கிளம்பியது திரையுலகத் தமிழீழ ஆதரவுப் படை - கலக்கத்தில் காங்கிரஸ்..!

03-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்றைக்குக்கூட ஈழத்தில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தற்காலிக மருத்துவமனையில் சிங்கள ராணுவம் குண்டு வீசியதில் அப்பாவி நோயாளிகள் 64 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனாலும் இன்று வரையிலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற கோயபல்ஸ் பிரச்சாரம் இந்தியாவில் நடந்து கொண்டுதான் வருகிறது.


பிச்சைக்காரர்களே இருந்திராத தேசத்தில் அத்தனை மக்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றிய சிங்கள இனவாத அரசுக்குத் துணை போகும் காங்கிரஸ் அரசையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையும் தோலுரிக்க வேண்டிய கட்டாயம் அத்தனை பேருக்கும் உண்டு. சிங்கள அரசு சொல்லும் அனைத்துப் பொய்களுக்கும் ஆமாம் சாமி போட்டு ஆதரவு அளிப்பது மத்திய, மாநில அரசுகள்தான்..


இப்படி தங்களது சுயலாபத்திற்காக அப்பாவி தமிழக மக்களின் கண்ணீரைக்கூட பகடைக்காயாகப் பயன்படுத்தும் நம்மிடையே இருக்கின்ற தமிழர் விரோத அரசியல் வியாதிகளைத்தான் முதலில் கண்டிக்க வேண்டும்.. மக்களிடம் அவர்களுடைய முகமூடிகளை கிழிக்க வேண்டும் என்கிற ஆவலில் தமிழகத் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழீழ ஆதரவு இயக்கத்தினர் இறங்கியுள்ளனர்.

சென்ற வாரம் அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் கலைஞரை அண்ணா சமாதிவரைக்கும் கொண்டு வந்து தூங்க வைத்தது. அந்தப் போராட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்ற தொகுதிகளில் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

23-ம் தேதியன்று நடந்த தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்றுகூட காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு மீது மட்டுமே கோபத்தில் இருந்தது திரையுலகப் படை.. ஆனால் அன்று காலையில் வெளிவந்த நக்கீரன் இதழில் காங்கிரஸ் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் “யார் அந்த முத்துக்குமார்..?” என்று கேள்வி கேட்டதாக வெளி வந்த செய்தியைப் பார்த்ததும் அத்தனை பேருமே கொதித்துப் போனார்கள்.

முதலில் இந்த காங்கிரஸ்காரர்களின் இந்தத் திமிரை அடக்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். அப்படித்தான் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த போராட்ட மேடையில் எதிர்பாராதவிதமாக கவிஞர் தாமரையின் பேச்சு பெரும் புயலைக் கிளப்பிவிட உலகத் தமிழர்களிடையே அந்தப் போராட்டத்திற்கு விளம்பரமும், ஆதரவும் கிடைத்துவிட்டதாலும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரு ரவுண்டு அடிப்போம் என்று இப்போது முடிவு செய்துள்ளார்கள்.

சொன்னதைப் போலவே அந்த இயக்கத்தினர் தங்களது பிரச்சாரப் பயணத்தை நாளை மதியம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து துவக்குகிறார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டம் முடிந்ததும் அத்தொகுதிக்கென்று சிலரைப் பொறுப்பாளர்களாக நியமித்து அவர்கள் தலைமையில் இளைஞர் பட்டாளத்தினரை நியமித்து அந்தத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அனுப்பிவிட்டு அடுத்தத் தொகுதிக்கு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறது திரையுலக் குழு.

அதற்கேற்றாற்போல் எத்தனை பேர் வருகிறார்கள்? யார் யார் எந்ததெந்தத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்..? அவர்களுக்குக் கீழ் உள்ள இளைஞர் பட்டாளத்தினர் யார், யார் என்பதையெல்லாம் ரகசியமாக வைத்துள்ளனர்.

இதில் அதிகம் பேர் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 24 சங்ககங்களில் ஏதேனும் ஒரு சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்கள். அது போலத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். போலீஸார் மூலம் கைது, வழக்கு, சிறை என்று வந்தால் அதனைச் சமாளிப்பதற்கும், முறியடிப்பதற்கும் எந்த விதத்திலும் தயாராகவே உள்ளது இப்படை.

இதற்கிடையில் வருகின்ற 6-ம் தேதி புதன்கிழமை சோனியா சென்னை வருகிறார். தீவுத்திடலில் பொதுக்கூட்டம். சோனியா வரும்போது எங்களது எதிர்ப்பை எப்படி காட்ட வேண்டுமோ அப்படி காட்டுவோம் என்று இந்த அமைப்பினர் ஏற்கெனவே சொல்லியிருப்பதால், போலீஸாரும் தற்போது பதட்டத்தில் உள்ளனர்.

வேறு கட்சியினராகவோ, அமைப்பினராகவோ இருந்திருந்தால் முன் எச்சரிக்கைக் கைது என்று சொல்லி இளிச்சவாயர்கள் நான்கைந்து பேரை கைது செய்து சிறையில் தள்ளி கணக்குக் காட்டியிருக்கும் காவல்துறை. ஆனால் இப்போது திரைப்படத் துறையினர் என்பதால் தேர்தல் நேரத்தில் “அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் ஒட்டு மொத்தமாக சிலிர்த்து எழும் வாய்ப்பை தரவே கூடாது. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..” என்று மேலிடம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

முன் எச்சரிக்கை கைதுகள் நடைபெறப் போவதில்லை என்பது நன்கு தெரிந்ததினால்தான், பகிரங்கமாக போராட்டத்தினை அறிவித்துள்ளது இந்தத் திரையுலகப் படை.

இது பற்றி நேற்று முன்தினம் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் அமைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அளித்துள்ள பேட்டி இது..


“தமிழர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் விரோத சக்தியாக வளர்ந்துள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காட்டவும் திரையுலகத் தமிழ் இன உணர்வாளர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம்.

எந்தவித அதிகாரப் பங்கீடோ, அரசியல் ஆதாயமோ இல்லாமல், ஓர் இன விழிப்புணர்வை தமிழக மக்களிடம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

இலங்கையில் போர் நிறுத்தம் என்பது பொய். ஆறு மாத காலமாக தமிழகத்தில் பேரணிகள் உண்ணாவிரதங்கள் மேற்கொண்டும் பல உயிர் பலிகள் கொடுத்தும் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்கள்தான் நடத்துகிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு சூழ்நிலைக் கைதியாக உள்ளது. ஆகையால் தமிழின விரோதிகளை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.

எங்களது பிரச்சாரப் பயணம் நாளை மறுதினம் காஞ்சிபுரத்தில் இருக்கும் அண்ணா சிலையில் துவங்கி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, கடலூர் எனத் தொடர்ந்து வரும் 11ம் தேதி புதுவையில் முடிவடைகிறது.

இதன்படி

மே-4-ம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோட்டில்..

மே 5-ம் தேதி மாலை 6 மணிக்கு சேலத்தில்..

மே 6-ம் தேதி மாலை 6 மணிக்கு திண்டுக்கல்லில்..

மே 7-ம் தேதி பகலில் திருமங்கலத்திலும்..

மே 7-ம் தேதி மாலை 6 மணிக்கு விருதுநகரிலும்..

மே 8-ம் தேதி பகலில் தென்காசியிலும்..

மே 8-ம் தேதி மாலை 6 மணிக்கு நெல்லையிலும்..

மே 9-ம் தேதி பகலில் சிவகங்கையிலும்..

மே 9-ம் தேதி மாலை 6 மணிக்கு காரைக்குடியிலும்..

மே 10-ம் தேதி மாலை 6 மணிக்கு கடலூரிலும்..

மே 11-ம் தேதி பகலில் பாண்டிச்சேரியிலும்

பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.


இப்பிரச்சாரக் கூட்டத்தில் சீமான், செல்வமணி, சேரன், அமீர், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், சரவணசுப்பையா, செல்வபாரதி, பிரவீன்காந்த், மனோஜ்குமார், நடிகர் வடிவேலு, கவிஞர்கள் அறிவுமதி, கவிஞர் சினேகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழர்கள் அல்லாத பிற இனத்தவர்களும் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு சோனியா வரும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்..”

என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்று பாதியிலேயே ஜூட் விட்ட நடிகர் வடிவேலு இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது ஊர், ஊராக வருவதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எப்படியோ இவர்களது பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும். அதன் பின் ஏதேனும் அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்று பார்ப்போம்..

எனக்கும் உடன் செல்லத்தான் ஆசை. ஆனால் வயித்துப்பாடு என்ற ஒன்று இருக்கிறதே.. அதுதான் இடிக்கிறது.. வருத்தமாகத்தான் உள்ளது. ஒரு நாள் என்றால் பரவாயில்லை.. விடுமுறை எடுத்துவிடலாம். தொடர்ச்சியான 7 நாட்கள் என்பதுதான் என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அந்தக் குற்றவுணர்வோடுதான் இதனை தட்டச்சு செய்கிறேன்.

இந்தத் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

புகைப்படங்களின் உதவிக்கு நன்றி : திரு.கரிகாலன்

110 comments:

தீப்பெட்டி said...

போரட்டம் வெல்லட்டும்

கிரி said...

//எப்படியோ இவர்களது பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்//

உண்மை..ஆனா நம் மக்கள் மீது சந்தேகமாக தான் உள்ளது

sundarmeenakshi said...

yaravadhu live cover pannanum it is a historical event.namathu valai ulga nanbarkal aguma ana parkka vandum at least audio coverage irrundhallum nalllathu?

லட்சியா said...

தி. மு.க கட்சியினரை பார்க்கும் போது ஜனநாயக ஆட்சி நடக்கிறதா?
இல்லை பழைய முடியாட்சி நடக்கிறதா? என்று சந்தேகமாக இருக்கிறது?தன்னுடைய குடும்ப உறுப்பினர் எல்லோருக்கும் நல்ல பதவி கொடுத்து வைத்திருக்கிறார்.
திராவிடம் என்ற ஒரு சொல்லை வைத்து இவர்கள் செய்யும் கூத்துகளுக்கு எப்போது தான் முடிவு வருமோ தெரியாது.

அதைவிட காங்கிரஸ் ..
சோனியா சொல்வதற்கு தான் எல்லோரும் தலையாட்டுகிறார்கள்.
எப்போது இந்தியாவை இந்தியர் ஆள போகிறார்களோ?
திரையுலக பிரச்சாரத்திற்கு வெற்றி கிடைக்குமா?

ttpian said...

மஞ்சல் துண்டு+சொக்கத்தங்கம்=தமிழர் தலைவாங்கி.

-L-L-D-a-s-u said...

போராட்டத்தினை தம் கையிலெடுத்த திரைத்துறையினருக்கு , கையாலாகாத இந்த தமிழனின் வாழ்த்துகளும் நன்றிகளும் . தமிழனுக்கு தமிழன் என்ற அடையாளம் தவிற வேறு அடையாளம் இல்லை என்பதை அழுத்தமாக உணரச்செய்த இந்திய வல்லரசுக்கும் நன்றி .

ஈழத்தமிழன், தமிழை பல்லாயிரம் ஆண்டுகளாய் கட்டி காத்ததினால் வந்த வினையோ இந்த உயிரிழப்புகள் . வேறு மொழியோ , வட இந்தி மொழிகள் கலந்து பேசியிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவே கொதித்திருக்குமே . தமிழ் பேசுவதினால்தானே, தமிழ்நாட்டிலிருந்து போனவனுக்கு தனிநாடு கேட்பது என்ன நியாயம் என்று இன்னும் பேசுகிறார்கள் . குறைந்தது , இந்த தமிழினத்தலைவர்களும் தமிழ் காப்பாளர்களும் அடிக்கும் கூததையாவது பார்க்காமல் செத்துப்போயிருப்பீர்களே .

"அகநாழிகை" said...

நல்ல பதிவு. இயலாமையும் குற்றவுணர்ச்சியுமாக ஒவ்வொருவரும் வாழக் காரணம் நமது அரசியல்வாதிகள் மட்டுமே.

மிக்க அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

vanathy said...

திரைக் கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
காங்கிரசுக்கு பதினாறு தொகுதியிலும் தோல்வி வந்தால்தான் இனிமேல் இப்படி மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவதை மற்றக் கட்சிகளும் தவிர்ப்பார்கள்.
அமேரிக்கா இராக்கில் படையெடுத்தபோது நேர்மையாக வெளியில் சொல்லிவிட்டு படையெடுத்தார்கள்.
சீனா இலங்கைக்கு உதவி செய்வதை வெளிப்படையாகச் சொல்கிறது.ஆனால் இந்தியாவின் காங்கிரஸ் அரசு மிக மோசமான உதவிகளை இலங்கை ராணுவத்துக்கு செய்து விட்டு' மவுனம் சாதித்துவிட்டு இப்போது அகப்பட்டுக்கொண்டவுடன் பல விதமான சால்ஜாப்புகள் செய்கிறார்கள்.
அதற்கு கலைஞரின் அரசும் ஆதரவு தருகிறது.
ராஜபக்சே வன்னியில் தொடர்ந்தும் இனக்கொலை செய்து கொண்டிருக்கும் போது ,அங்கு போர் நிறுத்தம் நடப்பதாக தமிழக அரசு பொய் பிரச்சாரம் செய்வது ,அந்த ராஜபக்சேக்கு சார்பாக உதவி செய்வது போன்றது.
சொந்த தமிழக மக்களைக் கேவலமாக நடத்துவது மட்டுமில்லாமல் ,சிங்களத் தலைவருக்கும் உதவி செய்கிறார்கள் .
ராஜபக்சேசகோதரர்கள் ,ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் கொண்டு வருவதற்காக உலகில் உள்ள பல சட்ட வல்லுனர்கள் சாட்சியங்கள் சேகரித்துக்கொண்டு இருக்கும்போது நேற்று நடந்த மருத்துவ மனைக்கு வீசிய எறிகணையும் அங்கு நோயாளிகள் கொல்லப் பட்டதும் ஒரு சாட்சியம்தான் ,அப்படி இருக்கையில் அங்கு போர் நிறுத்தம் என்று கூறுவது ராஜபக்சேவுக்கு உதவுவது போன்றதுதானே?
--வானதி

vanathy said...

இதை பல முறை சொல்லி விட்டோம் ,ஆனால் திரும்பவும் சொல்கிறேன் ,ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து அங்கு போய் தனி நாடு கேட்கவில்லை.அவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அங்கு இருப்பவர்கள்.
சிங்களவர்களுக்கு அங்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அவ்வளவு உரிமையும் ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கும் ,தமிழ் ஈழத்துக்கும் தொடர்பு இருந்ததும் , தமிழகத்திலிருந்து ஈழத்துக்கும் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கும் மக்கள் பயணம் செய்ததும் உண்மை. அது மொழி ,பண்பாடு 'கலைகள் இலக்கியம் போன்ற பொதுவான அடையாளங்களாலும் சேரர் ,சோழர் ,பாண்டியர் என்று தமிழக மன்னர்கள் சில சமயங்களில் இலங்கையின் முழுப் பகுதியையோ அல்லது தமிழ்ப் பகுதிகளையுமோ ஆண்டபடியால் வந்த தொடர்புகள். அந்தக் காலத்தில் இந்திய கடற்படையோ ,இலங்கை கடற்படையோ தமிழ் நாட்டுக்கும் தமிழ் ஈழத்துக்கும் இடையே உள்ள கடலை ஆக்கிரமிக்கவில்லை.அந்தக் கடல் இரண்டு பக்கங்களிலும் உள்ள தமிழருக்கு சொந்தமாக இருந்ததால் மீனவர்ககள் உள்பட எல்லாத் தமிழர்களும் சுதந்திரமாக இருநாடுகளுக்கும் பயணம் செய்தார்கள்.கல்கியின் பொன்னியின் செல்வன் கதை படித்தால் எவ்வளவு சுதந்திரமாக தமிழர்கள் இரண்டுநாடுகளுக்கும் இடையில் பயணம் செய்தார்கள் என்ற வரலாற்று உண்மை தெரிய வரும்
மற்றவர்கள் ஈழத்தமிழர் பற்றி பிழையான வரலாற்றுத் தவறுகளைக் கொண்டிருந்தால் அதை திருத்துவது ஒவ்வொரு தமிழ் உணர்வாளர்களினதும் கடமை.
-வானதி

ramalingam said...

காஷ்மீரில் பிரச்னையென்றால் தமிழ்நாட்டில் போர்வீரன் வேண்டும். ஆனால் தமிழனுக்கு ஒரு பிரச்னையென்றால் உங்களுக்கு அவ்வளவு அலட்சியம்.

Vilwam said...

போதும் இந்த தமிழ் திரையுலக நாய்கள் செய்யும் மாய்மாலம்.கீழ்த்தரமான இந்த கும்பல் தானே குத்தாட்டம் காண்பித்து,மஞ்ச துண்டு மாமன்னனை மயக்கி சலுகைகள் பெற்றுக் கொள்ளும் pimps.

மஞ்ச துண்டும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு இந்த கிழ்த்தர நாய்களின் அசிங்க ஆபாச ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் தூய,தாடிக்கார அய்யா காட்டிய கேவலமான திராவிட வழியில் நடக்கும் அயோக்யன் தானே.தேர்தல் முடிந்ததும் இதே கும்பல் மஞ்ச துண்டுக்கு மறுபடியும் ஜல்லி அடித்து ஆபாச நடனம் ஸ்பெஷல் ஷோ போட்டு காட்ட மாட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா.உண்மையைச் சொல்லுங்கள் உண்மைத் தமிழன்.

Sen said...

Please let me know if I can be of some help
to these people doing the noble cause of defeating
the congress which is complicit in this genocide of tamils..
it is not necessary to publish this comment..
I will give you a call today and speak to you..
---Senthil

சாத்திரி said...

இவர்களிற்கு மனமார்ந்த நன்றிகள்..

சுந்தரராஜன் said...

"வாழ்த்துகிறேன்"

senthil said...

வணக்கம்,

ச்ரியான நேரத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை.

நேற்று ஜெயலலிதா கோவையில் கூறியது போல் செயல் படாத அரசு எதற்கு?

இந்த ம்ஞ்சள் மூட்டை எதற்காக ஊர் ஊராய் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்?


தமிழனே! "ம்ஞ்சள் துண்டு", நாடகம் பார்த்தது போதும். செய்ல் பட வேண்டிய த்ருணம் வந்து விட்ட்து.

இன்ன்மும், "சொக்கத் தங்த்திற்கு ஆசைப்பட்டு உடன் பிறந்த்தோரைக் கொல்லதே!

senthil said...

வணக்கம்,

ச்ரியான நேரத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை.

நேற்று ஜெயலலிதா கோவையில் கூறியது போல் செயல் படாத அரசு எதற்கு?

இந்த ம்ஞ்சள் மூட்டை எதற்காக ஊர் ஊராய் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்?


தமிழனே! "ம்ஞ்சள் துண்டு", நாடகம் பார்த்தது போதும். செய்ல் பட வேண்டிய த்ருணம் வந்து விட்ட்து.

இன்ன்மும், "சொக்கத் தங்த்திற்கு ஆசைப்பட்டு உடன் பிறந்த்தோரைக் கொல்லதே!

senthil said...

வணக்கம்,

ச்ரியான நேரத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை.

நேற்று ஜெயலலிதா கோவையில் கூறியது போல் செயல் படாத அரசு எதற்கு?

இந்த ம்ஞ்சள் மூட்டை எதற்காக ஊர் ஊராய் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்?


தமிழனே! "ம்ஞ்சள் துண்டு", நாடகம் பார்த்தது போதும். செய்ல் பட வேண்டிய த்ருணம் வந்து விட்ட்து.

இன்ன்மும், "சொக்கத் தங்த்திற்கு ஆசைப்பட்டு உடன் பிறந்த்தோரைக் கொல்லதே!

ஊர் சுற்றி said...

வாழ்த்துக்கள்.

♠புதுவை சிவா♠ said...

வணக்கம் தமிழா

அவர்கள் போரட்டம் வெற்றி அடைய வாழ்த்துகள்.

"ஆனால் வயித்துப்பாடு என்ற ஒன்று இருக்கிறதே.. அதுதான் இடிக்கிறது.. வருத்தமாகத்தான் உள்ளது."

:-((((((

savuccu said...

முயற்சி முழு வெற்றிபெற நெஞ்சார்ந்த வீர வாழ்த்துகள்!

malar said...

நல்லது நடக்கட்டும் .விரைவில் (இன்றே )நக்கட்டும்

Gokul said...

காங்கிரசுக்கு வாக்களியுங்கள்

ஏன் என்பதை இந்த வலைப்பதிவில் படியுங்கள்

http://kulambiyagam.blogspot.com/2009/05/1.html

-Gokul

டக்ளஸ்....... said...

நானும் வாழ்த்துகிறேன்..!

வண்ணத்துபூச்சியார் said...

முன்னணி நடிகர் நடிகையர் எவரும் இல்லையே..??

சில பேர் மானாட மயிலாடவில பிஸியா இருப்பார்கள்..??

Too Late better than never...

Unmai said...

ஏன் காங்கிரஸ் போட்டிபோடும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்து பிரச்சாரம் பண்றீங்க. ஈழத்தமிழன் பிரச்சினைய வச்சே பொழப்பு நடத்திகிட்டு இருந்த சர்க்கஸ் சிறுத்தை போட்டி போடுற தொகுதிகளிலும் எதிர்த்து பிரச்சாரம் பன்ணுங்க. காங்கிரஸ், திமுக கோமாளிகளைவிட அவன் ஒன்னும் கொறஞ்சவன் கிடையாது.

லேகா பக்க்ஷே said...

///எனக்கும் உடன் செல்லத்தான் ஆசை. ...... அந்தக் குற்றவுணர்வோடுதான் இதனை தட்டச்சு செய்கிறேன்.///

உங்கள் உணர்வு புரிகிறது. இருந்தும், இந்த பதிவு பலரை சிந்திக்க வைக்கும் தானே. அதுவே ஈழ தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவி.
நேரடி தொகுப்பு வழங்கத்தான் யாரும் இல்லையே என்ற வருத்தம்.
பயணம் வெற்றியாகட்டும். வாழ்த்துக்கள்.

பதி said...

மக்கள் மத்தியில் சிறிய அளவிலாவது கொலைகார காங்கிரஸ் கும்பலின் பித்தலாட்ட முகத்தை வெளிப்படுத்த இது பயன்படும் என நம்புகிறேன்...

போர்குணத்துடன் செயல்படும் தமிழார்வலர்களுக்கு வாழ்த்துக்கள்...

ரங்குடு said...

திரை உலகில் ஓரங்கட்டப்பட்டவர்களும், வேறு வேலை வெட்டியில்லதவர்களும் தான் போராட்டத்தில் கலந்து கலந்து கொள்வதாகத் தெரிகிறது.

சினிமாக் காரங்க ஆட்சி தான் கடந்த 30/ 40 வருசமாக நடந்து தமிழகமே நாறதே!. இன்னும் ஏண்டா
சினிமாக் காரங்களை நம்புறீங்க?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தீப்பெட்டி said...

போரட்டம் வெல்லட்டும்//

நிச்சயம் வெல்லும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///கிரி said...

//எப்படியோ இவர்களது பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்//

உண்மை.. ஆனா நம் மக்கள் மீது சந்தேகமாகதான் உள்ளது///

இல்லை கிரியாரே.. எனக்கு நம்பிக்கை இப்போது கொஞ்சம், கொஞ்சமாக வருகிறது..

காங்கிரஸிற்கு குறிப்பிடத்தக்க அளவில் தோல்வி கிடைக்கு் என்று நினைக்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///sundarmeenakshi said...

yaravadhu live cover pannanum it is a historical event. namathu valai ulga nanbarkal aguma ana parkka vandum at least audio coverage irrundhallum nalllathu?///

நல்லதுதான்.. ஆனால் யாருக்கும் நேரம்தான் இல்லை.. என்ன செய்வது.. அவரவர்க்கு பொழப்பு என்ற ஒன்று உள்ளதல்லவா..? அதையும் பார்க்கணுமே..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///லட்சியா said...

தி. மு.க கட்சியினரை பார்க்கும் போது ஜனநாயக ஆட்சி நடக்கிறதா?
இல்லை பழைய முடியாட்சி நடக்கிறதா? என்று சந்தேகமாக இருக்கிறது? தன்னுடைய குடும்ப உறுப்பினர் எல்லோருக்கும் நல்ல பதவி கொடுத்து வைத்திருக்கிறார்.
திராவிடம் என்ற ஒரு சொல்லை வைத்து இவர்கள் செய்யும் கூத்துகளுக்கு எப்போதுதான் முடிவு வருமோ தெரியாது.

அதைவிட காங்கிரஸ் ..
சோனியா சொல்வதற்குதான் எல்லோரும் தலையாட்டுகிறார்கள்.
எப்போது இந்தியாவை இந்தியர் ஆள போகிறார்களோ?
திரையுலக பிரச்சாரத்திற்கு வெற்றி கிடைக்குமா?///

வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்..

காங்கிரஸ் போ்ட்டியிடும் தொகுதிகளில் உள்ள உங்களது நண்பர்களிடம் சொல்லி
அக்கட்சிக்கு வோட்டு போட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ttpian said...

மஞ்சல் துண்டு+சொக்கத்தங்கம்=தமிழர் தலைவாங்கி.///

பாட்டாளி ஐயாவுக்கென்றே தனி ஜாதகம் உண்டு..

வைகோவுக்கு அது இல்லை. அதுதான் அவரை பாடாய்ப் படுத்துகிறது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///-L-L-D-a-s-u said...

போராட்டத்தினை தம் கையிலெடுத்த திரைத்துறையினருக்கு , கையாலாகாத இந்த தமிழனின் வாழ்த்துகளும் நன்றிகளும் . தமிழனுக்கு தமிழன் என்ற அடையாளம் தவிற வேறு அடையாளம் இல்லை என்பதை அழுத்தமாக உணரச்செய்த இந்திய வல்லரசுக்கும் நன்றி .

ஈழத்தமிழன், தமிழை பல்லாயிரம் ஆண்டுகளாய் கட்டி காத்ததினால் வந்த வினையோ இந்த உயிரிழப்புகள். வேறு மொழியோ , வட இந்தி மொழிகள் கலந்து பேசியிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவே கொதித்திருக்குமே . தமிழ் பேசுவதினால்தானே, தமிழ்நாட்டிலிருந்து போனவனுக்கு தனி நாடு கேட்பது என்ன நியாயம் என்று இன்னும் பேசுகிறார்கள் . குறைந்தது, இந்த தமிழினத் தலைவர்களும் தமிழ் காப்பாளர்களும் அடிக்கும் கூததையாவது பார்க்காமல் செத்துப் போயிருப்பீர்களே.///

உண்மைதான்..

இதே போல் வேற்று மாநிலத்தவருக்கு நடந்திருந்தால் இவர்களெல்லாம் என்ன செய்திருப்பார்கள் என்பதையும் யோசித்துப் பார்த்தால் நாம் எந்த அளவிற்கு மரத்தமிழர்கள் என்பது புரிகிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///"அகநாழிகை" said...

நல்ல பதிவு. இயலாமையும் குற்றவுணர்ச்சியுமாக ஒவ்வொருவரும் வாழக் காரணம் நமது அரசியல்வாதிகள் மட்டுமே.

மிக்க அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்///

மதவாதம், பயங்கரவாதத்தைவிட அரசியல்வியாதிகளால் கெட்டதுதான் நம் நாட்டில் அதிகம்..

வருகைக்கு நன்றி ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///vanathy said...

திரைக் கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

காங்கிரசுக்கு பதினாறு தொகுதியிலும் தோல்வி வந்தால்தான் இனிமேல் இப்படி மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவதை மற்றக் கட்சிகளும் தவிர்ப்பார்கள்.
அமேரிக்கா இராக்கில் படையெடுத்தபோது நேர்மையாக வெளியில் சொல்லிவிட்டு படையெடுத்தார்கள்.
சீனா இலங்கைக்கு உதவி செய்வதை வெளிப்படையாகச் சொல்கிறது. ஆனால் இந்தியாவின் காங்கிரஸ் அரசு மிக மோசமான உதவிகளை இலங்கை ராணுவத்துக்கு செய்து விட்டு' மவுனம் சாதித்துவிட்டு இப்போது அகப்பட்டுக் கொண்டவுடன் பல விதமான சால்ஜாப்புகள் செய்கிறார்கள். அதற்கு கலைஞரின் அரசும் ஆதரவு தருகிறது.
ராஜபக்சே வன்னியில் தொடர்ந்தும் இனக் கொலை செய்து கொண்டிருக்கும் போது,அங்கு போர் நிறுத்தம் நடப்பதாக தமிழக அரசு பொய் பிரச்சாரம் செய்வது ,அந்த ராஜபக்சேக்கு சார்பாக உதவி செய்வது போன்றது.
சொந்த தமிழக மக்களைக் கேவலமாக நடத்துவது மட்டுமில்லாமல், சிங்களத் தலைவருக்கும் உதவி செய்கிறார்கள்.
ராஜபக்சே சகோதரர்கள், ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக போர்க் குற்றங்கள் கொண்டு வருவதற்காக உலகில் உள்ள பல சட்ட வல்லுனர்கள் சாட்சியங்கள் சேகரித்துக்கொண்டு இருக்கும்போது நேற்று நடந்த மருத்துவமனைக்கு வீசிய எறிகணையும் அங்கு நோயாளிகள் கொல்லப்பட்டதும் ஒரு சாட்சியம்தான், அப்படி இருக்கையில் அங்கு போர் நிறுத்தம் என்று கூறுவது ராஜபக்சேவுக்கு உதவுவது போன்றதுதானே?
--வானதி///

நிச்சயம் வானதி.

எங்கோ ஓரிடத்தில் ஆதாரங்களைத் தேட வேண்டாம்..

இதோ நம் நாட்டிலேயே ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த மீனவர் படுகொலைகளை வைத்தே இவர்கள் மீது நாம் நடவடிக்கை எடுக்க முடியும்..?

எடுப்பார்களா இந்த அரசியல்வியாதிகள். இவர்கள்தான் எப்போதே மக்களின் விரோதிகளாக மாறிவிட்டார்களே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///vanathy said...

இதை பல முறை சொல்லி விட்டோம், ஆனால் திரும்பவும் சொல்கிறேன், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து அங்கு போய் தனி நாடு கேட்கவில்லை.அவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அங்கு இருப்பவர்கள். சிங்களவர்களுக்கு அங்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அவ்வளவு உரிமையும் ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கும், தமிழ் ஈழத்துக்கும் தொடர்பு இருந்ததும், தமிழகத்திலிருந்து ஈழத்துக்கும் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கும் மக்கள் பயணம் செய்ததும் உண்மை. அது மொழி ,பண்பாடு 'கலைகள் இலக்கியம் போன்ற பொதுவான அடையாளங்களாலும் சேரர், சோழர், பாண்டியர் என்று தமிழக மன்னர்கள் சில சமயங்களில் இலங்கையின் முழுப் பகுதியையோ அல்லது தமிழ்ப் பகுதிகளையுமோ ஆண்டபடியால் வந்த தொடர்புகள். அந்தக் காலத்தில் இந்திய கடற்படையோ, இலங்கை கடற்படையோ தமிழ் நாட்டுக்கும் தமிழ் ஈழத்துக்கும் இடையே உள்ள கடலை ஆக்கிரமிக்கவில்லை. அந்தக் கடல் இரண்டு பக்கங்களிலும் உள்ள தமிழருக்கு சொந்தமாக இருந்ததால் மீனவர்ககள் உள்பட எல்லாத் தமிழர்களும் சுதந்திரமாக இரு நாடுகளுக்கும் பயணம் செய்தார்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் கதை படித்தால் எவ்வளவு சுதந்திரமாக தமிழர்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பயணம் செய்தார்கள் என்ற வரலாற்று உண்மை தெரிய வரும் மற்றவர்கள் ஈழத் தமிழர் பற்றி பிழையான வரலாற்றுத் தவறுகளைக் கொண்டிருந்தால் அதை திருத்துவது ஒவ்வொரு தமிழ் உணர்வாளர்களினதும் கடமை.
-வானதி///

நன்றி வானதி..

தங்களுடைய தகவல்கள் புதிய பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நிச்சயம் பயன்படும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ramalingam said...
காஷ்மீரில் பிரச்னையென்றால் தமிழ்நாட்டில் போர்வீரன் வேண்டும். ஆனால் தமிழனுக்கு ஒரு பிரச்னையென்றால் உங்களுக்கு அவ்வளவு அலட்சியம்.///

தமிழர்களை எவ்வளவு இளிச்சவாயத்தனமாக நடத்துகிறார்கள் என்று பாருங்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Vilwam said...

போதும் இந்த தமிழ் திரையுலக நாய்கள் செய்யும் மாய்மாலம். கீழ்த்தரமான இந்த கும்பல்தானே குத்தாட்டம் காண்பித்து, மஞ்ச துண்டு மாமன்னனை மயக்கி சலுகைகள் பெற்றுக் கொள்ளும் pimps.

மஞ்ச துண்டும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இந்த கிழ்த்தர நாய்களின் அசிங்க ஆபாச ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் தூய, தாடிக்கார அய்யா காட்டிய கேவலமான திராவிட வழியில் நடக்கும் அயோக்யன்தானே. தேர்தல் முடிந்ததும் இதே கும்பல் மஞ்ச துண்டுக்கு மறுபடியும் ஜல்லி அடித்து ஆபாச நடனம் ஸ்பெஷல் ஷோ போட்டு காட்ட மாட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா. உண்மையைச் சொல்லுங்கள் உண்மைத் தமிழன்.///

இப்போது முன் வந்திருப்பது திரையுலகில் இருக்கும் சிலர்தானே ஒழிய ஒட்டு மொத்தமாக அல்ல..

கருத்து சுதந்திரம் அனைத்து இடங்களிலும் உண்டு..

நீங்கள் சொன்னவைகளும் நிச்சயம் இனிமேல் நடக்கத்தான் போகிறது.. இல்லையென்று மறுக்கமாட்டேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Sen said...

Please let me know if I can be of some help
to these people doing the noble cause of defeating
the congress which is complicit in this genocide of tamils..
it is not necessary to publish this comment..
I will give you a call today and speak to you..
---Senthil///

பரவாயில்லை..

அழைப்புக்கும், பகிர்தலுக்கும் நன்றி செந்தில்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///சாத்திரி said...

இவர்களிற்கு மனமார்ந்த நன்றிகள்..///

நானும் இதனையே உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன் சாத்திரி ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///சுந்தரராஜன் said...

"வாழ்த்துகிறேன்"///

நன்றிகள் அண்ணே..

நீங்க எப்ப கிளம்புறீங்க..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///senthil said...

வணக்கம்,

ச்ரியான நேரத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை.

நேற்று ஜெயலலிதா கோவையில் கூறியது போல் செயல் படாத அரசு எதற்கு?

இந்த ம்ஞ்சள் மூட்டை எதற்காக ஊர் ஊராய் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்?


தமிழனே! "ம்ஞ்சள் துண்டு", நாடகம் பார்த்தது போதும். செய்ல் பட வேண்டிய த்ருணம் வந்து விட்ட்து.

இன்ன்மும், "சொக்கத் தங்த்திற்கு ஆசைப்பட்டு உடன் பிறந்த்தோரைக் கொல்லதே!///

கொல்லாதே.. கொல்லாதே.. கொல்லாதே..

நானும் சொல்லிவிட்டேன் செந்தில்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ஊர் சுற்றி said...

வாழ்த்துக்கள்.///

நன்றிகள் ஸார்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///♠புதுவை சிவா♠ said...

வணக்கம் தமிழா

அவர்கள் போரட்டம் வெற்றி அடைய வாழ்த்துகள்.

"ஆனால் வயித்துப்பாடு என்ற ஒன்று இருக்கிறதே.. அதுதான் இடிக்கிறது.. வருத்தமாகத்தான் உள்ளது."

:-((((((///

நன்றி சிவா..

உண்மையைத்தான் சொன்னேன்.. வேறு வழியில்லை..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///savuccu said...
முயற்சி முழு வெற்றி பெற நெஞ்சார்ந்த வீர வாழ்த்துகள்!///

நன்றிகள் ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///malar said...

நல்லது நடக்கட்டும் .விரைவில் (இன்றே )நடக்கட்டும்///

மலரு நன்றி..

ஆனால் எழுதுவதில் அவசரம் வேண்டாம்.. ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தமே மாறிவிடும்..)))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Gokul said...

காங்கிரசுக்கு வாக்களியுங்கள்

ஏன் என்பதை இந்த வலைப்பதிவில் படியுங்கள்

http://kulambiyagam.blogspot.com/2009/05/1.html

-Gokul///

கோகுல் ஸார்..

காங்கிரஸே இல்லாமல் போனால் ஆட்சிக்கு வர இயலாமல் போனால் மற்றவர்கள் அப்போதுதான் அது பற்றி யோசிப்பார்கள்..

எங்களுக்கு காங்கிரஸ் தவிர யார் வருகிறார்கள் என்பது பற்றி கவலையில்லை.. அதை பின்பு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..

முதலில் இந்தத் துரோகிகள் அழிய வேண்டும். அதுதான் முக்கியம்..

நன்றி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///டக்ளஸ்....... said...

நானும் வாழ்த்துகிறேன்..!///

நன்றி டக்ளஸ்..

ஸாரி சாட்டிங்கில் நிறைய நேரம் பேச முடியவில்லை.

தொலைபேசியில் அழையுங்கள்.. பேசுவோம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வண்ணத்துபூச்சியார் said...

முன்னணி நடிகர் நடிகையர் எவரும் இல்லையே..??

சில பேர் மானாட மயிலாடவில பிஸியா இருப்பார்கள்..??

Too Late better than never...///

அவரவர் பாடு அவரவர்க்கு..

மத்தியில் ஆளுவது காங்கிரஸ் என்பதால் கட்சித் தொல்லையை ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

வேறென்ன..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Unmai said...

ஏன் காங்கிரஸ் போட்டிபோடும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்து பிரச்சாரம் பண்றீங்க. ஈழத்தமிழன் பிரச்சினைய வச்சே பொழப்பு நடத்திகிட்டு இருந்த சர்க்கஸ் சிறுத்தை போட்டி போடுற தொகுதிகளிலும் எதிர்த்து பிரச்சாரம் பன்ணுங்க. காங்கிரஸ், திமுக கோமாளிகளைவிட அவன் ஒன்னும் கொறஞ்சவன் கிடையாது.///

கிடையாதுதான்..

ஆனா அவராவது பொது மேடை போட்டு தைரியமா ஈழம் பத்தி பேசுறாரே..

மொதல்ல நமது எதிரிகளை அடையாளம் கண்டு அழித்துவிடுவோம். பின்பு நமக்குள் இருக்கும் பேதங்களை பேசிக் களைந்து கொள்ளலாம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///லேகா பக்க்ஷே said...

///எனக்கும் உடன் செல்லத்தான் ஆசை. ...... அந்தக் குற்றவுணர்வோடுதான் இதனை தட்டச்சு செய்கிறேன்.///

உங்கள் உணர்வு புரிகிறது. இருந்தும், இந்த பதிவு பலரை சிந்திக்க வைக்கும்தானே. அதுவே ஈழ தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவி. நேரடி தொகுப்பு வழங்கத்தான் யாரும் இல்லையே என்ற வருத்தம். பயணம் வெற்றியாகட்டும். வாழ்த்துக்கள்.///

நன்றி லேகா..

நேரம் கிடைத்தால் ஏதாவது ஒரு ஊருக்காவது நேரில் போய் கலந்து கொள்ள முயல்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///பதி said...

மக்கள் மத்தியில் சிறிய அளவிலாவது கொலைகார காங்கிரஸ் கும்பலின் பித்தலாட்ட முகத்தை வெளிப்படுத்த இது பயன்படும் என நம்புகிறேன்...
போர்குணத்துடன் செயல்படும் தமிழார்வலர்களுக்கு வாழ்த்துக்கள்...///

நன்றி பதி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ரங்குடு said...

திரை உலகில் ஓரங்கட்டப்பட்டவர்களும், வேறு வேலை வெட்டியில்லதவர்களும்தான் போராட்டத்தில் கலந்து கலந்து கொள்வதாகத் தெரிகிறது.

சினிமாக்காரங்க ஆட்சிதான் கடந்த 30/ 40 வருசமாக நடந்து தமிழகமே நாறதே!. இன்னும் ஏண்டா
சினிமாக்காரங்களை நம்புறீங்க?///

ரங்குடு..

பார்த்து..

வயிறு ரொம்ப எரிஞ்சா உடனே மருத்துவரிடம் சென்று செக்கப் செய்து கொள்ளுங்கள்..!

எட்வின் said...

போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

பாகிஸ்தானில் சீக்கியருக்கு ஒன்று என்றவுடன் சிங் நேற்று கண்டனம் தெரிவிக்கிறாராம்,வேண்டுகோள் விடுக்கிறாராம்... இத்தனைக்கும் ஸ்வாத் பகுதியில் இருக்கும் சில 'சீக்'குகளை வரி கட்ட சொல்லியிருக்காங்க பாகிஸ்தானியரோ/தாலிபானோ. அதுக்கே இந்த பில்ட் அப் குடுக்குறாரு பிரதமர்.

தமிழின உயிரெல்லாம் அவருக்கு கிள்ளுக்கீரை ஆயிடிச்சா? அந்த மனுஷன் அனுபவிப்பாரு... இந்த தேர்தல்ல இல்லானாலும் எப்போவாது.

ஊரில் நண்பர்கள் பலரிடம் சொல்லியாகி விட்டது காங்கிரசை எதிர்க்க.

ananth said...

மக்கள் மீது சந்தேகம் என்று யாரும் அவ நம்பிக்கையோடு பேசாதீகள். நம் நம்பிக்கை வீண் போகாது. மாற்றம் என்ற ஒன்று வந்தே தீரும்.

இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணம் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உள்ள கள்ளக் காதல் போன்ற உறவுதான். எத்தனை உயிர் பழி நேர்ந்தாலும், எவ்வளவு போராட்டம் நடந்தாலும் இந்த காங்கிரஸ் அரசு எதையும் கண்டு கொள்ளாது.

ananth said...

இப்போதுதான் சில நாட்களாக தங்கள் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு வருகிறேன். நேரம் கிடைக்கும் போது பழைய பதிவுகளையும் படித்துப் பார்க்கிறேன். தங்களைப் போன்ற தமிழுணர்வு மிக்க மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படித்துப் பார்க்க ஆசை. ஆனால் போதிய நேரம்தான் கிடைப்பதில்லை. இது ஒரு குறை. ஆயினும் தங்களைப் போன்ற ஒரு சிலரின் அறிமுகம் கிடைத்தவரை மகிழ்ச்சியே. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் மீண்டும் வருவேன்.

GOLD said...

make sure that all the 16 places congress should loss the MP seat and also the total 40 seats should not be the Congress and DMK. am sure that am sending sms to all of my friends that not to vote for the tamil thurokis DMK and Congress. Dear Tamil film Industries please you all should help for Barathiraja and his group members for this issues, and also dont allow the Thesathuroki soniya to enter inside Tamilnadu.

Velmurugan Madurai

Online Bank said...

திரைக் கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்//
NO NO

காங்கிரசுக்கு பதினாறு தொகுதியிலும் தோல்வி வந்தால்தான் இனிமேல் இப்படி மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவதை மற்றக் கட்சிகளும் தவிர்ப்பார்கள்

VEMURUGAN MADURAI

Ginger said...

இலங்கை பிரச்சினை 60 வருடங்களாக எரிகிரது; 1983 முதல் கொழுந்து விட்டெரிகிரது. 83 முதலே தமிழ்நாட்டில் தமிழீழத்துற்க்கு சார்பாக பல போராட்டங்கள் நடந்துள்ளன. ‘இன உணர்வை’ சினிமா காரர்கள் புகட்டவே வேண்டாம். ஏர்கெனவே நிரைய இருக்கு. 30 வருடங்களாக நடத்திய நூற்றுக் கணக்கான போராட்டங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகள் முதலியவை சாதிக்காததை, எப்படி சினிமா கூட்டம் சாதிக்க போகிறது. அப்படி 30 வருட போரட்டங்கள், ஒன்றும் சாதிக்காவிட்டால், நம் தவறுகள் என்ன என்று யாரும் அலசினதாக காணோம். தமிழர்கள் 30 வருட வரலாற்றிலிருந்து, தங்கள் அனுபவங்களிடமிரிந்து ஒன்றும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஈழப்போர் ஸ்ரீலங்க அரசுக்கும், புலிகளுக்கு இடையே நடக்கின்றது. (மற்ற ஈழப் போராளிகள் புலிகளீனால் அழிக்கப் பட்டுள்ளார்கள்). இதில் ஓரளவுக்கு மேல் வெளீநாடவர்கள் - இந்தியர்களையும் சேர்த்து- ஒன்றும் செய்ய முடியாது. புலிகள் முன்னணியில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் தோல்வியும், அழிவும் ஏர்பட்டுள்ளது. புலிகள் சீக்கிரம் ஒழிந்தால் தான் தமிழர்கள் வேறு திசைகளில் போராட்டத்தை நடத்த முடியும். புலிகள் முன்னணியில் தமிழர்கள் தோல்வி மேல் தோல்விதான் போடுவார்கள்.

ஜிஞ்ஜர்

வால்பையன் said...

அடடே இன்னைக்கு ஈரோட்லயா!
மிஸ் பண்ணிட்டேனே!

டீவில வரும்ல!
இல்லைனா யுடியூப் கிடைச்சா லிங்க் கொடுங்க தல!

Mark K Maity said...

----தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்று பாதியிலேயே ஜூட் விட்ட நடிகர் வடிவேலு இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது ஊர், ஊராக வருவதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.---

pls vantahvarkalai kindal pannavedam. ennagluku aattakal theevai. athvum vadiveelu poontdror theevai. appoothu thann vijaykanth poondorrkal yoosipparkal

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///எட்வின் said...
போராட்டத்திற்கு வாழ்த்துக்கள். பாகிஸ்தானில் சீக்கியருக்கு ஒன்று என்றவுடன் சிங் நேற்று கண்டனம் தெரிவிக்கிறாராம், வேண்டுகோள் விடுக்கிறாராம்... இத்தனைக்கும் ஸ்வாத் பகுதியில் இருக்கும் சில 'சீக்'குகளை வரி கட்ட சொல்லியிருக்காங்க பாகிஸ்தானியரோ / தாலிபானோ. அதுக்கே இந்த பில்ட் அப் குடுக்குறாரு பிரதமர். தமிழின உயிரெல்லாம் அவருக்கு கிள்ளுக்கீரை ஆயிடிச்சா? அந்த மனுஷன் அனுபவிப்பாரு... இந்த தேர்தல்ல இல்லானாலும் எப்போவாது. ஊரில் நண்பர்கள் பலரிடம் சொல்லியாகி விட்டது காங்கிரசை எதிர்க்க.///

உலகத்திலேயே இளிச்சவாய இனம் தமிழன்தான்..

அதை இன்னுமொரு முறை நிரூபித்திருக்கிறார்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ananth said...

மக்கள் மீது சந்தேகம் என்று யாரும் அவ நம்பிக்கையோடு பேசாதீகள். நம் நம்பிக்கை வீண் போகாது. மாற்றம் என்ற ஒன்று வந்தே தீரும்.

இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணம் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உள்ள கள்ளக் காதல் போன்ற உறவுதான். எத்தனை உயிர் பழி நேர்ந்தாலும், எவ்வளவு போராட்டம் நடந்தாலும் இந்த காங்கிரஸ் அரசு எதையும் கண்டு கொள்ளாது.///

உண்மைதான் ஆனந்த்..

முறையற்ற, நேர்மையற்ற கள்ளக் காதல்கள் எந்த விதத்தில் இருந்தாலும் அது இரு தரப்பாருக்குமே ஆபத்துதான்..

அதனை இன்றைக்கு அனைவருமே உணர்கிறோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ananth said...

இப்போதுதான் சில நாட்களாக தங்கள் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு வருகிறேன். நேரம் கிடைக்கும் போது பழைய பதிவுகளையும் படித்துப் பார்க்கிறேன். தங்களைப் போன்ற தமிழுணர்வுமிக்க மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படித்துப் பார்க்க ஆசை. ஆனால் போதிய நேரம்தான் கிடைப்பதில்லை. இது ஒரு குறை. ஆயினும் தங்களைப் போன்ற ஒரு சிலரின் அறிமுகம் கிடைத்தவரை மகிழ்ச்சியே. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் மீண்டும் வருவேன்.///

மிக்க நன்றி ஆனந்த்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///GOLD said...
make sure that all the 16 places congress should loss the MP seat and also the total 40 seats should not be the Congress and DMK. am sure that am sending sms to all of my friends that not to vote for the tamil thurokis DMK and Congress. Dear Tamil film Industries please you all should help for Barathiraja and his group members for this issues, and also dont allow the Thesathuroki soniya to enter inside Tamilnadu.
Velmurugan Madurai///

எஸ்எம்எஸ் பிரச்சாரம் நன்கு வொர்க் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

நாங்களும் அதனை செய்து கொண்டுதான் வருகிறோம் நண்பரே..

சோனியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் ஒரு டீம் ஆயத்தமாக உள்ளதாகத் தெரிகிறது..

பார்ப்போம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Online Bank said...

திரைக் கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள். பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்//

NO NO காங்கிரசுக்கு பதினாறு தொகுதியிலும் தோல்வி வந்தால்தான் இனிமேல் இப்படி மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவதை மற்றக் கட்சிகளும் தவிர்ப்பார்கள்
VEMURUGAN MADURAI///

இப்படியொரு நிலைமை வந்தாலும் சந்தோஷம்தான் வேல்முருகன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Ginger said...

இலங்கை பிரச்சினை 60 வருடங்களாக எரிகிரது; 1983 முதல் கொழுந்து விட்டெரிகிரது. 83 முதலே தமிழ்நாட்டில் தமிழீழத்துற்க்கு சார்பாக பல போராட்டங்கள் நடந்துள்ளன. ‘இன உணர்வை’ சினிமாகாரர்கள் புகட்டவே வேண்டாம். ஏர்கெனவே நிரைய இருக்கு. 30 வருடங்களாக நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகள் முதலியவை சாதிக்காததை, எப்படி சினிமா கூட்டம் சாதிக்க போகிறது. அப்படி 30 வருட போரட்டங்கள், ஒன்றும் சாதிக்காவிட்டால், நம் தவறுகள் என்ன என்று யாரும் அலசினதாக காணோம். தமிழர்கள் 30 வருட வரலாற்றிலிருந்து, தங்கள் அனுபவங்களிடமிரிந்து ஒன்றும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஈழப்போர் ஸ்ரீலங்க அரசுக்கும், புலிகளுக்கு இடையே நடக்கின்றது. (மற்ற ஈழப் போராளிகள் புலிகளீனால் அழிக்கப் பட்டுள்ளார்கள்). இதில் ஓரளவுக்கு மேல் வெளீநாடவர்கள் - இந்தியர்களையும் சேர்த்து- ஒன்றும் செய்ய முடியாது. புலிகள் முன்னணியில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் தோல்வியும், அழிவும் ஏர்பட்டுள்ளது. புலிகள் சீக்கிரம் ஒழிந்தால்தான் தமிழர்கள் வேறு திசைகளில் போராட்டத்தை நடத்த முடியும். புலிகள் முன்னணியில் தமிழர்கள் தோல்வி மேல் தோல்விதான் போடுவார்கள்.
ஜிஞ்ஜர்///

ஜிஞ்ஜர்..

புலிகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஈழப் பகுதியில் தமிழ் மக்கள் குடியேறவிடாமல் செய்து நாடற்றவர்களாக ஆக்குகின்ற நயவஞ்சகத்தை ராஜபக்சே அரசு செய்து வருகின்றது..

இது சுத்தமாக ஒரு இனத்தையே அழிப்பதற்குச் சமம்.

இந்த நேரத்தில் புலிகள், ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் பேசி நமது நேரத்தையும், உழைப்பையும் வீணாக்க வேண்டாம். ஒருமித்தக் குரலில் எதிர்ப்போம்.. வாருங்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வால்பையன் said...

அடடே இன்னைக்கு ஈரோட்லயா! மிஸ் பண்ணிட்டேனே! டீவில வரும்ல!
இல்லைனா யுடியூப் கிடைச்சா லிங்க் கொடுங்க தல!///

கிடைத்தவுடன் தருகிறேன் வாலு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Mark K Maity said...

தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்று பாதியிலேயே ஜூட் விட்ட நடிகர் வடிவேலு இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது ஊர், ஊராக வருவதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.---

pls vantahvarkalai kindal pannavedam. ennagluku aattakal theevai. athvum vadiveelu poontdror theevai. appoothu thann vijaykanth poondorrkal yoosipparkal///

சரிங்க மைக் ஸார்..

கிண்டல் செய்யவில்லை. அந்த நிகழ்வில் அவர் பாதியிலேயே சென்றதற்கான உண்மையான காரணம் தெரியாதவரையில் என்னால் இந்த விஷயத்தில் வேறு மாதிரியாக எழுத முடியாது.. ஸாரி.. மன்னிக்கணும்..

ஜோ/Joe said...

//எங்களுக்கு காங்கிரஸ் தவிர யார் வருகிறார்கள் என்பது பற்றி கவலையில்லை.. அதை பின்பு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..

முதலில் இந்தத் துரோகிகள் அழிய வேண்டும். அதுதான் முக்கியம்..//

I second this!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ஜோ/Joe said...

//எங்களுக்கு காங்கிரஸ் தவிர யார் வருகிறார்கள் என்பது பற்றி கவலையில்லை.. அதை பின்பு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..

முதலில் இந்தத் துரோகிகள் அழிய வேண்டும். அதுதான் முக்கியம்..//

I second this!///

நன்றி ஜோ..

கட்சி வேறுபாடின்றி இந்த ஒரு விஷயத்தில் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்பதே எனது ஆசை.

தஞ்சாவூரான் said...

//எப்படியோ இவர்களது பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்.//

சகோ. உ.த,

எல்லாத் தொகுதிகளிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வவேண்டும் என்பது உண்மையான தமிழர்களின் ஆசை! நமது வேண்டுதல் பலிக்கட்டும்!

Ginger said...

உ.த. சொல்றார் ”ஜிஞ்ஜர்..

புலிகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஈழப் பகுதியில் தமிழ் மக்கள் குடியேறவிடாமல் செய்து நாடற்றவர்களாக ஆக்குகின்ற நயவஞ்சகத்தை ராஜபக்சே அரசு செய்து வருகின்றது..

இது சுத்தமாக ஒரு இனத்தையே அழிப்பதற்குச் சமம்.

இந்த நேரத்தில் புலிகள், ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் பேசி நமது நேரத்தையும், உழைப்பையும் வீணாக்க வேண்டாம். ஒருமித்தக் குரலில் எதிர்ப்போம்.. வாருங்கள்”


உ.த. இன அழிப்பு என்பது இப்போதுதான் கண்டுபிடித்தால் போல நினைக்கின்றீர்கள். அது 60 வருட சமாசாரம். கடந்த 5 மாதங்களாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு புலிகளின் ராணுவ தோல்வியினல் ஏற்பட்டுள்ளது. ஏன் ஈழ ஆதரவு கூட்டங்கள் பிரபாகரன் படத்தை வைக்கின்றன? ஏன் ஈழ ஆதரவு கூட்டஙகள் புலி கோடியை தூக்கிக் கொண்டு ஓடுகிரன? ஏன் வழக்கறிஞர்கள் பிரபாகரன் பிறந்த நாளை உயர்நீதி கட்டிடத்தில் ‘கொண்டாடினர்’?. தமிழ் நாட்டில் ஈழ மக்கள் அபிலாஷைகளுக்கு ஒரே காவலாளி பிரபாகரனும், புலிகளும் என்ற எண்ணத்தை பல அரசியல் கட்சிகள் முக்கியமக திராவிட கட்சிகள் ஊக்குவிக்கிறன. அது இன்னும் நடக்கின்றது. உதாரணமாக, பெரியார் திராவிடர்கள் மிலிடரி லாரிக்களை உடைக்கும் போது புலிக் கொடியை வீசினர். அதனால் நீங்கள் நினைக்கும் போல் புலிகள் எதிர்ப்பை தெரிவிப்பது வீண் இல்லை. மேலும் புலிகள் ஆதரவாளர்கள் தான் 5 மாத கொந்தளிப்பின் பின் நின்று இயக்கி உங்களைப் போல அப்பாவிகளை பேச வைக்கிரனர்.

கடந்த 5 மாத புலிகளின் சமரகள தோல்விகளுக்கு முன்னாடியே, ஈழத் தமிழர்கள் பெரும் அளவில் அரசியல் சக்தியையும், உரிமைகளையும் இழந்து விட்டனர்.

இலங்கையில் எவ்வளவு மோசமாக தமிழ மக்கள் மக்கள் தொகையும், அரசியல் பலமும் இழந்து விட்டனர் என்பதை, இலங்கை தமிழரான டி.பி.ஸ்.ஜயராஜ் கட்டுரையில் படிங்கள்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/113

முதலில் இலங்கை தமிழர் ஜனத்தொகை 20 லட்சமாக இருந்தது. மேற்கு மாகாணங்களில் ஒரு 90% சதவீதமாகவும், கிழக்கு மாகாணங்களில் 60% சதவீதமாகவும் இருந்தது. 50 வருட சிஙக்ள பேரின வாத கொளகைகளாலும், 5 லட்சம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாய் சென்றதாலும், மற்ற 5 லட்சம் தமிழர்கள் சிங்கள் பிரதெசங்களுக்கு அகதிகளாய் சென்றதாலும், இன்னும் 1 லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவம்- புலிகள் போராட்டத்தில் மாண்டதாலும் இப்போது வடகிழக்கு மாகானங்களில் தமிழர்கள் ஜனத்தொகையும், சதவீதமும், பெரிதாய் குறைந்துள்ளது. ஜயராஜ் கணக்குப் படி கிழக்கில் தமிழர் சதவீதம் 5% மேலிருக்காது போல் உள்ளது. மேற்கிலும் மிகவும் குறைந்துள்ளது.

இன அரசியல் உரிமைகள் இன ஜனத்தொகையிலும், சதவீததித்லும் தான் உள்ளன. அது 5 மாதம் முன்னாடியே நடந்து விட்டது. அதற்கெல்லாம், புலிகளும், அதன் ஆதரவாளர்களும் பெரும் பொருப்பு வகிக்கிறார்கள். இப்போதும் கூட அரசியல் முட்டாள்களான திராவிட கட்சிகள் தலைமையில் புலிகள் ஆதரவுதான் நடக்கிறது. முள்ளீ வாய்க்கால் பகுதியில் புலிகள் தங்களை காப்பாற்றி கொள்ள 2 லட்சம் தமிழர்களை துப்பாக்கி முனையில் சுற்றிவைத்து, மேலும் அப்பாவி மக்கள் சாவுகளீனால் தங்களூக்கு ஆதரவு பிரசாரத்தை தேடுகிறாற்கள். என்னே இனப் பற்று. தமிழ் நாட்டில் இவ்வளவு போராட்டங்கள் நடக்கின்றனவே, இதில் எவருக்காவது புலிகளின் மீது, அப்பாவி மக்களை போக விடுங்கள் என்ற கோரிக்கை வைக்க விவேகமோ, திராணியோ இருந்ததா. உங்களுக்கு தான் அந்த திராணி இருக்கின்றதா. ஈழ மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் கோரிக்கைகள் புலிகளின் மீதும், பிரபாகரன் மீதும் வைக்க வேண்டும், அதில்லாமல் இந்திய, தமிழக அரசாங்களையும், உலகத்தையும் வசை பாடுவது இன்னும் அழிவை இழுத்துக் கொண்டு செல்வதாகும்.

ஈழ மக்கள் அழிவில், பொருப்பற்ற தமிழக அரசியல் வாதிகளூக்கும் பங்கு உண்டு. அதே சிந்தனைய்ற்ற, விவேகமற்ற, பொருப்பற்ற மனப்பான்மை தான் இன்றைய ஆர்பாட்டங்ஜ்களூக்கும் காரணம்

ஜிஞ்ஜர்

வெண்காட்டான் said...

ginger, in this hard time ppl against LTTE are more worried about the increasing support of LTTE than tamil ppls lives. Y? so you are more worried about it. u dont care about tamils. the only thing u worry is about increasing support. kevalamana pirappu. ungaluku avvalauku manithapimanam illya. anaal ondu mattum unmai. pulikaluku ehiranavarkal ellarum ore pallaviyai paduvathu eaan. sollikodupathinala? muthuukumar pattha vaitha theeyai ungalaal ondum siyamudiyahtu. ithu urimai poorttam. kasukku vilai pookathu.

Ginger said...

'வெண்காட்டான் said...
ginger, in this hard time ppl against LTTE are more worried about the increasing support of LTTE than tamil ppls lives. Y? so you are more worried about it. u dont care about tamils.

வெண்காட்டான், இப்படி புலிகளுக்கு எதிரானவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள் என சொல்லி, சொல்லியே, மற்றவர்கலை அழி தமிழர்களை அழித்து ஒன்றும் ஆக்கப் பூர்வமாக செய்யாமல் புலிகள் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். தோல்விகளிலிருந்து, ஒன்றும் கற்றுக் கொள்ளாதர்வர்கள் என்ன பிறப்பு. தமிழ்நாட்டில் 35 வருடங்களாக எல்லா அரசியல்வாதிகளுக்கும் இலங்கை கொடூரங்கள் தெரியும், அபப்டி இருந்தும் ஏன் ஒன்றும் செய்யவில்லை, ஏன் செய்யமுடியவில்லை, என உங்களையே கேளுங்கள். புலிகளின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையால்தான், தமிழக அரசியல்வாதிகள் ஒன்றும் புடுங்க முடியவில்லை. அதே ஆட்கள் போராட்டத்தின் முன்னணியில் நின்றால், ஒன்றும் செய்ய முடியது.

ஏன் புலிகளை தவிர மற்ற இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் புலிகளை நசுக்குவதில் ஆதாரம் கொடுக்கின்றனர், ஏன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து தப்பித்து இலங்கை அரசு ராணுவத்திடன் புகல் செய்கின்றனர் என கஷ்டமான கேள்விகளை கேட்டு சிந்தியுங்கள். தமிழகத்தில் உணர்சி கடலை ஊட்டுவதில் எல்லா அரசியல்வாதிகளும் லாபம் அடைகிறனர். அந்த அரசியல் சூழ்ச்சிகளில், வலைகளில் விழாமல் இருப்பது, சாமன்யர்களுக்கு நன்று.

ஜிஞ்ஜர்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///தஞ்சாவூரான் said...

//எப்படியோ இவர்களது பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும்.//

சகோ. உ.த, எல்லாத் தொகுதிகளிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வவேண்டும் என்பது உண்மையான தமிழர்களின் ஆசை! நமது வேண்டுதல் பலிக்கட்டும்!///

நிச்சலம் பலிக்க வேணும் தஞ்சாவூரான் ஸார்.

நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.. காங்கிரஸ், தி.மு.க. தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லுங்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜிஞ்ஜர்..

உங்களுக்கு புலிகள் மீது கோபம் இரு்க்கலாம்.. தப்பு்ன்னு சொல்லலை.. ஆனா ஈழத்து தமிழ் மக்கள் மேல் அதனைக் காட்ட வேண்டாம்..

இப்போது நம்மிடையே தேவை ஒற்றுமைதான்.. நம்மிடையே இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு விட்டுவிடுங்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வெண்காட்டான் said...
ginger, in this hard time ppl against LTTE are more worried about the increasing support of LTTE than tamil ppls lives. Y? so you are more worried about it. u dont care about tamils. the only thing u worry is about increasing support. kevalamana pirappu. ungaluku avvalauku manithapimanam illya. anaal ondu mattum unmai. pulikaluku ehiranavarkal ellarum ore pallaviyai paduvathu eaan. sollikodupathinala? muthuukumar pattha vaitha theeyai ungalaal ondum siyamudiyahtu. ithu urimai poorttam. kasukku vilai pookathu.///

நன்றி வெண்காட்டான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Ginger said...
ஏன் புலிகளை தவிர மற்ற இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் புலிகளை நசுக்குவதில் ஆதாரம் கொடுக்கின்றனர், ஏன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து தப்பித்து இலங்கை அரசு ராணுவத்திடன் புகல் செய்கின்றனர் என கஷ்டமான கேள்விகளை கேட்டு சிந்தியுங்கள். தமிழகத்தில் உணர்சி கடலை ஊட்டுவதில் எல்லா அரசியல்வாதிகளும் லாபம் அடைகிறனர். அந்த அரசியல் சூழ்ச்சிகளில், வலைகளில் விழாமல் இருப்பது, சாமன்யர்களுக்கு நன்று.
ஜிஞ்ஜர்///

இப்போது கேள்வி புலிகளா தமிழ் ஈழத்து மக்களாக என்றில்லை..

ஈழத்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதுதான்..

இதில் புலிகள், மக்கள் என்று நீங்கள் பிரித்துப் பார்ப்பது விடுதலையை இன்னும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு கொண்டு போய் விடும்..

புரிந்து கொள்ளுங்கள்..

GOLD said...

ஏன் புலிகளை தவிர மற்ற இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் புலிகளை நசுக்குவதில் ஆதாரம் கொடுக்கின்றனர், ஏன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து தப்பித்து இலங்கை அரசு ராணுவத்திடன் புகல் செய்கின்றனர் என கஷ்டமான கேள்விகளை கேட்டு சிந்தியுங்கள். தமிழகத்தில் உணர்சி கடலை ஊட்டுவதில் எல்லா அரசியல்வாதிகளும் லாபம் அடைகிறனர். அந்த அரசியல் சூழ்ச்சிகளில், வலைகளில் விழாமல் இருப்பது, சாமன்யர்களுக்கு நன்று.
ஜிஞ்ஜர்///

எனக்கு நம்பிக்கை இப்போது கொஞ்சம், கொஞ்சமாக வருகிறது

but you proof again that
உலகத்திலேயே இளிச்சவாய இனம் தமிழன்தான்..

அதை இன்னுமொரு முறை நிரூபித்திருக்கிறார்கள்

Tamilanukku ethiri Tamilan than enpathu pola.

இப்போது கேள்வி புலிகளா தமிழ் ஈழத்து மக்களாக என்றில்லை..

ஈழத்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதுதான்..

இதில் புலிகள், மக்கள் என்று நீங்கள் பிரித்துப் பார்ப்பது விடுதலையை இன்னும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு கொண்டு போய் விடும்..

After getting the Eelam country we can disscuss about the inside problem. Not now............... Please dont make people in confuse.
Velmurugan Madurai

Ginger said...

'உண்மைத் தமிழன்
இப்போது கேள்வி புலிகளா தமிழ் ஈழத்து மக்களாக என்றில்லை..

ஈழத்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதுதான்..

இதில் புலிகள், மக்கள் என்று நீங்கள் பிரித்துப் பார்ப்பது விடுதலையை இன்னும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு கொண்டு போய் விடும்..'

உ.த., ஈழத்து விடுதலையை கேட்பது, ஈழத்து மக்களின் பொருப்பு, அவர்கள் இஷ்டம். தமிழ்நாட்டவர் ஈழத்தின் விடுதலையை ‘கேட்பது’ நடக்காத காரியம். ஏனெனில் யாரிடம் கேட்பது? சுதந்திர ஈழம் 1980ல் சாத்தியம் இல்லை. ஏனெனில் அண்டை வல்லரசான இந்தியா அண்டைநாடான ஸ்ரீலங்காவை துண்டிக்க ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஈழவர்களுக்கு கைக்கெட்டக் கூடிய மிக நல்ல விஷயம் மாநில சுயாட்சி, மேற்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு. இந்திய சமாதானப்படை உள்ளீட்டினால் ஈழவர்களுக்கு அது கிடைத்தது. அதைப் புலிகள் மறுத்து இந்தியாவுடன் சண்டை செய்து , தங்களையும் ஈழவர் எதிர்காலத்தையும் விரயம் செய்தார்கள். இந்தியாவும் இது என்ன தொந்தரவு என ஈழ விவகாரங்களிரிந்து, கை கழுவி விட்டது. இப்போது 1990 சுயாட்சி சான்ஸும் க்ளோஸ். அதற்கு பிறகு 70000 மக்கள் இறந்தனர். 10 லட்சம் மக்கள் அகதிகளாக சென்றனர். இன்றைக்கு ஈழவர் தங்கள் செல்வாக்கையும், பலத்தையும் மொத்தமாக இழந்து நிற்கின்ரனர். இனிமேல் 1990 வகை அரசியல் வாய்ப்பு வருவதும் சைக்கெட்டாததுதான். சிலர் அதிர்ஷ்டம் தன் வீட்டு கதவை தட்டி கைகொடுத்தாலும், அதை துப்பி துரத்துகிறவர். புலிகள் அப்பேர்பட்ட ஜாதி. பழைய ஈழ பிரதேசங்களில் தமிழ் மக்கள் தொகை வெகுவாக குறைந்து விட்டது. இனிமேல் ‘இன உரிமை’ கைக்கெட்டாதது.

தமிழ்நாட்டில் இருந்து ஈழ சுதந்திரத்தை பற்றி பேசுவது, மடத்தனத்தின் சிகரம். 35 வருட தோல்விகள் போதாதென்று, இன்னும் 35 வருட தோல்விகளை காண்பீர்.

ஜிஞ்ஜர்

வெண்காட்டான் said...

ginger,
DBS Jeyaraj patthi neengal arinthurupathu poola ungaluku unmaileye Tharaki sivaram patti theiyuma? avar oru puli ethipalaraaki irunthu pin theevira puli aatharavalaraki tamil eelathayum pirapakaranaiyum thieviramaka virumpiyavar. avar eluthiya katturaikal ungaluku parrpatharku chance kidayathu kaaranam neengal DBS jeyaraj katturaiyai utharanam kaatum poothu ungalin arivu enthalavu allathu ungalin pakka saarpinnmai kaatukirahtu. ithu poola ungalin ovoru katuthukuum ennal vilakkam alikka mudiyum. but athu waste. ungalipoondarvarkal eaan ippadi veruppathakku ungalai ennal sila kurippita kootathil adakka mudiyum. waste of time. neengal ungal paniyai thodarungal. our nalla braminum adivarudikalum ore karuhtaithan solluvarkal.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//GOLD said...
After getting the Eelam country we can disscuss about the inside problem. Not now............... Please dont make people in confuse.
Velmurugan Madurai//

நன்றி வேல்முருகன்..

நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன்..

வெண்காட்டான் said...

---- ஏனெனில் அண்டை வல்லரசான இந்தியா அண்டைநாடான ஸ்ரீலங்காவை துண்டிக்க ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ----
piraku enna myrukka anithu iyakkangalukkum training kuduthathu. pls makkalai muttal aaka vendam. ore poooiiyai solli sollai poiiyai unmai akka vendam. appothu illatha sri lankavin iraiyaanmai ippa mattum inthiya veliuravu kolkai vakupalarkaluku eppadi vanthatu?

sila velai naan sollavathu pooiyaka irukkalam. ithai ungalal pooi endu solla mudiyuma?

piriviai aatharikka vittal oru naattin puratti padaiku arms training valanguvathu sariya?

appadi endal pakistan kasmir poorathakarakaluku training kodupathu sariya?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜிஞ்ஜர் ஸார்..

எத்தனையோ வாய்ப்புகள் வந்தன.. கை நழுவிப் போயின.. காரணங்கள் நம்மிடையே இருந்தன.. எல்லாம் உண்மைதான்.

இப்போது ஒட்டு மொத்தமாக இனமே இல்லாத நிலைமைக்கு எதிரி நம்மை அழிக்கும்போது எப்படி பேசாமல் இருப்பது..?

எல்லாக் காலங்களும் ஒரே மாதிரியிருக்காது. அனைவரின் பார்வைகளும் எல்லா சமயங்களிலும் ஒன்றுபோல் இருக்க வாய்ப்பில்லை. அனுபவங்களும், சமயங்களினாலும் மாறுபடலாம்.

அப்படித்தான் புலி எதிர்ப்பாளர்கள்கூட இன்றைக்கு ஈழத்து விடுதலைக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

புரிந்து கொள்ளுங்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வெண்காட்டான் said...
ginger,
DBS Jeyaraj patthi neengal arinthurupathu poola ungaluku unmaileye Tharaki sivaram patti theiyuma? avar oru puli ethipalaraaki irunthu pin theevira puli aatharavalaraki tamil eelathayum pirapakaranaiyum thieviramaka virumpiyavar. avar eluthiya katturaikal ungaluku parrpatharku chance kidayathu kaaranam neengal DBS jeyaraj katturaiyai utharanam kaatum poothu ungalin arivu enthalavu allathu ungalin pakka saarpinnmai kaatukirahtu. ithu poola ungalin ovoru katuthukuum ennal vilakkam alikka mudiyum. but athu waste. ungalipoondarvarkal eaan ippadi veruppathakku ungalai ennal sila kurippita kootathil adakka mudiyum. waste of time. neengal ungal paniyai thodarungal. our nalla braminum adivarudikalum ore karuhtaithan solluvarkal.//

வெண்காட்டான் ஸார்..

இதில் பிராமணியம் எங்கிருந்து வந்தது..?

தமிழர்களைப் பிடித்த சாபக்கேடே இதுதான்..

புரிந்து கொள்ளாமை.. விடுங்கள்..

நீங்களும் புரியாமல்தான் பேசுகிறார்கள்..

மனிதம் உள்ள அனைத்து மனிதர்களும் தற்போது போர் நிறுத்தத்தையும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும் தடுத்து நிறுத்த நினைக்கிறார்கள்.

இதில் அந்த சாதி, இந்த சாதி என்றில்லை.. புரிந்து கொள்ளுங்கள் ஸார்..

Ginger said...

வெண்காட்டான்

எழுதினால் தமிழில் எழுதுக அல்லது ஆங்கிலத்தில் எழுதுக. தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் 2, 3 வார்த்தைகளுக்கு மேல் படிப்பது கஷ்டம்.

“piraku enna myrukka anithu iyakkangalukkum training kuduthathu. pls makkalai muttal aaka vendam. ore poooiiyai solli sollai poiiyai unmai akka vendam. appothu illatha sri lankavin iraiyaanmai ippa mattum inthiya veliuravu kolkai vakupalarkaluku eppadi vanthatu?

sila velai naan sollavathu pooiyaka irukkalam. ithai ungalal pooi endu solla mudiyuma?

piriviai aatharikka vittal oru naattin puratti padaiku arms training valanguvathu sariya?

appadi endal pakistan kasmir poorathakarakaluku training kodupathu sariya?


வெண்காட்டான், நீங்கள் கேட்பது சரியான கேள்விகள். இந்திரா காந்தி அரசு புலிகள் மற்றும் இதர ஈழப் படைகளுக்கு புகலிடம் கொடுத்தது. ஓரளவு ஆயுத பயிர்சியும் கொடுத்த்து. ஏனெனில் பல வருடங்களுக்கு இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை எப்படி இந்திய அரசு சமாளிக்க வேண்டும் என தீர்மானமாக இல்லை. அதற்கு முன் 30 வருடங்களாக இலைங்கை தமிழர் சத்யாகிரக- அமைதி அரசியலில் ஈடுபட்டும் சிங்கள பேரினவாதத்தினால் மேலும் மேலும் உபாதை பெற்று வந்தனர். அது உலகறிந்த விஷயம். அதனால் ஓரளவு இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு செல்லம் கொடுத்து வந்தது. ஆனால் அதனால் இந்திய அரசு இலங்கையை இரண்டாக துண்டிக்க விரும்பியது என்பது செல்லாது.ஏனெனில் இலங்கை அரசு இந்தியா அரசுக்கு எதிரியாக கருதவில்லை. கடைசியாக இந்தியா இலங்கையை மிரட்டி தன் ”அமைதி” ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு சாதகமாக இலங்கை சட்டத்தையே மாற்றியது. புதிய ஷரத்துகளின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஓரளவு சுயாட்சி பெற்றன. மேலும் ஒரு மக்கள் ரெஃபரெண்டம் கிழக்கு-மேற்கு மாகாணங்கள் ஒன்றாக சேர்வதை தீர்மானிக்கும்.

இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. ஏன்? இந்தியா திட்டம் படி புலிகளை தவிற மற்ற ஈழப் போராளிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த ஏற்பாட்டில் இருப்பார்கள். புலிகளுக்கொ தாங்கள்தான் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள். மேலும் இந்திய திட்டம் சுதந்திர ஈழத்தை கொடுக்க வில்லை. அதனால் இந்திய ராணுவத்துடன் மோதத் தொடங்கினர். இதை விட சிங்கள அரசுக்கு பெரிய உதவி தேவையில்லை. சிங்கள அரசு ஈழப்போராளிகளை இந்தியாவின் செல்லப் பிள்ளை என கருதியிரிந்தது. புலிகள் இந்தியாவுடன் சண்டை போட்டதால், இலங்கை அரசு புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி இன்னும் போர் செய்ய தூண்டியது. இந்தியா அரசுக்கு இலங்கை அரசின் நய வஞ்சகம் தெரியாது என்பதல்ல். ஆனாலும்,உங்கள் நடுவிலே அமைதி கொடுக்கதான் வந்தேன். சண்டை செய்ய அல்ல என சொல்லி, இலங்கயிலிருந்து விலகி ஈழப் போராட்டாத்திலிருந்து கை கழுவிக் கொண்டது.

ஈழ உரிமை போரட்டங்கக்கு Strategic Asset இந்தியாவின் நல்லிணக்கமும், துணையும் தான். அதை தூக்கிப் போட்டு, இலங்கை அரசோடு புலிகள் சல்லாபித்தார்கள். அரசனை நம்பி புருசனை கைவிட்டார்கள். இந்த தப்பு போதாதென்று ராஜீவ் காந்தியையும் (30 அப்பாவிகளுடன்) கோரமாக கொலை செய்தனர். அதனால் இந்திய அரசின் பரம எதிரித் தனத்தை சம்பாதித்தனர். இலங்கை அரசுக்கு புலிகள் போல இருக்கும் எதிரி ஒரு வரப்பிரசாதம். அதைப் போல எதிரிகளைக் கொண்டு, இலங்கை அரசுக்குக்கு நண்பர்களே வாண்டாம்.தன் பலங்களை தானே அழித்துக் கொண்டு, மற்ற தமிழர்களையும் தானே அழித்துக் கொண்டு வேறு எந்த எதிரி செயல்படுவான்.

(இலங்கை) பிரிவை ஆதரிக்காவிட்டால் ஏன் ஆயுத பயிர்சி இந்திய அரசாங்கம் கொடுத்தது என்பதற்கு பதில் அ.இந்திய அரசுக்கு இலங்கை பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பது தெளிவாக இல்லை ஆ.ஓரளவு தமிழக மக்கள் உணர்சியை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது. 1987ல், இந்திய அரசு ஈழ் சுயாட்சியில் தெளிவாக இருந்தது. அதை புலிகள் இலங்கை அரசு உதவியுடன் தோல்வி அடைய செய்தனர். 1991ல், மறுபடியும் இந்திய அரசுக்கு தெளிவு இருந்தது - அதாவது இலங்கையிலிருந்து கை கழுவு. 1992(ராஜீவ் கொலைக்குப் பிறகு) ல் இருந்து மற்றொரு தெளிவு இருந்தது - புலிகளை ஒழிக்க வேண்டும். அது இது வரை தொடருகிரது.

பாகிஸ்தான் - இந்தியா போன்ற பெரிய பிரச்சினைகளுக்கு போகாதீர்கள். வந்த சந்தர்பங்களை தூக்கி எரிந்து விட்டு , யோக்கியன் போல் மற்றவர்களை தூற்றுவது விவேகமல்ல. மேலும் சர்வ தேச உறவுகளிலும், சம்பவங்களிலும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். சந்தர்பங்களை தனக்கு சாதமாக பயன் படுத்தாவிட்டால் உலகை குறை சொல்லி பிரயோசனம் இல்லை

ஜிஞ்ஜர்

வெண்காட்டான் said...

Bramins and malayalis are against tamils. always. sorry if i am wroing. I personally faced them in Indian high commisions, IAS offies, exit offices for tamils all over. indian diplomets. But I know still there is Bramins in LTTE and if u chek regully the vidoes from vanii u can see bramins are killed. but educated ppl are mostly them and they make the indian forgien policy. Naan sonnathu pilai endul very sorry. I didnt hate them. Basically my wife is also bramin. but her cousion brother was a high ranked LTTE and died in 90s. Eelathil piramanarkal tamillarkalaka valkirarkal. Indiyavil....?

வெண்காட்டான் said...

Ginger
I cant type tamil. ur comments are in tamil, mine in english except once.

You said what I ahve asked but u didnt give a good responce. I think.

ungalin mailil ungalin thelivaana pathilaal neengal oru vidayathai virivaka sollivitirkal.

1. ஓரளவு ஆயுத பயிர்சியும் கொடுத்த்து

neegal oralavu endu solli irupapthu ettukollakoodiyatha?
so india wanted LTTE to be there and not to win the Tamileelam. It is clear from u. so y? So India want a problem there and make sri lanka a troubled country. Am i correct?

2. ஏனெனில் பல வருடங்களுக்கு இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை எப்படி இந்திய அரசு சமாளிக்க வேண்டும் என தீர்மானமாக இல்லை.

if it is not sure why they trained the freedom fighters. Is it corrct?
aalam theriyamal kaalai vaithu suttu kondathal thann ippothu alikka ninikirathaa?

3. ஓரளவு இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு செல்லம் கொடுத்து வந்தது.
rajathanthirama, piranthiya vallathikkathukkana muyarchi endu sollalama?

4. ஏனெனில் இலங்கை அரசு இந்தியா அரசுக்கு எதிரியாக கருதவில்லை.
JVP patthi ungaluku theriyuma?
rajeevuku pin mandail adi vilunthathu eaan? Avan piraku electionla nindrathu ungaluku theriyuma? his name is vijitha. pothu makkalin unarvukalai purinthu kolla neengal suyanalam, nattupattu, molipattu, inapattu illamal irukkavenum. Eella porattam nasukkapttalum ungaluku puriyum singalavan ungaluku pinpakakthai kaatuvan. athuvari poruthirungal.

4. கடைசியாக இந்தியா இலங்கையை மிரட்டி தன் ”அமைதி” ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு சாதகமாக இலங்கை சட்டத்தையே மாற்றியது. புதிய ஷரத்துகளின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஓரளவு சுயாட்சி பெற்றன.

palasellam vendam. anmaiel North east pirikkapatta poothu India enna saithatu. silavelai news ungaluku theiyatho?

5.சிங்கள அரசு ஈழப்போராளிகளை இந்தியாவின் செல்லப் பிள்ளை என கருதியிரிந்தது.
athevelai pramedhasa never liked india. so he want to get rid of india because he didnt like india infulsing in Sri Lankan matter as it is delaing with Nepal. (hope nepal is not a big problem as pakistan)

6. புதிய ஷரத்துகளின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஓரளவு சுயாட்சி பெற்றன
meendum ungalin oralavu puranam. fine. oralavu suyattiyal enna kidaithau. athanal oru myraikooda pudunga mudiyavillai.

7. இந்தியா திட்டம் படி புலிகளை தவிற மற்ற ஈழப் போராளிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த ஏற்பாட்டில் இருப்பார்கள்.
irayanmai endu ondu ulla naatil indiavin thittapadi eaan irukkaa vendum. adimaikalla tamilar?
pulikal intha thittathai unarthu 80kalil avarkalin trainnig camps ellathaiuum eelathuku maathiya pin than india vilithu kondu puli vettai thodangiyathu. Aanal pulikal varnthu vittarkal.

7. இந்த தப்பு போதாதென்று ராஜீவ் காந்தியையும் (30 அப்பாவிகளுடன்) கோரமாக கொலை செய்தனர்.
IPKF konda 8000 tamils and rape panniya 5000 appavikal illaya. ennaya rajvioodu sethal appavi. avrin muttal thanathal ingu vantha IPKF kondal athu mattum eaana? unmaikalai maraika vendam. oralavu endu solli samalikka vendam.

ஈழ உரிமை போரட்டங்கக்கு Strategic Asset இந்தியாவின் நல்லிணக்கமும், துணையும் தான். அதை தூக்கிப் போட்டு, இலங்கை அரசோடு புலிகள் சல்லாபித்தார்கள்.

nichayamaka illai. IPKF iruntal poorattam nasukkapadum. (neengal solli vitterkal ahaipatti.) apapdi endal indiayai pakaithukondu ethuvum saiyamudiyathu. athavahtu mirattal allathu aalumai or vallathikkam endu sollalama?

உங்கள் நடுவிலே அமைதி கொடுக்கதான் வந்தேன். சண்டை செய்ய அல்ல என சொல்லி, இலங்கயிலிருந்து விலகி ஈழப் போராட்டாத்திலிருந்து கை கழுவிக் கொண்டது
amaithipadai eanna myruku, tamillarkalai, athuvum indiavai thangal thaainaadaka kondavrkal RAPE panniyathu. Indian army bangaladeshla pooi rape panniyathu ungaluku theriuya? army enal appadi endu solalvendam. India kalacharam enna endu emakkalaurkkum theiuum. (I am really serious, I was Indian Team supporter till IPKF came and from the age i know cricket)

இந்திய அரசுக்கு இலங்கை பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பது தெளிவாக இல்லை
oru pranthiya valarasu ippadi oru kolkai illamal training adn then peace keeping forces anupiyathai solla ungalkku vekkamaka illai. ungalin pilaiyai maraika piranthiya vallarasaakaka vendum endu ninaikum indiavai muttalkal endu sollavendam.
valarasuku muthal nalalrasu aakungal.

1987ல், இந்திய அரசு ஈழ் சுயாட்சியில் தெளிவாக இருந்தது. அதை புலிகள் இலங்கை அரசு உதவியுடன் தோல்வி அடைய செய்தனர்.
mulu pooi. pirabakaranin eela pooratta uruthi pattri IPKF chief Harhiratshigh allathu antha rankil irunthavarkalai kettu parungal. India wanted to make whole sri lanka as its colony. Athu ungalin india valarasu enkira pathathai pavithail irunthu thelivaka thirikirathu. india valarasu endal engaluku santhosam tahn. but Let us live.
Live and Let live. Gunanak


பாகிஸ்தான் - இந்தியா போன்ற பெரிய பிரச்சினைகளுக்கு போகாதீர்கள்.
appa eela pirachanai chinna pirachaniya? naluva vendam. periya pirachanai endu neengal mukkiya visayathai maraikireengal. india training koduthau sari endarl pakistan koduthathum sari endu neengal othukolla vendum enpatharkaka indiavin pilai maraika neengal aadum valamaiyana maluppal pathil than ithu.

இந்தியா அரசுக்கு இலங்கை அரசின் நய வஞ்சகம் தெரியாது என்பதல்ல்.
india ulavu thurai enna pudungiyathu?

கடைசியாக இந்தியா இலங்கையை மிரட்டி தன் ”அமைதி” ராணுவத்தை அனுப்பி

கடைசியாக இந்தியா இலங்கையை ”மிரட்டி” தன் அமைதி ராணுவத்தை அனுப்பி
ippadi than inverted commas varavenum. kaaranam athu than unmai. pirabakaranai india army cheif kulanthaikalai kaati miratuvathiyum atharku pathil solliya vithathil asatha army chief elunthu nindu mariyaathai saivathaium paarungal. vimarsangaluku appal oppartra poorali. kochaipadutha vendam. ungalin naathu pattral. ennalukum india meethu mariyaathai undu. karaam kalyanam endalum karumathi endalum thanjaavur pattum pattinathar padalaum vendum engaluku.


கடைசியாக இந்தியா இலங்கையை மிரட்டி தன் ”அமைதி” ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு சாதகமாக இலங்கை சட்டத்தையே மாற்றியது.
maatriya sattathil evitha palanum illai endu andre pulikal sonanrkal. padithavarkalum sonanrkal. indu athu unmai endu proof aakivittathu. eaan poi piracharam saikireerkal. (example it didnt stop singala kudiyerttram.)

மேலும் ஒரு மக்கள் ரெஃபரெண்டம் கிழக்கு-மேற்கு மாகாணங்கள் ஒன்றாக சேர்வதை தீர்மானிக்கும்.

nichayamaka. but have this regional superpower India able to make it happen. or it had ever tried to impliment it? any proof? dont bluff with it tried oralavuku. then u will say iranyaanmai ulla naatuku ivvalavu tahn alutham kudukkalam endu.

I use net in cafe. so I cant give more. pls publish my comments.
thanks. last and the real truth is I respect inda i love india i love tamil nadu tamilnadu ppl adn temples. I was a true indian than a srilankan. I never was a sri lankan. I dont want to commment anymore. as this will distract from the main article.

Ginger said...

வெண்காட்டன்

மறுபடியும் ஓவரா தமிழை ஆங்கிலத்தில் எழுதி கஷ்டப் படித்திவிட்டீர்கள். உங்கள் மனநிலை புலிகளின் மனநிலைதான். அதாவது எல்லா விஷயத்திலும் All or nothing. மற்றவர்கள் புலிகள் திருப்தியாகும் வரை உதவிசெய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அவர்கள் துரோகிகள். துரோகிகளுக்கு புலிகள் என்ன தண்டனையும் வழங்கலாம். உலகமே புலிகளின் குறிக்கோள்களுடன் ஒத்து உழைக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் எதிரிகள், எதிரிகளுக்கு வேண்டிய தண்டனைகள் வழங்கப் படும். இந்த Self-centered, intolerant மனப்பான்மையால்தான் அவர்கள் கெட்டது - மிக உக்ரமான கட்டுப்பாடும், வீரமும் இருந்துகூட.
உலகத்தில் எந்த விடுதலை இயக்கமும் சர்வதேச நிலையை சாதகப் படுத்திதான் முன்னுக்கு வர முடியும். கடந்த 20 வருடங்களாக வெற்றி பெற்ற ஒரே ஒரு விடுதலை இயக்கம் கோசோவோ இயக்கம் தான். அவர்கள் அமெரிக்க, ஐரொப்பிய ஆதரவை வளர்து, அதன் மூலம் செர்பியா எதிராக வெற்றி பெற்றர்கள். உலகத்தின் மற்ற எல்லா விடுதலை இயக்கங்களும் தோல்விதான் அடைந்துள்ளன. புலிகளும், ஈழ விடுதலை இயக்கங்களும் மிக்க சர்வதேச ஆதரவோடு 80களில் தொடங்கினர். ஆனால் இப்போது மற்ற போராளிகளை கொன்றுவிட்டு, புலிகள் தன் முடிவின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உலகத்தில் ஒரு நண்பரும் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்க மாசசூசெட்ஸ் மக்களவையே ஈழ ஆதரவாக தீர்மானம் இயற்றினர்; இந்திய அரசு மற்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஏன் எல்லா நண்பர்களையும் இழந்து அழிவின் விளீம்பில் நிற்கின்ரனர் என சிந்திக்கவும் - சிந்தனை செய்வதால் உங்களுக்கு காச நோயோ, புற்று நோயோ வராது என நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஜிஞ்ஜர்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஜிஞ்ஜர் ஸார்..

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்.

ஆனால் புலிகளை கொல்கிறோம் என்ற போர்வையில் தமிழ் மக்கள் தொகையையே குறைக்கும்வகையில் கொத்து, கொத்தாக தமிழினத்தை அழிக்கும் முயற்சியை நீங்கள் ஏன் நியாயப்படுத்துகிறீர்கள்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வெண்காட்டான் said...
Bramins and malayalis are against tamils. always. sorry if i am wroing. I personally faced them in Indian high commisions, IAS offies, exit offices for tamils all over. indian diplomets. But I know still there is Bramins in LTTE and if u chek regully the vidoes from vanii u can see bramins are killed. but educated ppl are mostly them and they make the indian forgien policy. Naan sonnathu pilai endul very sorry. I didnt hate them. Basically my wife is also bramin. but her cousion brother was a high ranked LTTE and died in 90s. Eelathil piramanarkal tamillarkalaka valkirarkal. Indiyavil....?///

இரண்டு, மூன்று அதிகாரிகளை மையமாக வைத்து இந்தப் பேச்சு தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன் என்ற அதிகாரிகள் தனித் தமிழ் ஈழத்திற்கு தீவிர எதிரிகள். அவரவர் நிலைப்பாடு அவரவர்க்கு..

ஆனால் இதற்கும் மேலே இந்திய அரசே ஈழத்து மக்களுக்கு எதிராக இருக்கும்போது இவர்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வெண்காட்டான் ஸார்..

உங்களுடைய பொறுமைக்கு எனது சல்யூட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் டைப்பிங் செய்தாலும் இவ்ளோ தூரம் செய்வதற்கு மிகக் கண்டிப்பாக பொறுமையும், இதன் மீதும் ஆர்வமும் இருக்க வேண்டும்.

தமிழில் டைப் அடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மிக எளிது.. கொஞ்சம் கொஞ்சமாக வந்துவிடும்..

மற்றபடி ஜிஞ்ஜருக்கான தங்களது பதிலைப் படித்தேன்.. நன்றி..

நானும் பதில் சொல்ல ஆரம்பித்தால் பிரச்சினை மறுபடியும் முன்னுரைக்கே போய் நிக்கும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Ginger said...

வெண்காட்டன்

மறுபடியும் ஓவரா தமிழை ஆங்கிலத்தில் எழுதி கஷ்டப் படித்திவிட்டீர்கள். உங்கள் மனநிலை புலிகளின் மனநிலைதான். அதாவது எல்லா விஷயத்திலும் All or nothing. மற்றவர்கள் புலிகள் திருப்தியாகும் வரை உதவிசெய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அவர்கள் துரோகிகள். துரோகிகளுக்கு புலிகள் என்ன தண்டனையும் வழங்கலாம். உலகமே புலிகளின் குறிக்கோள்களுடன் ஒத்து உழைக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் எதிரிகள், எதிரிகளுக்கு வேண்டிய தண்டனைகள் வழங்கப் படும். இந்த Self-centered, intolerant மனப்பான்மையால்தான் அவர்கள் கெட்டது - மிக உக்ரமான கட்டுப்பாடும், வீரமும் இருந்துகூட.
உலகத்தில் எந்த விடுதலை இயக்கமும் சர்வதேச நிலையை சாதகப் படுத்திதான் முன்னுக்கு வர முடியும். கடந்த 20 வருடங்களாக வெற்றி பெற்ற ஒரே ஒரு விடுதலை இயக்கம் கோசோவோ இயக்கம் தான். அவர்கள் அமெரிக்க, ஐரொப்பிய ஆதரவை வளர்து, அதன் மூலம் செர்பியா எதிராக வெற்றி பெற்றர்கள். உலகத்தின் மற்ற எல்லா விடுதலை இயக்கங்களும் தோல்விதான் அடைந்துள்ளன. புலிகளும், ஈழ விடுதலை இயக்கங்களும் மிக்க சர்வதேச ஆதரவோடு 80களில் தொடங்கினர். ஆனால் இப்போது மற்ற போராளிகளை கொன்றுவிட்டு, புலிகள் தன் முடிவின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உலகத்தில் ஒரு நண்பரும் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்க மாசசூசெட்ஸ் மக்களவையே ஈழ ஆதரவாக தீர்மானம் இயற்றினர்; இந்திய அரசு மற்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஏன் எல்லா நண்பர்களையும் இழந்து அழிவின் விளீம்பில் நிற்கின்ரனர் என சிந்திக்கவும் - சிந்தனை செய்வதால் உங்களுக்கு காச நோயோ, புற்று நோயோ வராது என நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஜிஞ்ஜர்///

ஜிஞ்ஜர் ஸார்..

புலிகள் தவறு செய்தார்கள். இல்லை என்று மறுக்கவில்லை.

அவர்கள் செய்த தவறுகள்தான் இன்றைக்கு கர்ணனை பலி வாங்குவதைப் போல் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

அதற்காக அப்பாவி மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது.

ilhamaran said...

ஒஸ்கார் மட்டுமல்ல
விட்டால்
உலகத்தின் கண்ணுக்குள்ளேயே
விரல் விட்டு ஆட்டுவாய் நீ.
விமானம் கட்டிப் பறப்பதும்
நீர்மூழ்கி செய்து நீந்துவதும்..
ஏய் தமிழா
நீ செய்யத்தக்க செயல்களா இவை!
தருவதை திண்டுகொண்டு
அவனுகள் பேண்டதை அள்ளிக்கொண்டு
அரசியல் நீரோட்டத்தில் கலந்து போன
இழிந்த தமிழினத் துரோகிகளாய் வாழ்வதில்
உனக்கென்ன பிரச்சனை!

வெண்காட்டான் said...

ginger
from your reply I can see that u will never accept ur falts or you didnt want to read if fully. because you never REPLIED to my questions. anyway ippadi summa ulari avamanapada vendam. illai endarl porumayaka naan keetta kellikalil exam paperil varuvathu poola neengal virumbiya 5 keelvikaluku mattum patil alika.
lol.
unalai veeda ennaku indiavil viruppam ippavum irukirathu. athukum meel ennaku tamillil paasam irukkrathu. ellavattukum meel ennaku manithapimaanam irukkirathu. ithai vida vallarasu vallarasu endu solli periyanaadukal enna saikindrana. ulakathil entha entha naadukalil amarica enna panniyathu USSR enna panniyathu, india enna panniyathu enpathu pattriyum konja pothu arivum ullathu.

ethirikalai kollahta oru naadu sollungal. naan neengal solluvathai ellavattriyum eaatru kolkiran. mattum padi eni ungaluku vilakkam alikka naan thayaraka illai.

sinthipathal kaaasanooi varaathau. nakkuvathal venum enndal thottru nooi varum.

tamillan,
ennaku tamil typing varum. but baamini font. baamini to unicode converter install pannavenum. english tamil varaathu. athu palakiran. I was in media and SL and now excile in another country. so I use net in cafe. I cant install tamil typing stuff. hope i will settle soon. athuku piraku paarunga. ellaraiyum pirichu meivam.
nandri

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ilhamaran said...

ஒஸ்கார் மட்டுமல்ல
விட்டால்
உலகத்தின் கண்ணுக்குள்ளேயே
விரல் விட்டு ஆட்டுவாய் நீ.
விமானம் கட்டிப் பறப்பதும்
நீர்மூழ்கி செய்து நீந்துவதும்..
ஏய் தமிழா
நீ செய்யத்தக்க செயல்களா இவை!
தருவதை திண்டுகொண்டு
அவனுகள் பேண்டதை அள்ளிக்கொண்டு
அரசியல் நீரோட்டத்தில் கலந்து போன
இழிந்த தமிழினத் துரோகிகளாய் வாழ்வதில்
உனக்கென்ன பிரச்சனை!///

நன்றி இளமாறன் ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வெண்காட்டான் said...

tamillan, ennaku tamil typing varum. but baamini font. baamini to unicode converter install pannavenum. english tamil varaathu. athu palakiran. I was in media and SL and now excile in another country. so I use net in cafe. I cant install tamil typing stuff. hope i will settle soon. athuku piraku paarunga. ellaraiyum pirichu meivam. nandri///

வெண்காட்டான் ஸார்..

NHM Software-ல் பாமினி டைப்பிங் மெத்தட் இருக்கிறது..

அதனை பயன்படுத்தி டைப்பிங் செய்யலாமே..

எது எப்படியிருந்தாலும் மிக விரைவில் தாங்கள் களம் புக வாழ்த்துகிறேன்.. வரவேற்கிறேன்..

வருக.. வருக..

வெண்காட்டான் said...

nandri. I will try.

Ginger said...

வெண்காட்டன்

பாமினி, கீமினிகளை விட்டுத்தள்ளுஙள். NHM media software download செய்து கொள்ளுங்கள். தமிழ் டைப் அடிக்கிரது ஈசி. இ என்றால் ஒரு சிரிய e . ஈ என்றால் இரண்டு முறை சிரிய e அல்ல்து ஒரு காபிடல் E. மூ என்பதற்கு அடிக்க வேண்டியது m , e, e or m, E.
என்னிடமிருந்து பதில் வேண்டுமென்றால் தமிழில் எழுதவும் அல்லது ஆங்கில மொழியில் எழுதவும்.

உண்மைத் தமிழன்

புலிகள் எதோ ‘தவறு’ செய்தார்கள் என்கிறீர்கள். தற்பொழுது, அரசு படைகள் தங்களை சூழ்ந்த காரணத்தால், 50,000 அப்பாவி மக்களை தங்களை சுற்றி துப்பாக்கி முனையில் சூழ வைத்து, போர்களத்தை போக விடாதபடி தடுக்கின்றனர். அதனால் நிச்சயமாக அப்பாவி தமிழர்கள் உயிர் இழக்கின்றனர். கடந்த 24 மணிகளில் போரில் 250 மேற்பட்ட தமிழரகள் பீரங்கி குண்டுகளால் உரிர் இழந்தனர்.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8042341.stm

இதன் நேர் காரணம் புலிகளின் கோழைத்தனம். நேர்போரில் வீர மரணம் அடையாமல் அப்பாவி மக்களை போர்களத்தில் பிணையாக வைத்துள்ளனர். ”அதற்காக அப்பாவி மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது.” என்பது நல்ல எண்ணம். அதற்கு பரிகாரம் என்ன. மக்களை தங்கள் பிடியிலிருந்து விடுவிக்கும் படி, மற்ற தமிழர்கள் புலிகள் மேல் கோரிக்கை வைக்க வேண்டும். புலிகள் செய்வது ‘தவறு’ இல்லை. பாசிச, தமிழர் அழிப்பு கொள்கை.

ஜிஞ்ஜர்

வெண்காட்டான் said...

ginger naan tholil reethiyaaka tamil type panna koodiyavan.so ennaku ahtu thaan easy and ithai palakinal kattayam vekkamana typeingku kastamakka amaiyum. baamini vanthu typewriter poola oru keybord and for the maatravum thiruthavum athu elakuvanathu.(proof)

BBCyai nambum neengal eaan tamilnet and tamilwin puthinam il varum padangalai nambuvathillai? graphics endu sollakoodiyavarkal thaan neengal. ungalin manithathanmai avvalavu kevalamaatahhu. pulikal neradiyaaka sandai pidikka villai endarl eppadi 6 kilometer parrappai 50000 srilankan army indian army indian and sri lanakan tanks pidikka mudiyamal 14naatkalaai thinarukiraarkal.
nenglum ungalin kevalamana pathilum. muttalkal endu makkalukuku sollum sila undkangalin kathaikum ungakalin kahtaikum oru vithiyaasamum illai.

meendum meendum palaya pallaviyai paadavendam. pulikal pidihtu vaithiruuka villai. mannaril thodangi puthukudiiryuupu varai makkal oruvarum veliyeravillai. ottu mothamaka 100 kooda veliya veavaillai. piinar idapirachai muttrukai irukave avarkal veliye vantharkal. athaivida ungal moolaiku ondri urathavenum. vanni makkal anivaruum pulikal aatharavalarkal. ungal karhtupadi aatharavu illavittalum tamilnaatil muslimkal endrale oru santhekathoodum usa europeil muslim endalum evvalavu pirachanaikalai ethirkolla venudumoo athai vida pala madangu thunbangalai ethirkolla venum india and srilaanka amaithirukkum mukaamkalil. ehtinai penkaal paaliyal valluravuku aakirangal enpathum nirvvaanamaka army hosplitalkalil panipurikirarkal enpathum ungaluku nichayam thirithirukkum. aanal ungal pidivaathamana puli ethipukkaka appavi makkalai paatti pesa marakkireekal. inthiya pooattaammum ippadithan irunthathu. nelson mandelavum ippadithan. samaathana pechukupoona arafathkuku milakai aracha sarvatheesa samukam. ithallam ungaluku puriyaathalla. neengal undade athallam periya naadu endu solli kevalamaana maluppal pathivai alipperkal. innum kooda en keelvikaluku nengal pahtillakka virummabillai. inge pathillalka mudiyaavittal venkattan@gmail.com ku poodungal. ungalin pidivaathatahium veen vaathathayum eaan pothu idathil vaanguvan..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Ginger said...

என்னிடமிருந்து பதில் வேண்டுமென்றால் தமிழில் எழுதவும் அல்லது ஆங்கில மொழியில் எழுதவும்.//

இதெல்லாம் ஓவரு..

பதிவருக்கு எது வசதிப்படுதோ அதுலதான் அவர் எழுதுவாரு..

நம்மகிட்ட பேசணும்னா போன்லதான் பேசணும்.. நேர்ல பேசக்கூடாது.. இந்த டைம்லதான் பேசணும்னு சொல்றதெல்லாம் டூ மச்சு..

//உண்மைத் தமிழன்
புலிகள் எதோ ‘தவறு’ செய்தார்கள் என்கிறீர்கள். தற்பொழுது, அரசு படைகள் தங்களை சூழ்ந்த காரணத்தால், 50,000 அப்பாவி மக்களை தங்களை சுற்றி துப்பாக்கி முனையில் சூழ வைத்து, போர்களத்தை போக விடாதபடி தடுக்கின்றனர். அதனால் நிச்சயமாக அப்பாவி தமிழர்கள் உயிர் இழக்கின்றனர். கடந்த 24 மணிகளில் போரில் 250 மேற்பட்ட தமிழரகள் பீரங்கி குண்டுகளால் உரிர் இழந்தனர்.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8042341.stm
இதன் நேர் காரணம் புலிகளின் கோழைத்தனம். நேர் போரில் வீர மரணம் அடையாமல் அப்பாவி மக்களை போர்களத்தில் பிணையாக வைத்துள்ளனர். ”அதற்காக அப்பாவி மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது.” என்பது நல்ல எண்ணம். அதற்கு பரிகாரம் என்ன. மக்களை தங்கள் பிடியிலிருந்து விடுவிக்கும்படி, மற்ற தமிழர்கள் புலிகள் மேல் கோரிக்கை வைக்க வேண்டும். புலிகள் செய்வது ‘தவறு’ இல்லை. பாசிச, தமிழர் அழிப்பு கொள்கை.
ஜிஞ்ஜர்///

ஏன் இப்போது புலிகளுக்கிடையில் தமிழ் மக்கள் இருப்பதினால் சிங்கள அரசுக்கு என்ன கேடு வந்தது..? எதற்காக குண்டு வீச வேண்டும்..?

பேச்சு வார்த்தையில் ஈடுபடலாமே..? சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசும் அரசு அந்தப் பதவியில் இருக்கவே தகுதியற்றது..

thequickfox said...

சுய புத்தியுள்ள யாராவது புலிகளுடன் இனியும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்களா? தமிழர்களை பாதுகாக்க முடியாத ஆயுதங்களை கையளித்து சரணடையும்படி வேண்டுகோள் விடுங்க. அது தான் நடக்க கூடியது.மக்களையும் அழிவில் இருந்து பாதுகாக்கலாம்.

Ginger said...

”சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசும் அரசு அந்தப் பதவியில் இருக்கவே தகுதியற்றது..”

உ.த., சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து இருக்கமுடியாது, தனி ஈழமே கதி என்று சவடால் விட்டு, உடனே இலங்கையை தமிழர்கள் ‘சொந்த நாடு’ என்கிறீர்களெ , சரி முரண்பாடு என்றால் என்ன, என்று அகராதியில் பாருங்கள்.”எதற்காக குண்டு வீச வேண்டும்..? பேச்சு வார்த்தையில் ஈடுபடலாமே..?”

தமிழர்களை பாதுகாப்பது `தமிழ் தலைவர்களின்` பொறுப்பு அல்ல, தமிழர்களின் எதிரிகள் பொறுப்பு !! பேஷ். புலிகள் மேல் ஒரு தப்பும் இல்லை, எல்லா தப்பும் புலிகளை எதிர்ப்பவ்ர்களுடையது தான். மேலும் தமிழர் அழிப்பு சக்திகளுக்கு நீங்கள் உபதேசம் சொல்ல வேண்டும், அவன் உங்கள் அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும் !!! என்னா பிரதர் கனவு உலகத்தில் இருக்கீர்களா. பூலோகத்திற்கு சற்று வாரும்.

ஜிஞ்ஜர்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///thequickfox said...
சுய புத்தியுள்ள யாராவது புலிகளுடன் இனியும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்களா? தமிழர்களை பாதுகாக்க முடியாத ஆயுதங்களை கையளித்து சரணடையும்படி வேண்டுகோள் விடுங்க. அதுதான் நடக்க கூடியது. மக்களையும் அழிவில் இருந்து பாதுகாக்கலாம்.///

புலிகள் செய்த தவறுகளே இன்றைக்கு அவர்களை ஓட, ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது. இதனை நடுநிலையுள்ள அனைவருமே ஒத்துக் கொள்வார்கள்.

ஆனால் அதற்காக சிங்கள ராணுவத்திடம் சரணடைவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதது.

வேண்டுமானால் புலிகள் ராணுவ நடவடிக்கைகளில் இறங்காமல் மக்களைத் திரட்டி போராடலாம்.

ஆனால் இன்றைக்கு வன்னி இருக்கின்ற நிலைமையில் மக்களுக்கு போராட்ட உணர்வு உடனே எழுமா என்பது சந்தேகம்தான்..

தினம், தினம் செத்துப் பிழைக்கின்ற எமது மக்களிடம் போய் தேசபக்தி, மொழி பக்தி, நாடு, இனம், மதம், மொழி என்று பேசிவிட முடியாது..

வருத்தம்தான்.. என்னதான் செய்வது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Ginger said...

”சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசும் அரசு அந்தப் பதவியில் இருக்கவே தகுதியற்றது..”

உ.த., சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து இருக்கமுடியாது, தனி ஈழமே கதி என்று சவடால் விட்டு, உடனே இலங்கையை தமிழர்கள் ‘சொந்த நாடு’ என்கிறீர்களெ , சரி முரண்பாடு என்றால் என்ன, என்று அகராதியில் பாருங்கள்.//

ஐயா இலங்கையில் இந்தியாவில் இருந்து சென்று குடியேறிய சிங்களவர்களும் ஒரு பகுதியில் நிரம்பியிரு்ப்பதால்தான் இரண்டாகப் பிரித்து ஒரு புறம், மற்றொரு புறம் சிங்களவர்களும் வாழலாம் என்கிறோம்.

பிரிக்கப்படாததுவரையில் ஒரே நாடுதானே.. எங்களது தேசம்.. ஒரே தேசம்தான்.. சிங்கள தேசம்தான்.. என்று கோஷம் போட்டுத்தானே பக்சே சகோதரர்கள் குண்டு மழை பொழிந்து வருகிறார்கள்.

பிறகென்ன..? சொந்த நாட்டில் குடியிருப்பவர்களும் சொந்த மக்களாகத்தானே இருக்க முடியும்..?

//”எதற்காக குண்டு வீச வேண்டும்..? பேச்சு வார்த்தையில் ஈடுபடலாமே..?”

தமிழர்களை பாதுகாப்பது `தமிழ் தலைவர்களின்` பொறுப்பு அல்ல, தமிழர்களின் எதிரிகள் பொறுப்பு !! பேஷ். புலிகள் மேல் ஒரு தப்பும் இல்லை, எல்லா தப்பும் புலிகளை எதிர்ப்பவ்ர்களுடையதுதான். மேலும் தமிழர் அழிப்பு சக்திகளுக்கு நீங்கள் உபதேசம் சொல்ல வேண்டும், அவன் உங்கள் அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும் !!! என்னா பிரதர் கனவு உலகத்தில் இருக்கீர்களா. பூலோகத்திற்கு சற்று வாரும்.
ஜிஞ்ஜர்///

ஸார்.. புலிகளை என்னைவிட அதிகமாக விமர்சித்தவர்கள் யாரும் இங்கு இல்லை..

எனது பழைய பதிவுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள்.. புரியும்.. தெளியும்.

ஆனால் இன்றைய நிலைமையில் சிங்கள அரசின் கண்மூடித்தனமான தாக்குதலால் அப்பாவி மக்களும் இறந்து கொண்டிருக்கும் கொடுமையை புலிகளுக்காக நான் பொறுத்துக் கொள்ள முடியாது..

linuxramesh said...

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் முக்கிய இடம் பிடித்துவரும் "இலங்கை தமிழர்களைக் காக்க மத்திய அரசு போராடவேண்டும்" என்ற கோரிக்கையும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்களும் மறியல்களும் உயிர்தியாகங்களும் தினமும் செய்தித்தாள்களை ஆக்கிரமித்துவருகின்றன. இலங்கைப் பிரச்சனையில் இது வரை ஒவ்வொரு தலைவரும் நடத்திவரும் நாடங்களைப் பார்த்தால் தலை சுற்றும்..
தி.மு.க தலைவர் கருணாநிதி இலங்கைத் தமிழர் வாழ்வு மலர என் ஆட்சியை வேண்டுமானாலும் நான் தியாகம் செய்வேன் என்று சொல்வார். மனித சங்கிலி போராட்டம் என்ற பேரில் அப்பாவி மாணவர்களை மணிக்கணக்கில் மழையில் நனைய விடுவார்.. எங்கே ராமதாஸ், வைகோ போன்ற தலைவர்கள் இலங்கைப் பிரச்சனையில் முக்கியத்துவம் பெற்றுவிடுவார்களோ என்ற பயத்தில் நாளொறு கவிதையும் பொழுதொறு அறிக்கையுமாய் காலத்தை ஓட்டுவார்... மத்திய அரசே தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று மற்ற பிரச்சனைக்கெல்லாம் உதார் விடுபவர் இலங்கைத்தமிழர் நலனைக் காக்க ஒரே முறை டெல்லி செல்வார் - அதிலும் சோனியா உள்ளிட்ட டெல்லித் தலைவர்களிடம் பேசித் தீர்க்க தன்னுடைய சொந்தப்பிரச்சனைகள் பல இருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எந்தப் போராட்டம் நடந்தாலும் அது தன் தூண்டுதலால் - தன் ஆசியுடன் தான் நடைபெற்றது என்று அறிக்கை விடுவார். இதுதான் கருணாநிதியின் இனமான உணர்வு. சமீப காலமாக கட்சி நலனைவிட தனது குடும்பநலனையே பிரதானமாக கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் இவர் தனக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்கள் நலனையே காற்றில் பறக்கவிடும் நிலையில் இலங்கைத் தமிழர்களையா காப்பாற்ற போராடப்போகிறார் - பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் ?
அடுத்ததாக வைகோ. இலங்கைப் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யும் அதிமுக்கியமான தலைவர். இலங்கைத் தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர் உருப்படியாக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்று ஆராய்ந்தால் பலன் பூஜ்ஜியம் தான். தி.மு.க தலைவர் கருணாநிதியைப் போலவே சிறந்த பேச்சாற்றல் பெற்ற வைகோ உணர்சிமயமாக சொற்பொழிவாற்றுவதையும் போராட்டம் நடத்துவதையும் மத்திய அரசுக்கு மனு கொடுப்பதையும் தவிர்த்து வேறு ஒன்றுமே உருப்படியாக செய்யவில்லை என்பது உலகறிந்த உண்மை. தன்னை தி.மு.க விலிருந்து விலக்கினார்கள் என்பதற்காக தீக்குளித்த தனது கட்சித் தொண்டனைப் பற்றி ஒரு காலத்தில் வாய் ஓயாமல் பேசிவிட்டு அடுத்த தேர்தலிலேயே தி.மு.க தலைமையிடம் தஞ்சமானதும் - தன்னைப் பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதாவை ஏறுமாறாக ஏகடியம் பேசி ஏசிய கொஞ்ச நாளிலேயே தான் ஏசிய அதே ஜெயலிலிதாவிடம் கூட்டணி அமைத்ததும் தமிழக மக்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. உணர்சிமயமாகப் பேசுவதைத் தவிர வைகோ வேறு ஒன்றையுமே உருப்படியாக செய்யமாட்டார் என்று தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இவரா இலங்கைப் பிரச்சனையில் ஒரு தீர்வை ஏற்படுத்த வழிவகை செய்யப்போகிறார் ?
பா.ம.க தலைவரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தன் கட்சி நலன் - அதை விட முக்கியமாக தன் சொந்த நலனை பிரதானமாகக் கருதுபவர். இதற்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கு ஆதாயம் கிடைக்கும் கட்சியாகப் பார்த்து கூட்டணி வைப்பவர் - தானோ தனது குடும்ப உறுப்பினர்களோ எக்காலத்திலும் பதவிக்கு வரமாட்டோம் என்று ஒரு காலத்தில் சொன்ன வாக்குறுதியை மறந்து தனது மகனை குறுக்கு வழியில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் - மகன் எக்குத்தப்பாக பிரச்சனையில் மாட்டியபோது உதவிக்கு வரவில்லை என்ற காரணத்தால் தி.மு.க தலைவரிடம் மனஸ்தாபம் கொண்டு கூட்டணியிலிருந்து விலகிவிட்டு பிறகு அதே மகனின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் இணைந்தவர்.. சொந்த நலன் - கட்சி நலன் ஒன்றைத் தவிர வேறு எதையுமே மனதில் கொள்ளாத ராமதாஸா இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடப் போகிறார் ?
இலங்கைத் தமிழர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு நான்கு நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட உன்னத மனிதர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். தனது கட்சிக்காரர்கள் தங்களால் முடிந்தமட்டும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை - அநியாயமாக எங்கள் மீது பழியைப் போடுகிறார்கள் என்று புலம்பி மக்களிடம் அனுதாபம் பெற இவர் செய்த முயற்சிகளை குழந்தை கூட நம்பவில்லை. தலித்துகள் நலனைக் காக்க இவர் போராடுகிறாரோ இல்லையோ - தமிழ் திரையுலகில் ஒரு இடத்தைப் பிடிக்க மிகக் கடுமையாக போராடுகிறார். தமிழகத்தில் எங்கே பகுஜன் சமாஜ் கட்சி தங்களுக்கு போட்டியாக வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தன்னை எதிர்ப்பவர்களைப் பற்றி இவர் புலம்பும் புலம்பல்கள் நல்ல காமெடி தான். தி.மு.க - அ.தி.மு.க என்ற இரண்டு கழகங்களில் காலில் விழாமல் சுயமாக நின்று சொந்தக் கட்சியையே காப்பாற்ற திராணியில்லாத இவரா இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றப்போகிறார் ?
இவர்களின் நிலையே இப்படி என்றால் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தி.க தலைவர் வீரமணியைப் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். விடுதலைப் புலிகளை உள்மனதில் ஆதரித்தாலும் மத்திய ஆட்சியில் பங்கு பெற்றுள்ளதால் புலிகளுக்கான ஆதரவை வெளிப்படையாக கொடுக்க முடியாமல் திண்டாடும் நிலையில் கருணாநிதியும், விடுதலைப் புலிகளை மாவீரர்களாகச் சித்தரித்து வார்த்தை ஜாலம் நடத்திவரும் வை.கோ, திருமாவளவன் போன்றவர்களும், புலிகளைப் பற்றி வெளிப்படையாக ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் உள்ள பா.ம.க, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் நடத்தும் போராட்டம் போன்ற இந்தக் கூத்துகளை எல்லாம் பார்க்கும் போது காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா எவ்வளவோ தேவலை. அவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உருப்படியாக ஒன்றையும் செய்யவில்லை என்றாலும் மற்ற தலைவர்கள் அடித்த ஸ்டண்டுகளை இவர்கள் செய்யாதது எவ்வளவோ தேவலை.
ஆக மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரும் இலங்கைத் தமிழர் நலனுக்காக உண்மையாகப் பாடுபடவில்லை - பாடுபடப் போவதில்லை. இவர்கள் செய்வதெல்லாமே அரசியல் ஸ்டண்டுகள் தான். மத்திய அரசை ஸ்டண்ட் அடிக்கும் எந்த ஒரு அரசியல்வாதியும் இலங்கை அரசுக்கு எதிராக திருப்பபோவதில்லை. முக்கியமாக இவர்களது கூத்துக்களால் இலங்கையில் நல்லாட்சி நிச்சயம் மலரப்போவதில்லை.. இதை அப்பாவி பொதுமக்கள் உணரவேண்டும் - அவர்களால் முடிந்த அளவிற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும். நம்பிக்கையான தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக உதவி செய்யுங்கள் என்று கேட்டுவரும் போது தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும். ஓரளவிற்காகவது அங்குள்ள மக்களின் துயரப் போக்க முற்படவேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் தங்களது சொந்த முயற்சியால் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக உலக நாடுகள் இணைய முயற்சி செய்ய வேண்டும். தமிழக மக்கள் தங்களது சகோதர தமிழர்களுக்காக இதைச் செய்வார்களா ?

linuxramesh said...

யாரையும் தொழில பத்தி கேவலம் பேசாதிங்க நம்ப தமிழன் னுக்கு ஒன்ன ஓடி வராங்க அத தா பார்க்கணும் திரை உலகம் பத்தி தப்பாக பேச கூடாது
எத்தன நாளைக்குத்தான் புலிகள் போராட முடிஉம் மக்கள் தன ஒன்று பட வேண்டும் , புலிகள் என்றால் பிரபாகரன் மட்டும் தான அந்த பச்சை துரோகி கருணா ஒரு பக்கம் பிரிந்து போய்டன் வடக்கு பக்கம் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று யாருகாவது தெரியுமா வெளிநாட்டிற்கு ஓடி போன மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்த்து இங்கு போராடினால் தான் தனி ஈழம் உறுதி யாகும் புலிகள் கர்ணன் போர்களத்துக்கு போனபோல இருக்கிறார்கள் எதனை பேருடன் போராட முடிஉம் ஒரு பக்கம் சீனா ,பாகிஸ்தான் இஸ்ரேஅல் மறைமுகமாக இந்திய போததகுக் நம்ப திருட்டு அரசி யால் வாதிகள் இதன பேரையும் சமாளிக்கணும் முடிஉமா அடுத்தவன் பேச்சை கேட்டு இன்றைக்கு இவ்வளோ மக்கள் செதுபோனத்துக்கு யாரு காரணம் நீ மட்டும் தான் நல்ல வேலை நீ பிடெல் காச்டோர் போல் ஆகா வேண்டும் என்று நினைக்காமல் இருப்பதினால் தான் அமெரிக்க உன்னை இன்னும் எஅதும் செய்யவில்லை நீ கம்யூனிசம் கொள்கைக்குக் வந்திருத்தல் சீனா , கியூபா ,வெனிசுலா , வியட்னாம் , வட கொரியா, ரஷ்ய மற்றும் கம்யூனிச நாடுகள் உதவி செயும்

நான் படித்த கட்டுரையும் இணைகிறேன்

பிரபாகரனுக்கு…

ஈழ மக்கள் மருத்துவ வசதியில்லாமல் தொற்று நோய்க்கும், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆளாகி தவித்து வரும் நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
உன்னை தோழர் என்று அழைக்கவோ, போராளி என ஒப்புக் கொள்ளவோ மனம் மறுக்கிறது. பசி, பட்டினியுடன் அடுத்த விநாடி உயிர் வாழ்வோமா என்ற நிச்சயமற்ற நிலமையில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்போது, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி சகோதரிகள் கதறிக் கொண்டிருக்கும்போது… எப்படி உன்னை புரட்சியாளனாக, மதிக்க முடியும்?
ஈழத்தமிழர்களின் இன்றைய நிலமைக்கு யார் காரணம் என எப்போதாவது உனக்குள் கேட்டிருக்கிறாயா? சிங்கள இனவெறிதான் இதற்கு காரணம்… இதுகூடவா தெரியாது என்று சொல்லிவிட்டு போகாதே. சிங்கள இனவெறி மட்டுமல்ல, உனது பாசிச நடவடிக்கைகளும் இன்றைய ஈழ நிலமைக்கு காரணம். இதுதான் உண்மை.
உன்னையும், உனது இயக்கத்தையும் வளர்த்து ஆளாக்கியது யார்? சத்தியமாக ஈழத்தமிழர்களல்ல. இந்திய உளவுப்படை! அதனால் தான் ஆரம்பம் முதலே உனது பயணம் தெற்காசிய பிரதேசத்தின் நாட்டாமையாக வலம் வரத் துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாக அமைந்துவிட்டது. இது போதாதென்று உலக போலீஸ்காரனான அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை வேறு…
ஏன் பிரபாகரா, குள்ளநரிகளும் ஓநாய்களும், எதற்காக, எதன் பொருட்டு உதவி செய்யும், வளர்த்து ஆளாக்கும் என்ற தெளிவில்லாமலா ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பினாய்? அதுசரி, ‘விடுதலைப் புலிகள்‘ இயக்கத்துக்கு என்ன அரசியல் தெளிவு, சித்தாந்தம் இருக்கிறது? உனக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கம் ஒரு போலி கம்யூனிஸ்ட். இந்திய உளவுத்துறையின் ‘முழுநேர ஊழியனாக‘ பணிபுரிந்த ஆள். அப்புறம் பழ. நெடுமாறன் வகையறா. பாசிஸ்ட் இந்திராகாந்தியை ஆதரித்த பழ.நெடுமாறனால் என்ன விதமான அரசியல் தெளிவை உனக்குள் ஏற்படுத்தியிருக்க முடியும்? தமிழக நக்சல்பாரிகளை கொடூரமாக தாக்கிய தேவாரம், மோகன்தாஸ் போன்ற அடியாட்களை பராமரித்த எம்.ஜி. இராமச்சந்திரனை புகழ்ந்த பழ.நெடுமாறானால் எப்படி போராளிகளுக்கு சித்தாந்தத்தை கற்று தந்திருக்க முடியும்?
அதனால்தான் உன்னால் உலகம் முழுக்க அரசியல்ரீதியான ஆதரவை திரட்ட முடியவில்லை. அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியவில்லை. எழுதப்பட்ட, எழுதப்படாத வரலாற்று நெடுகிலும், ‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதியஜனநாயகபுரட்சியாக இருக்கும்’ என்று காணப்படுகிறதே… இதை நீ கற்காமல் போனதால்தான், உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்களுடன் உன்னால் தொடர்பு கொள்ளவோ, ஆதரவு திரட்டவோ முடியவில்லை.
புரட்சிகர நடவடிக்கையில் உன்னால் ஏன் இறங்க முடியாமல் போயிற்று? காரணம் உனது பிறப்பு! (புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்). எல்.டி.டி.இ, எனப்படும் புலிகள் இயக்கம் வடக்கு மாகாணமான யாழ்பாணம் வளைகுடா பிராந்தியத்தைதளமாக கொண்டுதானே செயல்பட ஆரம்பித்தது. மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவான, உனது இயக்கத்தால், ஏகாதிபத்திய, பாசிச அரசாங்கத்தின் வால்பிடித்தபடி செல்லத்தான் முடியும்.
ஈழ மக்களை இப்படியான அவலநிலைக்குத்தான் கொண்டுவந்து நிறுத்த முடியும். தமிழக ஓட்டுக் கட்சிகள் என்னை ஆதரிக்கிறார்கள் என சந்தோஷப்படாதே. உனது பிறப்பை போலவே (இங்கும் புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்) தமிழக ஓட்டுப் பொறுக்கிகளின் பிறப்பும் மேல்சாதி முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப்பின்னணியில் உருவானவைதான். அதனால்தான் ஓட்டுக் கட்சிகள் உன் புகழ்பாடுகிறார்கள்.
பிரபாகரா, ஈழத்தில் சொந்தக் காலிலும், வெளியில் புரட்சியாளர்களையும், பரந்துபட்ட மக்களையும் சார்ந்து நிற்கும் யுத்ததந்திரங்களை நீ கற்றிருந்தால், இன்று ஈழத்தின் நிலமையே வேறாக இருக்கும். ஆனால், இந்த போர்த்தந்திரங்களை உனது அரசியல் ஆலோசகராக தன் வாழ்நாள்வரை இருந்த பாலசிங்கம் சொல்லித்தந்திருக்க மாட்டான். காரணம் முன்பே சொன்னபடி பாலசிங்கமே ஒரு போலி கம்யூனிஸ்ட். அப்படியே தப்பித்தவறி பாலசிங்கம் உனக்கு இதையெல்லாம் சொல்ல வந்திருந்தாலும் நீ அதை செவிகொடுத்து கேட்டிருக்க மாட்டாய். காரணம், நீ முகஸ்துதியால் உருவானவன். பாசிஸ்டுகளிலேயே இரண்டுவகை உண்டு. ஒரு பிரிவினர் முகஸ்துதியால் சூழ்ந்திருப்பர். இன்னொரு பிரிவினர் முகஸ்துதியால் உருவாக்கப்படுவர். நீ இரண்டாவது வகையை சேர்ந்தவன்.
வரலாற்றில் தனிநபர்களின் பாத்திரம் குறித்த இயக்கஇயல் கண்ணோட்டம் புரட்சியாளர்களுக்கு உண்டு. சரித்திரம் சிலநாயகர்களை உருவாக்குவது போலவே, சரித்திரத்தின் போக்கைமாற்றும் பங்கும் இவர்களுக்கு உண்டு. இந்த விஷயம் உனக்கு பொருந்தாது.
காரணம், வசந்த் அண்ட் கோ விளம்பரத்தில் எல்லாம் கழிசடை வசந்தகுமார் சிரித்தபடி போஸ் கொடுப்பது போலவே, எல்லா புகைப்படத்துக்கும் நீ போஸ் கொடுக்கிறாய். இந்தியாவில் நீ இருந்த காலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகைகளிலும் உனது பேட்டிகளும், செய்திகளும் வந்தன.அந்த விஷயத்தில் பாலசிங்கம் ஒரு திறமையான பி.ஆர்.வோ.வாக செயல்பட்டான். கிட்டத்தட்ட ஜூனியர்விகடன், உனது பிரச்சார பீரங்கியாக இருந்தது. இதெல்லாம் உனக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்தாயா? அடப்பாவமே… பிரபாகரா, இதற்கெல்லாம் ஆதாரமாக இந்திய உளவுத்துறை இருந்ததப்பா. அப்போது நீ, அவர்களது செல்லப் பிள்ளையல்லவா? அதனால் உன்னை சிங்காரித்து அலங்கரித்தார்கள். விதவிதமாக படம்பிடித்தார்கள்.ஊடகங்கள் வழியாக உன்னை குஷிப்படுத்தினார்கள். இப்போது இந்திய உளவுத்துறைக்கு நீ வேண்டாதவனாகி விட்டாய்.எனவே தொடர்புசாதனங்களும் உனக்கு எதிராக இருக்கின்றன. இதை புரிந்து கொள்ளாமல் இப்போதும் நீ, இந்தியா ஏதாவது செய்யுமா என ஏக்கத்துடன் காத்திருக்கிறாய்.
ஒன்றை புரிந்து கொள் பிரபாகரா… உண்மையான புரட்சியாளனும், போராளியும் ஒருபோதும் ‘தன்னை‘முன்னிலைப்படுத்த மாட்டான். இயக்கத்தையே முன்னிருத்துவான். புரட்சியாளர்களின் அகராதியில் எப்போதுமே, ‘நான்‘ கிடையாது. ‘நாங்கள்‘தான்.
உனது புகழ்பெற்ற வாசகங்கள் என்ன? ”யுத்த முனையில் எதுவும் ‘எனது‘ உத்தரவுபடியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கேயுள்ள ‘எனது‘ தளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் எல்லோரும் ‘நான்‘ எப்படி சிந்திப்பேனோ, அப்படி சிந்திக்க பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்…” அடேங்கப்பா, ஒரு இயக்கத்தையே அடியாள் படையைப் போல் நடத்தும் வல்லமை பாசிஸ்டுகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால்தான் அது, உனது கலையாகவும் இருக்கிறதா?

இலங்கையின் அதிபனாக இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் உனக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்)மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது.
அடிக்கடி நீ சோசலிசம், மக்கள் ஜனநாயகம் என உச்சரித்து வார்த்தை விளையாட்டை நடத்தலாம். ஆனால், இட்லர் கூட தேசிய சோசலிசம், கட்டுப்பாடு, ஒழுங்கு, தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது, தேசிய கெளரவத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில்தான் ஆட்சிக்கு வந்தான்… இதை வரலாறு அறியும்.
மீண்டும் அழுத்தம்திருத்தமாக சொல்கிறேன். எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது உனக்கு மட்டுமல்ல, இலங்கை இராணுவத்துக்கும் பொருந்தும். என்றைக்குமே நீ, தமிழ் மக்கள் மத்தியில் உன் அரசியல்கொள்கையை முன்வைத்து ஆதரவு திரட்டியது கிடையாது. உனக்கு போட்டியான அமைப்புகள் புரிந்த மக்கள்விரோதச் செயற்பாடுகளை முன்நிறுத்தியே உனக்கான ஆதரவைத் திரட்டினாய். அதே போன்று இலங்கை இராணுவம் ஏற்படுத்துகின்ற அழிவுகளையும் இன ஒடுக்குமுறையையும் பிரச்சாரப்படுத்தியே உனது இருப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறாய். இந்தப் போக்கினால்தான் இன்று தமிழ் இனத்துக்கு அழிவை தேடித் தந்திருக்கிறாய்.
இனியாவது புரட்சியாளனாக மலர முயற்சி செய். அதுதான் இதுவரை நீ செய்த படுகொலைக்கு பரிகாரமாக இருக்கும். பெரும்பாலான தமிழக மக்கள், ஈழத்தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் ஆதரவு தருகிறார்கள். புரட்சிகர சக்தியாக மலர்ந்து இதை ஒன்று திரட்டு. மார்க்சிய - லெனினிய - மாசேதுங் பாதையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தரும்.
- சூன்யம்

abeer ahmed said...

See who owns linuxidx.com or any other website:
http://whois.domaintasks.com/linuxidx.com