ஒரே நாளில் இரண்டு பதிவர் சந்திப்புகள்..!

08-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் சென்ற பதிவில் சொல்லியிருந்ததைப் போல நியூபுக்லேண்ட்ஸில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் என்னைவிட அதிகமாக தொந்தி தள்ளி, குறுந்தாடியுடன், கண்ணாடியும் அணிந்து கொண்டு ஒரு இளைஞர் புத்தகங்களை எடுப்பதும் கீழே வைப்பதுமாகவே இருந்தார்.

தற்செயலாக மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தபோது பளிச்சென்று நினைவுக்கு வந்தது.. இது ‘பாபா'வாச்சே என்று.. ஆனாலும் ஒரு சந்தேகம்.. நான் ஏற்கெனவே இரண்டு முறைதான் இந்த ‘பாபா'வை சந்தித்திருக்கிறேன். முதல் முறை நான் மறக்க முடியாத ஏப்ரல்-22-நடேசன் பார்க் பதிவர் சந்திப்பின்போது. இன்னொன்று பதிவர் டுபுக்குவுடன் மெரீனா பீச் காந்தி சிலை அருகே நடந்த சந்திப்பபின்போது.

அவராகத்தான் இருக்கும் என்று நினைத்து அவரையே நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரே என்னைப் பார்த்தார். ‘ஓ..' என்று ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தியபோதே தெரிந்துவிட்டது நம்மாளுதான் என்று..

“பாபா..” என்று சந்தேகத்துடன் நான் கேட்கவும் ஷிர்டி சாய்பாபா மாதிரி கைகளை உயர்த்தி “ஆமாம்..” என்றார். சந்தேகம் தீர்ந்தது அவர் ‘பாஸ்டன் பாலா' எனப்படும் ‘பாபா'தான் என்று..

மனிதர் சென்னைக்கு வந்த ஒரு வாரம் ஆச்சாம். “இன்னமும் சுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்..” என்றார். “இப்ப எதுவும் பதிவர் சந்திப்பு இல்லையா..?” என்றார். “நீங்க வரும்போதே சொல்லியிருந்தா வைச்சிருப்பாங்களே..?” என்றேன்.

‘சற்றுமுன்' நின்று போனது குறித்து எனது வருத்தங்களைத் தெரிவித்தேன். “பதிவர்கள் பலருமே தங்களது தளங்களில் அதுபோல் எழுத ஆரம்பித்ததால் மவுசு போய்விட்டது..” என்றார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அவர் ஆரம்பித்த புதிய தளமும், தொகுத்தளித்த செய்திகளும் என்னைப் போன்றவர்களுக்கு பெரிதும் பயனளித்ததை சொல்லி நன்றி சொன்னேன். கூடவே “அதிபர் தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்களே.. அந்தச் செலவெல்லாம் எப்படி ஆனது என்பது பற்றி விஷயங்களைத் திரட்டி கட்டுரை எழுதுங்களேன்..” என்றேன். “பார்க்கிறேன்..” என்று நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரியே உறுதிமொழி கொடுத்தார்.

ரொம்ப நாட்களாக என் மனதில் இருந்த சந்தேகத்தை அன்றைக்கு கேட்டுவிட்டேன்.. “நீங்கதான சர்வேஸன்..?” என்றேன்.. “ஐயையோ.. இல்லங்க.. அவர் வேற.. நான் வேற..” என்றார். “இல்ல.. நீங்கதான்னு நான் இவ்ளோ நாள் நினைச்சுக்கிட்டிருந்தேன்..” என்றேன். “சத்தியமா நான் இல்லே..”ன்னு துண்டு போட்டு தாண்டாத குறையா சொன்னதுனால, அவர் முகத்தைப் பார்க்கும்போதே பாவமா இருந்துச்சு.. சரி மனுஷன் உண்மையைத்தான் சொல்றாருன்னு நினைச்சுட்டு.. “ஓகே.. நம்புறேன்” என்றேன். நீங்களும் நம்பிருங்கப்பா, சர்வேசன்ங்கறது பாஸ்டன் பாலா இல்லை.. அதே மாதிரி பாஸ்டன் பாலாங்கறது சர்வேசன் இல்லைன்னு..

“அப்ப சர்வேசன் யாரா இருக்கும்..?” என்றேன்.. “பெனாத்தல் சுரேஷ், இராமநாதன், இலவசக்கொத்தனார்..” என்று வரிசையாகச் சொன்னார். அதில் பெனாத்தலார் அமெரிக்காவில் இல்லாததால் அவர் மீதான சந்தேகம் போயேபோய்விட்டது. மிச்சம் இருந்தது அந்த ரெண்டு பேருதான். “அவங்கள்ல யாரோ ஒருத்தராத்தான் இருக்கும்..” என்றேன்.. “இருக்கலாம்..” என்றார் பாபா.

புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பியபோது அவருடைய புத்தகங்களுக்கு டோட்டல் போட்டுக் கொண்டிருந்தார்கள். வெறும் நாலாயிரத்து சொச்ச ரூபாய்தான் இருந்தது. “என்ன பாபா.. இவ்ளோதான் இருக்கு.. நீங்களே இவ்ளோ குறைச்சு வாங்கினா எப்படி..?” என்றேன். நிமிடத்தில் ஐயாயிரத்து சொச்சத்திற்கு கொண்டு போனார்.. “இருக்குறவ அள்ளியும் முடிவா.. கொண்டையும் போடுவா நமக்கென்ன?” என்று அதற்கு மேல் பேசாமல் இருந்துவிட்டேன்.

மனிதருக்கு நேரம் நல்லாயில்ல போலிருக்கு.. ஜெயமோகன் புத்தகங்கள் அத்தனையையும் அள்ளியிருந்தார். பாவம்.. அமெரிக்காவில் மண்டை காய்ந்து மருத்துமனையில் படுத்தால் ட்ரீட்மெண்ட்டுக்கு காசு ஜாஸ்தியாகுமே என்று கேட்க நினைத்தேன். கடைசியில் “வேணாம்.. ஒரு தடவை அனுபவிக்கட்டுமே.. சோகத்தை நாமளே எழுதிட்டிருந்தா எப்படி? மத்தவங்க எழுதறதுக்கு வாய்ப்பு தர வேணாம்..?” அப்படீன்ற நல்ல மனப்பான்மைல அதுக்கு மேல மூச்சுவிடலை.

நான் கிளம்பும்போது போன பதிவுல சொன்ன மாதிரி இவரோட பேசிட்டே இருந்துதான் என் புத்தக விஷயத்துல கோட்டைவிட்டுட்டேன். “அஞ்சாம் தேதி கிளம்புறேன்..” என்றார். வெளியில் சென்று எங்காவது ஆற, அமர பேசலாமே என்றேன். “இல்ல.. வீட்ல எல்லாரும் வந்திருக்காங்க.. ஷாப்பிங் போயிருக்காங்க.. நான் அவங்களைக் கூட்டிட்டு கிளம்பணும்.. அடுத்த முறை பார்க்கலாமே..” என்றார். அதற்கு மேல் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் கை குலுக்கி விடைபெற்றுக் கிளம்பினேன்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் முருகன் அவ்ளோ சீக்கிரமா ஏன் என்னை அங்கேயிருந்து கழுத்தைப் பிடிச்சு வெளியேத்தினான்னு வீட்டுக்கு வரும்போதுதான் தெரிஞ்சது..

நடுரோட்டில் நடந்த அடுத்த பதிவர் சந்திப்பு

வீட்டுக்குப் போகும் வழியிலேயே ஒரு வினையை சந்திக்கப் போகிறேன் என்று தெரியாமல் போய்விட்டது. புத்தகங்கள் கிடைத்த சந்தோஷத்தில் வண்டியை பத்திக் கொண்டு போன வேகத்தில் மேற்கு மாம்பலத்தில் நட்ட நடுரோட்டில் நான் ரொம்ப நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த சூரியகுமாரனை சந்தித்தேவிட்டேன்.

பார்த்தவுடன் “ஸார்..” என்று கத்தி வண்டியை நிறுத்தினேன். நிமிடத்தில் அடையாளம் கண்டு கொண்டார். எங்கோ கடைக்குப் போய்க் கொண்டிருந்தாராம் இந்த சூரியகுமாரன். பதிவுலகில் மிகச் சமீபமாக நுழைந்து தமிழ் மொழியின் வார்த்தை ஜாலங்களில் தங்களது எழுத்து வித்தையைக் காட்டி அனைவரையும் கவர்ந்திருக்கும் இரட்டையர்களில் ஒருவரான எம்.பி.உதயசூரியன்தான் இந்த சூரியகுமாரன்.

ஆள் நிஜமாகவே சூரியகுமாரன் போலவேதான் இருப்பார். கிள்ளினால் ரத்தம் வரும் அளவுக்கு செக்கச் செவேல்ன்ற நிறம்.. ஓங்குத் தாங்கா இருந்தாலும் நமீதாவுக்கு ஓரடிதான் குறைச்சலா இருக்காரு. ஆனா வாயைத் தொறந்தா வைகையாத்து தண்ணி மாதிரி நக்கலு கரைபுரண்டோடும்.

மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்பப்போ நம்முடைய மூத்த வலைப்பதிவர் ‘தடாலடி' கெளதமை பார்க்க குங்குமம் ஆபீஸுக்கு போவேன். கெளதமோட கேபினுக்கு பக்கத்து கேபின்லதான் இந்த சூரியகுமாரன் உக்காந்திருப்பாரு.. அப்போ நானும் கெளதமும் வலைப்பதிவுகள் பத்தி பேசும்போதெல்லாம் சட்டென்று எந்திரிச்சு “யோவ்.. உருப்படியான பேச்சு ஏதாவது பேசுங்கய்யா.. எப்பப் பார்த்தாலும் வெட்டித்தனமா பிளாக்.. பிளாக்குன்னுட்டு..” என்று கமெண்ட்டு அடித்ததும் இந்த சூரியகுமாரன்தான்.

காலம்தான் எத்தனை வலிமை வாய்ந்தது பாருங்க.. இன்னிக்கு இதே சூரியகுமாரன்தான் வலையுலகத்துல லேட்டஸ்ட்டா நுழைஞ்சு கலக்கிட்டிருக்காரு.. இதையெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிரிச்சோம்.

படம் பண்ணப் போறாராம். அதுக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருப்பதாகச் சொன்னார். வாழ்த்துக்கள் சொன்னேன். “இதில் எப்போதோ இறங்கியிருக்க வேண்டும். கொஞ்சம் லேட்..” என்றேன்.. “எல்லாத்துக்கும் ஒரு நேரம், காலம் வரணுமில்ல..” என்றார்.

“நமீதா, மீனா போன் பண்ணினா மட்டும்தான் போன் எடுப்பீங்க போலிருக்கு.. நாங்கள்லாம் போன் அடிச்சா எடுக்கிறதில்ல. உங்களுக்கு டயல் பண்ணி பண்ணி என் கைவிரலே தேஞ்சு போச்சு..” என்றேன்.. “உங்க நம்பர் தெரியாது தலீவா.. நேரந்திருடிகளிடம் நான் மாட்டிக்கிறதில்ல. தெரியாத நம்பர்ன்னா யோசிச்சுத்தான் எடுப்பேன். நிறைய வேலை இருக்கு.. அதுனாலதான். இனிமே போன் பண்ணுங்க.. நிச்சயமா எடுக்குறேன்..” என்று சொல்லி எனது போன் நம்பரை வாங்கிக் கொண்டார்.

அவருடைய எழுத்து ஸ்டைல் வலையுலகில் அனைவரையும் கவர்ந்து இழுத்திருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன். ஆனால் இதில் எங்களை மாதிரி போதை ஏறி மப்படித்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று கொஞ்சம் பயத்தையும் கொடுத்துவிட்டு.. நடுரோடு என்பதால் பேச்சை அத்துடன் முடித்துவிட்டு கிளம்பினேன்.

இந்த நக்கல் இரட்டையர்களில் மூத்தவரான அந்தணனைத்தான் இன்னமும் பிடிக்க முடியவில்லை. அவரையும் பார்த்துட்டா இப்போதைக்கு நம்ம சினிமா தோஷம் தீர்ந்திரும்..

46 comments:

சென்ஷி said...

சந்தோசம்... மகிழ்ச்சி :-)))

சென்ஷி said...

இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))

ராஜ நடராஜன் said...

பதிவர்கள் பற்றியும் பதிவுலக கிசு கிசுவுக்கும் உங்க கிட்ட வரலாம் போல இருக்குதே!

மின்னுது மின்னல் said...

சென்ஷி said...

இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))
///


ரீப்பீட்டேய்ய்ய்ய் :)

நையாண்டி நைனா said...

அண்ணே நீங்க நின்னாலே பதிவர் பதிவர் மாநாடு தாம்னே, நடந்த ஊர்வலம்னே....

(எப்படியாவது அண்ணன் கட்சி ஆரம்பிச்ச உடனே ஒரு வல்லிய போஸ்ட்டு வாங்கிரனும்)

நையாண்டி நைனா said...

/*சென்ஷி said...
இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))*/

இது உண்மையா இல்லை பழகி போச்சா...

நையாண்டி நைனா said...

அட...கடை தொறந்து கிடக்கு

அண்ணன் கடையை தொறந்து போட்டுட்டு எங்கே போனாரு ????

ராஜா | KVR said...

//மனிதர் சென்னைக்கு வந்த ஒரு வாரம் ஆச்சாம். “இன்னமும் சுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்..” என்றார். “இப்ப எதுவும் பதிவர் சந்திப்பு இல்லையா..?” என்றார். “நீங்க வரும்போதே சொல்லியிருந்தா வைச்சிருப்பாங்களே..?” என்றேன்.//

பாபா வந்தால் மட்டும் இப்படி பதிவர் சந்திப்பு வைப்பாங்களா, அல்லது யார் வந்தாலும் வைப்பாங்களா?

ஆகஸ்ட் முதல் வாரத்திலே எதாவது பதிவர் சந்திப்பு இருந்தால் சொல்லுங்க தலைவா!!

தண்டோரா said...

பத்து கிலோ மீட்டர் ஒரு ஸ்லோ வாக்கிங் ரேஸ் இருக்கு.கலந்து கொள்கிறீர்களா?(நிச்சயம் முதல் பரிசு உங்களுக்குத்தான்)

வெங்கிராஜா said...

//பத்து கிலோ மீட்டர் ஒரு ஸ்லோ வாக்கிங் ரேஸ் இருக்கு.கலந்து கொள்கிறீர்களா?(நிச்சயம் முதல் பரிசு உங்களுக்குத்தான்)

//

பெரிய்ய்ய்ய்ய ரிப்பீட்டு!

வண்ணத்துபூச்சியார் said...

எந்த பதிவர் சந்திப்பிற்கும் வராதவர் என்று சொல்பவர்கள் யார்..??

அண்ணன் ஒரே நாளில் அதுவும் இரண்டு சந்திப்புகளை முடிச்சிட்டார். அதுவும் பதிவுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரை சந்திப்புன்னா சும்மாவா..?

வாழ்த்துகள். மகிழ்ச்சி.

தண்டோரா said...

லோடு ஆகறதுக்கு ரொம்ப நேரமாகுது...பாருங்க தலைவா..

jackiesekar said...

இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))

தப்பு தப்பு, எப்படி சென்ஷீ களைப்பில்லாமல் படிக்கும் அளவுக்கு பதிவு போடலாம்? மொதல்ல எங்க ஸ்டைலுக்கு மாறுங்க தலை

குசும்பன் said...

//பார்த்தவுடன் “ஸார்..” என்று கத்தி வண்டியை நிறுத்தினேன். நிமிடத்தில் அடையாளம் கண்டு கொண்டார். //

கண்டுக்கொண்டுமா வண்டியை அவர் நிறுத்தினார்! இருக்காதே!!!!:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சென்ஷி said...
சந்தோசம்... மகிழ்ச்சி :-)))]]]

நன்றி கண்ணா.. இப்பல்லாம் நீ அடிக்கடி இங்க வர்றதில்லை.. ஆனா மொக்கைல மட்டும் கொளுத்துற..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சென்ஷி said...
இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))]]]

அப்படியா..?

அப்ப இனிமே இதே மாதிரி சின்ன சின்னதா பதிவு போடச் சொல்ற..

சரி.. நீ சொன்னதுனால டிரை பண்றேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...
பதிவர்கள் பற்றியும் பதிவுலக கிசு கிசுவுக்கும் உங்ககிட்ட வரலாம் போல இருக்குதே!]]]

வாங்க.. நடராஜன் ஸார்..

கிசுகிசு படிக்கத்தான் நமக்கு எம்புட்டு ஆசை..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மின்னுது மின்னல் said...

சென்ஷி said...

இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))///

ரீப்பீட்டேய்ய்ய்ய் :)]]]

என்ன ரிப்பீட்டேய்..?

ஏன் இத்தனை நாளா இந்தப் பக்கம் வரலே..?

காரணத்தை சொல்லும்மா கண்ணு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...

அண்ணே நீங்க நின்னாலே பதிவர் பதிவர் மாநாடுதாம்னே, நடந்த ஊர்வலம்னே....

(எப்படியாவது அண்ணன் கட்சி ஆரம்பிச்ச உடனே ஒரு வல்லிய போஸ்ட்டு வாங்கிரனும்)]]]

அப்படீங்குறீங்க..

சரிங்க நைனா..

கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் கொ.ப.செ. ஓகேவா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...

/*சென்ஷி said...
இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))*/

இது உண்மையா இல்லை பழகி போச்சா...]]]

கொஞ்சம் உண்மைதான் நைனா..

நேரமில்லாததா சின்ன சின்னதா பதிவு போட்டு ஏதோ கடையை நடத்திக்கிட்டிருக்கேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...

அட...கடை தொறந்து கிடக்கு

அண்ணன் கடையை தொறந்து போட்டுட்டு எங்கே போனாரு ????]]]

எங்கேயும் போகல.. இங்கனதான் சுத்திக்கிட்டிருந்தேன்..!!1

வேலை ஜாஸ்திப்பா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜா | KVR said...

//மனிதர் சென்னைக்கு வந்த ஒரு வாரம் ஆச்சாம். “இன்னமும் சுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்..” என்றார். “இப்ப எதுவும் பதிவர் சந்திப்பு இல்லையா..?” என்றார். “நீங்க வரும்போதே சொல்லியிருந்தா வைச்சிருப்பாங்களே..?” என்றேன்.//

பாபா வந்தால் மட்டும் இப்படி பதிவர் சந்திப்பு வைப்பாங்களா, அல்லது யார் வந்தாலும் வைப்பாங்களா?
ஆகஸ்ட் முதல் வாரத்திலே எதாவது பதிவர் சந்திப்பு இருந்தால் சொல்லுங்க தலைவா!!]]]

வாங்க தலைவா.. முரளிகண்ணன்கிட்ட சொல்றேன்.. ஏற்பாடு பண்ணிருவாரு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தண்டோரா said...
பத்து கிலோ மீட்டர் ஒரு ஸ்லோ வாக்கிங் ரேஸ் இருக்கு. கலந்து கொள்கிறீர்களா?(நிச்சயம் முதல் பரிசு உங்களுக்குத்தான்)]]]

ம்.. என்ன செய்யறது..? என் நேரம்.. இப்படியெல்லாம் நக்கல தாங்க வேண்டியிருக்கு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வெங்கிராஜா said...

//பத்து கிலோ மீட்டர் ஒரு ஸ்லோ வாக்கிங் ரேஸ் இருக்கு.கலந்து கொள்கிறீர்களா?(நிச்சயம் முதல் பரிசு உங்களுக்குத்தான்)//

பெரிய்ய்ய்ய்ய ரிப்பீட்டு!]]]

வெங்கி.. இது ஓவர் நக்கலு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வண்ணத்துபூச்சியார் said...

எந்த பதிவர் சந்திப்பிற்கும் வராதவர் என்று சொல்பவர்கள் யார்..??

அண்ணன் ஒரே நாளில் அதுவும் இரண்டு சந்திப்புகளை முடிச்சிட்டார். அதுவும் பதிவுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரை சந்திப்புன்னா சும்மாவா..?

வாழ்த்துகள். மகிழ்ச்சி.]]]

நன்றிங்கோ பூச்சியாரே..!

ஆபத்துக் காலத்தில் கை கொடுப்பவனே நண்பன்..

நீங்கள் நண்பர்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தண்டோரா said...

லோடு ஆகறதுக்கு ரொம்ப நேரமாகுது... பாருங்க தலைவா..]]]

ஏதோ பிரச்சினை..? என்னன்னு தெரியலே..

cicak.mocmedia.com அப்படீன்னு வந்து அப்படியே நிக்குது..

இது பத்தி தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்கப்பா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[jackiesekar said...

இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :))

தப்பு தப்பு, எப்படி சென்ஷீ களைப்பில்லாமல் படிக்கும் அளவுக்கு பதிவு போடலாம்? மொதல்ல எங்க ஸ்டைலுக்கு மாறுங்க தலை]]]

மாத்திருவோம்ண்ணேன்..

அது என்ன எங்க ஸ்டைலு.. என் ஸ்டைலு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குசும்பன் said...

//பார்த்தவுடன் “ஸார்..” என்று கத்தி வண்டியை நிறுத்தினேன். நிமிடத்தில் அடையாளம் கண்டு கொண்டார். //

கண்டு் கொண்டுமா வண்டியை அவர் நிறுத்தினார்! இருக்காதே!!!!:)]]]

அவர் நடந்து போனார் ராசா.. நான்தான் வண்டில போனேன்..

ஒரு சைக்கிள் கேப் கிடைச்சா போதுமே.. எடுத்து விடுவீங்களே..!

தீப்பெட்டி said...

ஆமா சார்..
உரையாடல் சமூக கலை அமைப்புக்கு
உங்க சிறுகதை என்னாச்சு...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தீப்பெட்டி said...
ஆமா சார்..
உரையாடல் சமூக கலை அமைப்புக்கு
உங்க சிறுகதை என்னாச்சு...]]]

அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று குரல் உயர்த்தி பைத்தியக்காரன் அதே அதிகாரத்தின் தொனியில் இத்தனை வார்த்தைகள் இருக்க வேண்டும். இதற்கு மேல் தாண்டக்கூடாது என்று ஒரு படைப்பாளிக்கு உத்தரவிட்டிருப்பதைக் கண்டித்து அந்த சிறுகதைப் போட்டியில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை..

ananth said...

ஏதோ ஜென்ம சாபல்யம் என்பது போல் சொல்லி முடித்திருக்கிறீகள். அதுவும் நிறைவேரினால் சரி.

//cicak.mocmedia.com அப்படீன்னு வந்து அப்படியே நிக்குது..

இது பத்தி தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்கப்பா..!//

உங்கள் பதிவை அந்த சர்வரோடு இணைத்திருக்கிறீகள். இதை செய்து கொடுத்தவரிடமே கேட்டிருக்கலாமே. மேல் விவரம் வேண்டுமானால் http://www.sitedossier.com/site/cicak.socmedia.com.my இங்கே சென்று பாருங்கள்.

அத்திரி said...

அண்ணே நல்லா இருக்கீங்களா/

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...
ஏதோ ஜென்ம சாபல்யம் என்பது போல் சொல்லி முடித்திருக்கிறீகள். அதுவும் நிறைவேரினால் சரி.]]]

நட்பு வளர வேண்டும் ஆனந்த்.. இப்படித்தானே தொடங்க வேண்டும். அதனால்தான்..!

[//cicak.mocmedia.com அப்படீன்னு வந்து அப்படியே நிக்குது.. இது பத்தி தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்கப்பா..!//

உங்கள் பதிவை அந்த சர்வரோடு இணைத்திருக்கிறீகள். இதை செய்து கொடுத்தவரிடமே கேட்டிருக்கலாமே. மேல் விவரம் வேண்டுமானால் http://www.sitedossier.com/site/cicak.socmedia.com.my இங்கே சென்று பாருங்கள்.]]]

நான் இணைக்கவில்லை ஆனந்த். நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பார்த்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்களேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அத்திரி said...
அண்ணே நல்லா இருக்கீங்களா/]]]

ரொம்ப சவுக்கியம் தம்பி..!

நீங்க எப்படி இருக்கீக..?

உடலும், மனசும் நலம்தானா..?

ananth said...

//நான் இணைக்கவில்லை ஆனந்த். நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பார்த்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்களேன்..!//

Blog உலகத்திற்கு நான் புதியவன். (கணினி உலகிற்கு பழையவன்.) ஏதோ எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன். இதை நீங்கள் செய்யவில்லையென்றால் உங்கள் blog server தான் செய்திருக்க வேண்டும். உங்கள் மொத்த பதிவும் சேர்த்தால் பெரியதாக/அதிக space எடுப்பதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் main server தன்னிடம் இடம் போதாமல் தன் குட்டி server ஒன்றில் தங்கள் பதிவைச் சேமித்து வைக்கும். அது main server உடன் இணைக்கப்ப்பட்டிக்கும். அதுவும் ஒரு சேர பலர் (200-500 பேர்) பயன்படுத்துவதாக இருந்தால் இப்படிதான் தாமதமாகும். Free என்றால் இப்படிதான் தாமதத்தை விலை கொடுக்காமல் வாங்க வேண்டியிருக்கம். பணம் கொடுப்பதாக இருந்தால் click செய்தவுடனே தாங்கள் பதிவு செய்த பக்கம் திறந்து விடும். இதற்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. பொறுத்திருந்து மெதுவாக நேரம் எடுத்து பதிவைப் பார்ப்பதைத் தவிர.

Boston Bala said...

அடுத்த முறை சரியாகத் திட்டமிட்டு ஆற அமர டாஸ்மாக்கலாம் :)

எனக்கும் திருப்தியே இல்லை ;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...

//நான் இணைக்கவில்லை ஆனந்த். நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பார்த்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்களேன்..!//

Blog உலகத்திற்கு நான் புதியவன். (கணினி உலகிற்கு பழையவன்.) ஏதோ எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன். இதை நீங்கள் செய்யவில்லையென்றால் உங்கள் blog serverதான் செய்திருக்க வேண்டும். உங்கள் மொத்த பதிவும் சேர்த்தால் பெரியதாக/அதிக space எடுப்பதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் main server தன்னிடம் இடம் போதாமல் தன் குட்டி server ஒன்றில் தங்கள் பதிவைச் சேமித்து வைக்கும். அது main server உடன் இணைக்கப்ப்பட்டிக்கும். அதுவும் ஒரு சேர பலர் (200-500 பேர்) பயன்படுத்துவதாக இருந்தால் இப்படிதான் தாமதமாகும். Free என்றால் இப்படிதான் தாமதத்தை விலை கொடுக்காமல் வாங்க வேண்டியிருக்கம். பணம் கொடுப்பதாக இருந்தால் click செய்தவுடனே தாங்கள் பதிவு செய்த பக்கம் திறந்து விடும். இதற்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. பொறுத்திருந்து மெதுவாக நேரம் எடுத்து பதிவைப் பார்ப்பதைத் தவிர.]]]

அப்படியா..? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கூகிள் நிறுவனம்தான் இதனைச் செய்ய வேண்டும்.. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவுதான். அவர்களுக்கு இந்த சர்வர் பிரச்சினை இருக்காதே..

வேறு ஏதோ ஒரு பிரச்சினை..! சரி பார்ப்போம்..

எத்தனையோ பார்த்தாச்சு.. இப்ப இதையும் பார்க்க மாட்டோமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Boston Bala said...
அடுத்த முறை சரியாகத் திட்டமிட்டு ஆற அமர டாஸ்மாக்கலாம் :)எனக்கும் திருப்தியே இல்லை ;)]]]

ஆமா பாபா.. எனக்குச் சுத்தமா திருப்தியே இல்லை..

ஏதாவது சூட்டைக் கிளப்புற மாதிரி ஒரு நியூஸை உங்க வாய்ல இருந்து வரவழைச்சிரலாம்னு பார்த்தேன்.. முடியலையே..!

மங்களூர் சிவா said...

சந்தோசம்... மகிழ்ச்சி :-)))

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :)
/

நானும் இதத்தான் இதுக்கு முன்னாடி பதிவுல சொன்னேன்
:))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...
சந்தோசம்... மகிழ்ச்சி :-)))]]]

எனக்கும் அதேதான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மங்களூர் சிவா said...

/சென்ஷி said...
இப்பல்லாம் உங்க பதிவை சீக்கிரம் படிச்சுட முடியுது. அதனால களைப்பில்லாம உடனே கமெண்டும் போட முடியுது.. :)/

நானும் இதத்தான் இதுக்கு முன்னாடி பதிவுல சொன்னேன் :))))))))))]]]

அப்படியா..?

இதுக்கெல்லாம் நான் பயந்துற மாட்டேன்..!

எனது பேவரைட் எழுத்து ஸ்டைல் வழமை போல தொடருமாக்கும்..!

எம்.பி.உதயசூரியன் said...

என்ன ஒரு ‘லைவ்’வான எழுத்து நடை! ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ங்கற மாதிரி உங்க அதீத அன்பால..நிறையவே பாராட்டிட்டீங்க. லேட்டஸ்ட்டா வரவேண்டியவன்.. லேட்டா வந்துட்டேன். ஒரு நதி போல ஓடுது உங்க எழுத்து. வெல்டன் நண்பா!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///எம்.பி.உதயசூரியன் said...
என்ன ஒரு ‘லைவ்’வான எழுத்து நடை! ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு’ங்கற மாதிரி உங்க அதீத அன்பால.. நிறையவே பாராட்டிட்டீங்க. லேட்டஸ்ட்டா வரவேண்டியவன்.. லேட்டா வந்துட்டேன். ஒரு நதி போல ஓடுது உங்க எழுத்து. வெல்டன் நண்பா!///

ஐயோ உங்க பாராட்டு ரொம்பக் கூச்சப்படுத்தது தோழரே..!

என்ன இருந்தாலும் உங்களை மாதிரி வருமா..?

வலையுலக எழுத்துக் கலையில் ஒரு புதிய புரட்சியை நீங்களும் அந்தணன் அண்ணனும்தான் செய்து வருகிறீர்கள்.

வாழ்த்துக்கள்..!

ஆமா.. அதென்ன நடுராத்திரி 2.45 மணிக்கு பின்னூட்டம்..?

உழைப்பு..?!!!!

வெட்டிப்பயல் said...

அண்ணே,
உடம்பு கிடம்பு சரியில்லையா? வர வர பதிவு சைஸ் எல்லாம் சின்னதா இருக்கு ;)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வெட்டிப்பயல் said...
அண்ணே, உடம்பு கிடம்பு சரியில்லையா? வர வர பதிவு சைஸ் எல்லாம் சின்னதா இருக்கு ;)///

தம்பி..

இது போன மாசம் எட்டாம் தேதி போட்ட பதிவு..

அதுக்கு இப்ப வந்து ஆஜர் கொடுக்குற..?

ம்.. நடந்ததே சின்னச் சின்ன விஷயங்கள்தான்.. அதுனால சின்னப் பதிவுதான்..!