பசங்க - ஒரு சிறிய விமர்சனம்..!

25-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இந்தாண்டு இதுவரையில் வெளி வந்த திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த திரைப்படம் இதுதான்.

குடும்பத்துடன் அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

காணத் தவறாதீர்கள்..!

65 comments:

யட்சன்... said...

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்...

நீங்களா இது?

இல்லை உங்க ப்ளாக்கை யாரும் ஹேக் பண்ணீட்டாங்களா....?

ஒன்னு மட்டும் சொல்றேன்...கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு.....ஹி..ஹி..

ஷண்முகப்ரியன் said...

அற்புதமான, அழகான விமர்சனம்.உங்கள் விமர்சனங்களிலேயே தலை சிறந்த விமர்சனம் இதுவே,சரவணன்.நன்றி.

குசும்பன் said...

அனைவருக்கும் ஒரு சந்தோசமான செய்தி உ.த அவர்களின் பிளாக் ஹேக் செய்யப்பட்டுவிட்டது!

நாளை பொது விடுமுறை!

தீப்பெட்டி said...

என்ன பாஸ் இது இப்படி பண்ணிட்டீங்க...

எதிபார்க்கவே இல்ல..

//கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு..//

ரிப்பீட்டேய்ய்ய்ய்...

சரவணகுமரன் said...

ரொம்ப வித்தியாசமா இருக்குதே!

♫சோம்பேறி♫ said...

/* யட்சன்... said...
ஒன்னு மட்டும் சொல்றேன்...கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு.....ஹி..ஹி..*/

நன்றி யட்சன். குயிலு நாளையிலிருந்து கூவும்.

/*ஷண்முகப்ரியன் said...
உங்கள் விமர்சனங்களிலேயே தலை சிறந்த விமர்சனம் */

நன்றி ஷண்முகப்ரியன்.. அப்போ இதுக்கு முந்தி எழுதினது வால் சிறந்த விமர்சனம்னு சொல்ல வரீங்களா?

/*குசும்பன் said...
உ.த அவர்களின் பிளாக் ஹேக் செய்யப்பட்டுவிட்டது!*/

நன்றி குசும்பன். உத பிளாகை நான் ஹேக் செய்த விஷயத்தை சரியாக கண்டுபிடித்ததற்காக உங்களுக்கு சிரிப்பு போலீஸ் சிங்கார வேலன் என்று பட்டமளிக்கிறேன்.

/*தீப்பெட்டி said...
//கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு..//
ரிப்பீட்டேய்ய்ய்ய்...*/

நன்றி தீப்பெட்டி. (உள்ள குச்சி இருக்கா?) நான் இப்போ அப்பீட்டேய்ய்ய்ய்ய்...

tamilraja said...

http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post.html//
/
/
/இந்த பசங்க பட விமர்சனத்தை ஒண்ணாம் தேதியே எழுதினேன் ஆனா ஒரு ஈ ,காக்கா கூட எட்டி பாக்கல !
முக்கியமா அந்த குட்டி பையன சூப்பர் ஸ்டார் என்று எழுதினேன் .நம்ம மாதிரியே ஒரு பெரிய வாரப்பத்திரிக்கையும் அவனை அப்படியே விளித்திருந்தது சந்தோசம்.///
// உங்க விமர்சனம் பாராட்டுக்குரியது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

!!!! :)

jackiesekar said...

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்...

நீங்களா இது?

இல்லை உங்க ப்ளாக்கை யாரும் ஹேக் பண்ணீட்டாங்களா....?

ஒன்னு மட்டும் சொல்றேன்...கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு.....ஹி..ஹி.

வழி மொழிகிறேன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///யட்சன்... said...

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்...

நீங்களா இது?

இல்லை உங்க ப்ளாக்கை யாரும் ஹேக் பண்ணீட்டாங்களா....?

ஒன்னு மட்டும் சொல்றேன்...கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு.....ஹி..ஹி..///

யட்சன் ஸார்..

குயிலுக்கு இப்ப பறக்குறதுக்கே நேரமில்ல..

அதுனாலதான் இப்படி..!?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஷண்முகப்ரியன் said...
அற்புதமான, அழகான விமர்சனம். உங்கள் விமர்சனங்களிலேயே தலை சிறந்த விமர்சனம் இதுவே, சரவணன். நன்றி.]]]

ஆஹா.. அருமையான பின்னூட்டம்.. மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டும்வகையில், பதில் பின்னூட்டம் போடும்வகையில் அமைந்திருக்கும் இந்தப் பின்னூட்டத்தை இட்டதற்காக உங்களுக்கு என் அப்பன் முருகன் நல்வழி காட்டட்டும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குசும்பன் said...

அனைவருக்கும் ஒரு சந்தோசமான செய்தி உ.த அவர்களின் பிளாக் ஹேக் செய்யப்பட்டுவிட்டது! நாளை பொது விடுமுறை!]]]

குசும்பா..

தமிழனின் பிறவிக் குணத்தைப் போலவே நாளை பொது விடுமுறை என்று சந்தோஷத்தைக் கொண்டாடவும் ஒரு நாளைக் குறித்துவிட்டாயே..

நீதான் உண்மைத்தமிழன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தீப்பெட்டி said...

என்ன பாஸ் இது இப்படி பண்ணிட்டீங்க... எதிபார்க்கவே இல்ல..

//கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு..//

ரிப்பீட்டேய்ய்ய்ய்...]]]

தீப்பெட்டி..

நேரமில்லையே சாமி..

ஆனாலும் படத்தோட கதை என் மூளைக்குள்ள இங்கிட்டும், அங்கிட்டுமா ஓடிக்கிட்டேதான் இருக்கு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சரவணகுமரன் said...
ரொம்ப வித்தியாசமா இருக்குதே!]]]

தேங்க்யூ வெரிமச்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சோம்பேறி..

உனது உள்குத்து, நடுகுத்து, வெளிகுத்து எல்லாவற்றையும் ரசித்தோம்..

நிஜமாகவே சோம்பேறித்தனம்தான்.. தூக்கத்தைத் துறந்துவிட்டு டைப்பிங் செய்ய கொஞ்சூண்டு சோம்பேறித்தனம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[tamilraja said...
http://tamilcinema7.blogspot.com/2009/05/blog-post.html//
இந்த பசங்க பட விமர்சனத்தை ஒண்ணாம் தேதியே எழுதினேன் ஆனா ஒரு ஈ ,காக்கா கூட எட்டி பாக்கல! முக்கியமா அந்த குட்டி பையன சூப்பர் ஸ்டார் என்று எழுதினேன். நம்ம மாதிரியே ஒரு பெரிய வாரப்பத்திரிக்கையும் அவனை அப்படியே விளித்திருந்தது சந்தோசம்.///
//உங்க விமர்சனம் பாராட்டுக்குரியது.]]]

ஹி..ஹி..ஹி..

நமஸ்தேஜி..

திரும்பவும் கண்டிப்பா வரேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[முத்துலெட்சுமி/muthuletchumi said...
!!!! :)]]]

எக்கோவ்..

இப்படின்னாத்தான் வருவீங்களோ..?!!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[jackiesekar said...

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்...

நீங்களா இது?

இல்லை உங்க ப்ளாக்கை யாரும் ஹேக் பண்ணீட்டாங்களா....?

ஒன்னு மட்டும் சொல்றேன்... கூவுனாத்தான் அதுக்கு பேரு குயிலு..... ஹி.. ஹி.

வழி மொழிகிறேன்]]]

அட போங்கப்பா..

இனிமே யாராவது எழுதிக் கொடுங்க.. அதை என் பேர்ல போட்டுக்குறேன்.. அதுக்குத்தான் நான் ரெடி..!

jackiesekar said...

தலைவருக்கு டைப்படிக்கற வேலை தலைக்கு மேல இருக்கு போல, அதான் படத்தை பார்த்ததும் சின்ன பதிவா போட்டுட்டாரு----

Cable Sankar said...

அருமையான, அற்புதமான, மிக.. மிக.. அற்புதமான இவ்வாண்டின் சிற்ந்த விமர்சனம் அண்ணே..

வண்ணத்துபூச்சியார் said...

அதிரடி விமர்சனம்.

சிக்கன விமர்சனம்.

சிறந்த விமர்சனம்.

வாழ்த்துகள்.

சென்ஷி said...

:)

Bhuvanesh said...

/நீங்களா இது?

இல்லை உங்க ப்ளாக்கை யாரும் ஹேக் பண்ணீட்டாங்களா....?//

பதிவ படிச்ச உடனே நான் கேட்க நினைச்சதை இவரு கேட்டுட்டாரு..

நையாண்டி நைனா said...

செந்தூர் வாழ் செந்திலாண்டவா, சுவாமி மலை சுவாமிநாதா, பழமுதிர்சோலை ஆண்டவா, வள்ளி மணாளா.... எங்கள் அண்ணன் உண்மைத்தமிழனின் நகசுத்தி சீக்கிரம் குணம் அடையனும்.

புதுகைத் தென்றல் said...

எங்க ஊரு பசங்க, எங்க ஊரு டைரக்டர் கலக்கியிருக்காங்க. சந்தோஷமா இருக்கு

ananth said...

முழு விமர்சனம் எழுத அண்ணனுக்கு அவகாசம் இல்லை போலும். நானும் அவகாசம் கிடைத்து படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன். அண்ணன் பரவாயில்லை. ஒண்டிக் கட்டை. நினைத்தவுடன் போகலாம். எனக்கு காந்தியடிகள் மொழியில் சொல்வதானால் என் மிகச் சிறந்த பாதி வந்தால்தான் (better half) போகப் பிடிக்கும்.

நொந்தகுமாரன் said...

விமர்சனமா! உண்மைத்தமிழன் கனவில் வந்து பயமுறுத்துவார்!

ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி, விமர்ச்சனத்தை படிக்கலாம் என நினைத்து வந்தால்...அவரா இப்படி? இந்த பதிவில்... பின்குறிப்பில்... என் சுய நினைவோடு தான் இந்த விமர்சனத்தை எழுதினேன் என உண்மைத்தமிழன் கையெழுத்திடவேண்டும். அப்பொழுது தான் நான் நம்புவேன்.

நொந்தகுமாரன் said...

இந்த வரலாற்று சிறப்பு சிறிய விமர்சனத்தை பதிவுலகம் அறிய வேண்டும் என்ற நோக்கில்... நான் இரண்டு ஓட்டு போட்டுவிட்டேன். மெய்யலுமே!

தருமி said...

//குயிலுக்கு இப்ப பறக்குறதுக்கே நேரமில்ல..

அதுனாலதான் இப்படி..!?//

ஓ! அதுனாலதானா ... ?!

புருனோ Bruno said...

அண்ணா

யார் இது

நீங்களா !!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[jackiesekar said...
தலைவருக்கு டைப்படிக்கற வேலை தலைக்கு மேல இருக்கு போல, அதான் படத்தை பார்த்ததும் சின்ன பதிவா போட்டுட்டாரு----]]]

அதென்ன தலைவரு..?

டேய் சரவணான்னு கூப்பிட்டால்கூட சந்தோஷம்தான்..

எங்கெங்கு காணினும் என் அப்பன் முருகன் பெயர் உச்சரிக்கப்படும் பாக்கியத்தைப் பெறுவதே பேரின்பம் ஜாக்கி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Cable Sankar said...
அருமையான, அற்புதமான, மிக.. மிக.. அற்புதமான இவ்வாண்டின் சிற்ந்த விமர்சனம் அண்ணே..]]]

நன்றி.. நன்றி..

கேபிளு ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. பி.பி. எகிறும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வண்ணத்துபூச்சியார் said...

அதிரடி விமர்சனம்.

சிக்கன விமர்சனம்.

சிறந்த விமர்சனம்.

வாழ்த்துகள்.]]]

நன்றி பூச்சியாரே..

ஏதோ என்னால முடிஞ்சது..!!!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சென்ஷி said...

:)]]]

தம்பி.. நன்றியோ நன்றி..

இப்படிச் சின்னப் பதிவா போட்டாத்தான் உங்களையெல்லாம் பார்க்க முடியும் போலிருக்கு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Bhuvanesh said...

/நீங்களா இது?

இல்லை உங்க ப்ளாக்கை யாரும் ஹேக் பண்ணீட்டாங்களா....?//

பதிவ படிச்ச உடனே நான் கேட்க நினைச்சதை இவரு கேட்டுட்டாரு..]]]

நல்லா நினைக்குறீங்கப்பா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நையாண்டி நைனா said...
செந்தூர் வாழ் செந்திலாண்டவா, சுவாமி மலை சுவாமிநாதா, பழமுதிர்சோலை ஆண்டவா, வள்ளி மணாளா.... எங்கள் அண்ணன் உண்மைத்தமிழனின் நகசுத்தி சீக்கிரம் குணம் அடையனும்.]]]

நகச்சுத்தியா..

ஐயா நைனா.. எனக்கு ஒண்ணுமில்ல. நல்லாத்தான் இருக்கேன். ஆனா நிறைய டைப்படிக்கத்தான் நேரமில்ல. அதுதான் சிக்கனமா.. சூப்பரா இருக்குல்ல..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புதுகைத் தென்றல் said...

எங்க ஊரு பசங்க, எங்க ஊரு டைரக்டர் கலக்கியிருக்காங்க. சந்தோஷமா இருக்கு]]]

புதுகைத்தென்றல்..

உங்க ஊரும், ஊர்ச் சனங்களும் அற்புதம் போங்க..

உங்க ஊரும் விராச்சிலையா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...
முழு விமர்சனம் எழுத அண்ணனுக்கு அவகாசம் இல்லை போலும். நானும் அவகாசம் கிடைத்து படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன். அண்ணன் பரவாயில்லை. ஒண்டிக் கட்டை. நினைத்தவுடன் போகலாம். எனக்கு காந்தியடிகள் மொழியில் சொல்வதானால் என் மிகச் சிறந்த பாதி வந்தால்தான் (better half) போகப் பிடிக்கும்.]]]

ஆஹா.. நல்ல பழக்கம்.. இதையே கடைசிவரைக்கும் பின்பற்றுங்கள்..

வாழ்வே சொர்க்கமாக இருக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நொந்தகுமாரன் said...

விமர்சனமா! உண்மைத்தமிழன் கனவில் வந்து பயமுறுத்துவார்!

ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி, விமர்ச்சனத்தை படிக்கலாம் என நினைத்து வந்தால்... அவரா இப்படி? இந்த பதிவில்... பின்குறிப்பில்... என் சுய நினைவோடுதான் இந்த விமர்சனத்தை எழுதினேன் என உண்மைத்தமிழன் கையெழுத்திடவேண்டும். அப்பொழுதுதான் நான் நம்புவேன்.]]]

இந்தப் பதிவை நான் சுயநினைவோடு இருந்தபோதுதான் எழுதினேன் என்பதனை ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்..

இப்படிக்கு

சரவணன் என்கிற உண்மைத்தமிழன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நொந்தகுமாரன் said...
இந்த வரலாற்று சிறப்பு சிறிய விமர்சனத்தை பதிவுலகம் அறிய வேண்டும் என்ற நோக்கில்... நான் இரண்டு ஓட்டு போட்டுவிட்டேன். மெய்யலுமே!]]]

காலில் விழுந்து வணங்குகிறேன் நொந்தகுமாரா..

வாழிய நீர் பல்லாண்டு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தருமி said...

//குயிலுக்கு இப்ப பறக்குறதுக்கே நேரமில்ல.. அதுனாலதான் இப்படி..!?//

ஓ! அதுனாலதானா ... ?!]]]

ஆமா.. அதுனாலதான்.. நம்புங்க பேராசிரியரே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புருனோ Bruno said...

அண்ணா

யார் இது

நீங்களா !!]]]

ஆம்.. நானேதான்..!

நல்லாயிருக்குல்ல டாக்டர்..

மனசுக்கும், உடம்புக்கும் ஒண்ணுமில்ல டாக்டர்.. நம்பலாம்..

வேலைதான் ரொம்ப டைட்டா இருக்கு.. அதான்..

தருமி said...

//தருமி said...

//குயிலுக்கு இப்ப பறக்குறதுக்கே நேரமில்ல.. அதுனாலதான் இப்படி..!?//

ஓ! அதுனாலதானா ... ?!]]]

ஆமா.. அதுனாலதான்.. நம்புங்க பேராசிரியரே..!//

எப்பவுமே நீங்க இப்ப மாதிரியே வேலையோடு இருக்கணும்னு உங்க சாமி குமரன் உங்களுக்கு உதவட்டுமுங்க ...

தமிழர்ஸ் - Tamilers said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

ஒரு காசு said...

என்ன இது, விமர்சனமா இல்லை விளம்பரமா ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தருமி said...

//தருமி said...
/குயிலுக்கு இப்ப பறக்குறதுக்கே நேரமில்ல.. அதுனாலதான் இப்படி..!?/
ஓ! அதுனாலதானா ... ?!]]]
ஆமா.. அதுனாலதான்.. நம்புங்க பேராசிரியரே..!//

எப்பவுமே நீங்க இப்ப மாதிரியே வேலையோடு இருக்கணும்னு உங்க சாமி குமரன் உங்களுக்கு உதவட்டுமுங்க ...]]]

எல்லாம் உங்க ஆசீர்வாதம் முருகா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தமிழர்ஸ் - Tamilers said...
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"... www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக் கொள்ளுங்கள்]]]

அழைப்புக்கு நன்றி நண்பர்களே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஒரு காசு said...
என்ன இது, விமர்சனமா இல்லை விளம்பரமா?]]]

ரெண்டும்தான்..

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

புதுகைத் தென்றல் said...

எங்க ஊரு புதுகை என அன்பாக அழைக்கப்படும் புதுக்கோட்டை.

விராச்சிலை புதுக்கோட்டையில்தாங்க இருக்கு.

நித்யகுமாரன் said...

முருகா என்ன நடந்தது?

நித்யன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்]]]

ஓட்டுப் பட்டையை எப்படி நிறுவுவது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புதுகைத் தென்றல் said...

எங்க ஊரு புதுகை என அன்பாக அழைக்கப்படும் புதுக்கோட்டை.

விராச்சிலை புதுக்கோட்டையில்தாங்க இருக்கு.]]]

அப்படியா..? ரொம்ப சந்தோஷம்.

அவங்கவங்க ஊரையும், ஊர்ச் சனத்தையும் எங்கயோ இருந்துக்கிட்டு திரைல பார்க்கும்போது மனசும், கண்ணும் கலங்கத்தான் செய்யும்..

அதாங்க நாம..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நித்யகுமாரன் said...

முருகா என்ன நடந்தது?

நித்யன்]]]

எது நடக்க வேண்டுமோ.. அதுவே நடந்துள்ளது..!

லோகு said...

நீங்க சின்ன பதிவா போட்டதற்கு இவங்க எல்லாம் வருத்த படராங்களா இல்ல சந்தோஷ படராங்களா??

வெட்டிப்பயல் said...

//
ஆனாலும் படத்தோட கதை என் மூளைக்குள்ள இங்கிட்டும், அங்கிட்டுமா ஓடிக்கிட்டேதான் இருக்கு..//

அதை அப்படியே கட்டி போடுங்க தல...

இந்த விமர்சனமே சூப்பர் தான் :)

sankarfilms said...

REALLY GOOD MOVIE.
HATTS OFF PANDIRAJ.

வால்பையன் said...

அண்ணே என்ன ஆச்சு?
உடம்பு கிடம்பு சரியில்லையா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[லோகு said...
நீங்க சின்ன பதிவா போட்டதற்கு இவங்க எல்லாம் வருத்த படராங்களா இல்ல சந்தோஷ படராங்களா??]]]

அதான லோகு ஸார்..

எனக்குக் கூட வராத சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கு பாருங்க..

நீங்க சொன்னப்புறம் நானும் ஒரு தடவை அல்லா கமெண்ட்டையும் படிச்சுப் பார்த்தேன்.

அல்லாமே வஞ்சப்புகழ்ச்சி மாதிரிதான் தெரியுது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வெட்டிப்பயல் said...
//ஆனாலும் படத்தோட கதை என் மூளைக்குள்ள இங்கிட்டும், அங்கிட்டுமா ஓடிக்கிட்டேதான் இருக்கு..//

அதை அப்படியே கட்டி போடுங்க தல...
இந்த விமர்சனமே சூப்பர்தான்:)]]]

அப்படியா..?

இனிமே எல்லா சினிமா விமர்சனத்தையும் இதே மாதிரி எழுதிரலாமான்னு பார்க்குறேன்..!

உங்களுடைய பாராட்டு அதை ஊக்கு விக்கிறது வெட்டி ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[sankarfilms said...

REALLY GOOD MOVIE.
HATTS OFF PANDIRAJ.]]]

நிஜம்தான் ஸார்..

அந்த இயக்குநருக்குள் இப்படி ஒரு பூகம்பம் இருக்குன்னு யாருக்குத் தெரியும்..? இன்னொரு பூகம்பத்துக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கு.. பார்த்தீங்களா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வால்பையன் said...
அண்ணே என்ன ஆச்சு?
உடம்பு கிடம்பு சரியில்லையா?]]]

எனக்கு என்னிக்கு, எது நல்லா இருந்திருக்கு வாலு..?

அல்லாமே டேமேஜ் கன்ட்ரால்லதான் இருக்கு..

Vijay said...

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!

--
விஜயஷங்கர்
பெங்களூரு

Joe said...

எல்லாம் சரிண்ணே, விமர்சனம்-ன்னு சொன்னீங்களே, அது எங்க?

அடுத்த சனிக்கிழமை பாத்திர வேண்டியது தான், எங்க வீட்டு வாலு ரொம்ப ரசிக்கும்னு நினைக்கிறேன்.

abeer ahmed said...

See who owns edesignonline.org or any other website:
http://whois.domaintasks.com/edesignonline.org