கணவராகவே இருந்தாலும் இப்படி செய்யலாமா..?

07-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எது ஆபாசம்? எது ஆபாசமில்லை? என்கிற குழப்பம் நமக்குள் இருப்பதைப் போலவே, எது தனி மனித சுதந்திரம்? எது அந்த வகை சுதந்திரமில்லை என்பதும் சற்று குழப்பமாகவேதான் ullathu.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. ஹிந்தி திரைப்படவுலகின் முன்னணி நடிகர் akshay kumar லக்மே நிறுவனம் நடத்திய ஒரு பேஷன் ஷோவில் தனது மனைவியும், நடிகையுமான டிவிங்கிள்கண்ணாவுடன் கலந்து கொண்டார்.

அந்த ஷோவில் மாடல்களுடன் இணைந்து மேடையில் நடந்து காட்டி கைதட்டலை அள்ளிக் கொண்ட, akshay kumar -க்கு இன்னும் கொஞ்சம் கைதட்டலை குவிக்கவேண்டும் என்று திடீரென்று ஒரு விபரீத ஆசை முளைத்துள்ளது.

மேடையைவிட்டு கீழே இறங்கியவர் நேராக தனது மனைவியிடம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்துவிடும்படி சொன்னார். அவரது மனைவியும் கணவன் சொல்லே மந்திரம் என்பதைப் போல கர்மசிரத்தையாக அந்தப் பணியைச் செய்துவிட்டார்.
பேண்ட் பட்டனையும், ஜிப்பையும் மனைவி அவிழ்த்துவிட அதை பெரும் சாதனையாக அனைவரிடமும் காட்டிவிட்டு, அடுத்த §ஷ¡வுக்காக உடை மாற்ற உள்ளே சென்றுள்ளார் akshay kumar.

கூடியிருந்தவர்கள் என்னவிதமாக இதனை எடுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் புகைப்படமாக இந்தக் காவியச் செயலைக் கண்ணுற்ற மும்பைவாசிகள் பலரும் பேஸ்த்து அடித்தாற்போல் ஆகிவிட்டார்கள்.

அவர்களில் ஒருவரான அனில் நாயர் என்பவர் மும்பை காவல்துறையில் இது பற்றி புகார் கொடுத்துவிட்டார். பொதுவிடத்தில் அக்ஷய்குமார் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கைப் பதிந்து கொண்ட போலீஸார், இது பற்றி விசாரித்து வருவதாகவும், “அவரது மனைவியே இதனைச் செய்ததாக எங்களுக்குத் தெரிந்தால்(இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணுமாம்..?) நாங்கள் நிச்சயம் கடுமையாக நடவடிக்கை எடுப்போம்..” என்று சூளுரைத்துள்ளார்கள்.

பிரச்சினை பெரிதானதும் akshay kumar ஏதோ ஒரு வேகத்தில் தான் நடந்து கொண்டதாகவும், இதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லியுள்ளார்.

ஒரு உணர்ச்சி வேகத்தில் செய்திருப்பதாக akshay kumar இப்படி நடந்து கொண்டதாகச் சொன்னாலும், அவரது மனைவிக்கு எங்கே புத்தி போனது என்று தெரியவில்லை. இத்தனை பேர் சுற்றியிருக்கிறார்களே என்ற உணர்வு அவருக்காவது இருந்திருக்க வேண்டும்.. அவரும் இதற்கு உடந்தையாகிவிட்ட நிலையில், இது என்ன வகையான சுதந்திரம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு பையன் உண்டு. கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா..?


அவர்கள் வீட்டிற்குள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.. யார் கேட்டது..? இப்படி நான்கு பேர் கூடியிருக்கும் பொதுவான இடத்தில் பிரபலங்கள் வெற்று பரபரப்புக்காக நடந்து கொள்வது மும்பையில்தான் அதிகமாக நடந்து வருகிறது. மும்பை நகரமே மாறி வரும் பொருளாதார நுகர்வுச் சுழலில், ஒரு உலகக் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் தனி நகரமாக மாறிவருகிறது.

பாலிவுட்டின் நாயகர்கள்தான் இப்போதெல்லாம் இந்த நவநாகரிக கலாச்சாரத்தின் தூதுவர்களாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். ஒரு பத்து அல்லது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஹிந்தி திரைப்பட இயக்குநர் மகேஷ்பட்டின் மகள் நடிகை பூஜாபட், ஒரு சினிமா துவக்க விழாவில் தனது தந்தையின் மடியில் உட்கார்ந்து அவரது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து ஒரு கலாச்சாரப் புரட்சியையே ஏற்படுத்தினார். அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதும் ஒரு கண்டனம்.. அறிக்கைகள்.. மன்னிப்பு.. முடிந்தது.

இப்போதும் அதேதான் நடக்கும்..

தன் கலையுலக வாழ்க்கையில் இதுவரையில் பெரிய அளவுக்கு விருதுகள் எதையும் பெற்றிருக்காத akshay kumar சிறந்த காமெடியன், சிறந்த வில்லன் என்ற பெயரில்தான் விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த கதாநாயக நடிகருக்கான பெரிய விருதுகள் எதுவும் அவருக்கு இதுவரையில் கிடைத்ததில்லை. இனி இதற்காகவே அந்த விருதைக் கொடுத்துவிடலாம்.

அதேசமயம்.. Mr. Akshay Kumar, இந்தியத் திருநாட்டின் மரியாதைக்குரிய பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் என்பதை இப்போதும் யாரும் மறந்துவிட வேண்டாம்.

ஜெய்ஹிந்த்..

டிஸ்கி : பிளாக்கரும் akshay kumar பெயரை தமிழில் எடுத்துக் கொள்ள மறுக்கிறது.. அதுக்கே பிடிக்கலை போலிருக்கு..!

57 comments:

நையாண்டி நைனா said...

me the firstu

shabi said...

இந்த் நாடு எங்க போயிகிட்டு இருக்கு அங்கேயே படுக்க சொன்னாலும் படுக்கும் வெக்கம் கெட்ட ஜென்மங்கள்

enRenRum-anbudan.BALA said...

செய்திருக்கக் கூடாது. ஆனால், எதையும் ஊதிப் பெரிதாக்குவது இந்த மீடியா பரதேசிகள் தான்.

நல்லதை கண்டுக்கவே மாட்டார்கள் :(

T.V.Radhakrishnan said...

இவர் செய்கையையும் சில நாட்களில் மறக்கப்படும்..எல்லாம்..மக்களின் சினிமா மோகத்தால் வருவது.

pappu said...

ஆமா, நான் கூட இத டிவில பாத்தேன். இதுக்கு கண்டனம் இல்லையானு நெனச்சுட்டிருந்தேன்... வந்திருச்சு... ஆனா அந்த பொண்டாட்டி கொஞ்சம் தயங்குனாலும் அண்ணன் விடல.

Sridhar Narayanan said...

அண்ணாச்சி,

அக்‌ஷய் செஞ்சது சரியா இல்லையான்னு வாதிடறதுக்கு முன்னாடி, இந்த Ramp walking பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்.

உடையை அணிந்து கொண்டு அணிவகுக்கிறது என்பது தாண்டி அதில் பலவகைப்பட்ட வகைகள் இருக்கின்றன. நம்மைப் போல இருக்கறவங்களுக்கு ஒழுங்கான உடைன்னா சூட் / கோட் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா இந்த உடை வடிவமைக்கிறதே தொழிலா வச்சிருக்கிறவங்களுக்கு அதில் பலவகை வித்தியாசங்களை கொண்டுவருவதுதான் அதன் விற்பனையை அதிகரிக்கும் வழின்னு தெரியும்.

அக்‌ஷய் அன்றைக்கு அணிந்திருந்த ஆடையை ‘சூடான’ உடையாக காண்பிப்பதற்காக ஒரு சக மாடல் அவருடைய ஜீன்ஸின் மேல் பட்டனை கழட்டுவது போல் ரிகர்சல் நடந்தது. ஆனால் ramp walking நடந்த போது அக்‌ஷய் கொஞ்சம் டிரமாடிக்காக அந்தப் பெண்ணை வேண்டாம் என்று மறுத்துவிட்டு பார்வையாளர் வரிசையில் இருந்த மனைவியிடம் செல்வார். அதாவது மனைவியைத் தவிர வேறு யாரும் தனது ஜீன்ஸில் கை வைக்கக்கூடாது என்ற ‘நல்ல’ கணவராம் அவர்.

நமது மீடியாக்கள் அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, இப்பொழுது மேலும் சில லைம்லைட் விரும்பிகள் அதனை கோர்டுக்கு தூக்கி செல்கிறார்கள்.

ஒருவேளை அக்‌ஷய் சக-மாடலோடு நிறுத்தியிருந்தால் நாம் எல்லாரும் ஒரு உஷ்ண பெருமூச்சோடு நிறுத்திக் கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன் :)

Suresh said...

thappu than anna ungala enga kadaippakkamae kanom vanga vanthu oru pathivathu padichu pinnotam podunga thalai

சொல்லரசன் said...

//அவர்கள் வீட்டிற்குள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.. யார் கேட்டது..? இப்படி நான்கு பேர் கூடியிருக்கும் பொதுவான இடத்தில் பிரபலங்கள் வெற்று பரபரப்புக்காக நடந்து கொள்வது மும்பையில்தான் அதிகமாக நடந்து வருகிறது//

மும்பையில் நடப்பது இருக்கட்டும் இங்கே ஒரு தொலைகாட்சியில் தம்பதிகள் கட்டி பிடிப்பது, முத்தம் தருவது, போனற நிகழ்ச்சிகள் நடக்கிறதே அதை பற்றி?
இது போன்ற‌ நிகழ்ச்சிகளின் சுதந்திரம்தான் அது போன்ற உச்ச கட்டம்.

benzaloy said...

சினிமா காரங்க வித்தியாசம் இல்லாது ஆண் பெண்
அனைவரும் --- உயர் மட்டத்தில் இருப்போரும் கீழ்
தர ஊழியர்களும் அடியாட்களும் தாம் தமக்கென ஒரு
தராதரத்தை வைத்திருப்பதை நாம் சகலரும் அறிவோம் !

இவர்கள் எமது பொழுது போக்கும் கருவிகள் என்பதை
நாம் மறந்து அவர்களுக்கு எப்போது முதல் இடத்தை
எம் மனதில் ஒதுக்கி கொடுத்தோமோ அந்த நிமிஷத்தில்
இருந்து எமது சமுதாயத்தில் ஆபாச போக்கை அறிமுக படுத்த
இவர்களை நாம் அனுமதித்து விட்டோமே !!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நையாண்டி நைனா said...

me the firstu//

இதுக்கும்மா..? வெல்கம்.. வெல்கம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//shabi said...
இந்த் நாடு எங்க போயிகிட்டு இருக்கு அங்கேயே படுக்க சொன்னாலும் படுக்கும் வெக்கம் கெட்ட ஜென்மங்கள்.//

நாகரிகத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//enRenRum-anbudan.BALA said...
செய்திருக்கக் கூடாது. ஆனால், எதையும் ஊதிப் பெரிதாக்குவது இந்த மீடியா பரதேசிகள்தான். நல்லதை கண்டுக்கவே மாட்டார்கள்:(//

இல்லை பாலா ஸார்..

இது போன்றவற்றை வெளிப்படையாக்கினால்தான் அடுத்து வருபவர்கள் கொஞ்சமாச்சும் எச்சரிக்கையாக இருப்பார்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///T.V.Radhakrishnan said...
இவர் செய்கையையும் சில நாட்களில் மறக்கப்படும்.. எல்லாம்.. மக்களின் சினிமா மோகத்தால் வருவது.///

உண்மைதான் ஸார்.. இந்தியாவே கவர்ச்சி அரசியலில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது..

இங்கே பிரபலங்கள் என்ன செய்தாலும் அது சரி என்று சொல்வதற்கே ஒரு கூட்டம் காத்திருக்கிறது..

இந்த மனநிலைதான் அரசியலிலும் நீடித்து நாடு இந்த லட்சணத்தில் இருக்கிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//pappu said...
ஆமா, நான்கூட இத டிவில பாத்தேன். இதுக்கு கண்டனம் இல்லையானு நெனச்சுட்டிருந்தேன்... வந்திருச்சு... ஆனா அந்த பொண்டாட்டி கொஞ்சம் தயங்குனாலும் அண்ணன் விடல.//

எப்படி விடுவாரு பாப்பூ.. அவர்தான் அண்ணனாச்சே.. அதிலேயும் இந்திய அண்ணன்.. அவ்ளோ ஈஸியா விட்ருவாரா.?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Sridhar Narayanan said...

அண்ணாச்சி, அக்‌ஷய் செஞ்சது சரியா இல்லையான்னு வாதிடறதுக்கு முன்னாடி, இந்த Ramp walking பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்.

உடையை அணிந்து கொண்டு அணிவகுக்கிறது என்பது தாண்டி அதில் பலவகைப்பட்ட வகைகள் இருக்கின்றன. நம்மைப் போல இருக்கறவங்களுக்கு ஒழுங்கான உடைன்னா சூட் / கோட்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா இந்த உடை வடிவமைக்கிறதே தொழிலா வச்சிருக்கிறவங்களுக்கு அதில் பலவகை வித்தியாசங்களை கொண்டு வருவதுதான் அதன் விற்பனையை அதிகரிக்கும் வழின்னு தெரியும்.
அக்‌ஷய் அன்றைக்கு அணிந்திருந்த ஆடையை ‘சூடான’ உடையாக காண்பிப்பதற்காக ஒரு சக மாடல் அவருடைய ஜீன்ஸின் மேல் பட்டனை கழட்டுவது போல் ரிகர்சல் நடந்தது. ஆனால் ramp walking நடந்த போது அக்‌ஷய் கொஞ்சம் டிரமாடிக்காக அந்தப் பெண்ணை வேண்டாம் என்று மறுத்துவிட்டு பார்வையாளர் வரிசையில் இருந்த மனைவியிடம் செல்வார். அதாவது மனைவியைத் தவிர வேறு யாரும் தனது ஜீன்ஸில் கை வைக்கக்கூடாது என்ற ‘நல்ல’ கணவராம் அவர்.
நமது மீடியாக்கள் அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, இப்பொழுது மேலும் சில லைம்லைட் விரும்பிகள் அதனை கோர்ட்டுக்கு தூக்கி செல்கிறார்கள்.
ஒரு வேளை அக்‌ஷய் சக மாடலோடு நிறுத்தியிருந்தால் நாம் எல்லாரும் ஒரு உஷ்ண பெருமூச்சோடு நிறுத்திக் கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன் :)///

இல்லை.. அப்போதும் யாராவது ஒருத்தர் இப்படி குரல் கொடுத்திருப்பார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Suresh said...
thappu than anna ungala enga kadaippakkamae kanom vanga vanthu oru pathivathu padichu pinnotam podunga thalai.//

சுரேஷ் நண்பரே..

தங்களுடைய தளம் எனது கணினியில் விரியவே பல நிமிடங்கள் எடுக்கிறது.. சில நேரங்களில் சிஸ்டம் செயலிழந்துவிடுகிறது.. என்ன காரணம் என்று தெரியவில்லை..

தங்களுடைய படைப்புகள் விகடனில் வெளியானமைக்கு எனது வாழ்த்துக்கள்..

இன்னும், இன்னும் சிறந்த படைப்புகளை படைக்கும்படி வாழ்த்துகிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///சொல்லரசன் said...

//அவர்கள் வீட்டிற்குள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.. யார் கேட்டது..? இப்படி நான்கு பேர் கூடியிருக்கும் பொதுவான இடத்தில் பிரபலங்கள் வெற்று பரபரப்புக்காக நடந்து கொள்வது மும்பையில்தான் அதிகமாக நடந்து வருகிறது//

மும்பையில் நடப்பது இருக்கட்டும் இங்கே ஒரு தொலைகாட்சியில் தம்பதிகள் கட்டி பிடிப்பது, முத்தம் தருவது, போனற நிகழ்ச்சிகள் நடக்கிறதே அதை பற்றி? இது போன்ற‌ நிகழ்ச்சிகளின் சுதந்திரம்தான் அது போன்ற உச்ச கட்டம்.///

அப்படியா..? சொல்லரசன் இது என்ன நிகழ்ச்சி..?

முன்பு விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. நிறுத்தப்பட்டுவிட்டதே..?!!!!!!!!!

Thamizhmaangani said...

வீடியோவை பார்த்தீங்கன்னா, அவரது மனைவி ரொம்ம்பவே கூச்சப்பட்டார். அவருக்கே அதிர்ச்சியா இருந்துச்சு. அக் ஷய குமார் தான் கேவலமா லூசு மாதிரி பண்ணியிருக்கிறார்.

மாண்புமிகு பொதுஜனம் said...

நவயுக நாகரீகக் காவலர்களான சிவசேனா,ராம் சேனா கண்களில் படவில்லையா?

Cable Sankar said...

வந்தோமா.. பார்த்தோமா.. நல்லாருந்திச்சான்னு போகாமா.. என்னா பேச்சு இது..

Venkatesan said...

அக்ஷ்ய்குமார் வந்துட்டாரு !

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///benzaloy said...

சினிமா காரங்க வித்தியாசம் இல்லாது ஆண் பெண்
அனைவரும் --- உயர் மட்டத்தில் இருப்போரும் கீழ்
தர ஊழியர்களும் அடியாட்களும் தாம் தமக்கென ஒரு
தராதரத்தை வைத்திருப்பதை நாம் சகலரும் அறிவோம் !

இவர்கள் எமது பொழுது போக்கும் கருவிகள் என்பதை
நாம் மறந்து அவர்களுக்கு எப்போது முதல் இடத்தை
எம் மனதில் ஒதுக்கி கொடுத்தோமோ அந்த நிமிஷத்தில்
இருந்து எமது சமுதாயத்தில் ஆபாச போக்கை அறிமுகபடுத்த
இவர்களை நாம் அனுமதித்து விட்டோமே !!///

ஒரு சிலரின் இது போன்ற சில்லறைத்தனமான செயலால் ஒட்டு மொத்தக் கலைஞர்களும் காயப்படுகிறார்கள்..

இதோ நீங்களே எழுதிவிட்டீர்கள் பென்ஸ் ஸார்..!

மக்களின் பிரபலங்கள் மீதான கவர்ச்சி ஈர்ப்பு உலகம் முழுவதும் இருப்பதுதான்..

என்ன எங்களது நாட்டில் அதன் சதவிகிதம் மிக, மிக அதிகம். அதுதான் பிரச்சினை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Thamizhmaangani said...
வீடியோவை பார்த்தீங்கன்னா, அவரது மனைவி ரொம்ம்பவே கூச்சப்பட்டார். அவருக்கே அதிர்ச்சியா இருந்துச்சு. அக்ஷய குமார்தான் கேவலமா லூசு மாதிரி பண்ணியிருக்கிறார்.///

பார்த்தேன்..

எப்படியிருந்தாலும் அவர் அதனைச் செய்திருக்கக் கூடாது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///மாண்புமிகு பொதுஜனம் said...
நவயுக நாகரீகக் காவலர்களான சிவசேனா, ராம் சேனா கண்களில் படவில்லையா?///

வாங்க பொதுஜனம்..

தேர்தல் வேலைகளில் அவர்கள் பிஸியாக இருப்பதுபோல் தெரிகிறது..

அதனால் தப்பித்தார் அக்சய்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Cable Sankar said...
வந்தோமா.. பார்த்தோமா.. நல்லாருந்திச்சான்னு போகாமா.. என்னா பேச்சு இது..?///

ம்.. புடலங்கா பேச்சு..

தைரியம் இருந்தா இதே மாதிரி ஒரு சீனை எடுக்கப் போற உம்படத்துல வையும்.. அப்புறம் பார்ப்போம் உமது சுதந்திரத்தை..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Venkatesan said...
அக்ஷ்ய்குமார் வந்துட்டாரு!///

வெங்கடேசன்,

நீங்க சொல்றது கேபிளாரைத்தானே..!

நெத்தியடி.. குட் கமெண்ட்டு..!

பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

Muthu said...

ippelam arasialuku varanum na
venumney sarchaya kelapi news la adikadi flash akura mathiri ethachum pannuranga ...
may be adutha electtionuku akshay
ipaye adi poduraro

Muthu said...

ethayachum differenta senju adiakadi news la varathu neraya perukku velaya pochu ...
may be akshay adutha election nikka ippavey trail show poduraro
but ithey mathiri pannuna serupadi than

நித்யகுமாரன் said...

அண்ணாத்த..

முக்கியமான எல்லா மேட்டரும் உங்க கவனத்துக்கு வந்துடுது. அதுக்கு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும் போட்டுடறீங்க. சூப்பருங்கோ...

இதெல்லாம நாம எழுதணுமான்னு யோசிக்கும்போதே, நாம எழுதலன்னா யாரு எழுதுவாங்கன்னும் தோண்றதுண்ணா...

என்னமோ போங்கோ கலி முத்திடுத்து. பூமாதேவி சிரிக்கப்போறா...

அன்பு நித்யன்

Indian said...

அண்ணே,

லெவைஸ் கம்பேனி எதிர்பார்த்த விளம்பரம் நல்லா கிடைச்சிருச்சு.
நீங்களும் ஏன் அதுக்கு உதவறீங்க?

Venkatesh subramanian said...

சினிமால காட்ராங்க. பலபேர் பார்க்க இப்படி அசிங்கமா நடக்குராங்க சரி தப்புன்னு விவாதம் நடக்குது OK. அதெல்லாம் கொஞ்சநாளில் மறக்கபட்டுவிடும். ஆனால் நாம தினமும் சிறிவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிபார்க்கும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் மித மிஞ்சிய ஆபாசம் தலை வித்தாடுகிறது குறிப்பாக்க உடல் நாற்றத்தை போக்க அடிக்கபடும் ஒரு perfume விளம்பரம் (உடல் நாற்றம் என்று சொல்வதும் அவர்கள் தான்.)மற்றும் ஒரு பற்பசை விளம்பரம் இரண்டிலும் அதை உபயோகித்தால் நிங்கள் எந்த பெண் அருகில் சென்றாலும் அது போலிஸாக இருந்தாலும் உங்களை கற்பழித்து விட்டு தான் மறுவேலையே. நிங்கள் உபயோகிக்கும் எங்கள் நிறுவன பொருள் பெண்களை அப்படி ஒரு வெறி எற்றும் என்று நேரடியாகவே விளம்பரம் செய்கிறார்கள்.அதிலும் ஒரு பெண் தனது அலைபேசி எண்னை கொடுத்து படுக்கவா என்று நேரடியாகவே கூப்பிடுறாள். இதை மொத்தமாக குடும்பத்துடன் உட்கார்ந்து தொலைகாட்சியில் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதை
என்னவென்று சொல்ல. விளங்கிவிடும் நம் சமுதாயம். வாழ்க நம் காலச்சார காவலர்கள்.

SUREஷ் said...

எல்லாம் பிரமை

ஆகாயமனிதன்.. said...

டுவிங்கிள் ! டுவிங்கிள் ! லிட்டில் ஸ்டார்'s, heeee, heeee, sheeee, sheeee

Scorpion King said...

தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இப்படி எழுதி இருகிறீர்கள் ... அக்ஷய் குமாருக்கு இதெல்லாம் சாதாரணம் .. அதனால் தான் அவரை ஆக்க்ஷன் கிங் என்று அழைக்கிறார்கள் !!!!!!!!!

Bhuvanesh said...

விடுங்க அண்ணே பசங்களே எத்தனை நாளைக்கு பொண்ணுகள ஆடை உருச்சு பாக்கறது? அவங்க தான் சம உரிமை கேக்கறாங்க இல்ல ?

Bendz said...

For publicity. Media is the reason for these.
Thought provoking post.
:-)
Insurance

அத்திரி said...

கலாச்சாரக்காவலர்கள் இன்னா பண்ணிக்கிட்டு இருக்காங்கோ

ஜோசப் பால்ராஜ் said...

சினிமால இதவிட மோசமா காட்றானுங்களே அதயெல்லாம் பார்க்குறோம், இத பார்த்து ஏன் வழக்கு எல்லாம் போடனும்?

முதல்ல சினிமால வர்றப்பவே எதிர்த்துருந்தா இம்புட்டு தைரியம் இருக்குமா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Muthu said...
ippelam arasialuku varanumna
venumney sarchaya kelapi news la adikadi flash akura mathiri ethachum pannuranga ... may be adutha electtionuku akshay ipaye adi poduraro.//

அதுக்காக இப்படியா..? இந்த போட்டோவை போஸ்டர் அடிச்சு தெருத்தெருவா ஒட்டினா எலெக்ஷனப்போ எந்த பொம்பளை ஓட்டுப் போட்டு இவர் ஜெயிப்பாராம்..?

லாஜிக்கே தப்பு முத்து கண்ணா..?!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Muthu said...
ethayachum differenta senju adiakadi newsla varathu neraya perukku velaya pochu. may be akshay adutha election nikka ippavey trail show poduraro..
but ithey mathiri pannuna serupadithan.//

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நித்யகுமாரன் said...

அண்ணாத்த..

முக்கியமான எல்லா மேட்டரும் உங்க கவனத்துக்கு வந்துடுது. அதுக்கு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும் போட்டுடறீங்க. சூப்பருங்கோ...

இதெல்லாம நாம எழுதணுமான்னு யோசிக்கும்போதே, நாம எழுதலன்னா யாரு எழுதுவாங்கன்னும் தோண்றதுண்ணா...

என்னமோ போங்கோ கலி முத்திடுத்து. பூமாதேவி சிரிக்கப்போறா...

அன்பு நித்யன்///

கலி முத்தித்தான் போச்சு தம்பி.. இதுவெல்லாம் அதற்கான உதாரணங்கள்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Indian said...

அண்ணே,

லெவைஸ் கம்பேனி எதிர்பார்த்த விளம்பரம் நல்லா கிடைச்சிருச்சு.
நீங்களும் ஏன் அதுக்கு உதவறீங்க?///

தம்பி இந்தியா..

அந்த பேண்ட்டின் பிராண்ட் நேம் லீவிஸ் என்பது நீ சொன்ன பின்னாடிதான் எனக்குத் தெரியுது..

இதுல நான் எப்படி விளம்பரத்துக்காக எழுதறது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Venkatesh subramanian said...

சினிமால காட்ராங்க. பலபேர் பார்க்க இப்படி அசிங்கமா நடக்குராங்க சரி தப்புன்னு விவாதம் நடக்குது OK. அதெல்லாம் கொஞ்சநாளில் மறக்கபட்டுவிடும். ஆனால் நாம தினமும் சிறிவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிபார்க்கும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் மித மிஞ்சிய ஆபாசம் தலை வித்தாடுகிறது குறிப்பாக்க உடல் நாற்றத்தை போக்க அடிக்கபடும் ஒரு perfume விளம்பரம் (உடல் நாற்றம் என்று சொல்வதும் அவர்கள்தான்.) மற்றும் ஒரு பற்பசை விளம்பரம் இரண்டிலும் அதை உபயோகித்தால் நிங்கள் எந்த பெண் அருகில் சென்றாலும் அது போலிஸாக இருந்தாலும் உங்களை கற்பழித்து விட்டுதான் மறுவேலையே. நிங்கள் உபயோகிக்கும் எங்கள் நிறுவன பொருள் பெண்களை அப்படி ஒரு வெறி எற்றும் என்று நேரடியாகவே விளம்பரம் செய்கிறார்கள். அதிலும் ஒரு பெண் தனது அலைபேசி எண்னை கொடுத்து படுக்க வா என்று நேரடியாகவே கூப்பிடுறாள். இதை மொத்தமாக குடும்பத்துடன் உட்கார்ந்து தொலைகாட்சியில் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதை என்னவென்று சொல்ல. விளங்கிவிடும் நம் சமுதாயம். வாழ்க நம் காலச்சார காவலர்கள்.//

தம்பி வெங்கடேஷ்.

பொங்கி விட்டீர்கள்.. நன்றி..

தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் விளம்பரப் படங்களுக்கு சென்சார்ஷிப் தேவை என்று முன்பு ஒரு பிரச்சினையை கிளப்பினார்கள். வழக்கம்போல நமது அரசியல்வியாதிகள் அதனைக் கிடப்பில் போட்டு தங்களது பையை நிரப்பிக் கொண்டுவிட்டார்கள்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிற அரசியல்வாதிகள் நமக்குக் கிடைக்காதவரையிலும் இது போன்ற அக்கப்போர்கள் நடக்கத்தான் செய்யும்..

நம்ம தலையெழுத்து.. வேறேன்ன..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//SUREஷ் said...
எல்லாம் பிரமை.//

எங்களது பிரமையைப் பயன்படுத்தி அவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டு போய் விடுகிறார்களே..!

பிரமையிலிருந்து விடுபடும்போது ஒன்றுமே இருக்காத நிலைதான் இப்போது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஆகாயமனிதன்.. said...

டுவிங்கிள் ! டுவிங்கிள் ! லிட்டில் ஸ்டார்'s, heeee, heeee, sheeee, sheeee//

எந்த லிட்டில் ஸ்டாரை கூப்பிடுறீங்க..? அவரையா..? இல்லாட்டி இவரையா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Scorpion King said...
தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இப்படி எழுதி இருகிறீர்கள்.//

அடப்பாவிகளா..? இப்படியும் ஒரு உள்குத்தா..?

//அக்ஷய்குமாருக்கு இதெல்லாம் சாதாரணம்.. அதனால்தான் அவரை ஆக்க்ஷன் கிங் என்று அழைக்கிறார்கள்!!!!!!!!!///

இதுக்குப் பெயர் ஆக்ஷன் இல்லீங்கண்ணா.. கெட்ட பேஷன்.. அவரோட கேரியர்ல பின்னாடி அவர் பதில் சொல்ல முடியாத விஷயமா இதுதான் இருக்கப் போகுது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Bhuvanesh said...
விடுங்க அண்ணே பசங்களே எத்தனை நாளைக்கு பொண்ணுகள ஆடை உருச்சு பாக்கறது? அவங்கதான் சம உரிமை கேக்கறாங்க இல்ல?//

அது சரி..! புவனேஷ் தம்பி நல்லா வக்காலத்து வாங்குறீங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Bendz said...
For publicity. Media is the reason for these. Thought provoking post.:-)//

எப்படிப் பார்த்தாலும் கடைசியில் அவர் தனக்குத்தானே போட்டுக் கொண்ட விளம்பர யுக்தியாகத்தான் இதை கருதுகிறேன்..

கெட்ட யுக்தி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அத்திரி said...
கலாச்சாரக் காவலர்கள் இன்னா பண்ணிக்கிட்டு இருக்காங்கோ//

அதான் போலீஸ் ஸ்டேஷன், புகார்ன்னு போயிட்டாங்களே..!

தேர்தல் நேரம்ன்றதால கட்சிக்காரங்களால ஒண்ணும் சொல்ல முடியல..! முடிஞ்சப்புறம் ஏதாவது செய்வாங்கன்னு நினைக்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஜோசப் பால்ராஜ் said...

சினிமால இதவிட மோசமா காட்றானுங்களே அதயெல்லாம் பார்க்குறோம், இத பார்த்து ஏன் வழக்கு எல்லாம் போடனும்? முதல்ல சினிமால வர்றப்பவே எதிர்த்துருந்தா இம்புட்டு தைரியம் இருக்குமா?//

ஜோசப்பு..!

சினிமாவுக்கு சென்சார் அனுமதின்னு ஒரு பேப்பரைக் காட்டி தப்பிச்சுக்குறாங்க..

சென்சார் விதிமுறையை வைச்சுக்கிட்டு இங்க ஒரு படத்தைக்கூட சென்சார் பண்ணி ரிலீஸ் பண்ண முடியாது..

அங்கேயும் உள்ளடி வேலைதான் நடக்குதுங்குறாங்க.!

சினிமாவே ஆபாசமும், கர்மமும் கலந்த கலவையாயிருச்சு.. போராட்டம்னு ஒண்ணு செஞ்சா ஒரு படம்கூட வெளில வர முடியாது..!

Bhuvanesh said...

//அது சரி..! புவனேஷ் தம்பி நல்லா வக்காலத்து வாங்குறீங்க..!//

இல்ல அண்ணே.. வக்காலத்து எல்லாம் இல்ல.. சும்மா ஒரு கிண்டலுக்குத்தான் சொன்னேன்!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Bhuvanesh said...
//அது சரி..! புவனேஷ் தம்பி நல்லா வக்காலத்து வாங்குறீங்க..!//

இல்ல அண்ணே.. வக்காலத்து எல்லாம் இல்ல.. சும்மா ஒரு கிண்டலுக்குத்தான் சொன்னேன்!!///

நல்லது.. வேற எங்கிட்டாச்சும் சூடான இடத்துல போய் இது மாதிரி பண்ணிராத.. கும்மிருவாங்க கும்மி..!

வால்பையன் said...

பொது இடத்தில் ஜட்டியோடு நின்றால் ஒன்று!
பேண்டை கழட்டினால் ஒன்று!

என்னமோ போங்க சார்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வால்பையன் said...
பொது இடத்தில் ஜட்டியோடு நின்றால் ஒன்று! பேண்டை கழட்டினால் ஒன்று!
என்னமோ போங்க சார்!///

இரண்டுமே ஒண்ணுதான் வாலு.. தண்டனைக்குரிய குற்றம்..

ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நிற்பது குற்றமல்ல.. அது விசாரணை..

இதுதான் இந்தியா..!

டக்ளஸ்....... said...

தங்களுடைய "புனிதப் போர்" பற்றி விகடன் வரவேற்பறையில் குறிப்பு வந்திருந்தது.
இப்போதுதான் பார்த்தேன்...
வாழ்த்துக்கள் சரவணன் ஸார்...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//டக்ளஸ்....... said...
தங்களுடைய "புனிதப் போர்" பற்றி விகடன் வரவேற்பறையில் குறிப்பு வந்திருந்தது.இப்போதுதான் பார்த்தேன்... வாழ்த்துக்கள் சரவணன் ஸார்...//

நன்றி டக்ளஸ் ஸார்..

படம் பார்த்தீர்களா..?

டக்ளஸ்....... said...

பார்க்கவில்லை..
பாக்கனும்...
Youtube Link இருந்தா கொடுங்க!