HANGOVER - சென்சார் போர்டு என்ன தூங்கி வழிந்ததா..?

14-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நம்முடைய கேபிளார் 'ஹேங்க்ஓவர்' திரைப்படம் பற்றி எழுதிய விமர்சனத்தைப் படித்துத் தொலைத்தவுடன் அதனை பார்த்தே தீர வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

அவர் டிவிடியில் பார்த்திருக்கிறார். நம்ம வீட்ல டிவியே ரிப்பேர்.. டிவிடி பிளேயரும் இல்லை. எங்க போய் பார்க்கிறது..? விதி விட்ட வழியே என்று நினைத்து சத்யம் தியேட்டரில் 120 ரூபாயை இனாமாகக் கொடுத்து படத்தைப் பார்த்துத் தொலைத்தேன்.

வித்தியாசமான கதை.. நல்ல காமெடி.. ஆனால் வசனங்களில் பெரும்பாலும் விரசம். இதையெல்லாம் தாண்டி ஒரு குடம் முழுக்க இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் எப்படி இருக்குமோ.. அப்படியொரு காட்சியையும் எடுத்திருக்கிறார்கள். என்னால் அக்காட்சியை நகைச்சுவை என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு கைக்குழந்தை.. இன்னும் அம்மாவிடம் பால் குடித்து வரும் பச்சிளம் குழந்தையை வைத்து அவர்கள் எடுத்திருக்கும் காட்சி அக்மார்க் வக்கிரமானது. Child Porn Act-ன் கீழ் வரக்கூடியது.. ஆனால் சென்சாரில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. அதுவும் இரண்டு முறை அக்காட்சியை வரும்படி வைத்திருப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியவில்லை.

ஒரு முக்கியமான காட்சியை மட்டும் சென்சார் போர்டு கட் செய்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் படம் இடைவேளைவிட்டு மறுபடியும் படம் துவங்கியவுடன் ஒரு நிமிடம் யாருக்கும் புரியவில்லை. பின்பு வசனங்களை வைத்துப் புரிந்து கொண்டார்கள். ஆனால் டிவிடியில் இந்தக் காட்சியை சேர்த்திருப்பதுபோல் தெரிகிறது.

இதே போன்று இந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட காட்சியையும் கட் செய்திருக்கலாம்.

குழந்தைகளை பாலியல் நோக்கில் பார்ப்பதும், நடத்துவதும் அமெரிக்காவில் மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்படும் என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் நடப்பதையெல்லாம் பார்த்தால் எல்லா இடங்களிலுமே அரசியலமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டும் நடக்கலாம் போல தெரிகிறது.

அந்தக் குழந்தை பெரியவனாக ஆனதும், தான் கைக்குழந்தையாக இருக்கும்போது நடித்ததாக்கும் என்று எப்படி இதனை மற்றவர்களிடம் சொல்வான் என்று யோசித்துப் பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது..

'ஏ சர்டிபிகேட்' என்று தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருந்தாலும், காட்சிப்படுத்தலில் இந்த இயக்குநர் செய்திருப்பது மகா கொடூரம்.

அமெரிக்காவை விடுங்க.. நம்ம நாட்டு சென்சார் போர்டு என்ன தூங்கி வழிந்ததா..? நிச்சயம் ஒரு பெண்மணியும் இந்தக் காட்சியை பார்த்திருப்பார்..! எப்படி இதனை அனுமதிப்பதற்கு அவருக்கு மனது வந்தது என்று தெரியவில்லை..! ஓ.. முருகா..!

குழந்தைகள் எந்த நாட்டினராக இருந்தாலும் குழந்தைகள்தானே..!

இந்த ஒரு காரணத்துக்காகவே இத்திரைப்படம் பற்றி மேற்கொண்டு பேச இயலவில்லை.

'யாருக்குமே வராத கோபம் உனக்கேன்?' என்கிறீர்களா..?

ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை..

52 comments:

Prabhu S said...

Annaen,

Edhum love pandreengala ?

adikadi youth youth nu soldreenga :)

வெட்டிப்பயல் said...

//
ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.
//

அனேகமா உங்களுக்கு ஒரு டெவில் ஷோ போடணும்னு நினைக்கிறேன்...

மக்கள்ஸ் என்ன நினைக்கறீங்க???

Cable Sankar said...

அய்ய்யய்யோ.. நானே இங்கிலீஷ் புரியாம அண்ணனை பாக்க வச்சு முழு கதையையும் தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சிருந்ததுல மண்ணை வாரி போட்டீங்களே அண்ணே..

தண்டோரா ...... said...

120 ரூபாய்க்கு 2 குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்தா ஹேங்கோவர் சும்மா பின்னும்.அதை வுட்டுட்டு...

ஊர்சுற்றி said...

//ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.
//

யூத்துகளை வைத்துதான் அமெரிக்காவில் இந்தப் படம் சக்கைப் போடு போட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் குவித்துள்ளது. எல்லாருக்கும் பிடிச்சிருக்குங்க. எனக்கு கூட. :)

அத்திரி said...

//தண்டோரா ...... said...
120 ரூபாய்க்கு 2 குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்தா ஹேங்கோவர் சும்மா பின்னும்.அதை வுட்டுட்டு...//


கிகிகிகிகி..............

பிரசன்னா இராசன் said...

நீங்கள் யூத்தாக இருந்தால் என்னத்துக்கு இந்த படத்துக்கு கலாசார குடை பிடிக்கப் போகிறீர்கள். படம் டார்க் ஹ்யூமர் வகையை சேர்ந்தது. படம் விரசம் என்று தான் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறார்களே. அப்புறம் என்னத்துக்கு, வசனங்களில் விரசம் அதிகமாக இருக்கிறது என்று கமெண்ட் வேறு?

இராம்/Raam said...

அண்ணே,

ஒங்களுக்கெல்லாம் அறிவுரை’ன்னு ஒன்னு சொன்னா அது கடலும்,பெருங்காயம் பழமொழி ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிது... :)


/ வெட்டிப்பயல் said...

//
ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.
//

அனேகமா உங்களுக்கு ஒரு டெவில் ஷோ போடணும்னு நினைக்கிறேன்...

மக்கள்ஸ் என்ன நினைக்கறீங்க???//

சீக்கிரம் போடு ராசா... :)

நையாண்டி நைனா said...

படம் பார்கலாமா கூடாதான்னு மட்டும் சொல்லுங்க, அதுலே இருந்து நீங்க யூத்தா, இல்லே டெலிபோன் பூத்தான்னு நாங்க முடிவு பண்றோம்....

jackiesekar said...

தலைவா நீங்க இவ்வளவு யோக்கியமானவரா? ஒரு வேளை யூத்தா இருக்கறதாலே இப்படியோ... எனிவே உங்கள் கோபம் நியாயமானது...

வால்பையன் said...

அநியாயத்துக்கு யூத்தா இருக்கிங்க!

90 களின் ஆரம்பத்தில் பாலியல் கல்வி என்ற பெயரில் கொல்வார்களே பார்த்ததில்லையா!?

எவனோ ஒருவன் said...

//ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி...//
அண்ணே, இத்தோட நிறுத்துங்க... சந்தேகம் வலுக்குது.
---
இப்படி ஒரு மேட்டர் படத்துக்குல்ல இருக்குதா... கண்டிப்பா டிவிடிலதான் பாக்கனும்போல இருக்கே!

ananth said...

நீங்கள் யூத்துதான். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தலை நரைத்த யூத்.

சென்ஷி said...

//Child Porn Act-ன் கீழ் வரக்கூடியது.. //

அப்படின்னா ”குழந்தையை அம்மணமா நடிக்க வைக்குறது” அதானே அர்த்தம்!

ராஜராஜன் said...

அமெரிக்கவில் வாழும் கலாச்சாரம் நமது நாட்டிலும் ஒட்டி கொண்டு விட்டது என்று சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை. நமது சென்சார் போர்டு அதிகாரிகள் கூட அந்த அமெரிக்க மோகத்தில் இருந்து படம் பார்த்து சிரித்து கொண்டே சர்டிபிகேட் குடுத்து விட்டார்கள் போல.

ராஜராஜன் said...

பாஸ் இந்த படத்த சென்சார் எப்படி அனுமதித்தார்கள் என்று கோவம் கொள்ளும் நீங்கள் .

தம்பயுடயான் என்கிற படம் இவர்களால் தடை செய்ய பட்டு இருகிறதே அதை மட்டும் ஏன் மறந்திர்கள்??? அந்த படத்தை அவர்கள் ஏன் தடை செய்தார்கள் தெரியுமா ?? அதை பத்தி அடுத்த பதிவு போடுகளே எல்லோரும் தெரியட்டும்.

T.V.Radhakrishnan said...

:-)))

raja vamsam said...

நீங்கள் யூத்தாக இல்லை மனிதனாக சிந்தித்துள்ளீர்கள்

மின்னுது மின்னல் said...

அய் நாந்தான் 200 !!!

:)

பரிசு தருவாயா முருகா ??

Kiruthikan Kumarasamy said...

ஒத்துக்கறோம்... நீரு யூத்துன்னு ஒத்துக்கறோம்... இன்னொரு பதிவில மட்டும் இப்பிடி நான் யூத்துங்கோன்னு பதிவு போட்டீரு..நடக்கறதே வேறே

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Prabhu S said...
Annaen, Edhum love pandreengala ?
adikadi youth youth nu soldreenga :)]]]

அப்படி இருந்தாத்தான் இந்நேரம் சம்சாரியாகி யூத்ல இருந்து ரிட்டையர்ட்மெண்ட் வாங்கிருப்பனே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வெட்டிப்பயல் said...

//ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.//

அனேகமா உங்களுக்கு ஒரு டெவில் ஷோ போடணும்னு நினைக்கிறேன்... மக்கள்ஸ் என்ன நினைக்கறீங்க???]]]

டெவில் ஷோ? வாட் மீன்ஸ்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Cable Sankar said...
அய்ய்யய்யோ.. நானே இங்கிலீஷ் புரியாம அண்ணனை பாக்க வச்சு முழு கதையையும் தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சிருந்ததுல மண்ணை வாரி போட்டீங்களே அண்ணே..]]]

என்ன நக்கலா..?

மருவாதையா 120 ரூபாயைத் திருப்பிக் கொடு.. இல்லேன்னா நீ யூத்து இல்லே.. யூத்து இல்லே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தண்டோரா ...... said...
120 ரூபாய்க்கு 2 குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்தா ஹேங்கோவர் சும்மா பின்னும். அதை வுட்டுட்டு...]]]

120 ரூபாய்க்கு 2 குவார்ட்டரா..?

அவ்ளோதானா..?

விலைவாசி இந்த அளவுக்கு உசந்திருச்சா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஊர்சுற்றி said...

//ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.//

யூத்துகளை வைத்துதான் அமெரிக்காவில் இந்தப் படம் சக்கைப் போடு போட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் குவித்துள்ளது. எல்லாருக்கும் பிடிச்சிருக்குங்க. எனக்கு கூட. :)]]]

ஊர் சுற்றி ஸார்.. நான் கேட்ட கேள்வி பத்தி ஒண்ணும் சொல்லலையே..!

அந்த சின்னப்புள்ளையை வைசசு அப்படி படம் எடுத்தது தப்புதான..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அத்திரி said...

//தண்டோரா ...... said...
120 ரூபாய்க்கு 2 குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்தா ஹேங்கோவர் சும்மா பின்னும்.அதை வுட்டுட்டு...//


கிகிகிகிகி..............]]]

என்ன கிகிகிகி.. சைட் டிஷ்ஷுக்கு எவன் காசு தருவான்..?!

ஊர்சுற்றி said...

//ஊர் சுற்றி ஸார்.. நான் கேட்ட கேள்வி பத்தி ஒண்ணும் சொல்லலையே..!

அந்த சின்னப்புள்ளையை வைசசு அப்படி படம் எடுத்தது தப்புதான..? // தெரியலீங்களே!

வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[வெட்டிப்பயல் said...

//ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.//

அனேகமா உங்களுக்கு ஒரு டெவில் ஷோ போடணும்னு நினைக்கிறேன்... மக்கள்ஸ் என்ன நினைக்கறீங்க???]]]

டெவில் ஷோ? வாட் மீன்ஸ்..?
//

Will show you what that means :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரசன்னா இராசன் said...
நீங்கள் யூத்தாக இருந்தால் என்னத்துக்கு இந்த படத்துக்கு கலாசார குடை பிடிக்கப் போகிறீர்கள். படம் டார்க் ஹ்யூமர் வகையை சேர்ந்தது. படம் விரசம் என்றுதான் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறார்களே. அப்புறம் என்னத்துக்கு, வசனங்களில் விரசம் அதிகமாக இருக்கிறது என்று கமெண்ட் வேறு?]]]

ஓ.. யூத்துகள் அனைவருமே கலாச்சாரக் குடைக்காரர்கள் என்று அர்த்தமா..?

டார்க் ஹியூமர் என்றால் அதில் With Child Porn-ம் சேர்த்துதானா..?

புதிய விளக்கமாக இருக்கிறது பிரசன்னா..?

பிறகு எதற்கு அந்தச் சட்டம் அங்கே இருக்கிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராம்/Raam said...

அண்ணே, ஒங்களுக்கெல்லாம் அறிவுரை’ன்னு ஒன்னு சொன்னா அது கடலும்,பெருங்காயம் பழமொழி ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிது... :)]]]

தம்பீ..

எனது கோபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் படம் பார்த்தீர்கள்தானே.. அந்தக் குழந்தையை வைத்து அப்படி ஒரு காட்சி தேவையா..? அது போன்ற காமெடியை நாம் என்றைக்காவது நினைத்தாவது பார்த்ததுண்டா.. நெஞ்சைத் தொட்டுச் சொல் பார்ப்போம்..

[[[வெட்டிப்பயல் said...
ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.
[[அனேகமா உங்களுக்கு ஒரு டெவில் ஷோ போடணும்னு நினைக்கிறேன்... மக்கள்ஸ் என்ன நினைக்கறீங்க???//
சீக்கிரம் போடு ராசா... :)]]]

உடனேயே எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு கிளம்பிர்றீங்களே.. ஏனுங்க ராசா..?!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...
படம் பார்கலாமா கூடாதான்னு மட்டும் சொல்லுங்க, அதுலே இருந்து நீங்க யூத்தா, இல்லே டெலிபோன் பூத்தான்னு நாங்க முடிவு பண்றோம்....]]]

வேண்டாம்..! புறக்கணியுங்கள் தம்பீ..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[jackiesekar said...
தலைவா நீங்க இவ்வளவு யோக்கியமானவரா? ஒரு வேளை யூத்தா இருக்கறதாலே இப்படியோ... எனிவே உங்கள் கோபம் நியாயமானது...]]]

ஜாக்கி..

எல்லாவித அலம்பல்களுக்கும், கரைச்சல்களுக்கும் ஒரு அளவு இருக்கிறது..!

அது நாம் நெருங்கவே விரும்பாத அல்லது மாட்டாத குழந்தைகளிடம் போய் நிற்பதைத்தான் என் மனம் ஏற்க மறுக்கிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வால்பையன் said...
அநியாயத்துக்கு யூத்தா இருக்கிங்க!
90களின் ஆரம்பத்தில் பாலியல் கல்வி என்ற பெயரில் கொல்வார்களே பார்த்ததில்லையா!?]]]

அதுக்காக பச்சிளம் குழந்தைகளிடம்கூடவா செய்து காண்பிப்பார்கள்..?

ஒரு வரைமுறை வேண்டாம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எவனோ ஒருவன் said...

//ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி...//

அண்ணே, இத்தோட நிறுத்துங்க... சந்தேகம் வலுக்குது.]]]

இனிமே சந்தேகமேபடக்கூடாது..!

[[[இப்படி ஒரு மேட்டர் படத்துக்குல்ல இருக்குதா... கண்டிப்பா டிவிடிலதான் பாக்கனும்போல இருக்கே!]]]

ஏன் பார்க்குறீங்க..? விட்ருங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...
நீங்கள் யூத்துதான். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தலை நரைத்த யூத்.]]]

மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன் ஆனந்த்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சென்ஷி said...

//Child Porn Act-ன் கீழ் வரக்கூடியது.. //

அப்படின்னா ”குழந்தையை அம்மணமா நடிக்க வைக்குறது” அதானே அர்த்தம்!]]]

இல்லை ராசா.. வக்கிரமாக பயன்படுத்தியிருப்பது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜராஜன் said...
அமெரிக்கவில் வாழும் கலாச்சாரம் நமது நாட்டிலும் ஒட்டி கொண்டு விட்டது என்று சொல்லிதான் தெரிய வேண்டியது இல்லை. நமது சென்சார் போர்டு அதிகாரிகள்கூட அந்த அமெரிக்க மோகத்தில் இருந்து படம் பார்த்து சிரித்து கொண்டே சர்டிபிகேட் குடுத்து விட்டார்கள் போல.]]]

அமெரிக்காவிலேயே எப்படி இதனை விட்டார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜராஜன் said...
பாஸ் இந்த படத்த சென்சார் எப்படி அனுமதித்தார்கள் என்று கோவம் கொள்ளும் நீங்கள்
தம்பயுடயான் என்கிற படம் இவர்களால் தடை செய்யபட்டு இருகிறதே அதை மட்டும் ஏன் மறந்திர்கள்??? அந்த படத்தை அவர்கள் ஏன் தடை செய்தார்கள் தெரியுமா ?? அதை பத்தி அடுத்த பதிவு போடுகளே எல்லோரும் தெரியட்டும்.]]]

ரீவைஸிங் கமிட்டிக்குப் போயிருக்கிறது அல்லவா..?

முடிவு வரட்டும்.. காத்திருப்போம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[T.V.Radhakrishnan said...
:-)))]]]

வருகைக்கு நன்றி ஐயா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[rajavamsam said...
நீங்கள் யூத்தாக இல்லை, மனிதனாக சிந்தித்துள்ளீர்கள்]]]

படத்தைப் பார்த்தீர்களானால் நீங்களும் இதேபோல்தான் கொதிப்பீர்கள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மின்னுது மின்னல் said...
அய் நாந்தான் 200 !!!
:)
பரிசு தருவாயா முருகா ??]]]

ஐயோ..!

என் ராசா.. செல்லம்.. பவுனு.. தங்கம்..!

நேர்ல வா.. இறுக்கி அணைச்சு உம்மா தரேன்..

அதான் என்னால முடிஞ்சது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Kiruthikan Kumarasamy said...
ஒத்துக்கறோம்... நீரு யூத்துன்னு ஒத்துக்கறோம்... இன்னொரு பதிவில மட்டும் இப்பிடி நான் யூத்துங்கோன்னு பதிவு போட்டீரு.. நடக்கறதே வேறே]]]

அடுத்த பதிவுல பாரும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஊர்சுற்றி said...

//ஊர் சுற்றி ஸார்.. நான் கேட்ட கேள்வி பத்தி ஒண்ணும் சொல்லலையே..! அந்த சின்னப் புள்ளையை வைசசு அப்படி படம் எடுத்தது தப்புதான..?//

தெரியலீங்களே!]]]

என்ன ஸார்..? இப்படி சொன்னீங்கன்னா எப்படி..?

ரொம்பக் கோவம் வருது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[வெட்டிப்பயல் said...
/ஒருவேளை, நான் 'யூத்'தாக இருப்பதினால் எனக்கு மட்டும் இப்படி தார்மீகக் கோபம் வருகிறதோ.. தெரியவில்லை.//

அனேகமா உங்களுக்கு ஒரு டெவில் ஷோ போடணும்னு நினைக்கிறேன்... மக்கள்ஸ் என்ன நினைக்கறீங்க???]]]

டெவில் ஷோ? வாட் மீன்ஸ்..?//

Will show you what that means :)]]]

வெட்டி ஸார்..!

அப்பன் முருகன் இருக்கும் போது எனக்கென்ன கவலை..?

ஆனால் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நினைத்தால் மனம் மிகவும் பாரமாக உள்ளது..!

திரவிய நடராஜன் said...

தம்பி,
" சட்டம் நம் கையில்.. " என்ற எனது புதிய வலைப்பூவை பார்த்து கமெண்ட் செய்யுங்கள். url http://lawforus.blogspot.com/
நன்றி

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[திரவிய நடராஜன் said...
தம்பி, " சட்டம் நம் கையில்.. " என்ற எனது புதிய வலைப்பூவை பார்த்து கமெண்ட் செய்யுங்கள். url http://lawforus.blogspot.com/
நன்றி]]]

நிச்சயம் வருகிறேன்..!

கத்துக்குட்டி said...

நியாயமான கோவம் தான் தல!!!

எதுக்கு எல்லா பதிவுலையும் "நா யூத்து" னு போடுறீங்க னு தான் புரிய மாட்டேங்குது ???!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கத்துக்குட்டி said...
நியாயமான கோவம்தான் தல!!!
எதுக்கு எல்லா பதிவுலையும் "நா யூத்து"னு போடுறீங்கனுதான் புரிய மாட்டேங்குது???!!!]]]

ஏன்னா நான் இளைஞன்தானே..! அதுக்காகத்தான்..!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆச்சர்யம் ஆனால் உண்மை !!

உண்மை தமிழன் !! இந்த பதிவு ரொம்ப நீளம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆச்சர்யம் ஆனால் உண்மை!!]]

எது ஸார்..?

[[[உண்மை தமிழன்!! இந்த பதிவு ரொம்ப நீளம்]]]

அப்படியா..? நாலே பக்கம்தான் எழுதியிருக்கேன். இதுவும் அதிகமா..?

அட போங்கப்பா..!

பிரசன்னா இராசன் said...

நான் சொல்ல வந்ததை கொஞ்சம் புரிந்து கொண்டு பின்னூட்டம் இடுங்கள். நான் உங்கள் பதிவின் சாரம்சமான Child Porn - ஐப் பற்றி சொல்லவே இல்லை. படம் பற்றி ஏற்கனவே நிறைய பேர் பதிவு போட்டு இருக்கிறார்கள். அதில் படம் விரசம் நிறைந்தது என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள். முக்கியமாக ஹாலிவுட் பாலாவின் பதிவு. இப்படி இருக்கையில் படத்தின் வசனங்கள் விரசம் நிறைந்தது என்று சொல்லும் போது சிரிப்பு தான் வருகிறது. அதைத் தான் ‘நீங்கள் யூத்தாக இருந்தால் என்னத்துக்கு கலாசார குடை பிடிக்கிறீர்கள்’ என்று சொல்ல வந்தேன். யூத்துகள் அனைவரும் கலாசார குடைக்காரர்கள் என்று அர்த்தமல்ல. பின்னூட்டம் இடும் முன், உங்களைத் தாக்கும் கருத்து என்று நினைத்து பின்னூட்டம் இடாதீர்கள் நண்பரே.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பிரசன்னா இராசன் said...
நான் சொல்ல வந்ததை கொஞ்சம் புரிந்து கொண்டு பின்னூட்டம் இடுங்கள்.]]]

சரிங்கண்ணே..!

[[[நான் உங்கள் பதிவின் சாரம்சமான Child Porn - ஐப் பற்றி சொல்லவே இல்லை.]]]

இது உங்களுக்கே ஓவரா தெரியலை..?

நான் பதிவு போட்டிருப்பதன் மையக் கருத்தே அதுதான். அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதை இன்னொரு முறை பின்னூட்டம் போட்டு வேறு சொல்கிறீர்கள்..? என்ன தைரியம் உங்களுக்கு..!!!!!

[[[படம் பற்றி ஏற்கனவே நிறைய பேர் பதிவு போட்டு இருக்கிறார்கள். அதில் படம் விரசம் நிறைந்தது என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள். முக்கியமாக ஹாலிவுட் பாலாவின் பதிவு. இப்படி இருக்கையில் படத்தின் வசனங்கள் விரசம் நிறைந்தது என்று சொல்லும் போது சிரிப்புதான் வருகிறது.]]]

கேபிள் சங்கர் எழுதியதை மட்டும்தான் நான் படித்தேன். மற்றவைகளை நான் படிக்கவில்லை. படிக்காதது என் குற்றமா..? நான் எதிர்பார்த்து போனது காமெடியைத்தான்.. இந்த அளவுக்கான விரச காமெடியை அல்ல.. அதனால் எனக்குள் நிறைய ஏமாற்றம்தான்..

[[[அதைத்தான் ‘நீங்கள் யூத்தாக இருந்தால் என்னத்துக்கு கலாசார குடை பிடிக்கிறீர்கள்’ என்று சொல்ல வந்தேன். யூத்துகள் அனைவரும் கலாசார குடைக்காரர்கள் என்று அர்த்தமல்ல. பின்னூட்டம் இடும் முன், உங்களைத் தாக்கும் கருத்து என்று நினைத்து பின்னூட்டம் இடாதீர்கள் நண்பரே.]]]

இப்போதும் நீங்கள் தாக்கியிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது.

நீங்களும் என்னைப் புரிந்து கொள்ளுங்கள்..