்டாரு நான் யூத்து நான் யூத்துன்னு... அதிலயே தெரியுது இவரு நெசம்மாலுமே ரொம்ப யூத்துன்னு]]]

தேங்க்ஸ் குமாரசாமி ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நித்யகுமாரன் said...

உங்களுக்கு நெட் கனெக்ஷன் கிடைக்காமயே இருந்திருக்கலாம்...

அப்பன் முருகனின் சதி தொடர்ந்திருக்கலாம்...

நித்யன்]]]

அடப்பாவி..

நான் யூத்துன்னு உனக்கே ஏண்டா வயிறு கலங்குது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[T.V.Radhakrishnan said...

//ஒரு ஏ 4 பேப்பர்ல சாதாரணமா எழுதிரலாம்//

ஆனா.. உங்க விமரிசனம் 3 ஏ4 அளவு இருக்கும் போல இருக்கு]]]

சரியா சொன்னீங்க ஸார்.. அதே அளவுதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அத்திரி said...
இந்த யூத்துங்க தொல்லை தாங்கலப்பா]]]

அதான் யூத்து..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராகவன் நைஜிரியா said...
நீங்க யூத்துதான்... யூத்துதான் ... நம்பிட்டோம்.. அதுக்காக இப்படி ஒரு மொக்கை படத்துக்கு 40 பக்கம் விமர்சனம் எழுதுவாங்க... ஐயோ.. தாங்க முடியலடா சாமி..]]]

40 பக்கமில்லை ராகவன் ஸார்..

ஜஸ்ட் 6 பக்கங்கள்.. அவ்ளோதான்..

ஆனா நான் யூத்துதான்.. நீங்க நம்பணும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜராஜன் said...
எச்சரிக்கை : இந்த பதிவில் இடம் பெற்று இருக்கும் கடைசி வாகியம் கற்பனையே, இதை படித்து விட்டு யார் மனதேணும் புண் பட்டாள் அப்பன் முருக பெருமாளிடம் முறை இடலாம். இந்த பதிவிற்கும் அதற்கும் எந்த சமந்தமும் இல்லை.]]]

என் அப்பன் முருகப் பெருமானுக்கே தப்பும், தவறுமாக தமிழில் அப்ளிகேஷன் போட்டால் எப்படி..?

வந்து கண்ணைக் குத்தப் போறான் பாருங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[முருகப் பெருமான் said...
// நித்யகுமாரன் said...
உங்களுக்கு நெட் கனெக்ஷன் கிடைக்காமயே இருந்திருக்கலாம்...
அப்பன் முருகனின் சதி தொடர்ந்திருக்கலாம்...
நித்யன்//

இதென்ன விந்தை? இதெற்கெல்லாம் என்மீது பழி சுமத்துவது அநியாயம்.]]]

வேற யாரைச் சொல்றதாம்.. உன் அப்பனையா..?

//ராஜராஜன் said...
எச்சரிக்கை : இந்த பதிவில் இடம் பெற்று இருக்கும் கடைசி வாகியம் கற்பனையே, இதை படித்து விட்டு யார் மனதேணும் புண் பட்டாள் அப்பன் முருக பெருமாளிடம் முறை இடலாம். இந்த பதிவிற்கும் அதற்கும் எந்த சமந்தமும் இல்லை.//

என்னிடம் முறையிட்டு யாதொரு பயனும் இல்லை. அவர் வாங்கி வந்த வரம் அப்படி.]]]

அக்காங்.. இதை மட்டும் சொல்லி எஸ்கேப்பாயிரு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜெட்லி said...
//நான் யூத்து..! நான் யூத்து..!! நான் யூத்து..!!!//

நாற்பது வயது யூத் நண்பரே...
நீங்க உண்மையிலேயே பெரிய ஆளு.... காதல் கதை பிட்டு படத்துல வர வாத்தியார் மாதிரி இருக்கீங்க அண்ணே.....
வாழ்த்துக்கள்...]]]

அடப்பாவிகளா..!

உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலியா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வண்ணத்துபூச்சியார் said...

இந்த யூத் புராணம் நல்லாயிருக்கு.

”நிங்க ரொம்ம நல்லவருண்ணே”]]]

உங்களுக்காச்சும் தெரிஞ்சதே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அது சரி said...

//ஹீரோயினோட நாய் ஹீரோவை ஒரு கடி கடிச்சு வைக்க.. ஊர் வைத்தியர் "நாயை தொடர்ந்து 15 நாளைக்கு பாலோ பண்ணுங்க.. அது செத்துச்சுன்னா மவனே நீயும் செத்திருவ.." என்று சொல்ல.. ஹீரோ அதே ஊரில் 15 நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம்.//

ஆஹா.... ஒரு மொக்கைப் படம் எடுக்கிறதுக்குகூட எப்பிடியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு :0)))]]]

சில சமயத்துல மொக்கை படத்துலகூட லாஜிக்கெல்லாம் கரெக்ட்டா செட் பண்ணியிருப்பாங்க..!

Cable Sankar said...

வயோதிக வாலிப நண்பர் யூத் உ.தமிழனுக்கு,
நிஜ யூத்துகள் இம்மாதிரியான படஙக்ளை பார்ப்பதில்லை.. அவர்கள் வாழ்க்கையில் நேரடியாய் பார்ப்பதால் இம்மாதிரியான காதல் கதை, மாதவி போன்றவற்றை பார்ர்பதில்லை என்பதை.. உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Cable Sankar said...
வயோதிக வாலிப நண்பர் யூத் உ.தமிழனுக்கு, நிஜ யூத்துகள் இம்மாதிரியான படஙக்ளை பார்ப்பதில்லை.. அவர்கள் வாழ்க்கையில் நேரடியாய் பார்ப்பதால் இம்மாதிரியான காதல் கதை, மாதவி போன்றவற்றை பார்ர்பதில்லை என்பதை.. உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.]]]

இதையெல்லாம் நிஜத்தில் செய்பவர்கள் நிஜமான யூத்துகள் இல்லை பெரியவரே..!

அவர்களெல்லாம் விடலைகள்..!